Saturday, January 16, 2010

நான் படித்துச் சுவைத்தவை !!!

1.நான் படித்துச் சுவைத்தவை !!!

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை
உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!
யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ
அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே!
மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்!
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட
ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!
அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.
தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.
மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும்
மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான்
இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
நன்றாகப் பேசுவது நல்லதுதான்
ஆனால் நன்றாகச் செய்வது அதனிலும் நல்லது!
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது!
முட்டாளைச் சமாளிக்க சுருக்கமானமான வழி
மெளனமாக இருப்பதுதான!
பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!
பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!
தோல்வி வந்தால் அது உனக்குப் பிரியமானதாகக் காட்டிக்கொள்!
வெற்றி அடைந்தால் அது மிகவும் பழக்கப்பட்டதுபோல் காட்டிக்கொள்!
இதுதான் வாழ்க்கையின் இரகசியம்!
2.நல்ல உறவுகளின் அஸ்திவாரம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!
நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம். விவேகமுள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்.
நிறையபேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திபடுத்த வேண்டியது
மற்றவரை அல்ல. உங்களைத்தான்.மேலே
இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது
அப்படியெனில்,
அன்போ, நட்போ தொடர்ந்து நிலைத்திருப்பதன் ரகசியம் என்ன?
அன்பு வற்றாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்!
ஜேனட்லூர் என்பவருடய ‘Simple Loving’ என்ற புத்தகம் சில எளிமயான யோசனகளை முன் வைக்கிறது.
உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.
உண்மயான அன்பு பணத்தை வைத்து எடை போடக் கூடாது. அல்ல பொருளை பகிர்வதோடு நின்றுவிடக்கூடா.
உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.
மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.
நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும்.
ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப்போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.
உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான் உங்கள் உறவு நீடிக்குமா, அல்ல காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா எனச் சொல்ல முடியும்.
மனப்பான்மை என்றால் என்ன?
உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக்கையாக மாறிவிடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை
உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?
நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்
இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்
இன்றய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்
இன்றய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!
எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது.
ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.
அன்பு என்பது ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொள்வதல்ல. மாறாக இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பது. ஒருவர் அழகாக இருக்கிறார் என்பதற்காக நீங்கள் அவரை அன்பு செய்யக்கூடாது. நீங்கள் அன்பு செய்வதால்தான் அவர் அழகாக இருக்கிறார். ஷேக்ஸ்பியர் கேட்பது போல் கடவுள் உங்களுக்கென ஒரு முகத்தைக் கொடுத்திருக்கிறார்! நீங்கள் ஏன் வேறொரு முகத்தைத் தேடுகீறீர்கள்?
கோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. ‘ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான்.
பாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக்கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும்.
அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்ம வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்துவிடவில்ல. தாமாகவே பிரச்னகளுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர்.
தனித்தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தரும்.
ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவர் ரே, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார்.
அன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே? எப்படிக் ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்?
ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார்,
அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்!
வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்
களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசங்கள நீங்
கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.
நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள்: (பலருடைய அனுபவங்களிலிருந்து)
என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம்.
ஒரு சிலர் மீது நான் எவ்வளவு அக்கறை காட்டினாலும் அவர்கள் மீண்டும் என் மீது அக்கறை காட்டுவதில்லை.
மற்றவர்களை ஒரு கால் மணி நேரத்திற்கு வேண்டுமானால் நம் அழகால் வசீகரப்படுத்தலாம். அதற்கு மேல் வசீகரப்படுத்த நமக்கு நாலு விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் அதை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதான் எனக்கு முக்கியம்.
வாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.
நான் அன்பு செய்பவரை விட்டுப் பிரியும் போது கனிவான வார்த்தையுடன் பிரிவது நல்லது. சிலசமயம் அவர்களை மீண்டும் சந்திக்காமலே போகக்கூடும்.
இனி இவர்களுடன் அன்போடு பழகவே முடியாது என நினத்த பிறகும், நீண்ட காலத்திற்கு அன்போடு பழகலாம்.
என் மனப்பான்மையை நான் கட்டுப்படுத்தாவிட்டால் அது என்னைக் கட்டுப்படுத்திவிடும்.
எவ்வளவுதான் ஒரு உறவில் உணர்ச்சிகள் தலைவிரித்து ஆடினாலும் அதையும் மீறி நல்ல காரணங்கள் இல்லாவிட்டால் ஒரு உறவு நீடிக்காது.
என்னை அன்பு செய்பவர்கள் நிஜத்தில் இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துவது என்றுதான் அவர்களுக்குத் தெரியவில்ல.
என் உற்ற நண்பருடன் சேர்ந்து ஏதாவது வேல செய்தாலும் சரி, சும்மா இருந்தாலும் சரி, அதைவிட மகிழ்ச்சியான நேரம் இருந்ததில்ல.
நான் வாழ்க்கையில் தவறு செய்விட்டு, என்னை இவர்கள் அவமானப்படுத்த போகிறார்கள் என்று யாரைக் கருதினேனோ அவர்கள்தாம் நிறைய சமயம் என்னத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.
நான் கோபப்படலாம். ஆனால் குரூரமாக நடக்கக்கூடாது.
நான் விரும்பும் வகையில் மற்றவர்கள் என்ன அன்பு செய்யவில்ல என்பதற்காக அவர்கள் என்னை அன்பே செய்யவில்ல என அர்த்தம் கிடயாது

Thanks & Regards
A.H.Mohamed Sirajudeen
Accounts Dept
Gulf Consolidated Contractors Co .Ltd
Automoto Mall, Building-B
Coastal Road - Al-Rakah
P.O:895 Box
Dammam-31421
Saudi Arabia
Cell:+966 556721712
Tel. +966 3 845-7777 (Est-1122)
E:Mail:ah_mdsiraj@yahoo.com

"We Wish Fill The World"
With The Light Of Islam.

1 comment:

Mohamed hussain said...

Really very interesting to read