Monday, December 8, 2008

கடவுளுக்கு ஒரு கடிதம்

கடவுளுக்கு ஒரு கடிதம்

நீ என்னைப் பார்க்கின்றாய்;
நான் உன்னைப் பார்க்கவில்லை...
உறுதியாக அறிவேன்: இம்மையில் உன்னைக் காண இயலாது-
இறுதி நாள் வரை காத்திருப்பேன்; உன்னைக் காண்பதற்கு!
அதற்காகத்தானேச் சேர்த்து வைத்துள்ளேன் உயிருக்குள் சக்தி
அதன் பெயர்கள்: கலிமா-தொழுகை- நோன்பு-ஜக்காத்- ஹஜ் ஆகிய பக்தி
உன்னை மட்டுமே வணங்குகின்றேன்;உன்னிடம் மட்டுமே உதவி கேட்கின்றேன்...
உன்னை மட்டுமே நேசிக்கின்றேன்; உன்னிடம் தான் யாசிக்கின்றேன்
உன்னிடம் கேட்டால் மகிழ்கின்றாய்
மனிதரிடம் கேட்டால் இகழ்கின்றனர்
நீ வாக்கு மீற மாட்டாய் என்பது
நான் அனுபவித்த- அனுபவிக்கின்ற- அனுபவிக்க போகும் (உன் நாட்டப்படி)
உனது அருட்கொடைகளே சாட்சிகள் ஆகும்....
சோதனைகளை எல்லாம்
சாதனைகளாய்க் கடந்து வந்து தான் உன்னைச்
சந்திக்க வேண்டும் என்பதும் உன் சட்டம்;
சிந்திக்கத் தூண்டும் சீர்மிகு திட்டம்
இன்று நீ இருக்கின்றாய் எம் கண்கட்கு மறைவாய்!
நாளை மஹ்ஷரிலே இக்கடிதத்துக்கு மறுமொழி தருவாய் இறைவா................!!!

-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
shaickkalam@yahoo.com

No comments: