Friday, February 6, 2009

வெளிநாடு செல்பவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்

வெளிநாடு செல்பவர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி கலெக்டர் கிர்லோஷ்குமார் தகவல்


ராமநாதபுரம்,பிப்.6-

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சார் பில் வெளிநாடு செல்பவர் களுக்கு இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்பட உள் ளதாக கலெக்டர் கிர் லோஷ்குமார் தெரிவித் தார்.

தொழிற் பயிற்சி

தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல உள்ள தொழிற்பயிற்சி முடித்தவர்கள் மற்றும் ஓரளவு தொழிற்பயிற்சி பெற்றவர்கள் ஆகியோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தமிழகத்தில் கிண்டி, வடசென்னை, கோயம்புத் தூர், கடலூர், ஈரோடு, செங் கல்பட்டு, ஓசூர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அம்பத்தூர், தூத்துக் குடி விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி உள்பட 28 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகி றது.

இதில் பிட்டர், வெல்டர், தச்சர், பிளம்பர், டர்னர், மெக் கானிக், லிப்ட் மெக்கானிக், கொத்தனார், கிரேன் ஆப ரேட்டர் உள்பட பல பணி களுக்கு இலவச பயிற்சி அளிக் கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களில் படித்தவர்களும், தொழிற்சாலை பயிற்சி சான்றி தழ் வைத்து இருப்பவர்களும் இதில் சேர்ந்து பயன்பெறலாம். இதற்கு பாஸ்போர்ட்டு, முன் அனுபவம் தேவையில்லை. தினமும் 5 மணி நேரம் வீதம் 15 நாட்களுக்கு பயிற்சி நடை பெறும்.

விண்ணப்பம்

மேலும் இதில் அயல்நாட்டு வேலைக்கு செல்வதற்கு பின் பற்ற வேண்டிய உரிய வழி முறைகள், அந்தந்த நாடுகளில் தொழிற் தேவை மற்றும் சட் டங்கள் தொடர்பான பயிற் சிகள் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் உணவு மற்றும் தங்கும் வசதியினை விண் ணப்பதாரர்களே ஏற்க வேண் டும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். முதல் கட்டமாக வருகிற 11-ந்தேதி முதல் 25 வரை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

இதேபோல 2ம் கட்டமாக 2.3.09 முதல் 16.3.09 வரையும், 3ம் கட்டமாக 23.3.09 முதல் 6.4.09 வரையும் பயிற்சிகள் நடைபெறும். எனவே இந்த பயிற்சியில் சேர விரும்புபவர் கள் அருகில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் உடனடி யாக விண்ணப்பிக்க வேண் டும். இதன் ஒரு நகலை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், 48, முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் கிர்லோஷ்குமார் தெரிவித்தார்.

No comments: