Thursday, February 12, 2009

DTP இன் அவ‌சிய‌ம்

DTP இன் அவ‌சிய‌ம் ப‌ற்றி எனது ந‌ண்ப‌ர் த‌மீம் அன்சாரி எழுதிய‌தை இங்கு பார்க்க‌லாம்.
நண்பர் அபூபக்கரின் வேண்டுகோளுக்கிணங்க எனக்குத் தெரிந்த சில விஷயங்களை நான் இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்றைய சூழலில் சிட்டியில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் DTP சென்டர்கள் கண்டிப்பாக இருக்கிறது. இன்னும் பல பேருக்கு அது பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு வியாபரத்தின் நுழைவாயிலும் இதுதான். இதனால் நமக்கு கிடைக்ககூடிய பயன்கள் பல, அ வைகளாவன‌ …
1. லெட்டர் பேட் தயாரிப்பது.
2. விசிட்டிங் கார்ட் தயாரிப்பது.
3. பில்புக் தயாரிப்பது.
4. பிட் நோட்டிஸ் அடிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்ப் டிசைன் செய்வது,
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்வது.
என அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை முறையாக கற்றுக்கொண்டால் இந்த துறையில் சிறந்தவராக‌ ஆக முடியும். அதற்கு தங்களிடத்தில் முழுமையான ஆர்வமும் அதற்குரிய முயற்சியும் இருந்தால் போதும். எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ளவும் நம்மிடத்தில் வெட்கம், பெருமை, பொறாமை , அலுப்பு ஆகியவைகள் இருக்க கூடாது என்பார்கள்.
நான் பார்த்த வரையில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள கடுமையான பயிற்சியிம் அவசியம். நாம் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டால் அதனை உடனே செய்து பார்க்க வேண்டும். பிறகு செய்யலாம் என்று நினைத்தால் அந்த ‘பிறகு’ எப்பொழுது என்றே தெரியாமல் போய்விடும்.
கணிப்பொறி துறையை பொறுத்த வரையில் பொதுவான ஒரு IDEA வும், ஆங்கில அறிவும் இருந்தால் போதுமானது. அதாவது தாங்களுக்கு என்ன தேவை என்பதை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து பார்த்தால் அது குறிப்பிட்ட மெனுவில் கிடைக்கும். அதை போல் இந்த டிடிபி துறையில் வேகமும், நுண்ணிய வேகமும் இருக்க வேண்டும். இதை பெற வேண்டுமானல் பயற்சி அவசியம்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன வென்றால் நமக்கு தேவையான option எதில் இருக்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்பதுதான். அதைத்தான் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
DTP - DESK TOP PUBLISHING:
DTP என்றால் என்ன‌? அத‌ன் கோர்வைக‌ள் என்ன‌? அத‌ன் ப‌ய‌ன்பாடுக‌ள் என்ன‌? அதை எங்கு/எப்ப‌டி ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து ?

DESK TOP PUBLISHING. என்பதின் சுறுக்கமே DTP, முந்தைய காலத்தில் பிரிண்டிங் சம்பந்தமான வேலைகளை கையினால் அச்சு கோர்த்து செய்துவந்தனர். அதனை நவீன படுத்தும் வகையில் மாறிவரும் கணிப்பொறி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த DTP , இது மூன்று மென்பொருள்கள் உள்ளடக்கியது ஆகும். முதலில் அதன் பயன்களை காண்போம்.
பயன்கள்:
1. லெட்டர் தலைகள் தயாரிப்பது,
2. பில்புக்குகள் தயாரிப்பது.
3. பிட் நோட்டிஸ் தயாரிப்பது.
4. வால் நோட்டிஸ் தயாரிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்புகள் வடிவமைப்பது.
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்யலாம்.
8. மாதிரிப்படிவங்கள் உருவாக்குவது. .
9. LOGO உருவாக்குவது, (நிறுவனத்தின் குறியீடு)
10. விசிட்டிங் கார்டுகள். (அறிமுக அல்லது முகவரிச்சீட்டு)
11.காலன்டர்கள் தயாரிப்பது. ( நாள்காட்டி)
12. டைரிகள், புத்தகங்கள் உருவாக்குவது.
12. குடும்ப/ நண்பர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகள் தயாரிப்பது..
DTP யை வியாப‌ர‌ங்க‌ளின் விள‌ம்ப‌ர‌த்திற்காக‌வும், க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ளின் புராஜெக்ட் வொர்க் போன்ற‌வைகளுக்காக‌வும், அலுவ‌ல‌க‌ங்க‌ளில் மாதிரிப்ப‌டிவ‌ம், வார‌,மாத‌, நாள் இத‌ழ் போன்ற‌ ப‌த்திரிக்கைக‌ளுக்காக‌வும், பேக்குக‌ள், துணிக‌ள் போன்ற‌வ‌ற்றிற்கு டிசைன் செய்வ‌த‌ற்காக‌வும், இன்னும் ப‌ல‌ ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்.
DTP யின் அட‌ங்கிய‌ மென்பொருட்க‌ள்:
பெரும்பான்மையான‌ இட‌ங்க‌ளில் DTP என்றால் மூன்று மென்பொருட்க‌ளை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள்.
1.ADOBE PAGEMAKER
2.COREL DRAW
3.ADOBE PHOTOSHOP
இந்த‌ மூன்று மென்பொருட்க‌ள் மூல‌ம், மேலே சொன்ன‌ அனைத்து வேலைகளையும் முடித்து விட‌லாம்.
1.ADOPE PAGEMAKER :
இந்த‌ மென்பொருள் மூல‌ம் BOOKS, VISITING CARDS, BILL BOOK , NOTICE , FORMS, INVITATION போன்ற‌ வேலைக‌ளை சுல‌ப‌மாக‌ செய்ய‌லாம்.
2. COREL DRAW:
இந்த‌‌ மென்பொருள் மூல‌ம் அனைத்துவ‌கையான‌ ம‌ல்டி க‌ல‌ர் வேலைக‌ளும், ர‌ப்ப‌ர் ஸ்டாம்ப் டிசைன்க‌ளும், பேக்குக‌ள்,பைக‌க‌ள் போன்ற‌வ‌ற்றின் டிசைன்க‌ள் ம‌ற்றும் லோகோக்க‌ள்(LOGO) த‌யாரிக்க‌லாம்.
3. PHOTOSHOP:
இத‌ன் மூல‌ம் புகைப்ப‌ட‌ங்க‌ளில் என்னென்ன‌ மாற்ற‌ங்க‌ள் தேவையோ அனைத்தையும் செய்ய‌லாம். பேனர்க‌ள் டிசைன், புத்த‌க‌ங்க‌ளில் முன்ப‌க்க‌ம் டிசைன், இன்னும் ப‌ல‌ வ‌கையான‌ வேலைக‌ளையும் செய்ய‌லாம்.

முதலாவதாக நாம் Adobe Pagemaker பற்றிய மென்பொருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

படம்-1
(1) Adobe Pagemaker என்பது Adobe நிறுவனத்தின் ஒரு மென்பொருளாகும் இதன் மூலம் நாம் பெறக்கூடிய பயன்களை முந்தைய பதிவில் கண்டோம். இந்த மென்பொருளைப் பொறுத்த வரையில் பேப்பர் அளவுகள், மார்ஜின் அளவுகள், கார்டு அளவுகள் என்று அனைத்து அளவுகளையும் நாம் அறிந்திருப்பது மிக அவசியம். அப்படித் தெரிந்திருந்தால் மட்டுமே அனைத்தையும் வேகமாகவும், சுலபமாகவும் செய்துமுடித்துவிட முடியும்.
வழக்கம்போல நாம் அறிந்த Start–>Program–>Adobe–>Pagemaker முறையில் இதனை துவக்க வேண்டும். பிறகு படம்‍‍-1 மற்றும் படம்-2 ‍ல் உள்ளபடி முகப்பைக் காணலாம்.

படம்-2
நாம் புதியதாய் ஒரு கோப்பை உருவாக்க

படம்-3
படம்-3 ல் உள்ளது போல் New என்பதை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்தால் படம்-4 ல் உள்ளதுபோல் உங்கள் திரையில் காண்பீர்கள்.
பொதுவாக நாம் மற்ற மென்பொருளைப் பொறுத்த வரையில் ஒரு புதிய பக்கத்தை திறந்த பிறகுதான் அதற்குரிய Margins மற்றும் இதர settings-களை செய்வோம். ஆனால் Page maker-ஐ பொறுத்த வரையில் முதலில் நாம், நமக்குத்தேவையான பக்க அளவுகளை நிர்ணயித்து விட்டுத்தான் உள்ளே நுழைய முடியும்.

படம்-4
படம்-4 ல் தாங்கள் காண்பது: அதில்
இடது புறம் காட்சியளிப்பது = Text box,
நடுப்பகுதியில் காட்சியளிப்பது = Document Setup Windows ,
கீழே காட்சியளிப்பது = Control/properties box.
முதலில் Document Setup Window யைப்பற்றி காண்போம். இதில் முதலில் Page size என்னவென்று தேர்வு செய்யவேண்டும். பெரும்பாலும் நடைமுறையில் இருப்பது Letter size, A4 Size, A3 Size, Legal Size, A5 Size, Envelope Size ஆகும்,
இதில் தங்களுக்குத்தேவையான அளவை தேர்வு செய்யவேண்டும். உதராணமாக: A4 Size ஐ எடுத்துக்கொள்வோம். தாங்கள் தேர்வு செய்தவுடன் Page sizஎ க்கும் கீழே Dimensionச் ல் அதற்குரிய அளவுகளைக்காணலாம். தங்களுக்கு வேறு அளவுகள் தேவையெனில் Dimensions ல் அதற்குரிய அளவுகளைக் கொடுக்க வேண்டும். அப்படித்தறும் போது Pagesize ல் Custom Size என்று தானாகவே மாறிக்கொள்ளும்.
அடுத்து Orientation என்பது தங்களுக்கு தெரிந்தவையே. Potrait/Tall-ல் ‍ செங்குத்தாக, Landscape/Wide -படுக்கை முறையில், பேப்பரை தேர்வு செய்வதற்காக உள்ளது.
அடுத்து option-ல் த‌ங்க‌ளுக்கு ப‌க்க‌ங்க‌ள் அடுத்த‌டுத்து தேவை என்றால் Double Sided என்ப‌தை தேர்வு செய்ய‌வேண்டும். தேவையில்லை என்றால் தேர்வு செய்யாம‌ல் விட்டுவிட‌லாம். இதைப்ப‌ற்றி பின்னால் விரிவாக‌ பார்க்க‌ இருக்கிறோம். த‌ற்பொழுது அதை தேர்வு செய்யாம‌ல் விட்டு விடுவோம்.
அடுத்த‌தாக‌ த‌ங்க‌ளுக்கு எத்த‌னை ப‌க்க‌ங்க‌ள் தேவை அவை எந்த‌ எண்ணிலிருந்து ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்ப‌தை Number of Pages & Start Page No என்ப‌தை கொடுக்க‌ வேண்டும்.
அடுத்து Margin ல் (ப‌க்க‌த்தை ஒழுங்குப்ப‌டடுத்தும் வித‌மாக‌ இட‌து, வ‌ல‌து, மேல் ம‌ற்றும் கீழ் ப‌குதிக‌ளில் சிறிது இடைவெளி விடுவ‌தைத்தான் Margin என்கிறோம்.) தாங்க‌ளுக்கு தேவையான‌ இடைவெளிக‌ளை இங்கே கொடுக்க‌வேண்டும். (இத‌னை Millimeter ம‌ற்றும் Inch என்று எதுவாக‌ வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள‌ முடியும், எப்ப‌டி என்ப‌தை பிற‌கு காண்போம்.)
அடுத்து Target Output Resolution என்பது அச்சின் த‌ர‌த்தினை குறிக்கிற‌து. இதில் உங்க‌ளுக்கு தேவையான‌ அள‌வை கொடுக்க‌வேன்டும். (300 Resolution ஏதுவாக‌ இருக்கும்).
Compose to Printer என்ப‌தில் த‌ங்க‌ளிட‌ம் ப‌ல‌ வ‌கையான‌ Printer‍க‌ள் இருந்தால், அதில் எது தேவையோ அதை ம‌ட்டும் தேர்வு செய்து கொடுக்க‌லாம்.
பிறகு OK கொடுக்க‌ வேண்டும். இப்ப‌டி அனைத்தையும் தேர்வு செய்த‌ பின்ன‌ர்தான் புதிய‌ கோப்பினை திற‌க்க‌ முடியும். கோப்பினை திறந்தவுடன்.

படம்-5
பட‌ம் 5 ல் உள்ள‌து போல் உங்க‌ள் திரையில் காண‌லாம்…. (தொட‌ர்ச்சி அடுத்த‌ ப‌குதியில்)
குறிப்பு: “சமூக‌ சேவை” என்ப‌த‌ன் நோக்க‌த்தில் அலுவல்களுக்கு மத்தியில் கிடைத்த நேரத்தை பயன்படுத்திகிறோம். ஆதனால் தாமதமாக கட்டுரை எழுத வேண்டி உள்ளது., இக்க‌ட்டுரையைப்ப‌ற்றிய‌ உங்க‌ள‌து மேலான‌ க‌ருத்துக்க‌ளை எதிர்ப்பார்க்கிறோம்….

THANKS : ADIRAIABU

No comments: