Saturday, December 26, 2009

பெண்ணியம் பேசும் பெண்கள் உருகிப்போவார்கள் -

பெண்ணியம் பேசும் பெண்கள் உருகிப்போவார்கள்!

_

துபாயில் கவிஞர் ஜின்னாஹ்வின் உணர்ச்சிபூர்வமான பேச்சு


25- 12- 2009 அன்று துபை சிவ்ஸ்டார் பவனில் வானலை வளர்தமிழ் மன்றத்தின் தமிழ்த்தேர் நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவரும், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவரும். பல காப்பியங்களை எழுதிய இலங்கை அரசின் உயர்ந்த இலக்கிய விருதுகள் பெற்றவரும். டாக்டர் கலைஞர் அவர்களின் பண்டார வன்னியன் என்னும் நாவலை காப்பியமாக எழுதி கலைஞரிடமே வாழ்த்து பெற்ற பெருமைக்குரியவருமான

கவிஞர் திலகம் திரு ஜின்னாஹ் ஷரீபுத்தீன் அவர்கள் கலந்துகொண்டார்நீரோடை http://niroodai.blogspot.com யென்னும் வலைப்பூவில் 100 கவிதைகளுக்குமேல் எழுதிய

கவிஞர் மலிக்காவின் கவிதைகளைப்பற்றி பேசும்போது அவர்

கூறியதாவது.

“மகள் மலிக்காவின் கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இக்காலத்தில் யாப்பிலக்கணத்தை கற்றுவிட்டு கவிதைஎழுதுபவர்களுக்குகூட

இதுபோல் எழுதவருவதில்லை. ஆனால் சிலருக்கு வருகிறது. அப்படி வருவது தெய்வம் கொடுத்த வரம்! அப்படித்தான் மலிக்காவின் கவிதைகளும்!


அவர் எனக்கு அறிமுகப்படுத்தபட்டபோது அவ்வளவாக படித்தவராக அறிமுகம் படுத்தpபடவில்லை. ஆனால் அவருடைய கவிதைகளை படித்தபோது அவருக்குள் இருக்கும் ஆளுமையையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் ஒரு மரபுக்கவிதைக்காரன்! புதுkகவிதையில் நாட்டமில்லையென்பது அல்ல ஆனால் நான் புதுக்கவிதை செய்வதில்லை. 10,000 மரபுக்கவிதைகளை எழுதியிருக்கிறேன்!

இருந்தாலும்கூட இடையிடையே புதுக்கவிதைகளையும் வாசிப்பதுண்டு

அதில் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன் சிலகவிதைகளில் அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். மலிக்காவின் கவிதைத்தொகுப்பை வாசித்தபோது சில கவிதைகளில் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறேன்.


அதன்பின்புதான் அவரை தொலைபேசியில் அழைத்து

“மகளே உன்கவிதைகளை வாசித்தேன். மிக நன்றாக எழுதியிருக்கிறாய்! அதில் சில சில கவிதைகளை செப்பனிடல்கள் செய்தால் நீ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பை வெளிடலாம் என அவருக்கு ஊக்கம் கொடுத்தேன். இன்று அவரை ஊக்குவிக்க காரணமும் அதுவே என்று நினைக்கிறேன்.


என்ன கவிதையை படித்துவிட்டு இவர் இப்படி சொல்கிறா?ர் என நீங்கள் கேட்கலாம். நான் ஏற்கனவே மரபுக்கவிதைக்காரன் என்று சொல்லிவிட்டேன், அப்படியிருந்தும் அவரின் கவிதைகளில் பலவற்றில் இரண்டுகவிதையை தற்போது வாசிக்கிறேன். கேளுங்கள்...

.

அதில் ஒன்று “மரணிக்கும்போது” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். இந்தகாலத்திலே படித்த பெண்கள் பெண்ணியம் என்ற ஒன்றை பிடித்துக்கொண்டு அலைகிறார்கள். பெண்களெல்லாம் கணவரை மதிக்கக்கூடாது. ஆணுக்கு சரிசமம். ஆணைவிட பெண் உயர்ந்தவள் என்று பேசுகிறார்கள்.

ஆனால்

இங்கே இந்த கவிதையிலே மலிக்கா சொல்லியிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. இதோ உங்களுக்கும் சொல்கிறேன். கேளுங்கள்.


உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்

நான் பிறக்க
நீ வரம்கேட்டாய்
என்னை மணக்க
வரம்கேட்டாய்
நமதன்பின் வெளிப்பாடாய்
நம்வாரிசுகளின்
வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி
எல்லாமே கிடைத்தன


[அதாவது மேற்சொன்ன அத்தனையும் கேட்டதும் கிடைத்தது]


என்னவனே!
எனக்கு
வரமாக கிடைத்தவனே!

எனக்காக
ஒருவரம் இறைவனிடம்
கேட்பாயா?

[தன் கணவனை விழித்து அதாவது நினைத்து அவனிடம் கேட்கிறாள். மேற்சொன்ன அத்தனையும் உனக்காக நீ கேட்டாய், இதைமட்டும் எனக்காகக் கேள். என்கிறாள் இதற்குபிறகுதான் இக்கவிதை உணர்வுப்பூர்வமான கவிதையாக மாறுகிறது கேளுங்கள்.

இங்கே பெண்ணியம் பேசுபவர்கள் இருந்தால் உருகிப்போவார்கள்.

இல்லையென்றால் அதை மறந்தே போவார்கள்.]


என்விழிநீர் உன்னைத்தழுவ
உன் மார்புக்குழிக்குள் நான்
முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கான
மரணம் நிகழவேண்டுமென்று...


என்ற வரிகளை முடிக்கும்போது அரங்கத்தில் கனமான அமைதி...

குண்டுசி விழுந்தால்கூட கேட்கும் சத்தம்.... பிறகு கவிதையின் ஆழத்தை அர்த்தத்தை புரிந்துகொண்ட பார்வையாளர்களின் கைதட்டல்

அடங்க வெகுநேரமானது. ஒரு சிலபெண்களின் கண்கள் ஈரமானதையும் பார்க்கமுடிந்தது பெண்களின் பக்கம் பலத்தவரவேற்பையும் பெருமிதத்தையும் பார்க்க முடிந்தது


இது ஒரு நல்ல கவிதையல்லவா?


உன்நெஞ்சில நான் சாஞ்சிருக்கும்போது

இதுபோன்றுதான் எனக்கு மரணம் வரவேனுமென்று விரும்புகிறாள். பூவோடும் பொட்டோடும் போகணும் என்றால் இப்படிதான் போகணும். அதையும் தன் கணவனிடமே சொல்லி இறைவனிடம் கேட்கச்சொல்கிறாள். எவ்வளவு ஒரு நல்ல கவிதை! என்றுசொல்லிவிட்டு


மற்றும் ஒரு கவிதையான ”வலி” என்ற கவிதையும் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இது நான் ஏற்கனவே 8 பக்கம்கொண்ட ஒரு சிறுகதை ஒன்று எழுதியிருந்தேன். ஒரு முதியவரைப்பற்றி அந்த கதையை இவர் தன்சிறிய கவிதைக்குள் கொண்டுவந்துவிட்டார். என அந்த கவிதையை வசித்தார்


இதோ அந்த கவிதை:


கைத்தடியை தட்டித் தட்டிக்கொண்டே
தள்ளாடியபடி வந்த தாத்தா தடுமாறிவிட்டார்
நான்கு கைகள் தாங்கியபடி வீடுவந்து
சேர்த்தவர்கள் வாசல்திரும்பவில்லை

உள்ளிருந்து ஒலித்தது ஓருசத்தம்
வயதாகிவிட்டால் வீட்டின் ஒருமூலையில் கிடக்காமல்
வாக்கிங் என்ன வேண்டிகிடக்கு வாக்கிங்

கத்தியில்லாமல் குத்திய வார்த்தையால்
வலிபொறுக்காமல் வழிந்தது கண்ணீர்
ரணப்பட்ட மனம் தானாய் புலம்பியது ரத்தினமே

நீ”
பூவும் பொட்டுமாய் போய்விட்டாய்!என அந்த கவிதையை வாசித்து இடையிடையே அதற்கான விளக்கங்களும் சொல்லி மிகவும் பெருமைபட பாராட்டினார்.


மலிக்காவை ஊக்கப்படுத்தும் விதமாக காவியத்திலகம் ஜின்னாஹ் ஷரீபுத்தீன்

அவர்கள் விருதை வழங்க அழைத்தபோது மலிக்கா அவர் அருகில் வந்து

தான் விருது வாங்கும் நேரத்தில் தன்னுடைய இலக்கியப்பணி மற்றும் தனக்கு எல்லாவிதத்திலும் உறுதுணையாக இருக்கும் கணவரும் தன்னருகில் இருக்கவேண்டும் என்று சொல்லியபோது,


மிகவும் சந்தோஷப்பட்ட கவிஞர் ஜின்னாஹ் உடனே மலிக்காவின் கணவர் ஃபாரூக்அலியை மேடைக்கு அழைத்தார்கள், “வாங்கப்பா” உங்களுக்காத்தான் அவர் கவிதை எழுதியிருக்கிறார் எவ்வளவு மகிழ்ச்சியான விசயம்!’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது மீண்டும் அரங்கம் அதிர்ந்தது கரகோசத்தால்.

ஃபாரூக்அலி அருகில் வர கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து விருதை பெற்றுக்கொண்டகாட்சியை பார்வையாளர்கள் மகிழ்ச்சியோடு பார்த்து இருவரையும் கவுரவிக்கும் விதமாக பலத்த கைதட்டல் எழுப்பினார்கள்.


வளர்ந்து வரும் கவிஞரை புகழ்பெற்ற, பலவிருதுகள் பெற்ற,

ஜின்னா அவர்கள் மேடையில் மனதார பாராட்டிய நிகழ்ச்சி இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் ஜின்னா அவர்களின்மீது மேலும் உயர்வான மதிப்பையும் மரியாதையும் ஏற்படுத்தியது.


கவிஞர் ஜின்னா அவர்களின் பெருந்தன்மை பாராட்டதக்கது.

ஆற்றல் மிக்க ஜின்னா அவர்களின் வாழ்த்து வளரும் இந்த கவிஞரை நிச்சயம் இலக்கிய உலகில் செழித்து வாழவைக்கும்!


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒருபெண் இருப்பாள் என்பது பழமொழி

ஓவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒருஆண் உண்டு என்ற புதுமொழியை உண்டாக்கிய கவிஞர் மலிக்கா அவர்களின் அன்புக்கணவர் பாரூக் அலி அவர்களை பெண்கள் சமூகமே பாராட்ட கடமைப்பட்டுள்ளது


விருதுக்கான ஏற்பாடுகளை குமுதம் சிறுகதை எழுத்தாளர் ஷேக் சிந்தா மதார். கவிஞர் கமால். பத்திரிகையாளர் திருச்சி சையது. ஆகியோர் செய்திருந்தனர்.


.கவிஞர் ஜின்னா அவர்களால் வழங்கப்பட்ட பரிசு கேடயத்திலிருந்த

மின்னும் நட்சத்திரம்போல்கவிஞர் மலிக்காவும்

கவிதை வானில் நட்சத்திரமாக வாழ வாழ்த்துகிறோம்!


..

No comments: