Wednesday, October 21, 2009

மாலிக் பாய் - மறக்க இயலாது

மாலிக் பாய் - மறக்க இயலாது

இந்தியனுக்கோர் இன்னலென்றால்
உறக்கத்திலும் எழுந்தோடி உதவிடுவாய்
இந்திய ஒருமைப்பாடு உன் உருவில்
நடமாட யாம் கண்டோம்.
சமய பேதங்கள் களைந்தெடுத்து
சமனிலைபேணி நட்பு கொண்டாய்.
உள்ளங்கள் அனைத்தையும் கவர்ந்தாய்
கனிவான உன்பேச்சால் !
சவுதிவாழ் தமிழனுக்கு தனிமதிப்பு
உன்னால் வந்த உயர்வன்றோ !
மாணவர் நலம்நாடி ஓய்வின்றி உழைத்தாய்
உன் நாடி துடித்து ஓயும்வரை.
சேவைக்கென்றே பிறந்தவன் நீ-பிறர்
தேவையறிந்து பணிமுடித்தாய் !
செங்கடல் ஓரத்தில் தமிழுக்கு அணிசேர்க்கும்
சங்கம் கண்ட பாவலனே !
உனைப்போல் ஒரு தமிழன் இனி எமக்கு கிடைப்பானா
பனைபோல்தன் வாழ்வினை தமிழுக்கு தருவானா ?
இறையருள் உன்னை சொர்க்கம் சேர்த்திட- திரு
மறையளித்தவனை மண்டியிட்டு வேண்டுகிறேன் !
கனத்த இதயத்துடன்,
அபு மர்வான்.

Nizamuddin (Abu Marwan)
nizams55@gmail.com


jmiqbal@gmail.com
dateSun, Oct 11, 2009 at 7:59 AM
subjectRe: மாலிக் பாய் - மறக்க இயலாது.

Haji Ragagiri Mallick is very simple,humble and gentleman.

He has been consistently contributing tamil short stories to Magazines like Rani.Devi. Etc and of course lot in Islamic magazines too.His short stories collection book also ,is remarkable one.

Mr.Mallick's involvement and participation in Tamil social and literary activities and uniting Tamil masses in Saudi are remarkable.
His untimely demise is shock to us and my heart felt condolences to his beloved elder brother Er.Abdul Bari (brothers are so close each other and great example for unity)and his family Allah taa'la give strength to bear this loss and sabr is the great tool to exercise and the same may Allah give to the family.

Let us pray the departed soul to rest in peace and Allah give him heavenly place.

Valoothoor,MJMIqbal,
Dubai



mohamad ali
toMuduvai Hidayath

dateWed, Oct 14, 2009 at 9:26 PM
subjectRe: Fwd: மாலிக் பாய் - மறக்க இயலாது.
mailed-byyahoo.com
signed-byyahoo.com

hide details Oct 14 (7 days ago)


பேரன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.
அருமைச் சகோதரர் ராஜகிரி அப்துல் மாலிக் மறைவு பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது.

தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் செளதி அரேபிய ஒருங்கிணைப்பாளராகவும், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின்
செளதி அரேபிய ஒருங்கிணைப்பாளராகவும், இனிய திசைகள் மாத இதழின்
பேரார்வலராகவும் மாலிக் ஆற்றிய அரும் பணிகள் பல...

அரபகம் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் பேருதவியாகத் தனது வாழ்நாளை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்ட அற்புத மனிதர் அவர்...

தாய்மொழியாம் தமிழுக்குச் சங்கம் கண்டு தொண்டாற்றிய இலக்கியக்கர்த்தா... சிறந்த சிறுகதையாசிரியர்...

நல்லதோர் கவிஞர்... பன்னூலாசிரியர்...

தாய்மண்ணிலும் அரபகத்திலும் கல்விப் பணிகள் எண்ணற்றவையாற்றிய
அதிசய மாமனிதர்.. தான் பயின்ற ஜமால் முகம்மது கல்லூரியின் வளர்ச்சியில் உறுதுணை நின்ற உத்தம மாண்பாளர்... அரபகத்தில் இந்தியக் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பிற்கும் உயர்விற்கும் அரும்பாடுபட்ட ஆற்றலாளர்... ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி தொடரத் துணை நின்றுதவிய வள்ளல் பெருந்தகை... சமுதாய அமைப்புகளானாலும் அரசியல் அமைப்புகளானாலும் ஆர்வம் செலுத்தி ஆலோசனைகள் வழங்கி நிதி உதவி

உரிய பணிகளாற்றிய சமுதாயப் புரவலர்... அனைவரையும் அன்பால் ஆளுமை கொண்ட நல்ல பண்பாளர்...

அவர்தம் மறைவு அனைவருக்குமே பேரிழப்பாகும்..

யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? யாருக்கு யார் தேறுதல் சொல்வது?..

இறைவனின் நாட்டமெனெ அறிவு ஆற்றுப்படுத்த முனைந்தாலும்
மனித மனம் அழுதுகொண்டுதானே இருக்கிறது...
கையற்றுப் போன இந்த நிலையில் இறையை நோக்கிக்
கையை ஏந்துவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்துவிடமுடியும்...
யா அல்லாஹ் மறைந்த மாண்பாளரை உன் பொருத்தத்தில்,திருப்தியில் இருத்திக் கொள்வாயாக..

அவரது பாவங்களையல்லாம் மன்னித்து மறுமை நல் சுவன
வாழ்வை வழங்கி அருள்வாயாக...
அவரது உத்தமத் துணைவியாருக்கும் நல்லறப் பிள்ளைகளுக்கும் உற்றாருக்கும் உறவினர்களுக்கும்

ஆறுதலும் தேறுதலும் தந்து அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர அருள் புரிந்து உதவுவாயாக...

முந்திச் சென்றவருக்காகப் பிந்திச் செல்ல இருக்கிற நாம்

துஆ செய்வோம்... அவர்தம் பணி தொடர்வோம்..வஸ்ஸலாம்...

அன்பு,
சேமுமு.
(பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி
பொதுச்செயலாளர் தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்
பொதுச்செயலாளர் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்
ஆசிரியர் இனிய திசைகள் மாத இதழ்)

semumu

No comments: