Sunday, September 14, 2008

இந்திய தூதரக அதிகாரி பங்கேற்ற அபுதாபி தமிழ்ச்சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

இந்திய தூதரக அதிகாரி பங்கேற்ற அபுதாபி தமிழ்ச்சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

அபுதாபியில் செயல்பட்டுவரும் அபுதாபி தமிழ்ச்சங்கம் பல்வேறு சமய, சமூக
மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வருகிறது.

அவ்வரிசையில் இன்று ( 14-09-2008) அபுதாபி அரபு உடுப்பி உணவகத்தில்
இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி நடைபெற்றது.
இது ஒரு மத நல்லிணக்க விழாவாகவே காட்சியளித்தது.

இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி தமிழ்ச்சங்கத்தலைவர் ரெஜினால்டு தலைமை வகித்தார்.
மீரான் பைஜி வரவேற்புரை நிகழ்த்த ஹீசைன் மக்கி 'ரமலான் மற்றும் நோன்புப்
பெருநாள் சிறப்பு' பற்றி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாடகர் தாஜீதீன் பைஜி யின் 'கொடை உள்ளம் நீ வாழ்க'
என்ற பாடல் கேசட் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரக அதிகாரி பிரீத்தம் சிங் குடும்பத்தினர்,
இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியி்ன் சீனியர் பொதுமேலாளர் சிவக்குமார்,
அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி.ஹமீது மற்றும் அபுதாபி தமிழ் நண்பர்கள்
நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.

தகவல் : வி.களத்தூர் ஷா, அபுதாபி

No comments: