Tuesday, March 23, 2010

துபையில் (Peace) அமைதி மாநாடு

துபையில் (Peace) அமைதி மாநாடு


இஸ்லாம் என்றால் பயங்கரவாதம், தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக் கருத்துருவாக்கம் உலகெங்கும் வலிந்து திணிக்கப்படும் இக்காலச் சூழலில், அதைத் தவிடுபொடியாகச் செய்யும் "அமைதி மார்க்கத்தின் அழைப்பு" மாநாடுகள் நடத்தப் படுவது காலத்தின் கட்டாயமாகும். அவ்வரிசையில் துபையில் இன்ஷா அல்லாஹ் நாளை 18.03.2010இல் தொடங்கி மூன்றுநாட்கள் நடைபெறவிருக்கும் மாநாட்டில் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடைய சத்தியமார்க்கம்.காம் அன்புடன் வேண்டி, இதை அறிவிக்கின்றது.
கலந்து கொண்டு சிறப்பித்தோர்:
Sheikh Abdur Rahman Al Sudais
Imam Masjed Al-Haram (Al-Kaba) – Saudi Arabia
Dr. அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸ் - ஸஊதி அரபியா
ஈர்த்திழுக்கும் இவரது மறையோதல் உலகப் புகழ் பெற்றது. 1961ஆம் ஆண்டு பிறந்த ஷேக் அப்துர் ரஹ்மான், தமது 12ஆவது வயதில் இறைமறையை முழுமையாக மனனம் செய்தவர். ஹிஜ்ரீ 1399ஆம் ஆண்டு ரியாத் மருத்துவக் கழகத்தின் மிகச் சிறந்த மாணவராகப் பட்டம் பெற்ற மருத்துவர். ஷேக் அப்துர் ரஹ்மான் அவர்கள், தமது 'இஸ்லாமிய அடிப்படை நெறிமுறை' (ஷரீஆ) இளங்கலைப் பட்டத்தை ரியாத் பல்கலைக் கழகத்தில் 1983இல் நிறைவு செய்தார். பின்னர், இமாம் முஹம்மது இபுனு ஸஊத் இஸ்லாமியப் பலகலைக் கழகத்தில் தமது முதுநிலைக் கல்வியை 1987இலும் இஸ்லாமிய நெறிமுறை (ஷரீஆ) ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை உம்முல் குரா பல்கலைக் கழகத்தில் 1995இலும் நிறைவு செய்தார். ஹிஜ்ரீ 1404 ஷஅபான் மாதம் 22ஆம் நாள்முதல் கஅபாவின் இமாமாகப் பணியாற்றுகிறார். அன்னார், சிறுவயது முதல் தம் நல்லொழுக்கத்தாலும் இப்போதும் பின்பற்றும் எளிமையாலும் அனவரையும் கவர்ந்தவர்.
Sheikh Mishary Rashid Al Effasy - Kuwait
ஷேக் மிஷாரீ ராஷித் அல் இஃபாஸி - குவைத்
ஷேக் மிஷாரீ அவர்கள் 1976இல் குவைத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த ஓதுவார் (காரீ அல் குர்ஆன்). மதீனா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் அல் குர்ஆனையும் இஸ்லாமியக் கல்வியையும் பயின்றவர். மறையோதுதலின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்த ஷேக் மிஷாரீ, குவைத்தின் பெரிய பள்ளிவாயிலின் இமாமாகப் பணியாற்றுகிறார். இவரது குரலில் அல் குர்ஆன் யூ-ட்யூபில் கேட்கக் கிடைக்கிறது.
Dr. Hussain Hamed Hassan - Egypt
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் - எகிப்து
Dr. ஹுஸைன் ஹாமித் ஹஸன் அவர்கள் இஸ்லாமியப் பொருளாதாரத் துறையில் சமகாலத்தவரின் தந்தை எனப் பேசப் படுகிறார். கைரோவிலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் தமது முனைவர் பட்டத்தைக் கடந்த 1965இல் பெற்றவர். கூடுதலாக, ந்யூயார்க் பலகலைக் கழகத்தின் 'உலகளாவிய ஒப்பீட்டுச் சட்டப் பயிற்சி' மையத்திலிருந்து இரு பட்டங்களைப் பெற்றிருக்கிறார். எகிப்து அரசின் தலைமை வழக்கறிஞராக 1969-1970 பணியாற்றியுள்ளார். தற்போது மத்தியக் கிழக்கின் பல இஸ்லாமிய வங்கிகளுக்கு மட்டுமின்றி, பொருளாதாரக் கல்விப் பயிலகங்களின் நெறிமுறைக் கண்காணிப்புக் குழுமத்தின் தலைவராகவும் மத்தியக் கிழக்கின் அரசாங்கங்கள் சிலவற்றுக்குப் பொருளாதார ஆலோசகராகவும் திகழ்கிறார்.
Yasir Qadhi - USA
ஷேக் யாஸிர் காழி - அமெரிக்கா
ஷேக் யாஸிர் காழி அவர்கள் அமெரிக்காவின் டெக்ஸஸில் உள்ள ஹ்யூஸ்டனில் பிறந்தவர். மேனிலைப் பள்ளிப் படிப்பை ஸஊதியில் உள்ள ஜித்தாவிலும் இஸ்லாமியக் கல்வியை மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். தமது இஸ்லாமியக் கல்வி ஆய்வுக்கான முனைவர் பட்டத்தை அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழத்தில் அண்மையில் பெற்றார் ஷேக் யாஸிர். மிகச் சிறந்த பேச்சாளரும் இஸ்லாமிய அழைப்பாளருமான ஷேக் யாஸிரின் அழைப்புப் பிரச்சாரங்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்துள்ளன. ப்பீஸ், இஸ்லாம்(இங்கிலாந்து), அல்-ஹுதா(ஸஊதி அரேபியா), அல்-ஃபஜ்ரு(எகிப்து) ஆகிய தொலைக்காட்சிகளிலும் இவரது இஸ்லாமியப் பிரச்சாரம் ஒளிபரப்பப் படுகிறது.
Yusuf Estes - USA
ஷேக் யூஸுஃப் எஸ்டெஸ் - அமெரிக்கா
"விளையாட்டுப் பிள்ளை" என்று கேள்விப் பட்டிருக்கிறோமில்லையா? போலவே, அமெரிக்காவின் யூஸுஃப் எஸ்ட்ஸ் அவர்கள், குழந்தைகள்முதல் பெரியவர்வரை அனைவரின் உள்ளங்களையும் தம் விளையாட்டுப் பேச்சினால் கொள்ளை கொண்ட இந்த "விளையாட்டு ஷேக்" ஒரு முன்னாள் கிருஸ்துவப் பாதிரியாவார். ஐ.நா.வின் மத அமைதி-நல்லிணக்கத் தலைவர்களில் அமெரிக்காவின் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். எகிப்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமைக் கிருஸ்துவத்துக்கு மதமாற்ற முயன்றபோது இஸ்லாத்தின் வலையில் தாமாகவே வந்து 'வீழ்ந்துபட' நேந்ததை விளையாட்டாக, எளிமையான ஆங்கிலத்தில் அவர் விவரிக்கும்போது சிரிப்பும் அழுகையும் கலந்த அனுபவம் உண்டாகும். வெகு எளிமையான ஆங்கிலத்தில் விளையாட்டுத்தனமாகப் பேசியே பலரை இஸ்லாத்தின் பக்கம் அழைத்து வந்திருக்கிறார். இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காகவே பல இணைய தளங்களை நடத்திவருகிறார். அவரது சொந்தப் பெயரிலும் (www.YusufEstes.com) பிற பெயர்களிலும் இயங்கும் இணைய தளங்களுள் குறிப்பிடத் தக்கவை : (www.BibleIslam.com), (www.ShareIslam.com).
Abdur Raheem Green - UK
ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் - இங்கிலாந்து
ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன் அவர்கள் ஆங்கிலேய முடியாட்சியின் கீழ் இராணுவப்படை நிர்வாகியாத் திகழ்ந்த தந்தைக்கு, தான்ஸானியாவின் தலைநகரான தாருஸ்ஸலாமில் பிறந்தவர். குடும்பம் முழுதும் இங்லாந்துக்கு மீண்டு, லண்டன் கிருஸ்துவப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றவர். மாணவப் பருவத்திலேயே வாழ்வின் பொருளைத்தேடி, தம் உள்ளம் அலைபாய்வதை உணர்ந்தவர். தம் கலாச்சாரத்தை, வாழும்வழியைப் பல்வேறு வகையில் தன்னுள் கேள்விக்குட்படுத்தியவர். பிறகென்ன? தேடிக் கொண்டே இருப்பவர்களை இறுதியாக எதிர்கொள்வது அல்லாஹ்வின் வேதம்தானே! அது 1987இல் அவர் கைக்குக் கிடைத்தது. அன்றுமுதல் இன்றுவரை தான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனப் பிறருக்கு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் சிறந்த அழைப்பாளர்களுள் ஒருவராக மாறிவிட்டார் ஷேக் அப்துர் ரஹீம் க்ரீன். அவரது இணையதளம் www.IslamsGreen.org
Sheikh Hussain Yee - Malaysia
ஷேக் ஹுஸைன் யீ - மலேஷியா
"சீனஞ் சென்றேனும் ஞானம் தேடு" என்று ஓர் அரபுப் பழமொழி உண்டு. இந்தச் சீனவழிவந்த "யீ" அவர்களுக்கு ஞானம் பிறந்தது மலேஷியாவில். புத்தமதக் குடும்பத்தில் பிறந்த "யீ", தமது 18ஆவது வயதில் (1978) இஸ்லாத்தைத் தழுவினார். இஸ்லாமியக் கல்வி பயில்வதற்காக அவர் தேர்ந்து கொண்டது மதீனாவின் இஸ்லாமியப் பல்கலைக் கழகம். தேர்ந்தெடுத்த துறை ஹதீஸுக்கலை. பட்டம் பெற்றது 1978இல். மலேஷியாவில் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களுக்கு அடிப்படை போதனைகளையும் வாழும் வழிகளையும் சொல்லிக் கொடுப்பதற்குத் தோற்றுவிக்கப்பட்ட 'முஸ்லிம் சமூகநல அமைப்பு (Perkin)'இல் தம்மை இணைத்துக் கொண்டார் ஷேக் ஹுஸைன். பின்னர் ஹாங்காங்கின் இஸ்லாமிய மையத்தின் இயக்குநர் பொறுப்பேற்றார். மலேஷியாவில் "அல்-காதிம்" (தொண்டன்) எனும் அமைப்பை 1984இல் நிறுவி அழைப்புப் பணியைத் தொடர்ந்தார். சமகால ஹதீஸுக்கலை விற்பன்னர்களில் தலையானவரான இமாம் முஹம்மது நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அவர்களின் மாணவராவார் ஷேக் ஹுஸைன்.
M.M Akbar - India
ஷேக் எம். முஹம்மது அக்பர் - இந்தியா
இயற்பியல் பட்டதாரியான எம். முஹம்மது அக்பர், ஓரிடத்தில் நிலை கொள்ளாமல் சுற்றிக் கொண்டேயிருக்கும் இஸ்லாமிய அழைப்பாளர். கேரளாவில் பிறந்த ஷேக் அக்பர் இஸ்லாமியப் பிரச்சாரத்திலும் பிறமத நண்பர்களுடன் நடத்தும் நட்புமுறையிலமைந்த விவாதத்திலும் கெட்டிக்காரர். "ஸ்நேகஸம்வாதம்" (Friendly debate) எனும் பெயருடைய மலையாள மாத இதழின் ஆசிரியர். "உண்மையின் அதி உன்னதம் - NICHE of TRUTH" எனும் தஃவா அமைப்பின் நிறுவன இயக்குநர். Peace எனும் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். "Bibilinte Daivikatha-Vimarshangal, Vasthuthakal" (Divinity of Bible-Criticisms and Truths), "Haindavatha - Dharmavum Dharshanavum" (Hinduism – Religion and Ideology) ஆகிய நூல்களை எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளர்.
Saeed Rageah - Canada
ஷேக் ஸயீத் ராகியா - கனடா
சோமாலியாவில் பிறந்து ஸஊதியில் வளர்ந்து, வட அமெரிக்காவுக்குப் பெயர்ந்து, தற்போது கனடாவின் டோரொண்டோவில் அபூஹுரைரா இஸ்லாமிய மையத்தில் இமாமாகப் பணியாற்றும் ஷேக் ஸயீத், இஸ்லாமியக் கல்வியில் இளங்கலைப் பட்டமும் வெர்ஜினீயாவின் ஃபயர்ஃபாக்ஸில் உள்ள 'இஸ்லாமிய, அரபு அறிவியல் பயிலக Institute of Islamic and Arabic Sciences'த்தில் நெறிமுறை(ஷரீஆ)க் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். நாவன்மை மிக்கவர். மஸ்ஜிது ஹுதா (மோண்டரல்), மஸ்ஜித் ஆயா (மேரீலாண்ட்) "முஸ்லிம் இளையோர்" இதழ், "அக்ஸாக் கூட்டமைப்பு" ஆகியவற்றின் நிறுவனர் ஆவார் ஷேக் ஸயீத்.
Ahmed Hamed - India
ஷேக் அஹ்மது ஹாமித் - இந்தியா
"அழைப்புப் பணி என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை ஆகும்" எனக் கூறும் ஷேக் அஹ்மது ஹாமித், 28 வயது நிரம்பிய இந்திய இளைஞர். வணிகவியலில் முதுநிலைப் பட்டதாரியான அஹ்மது, கடந்த சில ஆண்டுகளாகவே அழைப்புப் பணியில் தீவிரமாக இயங்கி வருகிறார். "இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதலை, குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில் அமைந்த பிரச்சாரம் ஒன்றின் மூலமே களைய முடியும்" எனக் கூறும் அஹ்மது, எவரையும் கவரும் நாவன்மை கொண்டவர். பல்வகைப்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்காற்றியவர். அமீரகங்கள், ஸஊதி அரபியா, இங்கிலாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் அழைப்புப் பணி செய்திருக்கிறார். தாஇகளுக்குப் பயிற்சி அளிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் ஷேக் அஹ்மது.
Zain Bhikha - South Africa
ஸைன் பிகா - தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவின் ப்ரிட்டோரியாவில் 1974இல் பிறந்த ஷேக் ஸைன், சிறுவயதில் குரலினிமை கொண்ட சிறந்த பாடகராம். ப்ரிட்டோரியா முஸ்லிம் பள்ளிக்கூடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இஸ்லாத்தை மையப் படுத்தி, "வாழும் வழி - A Way of Life" எனும் ஒரு கவிதைத் தொகுப்பையும் பின்னர் "Praise to the Prophet (SAW)" (1996), "Fortunate is He" (1997) and "The Journey" (1998) ஆகிய தொகுப்புகளையும் ஸைன் வழங்கியுள்ளார் இஸ்லாமிய அடிப்படைகளை விளக்கும் சிற்றேடுகள், நூல்கள் உலகின் பலமொழிகளில் அச்சிடப்பட்டு, இம்மாநாட்டில் இலவசமாக வழங்கப் பட்டன.அவற்றுள்
இஸ்லாமியத் தகவல் மையம் (தாருல் பிர்), துபை.பணியாற்றும் எனருமை நண்பரும், "தாஈ"(இறைவழி அழைப்பாளரும்)ஆன,
சகோ. தமீமுல் அன்ஸாரீ (+971-55-9397734)
(பொறுப்பாளர் - புத்தகப் பிரிவு)
அவர்கள் அன்றைய தினம் தனது தந்தையார் இறந்த செய்தி இந்தியா (எங்களூர்‍‍ அதிராம்பட்டினம்)லிருந்து கிடைத்தும், அவரது உள்ளமோ, உடலோ, கண்களோ கலங்காமல்‍ பதற்ற‌மின்றி பரபரப்புடன் படைத்தவனின் மார்க்கத்தினைப் பரப்பும் பணியில் பலமொழி ‍நூற்களையும் (சுமார் 5 லட்சம்) இலவச வினியோகம் செய்ததும்; இடையிடையே இஸ்லாத்தின் இணையும் எமது தமிழகம் உட்பட உலக நாட்டினர் எவர்க்கும் உரிய நடவடிக்கைகள்;ஆலோசனைகள் வழங்கிக்கொண்டும் சுறுசுறுப்பாக தென்பட்டது என்னை வியப்பிலாழ்த்தியது. அவர்க்குத்துணையாக யானும் செயல்பட்டேன்; அவரின் முயற்சியாலும், சிபாரிசினாலும் தான் சமீபத்தில் " HAVE YOU DISCOVERED IT'S REAL BEAUTY? " என்ற ஆங்கில நூல்(மூலாசிரியர்: DR.NAJI IBRAHIM A. உடைய தமிழாக்கம் செய்யப் பணிக்கப்பட்டேன்; அதன் (தமிழாக்க) " அதன் உள்ளழகைக் கண்டுகொண்டீர்களா?"ஐ அவரிடம் அன்றைய தினம் ஒப்படைத்தேன்; இன்ஷா அல்லாஹ் விரைவில் அச்சிடப்பட்ட தமிழ் நூலாக இலவசமாக விநியோகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். அதுவரை எவர்க்கேனும் அதன் ‍நகல் தேவைப்பட்டால் அவரின் மின்னஞ்சல் முகவரி islamicinfo.tamildawa@gmail.com
அல்லது எனது மின்னஞ்சல் முகவரி
shaickkalam@yahoo.com , kalamkader2@gmail.com

என்ற முகவரியில் கேட்டுப் பெற்று பயன்பெறுக‌







அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் உதவியால் இந்த அரிய‍ ‍ பெரிய மா‍‍நாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நெகிழ்ச்சியூட்டிய நிகழ்ச்சிகள்:


மொத்தம் பனிரென்டு பேர்கள் (ஆண்கள் 6+ பெண்கள் 6) இயற்கை மார்க்கமான‌ இஸ்லாத்திற்குத் திரும்பி வந்தனர்.


முதன் முதலாக வந்த ஆஃபிரிக்கச்ச்கோதரர் (தான் இதுவரை தவறான மதத்தில் இருந்ததை எண்ணி)தூய ஷஹாதத் கலிமா சொல்லும் போழ்து அழுதுவிட்டார்; கூடியிருந்தோரும் அழுதுவிட்டனர்.

அதுவேப் போன்று, ஒரு ச‌கோத‌ரி (ஃப்லிப்பைன்ஸ் ‍நாட்டினைச் சார்ன்த‌வ‌ர்) அழுது கொண்டே ஷ‌ஹாத‌த் மொழிந்த‌தும்; அனைவ‌ர் க‌ண்க‌ளிலும் க‌ண்ணீர் வ‌ழிந்த‌து.

இறுதியாக‌, ஓர் ஆஃபிரிக்க‌ர் கேள்வி‍‍ ப‌தில் நேர‌த்தில் அவ‌ரின் ஐய‌ங்க‌ட்கு விடை தேட‌ விழைந்துதான் ஒலி வாங்கியின் முன்பு நிற்ப‌தாக‌ எல்லாரும் (விடை த‌ர‌ காத்திருந்த‌ ச‌கோத‌ர‌ர் டாக்ட‌ர் ஜாகிர்நாய‌க் உட்ப‌ட) எண்ணியிருந்த‌ வேளையில், அந்த‌ ஆஃப்ரிக்க‌ ச‌கோத‌ர‌ர் உட‌னே த‌ன்ன‌ருகில் நின்றிருந்த‌ ஓர் அராபிய‌ ‍நாட்டுச் சிறுவ‌னை(வ‌ய‌து 12 )ச்சுட்டிக் காட்டி'" இச்சிறுவ‌ன் தான் என‌க்கு இ‍ஸ்லாம் ப‌ற்றி எடுத்துச்சொன்னான்; நான் இவ்வர‌ங்கின் ஒரு பாதுகாவ‌ல் ப‌ணியில் இருக்கின்றேன்; அப்பொழுது, அவ்வழியே வ‌ந்த‌ இச்சிறுவ‌ன் இஸ்லாத்தின் சிற‌ப்பினை என‌க்கு எடுத்துச் சொன்னான்" என்ற‌தும். அப்ப‌டியானால், வேறு வினாக்க‌ள் ஏதும் கேட்டு விடை பெற‌ விழையைவில்லையா என்று கேட்க‌ப்பட்ட‌ பொழுது ,"இச்சிறுவ‌ன் சொன்ன‌ விள‌க்க‌மே என‌க்கு இஸ்லாம் மிக‌ச் சிற‌ந்த‌ மார்க்க‌ம் என்று தெளிவு பெற்றுவிட்டேன்; யாருடைய‌ வ‌ற்புறுத்த‌ல் இன்றி நானேத் தெளிவுட‌ன் தெரிவு செய்துவிட்டேன்; இப்பொழுது உட‌ன் என‌க்கு ஷஹாதா சொல்லித்தாருங்கள்" என்று கெஞ்சிக்கேட்டார்,
பிஞ்சு நெஞ்ச‌த்தினால் ஊட்ட‌ப்ப‌ட்ட‌ அறிவ‌முதைப் பெற்ற‌ அச்சகோத‌ர‌ர்!!! உட‌ன் டாக்ட‌ர் ஜாகிர்நாய‌க் அவ‌ர்க‌ள் இந்த‌ எதிர்பாராத‌ மாற்ற‌த்திற்கு எல்லாம் வ‌ல்ல‌வ‌னான‌ அல்லாஹ்வுக்கு ந‌ன்றி கூறிய‌வ‌ர்க‌ளாக‌ அச்ச‌கோத‌ர‌ர்க்கு க‌லிமா ஷ‌ஹாதா சொல்லிக் கொடுத்தார்க‌ள். க‌ண்டும் கேட்டும் கூடியிருந்த‌வ‌ர்க‌ளின் க‌ண்க‌ள் குள‌மாயின‌ (நான் அழுதேன்; ந‌ம‌து ஈமான் எல்லாம் இப்புதிய‌வ‌ர்க‌ள் முன்பு தோற்ப‌தை எண்ணி வெட்க‌ப்ப‌ட்டேன்)


ம‌ற்றும் ஒரு நெகிழ்ச்சியான‌ நிக‌ழ்ச்சி:

வெள்ளைத் தோல் நிற‌முள்ள‌வ‌ரும்‍ க‌ருப்புத் தோல் நிற‌முள்ள‌வ‌ரும் ஒரே நேர‌த்தில் மேடையில் க‌லிமா ஷ‌ஹாதா சொல்லி இஸ்லாம் என்னும் இய‌ற்கை மார்க்கத்திற்குத் திரும்பிய‌ பின், அவ‌ர்க‌ள் இருவ‌ர்க்கும் க‌லிமா சொல்லிக் கொடுத்த‌ச் சொற்பொழிவாள‌ர், ச‌கோத‌ர‌ர் யாசி காழி (அமெரிக்கா) அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ள்": இவ்விருவ‌ரும் சென்ற‌‍நிமிட‌ம் வ‌ரை ‍நிற‌ம் ம‌ற்றும் அவ‌ர‌வ‌ர் நாடுக‌ளின் இட‌ தூர‌ங்க‌ளால் வேறுப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ எண்ணியிருக்க‌லாம்; ஆனால், ப‌டைத்த‌வ‌ன் த‌ந்த‌ இஸ்லாத்தில் இணைந்த‌துமே இருவ‌ரும் ‍நிற‌ம்; நாடு பேத‌ங்க‌ள் ம‌ற‌ந்து க‌ட்டிய‌னணைத்த‌ன‌ர்; இப்பொழுது ச‌கோத‌ர‌ர்க‌ள்"

எதிர்பாராமல் டாக்டர் ஜாகிர் நாயக் என்னும் உலகமெலாம் உரைநிகழ்த்தி ஆயிரக்கணக்கானவர்களை இறைமார்க்கத்திற்குத் திரும்ப வைத்த அவர்கள் அவ்விழாவின் வருகையாளராக கடைசியிரவு (20/03/10)அன்று கலந்து கொண்டார்கள்; அவர்கட்கு இறுதியாக கேள்வி‍‍ பதில் நேரம் ஒதுக்கப்பட்டதால் கூட்டம் அரங்கில் அலைமோதியது; குறிப்பாக முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகளின் கேள்விகட்கே முன்னுரிமை வழங்கினார்கள்; அதனால், முஸ்லிம் அல்லாதோர்களின் தவறான் புரிந்துணர்தல் பற்றிய விளக்கமும் விடைகளும் தந்தார்கள் இதனால் அவர்களின் உரை நிறைவு பெற நீண்ட நேரமானது(சுமார் அடுத்த நாள் அதிகாலை 3 மணி வரை) குறிப்பாக விடை தேடிவந்த இரு ஹிந்து சகோதரர்கட்கு அவர்களின் வேத நூற்களான கீதா சாம யஜூர் அதர்வண ஆகியவற்றிலிருந்து "இறைவன் ஒருவனே எனபதும்; அவனுக்கு வடிவம் கொடுத்து (சிலை)வணக்கம் கூடாது' என்பதை ஆதாரத்துடன்(அவ்வேத வரிகளின் எண்கள் உட்பட மனனமாக)சொன்னதும் விடைத் தேடி வந்த இரு ஹிந்து சகோதரர்களும்
"வேதம் கூறும் ஓர் இறைவன் தான் உண்மை; அவனுக்கு சிலைகள் வைப்பதை ஏற்கவில்லை" என்று ஒத்துகொண்டனர். ஆனால், இன்னும் ஆழமாக ஆய்ந்து பின்னர் இஸ்லாத்தில் இணைவதாக வாக்களித்தனர், "இன்ஷா அல்லாஹ்" என்றே கூறினர். நிறைவான உள்ளத்துடன் இறைவனின் மார்க்கச் சிந்தனையை ஏற்றவண்ணம் இனிதே விழா நிறைவேறியது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! அல் ஹம்துலில்லாஹ்
பின் குறிப்பு:
ஆங்கே என் உள்ளமும் கண்களும் அழுத வண்ணமிருந்ததனால்
நரக நெருப்பை அக்கண்ணீர் மாய்த்துவிட்டதால் என்னவோ,துபையிலிருந்து அபு தபி வந்தது முதல் என் நடவடிக்கைகளில் ஓர் அற்புத மாற்றம் உணர்கின்றேன்.



‍"க‌விய‌ன்ப‌ன்", க‌லாம், அதிராம்ப‌ட்டின‌ம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
kalamkader2@gmail.com

No comments: