Friday, August 15, 2008

ரியல் எஸ்டேட் பற்றிய முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம்

ரியல் எஸ்டேட் பற்றிய முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம்


சென்னை, ஆக. 14 : இந்தியாவில் முதன்முறையாக ரியல் எஸ்டேட் தொடர்பாக எம்.ஆர்க். (ரியல் எஸ்டேட்) என்ற படிப்பை தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் (மியாசி) கட்டடக் கலை அகாதெமி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் 1999-ம் ஆண்டு முதல் "மியாசி' அகாதெமி, கட்டடக் கலையில் பி.ஆர்க். பட்டப் படிப்பை நடத்தி வருகிறது.

இந்தக் கல்வியாண்டு கட்டடக் கலை கவுன்சிலின் (கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்) அனுமதியோடு ரியல் எஸ்டேட் துறையில் இரண்டாண்டு எம்.ஆர்க். பட்டப் படிப்பை தொடங்கியுள்ளது.

ரியல் எஸ்டேட் சார்ந்த வடிவமைப்பு, செயல்பாடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

"மியாசி' அகாதெமியின் எம்.ஆர்க். கல்வித் திட்ட ஆலோசனைக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று "மியாசி' கட்டடக் கலை அகாதெமியின் நிறுவனர் கே. அமீனூர் ரகுமான், இயக்குநர் அல்டாஃப் அகமது ஆகியோர் தெரிவித்தனர்.

No comments: