Thursday, November 15, 2007

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML) ஏற்பாடு செய்த

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML) ஏற்பாடு செய்த
''அரசியலின்றி சமுதாயப் பணிகள் சாத்தியமா ?'' சிறப்பு கருத்தரங்கம்‚

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML) சார்பில் 09-11-2007 வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில் குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள தஞ்சை உணவகம் , கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அரங்கில் ''அரசியலின்றி சமுதாயப் பணிகள் சாத்தியமா?'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கருத்தரங்க நிகழ்ச்சிக்கு முஹம்மதுபந்தர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( IUML ) தலைவரும், குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை( TMCA )யின் முன்னாள் தலைவருமான ஆர்.எம். முஹம்மது ஃபாரூக் அவர்கள் தலைமையேற்க, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic )த்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது ஷரீஃப் மன்பயீ அவர்கள் கிராஅத் (இறைமறை திருக்குர்ஆன் வசனங்கள்) ஓத, குவைத் தமிழ் டாட் காம் மாத இதழின் உதவியாசிரியர் எம்.ஒய். முபாரக் ரஜ்வி அவர்கள் வரவேற்புரையாற்ற நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
தலைவரின் தலைமையுரைக்கு பின் , குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க( K-Tic)த்தின் துணைத் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து கருத்தரங்க தொடக்கவுரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து... குவைத் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை( TISA )யின் தலைவர் க. ரஹ்மத்துல்லாஹ், எழுச்சிப் பாவலர் சமுதாயக் கவிஞர் விழுப்புரம் ஷாஜி , குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க( K-Tic )த்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவீ ஏ. அப்துஸ் ஸலாம் தாவூதி, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க( K-Tic )த்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னோடிகள் ஏபிஸி. நஜீர் மற்றும் கம்பளி பஷீர் ஆகியோர் ''அரசியலின்றி சமுதாயப் பணிகள் சாத்தியமா ?'' என்ற தலைப்பில் சிறந்த முறையில் தங்கள் கருத்துக்களை கருத்தரங்கில் எடுத்துரைத்தனர்.
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML டு) அமைப்பாளரும், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க( K-Tic )த்தின் துணைத் தலைவருமான திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாட்சா அவர்கள் கருத்தரங்க நிறைவுரையாற்ற, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க(K-Tic )த்தின் இணைப் பொருளாளர் எச். முஹம்மது நாஸர் நன்றி கூறினார். துஆவுடனும், இரவு உணவுடனும் நள்ளிரவு 12 மணிக்கு கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.
இச்சிறப்பு கருத்தரங்கில் குவைத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(IUML )கர்கள், ஆர்வலர்கள் , அனுதாபிகள் , உலமாக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் , பணியாளர்கள் , பல்வேறு இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( KIUML ), குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க ( K-Tic ) பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

செய்தி : குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML )

அலைபேசி : 7862316, 7302747, 7549025, 6948224 & 7872482
மின்னஞ்சல் : iumlkuwait@yahoo.com

No comments: