Tuesday, July 15, 2008

கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை

கைப்பேசி, கைப்பேசி கோபுர மின்காந்த அலைகள் உடலுக்கு ஊறுவிளைவிப்பவை என்னும் செய்திகள் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்திருக்கும் வேளையில் அதை மறுத்தும் பல்வேறு அறிக்கைகளும், ஆய்வுகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனினும் இந்த மின்காந்த அலைகளினால் எந்த பாதிப்பும் இல்லை எனும் ஆய்வு முடிவு ஒன்றை யாராலும் நிகழ்த்த முடியவில்லை.

மின் காந்த அலைகள் எனும் மௌனக் கொலையாளியின் கைகளிலிருந்து நம்மை நாமே காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

. கைப்பேசியை நேராக காதில் வைத்துப் பேசாமல் தவிர்க்க, வயர் இணைப்புடன் கூடிய ஹெட்போனைப் பயன்படுத்துங்கள்.

. வீட்டில் சாதாரண தொலைபேசி இருந்தால் அதிலேயே பேசுங்கள். கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள்.

. கைப்பேசியில் ஒலிபெருக்கி வசதி இருந்தால் அதைப் பயன்படுத்துங்கள்.

. கைப்பேசியில் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது உரையாடலை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள்.

. நம் உடலை விட்டு சற்றுத் தூரமாகவே கைப்பேசியை வைத்துவிட்டு பணி செய்யப் பழக வேண்டும்.

. கைப்பேசியை கைகளிலோ, பாக்கெட்டிலோ வைப்பதற்குப் பதிலாக பையில் வைக்கலாம்.

. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கைப்பேசியில் பேசாதீர்கள். குழந்தைக்கு அது பாதிப்பை உண்டாக்கும்.

. இரவில் கைப்பேசியை அணைத்து வைத்து விட்டு தூங்குங்கள். முடியாத சூழல் எனில் முடிந்த அளவு தூரமாக கைப்பேசியை வைத்துவிடுங்கள்.

. நல்ல சிக்னல் கிடைக்காத இடங்களில் கைப்பேசியைப் பயன்படுத்தாதீர்கள். அதை அணைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

. கைப்பேசியை சார்ஜ் செய்யும்போது அதிக மின் காந்த அலைகள் உருவாகும். எனவே அதை அதிகம் பயன்படுத்தாத அறைகளில் சார்ஜ் செய்யுங்கள்.


நன்றி: ராஜா-ரகுபதி

No comments: