Thursday, August 28, 2008

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி. யில் தொடர்ந்து நூறு சதவீதம் கமுதி கலாவிருத்தி உயர்நிலைப் பள்ளிக்கு பாராட்டு



கமுதி, ஆக. 28: கமுதி கலா விருத்தி உயர்நிலைப்பள்ளி, தொடர்ந்து 8 ஆண்டுகள் எஸ்.எஸ்.எல்.சி.யில் நூறு சதவீதம் தேர்ச்சிபெற்றதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு சென்னை-கமுதி முஸ்லிம் பொது நலச்சபை தலைவர் கே.வி.ஏ. முகம்மது கனிவா தலைமையும், டி.எம்.எம். அசன் இப்ராகிம், டி.வி.பி.எம். சிக்கந்தர், இசட். அப்துல் ரஷீது, ஏ. இதிரீஸ், எம்.எஸ். நஜீப்கான், எஸ். மரியம்பீவி, ஏ. பாத்திமாகனி ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.

பள்ளித் தாளாளர் கே.பி.எம். முகம்மதுஅலி ஜின்னா வர வேற்றார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற ஜி. ஆசிக் இப்ராகிம், என். முருகன், எஸ். முகம்மது முசாபர் அலி ஆகியோருக்கு தலா ரூ. 5,000 பரிசும் மற்றும் பாடம் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற 47 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சென்னை தொழில் அதிபர்கள் பி.எஸ்.எம்.டி. செய்யது அப்துல் ரஹ்மான் சேட், ஓஸôன் எம். சாகுல் கமீது, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். காதர்பாட்சா (எ) வெள்ளைச்சாமி, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பி.கே. கிருஷ்ணன், ஜவஹர் ரெக்ஸின் டி.கே.ஏ. அப்துல்வகாப் சகாராணி ஆகியோர் பரிசு வழங்கினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற சிறப்பாக கல்வி கற்பித்த தலைமை ஆசிரியை, ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி ஜி. அப்துல்கரீம் நன்றி கூறினார்.

No comments: