Sunday, August 8, 2010

புனித மிக்க ரமலானை வரவேற்க்க நபிகளாரின் வழிமுறை

புனித மிக்க ரமலானை வரவேற்க்க நபிகளாரின் வழிமுறை

நம் புனித மிக்க ரமலான் மாதத்தை வரவேற்க்க மிக ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம்

அறிந்து கொள்ளவேண்டிய சில முக்கிய செய்திகள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிறை பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள், பிறை பார்த்து நோன்பை முடித்துக்கொள்ளுங்கள் மேகம்
(பிறையை மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
(ஹதீஸ் – புஹாரி)
இது போன்று பல ஹதீஸ் காணப்படுகின்றன.
நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் பிறை தேடினார்கள் ஸஹாபாக்களையும் தேட துண்டிக்கொண்டிருந்தார்கள்.
ரமலானின் பிறையை பார்ப்பது பிக்ஹ் அடிப்படையில் சில பேர் மட்டும் செய்தால் போதுமானது என்ற – கிபாயா-
சட்டமாக இருந்தாலும், நபி வழியில் பிறையை அனைவரும் பார்க்க முயற்சிப்பது அவசியமாகும். அப்படி பிறை
காண கிடைத்தால் அந்நேரம் கீழ்கண்ட துஆ ஓதுவது ஸுன்னாவாகும்

الله اكبر ، اللهم اهله علينا بالامن و الايمان و السلامة و الاسلام و التوفيق لما تحب و ترضى ربنا و ربك الله

அல்லாஹ் அக்பர், அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் அம்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ்ல்
இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பு வ‌த‌ர்ளா ரப்பி வ ரப்புகல்லாஹ்.

அல்லாஹ் நீ தான் உயர்ந்தவன்

யா அல்லாஹ்! இந்த‌ பிறையை நிம்மதி உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ
விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க்
கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும் அல்லாஹ் தான்!



- ஹஸனி

சுவர்க்கம் என்பது ஒரு திறந்தவெளி - பொட்டல் சிறந்த மண்னையும், மதுரமான நீரையும் கொண்டது அதனுடைய பயிர் “ ஸுப்ஹானல்லாஹ் வல் ஹம்துலில்லாஹ் வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர்”

No comments: