Thursday, January 7, 2010

25 வயது இளைஞன்....

25 வயது இளைஞன்....

* பெரியவர் ஒருவர் தனது 25 வயது மகனுடன் தொடர்
வண்டியில் (TRAIN) அமர்ந்திருக்கிறார்.
* தொடர்வண்டி புறப்படத் தயாராகிறது.
* பயணிகள் யாவரும் அவர்களது இருக்கையில்
இருந்தனர்
* தொடர்வண்டி புறப்பட்டது. அந்த இளைஞன் ஆர்வத்துடன்
கூடிய பெருமகிழ்ச்சியில் மூழ்கினான்.
* அவன் ஜன்னலருகே அமர்ந்திருந்தான்.
* அவன் தனது கையை வெளியே நீட்டி காற்றின்
வருடலை அதில் உணர்ந்தான். "தந்தையே பாருங்கள்!
அனைத்து மரங்களும் பின்னால் போகிறது" என்று
கத்தினான்.
* பெரியவர் புன்னகைத்தார். மகனின் உணர்வுகளை
வியந்தார்.
* பெரியவருக்கும் அவரது மகனுக்கும் நடக்கும் இந்த
சம்பாஷனை மாற்றங்களை அந்த இளைஞனின் அருகில்
அமர்ந்திருந்த ஒரு தம்பதியினர் கவனித்து வந்தனர்.
* இந்த 25 வயது இளைஞன் சிறுபிள்ளைதனமாக நடந்து
கொள்ளும் மனப்பான்மையைப் பார்த்து அவர்களுக்கு
சற்று அருவருப்பாக இருந்தது.
* திடீரென்று அந்த இளைஞன் மீண்டும் கத்தினான்,
"தந்தையே! அதோ குளம், அதோ மிருகங்கள்,
மேகங்கள் கூட தொடர்வண்டியோடு நகர்கிறது" என்று.
* இளைஞன் குழம்பிப்போய் இருப்பதை அந்த தம்பதியினர்
அவதானித்தனர்.
* இப்பொழுது மழை பெய்கிறது. மழை துளிகள் அவனது
கைகளிலும் விழுகிறது.
* அவனோ இன்பத்தில் மூழ்கி கண்கள மூடிக்கொண்டான்.
* மீண்டும் அவன் கத்தினான். "தந்தையே இதோ மழை
பெய்கிறது, மழை நீர் என்மீது படுகிறது இதோபார்
தந்தையே...!
* அந்த தம்பதியினர் தங்களால் ஏதும் செய்ய முடியாமல்
அந்த பெரியவரிடம் கேட்கிறார்கள்;
"நீங்கள் ஒரு மருத்துவரை சந்தித்து உங்கள் மகனுக்கு
ஏன் சிகிச்சை எடுக்கக்கூடாது?"
* அதற்கு அந்த பெரியவர் சொன்னார்;
ஆமாம்! நாங்கள் மருத்துவமனையில் இருந்துதான்
வருகிறோம்;
"அவனது வாழ்க்கையில் முதல் முறையாக இன்றுதான்
என் மகனின் கண்களுக்கு பார்வை கிடைத்துள்ளது"
(அவன் முதல் முறையாக இன்றுதான் உலகத்தை தன்
கண்களால் பார்க்கிறான்)

* படிப்பினை: அனைத்து உண்மைகளும் உனக்கு
தெரியாதவரை எதைப்பற்றியும்ஒரு முடிவுக்கு வராதே.

தமிழில்,
ஷுஐபு,
ஜித்தா.

No comments: