Friday, May 1, 2009

இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.. பேச்சுக்கலை

இதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.. பேச்சுக்கலை


'வாய் இருந்தால் வங்காளம் போகலாம்" என்பது கிராமப்புறங்களில் சொல்லப்படுகின்ற ஒரு பேச்சு வழக்குச் சொல். உலகில் உள்ள ஜீவராசிகளில் பேசத் தெரிந்தவன் மனிதன் மட்டும் தான். பேச்சு என்பது ஒரு சிலருக்கு கை வந்த கலை. பலருக்கோ அது ஒரு வதை. உண்மையில் நன்றாகப் பேசத்தெரிந்தவன் இந்த உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வான் அல்லது உழைத்துக்கொள்வான் என்பதினை மேற்கொள் காட்டுவது தான் அந்த முதுமொழி. இதை இன்னொரு வகையில் "வாய் உள்ள பிழைத்துக்கொள்ளும்" என்று கூட சொல்வார்கள். ஊமையாய் இருக்கின்றவர்கள் கூட சைகை மொழியில் தங்களுக்கு ஏதாவதொரு வகையில் பேசிக் கொள்கின்றனர்.


உயிர் வாழ்வதற்கு மூச்சு எவ்வளவு முக்கியமானதோ அது போல் பேச்சும் முக்கியமானது. வாய் இருக்கின்றது என்பதற்காக நாம் எல்லாவற்றையும் பேசக்கூடாது. நமது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் நிதானமாக இருக்க வேண்டும். ஒரு சிற்பி எவ்வளவு நுணுக்கமாக ஒரு சிலையை செதுக்குகின்றானோஇ அவ்வளவு நுணுக்கமாக நாமும் வார்த்தைகளை தெரிந்து தெளிந்து பேச வேண்டும். அப்போது தான் பிறர் நமக்கு மதிப்பும் மரியாதையும் தருவார்கள். பொருட்களை சிந்திவிட்டால் அள்ளி விடலாம். வார்த்தைகளை வீசி விட்டால் அள்ள முடியாது.


உங்கள் பேச்சு மற்றவரை இழிவு படுத்துவதற்காக மட்டும் இருக்கக்கூடாது. முடிந்தால் உங்கள் பேச்சு மூலம் மற்றவரை திருத்தப்பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு நான்கு பேர் திருத்துவார்களாக இருந்தால் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றியாகும். சிலர் இருக்கிறார்கள் எந்நேரமும் ஓயாமல் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். இவர்களை கண்டால் பலர் தள்ளியே நிற்பார்கள். பேசியே கழுத்துறுப்பவர் வருகிறார் என ஓட்டம் பிடித்து விடுவார்கள்.


சிலர் பேசுவதை கேட்பதற்கே அருமையாகவும் இனிமையாகவும் இருககும். இன்னும் ஒரு முறை இவர் பேசமாட்டாரா? என அவரது பேச்சு நம்மை ஏங்க வைக்கும். அந்தளவிற்கு அவருடைய பேச்சானது மகிமை மற்றும் மதிப்பு இருக்கும். பேசுவதை நிதானமாகவும் அதே சமயத்தில் அமைதியாகவும் தெளிவாகவும் பேசக்கூடிய ஒரு சிலர் இருப்பர்கள். நம்முடைய பேச்சு மற்றவருக்கு புரியும் படியும் பேசக்கூடிய ஒரு சிலர் இருப்பார்கள். மற்றும் ஒரு சிலர் இருப்பார்கள் அவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவருக்கே புரியாது மற்றவருக்கு என்ன புரிய வைக்க போகிறார்கள் என்பதும் தெரியாது.


ஆகையால் நம்முடைய பேச்சானது நன்றாக இருக்க வேண்டும் என்பவர்கள் சில முறைகளை பின்பற்ற வேண்டும். பேச்சுக்கலை பற்றிய ஆய்வாளர்கள் எப்படி பேச வேண்டும் என்பதைப் பற்றி ஆராய்ந்து தெரிவித்துள்ள கருத்துக்கள் இதோ:


ஒருவர் பேசும் போது எளிமையாக இனிமையாக பேச வேண்டும் அதாவது எல்லோருக்கும் விளங்கக்கூடியதாக அப்பேச்சு அமைய வேண்டும்.


என்ன விடயத்தை பற்றி பேசப்போகின்றோம் என்பதை பற்றி நீங்கள் முன் கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ஏனெனில் எதைப் பேசப்போகின்றோம் என்பதை முன் கூட்டியே தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதிகமாக பேசாமல் இரத்தினச் சுருக்கமாக நறுக்கென்று பேச வேண்டும். மணிக்கணக்கில் பேச்சை இழுத்துக்கொண்டு போகக்கூடாது. அப்புறம் எதிரே உள்ளவர் துங்குவதற்கு தலையணையினை தேட வேண்டும்.


என்ன பேச போகின்றோம் என்பதினை முன் கூட்டியே தெரிந்து வைத்து அதனை பேச வேண்டும். பேச்சில் தடுமாற்றம் இல்லாமலும் தடங்கல் இல்லாமலும் பேச வேண்டும்.


உண்மையைப் பேச வேண்டும். எப்போதும் பேசும் போது யதார்த்தை உணர்ந்து நடைமுறை வாழக்கையில் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்திப் பேச வேண்டும்.


எதிரில் உள்ளவர்களை கவரக்கூடிய வகையில் பார்த்து பேச வேண்டும். கூட்டத்தில் எல்லோரையும் பார்த்து பேசுவது என்பது கடினம். அதனால் எதிரில் இருப்பவர்களில் ஒரு சிலரையாவது அடிக்கடி பார்த்துப் பேசுங்கள். அவர்களது முகபாவனையை வைத்து உங்கள் பேச்சு எப்படி உள்ளது என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ள முடியும். அதற்கேற்ப பேசவும் முடியும்.


எழுதி வைத்துப் படிக்கக்கூடாது. மேடையில் பேசும் போது எழுதி வைத்து வாசிப்பதைப் போல படிக்கக்கூடாது. அது மற்றவரையும் உங்களையும் சங்கடத்திற்குள் தள்ளி விடும். ஏனெனில் எழுதியதை படிக்கும் போது நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது வாய்பேச்சு வார்த்தைகளாக வராமல் எழுத்து வாக்கியங்களாக வரும். ஆகையால் அதில் கவனம் தேவை.


மூச்சை நன்றாக இழுத்து விடுதல் வேண்டும். மேடையில் போய் நின்றதும் உங்கள் மூச்சை ஒரு முறை நன்றாக உள் இழுத்து மெதுவாக விட்டு விடுங்கள். அது உங்கள் பயத்தையும் பதற்றத்தையும் தணிக்கும்.


மேற் சொன்ன குறிப்புகளை நாம் மேற்கொண்டு பயிற்சியினை மேற்கொண்டால் நிச்சயம் நீங்களும் ஒரு மேடைப் பேச்சளார் ஆகலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.


இப்போது நடைமுறை வாழக்கைக்குகள் திரும்புவோம். பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். இதன் அர்த்தம் நாம் பேசியது உண்மையாக இருக்க வேண்டும். அதனை செயற்படுத்தியும் காட்ட வேண்டும் என்பதாகும். வெறுமனை பேசிவிட்டு போவதினால் பயன் இல்லை பேசியதை செயற்படுத்திக்காட்ட வேண்டும். அப்போது தான் நமக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கக்கூடாது.


இப்போது மனிதர்கள் மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுவது என்பது குறைவாக போய் விட்டது. மனிதர்கள் ஒருவருக்கொருவர்கள் மனம் விட்டு பேசினாலோ ஆயிரம் பிரச்சனைகள் தீர்ந்து விடும். அவரவர்கள் பேசாமல் இருக்க இருக்கத்தான் பிரச்சனைக்ள் அதிகரிக்கின்றது. மனைவி கணவனிடமும்இ தாய் தன் பிள்ளைகளிடமும் கலந்துப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவும் நல்ல முடிவாக இருக்க வேண்டும்.


ஒருவரோடு பேசும் போது அன்பாகவும்இ மெதுவாகவும் பேசுங்கள். அவரிடமுள்ள நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக்காட்டி பேசுங்கள். அவரது குறைகளை நேரடியாக சுட்டிக்காட்டி பேசாமல் நீங்கள் இருந்தால் நிச்சயம் நன்றாக வருவீர்கள். உங்களிடம் நிறையத் திறமைகள் இருக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் முன்னேற இடம் உண்டு என உங்களுக்குள்ளே பேசிப்பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்டு அவர் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார். முன்பை விட உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகமாக வைத்திருப்பார். இது தான் உங்கள் பேச்சின் சக்தி.


தூரத்தில் இருக்கும் ஒருவரை பார்த்து “எப்படி செளக்கியமா?” என தொண்டை கிழிய கத்திக் கேட்பதற்கும் அவர் அருகே சென்று கையையோஇ தலையையோ தடவிக் கொடுத்தவாறு “எப்படி செளக்கியமா இருக்கின்றீர்களா?” என மெதுவான குரலில் கேட்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கின்றது. இந்த இனிமையான பேச்சின் அன்பைத்தான் எல்லோரும் உங்களிடம் எதிர் பார்ப்பது.


எனவேஇ பேசுங்கள் சக மனிதனோடு மனம் விட்டு இனிமையாக பேசுங்கள். உங்களை சூழ்ந்திருக்கும் மனச்சுமைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக கலந்து பேசுங்கள். மனம் விட்டு பேசுங்கள். அதுவே பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். உங்கள் வாழ்க்கையினை பற்றி பேசுங்கள். உங்களுக்கு நல் வழிக்காட்டும் எதிர் கால திட்டத்தினை பற்றி பேசுங்கள். அது உங்களை நல் வழிப்படுத்தும். அன்பினை பற்றி பேசுங்கள். அது உங்கள் உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்தும். எப்போதும் நல்லதை பற்றி பேசுங்கள் அது உங்களுக்கு நல்லதாக அமையும்.


“ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும்இ தீமையில் தான் செய்தவற்றையம் தன முன் ஆஜராக்கப்பட்டதாகப் பெறும் (அந்) நாளில்இ அதுஇ தான் செய்தவைகளுககும்இ தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும்இ அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டணையை நினைவு கூறுமாறு) உங்களை எச்சாிகை செய்கிறான்இ இன்னும் அல்லாஹ் (தன்) அடியார்கள் மிது மிக்க இரக்கமுடையவன்’’.


அல்குர்ஆன் 3:30


மனித குலம் அனைத்திற்கும் வழிகாட்டியாக இருந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள்இ “உங்களைப் போன்று வேகமாக பேசிக்கொண்டு செல்லமாட்டார்கள். அவர்கள் எவ்வாறு பேசுவார்களெனில்இ எண்ணிக்கணக்கிடக்கூடியவர்இ அப்பேச்சை எண்ணினால் அது இத்தனைச் சொற்களைக் கொண்டதுதான் என்று வரையறுத்திட முடியும்.


அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) ஆதாரம் : புகாரிஇ முஸ்லிம்இ மிஷ்காத்


அண்ணலாரின் நாவு ஆபாச வார்த்தை முழங்குவதை விட்டும் ஏசிப் பேசவதைவிட்டும் தூய்மையாக இருந்தது. கோபம் கொண்டு கண்டிக்கும் சந்தர்ப்பத்தில் “இவருக்கு என்ன நேர்ந்துவிட்டது. இவரது நெற்றியில் மண்படட்டும் என்று மட்டும் கூறுவார்கள். அத்துடன் அண்ணலார் அவர்கள் கடுகடுப்பானவராகவோஇ சதா முகத்தை “உம்” என்று வைத்துக் கொண்டவராகவோ இருந்ததில்லை. பேச்சுக்கு பேச்சு நாற்புறமும் எதிரொலி்க்கும் வகையில் ஓசையுடன் சிரிப்பவராகவும் இருந்ததில்லை. மாறாகஇ இதில் நடுத்தரமான நடத்தையை மேற்கொண்டிருந்தார்கள்.






நன்றி : இலங்கை வார இதழ் – வீர கேசரி


தொகுப்பு : முத்துப்பேட்டை – அபூ ஆஃப்ரின்

No comments: