Wednesday, November 19, 2008

கேரட்டும் மிட்டாயும் உள்ளே போனதும் என்ன செய்யுது?

காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ
நிபுணர்கள் ஏன் சொல்கின்றனர்? சத்துக்கள் இருப்பதால் தான். ஆனால்,
குழந்தைகள் முதல் இளைய தலை முறையினர் வரை இது பற்றி விழிப்புணர்வு இல்லை. நாற்பது வயதான பின் தான் ஒருவருக்கு ஞானோதயம் வருகிறது. அப்போது , அவருக்கு சர்க்கரை அளவு கூடி, ரத்த அழுத்தம் வந்து விடுகிறது. அப்போது தான் காய்கறி, பழங்கள் நினைப்பே வருகிறது. அதுவரை, ஐஸ்கிரீம், சிப்ஸ், மிட்டாய், சாக்லெட் என்று நொறுக்குத் தீனிகளை "உள்ளே' தள்ளுகின்றனர்.

அவை உள்ளே போனதும் எந்த அளவுக்கு பாதிப்பை தருகின்றன என்பது தெரியவே இருபதாண்டு ஆகி விடுகிறது. அதுவரை உடலுக்குள் இந்த தீய சத்துக்கள் அஸ்திவாரம் போடுகின்றன. நாற்பதில் நுழைந்ததும், சர்க்கரை அளவை பார்த்தால் பீதி வரும்; ரத்த அழுத்த அளவோ மயக்கம் போட
வைக்கும். இப்படி ஏதும் வராமல் இருக்கத்தான் சிறிய வயதில் இருந்தே,
பால் , முட்டை, மீன் உணவு வகைகள், காய்கறி, பழங்கள் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் எவ்வளவோ சொன்னாலும், ஏற்போர் வெகு சிலரே.









மிட்டாய்: மிட்டாய் சாப்பிட்டால்
உடலில் என்ன மாற்றம் நிகழ்கிறது, எப்படி செரிமானம் நடக்கிறது
என்று பார்க்கலாம்.

* இனிப்பு கலந்த மிட்டாய்,
சாக்லெட் சாப்பிடும் போது, அதை கடித்துச்சாப்பிடும் பழக் கம்
பலரிடம் உண்டு. அப்படி கடித்துச்சாப்பிடும் போது சிறிய
துண்டுகளாகவே வயிற்றுக்குள் பயணமாகிறது.

*
வயிற்றுக்குள் போனதும், மிட்டாய் துகள்கள் கூழாகி, சர்க்கரை
தண்ணீராக மாறி விடுகிறது.






* இந்த சர்க்கரை தண்ணீர் , சிறுகுடலுக்குள் போகிறது.
சர்க்கரை நீர் என்பதால், நேரடியாக ரத்த சர்க்கரை அளவை
அதிகரிக்கிறது.

* பெருங்குடலில் சர்க்கரை நீருக்கு
வேலையில்லை. ஏற்கனவே அவை ரத்த சர்க்கரையில் சேர்ந்து விடுவதால்,
பெருங்குடல் இயங்காது.

* ஆனால், மிட்டாய் சாப்பிட்டால்,
அது ஜீரணம் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு தெரியுமா? 24 மணி
நேரம்.












கேரட்: கேரட்டை , அப்படியே சாப்பிட்டாலும், சமைத்து
சாப்பிட்டாலும், முழுமையாக கடித்து, ஓரளவு குழைத்த பின் தான்
வயிற்றுக்குள் பயணமாகிறது.

* இப்படி குழைந்து
போவதால், அதில் ஏகப் பட்ட நார்ச்சத்து உள்ளது.கார்ப்போஹைட்ரேட்
டும் உள்ளது. இதனால், கேரட் நொறுங்க சில நிமிடம் பிடிக்கும்.
ஆனால், வேகமாக நொறுங்கும்.







* என்சைம்கள் சுரந்து, அதன் மூலம் கேரட் தூள்
தூளாக்கப்பட்டு, முழுமையாக குழைந்து விடுகிறது.

* இதில்
இருந்து வைட்டமின்கள், கனிமங்கள் பிரிக்கப்பட்டு உடலுக்கு தேவையான
அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

* நார்ச்சத்து நொறுங்கி,
கொழுப்பு அமிலமாகி விடும்.

* இவ்வளவும் ஜீரணிக்க ஆகும்
நேரம் எவ் வளவு தெரியுமா? வெறும் முப்பது நிமிடம் தான்.

எது
கெட்டது?

உணவு வகைகளில் கெட்டது , நல்லது என் றில்லை. ஆனால்
, வாய்க்கு ருசியாக இருப்பது , உடல் நலனுக்கு நல்லதாக இருக்க முடியாது.
உடல் நலனுக்கு நல்லதாக இருப்பதுதான் எப்போதும் உடலை பாதுகாக்கும். அந்த
வகையில், மிட்டாய் போன்ற நொறுக்குத்தீனிகள் உடலுக்கு சத்துக்களை
தராததுடன், உடலில் ஜீரணசக்தியையும் குறைக்கிறது; சர்க்கரை சத்தை
அதிகரிக்கச் செய்து, சர்க்கரை நோய்க்கு வழி
வகுக்கிறது.

காய்கறி ஏன்?

பச்சைக்காய்கறி,
பழங்கள் சாப்பிட்டால், எந்த வியாதியும் வராது என்று டாக்டர்கள்
சொல்வதன் காரணம், உடலுக்கு கெடுதலை தரும் எந்த வித தீய சத்துக்களும்
அவற்றில் இல்லை என்பதால் தான். ஆனால், பெரும்பாலான மாமிச,கொழுப்பு
உணவுகளில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் தரக்கூடிய தீய சத்துக்கள்
அதிகம் உள்ளன.காய்கறிகளில் தான் அதிக அளவில்
ப்ரோட்டீன்,கார்போஹைட்ரேட், கனிம , வைட்டமின் சத்துக்கள் அதிகம். அவற்
றைத் சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது என்பது
தான் டாக்டர்களின் கருத்து.

நாற்பதுக்கு மேல்: நாற்பது
வயது வரை எந்த பிரச்னையும் இல்லை. அதற்காக, எப்போதும் கொழுப்பு உணவு,
சாட் , நொறுக்குத்தீனி என்று இருக்கக் கூடாது. சத்தான உணவுகள் தேவை.
நல்ல பழக்க வழக்கங்கள் முக்கியம்.நாற்பதுக்கு மேல், அரிசி உணவை
தவிர்க்க வேண்டும். அரிசி சாதம், உப்பு, சர்க்கரை, எண்ணெய், ஊறுகாய்,
நெய் போன்ற கொழுப்பு, சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளைத்
தவிர்த்தாலே போதும்; முக்கியமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோயைத்
தவிர்த்து விடலாம். உடற்பயிற்சி: உடற்பயிற்சி மிக முக்கியம்.


அதற்காக, தினமும் மைதானத்துக்கு போய் பயிற்சி செய்ய வேண்டும்
என்றில்லை. உடலை வறுத்தாமல், காலாற நடப்பது நல்லது. நாம் சாப்பிடும்
உணவு மூலம் கிடைக்கும் கலோரி சத்தை குறைத்தால், உடலில் சதைபோடாது;
கொழுப்பு சேராது; குண்டாகவே மாட்டோம்.உடலில் எடை கூடுகிறது என்றால்,
அதற்கேற்ப முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டாலே
போதுமானது. udal nalam
A.Sarfudeen. Jeddah

No comments: