Monday, July 7, 2008

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24.

ரியாத் தமிழ் சங்கம்-எழுத்துக் கூடம் (ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை) கண்ணதாசன் வாரம் கொண்டாடுகிறது.

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 - திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 - சண்டமாருதம் ஆசிரியர்
1949 - திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952/53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் டுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952/53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 -முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - மாலையிட்ட மங்கை
1958/59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960/61 - அரசியல் மாற்றம் - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
புதிய கட்சி - தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962/63 - இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம்
1964/66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968/69 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 ரஷயப் பயணம் - சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள்
- உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார்.
20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.
------------------------------------------------------------------------------------

சில முத்திரை வரிகள்.
-------------
அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்...
--------------------------
ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ?
--------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரொ?
---------------------------
உள்ளம் என்பது ஆமை - அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞில் தூங்கிக் கிடப்பது நீதி
--------------------------
ஆசையெ அலை போலே,
நாமெல்லாம் அதன் மேலே,
ஓடம் போலே அடிடுவொமே வாழ் நாளிலே
-------------------------------
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வர்
சுகம் பெறுவர் - அதிசயம் காண்பார்
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவர்?
--------------------------------
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு, இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே
யார் காணுவார்?
---------------------------------
போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வழ்ந்தவர் யாரடா?
வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கெ இடமேது?
வாழ்க்கை என்பது வியாபராம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும்.
-------------------------------
கவியரசு பற்றி Sachi Sri Kantha
"...If only Kannadasan had been born in Europe or the USA, instead of Sirukuudalpatti village in the Ramanathapuram district of Tamil Nadu, he probably would have become a Nobel laureate in literature and received international recognition. But on the other hand, Tamils would have lost a goliard, who composed lyrics in Tamil for every sentimental moment they experience in life...."
-- இது மிகையில்லை என்றே தொன்றுகிறது.
---------------------------------
தங்களின் பங்களிப்பு தொடரட்டும்.
அன்பன்
மு.வெற்றிவேல்

vetri@vetrionline.com
www.vetrionline.com
966 1 2168418
966 503158935

No comments: