Friday, June 6, 2008

துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி







துபாயில் நூல் வெளியீடு மற்றும் புத்தக கண்காட்சி

துபாயில் நூல் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சியினை சென்னை மணிமேகலை பிரசுரம் 06 ஜூன் 2008 வெள்ளிக்கிழமை மாலை தேரா லேண்ட் மார்க் ஹோட்டலில் நடத்தியது.

இவ்விழாவில் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்ட முஹம்மது அலி என்ற ஃபெமினா எழுதிய நாவல்கள் பிறப்பில் பூட்டிய விலங்கு மற்றும் கனவுகளைக் கலைக்காதீர்கள்!,

குவைத் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா தொகுத்தளித்த கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத்தின் கருத்துரைகள், கீழை சீனா தானா எழுதிய மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்,

பஜிலா ஆசாத் எழுதிய ஏ.பி.சி. மேட் ஈஸி, எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் எழுதிய பகுத்தறிவின் நீதிமன்றம்,

சரோஜா செல்லத்துரை எழுதிய தாயும் தாய்நாடும், சின்னத்துரை தனபாலா எழுதிய நந்திக் கொடியின் முக்கியத்துவமும் பெருமைகளும், அரு.சுந்தரம் எழுதிய நகரத்தார் பெருமை உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் ஸ்கை குருப் இயக்குநர் கீழை சீனா தானா, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக், ஃபெமினா என்ற முஹம்மது அலி, வானலை வளர்தமிழ் அமைப்பின் காவிரி மைந்தன், தமிழ்நாடு பண்பாட்டுக்கழக தலைவர் குத்தாலம் அஷ்ரப் அலி, அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, காயிதெமில்லத் பேரவை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, சங்கமம் கலையன்பன், சுடர்வம்சம் ரகுராம், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், ஆசியாநெட் ஆசிஃப் மீரான், எஸ்.எம். ஃபாரூக் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மணிமேகலை பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.

No comments: