Tuesday, May 12, 2009

” யதார்த்தங்கள்...! “ - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

” யதார்த்தங்கள்...! “ - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
---------------------------------------------------------------------------------------------

அரசியலில் ஆழ்ந்த புலமையுடைய ஒரு முஸ்லிம் ச்கோதரரை நேற்று சந்தித்துப்
பேசும் வாய்ப்புக்கிடைத்தது.

நீ சரியா, நான் சரியா என்று இணைய தளத்தில் சண்டை போட்டுக் கொள்ளும்
தமுமுக மற்றும் ததஜ நண்பர்கள் அதைக் கேட்டிருக்க வேண்டும் என்றே கடசி வரை
எனக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.

திமுகவுக்கு ஆதரவு. காங்கிரஸ்ஸுக்கு இல்லை. மமகவுக்கு முழு எதிர்ப்பு
என்று ததஜ நண்பர்கள் தீவிரமாகச்
செயல் பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. ‘மமக’வை தோற்கடித்து விட்டே மறு
வேலை என்று இவர்கள்
சூழுரைப்பதைப் பற்றிச் சொன்ன நண்பர், “வெற்றி தோல்வியை நிணயிக்கும்
நிர்ணாயக சக்தியாக ததஜ
இருந்து, ‘உன்னைத் தோற்கடிப்பது நான்தான்” என்று சொன்னால் அதில்
பொருளுண்டு அப்படியல்லாத
நிலையில் இப்படி சூளுரைப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் ? என்று கேட்டார்.

மமக என்ற பெயரில் ‘முஸ்லிம்’ என்ற சொல் இல்லையே என்று ஆதங்கப்படும் இணைய
தள மடல்களைப்
பற்றிச் சொன்ன போது, “அது இல்லாமலேயே மமக மத சார்புடைய கட்சி என்ற
முத்திரை குத்தப்பட்டு விட்டது.
சங். பரிவாரை விடுங்கள், அப்படி அல்லாதவர்களும் கூட ‘துலுக்கனுக்கு
துலுக்கன் ஓட்டுப் போடுவான் நாம்
ஏன் போட வேண்டும்’ என்ற மன நிலைக்கு உள்ளாகி வருவதாக ஒரு மூத்த
பத்திரிகயாளர் சொன்னார். அது
மாத்திரமல்ல, பாஜகவை வைத்து நிறுக்கும் தராசிலேயே மமகவையும் வைத்து
நிறுக்கும் அபாயம்
இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் ரீதியாக
அந்நியப்படுத்தப்படும் கூறுகளும் இதில் உள்ளடங்கி
இருப்பதாக அவரது கணிப்பு இருக்கிறது.

மமக சில tactical mistakes - தந்திரோபாயத் தவறுகள் செய்து விட்டதாகவும்
அவர் குறிப்பிட்டார். அவைகளைச்
செய்யாமல் இருந்திருந்தால் ததஜ அல்ல வேறு யாராலும் அவர்களை எதும் செய்ய
முடியாமல் போயிருக்கும்
என்றார்.

1. மமக, திமுக பக்கம் போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் அதிமுக முதலில்
இரண்டு இடங்கள் என்று
ஆசை காட்டியது. திமுகவில் இடம் இல்லை என்றதும் பிறகு பேசவே அழக்காமல்
அம்போவென்று கை
விட்டு விட்டது. அதற்கு இடம் கொடுக்காமல் - ஊசலாட்டமில்லாமல் - கடைசிவரை
திமுகவுடனேயே அது
நின்றிருக்க வேண்டும்.

2. ஒரு ‘சீட்’ கலாச்சாரம் இனி இல்லை என்று மேடைகள் தோறும் முழங்கி,
தங்களுக்குத் தாங்களே ஒரு
முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு ஒரு ‘சீனச் சுவரையே’ எழுப்பி விட்டார்கள்.
அதிலிருந்து பின் திரும்ப
முடியவில்லை.

3. தந்த ஒரு ‘சீட்டை’ ஏற்றுக் கொண்டு, ஆளுநர் பதவியோ, தூதர் பதவியோ
வேண்டாம், ஒரு ராஜ்ய சபா
உறுப்பினர் பதவி வேண்டும் என்று கேட்டிருக்கலாம். அல்லது குறைந்த பட்சம்
தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெறவிருக்கும் மூன்று இடைத் தேர்தல்களில்
இளையான்குடியை கேட்டு வாங்கி இருக்கலாம். தரத் தயாராக
இருந்திருப்பார்கள். ஆனால் கோட்டை விட்டு விட்டார்கள்.

4. மமகவுக்குத் தான் இரண்டு ‘சீட்’ கள் இல்லையே தவிர முஸ்லிம் லீகையும்
சேர்த்தால் இரண்டாகிறது.
39 இடங்களில் இரண்டு ‘சீட்’ என்பது ஐந்து சத விகிதத்துக்கும் சற்று
அதிகம். இன்றைய சூழலில் அது
போதும் என்று வைத்துக் கொண்டு, எதிகாலத்தில் கொஞ்சம் எட்டி அடி
வைத்திருக்கலாம். நா.ம.வில்
ஓர் இடம். ச.மன்றத்தில் ஓர் இடம் என்பது, எதுவும் இல்லாத சூழ்நிலையில்
ஏதோ ஒன்று என்று நினைத்து
காரியங்களை முன் எடுத்துச் சென்றிருக்க வேண்டும். இல்லை. அவசரப்பட்டு விட்டார்கள்.

5. இதற்கு ஒரு மோசமான பின் விளைவு உண்டு என்பதும் ஒரு கணிப்பு. இப்போது
எந்தப் பிரச்னை
என்றாலும் கச்சை கட்டிக் கொண்டு முன் நிற்பது தமுமுக தொண்டர்கள் தான்.
காவல் துறையும்
அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளும். அவர்களும் வீரியமுடனும்
துணிச்சலுடனும் காரியங்களை
ஏற்றுச் செய்வார்கள். இப்போது தமுமுகவை கண்டு கொள்ள வேண்டாம் என்று காவல்
துறைக்கு வாய்
மொழி உத்தரவு போயிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இதன் மூலம் தமுமுகவின்
செயல் வீரியம்
கொஞ்சம் முனை மழுங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப் படுகிறது.

அதனாலென்ன, தமுமுக இடத்துக்கு ததஜ வந்து விட்டுப் போகிறார்கள் என்று
ஆறுதல் பட முடியவில்லை.
ஏனெனில் தூரப் போய் விட்ட தமுமுகவுக்கு மட்டுமல்ல, துணை நிற்கும் ததஜ
வுக்கு அதே ‘உத்தரவு’
பொருந்தும் என்று சொல்கிறார்கள் என்பது தான் இதிலுள்ள பெரிய சோகம்
என்றவர், பெரிய அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை பகடைக்காய்களாக மட்டும்
பயன் படுத்தவில்லை பந்தாடவும் செய்துவிட்டார்கள் என்று முடித்தார்.

நேற்றிரவு முழுவதும் எனக்குத் தூக்கமில்லை...!!!

abjabin@gmail.com

No comments: