Sunday, September 21, 2008

ESPN தொலைக்காட்சி தமிழில் அலைபேசி செய்திச்சேவை

விளயாட்டு ஒளிபரப்பில் முன்னணியில் இருக்கும் ESPN தொலைக்காட்சி தமிழில்,
அலைபேசியில், செய்திச்
சேவையை தொடங்கி இருக்கிறது.

இந்திய நேரப்படி காலை பத்து மணிக்கு உள்ளூர், தேசீய, சர்வதேச,
பொழுதுபோக்கு மறூம் விளையாடுச் செய்திகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொன்றும்
இரண்டிரண்டு நிமிடங்கள் வீதம் பதே நிமிடங்கள். பதினோறு மணிக்கு வர்த்தகச்
செய்திகள். பிற்பகல் இரண்டு மணிக்கு உள்ளூர் மற்றும் தேசியச் செய்திகள்.
மாலை ஐந்து மணிக்கு மீண்டும் வர்த்தகச் செய்திகள். மாலை ஏழுமணிக்கு
மீண்டும் அனைத்துச் செய்திகள்.இந்தச் செய்திகளை தென்னகத்தில் எந்த
அலைபேசி எண்ணில் கேட்கலாம் என்பதை இனித்தான் அறிவிக்க இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் மூன்று செய்திகள் இருக்க வேண்டும். அதாவது நாற்பது
நொடிகளுக்குள் செய்தியின்
எந்த அம்சத்தையும் விட்டு விலாமல் ஒரு முழுமையைக் கொண்டு வரவேண்டும்.
சவால்தான். என்றாலும்
பத்திரிகைகள் எந்த அளவுக்கு அநாவசியமாக வார்த்தைகளைப்போட்டு இடத்தை
நிரப்புகிறார்கள் என்பது
இப்போதுதான் தெரிகிறது.

ஒரு சௌகரியம்: நான் வீட்டிலிருந்து கொண்டே அனைத்தையும் செய்யலாம். ஒரு
அசௌகரியம்: காலை முதல்
மாலை ஏழு மணி செய்தி முடியும் வரை நான் எங்கும் செல்ல முடியாது. தனியாகவே
அனைத்தையும் செய்வதால்
சனி - ஞாயிறு - விடுமுறை எதுவும் கிடையாது.

கழுகுக் கண்களுடன் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போம்.
என்றாலும் உங்களுக்கு ஏதேனும்
வித்தியாசமான செய்திகள் தெரிய வந்தால் தயவு செய்து என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ் - சத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

No comments: