Monday, April 5, 2010

மைனாரிட்டி முஸ்லிம் நலனுக்கு குரல் கொடுப்போம்

From: Mohamed Ali
Date: Mon, Apr 5, 2010 at 4:30 PMAssalamu allaikum

I have sent the article on minority welfare. I am again sending it. I hope you would agree on my view points and circulate. Any views are also most welcome.

AP,Mohamed Ali

மைனாரிட்டி முஸ்லிம் நலனுக்கு குரல் கொடுப்போம்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ,பீ.எஸ்(ஓ)
அஸ்ஸலாமு அலைக்கும் சொந்தங்களே!
உங்களுக்கு 28.3.2010 அன்று மாலை பாப்புலர் ஃபிரண்ட் அணியினர் சென்னையில் ஹோட்டல் பிரசிடெண்ட்டில் கூட்டிய இட ஒதுக்கீடு கருத்தரங்கில் கலந்து கொண்டு என்னுடைய கருத்துக்களை முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு உள்பட எடுத்துச் சொன்னதோடு மட்டுமல்லாமல் என்னுடைய சார்பாக இரண்டு தீர்மானங்கள் மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் கொண்டு வந்த மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன்.
என்னுடைய இரண்டு தீர்மானங்கள் கீழ் வருமாறு:

1) அரசு அலுவல்களில் மற்றும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் தகுதியான முஸ்லிம் வேட்பாளர்களில்லை என்று மற்ற பிரிவு மக்களுக்குக் கொடுக்கக்கூடாது. அதனை அடுத்த ஆண்டு காலி யிடங்கள் நிரப்பப்படும் போது முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுத்து நிரப்பப்பட வேண்டும்.
2) மத்திய அரசின் 27 பிற்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டிலும், பிரதமரின் 15 அம்ச கொள்கையின்படியும், மாநில அரசின முஸ்லிம்களின் ஒதுக்கீடுகளின் பயன் பெற்ற முஸ்லிம்களின் அனைத்து துறையிலும் விவரமான வெள்ளை அறிக்கை வெளியிட வற்புறுத்த வேண்டும்.

உங்களுக்கெல்லாம் மத்தியில் மைனாரிட்டி நலனுக்காக ஒரு அமைச்சகம் இருப்பது தெரியும். இதற்கு முன்பு மகாராஷ்ட்ராவினைச் சார்ந்த ஏ.ஆர். அந்துலே அவர்கள் அமைச்சராக இருந்தார்கள். அவருக்கென்று தனி அறை கூட ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது மத்திய அமைச்சராக உ.பி. மாநிலத்தினைச் சார்ந்க சால்மான் குர்சித் அவர்கள். உள்ளார்கள். அந்தத் துறையில் அதிகாரிகள் காலியிடங்களை நிரப்ப எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் ஆர்வம் காட்டுவதில்லையாம். உதாரணத்திற்கு ஒரு இணைச் செயலாளர் பதவி காலியாக 2009ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து இருப்பதாகவும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெயர் அந்த பதவிக்கு பரிந்துரை செய்தாலும் அதனை அவர்கள் தட்டிக்கழித்து இன்னும் அந்தப்பதவி நிரப்பப்படாமல் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் சச்சார் அறிக்கை மத்திய அரசிடம் 2007ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு விட்டது. அந்த அறிக்கையினை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்வது எமாற்றமளிக்கிற செய்தியாக இருக்கவில்லையா? முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் 20 மாநிலங்களில் 90 மாவட்டஙகளை தேர்ந்தெடுத்து அதனை முன்னேற்ற ‘எம்.சி.டி’ திட்டம் என்று பெயரிட்டு(அதாவது (முஸ்லிம் கான்சென்ட்ரேட்டடு டிஸ்ட்ரிக்) அதற்தகான செலவு தொகை ரூ.பாய் 1821.50 கோடி 31.12.2009 அன்று ஒதுக்கப்பட்டது. ஆனால் இது வரை முஸ்லிம்கள் நலனுக்காக செலவழித்தது வெறும் ரூபாய் 142.40 கோடி மட்டுமே. அதில் உ.பி.மாநிலம் மட்டும் ஒதுக்கப்பட்ட ரூபாய் 582.30 கோடியில் ரூபாய் 14.30 கோடி செலவிட்டு அதிகம் செலவழித்த மாநிலமாக திகழ்கிறது என்பது எவ்வாறு மாநில அரசுகளும, மத்திய அரசம் முஸ்லிம்களின் நலனில் ‘பெப்பே’ காட்டி அக்கரையுடன் செயல்படுகிறார்கள் என்று தெரிகிறதல்லவா? இதனை நான் சொல்லவில்லை சச்சார் கமிட்டியில் உறுப்பினர் செயலாளராக இருந்த அபுதாலே செரீப் அவர்கள் கூறுகிறார்கள். அரசுகள் முஸ்லிம் நலன் பற்றி பேசுவது உதட்டளவே என்று புரிகிறதா சொந்தங்களே?
ஆகவே தான் 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிந்து பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தன்னுடைய அமைச்சகம் சாதாரண முஸ்லிம் மக்களின் நலனைத் தொட முடியாத நிலையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதிலிருந்து அசரசுகளும், அதிகாரிகளும் முஸ்லிம் நலனைக் காப்பதில் ‘கழுவுற மீனில் நழுவுற மீனாக’ இருப்பது உங்களுக்குப் புரிகிறதா?
துமிழக முதல்வர் அவர்கள் பாரதப் பிரதமர் அவர்களுக்கு 1. 4. 2010 அன்று எழுதிய கடிதத்தில் கிறித்துவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு அவர்கள் முன்பு அனுபவித்த சலுகைகளை மதம் மாறினாலும் வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார்கள். ஆனால் எந்த மத்திய அமைச்சராவது அல்லது மாநில முதல்வராவது சச்சார் அல்லது ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையினை அமல் நடத்த வேண்டும் என பாரதப்பிரதமருக்கு கடிதம் எழுதி பேட்டி கொடுத்துள்ளார்களா? அல்லது தங்கள் மாநில மைனாரிட்டி நல கமிஷனுக்கு முஸ்லிம் தலைவரை நியமித்துள்ளார்களா? அப்படி மத்தியில் நியமித்தாலும் அவர்களின் அறிக்கைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்றால் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் ஓட்டினைப்பெற மட்டும் போட்டிபோட்டு வாக்குறுதி அள்ளி வீசப்படுகின்றனல்லவா? அவையெல்லாம் முஸ்லிம்களுக்கு பெப்பே காட்டத்தானே!
மேலே சொன்ன எம்.சி.டி பணத்தினை 2009ஆம் ஆண்டு செலவு செய்யாதததினை 2010ஆம் ஆண்டு நிதியுடன் சேர்த்து செலவு செய்ய அதாவது சென்ற ஆண்டு நிதி காலாவதியாகாது இந்த ஆண்டு நிதியுடன் சேர்த்து செலவு செய்ய அறிவுறுத்தப்படுமா என்பது சந்தேகமே! இதனை எந்த முஸ்லிம் அமைப்பாவது அரசு கவனத்திற்கு இனியாவது கொண்டு வருமா சொந்தங்களே!
1 4. 2010 அன்று மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்கள் 2011 சென்சஸ் என்ற இந்திய நாட்டு 120 மக்கள் தொகை ‘பயோமெட்ரிக்’ கணக்கெடுப்பினை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இந்த கணக்கெடுப்பு இதற்கு முந்திய கணக்கெடுப்பினை விட மாறுபட்டது. எப்படி என்றால் இந்த கணக்கெடுப்பில் மக்களை போட்டோ எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் கை ரேகையும் பதிவு செய்யப்படும். ஏற்கனவே முஸ்லிம்கள் அதிக மக்கள் தொகையிருந்தாலும் அவர்கள் வெளி நாடுகளில் வாழ்வதினால் அவர்கள் பதிவேட்டிலிருந்து விடுபட்டதுமல்லாமல் அவர்கள் தங்கள் இந்திய நாட்டிற்கு வரும்போது ஓட்டுப்போடும் உரிமையினை இழந்தவர்கள் ஆகிறார்கள். இந்தத்தடவை போட்டோவுடன் கைரேகையும் சேர்த்து கணக்கெடுப்பில் இருப்பதால் பெரும்பாலான வளைகுடா நாட்டில் பிழைப்பிற்காக சென்ற முஸ்லிம் மக்கள் கணக்கெடுப்பில் விடுபட வாய்ப்பிருக்கிறது. அதற்கு மாற்று வழி ஒன்று இருக்கிறது. அது என்றவென்றால் வெளிநாட்டில் குடியுரிமை பெறாத மக்கள் அந்தந்த நாட்டு இந்திய நாட்டு வெளியுறவு அலுவலகத்தில் போட்டோவுடன் கைரேகை கொடுத்து தங்களை இந்திய மக்கள் கணக்கெடுப்பில் பதிவு செய்ய குரல் கொடுக்க முஸ்லிம் அமைப்புகள் முன்வர வேண்டும். ஏற்கனவே இரட்டை குடியுரிமை தகுதி வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இருக்கும் போது அதே முறையில் தங்களை இந்திய வாக்காளர்களாக பதிவு செய்ய வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மூன்றாம்தர மக்களாக கருதி தங்களக்கு இந்திய குடியுரிமைச்சட்டம் அளித்த அடிப்படை உரிமையினை இழக்க வாய்ப்புள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் அந்த சென்சஸ் கணக்கெடுப்பில் பாதையோர மக்களையும், திருநங்கை என்ற அரவாணிகளையும் சேர்க்க வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்கள். ஆகவே கணக்கெடுப்பு கொள்கையில் மாற்றம் வர வழிவுள்ளது.
எனவே இந்திய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், வெளிநாடுகளில் இயங்கும் ஐய்மான் அமைப்பு பேன்றவைகளும் இப்போதே மத்திய அரசு கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கூறுவது சரிதானே சொந்தங்களே!
1.4.2010 பாரதப்பிரதமர் ஆறு வயதிலிருந்து 14 வயது வரை கட்டாயக்கல்வி என்று அறிவித்திருக்கிறார்கள். முஸ்லிம் வாழ் ஊர்களில் இயங்கும் மதரஸாக்களையும் இத்துடன் இணைத்து உலக-மற்றும் மார்க்க கல்விக்கு வழிவகை செய்ய அரசின் கவனத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனையும் ஒரு கோரிக்கையாக மத்திய-மாநில அரசுகளின் கோரிக்கைகளாக வைக்கலாமே! சொந்தங்கள் குரல் கொடுப்பார்களா இளம் முஸ்லிம் பிள்ளைகளுக்கு அறிவுக்கண் திறக்க?

--
MUDUVAI HIDAYATH
www.imandubai.org
www.mudukulathur.com

No comments: