Saturday, July 19, 2008

பிரார்த்தனைப் பேழை

பிரார்த்தனைப் பேழை

http://www.islamkuralblog.blogspot.com/

பிரார்த்தனை பற்றி முன்னோர்கள்...

ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அதைப் பொருட்டாகக் கொண்டு கேட்கப்படும் துஆக்களில் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும், அவனுடைய மேன்மைக்குரிய தன்மைகளையும், குணங்களையும் பொருட்டாகக் கொண்டு அதன் நிமித்தம் இறைவனிடம் கேட்டால் அந்த துஆவுக்கு பெறும் மதிப்பு இருக்கிறது.

அங்கீகரிக்கப்படுவதற்கான அருகதையையும் இந்த துஆ அடைகிறது. ஏனெனில் 'இறைவா! நீ நேர்வழியில் செலுத்துகிறவன், கொடைவள்ளல், உதவி ஒத்தாசைகள் புரிகிறவன், இப்படியெல்லாம் நீ இருப்பதின் பொருட்டால் என்னை நேர்வழியில் செலுத்துவாயாக! எனக்கு நீ அள்ளி வழங்குவாயாக! எனக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்தருள்வாயாக! எனக்கூறி நாம் பிரார்த்திக்கும்போது நமக்கு என்னென்ன விஷயங்கள் தேவையோ அவையனைத்துமே அல்லாஹ்வின் தன்மைகளுள் உட்பட்டவையாக இருக்கின்றன என நாம் ஏற்றுக் கொள்கிறோம். அத்தன்மைகளால் அல்லாஹ் வர்ணிக்கப்பட்டவனாகவும் நாம் விசுவாசிக்கிறோம். இதனால் நம் பிரார்த்தனைகளை விரைவில் அங்கீகரிப்பதற்குரிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டோமல்லவா!

ஷைகுல் இஸ்லாம் "இப்னு தைமிய்யா"


சகோதரர்களுக்கு...

இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) இனிவரும் பதிவுகளில் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டிய பிரார்த்தனைகள் மற்றும் அனுதினமும் இறை நினைவுகளில் திளைத்திருக்க வேண்டிய திக்ர் வகைகள் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளுக்கொப்ப இத்தளத்தில் பதியப்படும். இதைக் கண்ணுறும் சகோதரர்கள் மற்றைய சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



என்றும் அன்புடன்
Jafar Safamarva



பயணத்திருந்து திரும்பும் போது ஓத வேண்டிய துஆ!
முந்திய பதிவின் துஆவையே ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து


آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(B)ன தாயிபூ(B)ன ஆபி(B)தூன ரப்பி(B)னா ஹாமிதூன்.

இதன் பொருள்: எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.


ஆதாரம்: முஸ்லிம் 2392
Posted by Jafar Safamarva at 5:00 AM 0 comments
Labels: நன்மை, பயணம், மன்னிப்பு
Friday, June 13, 2008
பயணத்தின் போது ஓத வேண்டிய துஆ!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் - அல்லாஹு அக்ப(B)ர் எனக் கூறுவார்கள். பின்னர்


سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(B)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(B)னா லமுன்கபூன். அல்லாஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(F) ஸப(F)ரினா ஹாதா அல்பி(B)ர்ர வத்தக்வா வமினல் அம மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(F)ரனா ஹாதா வத்வி அன்னா பு(B)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(B) பி(F)ஸ்ஸப(F)ரி வல் கலீப(F)(த்)து பி(F)ல் அஹ்லீ அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(F)ரி வகாப (B)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(B) பி(F)ல் மா வல் அஹ்லீ எனக் கூறுவார்கள்.

இதன் பொருள்: அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


ஆதாரம்: முஸ்லிம் - 2392
Posted by Jafar Safamarva at 5:00 AM 0 comments
Labels: நன்மை, பயணம், வாகனம்
Friday, June 06, 2008
இந்த திக்ரை கூறி சுவர்க்கத்து மரம் ஒன்றை பெறலாமே!
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِِ الْعَظِيْمِ


சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்


என்று கூறினால் சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நாட்டப்படுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி)
Posted by Jafar Safamarva at 5:00 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Friday, May 30, 2008
நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த திக்ர்!
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு ஏதேனும் திக்ரைக் கற்றுத் தாருங்கள் என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள்


لاَإِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، اَللهُ أَكْبَرُ كَبِيْرًا وَالْحَمْدُ لِلَّهِ كَثِيْرًا، سُبْحَانَ اللهِ رَبِّ الْعَالَمِيْنَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ


லாஇலாஹ இல்லலல்ல்ஹு வஹ்தஹு லா ஷரீகலஹு, அல்லாஹு அக்பர் கபீரன் வல்ஹம்துலில்லாஹி கஸீரன், சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஜீஜில் ஹகீம்.

என்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். அதற்கு அவர் இவைகள் இறைவனைப் புகழ்வதற்காக உள்ளவை. எனக்காக எதுவும் இல்லையா? என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதனைக் கற்றுக் கொடுத்தார்கள்.


أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ


அல்லாஹும்மஃபி(F)ர்லி வர்ஹம்னி வஹ்தினி வர்ஜுக்னி

(அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
Posted by Jafar Safamarva at 7:41 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Tuesday, May 27, 2008
அல்லாஹ்வுக்கு பிரியமான நான்கு வார்த்தைகள்!
سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلَّهِ ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ


சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி, வலா இலாஹி இல்லல்லாஹூ, வல்லாஹு அக்பர்


இவை இறைவனின் மிகப் பிரியமான நான்கு வார்த்தைகளாகும். இதில் எந்த வார்த்தையையும் முதலாவதாக கூறலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)
Posted by Jafar Safamarva at 6:12 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Sunday, May 25, 2008
சுவர்க்கத்தின் பொக்கிஷம்!
அப்துல்லாஹ் இப்னு கைஸே! உனக்கு சுவர்க்கத்துப் பொக்கிஷம் ஒன்றை அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள் என்றார்.


لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ


லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்


என்று கூறுவீராக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)
Posted by Jafar Safamarva at 6:40 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Friday, May 23, 2008
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால்...
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு தொழுகையைக் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு இவ்வார்த்தையைக் கொண்டு பிரார்த்திக்கச் சொல்வார்கள்.

أَللَّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ


அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆ(F)பினீ வர்ஜுக்னீ


(அறிவிப்பவர்: தாரிக் அல்அஸ்ஜயீ (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம்)
Posted by Jafar Safamarva at 4:36 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Tuesday, May 20, 2008
சிறந்த திக்ர்!
اَلْحَمْدُ لِلَّهِ


சிறந்த திக்ர் ஆகும்.


لاَ إِلَهَ إِلاَّ اللهُ


சிறந்த திக்ர் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி, இப்னுமாஜா)
Posted by Jafar Safamarva at 6:41 AM 0 comments
Labels: தஸ்பீஹ், திக்ர், புகழ்தல்
Older Posts

No comments: