Thursday, September 9, 2010

அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி

அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி



திருச்சி.A.M.அப்துல் காதிர் ஹஸனி M.A.,





மகிழ்ச்சி பொங்குக

பெருநாள் காலை

அன்பு சகோதரனே



உன்னை பார்க்க

ரொம்பவே வியப்பு எனக்கு

ரமளான் முழுவதும்

உனக்குள்

அத்தனை மாற்றம்



ஃபஜர் தொழுகைக்கு

கூட எழாமல்

போர்த்திக்கொண்டு

உறங்கும் நீ

தஹஜ்ஜத் கூட

தவறவிட வில்லையே



சாப்பாடு

சற்று தாமதமானாலும்

கூப்பாடு போடும்

நீயா முப்பதுநாள்

நோன்பிருந்தாய்



நீ திருமறை ஒதி

நான் பார்த்ததில்லையே

பள்ளியிலேயே அமர்ந்து

ஒதிக்கொண்டிருந்தது

நீதானா



வறியோர் தேடிவந்தால்

ஆயிரம் கேள்வி

கேட்கும் நீயா

வாரி வழங்கினாய்



சிறிதாய்

சீண்டினாலும்

சீறிப்பாய்வாயே நீயா

சகிப்போடு

நடந்து கொண்டாய்;;;;;;;;;;;;;



திக்ரென்ன..

துஆவென்ன …

நம்பவே முடியவில்லை

என்னால்

இதுவெல்லாம்

நீதானா



எனக்கு தெரியும்..

யாரின் முகத்திற்காகவும்

இதை நீ

செய்யவில்லைஸ



அல்லாஹ்வின்

அருளை நாடி மட்டுமே

செய்தாய்

அவனின்

அன்பை தேடி மட்டுமே

செய்தாய்



மகத்தான

இரட்சகனின்

மன்னிப்பை

தேடிமட்டுமே

செய்தாய்





நன்கு மாறியிருக்கிறாய்

நல்ல நிலைக்கு

தேறியிருக்கிறாய்



அன்பு சகோதரனே

ஈமான்?

தொழுகை?

நோன்பு?

கொடை?

நல்லமல்கள்

இதுவெல்லாம்

ஒருமாதத்திற்கு

மட்டுமே உரியதல்ல



இறைவனுக்காக

எதையும்

செய்ய பழகுவற்குதான்

ரமளான்



ஒரு மாதத்தோடு

விலகுவதற்கல்ல



ரமளானில்

உன்னை பார்த்தது

போன்று

எல்லோரும் பார்க்க

வேண்டும்



பெருநாளோடு

முடியவில்லை

உனது கணக்கு



ரமளான்

நடத்திய பாடத்தை

வாழ்வில்

இனிபடிக்கத்

தொடங்கு

juharazi@gmail.com

No comments: