Wednesday, February 4, 2009

அழிக்கப்படும் பைல்கள் மீண்டும் உயிர்பெறுகிறது...

அழிக்கப்படும் பைல்கள் மீண்டும் உயிர்பெறுகிறது...

பழைய கம்ப்யூட்டரிலிருந்து நவீன கம்ப்யூட்டருக்கு மாறவிரும்புகிறீர்களா…? உடனே பழைய ஹார்ட் டிஸ்க்கை கழட்டி உடைத்து விடுங்கள். இல்லையென்றால் உங்களது ரகசியங்களை வேறு ஒருவர் திருடி தவறாக பயன்னடுத்தக்கூடும்.
கம்ப்யூட்டரில் விலை மதிப்பற்ற பல்வேறு தகவல்களை சேமித்து வைக்கிறோம்.இதில் டிஜிட்டல் புகைப்படங்கள் மற்றும் சில ரகசிய தகவல்களும் அடங்கும். நண்பர்களுடன் சாட்டிங் செய்தல் மற்றும் ஆன்லைன் சாப்பிங் செய்வதற்கும் இதை பயன்படுத்துகிறோம்.

இந்நிலையில் பழைய கம்ப்யூட்டரை இபே இணையதளம் மூலம் விற்று விட்டு அல்லது ஸ்க்ராப் ஆக போட்டு விட்டு புதிய கம்ப்யூட்டரை வாங்க விரும்புகிறவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
அதாவது அதில் உள்ள ஹார்டு டிஸ்க்கை கழட்டி உடைத்து விடுங்கள். இல்லாவிட்டால் உங்களுடைய ரகசிய விவரங்களை திருடி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.
ஒருவேளை நீங்கள் உங்களது விவரங்கள் அடங்கிய பைல்களை அழித்துவிட்டோம் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென உள்ள சாப்ட்வேரைக் கொண்டு அழித்துவிட்ட பைல்களையும் திரும்பப் பெற்று முறைக்கேடு செய்ய வாய்பிருக்கிறதாம். எனவே ஹார்டு டிஸ்க்கை மட்டும் உடைத்து விடுவது தான் 100 சதவீதம் பாதுகாப்பானது.
அண்மையில் இபே இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்ட 8 பழைய கம்ப்யூட்டர்களை வாங்கினோம். அதிலிருந்து அழிக்கப்பட்ட 22 ஆயிரம் பைல்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. அந்த தகவல் மிகவும் முக்கிய தகவலாகக் கூட இருக்கலாம்.
எனவே ஹார்டு டிஸ்க்கை உடைப்பதுதான் ஒரே வழி என இணையதள பத்திரிக்கை எச்சரித்துள்ளது.
கவனமாக இருப்போம் பிரச்சனைகளைத் தவிர்ப்போம்…!
நன்றி - தினகரன்

No comments: