Thursday, April 29, 2010

வளைகுடா இந்தியர்களே! பெருமைப் படுங்கள்!

வளைகுடா இந்தியர்களே! பெருமைப் படுங்கள்!

மத்தியக் கிழக்கு ஆசியாவில் உள்ள வளைகுடா நாடுகள் தங்களது எண்ணெய் வளத்தினால் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும், தங்களுடைய செழுமையான வாழ்விற்கும் இந்த நூற்றாண்டில் வழித் தேடிக் கொண்டன.

இந்த பிரதேசத்தின் பூமிக்கு அடியில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்ற கருப்புத் தங்கத்தை வெளியில் கொண்டு வந்து அதை உலகுக்கு அறிமுகப்படுத்தி சர்வதேச சந்தையில் உச்ச விலையில் விற்பதற்கு தேவையான அத்தனை தொழில்நுட்ப உதவிகளையும் செய்தது மேலைநாடுகளின் விஞ்ஞானிகள் மற்றும் சாதனையாளர்கள் என்றாலும்....
இந்த எண்ணெய் உற்பத்தியைக் கொண்டு வெறும் பாலைவனமாகக் கிடந்த நாடுகளை நாகரிகத்தின் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய உல்லாசபுரிகளாக,
செல்வ செழிப்பின் அடையாளங்களான வானுயர்ந்த கட்டிடங்கள்,
குறுக்கும் நெடுக்குமாக பல அடுக்குமாடி பாலங்கள்,

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளையும், நகரங்களையும் இணைக்கும் நெடுந்தூரச் சாலைகள்,
தொலைத்தொடர்பு சாதனங்கள்,
ரயில் போக்குவரத்து,
பாலைவனச் சோலைகளாக ஆங்காங்கே பசுமை பூத்து நிற்கும் பூங்காக்கள்,
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள்,
வகைவகையான சொகுசு வீடுகள் என்று எதுவெல்லாம் இன்று நம் கண்ணில் படுகிறதோ அத்தனையிலும்
தங்கள் வியர்வையை, கடும் உழைப்பை கலந்தவர்கள் கீழைநாட்டு பிரஜைகள்தான்.
அவர்களில் குறிப்பாக இந்தியர்களுக்கென்று தன்னிகரற்ற தனி இடம் உண்டு என்பதை கீழே உள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
படித்துப் பாருங்களேன்! நாமா இப்படி? என்று ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்கள் சதவீதம்?
சவூதி அரேபியாவில் மொத்த வெளிநாட்டவரில் 20% இந்தியர்கள்.
ஓமனில் உள்ள 61% வெளிநாட்டவரில் 60% இந்தியர்கள்.
குவைத்தில் உள்ள 83% வெளிநாட்டவரில் 25% இந்தியர்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 93% வெளிநாட்டவரில் 60% இந்தியர்கள்.
மத்திய கிழக்கு நாடுகளின் முன்னேற்றமும், வெளிநாட்டவருக்கான வாய்ப்பும்
விரைவான மத்திய கிழக்கு நாடுகளின் வளர்ச்சியும், முன்னேற்றப் பாதைக்கான உடனடித் திட்டங்களும்.
உள்நாட்டில் திறமையான டாக்டர்கள், இன்ஜினியர்கள், மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பற்றாக்குறை.
செல்வச் செழிப்பான நாடுகளாக இருப்பதால், குறைந்த செலவில் திறமையான வெளிநாட்டவர்களை பயன்படுத்த வேண்டிய அவசரத் தேவை.
பல முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான ஒப்பந்தங்கள் இந்தியர்களோடும் இந்திய நிறுவனங்களோடும் தொடர்பு கொண்டதாயிருக்கின்றன.
கட்டமைப்பு பணிகள்
நாட்டின் முன்னேற்றத்திற்கான கட்டமைப்பு பணிகளுக்காக படித்த மற்றும் படிக்காத மனித ஆற்றல் பெருமளவில் தேவைப்படுகிறது.
பல மத்தியக் கிழக்கு நாடுகள் பெரிய பாலங்கள், தொலைத்தொடர்பு, மருத்துவ மற்றும் வணிக வளாக கட்டமைப்புகளை பெருமளவில் ஊக்கப்படுத்துகின்றன.
உஷ்ணமான பாலைவன பிரதேசமாக இருப்பதால் பெரும்பாலும் கடுமையான சுடுமணலில் தான் வேலை என்ற நிர்பந்தம்.
இந்தியர்கள் இதுபோன்ற கடினமான வேலைகளில் இயற்கையாகவே பழக்கப்பட்டவர்கள்.
மற்றவர்களால் செய்ய இயலாதவற்றை இந்தியர்களால் எப்படி செய்ய முடிகிறது?
இந்தியாவினால் குறைந்த விலைக்கு அதிக மனித ஆற்றலை வழங்க முடியும்.
பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவின் மனித ஆற்றலுடன் போட்டிபோட இயலாது.
மேற்கத்திய நாட்டவர்கள் சாதாரண கூலி வேலைகளுக்கு வர மாட்டார்கள்.
இந்தியர்கள் அசுத்தமோ, ஆபத்துக்களோ நிறைந்த இன்னபிற சாதாரண வேலைகளைச் செய்ய தயங்குவதில்லை.
இந்தியர்களிடமிருந்து கிடைக்கும் உள்நாட்டு செலாவணி
இந்தியர்கள் தாங்கள் தங்கும் இடங்களுக்கு வாடகை தரவேண்டும். அவர்களால் எந்த சொத்தையும் அங்கே வாங்க இயலாது. இது பல பில்லியன் வருமானத்தை ரியல் எஸ்டேட்டில் துறையில் பெற்றுத் தருகிறது.
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக வருமானங்கள்.
குடும்பங்களுடன் வாழும் இந்தியர்களின் குழந்தைகள் தாங்கள் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அந்தந்த நாடுகளுக்கே தங்களது சேவைகளை வழங்க எத்தனிக்கிறார்கள்.
அன்னிய செலாவணி முதலீட்டாளர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையகமாகக் கொண்ட சாப்ரியஸின் ஜம்போ குரூப் நிறுவனம். இது 25 நாடுகளில் 28 கம்பெனிகளையும் 20 ஆயிரம் தொழிலாளர்களையும் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அலீ யூசுப் நிறுவனத்தின் எம்கி குரூப் 10,800 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பி.ஆர். செட்டி நிறுவனத்தின் நியூ மெடிக்கல் சென்டர் குரூப் 3,000 தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இதன் மதிப்பு 200 மில்லியன் டாலர்கள் ஆகும்.
ஓமனைச் சார்ந்த கனக்சி கிம்ஜி நிறுவனத்தின் கிம்ஜி ராம்தாஸ் நிறுவனம்.
விமான போக்குவரத்து
மத்தியக் கிழக்கின் பெரிய விமான நிறுவனங்களான: கல்ஃப் ஏர், குவைத் ஏர்வேஸ். சவூதியா ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஓமன் ஏர்; போன்ற நிறுவனங்கள் பெரும்பாலும் இந்தியாவை நம்பியே நடத்தப்படுகின்றன.
இந்த ஏர்லைன்ஸ்களின்; 50% விமான போக்குவரத்து இந்திய துணைக் கண்டத்திற்கு செல்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் வாரத்திற்கு 100 விமானங்களை அரபு நாடுகளுக்கு இயக்குகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு நிகர வருவாயாக 1000 கோடியை ஈட்டுகிறது.
ஈராக் - புதிர்
சமீப காலங்களில் நடந்த பல்வேறு சிக்கல்கள், போர், மற்றும் நோய் போன்ற காரணங்களால் இராக் தன்னுடைய மனித ஆற்றலை மேம்படுத்த அல்லது பயன்படுத்த இயலரத நிலையில் உள்ளது.
இராக்கின் புணர் நிர்மாணத்திற்கான புதிய ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு தரப்படுகிpன்றன.
இத்தகைய புணர் நிர்மாணத்திற்காக குவைத்தில் உள்ள சில நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களை ஒப்பந்தம் செய்து தொழிலாளர்களை இராக்கிற்கு அனுப்பி வைக்கின்றன.

By பிரகாஷ் குமார்
நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா

இப்படிக்கு,என்றும் அன்புடன்,
Regards
Na.Prasannan
n.prasannam@yahoo.com
n.prasannam@gmail.com
94880-19015, 99415-05431
See my new slideshare site for Power Points
http://www.slideshare.net/nprasannam

No comments: