Wednesday, December 17, 2008

உடல் பருமனைக் குறைப்பது எப்படி?

. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும்.

2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும்.

3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

6. உப்பின் அளவையும் குறைக்கவும்

7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம்

8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.

9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும்.

10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும்.

11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும்.

No comments: