Sunday, August 24, 2008

கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்?

கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்?

இரா. சோமசுந்தரம்

http://www.dinamani .com/NewsItems. asp?ID=DNE200808 21114626&Title=Editorial+ Page&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=8/22/2008&dName=No+Title&Dist=0



ஒளவை சொல்கிறாள்: 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'.

வங்கிகளில் கல்விக் கடன் வாங்குவதைப் பிச்சை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் மாணவர்களையும் பெற்றோர்களையும் பிச்சைக்காரர்களைப் போலத்தான் நடத்துகின்றன வங்கிகள்.

அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் 8800 இடங்களும் சுயநிதிக் கல்லூரிகளில் 67500 இடங்களும் உள்ளன.

அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் சுயநிதி கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ. 75 ஆயிரம் தேவைப்படுகிறது. கல்விக்கடனைத் தேடி அலைபவர்களில் 90 சதவீதம் பேர் சுயநிதி கல்லூரிகளைத் தேர்வு செய்தவர்களே.

'ரூ. 4 லட்சம் வரை எந்தப் பிணையும் இல்லாமல் கல்விக் கடன் வழங்க வேண்டும்' என்பது மத்திய அரசின் நிபந்தனை. ஆனால் வங்கிகள் 'காற்றில் பறக்கவிடும்' முதல் நிபந்தனை இதுதான்.

தொழிற்கல்வியை முடித்தவுடன் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலையிலும்கூட, பிணை (ஸþரிடி) இல்லாமல் கல்விக்கடன் தர வங்கி மேலாளர்கள் எவரும் தயாராக இல்லை. எல்லாரும் முன்ஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள்.

வங்கிகள் கேட்கும் மற்ற 'போனபைடு சர்டிபிகேட்', சம்பளச் சான்று போன்றவை கல்வித்துறையை வங்கிகள் புரிந்துகொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

போனபைடு சர்டிபிகேட் முதலாண்டு மாணவர்களுக்கு கல்லூரி தொடங்கும்போதுதான் கிடைக்கும். ஆனால் மாணவர்கள் அதற்கு முன்பாக ரூ.75 ஆயிரம் கட்ட வேண்டும். இதில் விடுதிக் கட்டணமும் சேர்ந்தால் குறைந்தது ரூ.1 லட்சமாக இருக்கும்.

வங்கிகள் கடன் தராத நிலையில், கந்துவட்டிக்கு கடன்வாங்கி கல்லூரியில் சேர்ந்துவிட்டு பின்னர் போனபைடு சர்டிபிகேட்டுடன் வங்கி வாசல்படியை மிதிக்க வேண்டும். கந்துவட்டி வாங்கி கல்லூரிக்குப் பணம் செலுத்திய கட்டண ரசீதுகளை ஏற்க மறுக்கின்றன வங்கிகள்.
அடுத்து சம்பளச் சான்றிதழ். மாத வருவாய் ரூ.12,000க்கு குறையாமல் இருந்தால் மட்டுமே கல்விக் கடன் வழங்க பரிசீலிக்கலாம் என்று வங்கிகள் தங்களுக்குள் ஒரு ரகசிய வரையறை வைத்துக்கொண்டுள்ளன.

மாதச்சம்பளம் ரூ.12,000க்கு இருக்க எல்லாரும் என்ன அரசு ஊழியர்களா? சாதாரண நிறுவனங்களில் மாதக்கூலியாகப் பணியாற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் பலர்.
சம்பளப் பதிவேட்டையே பார்த்திருக்காதவர்கள். சம்பளச் சான்று கிடைக்கவே வழியில்லை.
நிலைமை இப்படியாக இருக்கும்போது வங்கிகளின் அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து கல்விக் கடன் பெறுவோர் யார் யார்? சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக இடஒதுக்கீட்டுக்கு சில 'ல'கரங்களைக் கொடுத்துவிட்டு, கல்விக்கட்டணம் செலுத்தும் வசதி படைத்தோர் மட்டுமே!. இவர்களில் பலர் பணக்காரர்கள், பெரும்வியாபாரிகள், அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள்.

இவர்களுக்கு பிணை கையெழுத்துப் போட ஆட்கள் உண்டு. இவர்கள் கல்விக் கடன் பெறுவது பணம் இல்லாமையால் அல்ல. அரசு தரும் வரிச்சலுகையைப் பெறவும், தங்கள் சட்டவிரோதப் பணத்தை முறைப்படுத்திக்கொள்ளவும்தான்.

வங்கி அலுவலர்களுக்கு இவர்களைக் கண்டால் கொள்ளை மகிழ்ச்சி. ஏனென்றால் கல்விக்கடன் இலக்கை எட்ட முடிவதுடன் தங்களுக்குப் பிரச்னையும் வராது.
ஆனால், மிக நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும் நடுத்தர வருவாய் பிரிவைச்சேர்ந்த மாணவன் என்றால் வங்கிகள் கடன் தராமல் இழுத்தடிக்கும்.

தொழிற்கல்வி பயிலும் அனைத்து மாணவனுக்கும் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் எந்த சான்று, பிணை இல்லாமல் கல்விக்கடன் தர முடியும். அதற்கு வங்கிகள் இஸ்லாமிய வங்கி நடைமுறைக்கு மாறியாக வேண்டும்-குறைந்தபட்சம் கல்விக்கடனில் மட்டுமாகிலும்.

வட்டிக்குப் பணம் கொடுப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஒருவரை முன்னேற்றுவதற்கு கடனுதவி அளிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

இந்தக் கடனுதவி வட்டியை எதிர்நோக்கியதாக இல்லாமல், லாபத்தில் பங்கு என்பதாக மாறுவதுதான் இஸ்லாமிய வங்கி முறையின் நுட்பம். இதை 'முதரபா' அல்லது 'லாபத்தில் பங்கிடுதல்' என்பதாக இஸ்லாமிய சட்டம் சொல்கிறது.

இஸ்லாமிய வங்கியில் தொழில் கடன் பெறுவோர், முதலில் தனது தொழில் திட்டத்தை, தனது திறமையை, சந்தை வாய்ப்புகளை வங்கியிடம் விவரிக்க வேண்டும்.

வங்கியின் தொழில் வல்லுநர் குழு இந்த புதிய தொழில்முயற்சியின் வெற்றிவாய்ப்பை ஆராயும். அவர்கள் இது முறையான, நஷ்டம் தராத தொழில்தான் என்று உறுதிகூறிய பிறகு கடன் கிடைக்கும். இந்த புதிய தொழிலில் வங்கி ஒரு பங்குதாரராக இருக்கும்.

தொழில் விருத்தியடைந்து, லாபம் பெருகும்போது, ஒரு பங்குதாரரை அவருக்கான தொகையைக் கொடுத்து வெட்டிவிடுவதைப்போல விலக்கிவிடலாம். நஷ்டம் வந்தால்? வங்கியின் வல்லுநர் குழுவின் கணிப்புகள் எந்த இடத்தில் தவறாகப் போனது என்பதை வங்கி ஆராயும். சரிசெய்யும் வாய்ப்பு இருந்தால் தானே களத்தில் இறங்கும். இல்லையானால், நஷ்டம் தொடங்கியபோது அத்தொழிலை நிறுத்திவிடும். கணிப்புகள் தவறானால் வல்லுநர் குழுவுக்குப் பெருத்த அவமானம் என்பதால், சரியான விதத்தில் கணிப்பார்கள்.

தொழில்கடனுக்குப் பொருந்தும் இந்த இஸ்ஸôமிய வங்கி நடைமுறை ஏன் தொழிற்கல்வி பயிலும் மாணவருக்குப் பொருந்தாது?

ஒரு மாணவரின் மதிப்பெண், அவரது அறிவுத்திறன், பேச்சுத்திறன், அவர் தேர்வு செய்துள்ள பாடப்பிரிவு, அதில் அவருக்கு உள்ள வேலைவாய்ப்பு அனைத்தையும் வங்கியின் வல்லுநர் குழு மதிப்பீடு செய்து, எந்தப் பிணையும் இல்லாமல் கல்விக் கடன் தர முடியும். லாபத்தில் பங்கீடு என்ற அதே முறையில், இவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியதும் இவர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு பகுதியை ஒப்பந்தப்படி பெறலாமே.

இதை செய்வதற்கு, ஒரு மாணவனை கணிக்கும் அறிவும் ஆற்றலும், துணிச்சலும் தேவை.
வாழ்க்கையில் எந்த ரிஸ்க்-கும் இல்லாமல் மாதம்தோறும் சம்பளம் மட்டும் கைநிறைய எதிர்பார்க்கும் அதிகாரிகளே நிறைந்து வழியும் வங்கிகளில் ரிஸ்க் எடுப்பவர்கள் சிலர் மட்டுமே.

அதனால்,

பாத்திரம் அறிந்து பிச்சைபோடும் திறன் இல்லாத வங்கிகள் முன்பாக மாணவரும் பெற்றோரும் பிச்சைக்காரர்களாக நிற்கிறார்கள் கைகளை ஏந்தியபடி!

ஏழை சொல் அம்பலம் ஏறாது எனும்போது அதிகாரிகளிடம் செல்லுமா என்ன?

ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்! "எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்" - வாஷிங்டன் போஸ்ட்

ஊடகத் துறையில் முஸ்லிம்கள் கால் பதிக்க வேண்டும்! "எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்" - வாஷிங்டன் போஸ்ட்

(http://www.satyamargam.com/index.php?option=content&task=view&id=1001)

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008

"எனக்கு முஸ்லிம் பத்திரிகையாளர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள்"


கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்குக் கடந்த மார்ச் 4ம் தேதியன்று (04-03-2008) வருகை தந்திருந்த பிரபல வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஃபிலிப்ஸ் பென்னட் பேசியபோது வெளிப்பட்ட ஆதங்கம் இது.



"இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களைக் கொண்டுள்ள ஊடகங்களே எனது கூற்றிற்கு அடிப்படைக் காரணம்!" என்கிறார் இவர்.



ஒரு பிரபல மேற்கத்திய செய்தி ஊடகத்தின் தலைமை நிர்வாகியின் இக்கூற்றினைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிந்தித்தால் சில உண்மைகள் புலப்படுகின்றன.



இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியில் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதும் உண்மைக்குப் புறம்பான அத்தகைய செய்திகளின் முகமூடிகள் மிகக் குறுகிய காலத்திற்குள் கிழிந்து விடுவதும் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.



எவ்வித ஆதாரமும் இல்லாமல் திரிப்பதைத் தொழிலாகக் கொண்ட சில அறிவுஜீவி(!) எழுத்தாளர்களின் ஆக்கிரமிப்புக்களை ஊடகங்களிலிருந்து அகற்றினால் மட்டுமே நடுநிலைப் பத்திரிகை எனும் பெயரினைத் தக்க வைக்க இயலும் என்ற நிலைக்கு மேற்கத்திய ஊடகங்களே தள்ளப்பட்டுள்ளன என்பது வெட்டவெளிச்சமாகிக் கொண்டே வருகிறது.



ஊடகங்களின் அவசியம்



நவீன உலகில் ஊடகத்துறையின் முக்கியத்துவத்தினையும் அதில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டியதன் அவசியத்தையும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் பல்வேறு சமூகநல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

உலகின் சமாதான சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள இறை மார்க்கம் இஸ்லாமும் அது கூறும் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள முஸ்லிம்களும் உலகிற்கு வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு நேர்மாறாக, உலக சமாதானத்திற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இன்றைய நிலைக்கு மூலக் காரணம் ஊடகங்களே.

உலகளாவிய அளவிலிருந்து இந்தியச் சூழல் வரை முஸ்லிம்கள் அடக்கி ஒடுக்கப்படுவதற்கும் நியாயம் அநியாயமாகவும் அரச, பாஸிஸ, பயங்கரவாதச் செயல்கள் நியாயங்களாகவும் திரித்து மக்கள் மனதில் திணிக்கப்பட்டதற்கும் ஊடகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக தென்காசியிலிருந்து மகாராஷ்டிரா நான்டெட் வரை, வெடிகுண்டுகள் நிர்மாணிப்பதிலும் அதனை வெடிக்க வைப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்கபரிவாரங்கள் தான் காரணம் என்பதைக் காவல்துறை மிகத் தெளிவான ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னரும் நாட்டில் நடக்கும் எந்த ஒரு குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து அரசு இயந்திரங்கள் செயல்படுதவற்கும் நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சங்கபரிவாரம் போன்ற பாஸிஸ சக்திகள் சுதந்திரமாக உலாவருவதற்கும் அவைகள் செய்யும் அக்கிரமங்கள் திட்டமிட்டு இஸ்லாமிய அமைப்புகள் மீது கட்டிவைக்கப்பட்டுத் தடை செய்யப்படுவதற்கும் காரணம் ஊடகங்களே.

உலகில் வலிமை குறைந்த நாடுகள் ஏகாதிபத்திய சக்திகளால் தகர்க்கப்படும் பொழுதும் உலகம் கைகட்டி அதனை நியாயப்படுத்திக் கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பதற்கும் இவ்வூடகங்களின் பொய் பிரச்சாரங்களே காரணம்.

உலகை ஒரே செய்தியின் மூலம் தலைகீழாக மாற்றிப்போடும் அதி சக்தி வாய்ந்த இந்த ஊடக ஆயுதத்தை, பாஸிஸ, ஏகதிபத்தியச் சக்திகள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டதும் இத்துறையின் சக்தியை முஸ்லிம்கள் சரிவர புரிந்துக் கொள்ளாமல் பாராமுகமாக இருந்ததுமே இவற்றிற்கான மூலக் காரணமாகும்.

காலம் தாழ்ந்தெனினும் துவங்கி சில வருடங்களிலேயே உலக மக்கள் மனதை கொள்ளை கொண்டு விட்ட அல் ஜஸீரா, ப்ரஸ் டிவி போன்ற முஸ்லிம்களின் ஊடக கால்வைப்பு, உலகில் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை மாற்றி அமைத்துள்ளது என்பதற்கான ஆதாரமே இந்தப் பிரபல மேற்கத்திய ஊடகத் தலைமை நிர்வாகியின் கூற்று வெளிப்படுத்துகின்றது.




சரி... மேற்கத்திய ஊடகங்களே முன்வந்து முஸ்லிம் செய்தியாளர்கள் அதிகமாகத் தேவைப்படுவதன் அவசியத்தை உணர்ந்துள்ள இச்சூழலில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

சக்தி வாய்ந்த அரசு இயந்திரங்களான இராணுவம், காவல்துறை, நீதிமன்றம், உளவுத்துறை போன்றவற்றில் முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது போன்றே ஊடகத்துறையிலும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந் நிலையை முதலில் மாற்றியமைப்பதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும்.


பிரச்சனைகள் ஏற்படும் வேளைகளில் மட்டும் அதனைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறையைப் பேணுவதை விட, முழு பிரச்னைகளுக்குமான மூல காரணத்தைக் கண்டறிந்து அதனைச் சீர்செய்வதற்கு முயல்வதே அறிவுடைமையாகும்.

அவ்வகையில் இன்றைய நவீன உலகில், ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மட்டுமின்றி வலிமை குன்றிய, பலவீனர்கள் மீது பிரயோகிக்கப் படும் அநியாயங்களுக்கு மூலக்காரணம் அதி சக்தி வாய்ந்த ஊடகத்துறையில் நியாயவான்களின் எண்ணிக்கைக் கணிசமான அளவில் இல்லாமையே என்ற யதார்த்ததினை மனதில் நிறுத்த வேண்டும்.

இதனைச் சீர் செய்து விட்டால், பிரச்சனையின் ஆணிவேரைக் கண்டறிந்துச் சீர்செய்ததற்கு ஒப்பானதாகும்.

அவ்வகையில், கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களை மக்கள் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டி மக்களை அநியாயங்களுக்கு எதிராகப் போராடவும் வைப்பதற்கு ஏற்ற வகையில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் முன்வர வேண்டும்.



எவ்வாறு சமுதாயத்தின் உயர்வுக்குக் கல்வியில் தன்னிறைவு பெறுவது கட்டாயமோ, அதனை விடக் கட்டாயமானது ஊடகத்துறையில் முஸ்லிம்கள் கால்பதிக்க வேண்டியதாகும். சமுதாய, சமூகங்களின் சுமூகமான, சமாதானமான வாழ்விற்கு முஸ்லிம்கள் ஊடகத்துறையில் கால்பதிப்பதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை.



பள்ளியிலோ, கல்லூரியிலோ படித்துக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் மாணவனின் எதிர்கால வாழ்க்கை (?) பிரகாசமாயிருக்க மருத்துவம், IT அல்லது Oil/Gas துறைகளே கதி என்று போதிக்கப்பட்டுவரும் தற்போதையச் சூழல் மாறி, தாம் செய்யும் பணிகளில் நிறைவைப் பெற்றுத் தரும், அசத்தியத்தை வெருண்டோடச் செய்து சத்தியத்தை நிலைநாட்டும் ஆக்கப்பூர்வமான, அத்தியாவசியமான ஊடகத்துறை பணிகளில் இளைய சமுதாயத்தை வார்த்தெடுக்க முன்வர வேண்டும்.



அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள 3.5 சதவீதம் இடஒதுக்கீடைத் தனியார் துறைகளிலும் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக ஊடகங்களில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் இருக்கும் வறட்சியைப் போக்க உடனடியாக வழிவகைக் காணப்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும்.



சரி... ஒரு சிறந்த பத்திரிகையாளராக (எழுத்தாளர்) ஆவதற்கு என்ன செய்யவேண்டும்?



இந்தியாவின் சிறந்த பத்திரிகை ஆசிரியர் எனப் பெயர் பெற்ற குஷ்வந்த் சிங் கூறுகிறார்:



"ஒரு புத்தகத்தை நீங்கள் எழுத வேண்டும் என்று விரும்பினால், அத்தலைப்பின்கீழ் குறைந்தது 400 வார்த்தைகளைத் தினந்தோறும் எழுதி வாருங்கள். சில மாதங்களில் நீங்கள் விரும்பிய புத்தகம் தயாராகி விடும்".



சரி என்ன எழுதுவது? எப்படி எழுதுவது என்ற தயக்கம் ஏற்படுகிறதா? அதைக் களைவதற்கும் வழி இருக்கிறது.



ஒரு சிறிய உதாரணம் மூலம் இதனைப் பார்க்கலாம். இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கும் "மது போதை (Alcoholism)" பற்றிய ஒரு சிறிய தேடலை இணையத்தில் பிரபலமான தேடுபொறியான கூகுள் மூலம் தேடுங்கள்.



மதுவினால் விளையும் தீமைகளையும் அதனைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தையும் அதில் சிக்கியவர்களை மீட்கும் விதம் பற்றிய பயிற்சிகளையும் முழுமையாக அறிந்து கொள்வீர்கள்.



மது அருந்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரம் தேவையா?



தேடுங்கள் கிடைக்கும்.



மதுவினால் பாதிக்கப்பட்டவர்கள், இழப்பீடுகள், உண்மைச் சம்பவங்கள், துயர வாக்குமூலங்கள்?



தேடுங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.



இன்றைய நவீன உலகில், துல்லியமான முழு அறிக்கைகளுடன் அமைந்த ஆய்வுக் கட்டுரைகளையும் சிக்கலான பிரச்னைகளுக்குத் தீர்வுகளையும் சொல்வது மிக எளிது.



அனைவரும் இந்தியப் பிரச்னைகளுக்கு மூல காரணம் பெருகி வரும் மக்கள் தொகை தான்(!) என்று ஈனஸ்வரத்தில் கூக்குரல் எழுப்புகையில், மக்கள் தொகை மளமளவெனப் பெருகும் இந்தியாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கட்டுரை எழுதுங்கள். மக்கள் தொகை பெருகப்பெருக வளர்ந்து கொண்டிருக்கும் மனித வளமும் நுட்பமும் சர்வதேச உலகில் சரித்திரம் படைத்துவரும் இந்தியாவின் சாதனைகள் பற்றிப் பட்டியலிடுங்கள். இஸ்லாம் ஏன் குடும்பக் கட்டுப் பாட்டினை எதிர்க்கிறது என்பதனைப் பாமரருக்கும் புரியவையுங்கள்.



குடும்பக் கட்டுப்பாட்டினைக் கையாள ஆரம்பித்ததனால் சீனாவில் இளையவர்கள் குறைந்து முதியவர்கள் பெருகி நாடு அடையும் துன்பங்கள் பற்றியும் எழுதுங்கள். அனைத்தையும் அசைக்க இயலா ஆதாரத்துடனும் உறுதியுடனுடன் எழுதுங்கள்; எழுதிக்கொண்டே இருங்கள்.



நம்மைச் சுற்றி தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகள் பலப் பல. அவற்றில் நடக்கும் அசத்தியங்கள், அநீதிகள், அக்கிரமங்கள் எத்தனை எத்தனை? அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லும் இஸ்லாமிய வழிமுறைகளைக் காண்பியுங்கள்.



இளைய தலைமுறையினரைச் சீரழிப்பதில் ஊடங்களின் பங்கு எத்தனை எத்தனை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டுங்கள்.



இளமையில் கர்ப்பம் தரிப்பதையும், கலைப்பதையும் கூட நாகரீகமெனக் காட்டும் சூழல்களைத் தீயிட்டுப் பொசுக்குங்கள்.



மனிதம் மறந்து மதவெறியினைத் தூண்டும் தீய சக்திகளின் செயல்களை வெட்ட வெளிச்சமாக்குங்கள்.



அவ்வளவு ஏன்? இக்கட்டுரையை வாசிக்கும் பல அன்பர்கள் வார்த்தைகளைக் கோர்த்து எழுதத் தெரியாதவர்களாக இருக்கலாம்.



ஆனால் சிந்தனை எனும் சக்தி நம் அனைவருக்கும் இருக்கிறதே!



எனவே சிந்தியுங்கள். உங்கள் உலகம் என்பது காலைக் கண்விழிப்பதிலிருந்து இரவு கண் மூடி நித்திரையில் ஆளும் வரைதான். உங்கள் உலகில் சஞ்சரிக்கையில் உங்களைப் பாதித்த விஷயங்களைப் பட்டியலிடுங்கள். இஸ்லாம் இதற்குக் கூறும் தீர்வு என்ன என்பதைக் கலந்து ஆலோசியுங்கள். தேடுங்கள். குறிப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய எழுதுங்கள்.



கணினி யுகத்தில் வசிக்கிறீர்கள் என்பதை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். சொந்தமாகக் கணனியும் இணைய இணைப்பையும் இயன்றால் வலைப்பதிவையும் துவக்குங்கள். இயன்றவரையில் பத்திரிகைத் துறைக்கு வர இளையவர்களைத் தூண்டுங்கள்.



இன்றைய உலகம் - இது தகவல் தொழில்நுட்பப் பரிமாற்றக் களம்.



இயன்றவரை நீங்கள் அறிந்த நல்ல விஷயங்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள். அதன் துவக்கம் இதுநாள் வரை முஸ்லிம் சமூகம் தம் குடும்பச் சொத்தாக எண்ணி வந்த இஸ்லாமாக இருக்கட்டும். மனிதனைப் படைத்த இறைவன் அளித்த நெறி மனங்களை வெல்ல வல்லவை.



"மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு சந்தைப் படுத்தப்படும் பொருட்கள் கூட படுவீழ்ச்சி அடைகின்றன. மிகப் பிரபலமான எதிர்காலத்தைத் தரும் என்று கணிக்கப்படும் துறைகளும் குறைகளைச் சந்திக்கும். ஏனெனில் அவை சரியான முறையில், சரியான விதத்தில், மக்களைச் சென்றடைவதில்லை!" என்பதே வியாபார ரீதியிலான நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் சர்வதேச நிபுணர்களின் தத்துவம்.



இங்குக் கருவாகக் கொண்டிருக்கும் இஸ்லாம்கூட அத்தகைய ஒரு பேசுபொருள்தான். மிகுந்த தரம் கொண்ட ஒரு வாழ்வியல் தத்துவத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களே அந்த உயரிய நெறியை உலகிற்குப் பறை சாற்றுவதில் ஏனோ மிகவும் பின் தங்கியுள்ளனர்.



இஸ்லாமிய நெறிகளை அழகிய முறையில் பிறருக்கு எடுத்துரைக்க ஆயிரமாயிரம் வழிகள் உள்ளன. அதில் சிறந்ததாகக் கருதப்படுவது அழகிய விவாதத்தினை ஏற்படுத்தி ஐயங்களைக் களைவதேயாகும். இதன் மூலம் இஸ்லாம் பற்றி பிற மதத்தினர் மனதில் பொதிந்துள்ள பாரதூரமான விஷயங்களைப் பேசி விளக்கங்கள் கொடுக்கலாம். ஓர் அப்பாவி அமெரிக்கருக்கோ அல்லது ஐரோப்பியருக்கோ இஸ்லாம் என்றால் "அச்சுறுத்தக் கூடியது" என்றுதான் தொடர்ச்சியாகப் போதிக்கப்படுகிறது என்ற உண்மை நிலை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?



சத்திய மார்க்கமாம் இஸ்லாம் எளிதில் மனங்களை வெல்லக் கூடியது. சர்ச்சைகள் எழுப்பக்கூடிய தலைப்புகளில்கூட கீழ்க்கண்ட படித்தரங்களில் ஓர் அழகிய விவாதக் களத்தை அமைத்தால் எளிமையானதாக இருக்கும். அதாவது,



இஸ்லாம் என்பது,

- உணர்வுப் பூர்வமானது (Emotional)

- வாழ்வில் நன்னெறியினைப் புகுத்தக்கூடியது (Ethical)

- தர்க்க ரீதியிலானது மற்றும் பகுத்தறிவுக்குப் பொருத்தமானது (Logical)



பிரச்னை என்பது மனங்களிலும் இல்லை. நெறிகளிலும் இல்லை. சென்று சேர்வதில் மட்டுமே உள்ளது. ஆகவே, சத்தியங்களையும் நியாயங்களையும் மக்களிடம் சென்று சேர்ப்பதற்கு உதவியாக எழுத ஆரம்பியுங்கள்; எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்.


பேனா முனைகள், அசத்தியத்திற்கு எதிராக சத்தியத்தை நிலைநாட்ட எழுதிக் கொண்டே இருக்கட்டும்!



புதிய எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்!


உதவியவை:



1. நிஸார் யூஸுப் Day life - JOURNISLT PAGES இதழில் எழுதிய கட்டுரை.

2. http://www.satyamargam.com/index.php?Itemid=130&id=700&option=com_content&task=view

3. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=69&Itemid=53

4. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=376&Itemid=278

5. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=203&Itemid=51

6. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=445&Itemid=53

7. http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=936&Itemid=278

Saturday, August 23, 2008

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்

http://www.omcmanpower.com/profile.htm


Placing the Indian competence in the world map

India’s wealth of human resources puts it in an enviable position. Specially because the quality of the resources available is very high. That there is a perennial demand for qualified Indians, irrespective of socio-political factors, is of no surprise.

The Government of Tamilnadu realized the multiple advantages in meetings this demand. More Indians working abroad would mean greater inflow of foreign exchange, improvement in the quality of life of the families of such Indians and a step towards solving ever-growing unemployment problem. Also there is a large number of Indians aspiring to work abroad.

The Overseas Manpower Corporation Limited (OMC) was thus incorporated in 1978. The chief objective being promoting employment of Indian manpower in foreign countries. Since incorporation, OMC has widened its scope to :

function as recruiting agent of Indian manpower for Employment abroad.
Promote and establish joint industrial ventures aborad-on its own or on behalf of the Government.
Raise necessary financial resources from Indians abroad for projects in India
Promote and takes steps to intensify exports of traditional and non-traditional items.
Sell tickets, on behalf of any or all foreign organizations providing air travels and transport service.
Provide Accident and Health Insurance coverage to Non-Resident Tamils.
Provide foreign exchange for persons recruited abroad for employment and for persons for traveling abroad.


OMC OBJECTIVES

Identifying & Supplying Qualified, Experienced, & Dedicated Human Resource


Arranging for Passport


Arranging for Air Tickets (Domestic & International)


Arranging for Accident & Health Insurance in Association with the New India Assurance Company

BRIEF BACKGROUND


OMC is a limited company established by Government of Tamil Nadu as early as 1978 with an authorized share capital of Rs. 50 lakhs. Its main object is to secure suitable overseas placements for the Indian professionals, skilled workers and others, who are desirous of securing jobs abroad. The Corporation also holds a valid registration certificate issued by Government of India, Ministry of Labour, as required under the Emigration Act, 1983, to perform the functions of a recruiting agency . The Corporation is governed by a Board of Directors comprising the following officials:

1.P.R.BINDHUMADHAVAN I.A.S.

: CHAIRMAN & MANAGING DIRECTOR

2. Tmt. P. SIVAKAMI, I.A.S.
: DIRECTOR (Ex- officio)

3. Tmt. G.Saroja

: DIRECTOR (Ex- officio)
4. Thiru. A. DEVARAJ,
: DIRECTOR (Ex- officio)

OUR RESOURCES & STRENGTH

1. A JOBWISE SEGREGATED COMPUTERISED DATA BANK.
WHY OMC ?
Reputation of being a Government organization which is in the field for the past 25 Years.
The corporation maintains computerized Data Bank in which bio-data of personnel in various disciplines right from Doctors and Engineers down to skilled and unskilled labourers are maintained.
Based on the client's requirement, OMC screens several candidates and gives the best suited shortlisted candidates.
In case of dearth of suitable candidates in its Data Bank, candidates are mobilized through advertisement.
In case of bulk requirement, the entire cost of advertisement is borne by OMC. In other cases, the cost will be shared at 50:50 between OMC and the client.
Being a Government organization, the advertisement released through OMC will be on Government concessional rates, thereby bringing down the cost of advertisement by 15-20%.
Besides advertisement or without resorting to advertisement, OMC issues press releases regarding recruitment, to be published as editorial matter free of cost in Newspapers published from Tamilnadu and adjoining states so as to mobilize candidates.
After the CV's are shortlisted, interview is arranged at Chennai in its own spacious premises. In case of bulk recruitment, interview can be arranged at any centre in India.
OMC undertakes the responsibility of receiving the Delegates at airport and arranging hotel accommodation for them. Since OMC is a corporate member in all the Star hotels at Chennai, the clients enjoy considerable discount in hotel bills for the reservations made through OMC.
OMC holds the finally selected candidates until Visa is arranged and arranges their deployment on the date specified by the clients observing all the required formalities.
Its excellent rapport with various Foreign Missions and Emigration authorities quickens the Visa and Emigration process.
Above all, OMC can arrange to provide well experienced candidates from Government Departments / Public Sector undertakings for employment abroad by arranging leave for them upto 5 years.

இஸ்லாமிக் டெவலப்மெண்ட் வங்கி வழங்கும் கல்வி உதவித்தொகை

The Islamic Development Bank Scholarship:-

The IDB Scholarship is an Interest Free Loan in nature and is awarded to Muslim Students who intend to take admission in First Year of the Professional Degree Course in the fields of Medicine i.e. MBBS, BDS, Pharmacy, Veterinary, Physiotherapy, Nursing including Bachelor Degree in Unani, Ayurvedic & Microbiology or Engineering, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Business Administration and Accountancy. This scholarship is for the entire duration of the course. It will be legal and moral obligation of the students to repay these Loans after completion of their course. This will be in the greater interest of the Community to help other needy students.

Click Here To download The IDB Form (Last Date is 6 October 2008)



The Muslim Education Trust Scholarship:-

The MET Loan Scholarship is offered to financially poor and meritorious students of the Minority Communities pursuing professional degree courses like Medicine, Engineering, Computer Applications, Chartered Accountancy & Business Administration.
The Loan Scholarship will be awarded for a period of Twelve Months every year commencing from the month in which the selection of the candidates has been made.
The MET will decide the number of awards every year according to the availability of the funds.
The eligible candidates will be interviewed by a Selection Committee formed for this purpose.
Click Here To download The MET Form (Last Date is 6 October 2008)




The Student Islamic Trust Scholarship:-

The main aim of the Trust is to extend helping hand to deserving students of the Muslims community through awarding scholarships and C & G programme. The Trust is also determined to chalk out a long term programme for the Muslim youth and the students to make them economically self sufficient by elevating their moral standard and developing their total potentialities.

Click Here To download The SIT Form(Last Date is 6 October 2008)








THE STUDENTS ISLAMIC TRUST
E-3, ABUL FAZL ENCLAVE, JAMIA NAGAR NEW DELHI - 110 025
TEL: 011-26957004, 26941354, 26929354 FAX: 011-26919076
e-mail: sitdelhi@rediffmail.com, sitdelhi@yahoo.com, sitdelhi@gmail.com


http://www.sit-india.org/scholarship.html

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் : இணையத்தளம் துவக்கம்

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் : இணையத்தளம் துவக்கம்

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி 7 முதல் 9 ஆம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற இருப்பதை நாம் அறிந்ததே.

இது குறித்து இணையத்தளம் ஒன்றை வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி துவக்கி வைத்துள்ளார்.

http://www.pbdindia.org

மேலும் விரிவான செய்திக்கு

http://www.indiaenews.com/nri/20080821/140604.htm

மனித நேய சேவைக்காக தமிழக இளைஞருக்கு ஐ.நா. விருது

Chennaiite wins accolade from UN


While most youngsters are finding easy ways to make money, here is an individual who is determined to follow his heart and not mind. Not interested in making a huge fortune he prefers to devote his time to social work.

Twenty four-year-old Saleem Khan, a M. Sc graduate of Biotechnology from New College was recently awarded the prestigious Outstanding Youth Campaign Award at the Fifth Annual Youth Assembly of the UN for his thesis on preserving mangroves at Urur Kuppam (near Adyar). Saleem says, "I have been involved in rehabilitation for tsunami survivors and during that time I got to hear about dying mangroves on the coastal areas. When I went there I realised that this was also because the locals were not taking care of it."

As a part of his project work for his Masters, he took up the subject, and with the help of his professor Mr Sultan Ahmed Ismail and classmate Sheikh Ali, he continued to research on the problem even after completing the course. "People there are not aware of the importance of mangroves. My main aim was to spread awareness regarding its preservation," he adds.

Despite getting numerous offers from various companies and colleges for the post of lecturer, he declined the lucrative jobs, as he believes that contributing to society was more important to him than making money. "I have been following the work of UN from a long time and it is my dream to join the organisation. I got selected to participate in the fifth annual UN Youth Assembly Conference, after which I also submitted my projects under the category of environment in their Millennium Development Goals campaign through their official website," he adds.

In the first week of August, Saleem was informed by the UN about his award. However he could not be physically present to receive it as his visa was still pending with the US consulate. "On August 12, my brother Shah Nawaz Khan received the award on my behalf," he says. Participants from about 40 countries took part in the campaign.

He recently also met Tamil Nadu Chief Minister M. Karunanidhi, who acknowledged his work and extended help if required. "It was truly a great moment for me to be in presence of the chief minister and being recognised for my work. No amount of money could have given me this happiness," he remarks.

"Representing my country on such a huge platform has been a big honour for me. My parents were encouraging from the starting and though many people said that I am wasting my time, they believed in me and today I can proudly show them what I have achieved," says Saleem who now wants to continue research and do a doctorate in environmental politics and policies.



மனித நேய சேவைக்காக தமிழக இளைஞருக்கு ஐ.நா. விருது
கம்பம்,ஆக,23_

மனித நேய சேவைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு ஐக்கிய நாடுகள் சபை யூத் கேம்பைன் அவார்டு வழங்கி கௌரவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள் சபை உலகம் முழுவதிலுமுள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவில் உள்ள ஐ.நா தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த மாவட்டத்தில் இந்தியாவின் சார்பாக தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் கம்பம் நகரை சேர்ந்த உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் ஓய்வு பெற்ற நூலக ஆசிரியர் அம்சத் இப்ராகிம் கான், ஹசினா தம்பதியின் மகன் சலீம் கான் தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்.எஸ்.சி பயோ டெக்னாலஜி படித்துள்ளார்.


நிலையான சுற்றுப்புறச் சூழல் மேம்பாடு என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு மாங்குரோவ் மரங்களை கடற்கரை ஓரங்களில் வளர்க்க வேண்டுமென ஆராய்ந்து ஐ.நா சபையில் வலியுறுத்தினார். மில்லினியம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்களித்ததற்காகவும், மனித நேயத்திற்காகவும் ஐ.நா வில் முதன்முறையாக யூத் சேம்பைன் அவார்டு என்னும் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் சார்பாக அவரது சகோதரர் நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா செயலகத்தில் விருது வாங்கி சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.

Friday, August 22, 2008

திருச்சி : சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


திருச்சி, ஆக. 21: முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கான விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2008-09 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, அவ்விழாவில் முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முதியோர் நலனுக்காக நடப்பாண்டில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இவ்விருதை பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுகளை பெற தங்களது பெயர், முதியோர் நலனுக்காக செய்துள்ள பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்களை, மாவட்ட சமூக நல அலுவலர், எண் 11, அரபிக் கல்லூரித் தெரு, காஜாநகர், திருச்சி 20 என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கலாம்.

"வாழை நாரிலிருந்து துணிகள் தயாரிக்கத் திட்டம்': இயக்குநர் மு.மு. முஸ்தபா

"வாழை நாரிலிருந்து துணிகள் தயாரிக்கத் திட்டம்': இயக்குநர் மு.மு. முஸ்தபா



திருச்சி, ஆக. 21: வாழை நாரிலிருந்து இழைகள் தயாரிப்பதற்குப் பதிலாக, வாழை நாரை நெசவு செய்து துணிகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் மு.மு. முஸ்தபா.

திருச்சி மாவட்டம், போதாவூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

"திருச்சி தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தால் 2005 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உதயம் வாழை ரகத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ரகம் கற்பூரவள்ளி ரகத்துக்கு மாறாக விவசாயிகளிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து மேலும் 2 புதிய வாழை ரகங்களை அறிமுகப்படுத்த ஆராய்ச்சி மையம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில், பல்வேறு நிலைகளில் எம்.எல். சோதனை (மல்டி லோக்கேசனல் டெஸ்ட்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனை நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் புதிய வாழை ரகத்தை அறிமுகப்படுத்த இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.

வாழை மூலம் தயாரிக்கக்கூடிய 12 வகை பொருள்களுக்கான தொழில்நுட்பங்களை இதுவரை கண்டறிந்து உள்ளோம். இதில் நேந்திரம் வாழைக்காய் வருவல், வாழைப்பழத் தொக்கு, உலர்ந்த வாழைப்பழம், வாழைக்காய் ஊறுகாய், வாழைப்பழ பவுடர், வாழை ஜூஸ் என பல்வேறு பொருள்களை தயாரித்து, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமன்றி, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் இந்த பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

வாழைப்பழத் தோலிலிருந்து ஒயின் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பை, அதை ஒரு நவீன தயாரிப்புத் தொழிலாக மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம், பெல்காம் பகுதியில் உள்ள ஓர் கூட்டுறவு நிறுவனத்தின் முயற்சியில் இந்த தயாரிப்பை ஏற்றுக் கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திராட்சை பழத்திலிருந்து ஒயின் தயாரிப்புக்கு கலால் வரி விதிக்கப்படுவது போல், வாழைப்பழத் தோலிலிருந்து தயாரிக்கப்படும் ஒயினுக்கும் விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக கல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாழைத்தண்டு சாறு எதிர்ப்பு சக்தி வாய்ந்தது என்று கண்டறிந்து, தற்போது பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதை எளிதாக ஏற்றுக் கொள்ளும் வகையில் வாழைச்சாறிலிருந்து பவுடர் தயாரித்து, அதை மாத்திரை வடிவில் வழங்குவதற்கான ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாழை நாரை நெசவு செய்து அதன் மூலம் துணிகள் தயாரிக்கும் ஆய்வுப் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதில், வாழை நாரை கிழித்து இழைகள் தயாரிப்பதற்குப் பதிலாக "ரெட்டிங்' என்ற முறையில் வேதியியல் பொருளைக் கலந்து துணிகள் தயாரிக்க முடியும் என்று கண்டறிந்து உள்ளோம்.

தொடர்ந்து, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையமும், மும்பையில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையமும் இணைந்து கூட்டாக ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளோம்' என்றார் முஸ்தபா.

வெஸ்ட் ஆசியா அலுவலக முகவரிகள்

வெஸ்ட் ஆசியா அலுவலக முகவரிகள்

வெஸ்ட் ஆசியா எக்ஸ்போர் & இம்போர்ட் பி லிட்
எண் 55 கிரீம்ஸ் சாலை
அலி டவர்ஸ்
எம்.எஃப், டி பிளாக்
சென்னை 600 006
தொலைபேசி : 2829 2850 / 2829 4789
தொலைநகல் : 2829 2499

செல் : 94441 20277 ( ஜாஹிர் / மீரான் )
pmzakir@westasia.com
A G Ahmed Rifai
Senior Manager


West Asia E & I Ltd
Harilela House
First Floor
Mint Road
Opp GPO
Mumbai 400 001
Tel : 2267 3537
Fax : 2267 3554
Mob : 98 211 27384 Baskar
waei@vsnl.com

C T Pinto , DGM

West Asia Ramnad
Old No 135
New No I 365
Bharathi Nagar
Rameshwaram Road
Ramanathapuram 623 503
Tel : 04567 232 630 /230150 /230530
Fax : 04567 232430

ஏர்இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ள 547 காலியிடங்கள்

ஏர்இந்தியா - இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ள 547 காலியிடங்கள்

நேஷனல் ஏவியேஷன் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்பது இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர்இந்தியா நிறுவனங்கள் 547 காலியிடங்களை அறிவித்துள்ளது. இதன் விபரம் வருமாறு:

வடக்கு பிராந்தியம் - 100 காலியிடங்கள் மேற்கு - 200 காலியிடங்கள்; தெற்கு - 237; கிழக்கு - 35.

தகுதிகள்: வயது 18 முதல் 25-க்குள் இருக்க வேண்டும். பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2-வுக்குப் பின் ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2 முடித்தபின் ஓட்டல் துறையில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் படிப்புகளில் தற்போது இறுதியாண்டு படிப்பவரும் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் குறைந்தது 163 செ.மீ. உயரமும் பெண்கள் 154.5 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். ஆங்கிலம் சரளமாகப் பேசக் கூடியவராகவும் பிராந்திய மொழி ஒன்றை அறிந்திருப்பவராகவும் இருக்க வேண்டும். இந்தி அறிந்திருப்பதும் வரவேற்கத்தக்கது.

கட்டணம்: இந்தப் பணிக்கான கட்டணம் ரூ.300 இதை நேஷனல் ஏவியேஷன் கம்பெனி ஆப் இந்தியா லிமிடட் என்ற பெயரில் புதுடில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு ஆன்லைனில் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரங்களையும் படிவத்தையும் ஆன்லைனில் விண்ணப் பிக்கும் முறைகளையும் www.art india.in தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் செப்டம்பர் 5, 2008.

அரசு அலுவலகங்களில் லஞ்சமா?

அரசு அலுவலகங்களில் லஞ்சமா?

தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்

சென்னை, ஆக. 20- அரசு அலுவலகங்களில் ஊழியர் கள் லஞ்சம் வாங்கினால் தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம். விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் கூறலாம். தொலைபேசி எண்கள்: 0442662 1232, 94440 77666, சென்னை நகரம் : 044 24455089, 9444113058.

சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் பேராசிரியர்!

சன் நியூஸ் நேருக்குநேர் நிகழ்ச்சியில் பேராசிரியர்!


www.muslimleaguetn.com


சன் நிய+ஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., ஆர்.எஸ்.எஸ். கொள்கைபரப்புச் செயலாளர் திருமதி ராதாராஜன் ஆகியோர் பங்கேற்ற அமர்நாத் ஆலய விவகாரம் பற்றிய நேர்காணல் நிகழ்ச்சி, 23-08-2008 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு 25-08-2008 திங்கள் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது - காணத் தவறாதீர்கள

Tuesday, August 19, 2008

The Power of Media - Think and Act

We all know the growth of BJP (with its Hidutva card) in southern stats. The main reason being their ability to handle the media efficiently.

We Muslims throughout the world are still not able to use the media to counteract mis-propoganda about Islam and Muslims.

But one person from Karnataka has taken a serious effort. Read this article about his achievement. Is there anyone to do the same in Tamil Nadu and in other states.

http://www.bhatkallys.com/news/news.asp?AID=6707

My kind request is to all able Muslims is to interact with news papers and other medias by writing to them letters and or articles.

Read that article to find out how they misrepresent the news. one example is : When the Muslims collected and sent some amount to Indian Prime Minister for Kargil fund, it was printed in news paper as "Muslims send fund to Nawas Sherif, Pakistan Prime Minister"

Awake dear Muslims, awake, don't waste your time and energy in fighing among ourselves and just forwarding mails from other with out any thingking.

Wassalam

Peer Mohamed
Webmaster

Saturday, August 16, 2008

Tips for Better Life

Tips for Better Life

1. Take a 10-30 minutes walk every day. And while you walk, smile.
2. Sit in silence for at least 10 minutes each day.
3. Sleep for 7 hours.
4. Live with the 3 E's -- Energy, Enthusiasm, and Empathy.
5. Play more games.
6. Read more books than you did in 2007.
7. Make time to practice meditation, yoga, and prayer. They provide us with daily fuel for our busy lives.
8. Spend time with people over the age of 70 & under the age of 6.
9. Dream more while you are awake.
10. Eat more foods that grow on trees and plants and eat less food that is manufactured in plants.
11. Drink plenty of water.
12. Try to make at least three people smile each day.
13. Don't waste your precious energy on gossip.
14. Forget issues of the past. Don't remind your partner with his/her mistakes of the past. That will ruin your present happiness.
15. Don't have negative thoughts or things you cannot control. Instead invest your energy in the positive present moment.
16. Realize that life is a school and you are here to learn. Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
17. Eat breakfast like a king, lunch like a prince and dinner like a beggar.
18. Smile and laugh more.
19. Life is too short to waste time hating anyone. Don't hate others.
20. Don't take yourself so seriously. No one else does.
21. You don't have to win every argument. Agree to disagree.
22. Make peace with your past so it won't spoil the present.
23. Don't compare your life to others'. You have no idea what their journey is all about. Don't compare your partner with others.
24. No one is in charge of your happiness except you.
25. Forgive everyone for everything.
26.. What other people think of you is none of your business.
27. However good or bad a situation is, it will change.
28. Your job won't take care of you when you are sick. Your friends will. Stay in touch.
29. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
30. Envy is a waste of time. You already have all you need.
31. The best is yet to come.
32. No matter how you feel, get up, dress up and show up.
33. Do the right thing!
34. Call your family often.
35. Your inner most is always happy. So be happy.
36. Each day give something good to others.
37. Don't over do. Keep your limits.

இஸ்லாமிய சமுதாயத்தினர் பாஸிட்டிவ் அரசியலில் ஈடுபட வேண்டும்

இஸ்லாமிய சமுதாயத்தினர் பாஸிட்டிவ் அரசியலில் ஈடுபட வேண்டும்


மதுரை, ஆக. 15: தங்களுக்கான உரிமையைப் பெற இஸ்லாமிய சமுதாயத்தினர் "பாஸிட்டிவ்' அரசியலில் ஈடுபட வேண்டும் என பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் இ.அபுபக்கர் சாகிப் பேசினார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை மனித நீதிப் பாசறை சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

நாட்டின் சுதந்திரத்துக்காக இஸ்லாமியர் ஏராளமானோர் தங்களது இன்னுரைத் தந்துள்ளனர். ஆனால், அது மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைப் போக்கும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை பேணும் வகையிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கடந்த காலங்களில் இஸ்லாமிய சமுதாயத்தினர் "நெகடிவ்' அரசியலில் ஈடுபட்டனர். அதாவது, பாஜகவுக்கு மாற்றாக காங்கிரசையும், தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவையும் ஆதரித்தனர்.

இனிமேல், பாஸிடிவ் அரசியலில் ஈடுபட வேண்டும். ஏனெனில், பிற்பட்ட யாதவ சமூகம் மற்றும் தலித் சமூகம் "பாஸிட்டிவ்' அரசியல் மூலம்தான் உயர்ந்துள்ளது.

மத்தியில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு மாயாவதி பெயரைக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையை எட்ட இஸ்லாமிய சமுதாயமும் "பாஸிட்டிவ்' அரசியலில் ஈடுபடுவது அவசியம் என்றார்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DND20080816001105&Title=Districts+Page&lTitle=U%F4YhPf+%F9Nn%A7Ls&Topic=0&ndate=8/16/2008&dName=U%D5%FBW&Dist=4

கனவு மெய்ப்பட...

கனவு மெய்ப்பட...

கு.சிவக்குமார்


சென்னை, ஆக. 15: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனையொட்டி, பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க கிராமப்புறங்களில் இருந்து சென்னை நகர் நோக்கிப் படையெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு சென்னை நகரில் நீண்டநாள்கள் தங்கி, படித்து தங்களது கனவை நனவாக்கிக் கொள்ள குடும்ப பொருளாதாரச் சூழ்நிலை வாய்ப்பளிப்பதில்லை. இதனால் தங்களது லட்சியம் வெறும் கனவுதான் என்ற விரக்தியில் ஊருக்குத் திரும்பி விடுகின்றனர்.

அரசின் கவனத்துக்கு...:கடந்த ஆண்டு முதல் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அந்தப் பிரிவின் நலத்துறை வாயிலாக தலா ரூ. 25 ஆயிரம் அளிக்கப்பட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் எத்தனையோ ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதை பாராட்டியே தீர வேண்டும்.

அதேசமயம் இந்த இடத்தில் நாம் ஒன்றைப் பற்றி சிந்திக்கத் தவறக்கூடாது. ஏழ்மை என்னும் நோய் சமுதாயத்தின் குறிப்பிட்ட பிரிவை மட்டும் தீண்டிப் பார்ப்பதில்லை. முற்படுத்தப்பட்ட மற்றும் இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களையும் ஆட்டிப் படைக்கிறது. இந்த பிரிவுகளைச் சேர்ந்த எத்தனையோ மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவுடன் பொருளாதாரச் சூழ்நிலையால் படிப்பில் முழுக் கவனத்தைச் செலுத்த இயலாத நிலையில் சென்னை நகரில் சோகத்துடன் உலா வருவதைக் கண்கூடாய் காண முடிகிறது.

இந்நிலையில் இதுபோன்ற மாணவர்களுக்கும் அரசு நிதியுதவி அளித்து உதவிக் கரம் நீட்டினால் ஆண்டுதோறும் இன்னும் ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து இந்த தேசத்துக்கு சேவை புரியப் புறப்பட்டுச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

செயல்பாடு சரியல்ல...:சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் குடிமைப் பணி பயிற்சி மையம் அண்ணா நகரில் அமைந்துள்ளது. அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த பயிற்சி மையம் கடந்த சில ஆண்டுகளாகச் சரிவரச் செயல்படுவதில்லை என்ற அதிருப்தி மாணவர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை உடனடியாக அனுமதித்து முதன்மைத் தேர்வுக்கு படிக்கும் நிலையை கல்வி நிறுவனம் உருவாக்கிக் கொடுப்பதில்லை என்பது மாணவர்களின் முக்கியக் குற்றச்சாட்டு. சென்ற ஆண்டு முதல்நிலைத் தேர்வு முடிவு வெளிவந்த சில நாள்கள் வரை மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கட்டடம் சீரமைக்க வேண்டும், வருமானச் சான்றிதழ் பெற்று வாருங்கள் என பல்வேறு காரணங்களைச் சொல்லி தங்களை இழுத்தடித்து, மன அழுத்தத்துக்கு ஆளாக்கியதாக ஒட்டுமொத்த மாணவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, தாங்கள் அனுமதிக்கப்படும் போது கல்வி நிறுவனத்தின் சில அறைகளில் மின்விளக்குகள் இல்லை என்றும், அந்த அறைகளுக்கு தங்களையே மின்விளக்குகள் வாங்கி பொருத்தச் சொல்லிக் கல்வி நிறுவன நிர்வாகிகள் வற்புறுத்தியதாகவும் சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்வி நிறுவனத்தில் அளிக்கப்படும் உணவும் தரம் குறைந்ததாக உள்ளது. இதனால் கடந்த ஆண்டு சில மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதைக் கல்வி நிறுவன நிர்வாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுபோனாலும் எவ்விதப் பலனும் கிடைக்கப்போவதில்லை என்று அமைதியாக இருந்துவிட்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதைக் கல்வி நிறுவன அதிகாரிகள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டுகளில் நடந்த தவறுகள் இந்த ஆண்டும் தொடராமல் பார்த்துக் கொள்வார்களா அதிகாரிகள்?

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080815133812&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/16/2008&dName=No+Title&Dist=0

சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை-ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவச பயிற்சி
சனிக்கிழமை, ஆகஸ்ட் 16, 2008

சென்னை: சென்னை மனித நேயம் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மனித நேயம் என்ற அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சைதை துரைசாமி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறார். முற்றிலும் இலவசப் பயிற்சி இது.

இங்கு தரமான பயிற்சி, தங்குமிடம், உணவு, உடை, செய்தித்தாள், யோகா வகுப்புகள், போதுமான பாட புத்தங்கள், போக்குவரத்து வசதி போன்றவை ஒராண்டு பயிற்சியின் போது இலவசமாக வழங்கப்படுகிறது.

வருகிற அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் வரும் 18, 19 ம் தேதிகளில் சான்றிதழ்களுடன் நேரடியாக வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு 044 - 24 35 83 73 என்ற எண்ணிலோ அல்லது 99406 - 70110 என்ற செல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://thatstamil.oneindia.in/news/2008/08/16/tn-applicants-invited-for-free-ias-coaching.html

ஓமன் நாட்டில் கலாச்சாரப் பயணம்

ஓமன் நாட்டில் கலாச்சாரப் பயணம்




















































AYUB NABI BURIAL PLACE IN SALALAH ( OMAN )



ayub nabi feet





Friday, August 15, 2008

மஸ்கட் பயணம் - சில நினைவுகள்

மஸ்கட் பயணம் - சில நினைவுகள்

பயண நாட்கள்

ஜுலை 30 மற்றும் ஆகஸ்ட் 1, 2008

வியாழன் மற்றும் வெள்ளி











ரியல் எஸ்டேட் பற்றிய முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம்

ரியல் எஸ்டேட் பற்றிய முதுநிலை பட்டப் படிப்பு அறிமுகம்


சென்னை, ஆக. 14 : இந்தியாவில் முதன்முறையாக ரியல் எஸ்டேட் தொடர்பாக எம்.ஆர்க். (ரியல் எஸ்டேட்) என்ற படிப்பை தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் (மியாசி) கட்டடக் கலை அகாதெமி அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை புதுக்கல்லூரி வளாகத்தில் 1999-ம் ஆண்டு முதல் "மியாசி' அகாதெமி, கட்டடக் கலையில் பி.ஆர்க். பட்டப் படிப்பை நடத்தி வருகிறது.

இந்தக் கல்வியாண்டு கட்டடக் கலை கவுன்சிலின் (கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்சர்) அனுமதியோடு ரியல் எஸ்டேட் துறையில் இரண்டாண்டு எம்.ஆர்க். பட்டப் படிப்பை தொடங்கியுள்ளது.

ரியல் எஸ்டேட் சார்ந்த வடிவமைப்பு, செயல்பாடு, நிதி மேலாண்மை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெறும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

"மியாசி' அகாதெமியின் எம்.ஆர்க். கல்வித் திட்ட ஆலோசனைக் குழுவில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு. ஆனந்தகிருஷ்ணன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வேதகிரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்று "மியாசி' கட்டடக் கலை அகாதெமியின் நிறுவனர் கே. அமீனூர் ரகுமான், இயக்குநர் அல்டாஃப் அகமது ஆகியோர் தெரிவித்தனர்.