Thursday, September 18, 2008

ரூ.200 காணாமல் போனதால் 200 மாணவர்களை அறையில் அடைத்து வைத்த ஆசிரியை; மூச்சு திணறி 12 பேர் மயக்கம்

ரூ.200 காணாமல் போனதால் 200 மாணவர்களை அறையில் அடைத்து வைத்த ஆசிரியை; மூச்சு திணறி 12 பேர் மயக்கம்

www.muduvaivision.com


லக்னோ,செப்.18-

ரூ.200 காணாமல் போனதால் ஆசிரியை 200 மாணவர்களை 10 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். இதில் மூச்சு திணறி 12 பேர் மயக்கம் அடைந்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ளது ஜிர்கா கிராமம்.இங்கு அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையின் பையில் இருந்த ரூ.200 காணாமல் போய் விட்டது.இதை மாணவர்களில் யாரோ ஒருவர் தான் திருடி இருக்க வேண்டும் என்று அவர் கருதினார்.

இதுபற்றி சந்தேகப்படும் மாணவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். ஆனால் பணத்தை எடுத்ததாக யாரும் கூறவில்லை.

எனவே அங்கு படித்து வந்த 200 மாணவர்களÛயும் வகுப்பறையில் வைத்து பூட்டும்படி வகுப்பு ஆசிரியைக்கு உத்தரவிட்டார். அவர் 200 மாணவர்களையும் இடநெருக்கடி உள்ள அறைக்குள் அடைத்து பூட்டினார்.தண்ணீர், உணவு எதுவும் கொடுக்கவில்லை.

குறுகிய இடத்தில் அனைவரையும் அடைத்து இருந்தால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் கதறினார்கள். ஆனாலும் ஆசிரியை கண்டுகொள்ளவில்லை.

மாலையில் வகுப்பு முடிந்த போதும் மாணவர்களை வெளியே அனுப்பவில்லை. அவர்கள் 10 மணி நேரத்துக்கு மேலாக அடைத்து வைக்கபட்டு கிடந்தனர்.

மாணவர்கள் உரிய நேரத்தில் வீடு திரும்பாததால் கவலையடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு தேடி சென்றனர். அப்போது தான் மாணவர்கள் அறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

அப்போதும் அறையை திறக்க ஆசிரியை மறுத்துவிட்டார். இதனால் பெற்றோர்கள் வகுப்பறையின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அவர்களை மீட்டு வந்தனர். உள்ளே 12 மாணவர்கள் மயங்கி கிடந்தனர்.

இதுபற்றி கல்வித்துறையிடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.

No comments: