Saturday, July 12, 2008

10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

10ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! உடனே
விண்ணப்பிப்பீர்!!

1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவ -
மாணவியருக்கான பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான காலக்கெடு
31-07-2008 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகையைப் பெற
விரும்புவோர், பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பப்படிவத்தை அனைத்து
ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க
வேண்டும்.

பள்ளி தலைமை ஆசிரியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை
சரிபார்த்து வகுப்பு, வருமானம், இனவாரியாக தொகுக்கப்பட்ட, விவரங்களை உரிய
படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திலுள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் அனுப்பி
வைக்க வேண்டும்.

இதுபற்றிய முழு தகவல்களை
www.tn.gov.in/documents/bcmw/prematricscholarship
www.minorityaffairs.gov.in
என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு
சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார
மேம்பாட்டுக் கழக ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.

இந்தக் கல்வி உதவித் தொகையை, வசதியற்ற முஸ்லிம் மாணவர் அனைவருக்கும்
கிடைக்கச் செய்யும் வகையில் இந்த அறிவிப்பை அச்சிட்டு அல்லது பிரதி
எடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும்
வினியோகிக்கவும், அறிவிக்கச் செய்யவும், உதவித் தொகை படிவங்களை நிரப்பிக்
கொடுக்கவும் முனைப்பு காட்ட பிரைமரி முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் லீக்
இளைஞர் அணி, முஸ்லிம் மாணவர் பேரவையினரை கேட்டுக் கொள்கிறோம்.

Message
Mubarack rasvi
Kuwait Indian Union Muslim Leauge

No comments: