Sunday, April 18, 2010

தொடர்ந்து முழங்குங்கள்

தொடர்ந்து முழங்குங்கள்
-திருச்சி. A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com

“முஸ்லிம் லீக்”
பேரியக்கம்
தொடங்கியவர் பெயரில்
ஓர் பேரவை – அது யு.ஏ.இ
காயிதே மில்லத் பேரவை !

தாய்ச் சபையின்
அறுபத்து இரண்டாம் ஆண்டு
தொடக்க விழா
தாயகம் கடந்து
யு.ஏ.இ. துபையில் !

முஸ்லிம் லீக் – இது
கொடிகள் உயர்வதற்காக
பாடுபடும் கட்சியல்ல – நாட்டின்
குடிகள் உயர்வதற்கு
பாடுபடும் கட்சி

மந்திரங்கள் முழங்க
தொடங்கப்பட்ட கட்சிகளுண்டு,
இது – நாட்டின்
சுதந்திரத்திற்காக முழங்கிய
கட்சி இது !

இந்திய
சுதந்திரத்திற்கு பாடுபட்ட
முஸ்லிம்
அன்னியனாய் பார்க்கப்பட்ட போது,
உரிமைகளை வென்றெடுக்க – இந்திய
யூனியன் முஸ்லிம் லீக்
ஆரம்பிக்கப்பட்டது !

“இந்தியா எங்கள் தாய் நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு”
முழங்கினார் உறுதியோடு
கவ்மின் காவலர்
காயிதே மில்லத்

இது
சலுகைகளை கேட்கும்
சமுதாயமல்ல
உரிமைகளை கேட்கும்
சமுதாயம்
உணர்வோடு ஒலித்த தலைவர்
நமது
அப்துஸ்ஸமது.

”பொது சிவில் சட்டம்”
ஐநூறுக்கும் மேற்பட்டோர்
அங்கு (பாராளுமன்றத்தில்)
அமைதியாக இருந்த போது
ஐயமற எடுத்து வைத்தார் ஒருவர்

“ஷரீஅத் சட்டம் தான்
சரியான சட்டம்
உயிரினும் மேலான
உயர்வான சட்டம்” – அவர்தான்
நெஞ்சம் துவளா
குலாம் மஹ்மூத் பனாத்வாலா !

“தீன் இஸ்லாம்
தமிழகத்திற்கு வந்த மதமல்ல – அது
தமிழகத்தின் சொந்த மதம் “
ஆதாரங்களோடு நிரூபித்த,
பேராசிரியர் காதர் மொய்தீன்

நாடாளுமன்றத்தில்
நம் உரிமைகளுக்கு
குரல் கொடுத்தும் – பிறை மேடையில்
சமூக பெருமைகளை
எடுத்து வைத்தும் வரும்
அப்துர் ரஹ்மான். எம்.பி !

நான்
பொய் சொல்லவில்லை,
உங்கள் எண்ணிக்கை
குறைவுதான் !
உண்மையை சொல்கிறேன்
உங்கள் பணி எனக்கு
மனநிறைவுதான் !

திராவிட முன்னேற்ற கழகத்துடன்
இணைந்து,
தீனோரின் முன்னேற்றத்திற்காக
பாடுபடும் நீங்கள்

சமூக உரிமைகளுக்கு
தொடர்ந்து முழங்குங்கள்
உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என்றும்
உறுதுணையாய் இருப்போம் நாங்கள் !

( 25.03.2010 வியாழக்கிழமை துபாயில் அமீரக காயிதேமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை )

Presently he is working in Qatar

No comments: