Saturday, February 27, 2010

அமைதி மட்டும் கானல் நீராய்.....

அமைதி மட்டும் கானல் நீராய்.....

எல்லா நாட்டிலும் குழந்தைகள்
பள்ளிக்குச் செல்லும்...
நாங்கள் மட்டும் மருத்துவமனையிலே!!


எழுதி படிக்க ஆசைதான் - ஆனால் எங்களுக்கு
எழுதவே கரம் இருக்காது!!


கல்வி ஞானத்தை நெஞ்சில் சுமக்க ஆசைதான்;
ஆனால்;
முந்திக்கொண்டு இடம்பிடித்துவிடும்
துப்பாக்கி தோட்டாக்கள்!!


அமைதி மட்டும் கானல் நீராய்
எங்கள் தேசத்திற்கு;
மாற்று வழி என்ன இந்த தோஷத்திற்கு?


அனைத்து கொடுமைகளையும்
அசராமல் பார்க்கும் அரபுலகம்;
உயர்ந்த கட்டிடத்திற்க்கு உண்டு நிதி- எங்கள்
உயிருக்கு மட்டும் இதே கதி!!


எங்களுக்கு இங்கே நிலமுண்டு
ஆனால் இடமில்லை !!
தப்பிச் செல்ல வழியில்லை - காரணம்
தடுத்து நிறுத்த மதிலுண்டு!!


பால் இல்லை;
படுக்க இடமில்லை;
அரவணைக்க அன்னை இல்லை;
தாவிக்கொள்ள தந்தை இல்லை;

எல்லாமுண்டு இஸ்லாத்தில்
கொடுக்கதான் எவருமில்லை;



- யாசர் அரஃபாத்

No comments: