Wednesday, October 15, 2008

அபுதாபியில் 'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்

அபுதாபியில் 'சமுதாய கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் கருத்தரங்கம்

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1901&Country_name=Gulf&cat=new

அய்மான் சங்கம் சாhபில்

சமுதாயக் கல்வி மற்றும்; பொருளாதாரக் கருத்தரங்கம் 19-11-2008 புதன்கிழமை அபுதாபி சிடி பேலஸ் ஹோட்டலில் அல்ஹாஜ் காதர்பக்ஸ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கமாக அய்மான் உலமா சபைத் தலைவர் ஹாபிழ் ஹபீபுர்ரஹ்மான் அவர்கள் கிராஅத் ஓதினார்.


நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை அய்மான் துணைத்தலைவர் சாகுல் ஹமீது வரவேற்றார்.
தேரிழந்தூர் தாஜுதீனின் இன்னிசைப் பாடலைத்தொடர்ந்து விழாத்தலைவர் தலைமையுரை நிகழ்த்தினார்.
விழாத்தலைவர் காதர்பக்ஸ் தனது தலைமையுரையில் 'அய்மானின் நீண்ட கால மற்றும் தொலைநோக்குப்பார்வையிலான கல்விச் சேவைகளைப்பட்டியலிட்டார்;

இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து வருகைதந்திருக்கும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் மற்றும் இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய . எஸ்.எம்.ஹிதாயத்துல்லா இஸ்லாமியர்களின் பண்டைய கால கல்விஞானத்தையும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள கல்வியின் அவசியம் பற்றியும் மாலைநேரக் கல்வியை அறிமுகப்படுத்தியதே இஸ்லாம் என்றக் கருத்தை எடுத்துவைத்து, தற்கால சூழலில் கல்வியின் தேவைகள் மற்றும் அவசியம் பற்றி கூறினார். மேலும் பைத்துல்மாலை ஒவ்வொரு ஐமாஅத்திலும் ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துசு;கூறினார்.


தொடர்ந்து பேசிய கவிக்கோ அப்துல் ரஹ்மான் 'இஸ்லாமிய அறிஞர்களின் முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் பல்கலைக்கழக அறிஞர்களைப்பற்றி எடுத்துக்கூறி, இல்லாமையை; போக்கக் கல்லாமையை ஒழிப்போம் என்ற சபதம் ஏற்க அனைத்து ஐமாஅத்தையும் கேட்டுக் கொண்டார்.

ஐனாப் இக்பால் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் நோபல் மெரைன் சாகுல் ஹமீது, அய்மான் பிரதிநிதிகள் , பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் மற்றும் பல்வேறு ஊர் ஐமாஅத்தார்களும் துபாய் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டனர்..

செய்தி : வி. களத்தூர் ஷா

No comments: