Thursday, August 14, 2008

தமிழ் இணையச் சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வு

அன்புடையீர்,

வணக்கம்.

எம். சுப்பிரமணி எனும் நான் இக்கடிதம் வாயிலாக தங்களுடன் தொடர்பு
கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் " முத்துக்கமலம் " ( http://www.muthukamalam.com )எனும் இணையச்
சிற்றிதழ் ஒன்றினை கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நடத்தி வருகிறேன்.
நான் மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கத்தின்
மூலம் எம்.பில், (இதழியல் & மக்கள் தொடர்பியல்) [M.Phil (J.M.C)]
பயின்று வருகிறேன்.

இந்த ஆய்வுக் கல்விக்காக " தமிழ் இணையச் சிற்றிதழ்கள் - ஓர் ஆய்வு "
எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையைத் தயாரித்து சமர்ப்பிக்க உள்ளேன்.
இந்த ஆய்வுக்கு " தமிழ்த்திணை " இணையச் சிற்றிதழின் ஆசிரியரும்,
தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஏ.வி.சி. கல்லூரித் தமிழ் உயராய்வு
மையத்தின் இணைப் பேராசிரியருமான முனைவர்.தி.நெடுஞ்செழியன் அவர்கள்
வழிகாட்டுனராக உதவிட முன் வந்துள்ளார்.

அச்சுப்பிரதியாக வெளியாகாமல், வணிக மூலமான இலாப நோக்கமில்லாது ஏதாவது ஒரு
(உயரிய) நோக்கத்துடன் இணையத்தில் மட்டும் வெளியிடப்படும் இணைய இதழ்களை "
இணையச் சிற்றிதழ்கள் " என்று ஒரு வரையறை செய்து ஆய்வு செய்யப்பட உள்ள
எனது ஆய்வுப் பணிக்கு
தங்கள் இணைய இதழ் குறித்த கீழ்க்காணும் தகவல்கள் எனக்குத் தேவையாக உள்ளது.
தங்களின் மேலான பணிகளுக்கிடையில், தயவு செய்து எனக்குத் தேவையாக உள்ள

கீழ்காணும் தகவல்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு
(msmuthukamalam@yahoo.co.in)அனுப்பி வைத்து உதவிட வேண்டுகிறேன்.

நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
எம்.சுப்பிரமணி,
தேனி.
தொலைபேசி: 91-4546-265630
கைத்தொலைபேசி: 91-9940785925

__________________________________

" தமிழ் இணையச் சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வு " க்குத் தேவையாக உள்ள தகவல்கள்

1. இணைய இதழ் பெயர் :

2. இணைய இதழ் முகவரி :
( உதாரணமாக, http://www.tamilthinai.com/)

3. துவங்கப்பட்ட நாள் / ஆண்டு :

4. துவங்கப்பட்ட நோக்கம் :

5. முக்கியக் கருத்து :
( சமூகம் / இலக்கியம் / அரசியல் / ஆன்மீகம் / பகுத்தறிவு / சமையல் /
பல்சுவை... போன்று எது சார்ந்தது எனக் குறிப்பிடவும் )

6. வெளியிடும் அமைப்பு / வெளியிடுபவர் :

7. வெளியீட்டு முகவரி :
(நாடு குறிப்பிடவும்)

8. பயன்படுத்தும் எழுத்துரு :

9. பயன்படுத்தும் தொழில்நுட்பம் :

10. கணினி வடிவமைப்பு :
(தாங்களே மேற்கொள்கிறீர்களா? நண்பர்கள் / ஊழியர்கள் உதவுகிறார்களா?)

11. வாசகர்கள் நிலை :
( வாசகர்கள் மற்றும் அவர்களது நாடுகளை குறிப்பிடுங்கள்)

12. வாசகர்கள் அதிகரிப்புக்கு தங்களின் முயற்சி :

13. படைப்புகளில் வாசகர்களின் பங்கு :

14. விளம்பர வாய்ப்பும் தங்கள் முயற்சியும் :

15. வரவேற்பில்லாத இணைய இதழின் தற்போதைய நிலை குறித்து தங்கள் கருத்து :

16. இணைய இதழ்களின் எதிர்காலம் :

17. தாங்கள் கூற விரும்பும் பிற தகவல்கள் :
(ஏதாவது இருந்தால்...)

No comments: