Tuesday, June 17, 2008

தொலைதூர சான்றிதழ் படிப்பு துவக்கம்

தொலைதூர சான்றிதழ் படிப்பு துவக்கம்

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் தொலைதூர சான்றிதழ் படிப்பு துவக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திறந்தவெளி மற்றும் தொலைது£ரக்கல்வி இயக்ககத்தின் வழியாக தொலைது£ரக்கல்விச் சான்றிதழ் பாடங்கள் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லு£ரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லு£ரியில் வருகிற ஜூலை முதல் காய்கறி விதை உற்பத்தி, காளான் வளர்ப்பு, தரிசுநில மேம்பாடு, தோட்டக்கலை பயிர்களுக்கான நாற்றாங்கால் தொழில் நுட்பங்களும் பயிர்ப்பெருக்க முறைகளும், மண்புழு உரம் தயாரித்தல் தொழில் நுட்பங்கள், மூலிகை பயிர்கள் ஆகிய சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

இதில் சேர தமிழ் நன்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் 6 மாதம், மாதம் ஒருமுறை நேர்முகப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும். பயிற்சிக்கட்டணம் ரூ.ஆயிரத்து 500. இதுகுறித்த விபரங்களை அறிய விரும்புவோர் முதல்வர்,
தோட்டக்கலைக்கல்லு£ரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
பெரியகுளம், போன் 04546- 231726 என்ற முகவரியிலோ,

அல்லது

இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைது£ரக்கல்வி இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம்,
கோயம்புத்து£ர்,
போன்- 0422-6611229, 6611429 என்ற முகவரியிலோ

தொடர்பு கொண்டு விண்ணப்பபடிவம் பெற்று சான்றிதழ் பாடத்தில் சேர்ந்த கொள்ளலாம் என்று தோட்டக்கலைக்கல்லு£ரி முதல்வர் நடராஜன் தெரிவித்தார்.

No comments: