Monday, July 30, 2007

அபுதாபி இந்திய தூதரகத்தின் மனிதாபிமான உதவி

அபுதாபி இந்திய தூதரகத்தின் மனிதாபிமான உதவி

ஜூலை 27, 2007

அபுதாபி: அபுதாபியில் அடைக்கலம் கோரும் இந்தியர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் பயணத்துக்கான வசதிகளை வழங்க இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது. பிற சமூக அைமப்புகளுடன் இணைந்து இந்த வசதியை தூதரகம் வழங்கவுள்ளது. அபுதாபியில் இருந்து குடியேற்ற அலுவலகத்தின் கவுண்டர்கள் 40 கி.மீ. தொலைவில் உள்ள அல் வத்பா என்ற இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்ட நிலையில் அபுதாபி வந்திறங்கும் இந்திய தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து தூதரகத்தின் முதல் செயலாளர் ஸ்ரீனிவாஸ் பாபு கூறுகையில், எந்த நேரத்திலும் சுமார் 300 தொழிலாளர்களுக்கு இடவசதி வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தூதரகத்தில் டோக்கன் பெற்றவர்கள்குடியுரிமை விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வரை இங்கு தங்கியிருக்க முடியும். இவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கும் வசதிகளை தென்னிந்திய நலச் சங்கங்கள் மேற்கொள்ளும். மேலும் பல மொழிகள் அறிந்த தன்னார்வ தொண்டர்களையும் நியமிக்கவுள்ளோம். இவர்கள் குடியேறிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்வர் என்றார். மேலும் விவரங்களுக்கு (050) 4172344 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

http://thatstamil.oneindia.in/news/2007/07/27/abudhabi.html

No comments: