Saturday, August 2, 2008

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு



லண்டன், ஆக. 1: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர்.

இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.

No comments: