Saturday, March 15, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாயில் தமிழக முஸ்லிம்களின் சமுதாய அமைப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு எதிர்வரும் ஹிஜ்ரி 1429 ரபியுல் அவ்வல் பிறை 12 ( 19 மார்ச் 2008 ) புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா பகுதியில் உள்ள தமிழ் பஜாரில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்.

மேலும் இலங்கை புஷ்ரா ( நற்செய்தி ) மாத இதழ் ஆசிரியர் மௌலவி ஏ.எல் பதுறுத்தீன் ஷர்க்கி பரலேவி, லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் & கத்தீப் ஆயங்குடி மௌலவி எம்.ஏ. காஜா முஅஹ்ம்மது ஜமாலி மக்கி மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

மீலாத் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் தலைவர் சையத் எம் ஸலாஹுதீன், கல்விக்குழு தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் துணைத்தலைவர்கள் அஹ்மது முகைதீன், அப்துல் கத்தீம்,அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செய்லாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின்,இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

விழா சிறப்புற நடைபெற இந்தியன் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அல் ஹஸீனா ஜுவல்லரி, ஈடிஏ அஸ்கான்,லேண்ட்மார்க் ஹோட்டல், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், ரஷாதி ஹஜ் சர்வீஸ், இந்தியா சில்க் ஹவுஸ், லியோன் டீ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.


தகவல் : ஈமான் அமைப்பின் ஊடகத்துறை

No comments: