Monday, December 8, 2008

துபாயில் "மருளில்லா மலர்கள்' கவி்தை நூல் வெளியீட்டு விழா

துபாயில் "மருளில்லா மலர்கள்' கவி்தை நூல் வெளியீட்டு விழா

துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் வியாழக்கிழமை "மருளில்லா மலர்கள்" கவிதை தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது

கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு இலக்கியச் செல்வர் சீனாதானா ( செய்யது எம். அப்துல் காதிர் ) தலைமை தாங்கினார். துவக்கமாக சபியுல்லா ஜமாலி இறைவசனங்களை ஓதினார். டாக்டர் டி நடராஜன் மற்றும் எஃப்.எம். அன்வர் பாஷா முன்னிலை வகித்தனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான், இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்.

'மருளில்லா மலர்கள்' நூலை ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் பொறியாளர் எம்.ஜே.முஹம்மது இக்பால் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

ஞானப்பாடல்களை தீன் இசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுதீன், மதுக்கூர் முஹம்மது தாவுது ஆகியோர் பாடினர்.

அமீரத் தமிழ்க் கவிஞர் பேரவைத் தலைவர் அப்துல் கதீம், வானலை வளர்தமிழ் ஜியாவுதீன், தமிழ் பண்பாட்டு கழக முன்னாள் தலைவர் குத்தாலம் அஷரப் அலி, சங்கமம் தொலைக்காட்சி இயக்குனர் கலையன்பன், கவிமதி, பட்டணம் மணி,காரை சர்புதீன்,ஆல்பட் பெர்னாட் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கவிஞர்கள் இஷாக், நண்பன்,முத்துக்குமரன், துபை கிரஸண்ட் ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியர் கலீபுல்லாஹ், ஊடகத்துறை செய்தியாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments: