Friday, July 17, 2009

ந‌ட்பு

ந‌ட்பு


அலைகளும் என்றாவது ஒரு நாள்
தன் எல்லையைத் தாண்டி விடும்
நட்பு என்றுமே
அதன் தன்மை மாற்றாது;

உலக இலக்கணத்தில் நட்பை பிரிக்க
முடியாத காரணம் அது
கடவுள் படைத்த உறவல்ல
மனிதன் உருவாக்கிய உறவு;

நட்போடு பழகுங்கள்
நட்பால் உலக ஒற்றுமை ஒங்கட்டும்

- ஷேக் இப்ராஹிம்-
shaikamjath0012@gmail.com

கீழக்கரை மெளலவி ஜஹாங்கிர் அரூஸி சொற்பொழிவு

தமிழ் முஸ்லிம் டியூபில் இந்த வார வீடியோ தொகுப்புகள்

This week play list in your favorite www.tamilmuslimtube.com

Sheikh S.Samsudeen Kasimi M.A. Jumaa bayan on Environment, Allah’s gift Water, Our Children’s Education, Why Masjid? , Shy , Sins Cursed by Allah, Life is trust & Who is Kadhiyani,

சுற்றுச்சூழல்,தண்ணீர் ஒரு அருட்கொடை ,பள்ளிக்கூடம் செல்லும் வேளையிலே, வாழ்கை ஒரு அமானிதம், மஸ்ஜித்கள் எதற்காக?. இறை சாபத்திற்குரிய பாவம், வெட்கப்பட வேண்டாமா ?, காதியானிகள் யார்? , என்ற தலைப்புகளில் ஷேக் ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா பயான்

http://www.tamilmuslimtube.com/playlist/Jumma-Quthbas-of-Moulana-Shamsu

Why difference of opinion in Madhab Laws? (Mathahabkalil Karuththu Verupaadu enn?) Sheikh Abdulla Jamali M.A.
மதஹப்களில் கருத்து வேறுபாடு ஏன்? - ஷேக் அப்துல்லா ஜமாலி

http://www.tamilmuslimtube.com/playlist/2990298030012986302129652995300

Upbringing children in Islamic Prospective (Islaamiya paarvaiyil Kuzhanthai Valarppu) – A.C.Agar Mohamed.

இஸ்லாமிய பார்வையில் குழந்தை வளர்ப்பு – ஷேக் A.C.அகார் முஹம்மது

http://www.tamilmuslimtube.com/playlist/2951300030212994300629803021298

கீழக்கரை அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் காக்கா பயான்

Kilakarai Alhaj Mahamed Maroof kaka bayan

http://www.tamilmuslimtube.com/playlist/2965300829962965302129652992301

கீழக்கரை மெளலவி ஜஹாங்கிர் அரூஸி சொற்பொழிவு

Lectures by Kilakarai Moulavi Jahangeer Aroosi

http://www.tamilmuslimtube.com/playlist/296530082996296530212965299230-2

Lecture to Muslim youngsters on Cinema & Love by Ash Sheik H.M. Minhaj (Islahi)

இளைஞர்களின் சாபக்கேடு - காதல் , சினிமா - ஷேக் H.M.மின்'ஹாஜ் இஸ்லாஹி

http://www.tamilmuslimtube.com/playlist/2951299530162974299230212965299

Price List for the Room in Mecca(Month of Ramalan)

Price List for the Room in Mecca(Month of Ramalan)

Dear Brothers,
Salam.Hope all of you doing well by the grace of almighty Allah and He will shower His belonging on us,our family and our near &dears.Also remember always in your prayer for us(Muslimens)to avoid sins and the death with spell of Kalima.

As I discussed with all of you regarding the price list for the Rooms in the Holli city of Mecca in the month of Ramadan.kindly see the attached file for the price list and location map;your co-operation and positive response will be highly appreciated.

6 BUILDING RENTAL IN THE MONTH OF RAMALAN IN MECCA

Price For The 1st 10 Days

For 1Day (4Beds in a Room) Without attached bath room 260/SR

For 1Day (4Beds in a Room) Attached bath room 300/SR

For extra 1 people in a Room +50/SR

Price For The 2nd 10 Days

For 1 Day (4 Beds in a Room) without attached bath room 300/SR

For 1Day (4Beds in a Room) attached bath room 350/SR

For extra 1people in a Room +50/SR

Price For The Last 10 Days

For 1 Day (4 Beds in a Room) without attached bath room 400/SR

For 1Day (4Beds in a Room) attached bath room 500/SR

For extra 1people in a Room +50/SR

Price For The First 15 Days

4 Beds in a Room without attached bath room 4250/SR

4 Beds in a Room attached bath room 4500/SR

Price For The Last 15 Days & For a Month

4 Beds in a Room without attached bath room 5250/SR

4Beds in a Room attached bath room 5500/SR

For The Complete Month (Without Attached Bath Room) 9500/SR

For The Complete Month ( Attached Bath Room) 10000/SR

Note:

Common Kitchen is available in all floors.

Provide Gas Stove with big Cylinder &refilling should be done by you

Provide 2 Freezer in each floor.

Note:

The prices will be negotiable only for the 15 days and a Month.

Thanks &Regards
Multhazim .
Contct Number: 00966 558145569
thainadu2005@yahoo.com

Thursday, July 16, 2009

Qur’an from The Mingana Collection

Qur’an from The Mingana Collection


Two of the oldest known manuscript copies of the Qur’an were made available online from July 8th 2009 as part of a major project to digitize one of the richest collections of oriental manuscripts. The two copies which may date from the 7th century C.E. are part of the priceless Mingana Collection, which is housed by the University of Birmingham.

The University's Special Collections department has painstakingly digitized more than 10,000 pages from the collection. The documents now online also include unique illustrated manuscripts from the 16th century C.E. and early Arabic poetry.

The Mingana manuscripts, presented via the Virtual Manuscripts Room (VMR), can be viewed at:

http://vmr.bham.ac.uk/Collections/Mingana/Islamic_Arabic_1572/table/

After visiting this page click on the required page for enlarged view.

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன்




திருக்குர்ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன் மணத்தை
நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து தன் மனத்தைப் பகர்ந்தது.
கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !

கொட்டும் இந்தக் குர்ஆன் எனும் மழை முகிலின்
நிறம் கறுமையல்ல !
திட்பமும் நுட்பமும் கொண்ட இதன்
தீர்ப்புகள் - வைகறை வாசகங்கள்;
மறுதலிக்கவொண்ணா வாக்கியங்கள் !
இது துயிலெழுப்பும் சூரியன்தான். எனினும்
தொடுகின்ற இதன் கரங்கள் சுடாதவை; தூசுப்
படாதவை !

இது நினைவூட்டும் நல்லவைகளை !
இது நறுக்கெனச் சாடும் அல்லவைகளை !
இதைப் படித்தவர்கள்தாம் உண்மையில்
படித்தவர்கள் !

இதைப் பாராதவர்கள் தங்களைப் பாராதவர்கள் !
உலகத்திற்குள் இது உள்ளதென்றாலும் உலகமே
இதற்குள்தான் உள்ளது !

இது ஒப்பனை இல்லாதது; கற்பனை இல்லாதது !
இதன் சுவடுகள் மலைக்கும் எளிய வழிகாட்டும்;
அலைக்கும் அழியா நிலைகாட்டும் !
துடுப்புகள் தேவையில்லை இந்தத் தோணிக்கு !
கண்களும் தேவையில்லை இதன் வாசிப்புக்கு !
இது காட்டிய மனிதச் சங்கிலியில்
கையுள்ளோரெல்லாம் கலந்து கொள்ளலாம்;
கவுரவம் பெறலாம்.

இதன் இருக்கையோ உச்சரிக்க
முடியாத உயரத்தில் !
இதன் இறக்கையோ உவமிக்க
முடியாத அதிசயத்தில் !
தொல்லியலா? இது சொல்லிக் கொடுக்கும்.
அறிவியலா? இது அள்ளிக் கொடுக்கும்.
இல் இயலா? இது எடுத்துக் கொடுக்கும்.
அரசியலா? இது அடுத்துக் கொடுக்கும்.
பட்டறையில் உருவாகும் ஊசிக்கும் பருத்திக்
கூட்டணியில் உருவாகும் நூலுக்கும் இது
இணைப்புப் பாலமாக இராதிருந்தால் அழகு
உடையை உலகம் அணிந்திருக்காது .
இது பிறந்து வந்த பிறகுதான் பெண்ணியம்
பெற்றது கண்ணியம் ! பிறந்தகம் கண்டது
புண்ணியம் !

இது ஓதுவதற்கு வந்ததென்றாலும் வெறுமனே
பேசுவதற்கு வரவில்லை.
செல்வர்களே, உங்கள் செல்வத்தில் ஏழைகளுக்குப்
பங்குண்டு; கேட்க வெட்கப்படுபவர்களுக்கும்
பங்குண்டு; என்ற இதன் இரட்டை வரிகளும்
முழுமையாக உலகம் ஏற்றால் பரட்டைத் தலையும்
இல்லை; பஞ்சக் குறட்டையும் இல்லை.

குர்ஆன்
குளிக்கக் கிடைத்த குற்றால சோப்பு !
களிக்கக் கிடைத்த கற்கண்டு சூப்பு !
பசிக்குக் கிடைத்த பண்பாட்டு விருந்து !
நோய் தீர்க்கக் கிடைத்த நூதன மருந்து !
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

-- நன்றி : சமரசம்

அபுதாபியிலிருந்து உம்ரா செல்ல தமிழ் குழுக்கள்

அபுதாபியிலிருந்து உம்ரா செல்ல தமிழ் குழுக்கள்

Please contact :
Mr.Abdus Salaam - 050 4127194
Mr.Shahul Hameed - 055 9385536

kutbudeen 0505827597

English-Malayalam-Dictionary

English-Malayalam-Dictionary

try one of these links....
http://www.esnips.com/doc/b879e5bb-821f-451a-8645-ac8fdc12bfdb/English-Malayalam-Dictionary
http://www.esnips.com/doc/7626de0a-b1f2-4f99-8dfa-77d043d2774c/English-malayalam-dictionary
http://www.esnips.com/doc/ce91ed28-cc6d-497e-8e41-e204ac03dd11/English_Malayalam_Dictionary


Oxford Dictionary:

http://www.esnips.com/doc/3599273e-cab0-4051-b25b-6bbd88fe9bd7/Oxford-Dictionary-2006

Tuesday, July 14, 2009

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்..

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

Ways 2 Increase Iman...

Ways 2 Increase Iman...

1. Pray in the last third of the night.
2. Go to Fajr and Isha in congregation.
3. Say Adhkaar in the morning and evening.
4. Remember Death often.
5. Contemplate over the creation of Allah and how vast and beatiful his creation is.
6. Gain some knowledge of the Deen daily.
7. Remember the purpose of life
8. Fast Voluntarily
9. Pray as if it is your last prayer
10. Read Quran
11. Give sadaqa
12. Do dhikr
13. Listen to Quran recitation
14. Read Seerah/Listen to lectures about it (esp by Shaykh Anwar al Awlaki)
15. Read about the sahabah/Listen to lectures about them
16. Say often, "Laa ilaha illa Allah".
17. When you have gained knowledege, inform others of it
18. Try to go to regular circles to have discussions about Islam
19. Smile for the sake of Allah
20. Reading Surah Khaf with deep thought and understanding, until it awakens u to the dajaalic system that we live in.
21. Alaways think about allah, thinking is a faridah in islam
22. Learn about science in light of Quran and Islam.
23. Call friends and tell them you love them for the sake of Allah.
24. Protect ourselves from Shaitan
25. Make sincere Dua 4 the Ummah
26. Try to help others as much as you can
27. Make reading Qur'an regular
28. Read certain surahs at specific times, i.e. Surah Mulk at night
29. Thank Allah(swt) witthin your heart everday till the day you die , then thank him yourself for everything ! Allah hu akbar
30. Make Dua' for your bother/sister
31. Love for your brother what you love for yourself
32. Discuss Islamic matters with believing brothers/sisters - share knowledge, educate each other
33. Choose obedience over disobedience
34. Uttering "Inna Lillahi wa inna Ileyhi raji'oon - To Allah we belong and to Allah we return" whenever you are afflicted with anything whether it be small or big.
Allah(SWT) says: "Be sure we shall test you with something of fear and hunger, some loss in goods, lives and the fruits (of your toil) but give glad tidings to those who patiently persevere. Those who, when misfortune strikes them, say: 'Indeed we belong to Allah and to Him is our return. Those are the ones upon whom are blessings and mercy from their Lord and it is those who are rightly guided." [Sûrah al-Baqarah: 155]
The Prophet (peace be upon him)said:"No fatigue, illness, anxiety, sorrow, harm or sadness afflicts any Muslim, even to the extent of a thorn pricking him, without Allah wiping out his sins by it." [Sahîh al-Bukhârî and Sahîh Muslim]
35. Look at how complex our bodies are (circulatory system, nervous system, etc), and realize that only Allah (SWT) could have made something like that.
36. Love for your brother what you love for yourself
37. Smile, make people happy.

Dubai based company required for purchase officer

There is a vacancy in Dubai based company for purchase officer. Please find the details

Job Title: Purchase Officer
Requirements:
· 1 to 2 years experience in the purchase field
· UAE driving license is added advantage
· Salary: 3,500 to 4,000/- (negotiable)
· Immediate placement

Contact Person: Jahir Hussain (050-6702375)

Monday, July 13, 2009

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் சிற‌ப்பித‌ழ் வெளியீடு

துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சார்பில் 'கோடையும் வாடையும்' எனும் த‌லைப்பில் சிற‌ப்புக் க‌விதை நிக‌ழ்ச்சி ம‌ற்றும் த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு 10.07.2009 வெள்ளிக்கிழ‌மை காலை க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற்ற‌து.

கோடையும் வாடையும் என்ற‌ சிற‌ப்பு க‌விதை நிக‌ழ்ச்சியின் ந‌டுவ‌ர்க‌ளாக‌ திருப்ப‌த்தூர் அப்துல் வாஹித், ப‌ழ‌னி ஆகியோர் இருந்த‌ன‌ர். க‌விஞ‌ர்க‌ள் சிம்ம‌ பார‌தி, ஜியா, ச‌ந்திர‌சேக‌ர், க‌மால், ந‌ர்கிஸ், ம‌லிக்கா, நிலாவ‌ண்ண‌ன், அமுதா ப‌த்ம‌நாப‌ன், ஜெயா ப‌ழ‌னி, வேலூர் க‌ந்த‌நாத‌ன், கிளிய‌னூர் இஸ்ம‌த், ராஜா க‌மால் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌விதை வாசித்த‌ன‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து த‌மிழ்த்தேர் சிற‌ப்பித‌ழ் வெளியீடு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌து. இந்நிக‌ழ்ச்சியின் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா, க‌ராமா மெடிக்க‌ல் சென்ட‌ர் டாக்ட‌ர் ச‌ம்ப‌த் குமார், முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் தொட‌க்க‌ப்ப‌ள்ளி ஓய்வுபெற்ற‌ ஆசிரியை அப‌ர‌ஞ்சி உள்ளிட்டோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

த‌மிழ்த்தேர் இத‌ழை டாக்ட‌ர் சுப்புல‌ட்சுமி பாலா வெளியிட‌ முத‌ல் பிர‌தியினை உத‌ய‌குமார் பெற்றுக்கொண்டார்.

சிற‌ப்புவிருந்தின‌ர்க‌ள் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கியும் கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ள் குறித்த‌ அறிமுக‌த்தை க‌லைய‌ன்ப‌ன் ம‌ற்றும் முதுவை ஹிதாய‌த் ஆகியோர் செய்த‌ன‌ர்.

க‌விஞ‌ர் நிலாவ‌ண்ண‌ன் தாய‌க‌ம் செல்வ‌தையொட்டி அவ‌ருக்கு பிரியாவிடை வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. அவ‌ருக்கு நினைவுப் ப‌ரிசும் வ‌ழ‌ங்கப்ப‌ட்ட‌து. அத‌னைத்தொட‌ர்ந்து அவ‌ர் ஏற்புரை நிக‌ழ்த்தினார்.
செயலாள‌ர் ச‌ந்திர‌சேக‌ர் ந‌ன்றி கூறினார். நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ஜியாவுத்தின், சிம்ம‌பார‌தி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ஏற்பாடு செய்த‌ன‌ர்.













Need cook in Tamil Restaurant - Ajman ( UAE )

Need cook in Tamil Restaurant

A well running Tamil restaurant ( BISMI RESTAURANT) need Tamil
professional cook in Ajman new Ind.area


contact 050-7942589 and 050-5021798

ம‌வ்ல‌வி ஜ‌ஹாங்கீர் அரூஸி & ம‌ன‌ந‌ல‌ ஆலோசக‌ர் முஹைதீன் பாட்சா

ம‌வ்ல‌வி ஜ‌ஹாங்கீர் அரூஸி & ம‌ன‌ந‌ல‌ ஆலோசக‌ர் முஹைதீன் பாட்சா

03 AUG 2009
DUBAI







Saturday, July 11, 2009

ஹஜ்ரத் ஆவூர் இஸ்மாயில் ஹஸனி பயான்

ஹஜ்ரத் ஆவூர் இஸ்மாயில் ஹஸனி பயான்

Hajarat Avoor Ismail Hasani Bayan

http://www.tamilmuslimtube.com/playlist/30012972299229803021-2950299730



மெளலானா முஹம்மது அப்துல் மாலிக் அவர்களின் சூஃபித்துவத்தை பற்றிய கேள்வி பதில்

Moulana Muhammed Abdul Malik Q&A about Tassawwuf

http://www.tamilmuslimtube.com/playlist/Moulana-Muhammed-Abdul-Malik-Ba

Thursday, July 9, 2009

நாள் ஒரு நூல்

நாள் ஒரு நூல்

தமிழம் வலையில் www.thamizham.net நாள் ஒரு நூல் பகுதியில் ஒவ்வொரு
நாளும் 3 க்குக் குறையாத நூல்கள்/இதழ்கள் வலை ஏற்றப்படுகின்றன.
கல்லாடம், சூடாமணி நிகண்டு, திராவிட நாடு மலர், காஞ்சி இதழ், என வலை ஏற்றப்படுபவை
படவடிவக் கோப்பாக ஏற்றப்படுகின்றன.

தமிழின் வரலாறு காட்டும் இத்தகைய
முயற்சியைக் கண்டு, நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்தவும்.
இதுவரை 715 வகையானவை வலை ஏற்றப்பட்டுள்ளன

இந்தக் கருத்தினை ஒவ்வொரு வாரமும் நூல்களைப் பார்த்து
உங்களுக்குத் தெரிந்த குழுமங்களுக் கெல்லாம் அனுப்பி வைக்கவும்
பலரும் பார்த்து மகிழட்டும்

www.newshunt.com

Try this "NEWSHUNT" software to view Indian regional languages, english newspapers in your mobile.

Link:
www.newshunt.com

த‌மிழில் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் உரைக‌ள்


த‌மிழில் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் உரைக‌ள்

பிர‌ப‌ல‌ இஸ்லாமிய‌ சொற்பொழிவாள‌ர் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க்கின் ஆங்கில‌ உரைக‌ளை த‌மிழில் விசிடியாக‌ கொண்டு வ‌ரும் ப‌ணியினை காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் ) எனும் அமைப்பு மேற்கொண்டு வ‌ருகிற‌து.

இத்த‌க‌வ‌லை வ‌ளைகுடாவில் சுற்றுப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்டு வ‌ரும் முஹ‌ம்ம‌து த‌ம்பி தெரிவித்தார்

இதுவ‌ரை தீவிர‌வாத‌ம் முஸ்லிம்க‌ளின் த‌னி உடைமையா ? ம‌ற்றும் இந்து ச‌ம‌ய‌ப் பிர‌முக‌ர் ர‌விச‌ங்க‌ருட‌ன் டாக்ட‌ர் ஜாஹிர் நாய‌க் நிக‌ழ்த்திய‌ உரை ஆகிய‌ இரண்டு நிக‌ழ்வுக‌ள் த‌மிழில் வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

ஒரு விசிடியினை த‌மிழாக்க‌ம் செய்திட‌ சுமார் இர‌ண்டு இல‌ட்ச‌ம் ரூபாய் செல‌வு ஆவ‌தாக‌
முஹ‌ம்ம‌து த‌ம்பி தெரிவித்தார்.

இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் அமைப்பின் த‌லைவ‌ராக‌ அபுல் ஹ‌ச‌ன் க‌லாமி ஹாஜியாரும், செய‌லாள‌ராக‌ ந‌வாஸ் உள்ளிட்ட‌ 12 பேர் கொண்ட‌ க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ள் இருந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

இத‌ன் சார்பில் ஆயிஷா சித்திக்கா பெண்க‌ள் அர‌பிக்க‌ல்லூரி ம‌ற்றும் பைத்துல்மால் உள்ளிட்ட‌வை ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

விசிடி த‌யாரிப்பில் உத‌விட‌ விரும்புவோர் அமீர‌க‌த்தில் தொட‌ர்பு கொள்ள‌
ஜ‌லாலுதீன் 050 614 2633

இந்தியாவில்

இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் )
141 கே.டி.எம். தெரு
காய‌ல்ப‌ட்ட‌ண‌ம் 628 204
தூத்துக்குடி மாவ‌ட்ட‌ம்
94 871 24246

Pls click below link and watch Translated Dr.Zakir Spean in Tamil

http://www.readislam.net/videoislam-zakirnaik.htm

Is terrorism a Muslims monopoly? by Dr.Zakir Naik in Tamil (தமிழில்)

Dr.Zakir Naik's dialogue with Sri Sri Ravi Sankar in Tamil (தமிழில்)

http://www.readislam.net/videoislam-zakirnaik.htm

Tuesday, July 7, 2009

அறிவியல் அதிசயம்

அறிவியல் அதிசயம்

(புத்தக மதிப்புரை - தினத்தந்தி நாளிதழ் 13-1-2009)

தினத்தந்தி இளைஞர் மலரில் தொடராக வெளிவந்த அறிவியல் அதிசயம் கட்டுரைகள் புத்தக வடிவில் வெளி வந்துள்ளது.

பொறியியல், மருத்துவம், விண்வெளி, ரோபட், தொழில் நுட்பம் என்று அனைத்து தரப்பு அறிவியல் கண்டு பிடிப்புகளும் ஆராய்ச்சி தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக விண்வெளியில் உள்ள கிரகங்களுக்கு லிப்ட் அமைக்கும் ஆராய்ச்சி மற்றும் மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்யும் ஆராய்ச்சிகள் ஆச்சரியமூட்டும் தகவல்கள் ஆகும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த நூல் அமைந்திருப்பது சிறப்பு. அழகான அச்சும், நேர்த்-தி-யான வடிவமைப்பும் புத்தகத்தின் சிறப்பை மேம்படுத்துகின்றன. தமிழ்ப்புத்தக உலகுக்கு ஓர் அரிய புது வரவு.

(ஆசிரியர்: எம்.ஜே.எம்.இக்பால் வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை-108; பக்கம்: 440; விலை: ரூ.500)

Monday, July 6, 2009

உர்தூ மொழியின் பிறப்பும் சிறப்பும்

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய மாநில மாநாடு

சென்னையில் இஸ்லாமிய இலக்கிய மாநில மாநாடு
Sunday, 05 July 2009
சென்னை, இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் 9-வது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் நடத்துவது என இக்கழகத்தின் பொதுக்குழு தீர்மானித்துள்ளது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொதுக் குழு தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் பொதுச் செயலாளர் கேப்டன் அமீர் அலி பொருளாளர் எஸ்.எம்.இதயத்துல்லா தலைமையில் நடந்தது. இலக்கிய கழகத்தின் மாநாட்டை வரும் டிசம்பரம் மாதம் சோழிங்கநல்லலூரில் உள்ள சதக் கல்லூரியில் நடத்துவது எனவும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இலக்கிய இஸ்லாமிய அறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்றும் அதற்கான விரிவான சர்வதேச இலக்கிய கருத்தரங்க ஏற்பாடுகளை நிறைவற்ற பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.