Sunday, March 29, 2009

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி!

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி!

http://www.muduvaivision.com/islamicilakiyam.asp

இனியவர்களே! ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).’’

தமிழில் எழுதும் முஸ்லீம் படைப்பாளிகளின் சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து முழுமையான நல்ல சிறுகதைத்தொகுதி இதுவரை வெளிவரவில்லை என்ற குறை இஸ்லாமிய இலக்கியத்துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது… இலக்கியத்தரம்வாய்ந்த, இஸ்லாமிய இலக்கிய வரம்புகளுக்குட்பட்ட படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லீம் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதைகளில் ஒரு மிகச்சிறந்த கதையைத் தேர்வுசெய்து “இதயம் கவர்ந்த இஸ்லாமிய இலக்கியக் கதைகள்;” என்ற நல்ல ஒரு சிறுகதைத்தொகுப்பு வெளியிட வேண்டும் என்பது என் கனவு.

இத்தொகுப்பிற்காக தாங்கள் எழுதிய சிறுகதைகளில் மிகவும் சிறந்தகதையாக தாங்கள் கருதும் ஒரு கதையை அனுப்புங்கள்! தங்கள் சகஎழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் தங்களுக்குப் பிடித்த சிறுகதையையும் (எழுதியவர் பெயரோடு) அனுப்பி வைக்கலாம்! வாசகர்கள் தாங்கள் படித்த கதைகளில் தங்களுக்குப் பிடித்த கதையையும் (எழுதியவர் பெயரோடு) அனுப்பி வைக்கலாம்! இறந்துபோன எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் அவரது பிள்ளைகள் அனுப்பி வைக்கலாம். முதல் பரிசு ரூ.10,000. இரண்டாம் பரிசு ரூ.5,000. மூன்றாம் பரிசு ரூ.2,000. மற்றும் ஆறுதல் பரிசு தலா ரூ.1,000 வீதம் மூன்று கதைகளுக்கு வழங்கி கௌரவிக்கப்படும். (படைப்புகள் அனுப்புபவர்கள் தங்கள் முகவரியை குறிப்பிட்டால் நூல் வெளிவரும்போது அனுப்பி வைக்க வசதியாக இருக்கும்!). பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து கதைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுநூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

சகோதர சமுதாய மக்களும் இஸ்லாத்தின் மேன்மையை உணரும் வகையில் கதை உணர்ச்சிபூர்வமாகவும், உள்ளத்தை தொடும்வகையிலும் இருக்க வேண்டும். பிறமதத்தவர்களின் மனதைக் காயப்படுத்தும்வகையில் கதை கண்டிப்பாக இருக்கக்கூடாது. வசனங்கள், வர்ணணைகள் ஆபாசமாகவோ, கொச்சையாகவோ, சர்ச்சைக்குரியதாகவோ இருக்கக்கூடாது. ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வியாபார நோக்கத்தோடு இந்நூலை தயாரிக்கவில்லை. இஸ்லாமிய இலக்கியம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடும், முஸ்லீம் படைப்பாளிகள் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற இயல்பான ஆசையுடனும் இந்நூல் தயாராகிறது! நூலில் மூலம் கிடைக்கும் தொகை இஸ்லாமிய தொண்டு நிறுவனத்துக்கோ, இறந்துபோன ஏழ்மையில் வாடும் இஸ்லாமிய எழுத்தாளர்களின் குடும்பத்துக்கோ வழங்கப்படும்.

இன்ஷாஅல்லாஹ்… வந்துசேரும் சிறுகதைகள் ஜே.எம்.சாலி, ஹிமானாசையத், ஷின்னா ஷரீபுத்தீன், சிராஜூல் ஹஸன் போன்ற இஸ்லாமிய இலக்கியவாதிகளின் கனிவான பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் அழகிய நூலாக மலரும்! ஆண்டவன் நாடினால்… கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அணிந்துரையோடும், ‘மானுட வசந்தம்’ டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் மதிப்புரையோடும் வெளிவரும். இஸ்லாமி தமிழ் இலக்கிய மாநாட்டு விழாவில் நூலினை வெளியிட ஆசைப்படுகிறோம்.

இஸ்லாமியனாக பிறந்த நான் இஸ்லாமிய இலக்கியத்திற்காக… தனித்தனியே வௌ;வேறு இடத்தில் சிதறிக்கிடக்கும் வாசமலர்களை நேசமுடன் சேகரித்து அழகான மாலையாக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் இந்தநூல் இஸ்லாமிய இலக்கியத்திற்கு பெருமைதரக்கூடிய பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன். என் முயற்சிக்கு படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். மகிமையும் மேன்மையும் நிறைந்த ஆண்டவன் நம் முயற்சிகளுக்கு துணை நிற்பானாக!
சிறுகதை நகலை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : trichysyed@yahoo.com
கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி : 31.12.2009

தோழமையுடன் …

திருச்சி சையது, M.A., M.Phil.,
(பத்திரிகையாளர்)

No comments: