Thursday, August 14, 2008

ஆற்றலை வளர்க்கும் அழகிய வழிகாட்டி

ஆற்றலை வளர்க்கும் அழகிய வழிகாட்டி

அமெரிக்க-கனடிய அமைப்பான மு°லிம் °டூடன்ட் அஸோசியேசன் என்ற அமைப்பின் சார்பாக நவீன தஃவா பணி முறைமைக்கு தலைமைத்துவப் பயிற்சி முக்கியம் என்பதனால், இ°லாமியப் பணிகளில் ஈடுபடுபவர்களின் பயிற்சிக்கென தலைமைத்துவ பயிற்சி வழிகாட்டியினை எழுதும் பொறுப்பு கலாநிதி ஹிஷாம் அல் தாலிப் அவர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈராக்கிலுள்ள மோஸுல் நகரில் ஹிஜ்ரி 1360 (1940)ல் அவர் பிறந்தார். 1962ல் லிவர்பூல் பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் துறையில் பி.எ°. பட்டமும், இண்டியானாவிலுள்ள புர்து பல்கலைக்கழகத்தில் எம்.எ°. மற்றும் பி.எச்.டி. பட்டங்களையும் 1974ல் பெற்றார். எம்.எ°.ஏ. வில் 1975-77ல் முழு நேரப் பணிப்பாளராகவும் பல உயர் பதவி களையும் வகித்தார்.

இத்தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டியில் நான்கு அடிப்படை விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட்டது.

1. ஆன்மீக மேம்பாடு.
2. இ°லாத்தைப் பற்றிய சரியான அறிவும் விளக்கமும்.
3. ஏனைய மார்க்கங்கள், சிந்தனை கோட்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு.
4. தஃவா பணிக்கு உதவும் செயல் திறன்கள்.

பல இ°லாமிய இயக்கங்களில் பொறுப்பும் அதிகார மும் மிக்க பதவிகளில் மு°லிம் இளைஞர்களே உள்ளனர். அதேபோல் தஃவா பணிக் களத்தில் பெண்களும் பொறுப்பு மிக்க பதவிகளை ஏற்கத் தொடங்கியுள்ளனர். சுருக்கமாக இயக்கங்களில் பதவி வகிக்கக்கூடிய, வழி நடத்தக்கூடிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் கட்டாயம் படித்து, அறிவை
வளர்த்து, அதன் வழிகாட்டுதலில் செயல்பட இந்நூல் முக்கிய மானதாகும். இதன் மூலம் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு பல விதமான பயிற்சி வகுப்புகளை நடத்தலாம். அதன் மூலம் திறன்கள் வெளிப்பட்டு இயக்கம் மேம்பாடு அடையும். மேலும் ஒவ்வொரு பொறுப்பாளரும் இயக்க வாழ்க்கையில் பல்வேறு நிலைகளை சந்திக்கும் போது அதற்கான திட்டங்களையும் உதவிகளையும் இந்நூல் வாயிலாகப் பெறலாம். உதாரணமாக:

1. ஓர் உரையை தயார்படுத்த முனையும்போது
2. ஓர் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்ய / வடிவமைக்க
3. தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள
4. கூட்டம் ஒன்றிற்கு தலைமை வகிக்க
5. பயிற்சி முகாமில் கலந்து கொள்ள / நடத்த

இக்குறிப்பிட்ட நிலைமைகளில் இவ்வழிகாட்டியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்நூலின் முதலாம் பாகத்தில் பயிற்சி குறித்த கண் ணோட்டங்கள் என்ற தலைப்பில் மூன்று அத்தியாயங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயம் ஓர் இ°லாமிய ஊழியன் அறிந்துகொள்ள வேண்டிய சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் கூட்டத்தைப் பற்றிய விபரங்களை பரந்த கண்ணோட் டத்துடன் விளக்குகிறது. இரண்டாம் அத்தியாயம் 14வது ஹிஜ்ரி நூற்றாண்டின் போது இ°லாமிய இயக்கம் பற்றிய பின்னணியும், வளர்ச்சி அடையவேண்டிய துறைகளைப் பற்றி விளக்குவதோடு மீளாய்வும், சில கேள்விகளையும் முன் வைக்கிறது. மூன்றாம் அத்தியாயத்தில் நமது குறிக்கோள்கள் விளக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாகத்தில் தலைமைத்துவத்தின் தொழிற் பாடுகள். ஒவ்வொரு இயக்க ஊழியரும் பயில வேண்டிய தன்னகத்தே கொள்ள வேண்டிய இன்றியமையாத பண்பு தலைமைத்துவ பண்பு ஆகும்.

“உங்களில் ஒவ்வொருவரும் ஒரு மேய்ப்பாளர் ஆவீர். தாம் மேய்ப்பன பற்றி ஒவ்வொருவரும் பொறுப்பு கூற வேண்டும்” (புகாரி, மு°லிம்).
என்ற ஹதீஸுக்கு இணங்க தலைமைத்துவப் பண்புகள் பற்றி விரிவாக ஆராய்கிற இப்பகுதி சிறந்த அட்டவணைகள், கருத்துப் படம், வரைபடங்கள் மற்றும் குர்ஆன் வசனங் களுடன் விளக்கப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக தொகுக்கப் பட்டுள்ள சிறந்த ஆவணம் இது.
மூன்றாம் பாகத்தில் திறன் விருத்தியும், சுய அபிவிருத் தியும் என்ற தலைப்பில் ஓர் இயக்க ஊழியர் அல்லது பொறுப்பாளர் சில திறமைகளை வளர்த்துக் கொள்ளல் அவசியம்; அவ்வகையில் பேச்சாற்றல், எழுத்தாற்றல், ஆலோசனை வழங்குதல்,செவி சாய்த்தல், நேரத்தை ஒழுங்கு செய்தல் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ளவும், கூட்டங்களை தயார் செய்தல், தலைமை வகித்தல், குழுக்களை உருவாக்குதல், தொடர்பாடல் போன்றவைகளைப் பற்றி இப்பாகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இறுதியில் பயிற்சியில் நயவஞ்சகமா? அல்லது மனோதத்துவமா? என்றொரு கடிதமும் “நீங்கள் எங்கிருந்த போதும் மரணம் உங்களை கண்டுகொள்ளும்” எனும் தலைப்பில் கவிதையும் முத்தாய்ப் பாய் உள்ளது.
நான்காம் பாகத்தில் பயிற்றுவிப்போருக்கான பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சியின் வகைகள், திட்டங்கள், நுட்பங் கள் அதன் பண்புகள், பயிற்சிக்கான தேவைகளின் மதிப்பீடும், பகுப்பாய்வும் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் பாகத்தில் இளைஞர் முகாமின் நோக்கம், தயார்படுத்தும் விதம், நிகழ்ச்சி நிரல் வடிவமைப்பு, செயல் திட்டங்கள் மதிப்பீட்டையும் விளக்குவதோடு இ°லாமிய ஒழுக்க நெறிகளையும் கூறுகிறது. ஒவ்வொரு இ°லாமிய இயக்க ஊழியரும் படித்து பயன்பெற, வழிநடத்த சிறந்ததொரு வழிகாட்டி இது.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு மேலாளர், அல்லது இயக்குனர் பதவிக்கு எம்.பி.ஏ என்ற கல்வித் தகுதி முக்கியம். அதுபோல் இ°லாமிய இயக்க ஊழியன் ஒவ்வொருவரும் பொறுப்பு வகிப்பதற்கு முன்னால் “இத்தலைமைத்துவப் பயிற்சி வழிகாட்டியை” கட்டாயம் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு இயக்கத்திலும் உள்ள ஊழியர்கள் இதிலு ள்ள ஒவ்வொரு தலைப்பையும் தனித்தனியே எடுத்து ஆய்வு செய்து கலந்துரையாடல் நடத்தி திறனையும்அறிவையும் மேம்படுத்திட வேண்டும். இது ஒரு மிகச் சிறந்த பாடப் புத்தகம். இதனை வெளியிட்ட பதிப்பாசிரியருக்கும், சிறந்த முறையில் எளிமையாக மொழி பெயர்த்த ஆசிரியர் அவர்களுக் கும் இதன் மூல ஆசிரியர் மற்றும் இந்நூல் வெளிவரக் காரண மாய் அமைந்த அனைவருக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நற்பேறுகளை வழங்கிடுவானாக. ஆமீன்!

நன்றி: விடியல் வெள்ளி (சென்னை)
மார்ச் 2008

No comments: