Saturday, March 28, 2009

கண்ணே-கனியமுதே!

கண்ணே-கனியமுதே!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)

சமீபத்திய மணமுறிவுகள் நவீன முறையினை கையாண்டு எஸ்.எம்;.எஸ்-தொலைபேசி-கடிதங்கள் ழூலம் மிக எளியமுறையில் சொல்லி கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வினை சீர்குழைக்கப்படுகிறது. திருமணத்தில் கை நிறைய கைக்கூலி-சீர்-சீராட்டு பெற்றுக்கொண்டாலும் நிக்காப்புத்தகத்தில் அதெல்லாம் எழுதப்படுகிறதா என்றால் இல்லை. ஆனால் டைவர்ஸ் செய்யும் போது வெறும் மகரினை குறைந்த அளவு தொகையியாகத்திருப்பி மணமகளுக்கு அனுப்புவதும் வாடிக்கையாகி விட்டது. அதன் முடிவு மணமக்கள் மகிழ்வோடு வாழ்வினைத் தொடங்குவதை விட்டு விட்டு கோர்ட்-வக்கீல்-காவல் நிலையம் ஆகியோரின் வாசல்படியினை மிதிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. இது போன்ற மணமுறிவுகள் ஏற்படுவதிற்கு காரணங்கள்-அவைகளை போக்கும் வழிகள் பற்றி சிந்தனை ஓட்டத்தில் உதிர்த்த கருத்தோவியம்-கவிதைத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு வைக்க விழைகிறேன்.

காரணங்கள் பல விதம்:

மணப்பெண் பெற்றோர் அரவணைப்பிலிருந்து புகுந்த வீட்டுக்கு எண்ணிலா கனவுக் கோட்டைகளுடன் காலடி வைக்கிறாள். ஆனால் கணவன் வீட்டில் இருப்பவர்கள் தனக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று எண்ணும்போது அதிர்ச்சி அடைகிறாள். விதவை மாமியார்-வாழாவெட்டியாக இருக்கும் நாத்தனார் தங்களுடைய விரக்தியினை
புதுப்பெண்ணிடம் பொறிந்து தள்ளும் போதும்-அதனை தட்டிக்கேட்பதிற்கு தனது கணவனிடம் திரானி இல்லாத போது புகுந்த வீட்டில் அவள் அனாதையாகிறாள். மணகளை விட்டு மணமகன் பிரிந்து வெளி நாட்டுக்கு வேலைத் தேடி செல்லும் போது மணமகளைப் பற்றி அபாண்டமான தூபம் போடும் போது

மணமகனோ- மணமகளோ திருமணத்திற்கு முன்பு நடத்திக் கொண்டிருந்த காதல் நாடகங்களை அவையெல்லாம் கானல்நீர் என்று மறக்காமல்-நிக்கா புத்தகத்தில் மனவொப்ப கையெழுத்துப் போட்ட பின்னும் முந்தைய காதல் உலகில் சன்சரிக்கும் போது
மகன்; எங்கே மருமகள் முந்தானையில் ஒளிந்து கொள்வானோ என்ற பய உணர்வு மாமியாரை தொற்றிக்கொள்ளும் போது
மருமகள் படித்தவளாக இருந்தால் தங்களை மதிக்கமாட்டாளோ என்று படிக்காத மாமியாரோ-நாத்தனாரோ தாழ்வு மனப்பான்மையில் உழழும் போது
மருமகள் சற்று பொருளாதாரத்தில் தாழ்ந்து இருந்தால் அவளை அடிமைபோல் நடத்த முயலும் போது
மருமகள் பணக்காரியாக இருந்தால் அகங்காரி அவள் என்று அவப் பெயர் சூட்டும் போது
மருமகளுக்கு சிறு நோய் இருந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்கி அவளை தீண்டத்தகாதவள் ஆக்க முயலும் போது. ஆனால் தன் மகனுக்கு என்ன நோய் இருந்தாலும் அதை மூடி மறைப்பது. ஊதாரணத்திற்கு குணமாக்கக் கூடிய இனிப்பு நீர் மணமகளுக்கு இருக்கிறது என்று ஆட்டை வீட்டுக்கு அனுப்பியது போல் ஈனச்செயலும் நடந்துள்ளது. இந்தக் குறை போக்கத்தான் சீனாவின் சிற்பி மாசே துங் திருமணத்திற்கு முன்பு மணமக்கள் டாக்டரிடம் தனிக்கை செய்து நோய் குணமாதும் திருமண செய்யும் சம்பிராயத்தினை கொண்டு வந்தார்.
புகுந்த வீட்டில் தான் படும் வேதனையின் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கும் போது அவளைப் பார்த்து மணகளுக்கு பைத்தியம் என்ற பட்டத்தினை சூட்டும் பல்கலைக்கலகங்களாக மாமியார்களோ-நாத்தனார்களோ மாறும் போது-ஆனால் மணமகன் மன நிலை பாதித்தவன் என்ற உண்மையினை மறைக்க முயலும் போது
டி.விக்காட்சிகளில் வரும் மாமியார்-மருமகள் சண்டைகளை தங்கள் வீட்டிலும் அரங்கேற்ற முயலும் போது
பலர் மெச்ச ஆடம்பர திருமணம் கடன் வாங்கி நிறைவேற்றி விட்டு கடன்காரர்கள் துரத்தும் போது ஏற்படும் விரக்தி தங்களை கவ்வும் போது
இல்லாதவர் வீட்டில் அழகான பெண்ணை மகருக்காக திருமணம் என்று ஊரில் பறை சாட்டி விட்டு சீர்-சீராட்டு என்ற பெரிய லிஸ்ட்டை பெண் வீட்டாரிடம் கொடுத்து அவர்களும் தங்கள் மான மரியாதையை விட்டு நோட் புத்தகத்தினை கையிலேந்தி வீதி வீதியாக அலைய விட்டு திருமணம் செய்து கொடுத்தாலும் போதும் என்ற மன பக்குவம் அடையாது மணமகளை சீர்-சீராட்டுக் குறை சொல்லி நோகடிக்கும் போது
மேற்கூறிய குறைகளைக் களைய கீழ்கண்ட வழிமுறைகளைக் கையாளாம்:


திருமணத்திற்கு முன்பு மணமக்கள்-அவர்கள் பெற்றோர்கள் குடும்ப வாழ்வு சமூக சிந்தனை அடங்கிய புத்தகங்களை படிக்கச் செய்யலாம். மலேசியாவில் மணமக்களுக்கு ~கவின் குரிசு| என்று இன்பமான வழியில் வாழ்க்;கை அமைய மார்க்க போதனை நடைபெறும். அதே போன்று அமைப்பை ஏற்படுத்தி வழிகாட்டுதலில் ஈடுபடலாம்.
திருமணத்திற்கு பின்பு ஏற்படுகின்ற கருத்து வேற்றுமை காவல் நிலையம்-கோர்ட் வரை சென்று மானம் கப்பல் ஏறாமல் இருக்க கற்ற பெரியோர்கள் அடங்கிய கவுன்சிலிங் குழுவினை அமைக்கலாம்
ஏழை-எழியோர் திருமணம் செய்ய ஊர்க்காரர்களே பொறுப்பினை எடுத்துக் கொண்டு ஒரு கூட்டுத் தொகையினை(கார்ப்பஸ் பண்ட்) ஏற்படுத்தி எளிய முறையில் திருமணம் அமைய வழி வகுக்கலாம்
திருமணம் முடிந்து-விருந்தில் கலந்து கொண்டு வீட்டுச் செல்வதோடு தங்கள் காரியம் முடிந்தது என்றில்லாமல்-மணமக்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படும் போது அதனை தீர்த்து வைப்பதிற்கு ஒவ்வோர் ஊரிலும் பெரியோர் ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும. இறை நம்பிக்கையாளர்கள் மனைவியின் ஒரு நடத்தை பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய வேறு நல்ல குணங்களுக்காவது மணகனுக்கு மனநிறைவினைத் தரலாம்.
குத்பாவில் ஓதப்படும் ~தஷஹ்ஹ_து| துவாவின் நோக்கம் ~ திருமணம் வெறும் மகிழ்ச்சி குதுகூலமட்டுமல்ல-அது மணமக்களிடையே நாங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் தோழர்களாக-உற்ற துனைவர்களாக வாழ் நாள் முழுவதும் ஒற்றுமையாக வாழ்வோம் என்ற ஒப்பந்த பத்திரமாகும் என்று மணமக்களுக்கு அறிவு சான்ற பெரியோர் நினை ஊட்ட வேண்டும்.


மனைவிப் பா

-------------

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகிறது

என பொற்றோர் பெரியோர் சொல்ல

படிப்பை பாதியில் நிறுத்தி உன்

பள்ளியறை தஞ்சம் புகுந்தேன்


கண்ணே கனிமானே தேனே தௌ;ளமுதே

மயிலே மாங்குயிலே

முகிலைக் கிழித்து வந்த முழு நிலவே

ஆழ் கடல் மூழ்கி தெரிந்தெடுத்த வலம் புரி சங்கே


கொம்புத் தேனல்லவோ உன் பேச்சு

கொடியிடையடி உன் இடுப்பு

சந்தனமடி உன் தேகம்

சலங்கையடி உன் சிரிப்பு


நடந்தால் நீ நடனம்

அசைந்தால் நீ தேர்

கவின் மிகு கவிதை உன் மூச்சு

கருமேகடி உன் கூந்தல்


கம்ப ரசத்தை மிஞ்சியது உன் கவிதை மயக்கத்தில

தந்தேன் என் தளிர் மேனியை

சுனாமியாக மாறி என்னை சூறையாடி உன்

தாகத்தை தனித்துக் கொண்டாய்



எல்லையில்லா மகிழ்ச்சி மூழ்கியிருந்த போது

இடிவிலுந்தது உன் செல்போன் வடிவில்

அர்த்த ராத்திரியில் கேட்டது பெண் குரல்

நடுங்கியது உன் குரல்


என்னை கண்ணே கற்கண்டே என

கவிதை பாடியது பொய்யா?

கேட்டது மறுமுனை பெண் குரல்

கண்ணாடியாக நொருங்கியது என் இதயம்


அடப்பாவி காலமெல்லாம் என்னைக்

காப்பாற்றுவாய் என வீர வசனம் பேசி-என்

கருப்பையை நீ ஈரமாக்கினாய்-ஆனால் நீயோ

கல்லறையடி உன் கருப்பை என்றாய்


வாடகைத் தாய் என்று உன்

பாவச்செயலை சுமந்தேன் பிள்ளை வடிவில்

அழுதேன் புழம்பினேன்

ஆறுதல் சொல்வதிற்குப் பதிலாக அடித்தாய்


ஆண்கள் எந்தச் சேற்றிலும்

கால் மிதித்து

எந்தக் குட்டையிலும்

கால் கழுவுவான் என்றாய்


நீயும் வேணும் அவளும் வேணும்

மறக்க முடியுமா அவள் நினைவை

என்று ~காதல் பரிசு| சினிமா பாணியில்

வஞ்சித்தாய் வசனம் பேசி


கொஞ்சும் கிளியே என அழைத்த நீயே என்னை

வஞ்சித்தபோது சொல்ல வேண்டுமா

உன் குடும்பத்தார்

குரூர குணங்களை


நின்றால் குற்றம் நடந்தால் குற்;றம்

தொட்டால் குற்றம் தொடங்கினால் குற்றம்

சிரித்தால் குற்றம் சினுங்கினால் குற்றம்

அம்மம்மா எத்தனை ஏச்சும் பேச்சும்


கண்ணீர் கரைந்த தூத்துக்குடி உப்பளமா என் வேதனை

காதல் சருகு போன்றது அதனை சேகரித்தால்

குளிர்காய உதவும்-ஆனால்

காலமெல்லாம் வாழ்விற்குத் துணையாகுமா?


மாற்றான் தோட்டத்து மல்லிகையை

மனக்க விரும்பும் நீ

தன் வீட்டு மல்லிகையை

தவிக்க விடலாமா?


கனவனே கண்கண்ட தெய்வம் கற்புக்கரசி கண்ணகி

கதையில் படித்தேன்-ஆனால்

என்னை வாடகைத் தாயாக்கி

மாதவியினைக் கைப்படிக்க எண்ணலாமா?


மனிதன் தனித்திருப்பது நல்லதல்ல

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர்

ஆடையாக என சொல்லியது திருக்குர்ஆன்

ஆனால் நீ ஆட்கொல்லி விஷமாக மாறலாமா?



ஆடு மாடுமாடுகள் திருமணம் செய்வதில்லை

ஆறறிவு மனிதனுக்கு திருமணம் புனிதச் செயல்

துன்பத்தைத மறந்து இன்பத்தைத் தருபவள் மனைவி

அந்தத் துணையைத் துறத்தலாமா?


ஓர் இறை நம்பிக்கையாளன்-தன் துணையின்

ஒரு பழக்கம் பிடிக்கவில்லையெனில்

அவளுடைய வேறு பழக்கங்கள் உங்களுக்கு

மனநிறை தந்தால் அவளை நேசியுங்கள்


சொன்னது அல்குர்ஆன்-நீ

மறந்திருக்க மாட்டாய்- ஏனென்றால்

படித்தவன் பண்பாளன் என பெரியோர்

சொல்லக் கேட்டிருக்கிறேன்


நல்ல குடும்பம் ஓர் பல்கலைக் கழகமாமே

நம் குடும்பம் மட்டும் நடுத் தெருவிலா?

சிந்தித்து செயலாற்று-அடிமைச்

சிறைக்கதவை உடைத்து வெளியே வா


இசைக்கு சரணம்-சுருதி அவசியம்-உன்

செவிக்கு என் கவிதை

எதுகை-மோனை தெரியாது-என்

இதயச்சுமை எதுவுமே தெரியாதா?.

No comments: