Tuesday, April 28, 2009

சில சில்லி வாக்கியங்கள்

சில சில்லி வாக்கியங்கள்

கங்கை, காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் ,ஆனால் ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியாது

திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருக்கலாம் ஆனால் அவரால் ஒரு குரலில் மட்டுமே பேசமுடியும்

என்ன தான் தன் தலை சுற்றினாலும் தன் முதுகை பார்க்க முடியாது ..

மீன் பிடிப்பவர் மீனவர் . நாய் பிடிப்பவர் நாயவராக முடியாது.

என்ன தான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கி
உள்ளே போட முடியாது

தேள்,பாம்பு கொட்டினால் வலிக்கும் முடி கொட்டினால் வலிக்காது.

ஸ்கூல்,காலேஜ் டெஸ்டில் பிட் அடிக்கலாம் , பிளட் டெஸ்டில் பிட் அடிக்க முடியாது .

பொங்கலுக்கு அரசாங்க லீவு.ஆனால் இட்லி , தோசைக்கு ?

கோலம் மாவுல கோலம் போடலாம், ஆனால் கடலை மாவுல கடலை போட முடியாது .

லைஃப் ல ஒன்னுமே இல்லைனா போர் அடிக்கும். தலையில்

ஒன்னுமே இல்லைனா கிளார் அடிக்கும்.

ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிட காசு இருந்தாலும், ஃபாஸ்ட் ஃபுட் ல் நின்று தான் சாப்பிடனும்.

என்ஜினியரிங் காலேஜ்ல் படித்தால் என்ஜினியர், ஆனால் பிரஸிடன்ஸி காலேஜ்ல் படித்தால் ? ?

டீ கப்பில் டீ இருக்கும், ஆனால் வேர்ல்டு கப்பில் வேர்ல்டு
இருக்குமா ?

பால் கோவா செய்ய பால் தேவை. ஆனால் ரச குள்ளா செய்ய ரசமா ?

பல் வலி வந்தால் பல் பிடுங்கனும்,கால்,தலை வலி வந்தால் ??

No comments: