Monday, August 11, 2008

யூட்யூப் வீடியோவை இணையிறக்கம் செய்வது எப்படி?

யூட்யூப் வீடியோவை இணையிறக்கம் செய்வது எப்படி?

http://tamizh2000.blogspot.com/2008/08/blog-post_11.html

ismailkani@yahoo.com

யூட்யூப், மெட்டாகஃபே, கூகிள் வீடியோஸ் போன்ற தளங்களில் இருந்து வீடியோக்களை இணையிறக்கம் செய்து மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்வதற்கு எத்தனையோ மென்பொருள்கள் இணையத்தில் இருக்கின்றன.

ஆனால் அவற்றை இன்ஸ்டால் செய்வதற்கு மனதளவில் தயக்கம் இருக்கிறவர்களுக்கான மாற்று முறையை இங்கே கொடுக்கிறேன்.

வீடியோவையும் இறக்கிக்கொள்ளவேண்டும். எந்தவிதமான மென்பொருளையும் இன்ஸ்டால் செய்யக்கூடாது.

அதற்கான வழிமுறை இதோ.


Keepvid
VideoDownloadX
VDownloader
Boom Video
Zilla Tube
TubeG


மேற்கண்ட தளங்களில் ஏதோ ஒன்றில், மூல வீடியோவின் யு.ஆர்.எல் ஐ கொடுக்கவும். பின் எந்த வடிவில் எந்த விதமான வீடியோவாக உங்களுக்கு வேண்டும் என்று உள்ளிடவும்.

அவ்வளவுதான். உங்களது கணினியில் உங்களுக்குத் தேவையான வீடியோ கிடைத்துவிடும்.

Sunday, August 10, 2008

அழகி

http://www.azhagi.com/docs.html#writeup



Award Winning Software Azhagi Type in Tamil in ALL Applications Email, Chat, Document, Print, Publish, Blog and Build WebSites in Tamil
It's Different. It's Special. How?

Azhagi is the leader in providing state-of-the-art transliteration, since 2000. It's transliteration scheme is unique, unrivaled and unmatched.
Easiest and Fastest Tamil Transliterator

With Azhagi, you will find Tamil transliteration natural and intuitive, simple and straightforward, fast and flexible. In a nutshell, if you wish to type in English and get it in Tamil (in any application) in the 'easiest' and 'fastest' mode possible, then Azhagi is the one & only software for you. More details on this, with lots of examples - HERE

The Hindu says

"... it challenges all existing Tamil transliteration softwares for speed, innovation and ease of use ..."

Microsoft Bhasha says

"... is one of the pioneers who have taken Tamil computing to heights quite unscalable by ordinary people. ..."

Should we say more?


அழகி - இதுவரை-யாரும்-கண்டிராத ஒரு தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள். எப்படி என அறிய, இங்கே (http://easy.azhagi.com) சுட்டவும்.

அழகி - தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள்.
உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. விண்டோஸின் 'அனைத்து' செயலிகளிலும் (in 'all' windows applications) நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது. ஒலியியல்(phonetic/transliteration), தமிழ்நெட்99, தமிழ்'தட்டச்சு என்ற 3(மூன்று) விசைப்பலகை முறைகளிலும், 'திஸ்கி' எழுத்துருவில் மட்டுமில்லாது நவீன கால பயன்மிகு 'யூனிகோட்' எழுத்துருவிலும், எளிதாய் தட்டச்சு செய்ய வல்லது.

மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிப்பெருஞ்சிறப்பு ஆகும். உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம். 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (natural, intuitive and straightforward typing). மற்ற சில மென்பொருள்களில் வருவது போல் இவற்றை 'நேங', 'விச்நம்', 'னண்ட்ரி', 'கச்தோரி', 'பொஇ', 'மஞு', 'கட்ரு' என்றெல்லாம் ஒலிபெயர்க்காது அழகி. இது போன்ற உதாரணங்கள் இன்னும் பற்பல. அவற்றை விளக்கங்களுடன் அறிய http://easy.azhagi.com சென்று பார்க்கவும்.

பல தனித்தன்மை ('இரு திரை' ஒலிபெயர்ப்பு உட்பட) வாய்ந்த வசதிகள்/கருவிகள் அழகியில் உண்டு:
• ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே தட்டச்சிடலாம். உ-ம்: dear, easy, meals, queen etc. இவற்றை diyar, eesi, meels, kween என்றெல்லாம் தட்டச்சிடத் தேவையில்லை.
• Reverse Transliteration: 'மாற்று ஒலிபெயர்ப்பு' (தமிழில் தட்டச்சு செய்து அதன் இணையான ஒலியியல் ஆங்கிலம் பெறுவது)
• Word Count: தமிழில் 'சொல் எண்ணிக்கை'.
• Auto-Transliteration: நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம்: வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் 'ஒலிபெயர்க்கலாம்'. மீண்டும் தட்டச்சிட வேண்டியதில்லை.
• Auto-Insertion: அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.
• Pop-up Display: திறந்து வைக்கப்பட்டிருக்கும் எந்த செயலியின் (any open application) கோப்பிலுள்ள ஆங்கில உரையின் இணையான தமிழ் ஒலியியல் உரையையும், ஒரு பட்டனைத் தட்டியே ஒரு தனி பாப்-அப் விண்டோவில் பார்க்கலாம்.
• தமிழ் கற்க, பயில்விக்க Learner's/Tutor's கீ-பேட் உண்டு.
• தமிழ் எண்களைக்கூட எளிதாய் தட்டச்சிடலாம்!

மேலும், யூனிகோட் ஆற்றலினால்,
1. விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சல்களை, எழுத்துரு (font) ஏதும் பதியாமலேயே பார்க்கலாம். விவரங்களுக்கு, http://azhagi.com/uniset.html சென்று பார்க்கவும்.
2. தமிழில் Find/Replace - MS'Word, Excel, Powerpoint என்று பல்வேறு செயலிகளில் - சரளமாய்ச் செய்யலாம்.
3. தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - MS'Word, Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.
4. உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !!!
5. இணைய குழுமங்களில் (online groups) தமிழிலேயே மடலாடலாம் - http://groups.google.com/group/illam
6. கூகிள், யாஹூ போன்ற search engine-களில், தமிழிலேயே தேடலாம். ஓர் உதாரணத் திரைப்பதிவிற்கு (sample screenshot) - இங்கே சொடுக்கவும்.

திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது அழகி. திஸ்கி-தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. யூனிகோட்/திஸ்கி இவை இரண்டிலுமே வலைதளங்கள் அமைக்க இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு (Dynamic font) கொண்டது அழகி. விரிவான, தெள்ளத்தெளிவான உதவிக் கோப்புகளையும் உள்ளடக்கியது அழகி.

மேற்கூறிய சிறப்பம்சங்களால், தனி நபர்கள், உயர்தர நிறுவனங்கள் என்று அழகியின் வாடிக்கையாளர்கள், உலகில் பல்லாயிரம். அது மட்டுமல்லாது, சிறுவர்களும், மிகவும் வயதானவர்களும், தமிழ் பேச ஆனால் எழுத/படிக்க இயலாதவரும், தமிழ் தட்டச்சிடத் துடிக்கும் வேற்று மொழியினரும், கணினி என்றாலே ஒன்றுமே தெரியாதவரும் கூட, எளிதில் விரைவாக விரும்பி தமிழ் கற்று, ஓரிரு தினங்களிலேயே வேகமாக தட்டச்சிட, உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி பெரிதும் உதவுகிறது என்றால் அது மிகை ஆகாது.

‘இரு திரை’ மற்றும் ‘ஒரு திரை’ ஒலிபெயர்ப்பு - அழகியில்


‘இரு திரை’ ஒலிபெயர்ப்பு
‘ஒரு திரை’ ஒலிபெயர்ப்பு

தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலிகளிலும்
அழகியைப் பயன்படுத்தி, MS-Word, Excel, PowerPoint, Adobe PageMaker, Photoshop, Outlook Express, Yahoo! Messenger, Hotmail, Google போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம். அழகியின் சோதனைப் பதிவு கொண்டு அதன் எல்லா அம்சங்களையும் எப்படி பரிசோதித்துப் பார்ப்பதென அறிய, http://azhagi.com/all.html சென்று பார்க்கவும்.

மதுக்கூர்.காம்

மதுக்கூர்.காம் என்ற இந்த இணையதளம் மதுக்கூர் மக்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுக்கூரிலும், இந்தியாவிலும் மற்றும் உலகத்தின் பல இடங்களிலும் வாழும் நமது மக்களை ஒன்று இணைத்து சேதிகளையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ளவேண்டும் மற்றும் பரஸ்பர உதவி மற்றும் சமுதாய உதவிகளை செய்யவேண்டும் என்பதே இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.

www.madukkur.com


info@madukkur.com


webmaster@madukkur.com

Saturday, August 9, 2008

இந்தியப் பெண்கள் சங்கம் - குவைத்

இந்தியப் பெண்கள் சங்கம் - குவைத்


www.iwakuwait.com

பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும் அமைப்பு

பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள உதவும் அமைப்பு

www.toastmasters.org

போலந்து நாட்டில் கல்வி பயில

போலந்தில் கல்வி பயில்வது பற்றிய விபரமறிய

www.howtostudyinpoland.pl

குவைத்தில் செயல்படும் அவேர் செண்டர்

www.aware.com.kw

நீங்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனம் முறையான அனுமதி பெற்றுள்ளதா ?

நீங்கள் தேர்வு செய்யும் கல்வி நிறுவனம் முறையான அனுமதி பெற்றுள்ளதா ?


விபரம் அறிய கீழ்க்கண்ட இணையத்தளங்கள் மூலம் அறியலாம்

www.education.nic.in

www.ugc.ac.in

www.aicte.ernet.in

www.ncte.in.org

www.nciindia.org

www.dec.ac.in

முதல்வன்

முதல்வன்;

- கமால்இ ஜீனத் குழுமம் துபாய். ( 050 8444097)
vkamal@etazenath.com


“அல்லாஹ_ அக்பர் ” (இறைவன் மிகப் பெரியவன்) “அல்லாஹ_ அக்பர் ” (இறைவன் மிகப் பெரியவன்) – அருகிலிருந்த பள்ளிவாசலில் இருந்து தொழுகைக்கான அழைப்பு கேட்கத் தொடங்கியது.

நான் கம்ப்யுட்டரை அணைத்து விட்டு தொழுகைக்காக புறப்பட எழுந்தேன். என்னுடன் பணியாற்றும் எங்களுக்காக தேநீர் தயாரித்து சாதாரண அலுவலகப் பணிகளைச் செய்யும் என்னைவிட பணியில் குறைந்த நிலையிலுள்ள என் நண்பரை அழைத்தேன். நானும் அவரும் சேர்ந்தே போவது வழக்கம்.

படிக்கட்டில் இறங்கத் தொடங்கினோம். எங்கள் முன் காலை விந்திவிந்தி நடந்தவாறு ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை முந்த முயன்றேன். என் நண்பர் என் கையை பிடித்திழுத்து “கொஞ்சம் பொறுமையாக அவருக்குப் பின் செல்வோம் ”என்றார்.
கட்டிடத்தை விட்டு வெளியேறி வெளியே நடக்கும்போதும் காலை விந்திவிந்தி நடந்து சென்ற அந்த ஊனமுற்றவரை நான் முந்திச் செல்ல முயன்றபோதும்;

மீண்டும் “பொறுமையாக அவரை பின்தொடர்ந்தே செல்வோம் ” என்றார். நான் அவரை அதிசயமாகப் பார்த்தேன்.

சாலையை அடைந்தோம்;. தொலைவில் வந்து கொண்டிருக்கும் வாகனங்கள் வரும்முன் எங்களால் வேகமாக நடந்து சென்றோ அல்லது ஓடிச் சென்றோ கடந்து விடலாம் என்ற நிலை இருந்தபோதும்; “வேண்டாம்; அந்த ஊனமுற்றவர் சாலையை கடந்த பின்னேரே செல்வோம்” என்றார். நான் மீண்டும் அவரைப் புரியாமல் பார்த்தேன்;. சாலை வெறிச்சோடியது. எங்கள் முன்னால் சென்ற அந்த ஊனமுற்றவர்; சாலையைக் கடந்து கிழக்கு நோக்கி நடக்க நாங்கள் மேற்கில் பயணித்தோம்.

என் நண்பர் ஏன் அவ்வாறு செய்தார்? என உள்ளம் அறியத் துடித்தது. அவரைப் பார்த்து ““ஏன் நீங்கள் அந்த ஊனமுற்றவரை முந்த வேண்டாம். பின் தொடர்ந்தே செல்வோம் என்றீர்கள்?” ; என்று கேட்டேன்.

அவர் என்னை நோக்கி “அவர் நம்மைப் போல் இயல்பான உடலமைப்புடையவரல்ல. அத்தகைய ஒருவரை நாம் ஒவ்வொரு நிலையிலும் முந்திச் செல்லும்போது அவர் உள்ளம் நம்மை ஆண்டவன் இப்படி படைத்துவிட்டானே ஊனத்துடன்….. இந்த ஊனம் இல்லாமலிருந்தால் அவர்களைப்போல நாமும் வேகமாக கையை வீசி ஸ்டைலாகச் செல்லலாமே என்று மனவருத்தம் அடையலாம். மனிதனின்; உடலில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் ஊனம் ஏற்படக்கூடாது. மனவருத்தம் என்பதும் ஒர் ஊனம் தான்;. மனவருத்தமும் ஒருவருக்கு தன் மேலும்இ இறைவன் மேலும்இ வாழ்க்கையின் மீதும் விரக்தி ஏற்படுத்தலாம். கண்பார்வையற்ற ஒருவர் நம்முடன் இருக்கும்போது இயற்கையை உலக அழகை நாம் வியந்து பேசக்கூடாது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவரின் உணர்வுகளை புரிந்து செயல்பட்டால் அதுவும் ஒரு நற்செயல்தான் ! அதுவும் இறைவணக்கத்தின் ஓர் அங்கம் தான் ” என்றார்.

நான் மெய்சிலிர்த்தேன். நான் அவரை நோக்கி “நான் வேண்டுமானால் பதவியில் முதல்வனாக இருக்கலாம். ஆனால் குணத்தில் நீங்கள் தான் முதல்வன்” என்றேன் உணர்ச்சிவயப்பட்டவனாக. அவர் “அல்ஹம்துலில்லாஹ்” (இறைவனுக்கே புகழனைத்தும்) என்றார்; அடக்கத்துடன் .

இத்தனை நாள் ஒரு சாதாரண ஊழியராக எண்ணியிருந்த என் நண்பர் தான் ஒரு மனிதாபிமனி என்று உணர்த்தியபோது என் உள்ளத்தில் பல மடங்கு உயர்ந்து போனார்.


இஸ்லாமிக் செண்டர்,துபாய்

இஸ்லாமிக் செண்டர்,துபாய்

ISLAMIC INFORMATION CENTRE
P O BOX NO 25020
DUBAI - UAE
Tel : 04 398 6950
Fax : 04 398 6956

E mail : english@islamicinfo.org.ae
www.islamicinfo.org.ae

www.islam-guide.com
www.islamreligion.com



Islamic Organizations:
Also, If you would like more information on Islam, or if you have any questions or comments, you may contact one of the following organizations (Note: To search for addresses of Islamic centers near you, please visit Islamic Finder):


1) The United States:

Islamic Assembly of North America
3588 Plymouth Road, Suite # 270,
Ann Arbor, MI 48105, USA
Tel.: (734) 528-0006 - Fax: (734) 528-0066
E-mail: IANA@IANAnet.org

Islamic Foundation of America
PO Box: 3415, Merrifield, VA 22116, USA
Tel.: (703) 914-4982 - Fax: (703) 914-4984
E-mail: info@ifa.ws

Alharamain Islamic Foundation
1257 Siskiyou Blvd., no. 212,
Ashland, OR 97520, USA
Tel.: (541) 482-1116 - Fax: (541) 482-1117
E-mail: haramain@alharamain.org

Understanding Islam Foundation
11153 Washington Pl., Culver City,
CA 90232, USA
Tel. and Fax: (301) 558-9865
E-mail: info@understandingislam.us

World Assembly of Muslim Youth
PO Box: 8096, Falls Church,
VA 22041-8096, USA
Tel.: (703) 820-6656 - Fax: (703) 783-8409
E-mail: support@wamyusa.org

Islamic Information Institute
of Dar-us-Salam
5301 Edgewood Rd., College Park,
MD 20740-4623, USA
Tel.: (301) 982-9463 - Fax: (301) 982-9849
E-mail: iiid@islamworld.net

Al Jumuah Magazine
PO Box: 5387, Madison,
WI 53705-5387, USA
Tel.: (608) 277-1855 - Fax: (608) 277-0323
E-mail: info@aljumuah.com

2) Canada:

Islamic Information & Da’wah Center International
1168 Bloor Street West, Toronto,
Ontario M6H 1N1, Canada
Tel.: (416) 536-8433 - Fax: (416) 536-0417
E-mail: comments@islaminfo.com

3) The United Kingdom:

Al-Muntada Al-Islami Centre
7 Bridges Place, Parsons Green,
London SW6 4HW, UK
Tel.: 44 (0207) 736 9060
Fax: 44 (0207) 736 4255
E-mail: muntada@almuntada-alislami.org

Jam’iat Ihyaa’ Minhaaj Al-Sunnah
PO Box: 24, Ipswich, Suffolk IP3 8ED, UK
Tel. and Fax: 44 (01473) 251578
E-mail: mail@jimas.org

4) Saudi Arabia:

Alharamain Islamic Foundation
PO Box: 69606, Riyadh 11557, Saudi Arabia
Tel.: (966-1) 465-2210 - Fax: (966-1) 462-3306
E-mail: haramain@alharamain.org

World Assembly of Muslim Youth
PO Box: 10845, Riyadh 11443, Saudi Arabia
Tel.: (966-1) 464-1669 - Fax: (966-1) 464-1710
E-mail: info@wamy.org

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை!

இறைத்தூதர் அவர்களின் இறுதிப் பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.

அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே 'நபியவர்களின் இறுதிப் பேருரை' என்பதாக இன்று அறியப்படுகிறது.

கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)
தொடக்க துதி மொழிகள்

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: 'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: 'நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' (ஸுனன் இப்னு மாஜா 1892,1893)
பிரிவின் முன்னறிவிப்பு

ஒ… மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஒ… மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

பிறர் உடமையைப் பேணுவீர்!

ஒ… மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.

அராஜகம் செய்யாதீர்கள்!

அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான்.

நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

பணியாளர்களைப் பேணுவீர்!

ஒ..மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் அடிமைகள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது, முஹம்மது அந்நபிய்யுல் காதிம் மாஜித் அலீ கான்)

மறுமைக்கு அஞ்சுவீர்!

ஓ… குரைஷிகளே! நாளை மறுமைக்கான தயாரிப்புடன் மக்கள் வரும்போது நீங்கள் உங்கள் பிடரிகளின் மீது உலகச் சுமைகளைச் சுமந்துகொண்டு வந்து விடாதீர்கள். அப்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நான் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்குப் பலன் அளித்திட முடியாது (மஜ்மவுஸ் ஸவாயிது 272/3)
அநீதம் அழிப்பீர்!

அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. வட்டியை அல்லாஹ் தடைசெய்து விட்டான். எனவே, முதலில் (என் குடும்பத்தைச் சேர்ந்த) அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபின் வட்டியைச் செல்லாததாக ஆக்குகிறேன்.

அறியாமைக்கால இரத்தப் பழிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. இனி, பழைய கொலைக்குப் பழிவாங்கும் உரிமை எவருக்கும் இல்லை. இதில் முதலாவதாக என் குடும்பத்தைச் சேர்ந்த ரபீஆ இப்னு அல்ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலை ரத்துச் செய்கிறேன். அறியாமைக் கால கொலை குற்றத்தில் இதை நான் முதலாவதாக தள்ளுபடி செய்கிறேன் (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)

முறைதவறி நடக்காதீர்!

அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமிஇ1789)

உரிமைகளை மீறாதீர்!

ஒரு பெண் தமது கணவரின் வீட்டிலிருந்து அவரது அனுமதியின்றி எதையும் செலவு செய்யக்கூடாது. அப்போது, 'உணவையுமா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'ஆம்! அதுதான் நமது செல்வங்களில் மிகச் சிறந்தது' என்றார்கள். (ஸஹீஹுல் ஜாமிஇ1789, ஸுனன் அபூ தாவூத் 3565)

ஒ… மக்களே! ஒவ்வொருவருக்கும் சொத்தில் அவரவரின் உரிமைகளை அல்லாஹ் வழங்கி இருக்கின்றான். இனி, எவரும் தமது எந்த வாரிசுக்கும் உயில் எழுதக் கூடாது.(நஸாயி 3642, ஸுனன் அபூதாவூத் 2870, 3565, தபகாத் இப்னு ஸஅது)

இரவலாக வாங்கப்பட்ட பொருட்கள் உரியவரிடமே ஒப்படைக்கப் படவேண்டும்; பாலைக் கொண்டு பயன்பெற கொடுப்பட்ட கால்நடைகள் (அவற்றின் பயன்பாடு தீர்ந்தவுடன்) அவற்றின் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; கடன்கள் நிறைவேற்றப்பட வேண்டும்; இழப்பீடுகளை நிறைவேற்ற தலைவனே பொறுப்பாளன். (ஸுனன் அபூதாவூத் 3565, ஜாமிவுத் திர்மிதி 2120, 2121, ஸுனன் இப்னு மாஜா தபகாத் இப்னு ஸஅது, தாரீக் இப்னு இஸ்ஹாக்)

பெண்களை மதிப்பீர்!

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி அடிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

இரண்டைப் பின்பற்றுவீர்!

மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074) (முஅத்தா இமாம் மாலிக்/மிஷ்காத்182. ஸஹீஹுத் தர்கீப் 40.)

எச்சரிக்கையாக இருப்பீர்!

மக்களே! உங்களது இந்த நகரத்தில், தான் வணங்கப்படுவதைப் பற்றி ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். ஆனாலும், அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நீங்கள் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, உங்களது மார்க்க விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! (பிக்ஹு சூரா456. ஸஹீஹ் ஜாமிஇ 7880/முஸ்தத்ரகுல் ஹாகிம். ஸஹீஹுத் தர்கீப் 40)

இன்னும், (மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றியும் உங்களுக்கு எச்சரிக்கிறேன். அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத் தூதர்) நூஹ் அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் எச்சரித்தார்கள். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையேதான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனது (அடையாளத்) தன்மைகளில் எதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்! உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ, (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று இருக்கும். (ஸஹீஹ்ுல் புகாரி 4402)

இறை ஏற்பாட்டை மாற்றாதீர்!

(மாதத்தின் நாட்களை தன் இஷ்டப்படி) முன் பின்னாக்குவதெல்லாம் இறை நிராகரிப்பை அதிகரிக்கும் செயலாகும். ஆதனால் நிராகரிப்பவர்கள்தான் வழிகெடுக்கப்படுகிறார்கள். எனென்றால், அவர்கள் தங்கள் இஷ்டப்படி மாதங்களை முன் பின்னாக்கி ஒர் அண்டில் அம்மாதங்களில் போர் புரிவதை ஆகுமாக்கிக் கொள்கிறார்கள். மற்றோர் ஆண்டில் அதே மாதங்களில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்வதன் நோக்கமெல்லாம் தாங்கள் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கையை அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களையும் தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்குத்தான். (அல்குர்அன்9:37) (தாரீக் இப்னு கல்தூன் 59/2)

அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக காலம், வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்றிருந்த அதன் அமைப்பைப் போன்றே, இப்போதும் சுற்றிவருகின்றது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். இப்படித்தான் வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த அன்று, அவனது புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. மூன்று, தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், நான்காவது ஜுமாதல் உலாவிற்கும் ஷஅபானிற்கும் இடையில் உள்ள ரஜப் ஆகும். (ஸஹீஹுல் புகாரி 4662, ஸுனன் அபூதாவூத் 1942)

சகோதரம் பேணுவீர்!

ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே! ஒரு முஸ்லிமின் பொருள் பிறருக்கு அறவே ஆகுமானதல்ல; மனமுவந்து கொடுத்தாலே தவிர! உங்களுக்கு நீங்கள் அநீதம் இழைத்துக் கொள்ளாதீர்கள் (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, தாரீக் இப்னு கல்தூன் 59/2, பிக்ஹுஸ் ஸீரா 456)

சொர்க்கம் செல்ல இதுதான் வழி!

ஒ… மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமழானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576, முஸ்னத் அஹ்மத், தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு அஸப்கிர், மஆதினுல் அஃமால் 1108,1109)

குற்றவாளியே தண்டிக்கபடுவார்!

ஒருவர் குற்றம் செய்தால் அதற்கான தண்டனை அவருக்கே கொடுப்படும்; மகனுடைய குற்றத்திற்காக தந்தையோ, தந்தையின் குற்றத்திற்காக மகனோ தண்டிக்கப்பட மாட்டார். (ஸஹீஹுல் ஜாமிஇ 7880, ஜாமிவுத் திர்மிதி2159,3078, ஸஹீஹுத் திர்மிதி373,461, ஸுனன் இப்னு மாஜா 3055, ஸஹீஹ் இப்னு மாஜா 1015.)

இஸ்லாம் முழுமையாகி விட்டது!

ஒவ்வோரு இறைத்தூதரின் பிரார்தனையும் (இவ்வுலகிலேயே) முடிந்து விட்டன; என் பிரார்த்தனையைத் தவிர! நான் அதை மறுமை நாளுக்காக என் இறைவனிடம் சேமித்து வைத்திருக்கிறேன். அறிந்து கொள்ளுங்கள்; மறுமை நாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மவுஸ் ஸவாயிது 271/3)

மக்களே! எனக்குப்பின் எந்த ஒர் இறைத்தூதரும் இல்லை; உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் இல்லை. (ளிலாலுஸ் ஜன்னா 1061)

இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)
பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, 'மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம்' என்றார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி 'இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி!' என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)
இவ்வாறு அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ் வருமாறு இறைவசனம் இறங்கியது:'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.)'' (அல்குர்அன் 5:3) (ஸஹீஹுல் புகாரி 4406, 4407, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா, தாரீக் இப்னு ஜரீர், தாரீக் இப்னு கஸீர், அத்துர்ருல் மன்ஸுர்)

Friday, August 8, 2008

ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்தின் ஆபாச எதிர்ப்பு வாரம்

'அருந்தமிழ்நாட்டில் ஆபாசங்கள் எதற்கு?'

http://www.tamilanexpress.com/politics/politics5.asp

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினர், கடந்த ஜூலை 25 முதல்-ஆகஸ்ட் 3 வரையிலான நாட்களை ஆபாச எதிர்ப்பு வாரமாகக் கடைப்பிடித்தனர். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆபாசத்திற்கு எதிராக கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டம், பேரணி என நடத்தினர்.

நாம் கடந்த வியாழனன்று சென்னையில் நடந்த பேரணியை விஸிட் செய்தோம்.

மதியம் 2 மணிக்கு பேரணி துவங்குவதாக அறிவிக்கப்பட்ட தீவுத்திடல் அருகிலுள்ள மன்றோ சிலை அருகே 20 பேர் மட்டுமே கூடி இருந்தனர். நேரம் செல்லச் செல்ல, குழு குழுவாக அமைப்பைச் சேர்ந்தவர்கள் வரத் துவங்கினர். 3 மணிக்கு பேரணியைத் துவங்க போலீஸôர் அனுமதி வழங்கியதால், சரியாக 2.50 மணிக்கு எல்லோரும் பேரணிக்குத் தயாரானார்கள்.

பேரணியைத் துவக்கி வைக்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக அக்கட்சியின் தலைவர் கோ.க. மணி, மன்றோ சிலையருகே 2.55 மணிக்கு காரில் வந்திறங்கினார். அதனைத் தொடர்ந்து சரியாக 3 மணிக்கு பேரணிக்குத் தலைமை வகித்த ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழகத் தலைவர் ஏ.ஷபீர் அஹமத் பேசத் துவங்கினார்.
அவர், ""தமிழ்நாட்டில் எங்கும் ஆபாசம் நிரம்பியுள்ளது.

திரைப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் எதிரொலிக்கின்றன. அரை குறை ஆடைகளுடனான நிகழ்ச்சிகள் சின்னத்திரையை ஆக்கிரமித்துள்ளன. பத்திரிகைகளும் ஆபாசத்திற்கு இடமளிக்கும் விதமான விளம்பரங்களை வெளியிடுகின்றன. சின்னத்திரையில் வரும் காட்சிகள் இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் என எல்லாத் தரப்பினரையும் ஆபாசத்தை நோக்கித் தள்ளிவிடுகின்றன.

மாதா, பிதா, தெய்வம் என்ற வரிசையில் உள்ள ஆசிரியர்கள்கூட மாணவிகளிடம் தவறாக நடப்பதை இன்று பத்திரிகைகள் மூலம் அறிய முடிகிறது'' என்று வேதனைப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பேரணியைத் துவக்கி வைத்துப் பேசிய கோ.க.மணி, ""எங்கப் பார்த்தாலும் ஆபாசம் அதிகரித்து, அருவருப்பு மேலோங்கி வருவதைப் பார்க்க முடிகிறது. அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக் காட்டக்கூடியதாக இந்தப் பேரணி அமைந்துள்ளது.

தொலைக்காட்சியைப் பார்த்து பிஞ்சு உள்ளங்கள், ஆபாச வக்கிரப் புத்திக்குத் தூண்டப்படுகிறார்கள். நாட்டு மக்களுக்கு ஆக்கபூர்வக் கருத்துக்களை கடந்த கால திரைப்படங்கள் சொல்லின. இப்போது அப்படியல்ல கதை, பாடல், உடை நாகரீகம் என எல்லாவற்றிலும் ஆபாசம். சமூகப் பார்வையோடு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பதை திரைப்படத்துறையினர் உணர வேண்டும். ஆபாசத்தை ஒழிப்பதில் மிகுந்த அக்கறை அரசுக்கு உள்ளதால், அரசு இந்த ஆபாசத்தை ஒழிப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்றார்.

இதன் பிறகு மன்றோ சிலையிலிருந்து புறப்பட்ட பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நிறைவடைந்தது. அங்கு ஆபாசத்தை ஒழிக்கக் கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆபாசத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, ""தணிக்கை செய்! தணிக்கை செய்! சின்னத்திரையை தணிக்கை செய்!'' ""ஆன்மீகம் தழைக்கும் அருந்தமிழ்நாட்டில் ஆபாசம் எதற்கு ரோட்டில், வீட்டில்...?''

""தடை செய்! தடை செய்! ஆபாசப் படங்களை தடை செய்!'' ""எரிதழல் ஒன்றை எடுத்து வா தோழா! அரிக்கும் ஆபாசம் தடுக்கவா தோழா!'' ""இருளில் தொலையுது இந்திய இளமை! கருகி அழியுது கன்னியர் பெண்மை'' என்று பல்வேறு உணர்ச்சிபூர்வமான கோஷங்களை ஆண்களும், பெண்களும் எழுப்பிச் சென்றனர்.

நாம் பேரணியில் பங்கேற்ற ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் என்.ஜான் முஹம்மதிடம் பேசினோம். அவர், ""ஆபாசம் எங்கும் தலைவிரித்தாடுகிறது. வெள்ளித்திரை, சின்னத்திரை, இணையத் தளம் என்று எங்கும் ஆபாசம்.

இது கலாசாரத்தைச் சீரழிக்கிறது. ஆணுறை விளம்பரங்கள் மோசமாக உள்ளன. விளம்பரங்களில், குறிப்பாக சுகாதாரப் பொருட்கள் பற்றிய விளம்பரங்களிலும் மோசமான ஆபாசங்கள் இடம்பெறுகின்றன. எய்ட்ûஸ கட்டுப்படுத்த அரசு எடுக்கும் முயற்சியை வரவேற்கிறோம். அதற்காக ஆணுறை வழங்கும் இயந்திரங்களை வைப்பதை எதிர்க்கிறோம்.'' என்று ஆவேசப்பட்டார்.

""ஒளிவு மறைவாக இருந்த ஆபாச மற்றும் மானக்கேடு செயல்கள், இன்று திறந்த வெளியில் நடக்கின்றன. ஃபேஷன் என்ற பெயரில் அரைகுறை ஆடை உடுத்தும் கலாசாரம் இன்று எல்லாத் துறைகளிலும் பரவியுள்ளது'' என்று கொதித்த ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிரணி மாநில துணை அமைப்பாளர் கதீஜா மற்றும் தௌலத் நிஷா ஆகியோர், ""பெண்கள் தாய்மைக்கு முன்னுதாரணம்.

ஆனால் அத்தகைய பெண்களை தரக்குறைவாக தொலைக்காட்சி, திரைப்படங்களில் காட்டுகிறார்கள். வீட்டில் குடும்பத்தோர் தொலைக்காட்சியைப் பார்க்க முடிவதில்லை. அந்த அளவிற்கு ஆபாசம் அத்துமீறி உள்ளது. விளம்பரம் என்ற பெயரில் குழந்தைகள் மனதில் விஷ விதையைத் தூவிவிடுகின்றனர்'' என்று ஆவேசமானார்கள்.

""பழைய திரைப்படங்களில் செய்தி இருந்தது. இன்று ஆபாசம் மட்டும்தான் இருக்கிறது. காசு பார்ப்பதில்தான் குறியாக உள்ளனர் திரைப்பட தயாரிப்பாளர்கள். இது பற்றிக் கேட்டால், "மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்கள். நோயாளிக்கு அவர்கள் விரும்புகிறார்கள் என்று விஷத்தன்மையுள்ள மருந்துகளை ஒரு டாக்டர் கொடுப்பாரா?'' என்று கேள்வி எழுப்பினார் பேரணியில் கலந்துகொண்ட இன்னொரு பெண் ஷீரிமா.

நல்ல சங்கை ஊதியுள்ளனர். சம்பந்தப்பட்டோர்களின் காதுகளில் விழுந்தால் சரி!

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு

துபாயில் வாராந்திர தமிழ் மார்க்க சொற்பொழிவு துபாய் தேரா அஸ்கான் சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்று வருகிறது.

06.08.2008 புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மௌலவி குதுப்புத்தீன் ஆலிம் அவர்கள் 'நபிகள் நாயகம் ( ஸல்)' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் தமிழகப் பெருமக்கள் பலர் அதிக அளவில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கென தனியிட வசதியும் செய்யப்பட்டிருந்தது.

கோட்டைப் பள்ளி

இதே போல் ஒவ்வொரு வாரமும் தேரா கோட்டைப் பள்ளியில் தமிழ் சொற்பொழிவு மற்றும் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

வியாழன் மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் அரபி மொழி மற்றும் திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரபி மொழியினை படிக்காதவர்கள் கூட திருக்குர்ஆனை சிறப்பான முறையில் ஓதுவதற்குப் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் தமிழ் மொழியில் சொற்பொழிவும், மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆன் விரிவுரை நிகழ்வும் நடைபெற்று வருகின்றன.

இதனை ஆவூர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஹஸனி ஒருங்கிணைப்பு செய்து வருகிறார்.

Wednesday, August 6, 2008

வெளிநாடு வாழ் இந்தியர்க்கான இணையத்தளங்கள்

www.gulfindian.com
riyajs2004@yahoo.co.in

www.yahind.com
zia@yahind.com

கண்ணும் உணவும்

கண்ணும் உணவும்

நம் தினசரி உணவுப் பழக்க வழக்க முறைகளிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன, உதாரணமாக பச்சைக் காய்கறிகள் கண்கள் ஆரோக்கியத்திற்கு ஆற்றும் பணிகளைப் பற்றி நாம் சுருக்கமாக பார்ப்போம்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. பார்வைக்கு தெரியும் ஒளியின் நீலமான பகுதிக்குத்தான் கண்களின் விழித்திரை அதிகமாக பாதிக்கப்படுகிறது, இது கண் விழித்திரைக்கு பின்பகுதியில் உள்ள ஆயஉரடய-வை சேதம் செய்யலாம். இந்தப் பகுதிதான் நம் கூர்மையான பார்வைக்கு உதவும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பச்சைக் காய்கறிகளுள்ள வைட்டமின் சத்துகள் (Anti - Oxidants) Macula -வை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது.

பசலைக் கீரை, முருங்கை, அகத்திக் கீரை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் தினசரி உணவுப் பழக்க வழக்கத்தில் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நலம்.

தாவர உணவு வகைகளில் பெறப்படும் இரும்புச்சத்து, இறைச்சியில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட குறைவாகவே உடலில் கலந்தாலும், வைட்டமின் சி-ஆல் இரும்புச் சத்து உடலில் கலப்பது மேம்படுகிறது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. தினசரி சமையல் முறையில் பல வகையான பச்சை காற்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். ஆனால் அதை கூடிய மட்டும் அதன் சத்துகள் குறையா வண்ணம் சமைப்பது அவசியம்.

Anti oxidants

நம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் காரணம் Free Radical fns என்பது அனைவராலும் ஏற்கப்பட்ட மருத்துவ உண்மை, நம் உயிரைத் தக்கவைப்பது பிராணவாயு. ஆனால் அதே பிராணவாயுதான் நம் நோய்களுக்கும், மரணத்திற்கும் காரணம் என்று நம்மில் பலருக்கு தெரியாது.


வைட்டமின் இ, சி மற்றும் ஏ, தக்காளி, திண்ணிய பூக்கோசு வகை, காலிஃப்ளவர், பூண்டு, மிளகு, பசலை, தேயிலை, காரட், சோயா மற்றும் முழு தானிய வகைகளிலிருந்து நாம் Anti-oxidant களை பெறலாம். நிறக்கலவை அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளில் தாவர உயிர்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய்.

காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.

வைட்டமின் ஏ உணவு : தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.

கண் பராமரிப்பில் அமினோ அமிலங்கள் :

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை நோய், க்ளுகோமா என்ற கண் விழி விறைப்பு நோய், குறிப்பாக கண் உள்ளிருக்கும் ரத்தக் குழாய்களை சேதடையச் செய்யும் டயாபெடிக் ரெடினோபதி ஆகியவைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் உடலில் இயற்கையாகவே சுரக்கும் அமினோ அமிலங்கள் அல்லது புரத அமிலங்கள் இந்நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.

உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு அமினோ அமிலச் சத்துகளை வாய் வழியாக கொடுப்பதன் மூலம் சர்க்கரை நோயின் புறவிளைவுகளை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.

கண்கள் உங்களைக் காக்க, நீங்கள் கண்களை காத்துக் கொள்ளுங்கள்

நன்றி : யாழ்

http://pattivaithiyam.blogspot.com/2008/02/blog-post_18.html

வெளிச்சம் தோன்றும்

வெளிச்சம் தோன்றும்

கடந்து போன கசப்பான நாட்களை நினைத்து வருந்தாமல் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்து பயப்படாமல் இன்று செய்யும் காரியத்தில் முனைந்திருப்பவனே புத்திசாலி என்று ஓர் அறிஞர் சொல்கிறார்.

கடந்த காலம் என்பது கனவு போன்றது. அதை மறந்து விடவேண்டும். எதிர் காலம் என்பது நிச்சயமில்லாத ஒன்று. ஆனால் நிகழ் காலம் என்பது நிஜமானது. எனவே இதில் கவனம் செலுத்துபவனே புத்திசாலி என்பது அந்த அறிஞரின் கூற்று.

இன்று என்பது கையிலிருக்கும் ரொக்கம் மாதிரி. நாளை என்பது லாட்டரி சீட்டு மாதிரி. மூன்று காலங்களில் நிகழ் காலமே முக்கியம். அதற்கு கடந்த காலம் ஒரு பாடம். எதிர் காலம் ஒரு லட்சியம்.

இந்த நிகழ் கால வாழ்வின் திட்டம் எதுவாக இருக்க வேண்டும்?

சிக்கனம்தான் முதல் திட்டமாக இருக்க வேண்டும். அளவான செலவு. திட்மிட்ட செலவு. பிறகு அதில் கொஞ்சமாவது சேமிப்பு என்று திட்டத்தை வகுத்தால் வாழ்க்கை நலமாக இருக்கும். நாளை என்ற பயம் நீங்கும். சேமிப்பே நம்பிக்கையூட்டும்.

இதைத் தவிர நம்பிக்கையுள்ள திடமான மனம் அமைய என்ன வழி?

தினசரி கொஞ்சம் தியானம். காலை - மாலை ஐந்து நிமிடம் கூடப் போதும். மனதைப் பண்படுத்தி அதனைத் தறிகெட்டு ஓடவிடாது உங்கள் வசமாக்கிக் கொணடால் நீங்களே வெற்றி வீரர்.

இப்படிப் பல விதங்களில் நம்மை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வதற்குத் திட்டமிட வேண்டும். அதற்கேற்றபடி செயல்பட வேண்டும். நேற்றைவிட இன்று உயர்ந்து பண்பட்டிருக்க வேண்டும். இன்றைவிட நாளை மேலும் உயர்நிலையில் இருக்க வேண்டும்.

நம் முன்னோர்களை விட நாம் நன்றாக வாழ்கிறோம். நாகரீகமாக வாழ்கிறோம்.அறிவியல் சாதனங்களை அனுபவிக்கிறோம். நம் சந்ததியினரை இதைவிட நன்றாக வாழ வைக்க வேண்டும் அல்லவா? அதற்கு நாம் திட்டமிட வேண்டும்.

ஆகவே நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்!

விடி வெள்ளிக்கு சற்று முன்பு இருள் அதிகமாகத்தான் இருக்கும்.

ஆனால் நிச்சயம் வெளிச்சம் தோன்றும்.


http://www.valoothoor.com/

லட்சியக் கவிஞர் இக்பால்

ஏப். 21: இக்பால் நினைவு தினம்

'ஸாரே ஜஹான் ஸே அச்சா' பாடல் எழுதிய
லட்சியக் கவிஞர் இக்பால்


எம்.ஜெ.முஹம்மது இக்பால்
(இக்கட்டுரையாளர் மதம், சமூகம், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் குறித்து எழுதிவருபவர். சமூக நல்லிணக்கத்திற்காகப் பணியாற்றுபவர். துபாய் பொறியியல் நிர்வாக சங்கத் தலைவர். துபாயில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் தலைவர்.)

''மதம் ஒருவரோடொருவர்சண்டை போடச் சொல்லவில்லை.
ஹிந்த் நமது ஜென்ம பூமி ஹிந்துஸ்தான் நம்முடையது''

இந்தியச் சுதந்திர வரலாற்றிலேயே சுதந்திர தாகத்தை மக்களிடையே ஊட்டியவர்களில் கவிஞர்களின் பங்கு மகத்தானது. அதில் அல்லாமா டாக்டர் இக்பால் பங்கு அளப்பற்கரியது.

அல்லாமா இக்பால் அவர்களின் 61-ம் ஆண்டு மறைவு தினம் 2000 ஏப்ரல் 21. அவர்களின் நாட்டுப்பற்று, சமய நல்லிணக்கம், இலட்சிய மனிதன் என அவர் கூறுவது, இளைஞர் சமுதாயத்திற்கு அவர் விடுக்கும் அறைகூவல் எல்லாம் இன்றியமையாததாக உள்ளது.

அல்லாமா இக்பாலின் மூதாதையர்கள் அவரிலிருந்து 150 வருடத்திற்கு முற்பட்டவர்கள், காஷ்மீர் பிராமண பண்டித இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர், முஸ்லிம் சூஃபி ஞானியால் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கொள்கைகளிலும், ஆன்மிகத்திலும் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் சேர்ந்தார். ஷேக் நூர் முஹமதுவின் மகனாக பிறந்த இக்பால் இளம் பிராயத்திலேயே கல்வி, கேள்வி ஞானங்களில் சிறப்புற்று விளங்கினார்கள். பரம்பரை முஸ்லிமாக இருந்தவர்கள் இஸ்லாத்தின் உண்மை, ஞானநெறி போன்றவற்றை மறந்திருந்த அக்கால கட்டத்தில் இஸ்லாமிய ஞான நெறிகளை, கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்த அல்லாமா இக்பால் அவர்கள்,

''மீரும் மீர்ஸாவும்
தம் உள்ளத்தையும் சமயத்தையும்
அரசியலில் மூழ்கடித்து விட்டனர்.
இந்த பிராமணச் சிறுவன் மட்டுமே
அந்தரங்களை அறிந்தவனாக இருக்கின்றான்''

என்று பாடினார்.

இளம் வயது முதலே அறிவிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கிய அல்லாமா இக்பால் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ஒருமுறை கால தாமதமாக வகுப்பிற்கு வரவே, ஆசிரியர் ''ஏன் தாமதம்'' எனக் கேட்க, அதற்கு இக்பால் அவர்கள் ''ஐயா, இக்பால் தாமதமாகத்தானே வரும்'' எனக்கூறி இக்பால் என்ற சொல்லுக்கு புகழ் என்றொரு அர்த்தம் உள்ளது என விளக்கி ஆசிரியரை வியக்கச் செய்தார்.

இந்தியாவின் மிகச்சிறந்த சட்ட நிபுணராக விளங்கிய ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ அவர்கள் அல்லாமா இக்பாலைப்பற்றி
குறிப்பிடும் போது ''உலகின் இக்கால மகா கவிகளில் அல்லாமா இக்பால் தலையானவர். உர்து, பாரசீக மொழிகளில் பாட்டுக்கள், கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த தொழிலாளி. கடந்த 30 ஆண்டுகளுக்கு அதிகமாக நான் அவரை ஒரு முதல்தரமான கவிஞராகவும், சிந்தனையாளராகவும் மதித்து போற்றி வருகின்றேன்'' என கூறுகின்றார்.

''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா''

தாய்நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டதற்கு அல்லாமா இக்பாலின் ''உலகம் முழுவதிலும் சிறந்தது எம் ஹிந்துஸ்தானம்'' என்று அர்த்தம் கொண்ட, இன்றும் எல்லா தரப்பினராலும் எல்லா நிகழ்ச்சியிலும் பாடலாக இன்றி இசையாக இசைக்கப்படுகின்ற ''ஸாரே ஜஹான் ஸே அச்சா-ஹிந்துஸ்தான் அமாரா'' என்கிற பாடல் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.

இந்தியா பல மதங்கள், பல வழிபாடுகள், பல மக்களைக் கொண்டு நாடு. எனவே

''மதம் ஒருவரோடொருவர்
சண்டை போடச் சொல்லவில்லை
ஹிந்த் நமது ஜென்ம பூமி
ஹிந்துஸ்தான் நம்முடையது''

எனப் போற்றி புகழ்ந்தார். மேலும் ''ஓ சிந்தனையற்றவனே, உன் நாட்டை எண்ணிப்பார். மேல்நாட்டில் உன்னை அழிக்க சதி நடக்கின்றது. நடப்பதையும் நடக்க இருப்பதையும் பார். வெறும் பழங்கதை பேசுவதில் என்ன இருக்கின்றது? இதை உணராவிட்டால் இந்திய மக்களாகிய நீங்கள் அழிக்கப்படுவீர்கள். உலகச் சரித்திரத்தில் உங்களின் அடிச்சுவடு இல்லாது போகும்'' என்றும்

என்னரும் இந்தியச் சகோதரர்களே!

''நீங்கள் இத்தோட்டத்தின் பாதுகாவலர்கள். எனவே இதன் பிளவு நீங்க வழிகாணுங்கள். அப்பிளவு என்னும் பேய்க்காற்று செடிகளைப் பாழாக்கி விட்டது'' மேலும் ''நீ இந்தியாவை கண்டதில்லையா? இதயமுள்ள யாரும் போற்றும் நாடல்லவா அது! அதன் ஒவ்வோர் அணுவும் உலகின் மீது ஒளி வீசினாலும், அந்தோ! அது புழுதியிலும், குருதியிலும் கிடந்து தத்தளிக்கின்றதே'' என ஜாவீது நாமா எனும் புத்தகத்தில் தனது மகனிடம் கேட்பதாக எழுதுகிறார். தனது மகன் ஜாவீது இடம் கேட்பது என்பது இளைஞர் சமூகத்திற்கே விடுக்கும் அறைகூவல் அது!

மேலும் ஒரு பாடலின் மூலம் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் போது

(காஜா மொயினுதீன்) க்ஷ¤ஸ்தி
சத்தியத்தின் செய்தியை எந்தப் பூமியில் பரப்பினாரோ,
(குரு) நானக் எந்தப் பூங்காவில்
ஏகத்துவ கீதத்தை பொழிந்தாரோ,
தாத்தாரிய (முகலாயர்கள்) எதைத்
தமது சுய நாடாக ஆக்கிக் கொண்டனரோ,
எது ஹிஜாஸ்வாசிகளை அரபுப் பாலையை விட்டு வந்து
(தன்னகத்தே) குடியேறச் செய்ததோ
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.

பாரஸீக வானிலே உடைந்து கிடந்த
(ஞானியர், கவிஞர்களாய) விண்மீண்கள்,
மீண்டும் ஒளி தந்து ஜொலிக்கச் செய்த
வானம் எங்குளதோ,
ஏகத்துவத்தின் நாதத்தை
உலகம் எத்தலத்திலிருந்து கேட்டதோ,
அரபு நாட்டின் அதிபர் (முஹம்மது (ஸல்)) அவர்களுக்கு
தண்ணென்ற பூங்காற்று எங்கிருந்து வீசியதோ,
அதுவே என் தாய்த்திரு நாடு,
அதுவே என் தாய்த்திரு நாடு.

மூஸா(அலை) இறைவனுடன் பேசிய
ஸீனா மலை உலகின் இதயமாகும்.
நூஹ§ (அலை) அவர்களின் கப்பல் (கடைசியில் வந்து)
முகாமிட்டுத் தங்கிய ஜுதி மலையும் சிறப்புடையதே!
(இது போலவே) வானமளாவ வளர்ந்து மாளிகை போல்
அழகு தந்து நிற்கும் இமயமலை எங்குளதோ,
எதன் சாரலில் வாழ்வது சொர்க்க வாழ்வோ
அதுவே என் தாய்த்திரு நாடு?
அதுவே என் தாய்த்திரு நாடு.

என தாய் நாட்டின் மீது உள்ள நேசத்தை பற்றி பாடலின் வாயிலாக கூறுகின்றார்.

அரசியல்

சிறப்பு மிக்க அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவராக 1930-ல் அல்லாமா இக்பால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931-ல் லண்டனில் நடந்த 2-வது வட்ட மேஜை மாநாட்டிற்கு இக்பால் அவர்கள் ஒரு பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தார். அவர்கள் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சந்தித்த நேருவிடம் முஸ்லிம்கள் நலம், சிறுபான்மையினர் நலம் இவற்றை எல்லாம் எடுத்துக்கூறி சுதந்திரம் பெற்ற பிறகு இவையெல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என கூறினார், அவருடைய கருத்துகள் நேருவின் அயல் நாட்டு கொள்கைகளில் மிகவும் பிரதிபலிக்கவே செய்தது. அல்லாமா இக்பால் மரணப்படுக்கையில் இருந்தபோது பஞ்சாபில் கஞ்ச் மஸ்ஜித் தகராறு விஷயமாக முஸ்லிம்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளை அடக்குவதற்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அதை அறிந்து வேதனையடைந்த அல்லாமா டாக்டர் இக்பால் இயலாத இந்த நிலையிலும் ''என்னை இக் கட்டிலோடு தூக்கிக்கொண்டு போய், கலவரம் நடக்கும் இடத்தில் வையுங்கள் துப்பாக்கி குண்டு முதலில் என் இதயத்தை துளைக்கட்டும். அப்பொழுதாவது ஒற்றுமை நிலைக்கட்டும்'' என உணர்ச்சி வசப்பட்டு கூறினார். பிற சமய மக்களையும், மதங்களையும் மதித்து வாழவேண்டும் என்று அல்லாமா இக்பால் அவர்கள் கூறினார். திருக்குர்ஆன், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அடிப்படையில் மாற்று மதத்தினவர்களிடம் சுமூகமாக, ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனை வலியுறுத்தினார் கவிஞர்.

சமய நல்லிணக்கம்

இஸ்லாத்தில் முழுதும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு திருகுர் ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வு முறையையும் செம்மையுடன் பின்பற்றிய கவிஞர் நபியினை தரிசிப்பது என்பது நம் உடலை அவர்கள் இட்ட கட்டளைகளுக்கு உட்படுத்தி மனித நேயத்துடன் நடப்பது எனவும், இறையினை தரிசிப்பது நபியினால் போதிக்கப்பட்ட சொல், செயல்களை பின்பற்றி, இறையோடு சம்பந்தப்படும் கருணை, இரக்கம் முதலிய குணங்களை நம் மனதுள் வளர்த்து உலகிலும் அவை நிலவும்படி செய்தல்தான் என்கிறார். இஸ்லாமிய சமாதான அடிப்படையில், சாந்தி நிலவச் செய்தால் உலகில் அமைதி நிலவும் எனக்கூறும் கவிஞர், பிற சமயங்களை அன்புடன் நோக்கினார். கிருஷ்ணபகவானின் கீதை பெரிதும் அவரை கவர்ந்திருந்தது. ஹிந்து சமுதாயத்தை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும் எனக் கூறிய கவிஞர், அலஹாபாத் முஸ்லிம் லீக் மகாநாட்டில் அவர் எழுப்பிய உரை ''பிற வகுப்பினரிடம் கெட்ட எண்ணங்கொண்ட எந்த வகுப்பும் கீழ்த்தரமானது; வெறுக்கத்தக்கது. பிற வகுப்பினரின் பழக்கவழக்கங்களுக்கும் சட்ட திட்டங்களுக்கும் நான் மரியாதை காட்டுகின்றேன். அவசியமேற்படின் திருக்குர் ஆன் கட்டளையிடுகிறபடி அவற்றை பாதுகாப்பது என் கடமையாகும். எனினும் என் வாழ்க்கை, நடத்தை ஆகியவற்றின் உற்பத்தியாக விளங்கும் வகுப்பிடம் நான் அன்பு கொண்டுள்ளேன்; அவ்வகுப்பு தன் மதம், தன் இலக்கியம், தன் கலாச்சாரம் ஆகியவற்றைத் தந்து எனது உணர்ச்சியில் ஜீவசக்தியாக நின்று நான் இன்றுள்ள நிலைக்கு என்னை உயர்த்திற்று.

மேலும் ஒரு பாடலில்

நான் கோயிலுக்கு மரியாதை செய்கிறேன்;
கஃபாவின் முன் அடிபணிகிறேன்.
என் மார்பில் பூணூல் உண்டு;
என் கையில் ஜெபமாலை மிளிர்கிறது.

என தனது உரையின் மூலமாகவும், பாடலின் மூலமாகவும் தனது சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

சிறப்பு மிக்க உர்தூ, பாரஸீக சிந்தனையாளர் ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரூ ஒரு கடிதத்தில் அல்லாமா இக்பாலை பற்றி குறிப்பிடுகின்றார்.

''இக்பால் முஸ்லிம் தத்துவத்தையும், முஸ்லிம் கலைப்பண்பையும், முஸ்லிம் தீரச் செயல்களையும் பற்றி அதிகம் எழுதியுள்ளார் என்பது உண்மைத்தான். ஆனால் மில்டனைக் கிறிஸ்த்தவக் கவிஞன் என்று கூறி அவர் கவிதைகளை கட்டுப்படுத்தவோ, காளிதாஸனை ஹிந்து சமயக் கவி என்று கூறி அவர் கவிப் பெருமைக்கு வேலியிடவோ யாரும் முயன்றதில்லை; மற்ற மதத்தினரும் இதே காரணத்திற்காக இக்கவிஞர்களின் பெருமையைக் குறைத்துக் கூறியதுமில்லை. இக்பால் முஸ்லிம் சரித்திர வெற்றிகளையும் கலாசார சாதனைகளையும் குறித்து எழுதினால், அதற்காக முஸ்லிமல்லாதவர் அவரைக் குறையாக மதிப்பிட்டு விட முடியாது.

''ஊணாலும் உடலாலும் பொருளாலும் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். மந்தமாய் இருத்தலின்றிப் பூரண மனோ எண்ணத்துடனும் சக்தியுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வரவேண்டும். போலி ஒற்றுமை நிலைக்காது. உள்ளம் பொருந்த ஒற்றுமையாய் இருங்கள். ஒருவர் அனுபவிக்கும் இன்பத்தை அனைவரும் நுகர ஆவன செய்வது நன்மைபயக்கும். நல்லவற்றையே சிந்தியுங்கள். நல்லனவே செய்யுங்கள். வல்லவனுக்கு இது உகந்தது'' என மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலானா அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்கள் மனிதர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி கூறுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஆன்மிகம்

ஆழ்ந்த நாட்டுப்பற்று கொண்டும், இளைஞர்களை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்ட கவிஞர் இக்பால் அவர்கள், இளைஞர்கள், செயலாற்றுவதில் முழு கவனம் செலுத்த வேண்டும், அயராமல் உழைக்க வேண்டும், நாட்டைச் சீர்படுத்த வேண்டும் என்று எப்பொழுதும் இளைஞர்களை ஊக்குவிப்பவர்களாக இருந்தார். மனிதனின் அகமிய வளர்ச்சிக்கு அன்பு, தேவையற்ற உலக ஆசைகள் பற்றிய அக்கறையே முற்றுமற்றிருப்பது, தீரம், சகிப்புத்தன்மை, உணவு தேடல், திறனை வளர்த்தல், ஆகியன முக்கியமானவை என்றார். லக்ஷ¤யங்களையும், மதிப்புகளையும் உண்டாக்கி அவற்றை எய்த முயற்சிப்பதே அன்பின் உன்னதமான படித்தரமாகும் எனக்கூறும் கவிஞர் அச்சம், யாசகம், அடிமைத்தனம், சாதி பிரிவு, உயர்குலம், தாழ்குலம், பேதம் ஆகியவை களையப்பட வேண்டும் என்கிறார். பொதுவாக சட்டங்களுக்கு கீழ்படிந்து, தன்னை கட்டுப்படுத்தி, இறைவனின் பிரதிநிதித்துவத்தை எய்துதல் மனிதனுக்கு அவசியம் என்கிறார் அல்லாமா இக்பால் அவர்கள்.

சுதந்திர வேட்கையூட்டிய, இளைஞர்களை எழுச்சியூட்டிய பாரதியும், இக்பாலும் இந்திய மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் முன்பே இயற்கை எய்தினார்கள். இந்தியா சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர்கள் கனவு கண்ட இலக்ஷ¤ய இந்தியா, இலக்ஷ¤ய இளைஞர்கள் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி. சமுதாய விஞ்ஞானிகள் தோன்ற வேண்டும், சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மத ஒற்றுமை வளர வேண்டும்.

''மனித இனம் ஒரே இனம். சாதியெனும் உயர்வு, தாழ்வு ஒழிய வேண்டும். இதைக் கடமையாகவும் கொடுமையாகவும் கடைப்பிடிப்பவர்கள் அழியவேண்டும். இறைவன் மனிதனில் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை. அதன்படி தண்டனை கொடுப்பதில்லை. மனிதனின் உள்ளத்தையே இறைவன் நோக்குகின்றான். ஒற்றுமை, சுதந்திரம், சகோதரத்துவம் மனிதனுக்குள் இருக்க வேண்டும். மனிதனின் உள்ளம் பாற்போல் இருக்க வேண்டும். இவனே ஜயம் பெற்றவன்'' என நபி(ஸல்) அவர்களின் திருப்பேரர் மகத்துவமிக்க இமாம் ஜமாலிய்யா சையது கலீன் அவன் மௌலான அல் ஹஸனிய்யுல் ஹாஷிமிய்(ரலி) அவர்கள் மனித இனத்தில் ஏற்ற தாழ்வுகளை இல்லை என்பதை அழகாக எடுத்தியம்புகிறார்கள்.

அல்லாமா இக்பால் அவர்கள் கூறுகின்ற ஒவ்வொரு மனிதனும் சிறிய அளவில் ஒரு சிருஷ்டிகர்த்தனே. இச் சிருஷ்டி சக்திகளைப் பாழாக்குவது பெரும் பாவமாகும்.

''செயலாற்றுவோர் முன்னேறுகின்றனர்
ஒருக்கணமவது ஓய்பவர்கள்
சதா சுழன்றுகொண்டிருக்கும்
கால சக்கரத்தில் சிக்கி நசுக்குண்டு விடுகின்றனர்''

என்று கூறும் கவிஞர்

''ஹே, இந்தியாவே,
உன் நிலை என்னை சுழலச்செய்கிறது
கதைகளிலெல்லாம், உன் கதையே வெகு துயரமானது''

என்று தனது நாட்டைபற்றி ஆதங்கப்படுகின்றார்.

''இந்தியர்களே! வானத்தின் அங்கியுள்ளே
இடி மறைந்திருக்கிறது.
இப்பாரத பூமியின் புல்புல் களான நாம்
கவலையற்று நம் கூடுகளில் தூங்கிக்
கொண்டிருக்க இதுவன்று நேரம்''

என்று இந்தியர்களை விழிக்கச்செய்கின்றார்.

மேலும் அவர் வடித்த இதய ராகம் இன்றைய சூழலில் எவ்வளவு பொருந்தும்.

''என்னருமை மக்களே!
இப்பூமியில் ஒரு புதிய தேவாலயத்தை
அன்புக்கோயிலை,
பரஸ்பரம் ஒருவரையொருவர்
நேசிக்கச் செய்யும் நிலையத்தை
எழுப்புவோம் வாரீர்!''

என தன் தாய் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.

நம் இந்தியர்கள் சாதி, மத இன பேதமின்றி ஒன்றுபட்டு, இலக்ஷ¤ய கவிஞர், சிந்தனையாளர், தத்துவஞானி அல்லாமா டாக்டர் இக்பாலின் வார்த்தைகளை செவியுற்று புதியதோர் இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் ஒன்றுபடவேண்டும் என்பதையே இந்த 60-ம் ஆண்டு நினைவு தினத்தின் செய்தியாக கொள்வோம்.

http://www.ambalam.com/idhal/special/2000/April/special23_03.html

Tuesday, August 5, 2008

சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் பயிற்சிகள்

கர்ப்பிணிகள் தூங்குவது எப்படி ?

சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை

சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி

சிங்கப்பூரில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை சிறப்பு நிகழ்ச்சி 23.08.2008 சனிக்கிழமை மாலை 2 மணி முதல் 8 மணி வரை முஜாஹிதீன் பள்ளிவாசல் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் தொகுத்து வழங்குகிறார்.நிகழ்ச்சியில் பங்கேற்க தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண் : 9722169 / 98868849 / 92282984 / unarvaiunnai@eduquest.com.sg




Launch of Online Registration for Indian Nationals in Kuwait

The Embassy of India announces the launch of Online Registration for Indian Nationals based in Kuwait with effect from August 15, 2008. All Indian nationals are encouraged to visit the Embassy website http://indembkwt.org/onlineregister.php in this regard and register themselves on the Online Registration Form.

அமீரகத்தில் பணிபுரியும் எமனேசுவரம் ஜமாஅத்தினர்

அமீரகத்தில் பணிபுரியும் எமனேசுவரம் ஜமாஅத்தினர்

ஷேக் அப்துல் காதர் - 050 4834 582

அஸ்லம் - 050 5722 456

அலாவுதீன் ( பொறியாளர் ) - 050 4904950 ராசல் கைமா

தாரிப் மைதீன் ஷார்ஜா - 050 7570 933

அக்பர் 050 7629 464

சையது ஏபிஎஸ் 050 784 7708

ஷேக் 050 8488 042

சகுபர் 050 4984 653

ரசாக் 06 8020 499

ஹபீப் - 050 521 86 74

கனி - 050 845 26 81

புகாரி 050 8452 681

பஷீர் 050 5461 938

அயூப் -

அஸ்மி - 050 872 6988

ரயில்வே முன்பதிவு குறித்து அறிய தகவல் எண் 139

ரயில்வே முன்பதிவு குறித்து அறிய தகவல் எண் 139

வசந்தம்

வசந்தம்

காலாண்டிதழ் ( குவைத் )

ஆசிரியர்

எம்.ஏ. அப்துல் முஸவ்விர்

தொடர்புக்கு

அஞ்சல் பெட்டி எண் 1613
சபாத் 13017
குவைத்

தொலைபேசி : 2444116 / 117

தொலைநகல் : 2400057

மின்னஞ்சல் : musawir@ipc-kw.com

www.ipc-kw.com

துபாயில் டி. ஃபார்ம் பயில

துபாயில் டி. ஃபார்ம் பயில

துபாயில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஜ்மானில் உள்ள கல்ஃப் மருத்துவ பல்கலையில் டி.ஃபார்ம், பி.பி.டி உள்ளிட்ட படிப்புகள் பயில குறைந்த இடங்களே உள்ளன.

கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழகம்
அஞ்சல் பெட்டி எண் 4184
அஜ்மான்
ஐக்கிய அரபு அமீரகம்
தொலைபேசி : 06 743 1333
தொலைநகல் : 06 743 1222

மின்னஞ்சல் : admissions@gmcajman.com
இணையத்தளம் : www.gmcajman.com

நீதியின் குரல் - மின்னிதழ்

நீதியின் குரல் - மின்னிதழ்

KUWAIT NEETHIENKURAL AUGUST ISSUE

http://neethienkural.googlepages.com/home


http://neethienkural.googlepages.com/home


தொடர்புக்கு :

villupuramshaji@gmail.com

sithima@gmail.com

சுற்றுச்சூழல் குறித்த ஆங்கில மாத இதழ்

Society & Environment
creating Green communities for Better Tomorrow

Monthly Magazine


Editor & Art Director

Seema Sangra

Society & Environment
P O Box NO. 28399
Dubai - UAE
Tel : 04 332 6666
Fax : 04 332 6777

E mail : jacob.zayedprize@gmail.com

Zayed Int'l Prize for the Environment
P O Box 28299
Dubai - UAE
Tel : 04 332 6666
Fax : 04 332 6777

E mail zayedprz@emirates.net.ae
www.zayedprize.org.ae

பெண் முதல்வர் / கல்வி ஆலோசகர் தேவை

பெண் முதல்வர் / கல்வி ஆலோசகர் தேவை

தமிழகத்தின் பிரபல சமுதாயக் கல்லூரிக்கு பெண் முதல்வர் மற்றும் கல்வி ஆலோசகர் ( ஆண் ) தேவை.

ஓய்வுபெற்றவர்கள் கல்வி ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பது விரும்பத்தக்கது.

உடன் தங்களைப் பற்றிய குறிப்புகளை அனுப்பி வைக்கவும்

muduvaihidayath@gmail.com

Monday, August 4, 2008

குவைத் தமிழ்.காம்

குவைத் தமிழ்.காம்


குவைத்திலிந்து மாதந்தோறும் வெளிவரும் இலவச தமிழ் இதழ்

kwttamilcom@yahoo.com

P O Box No 1515
Safat 13015 Kuwait
Tel : 7466289/9165899/7172518
kwttamilcom@yahoo.com


9165899
7172518
6137993

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்


வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்
41 பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர்
சென்னை 600 098

விலை ரூ. 50

குவைத் தமிழ் முரசு

குவைத் தமிழ் முரசு

பிளாட்டினம் பிரிண்டிங் பிரஸ்
ஓமன் எக்ஸ்சேஞ் அருகில்
டாலர்கோ எக்ஸ்சேஞ் கீழ்தளம்
முர்காப்
குவைத்

தொலைபேசி : 2427642 / 9287527

platinum_kwt@yahoo.com

ஐக்கியப் பொருளாதாரப் பேரவை மாத இதழ்

UNITED ECONOMIC FORUM Bulletin

Price Rs. 10

The monthly magazine from United Economic Forum

The Secretary
United Economic Forum
Ali Towers
D First Floor
No 55 Greems Road
Chennai 600 006
Tel : 28295445

மகிழ்ச்சியான குடும்பம்

மகிழ்ச்சியான குடும்பம்

ஷேக் முஹம்மத் காரக்குன்னு

தமிழில் : கே. எம். முஹம்மது

வெளியீடு

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
iftchennai12@gmail.com
www.iftchennai.org


விலை : ரூ. 40

வெளியீட்டெண் : 180

காணாமல் போன ஒட்டகம்

காணாமல் போன ஒட்டகம்
( கல்வி குறித்த கட்டுரைகளின் தொகுப்பு )

தொகுப்பாசிரியர்

பேரா மு அப்துல் சமது எம்.ஏ. எம்.பில்

வெளியீடு

I.O.C. அறக்கட்டளை
431 நேதாஜி சாலை
ஈரோடு 638 001
தொலைபேசி : 0424 - 2222879 / 229 2228
98 431 81333

தியாகத்தின் நிறம் பச்சை

தியாகத்தின் நிறம் பச்சை
( இந்திய சுதந்திரப் போரும் இஸ்லாமியர் பங்களிப்பும் )

எம். அப்துல் சமது
முதுநிலை விரிவுரையாளர்
தமிழ்த்துறை
ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
உத்தமபாளையம் 625 533

ஓமன்

ஓமன் சுற்றுலாத்துறை

www.omantourism.gov.om
info@omantourism.gov.om


www.omanrealestate.org


பத்திரிகை

www.timesofoman.com

THURSDAY

THURSDAY

Weekly Treat by TIMES OF IMAN

Published by

MUSCAT PRESS & PUBLISHING HOUSE
POST BOX 770
POSTAL CODE : 112
RUWI
SULTANATE OF OMAN

TEL : 248 11 953
FAX : 248 13 153

E MAIL : thursday@timesofoman.com

துபாயில் தராவீஹ் தொழுகையினை நடத்த தயாராய் இருக்கும் தமிழக ஹாபிழ்

Assalamu Alaikkum.

This is Soofi Hussain working in Trans Gulf Electro Mechanical (Al naboodah group of companies)as a Commercial Assistant.

i have memorised Holly QURAN (AL -HAFIZ). I would like to conduct Taravih prayer during the Ramzan.so if u find any vacancy for tat i kindly request u to inform me.
Presently i am staying at Hor Al Anz(near emirates post office)

Wassalam
Regards,

Al-Hafiz M.A. Soofi Husaain
050-1691740

Muslims haven't availed of constitutional rights: justice Ahmadi

Muslims haven't availed of constitutional rights: justice Ahmadi


http://www.yahind.com/news/directory.php?id=1495


New Delhi, Aug 2 (IANS) With former Indian chief justice A.M. Ahmadi saying Muslims have let down the constitution by not availing of rights enshrined therein, a book launch event here Saturday turned into an occasion for introspection.



Ahmadi, in his no-nonsense address at the city's India Islamic Cultural Centre (IICC), urged the gathering of around 50 Muslims drawn from different walks of life to use constitutional rights to their advantage.

'We have let down the constitution, the constitution hasn't let us down. We have not used our constitutional rights to our advantage. We have not seriously tried to avail our legal entitlements,' Ahmadi said after releasing a book titled 'A Guide To Uplift Minorities' by the city-based Human Welfare Trust.

The book is a collection of welfare schemes by the central and state governments meant for Muslims and other minority communities, and elaborates how to avail of them.

Ahmadi said the Indian constitution had put in place a system providing equal opportunities to all, and one needed to make concerted efforts to use them for socio-economic and political advancement.

He said lack of education among Muslims was a major concern and was acting as a deterrent in their path to all round advancement.

'Religious education is a must, but secular education is equally a must. There can be no bigger social service than educating the community,' said Ahmadi.

'Educating our female lot is more important. An educated mother means an educated family. We must concentrate on educating our community, particularly women.'

The upliftment of Indian Muslims, who account for over 138 million of the country's billion plus population, has become a major issue of debate ever since Justice Rajinder Sachar submitted his report on the condition of minorities in India in November 2006.

Maulana Jalaluddin Umari, president of Jamaat-e-Islam Hind (JIH), a religious organisation, also underlined the need for the community's educational and social emancipation through hard work.

'Instead of depending upon others, the community must come forward and do the needful to educate people, and help the needy. Weaker sections need to be helped out,' Umari said.

Prime Minister Manmohan Singh had set up the committee in March 2005 to evaluate the socio-economic and educational status of minorities, in particular Muslims.

The committee said that 25 percent of Muslim children in the 6-14 year age group have either never attended school or have dropped out, while in premier colleges only one out of 25 undergraduate students and one out of 50 postgraduate students is a Muslim.

- IANS


மிகவும் சரியாக சொல்லியிருக்கிறார் நீதியரசர் அஹமது,

உலக் கல்வியை உதாசீனப்படுத்த இஸ்லாமா சொன்னது? அல்லது இறுதித்தூதர் சொன்னார்களா?

இஸ்லாமிய கல்விக்கும் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம் - மதிப்பு - மரியாதைகளை 'உலக கல்விக்கும்' கொடுத்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்குமே.
மிகச்சிறுபான்மையினராக வாழ்ந்த முந்தைய இஸ்லாமிய சமூகம், மிக்க வலிமை வாய்ந்த்ததாக எப்படி விளங்கியது? அப்பொழுது அவர்கள் பின்பற்றியது - நாம் தற்போது பின்பற்றும் அதே குர் ஆன் தானே?

படியுங்கள் என்று திருமறை கூற்றுப்படி பாரசீக, இந்திய, சீன மற்றும் கிரேக்க மொழிகளில் வெளியான அறிவியல், கணிதம் மற்றும் தத்துவ நூல்களை கற்று தேர்ந்தனர். அத்துறைகளின் வளர்ச்சிக்கும் தங்களின் பங்களிப்பை அளித்தனர். வான் கோளங்களின் ஆய்வியல் (astromomy), புவியியல், கணிதவியலில் புதிய பிரிவுகளை (aljebra) உருவாக்கினர் - அதனால்தான், இஸ்லாம் உலகெங்கும் விரைந்து பரவியது.
ஆனால் 15 நூற்றாண்டைச்சார்ந்த இஸ்லாமிய கல்விமான்களோ, படியுங்கள் என்று குர்ஆன் கூறியது இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி மட்டுமே என்று பொருள் விளக்கம் செய்து 'மறுமையில் மகிழ்ச்சியாக வாழ - மார்ரக்க கல்வி மட்டும் போதும்' என்று முழங்கி - உலகக்கல்வியை உதாசீனப்படுத்தினர்.

அய்ரோப்பிய நாடுகளில் மறுமலர்ச்சியும் - தொழிற்புரட்சியும் நடந்து முன்னேற்றப்பாதயில் சென்ற அதே காலக்கட்டத்தில், நமது மார்க்க அறிஞர்கள் அச்சு இயந்திரங்கள் அனுமதிக்கப்படலாமா, புகைப்படம் எடுக்கலாமா? பள்ளிவாசல்களில் மின்சார விளக்கு எரியலாமா போன்ற பிரச்சினைகளை பற்றி விவாதித்து வந்தனர். அந்த நிலை இன்னும் தொடர்வது வருந்ததக்கது.

தொப்பி அவசியமா?
உதட்டுச்சாயம் கூடுமா?
கலர் கைலி கட்டலாமா?
ந்ண்டு சாப்பிடலாமா?
நைலான் புடவை கட்டலாமா?
இறால் கூடுமா?
போன்ற கேள்விகளை மதஹபு-ஏகத்துவம் பரப்பும் பத்திரிக்கைகளின் கேள்வி-பதில் பகுதிகளில் இன்னும் கேட்டும்-படித்தும், மார்க்க அறிஞர்கள் பங்கெடுக்கும் நேரடி நிகழ்ச்சிகளில் பார்த்தும் வருகிறோம்.

திருமறையும்- நபிமுறையும் மறைமுகமாக கோடிட்டுக்காட்டியவைகளை, மாற்றுமத அறிவியலார்கள், தங்களது நேரத்தையும்-பொருளையும் செலவு செய்து ஆராய்ந்து குர்ஆன் கூறியது உண்மை என்று ஆய்வுக்கட்டுரை மூலம் வெளியிடும்போது - அந்தச்செய்தியை 'மின்னஞ்சல் மூலம் 'forward' செய்கிற அளவிற்கு மட்டும் நாம் 'தொழில் நுட்ப' அறிவு பெற்று வாழ்கிறோம்.

பெண் கல்வியை எடுத்துக்கொள்ளுங்களேன், ஆண்களின் பார்வையிலிருந்து தடுப்பதற்காக - வயது வந்த் பெண்களை வீட்டில் அடைத்து வைப்பது இஸ்லாமிய நெறியா?.அல்லது அவர்கள் கல்வி கற்க உற்ற சமூக சூழ்நிலையை, பாதுகாப்போடு கூடிய கல்வி நிலையங்களை உருவாக்குவது இஸ்லாமிய வழியா?.

பெண் குழந்தைகளை பருவ வயது வரை கல்வி கற்கச்செய்து, பூப்பெய்ததிலிருந்து திருமணத்திற்கு இடைப்பட்ட காலம் வரை வீட்டில் நல்லொழுக்கப் (ஆன்மீக) பயிற்சியை, அல்லது மதரஸாக்களில் ஆன்மீக கல்வியை அளித்து திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணால் ஒழுக்கமிக்க உறுப்பினரகளைக் கொண்ட கண்ணியமிக்க குடும்பத்தை உருவாக்க முடியும் என்று இன்னும் சில சகோதரர்கள் இன்னும் அடம்பிடிக்கிறார்கள்.
புர்காவின் நிறம் மற்றும் அதன் நீள அகலங்களை மட்டும் அடிப்படையாகக்கொண்டு 'முஸ்லிம் பெண்ணுக்கு' இலக்கணம் அமைக்கிறார்கள்.
மூப்பெய்யும் வரை கற்க சொன்ன இஸ்லாத்திற்கு மாறாக - பூப்பெய்யும் வரை கற்றாலே போதுமானது என்கிறார்கள்..

அறிந்தவனும் அறியாதவனும் அல்லா முன் சமமல்ல, கருவரையிலிருந்து - கல்லறை செல்லும் வரை கல்வியை தேடென்ற உயரிய இஸ்லாமிய அறிவுரைகளை பின்னுக்கு தள்ளி - 'மறுமை' வாழ்க்கையை அனுபவிக்க 'மய்யித்துகளாக' முஸ்லிம்களை தயாராக்கி வருகிறோம்.

இஸ்லாமிய மக்களின் - சமூக-பொருளாதார நிலை ஏற்றம் வருவது நம் எதிரிகளின் கைகளில் மட்டும் இல்லை- நம்முடைய கைகளிலும் உள்ளது என்பதை வல்ல இறைவன் நம் அனைவரின் மனதிலும் உதிக்க செய்யவேண்டும்.

--
தோழமையுடன்,
பிறைநதிபுரத்தான்
pirainathipurathaan@gmail.com

Sunday, August 3, 2008

உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்

உதவித்தொகையுடன் உயர்கல்வி வரை படிக்கும் வழிகள்

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=8/2/2008&secid=86


திறனாய்வு தேர்வு எழுதி உதவித் தொகையுடன் உயர்படிப்பு வரை படிப்பது எப்படி? என்பது குறித்த தகவல்களை தருகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ப. சுரேஷ்குமார்.
அளவற்ற திறமைகளை குழந்தைப் பருவத்திலேயே பெற்றிருந்தாலும் பொருளாதார காரணங்களால் உயர்கல்வி வாய்ப்பை இழந்து தவிக்கும் பிஞ்சு குழந்தைகளை நாம் பார்த்திருப்போம். 10-ம் வகுப்பில் நல்ல மார்க் வாங்கியிருந்தாலும் வசதி இல்லாததால் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்து ஏதோ ஒரு வேலைக்கு செல்லும் அவல நிலையைப் போக்க ஒரு சிறந்த வழியை அரசு ஏற்படுத்தியுள்ளது.


என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்றால், 8-ம் வகுப்பு முதல் முனைவர் படிப்பு வரை உதவித்தொகையுடன் மேற்படிப்பை பயிலும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது என்பதை மாணவர்களாகிய நீங்கள் மறந்துவிட வேண்டாம்!

தேசிய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வு பிற்காலத்தில் போட்டித் தேர்வை எழுதுவதற்கான அனுபவத்தை இளம் பருவத்திலேயே வழங்குகிறது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் திறனாய்வு தேர்வினை எழுதி உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.

இப்போது உங்களுக்கு புத்துணர்ச்சி பிறந்திருக்கும்.

பெற்றோரின் கையை அதிகம் எதிர்பார்க்காமல் உங்களின் திறமைக்கு கிடைக்கும் வெகுமதியைக் கொண்டு எதிர்கால வாழ்க்கையை நீங்களாகவே தேர்வு செய்து முன்னேறவும், திறனாய்வு தேர்வு உதவுகிறது.
இந்த தேர்வை எப்படி எழுதுவது? விண்ணப்பம் அனுப்பும் முறை? உதவித் தொகை குறித்த விவரங்கள்? உள்ளிட்ட தகவல்களை பின்வருமாறு விரிவாக அலசலாம்.

என்.சி.இ.ஆர்.டி.:-

தேசியகல்வி ஆய்வு மற்றும் பயிற்சி குழுமத்தினை (என்.சி.இ.ஆர்.டி.) 1961-ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவியது. கல்வி சம்பந்தப்பட்ட ஆய்வுகள், மகளிர் கல்வி, அமைதி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த கல்வி, சுற்றுச்சூழல் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி, திறமைகளை அங்கீகரித்து சாதனைகளை மதிப்பிடுதல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேலும், படிக்கும் போது மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதத்தில் வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. உதாரணமாக கற்றல், எழுதுதல், பேசுதலில் உள்ள குறைபாடுகள், கணக்கிடுவதில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் உறுப்புகளை சரியாக இயக்க முடியாமல் சிரமப்படும் குழந்தைகளை அடையாளம் கண்டு, பிற மாணவர்களைப் போன்று சமமாக கல்வி கற்றிட சிறப்பு முயற்சிகளையும் என்.சி.இ.ஆர்.டி. அமைப்பு மேற்கொள்கிறது.

தரமான ஆசிரியர்களை உருவாக்கிட மண்டல கல்விக் கல்லூரி மூலம் ஆசிரியர் பயிற்சியையும் வழங்குகிறது.
மேற்கண்ட கல்வி சேவைகள் தவிர, யு.பி.எஸ்.சி. அமைப்பு நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் என்.சி.இ.ஆர்.டி. உதவுகிறது. அதாவது மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் தரமான நூல்களை, இதன் நூல் வெளியீட்டு பிரிவு வெளியிடுகிறது. வல்லுனர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள நூல்கள் தேர்வுகளுக்கு பெரிதும் கைகொடுக் கும். இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரே தரத்திலான கல்வி அறிவைப்பெற என்.சி.இ.ஆர்.டி. அமைப்பின் வெளியீடுகள் உதவுகின்றன.

தேசிய திறனாய்வு திட்டம்:-

1963-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கல்வித் திறமை அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பெற்றுள்ள சிறந்த திறமையை கண்டறிந்து மேம்படுத்துவதே இத்திட்டத்தின்
குறிக்கோள்.

அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, பொறியியல், மருத்துவம், சட்டம் என்று மாணவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து அவர்களின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் துணை புரிகிறது. மாணவர்கள் இளம் பருவத்திலேயே ஆர்வமுடன் கற்க வேண்டும் என்பதற்காக 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.


நிர்ணயிக்கப்பட்ட விதியின்படி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனுடையவர்களுக்கு ஒதுக்கீடும் உள்ளது.

தேர்வு முறை:-

மூன்று நிலைகளைக் கொண்டு இந்த திறனாய்வுத் தேர்வு அமைந்துள்ளது. மாநில அளவில் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு உள்ளிட்டவை பிரதானமாக அமைந்திருக்கும்.

அந்தந்த மாநில கல்வித்துறையின் அல்லது ïனியன் பிரதேசத்தின் ஒருங்கிணைப்பில் முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது. இம்மாதம் 30-ந் தேதிக்குள் (30.8.08) இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் "இயக்குனர், அரசுத்தேர்வுத்துறை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 006'' என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

புதுச்சேரி மாணவர்கள் "இணை இயக்குனர், அரசுத் தேர்வுத்துறை, அண்ணாநகர், புதுச்சேரி-605 003'' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாநில அளவில் நடத்தப்படும் முதல்கட்ட தேர்வு இரண்டு பிரிவுகளைக் கொண்டதாகும். நுண்ணறிவுத் திறன், பாடப்பிரிவு சார்ந்த திறனறியும் விதத்தில் இந்த தேர்வு அமைந்திருக்கும். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து தேர்வில் வினாக்கள் அளிக்கப்படும். இந்த தேர்வு வரும் நவம்பர் 16-ம் தேதியன்று நடைபெறும்.

அகில இந்திய அளவில் நடைபெறும் இரண்டாம் நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு (2009) மே மாதம் முதல் வாரத்திற்கு பின்பு நடத்தப்படும்.

தேர்வுகள் குறித்த முழு விவரங்கள், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் முழுவதையும் www.ncert.nic.in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டு பெறலாம்.
தேர்வில் வெற்றி பெற வழிகள்:

மாணவர்களின் கல்வியறிவுத் திறமை தேசிய அளவில் பிரகாசிக்க தேசிய திறனாய்வு தேர்வு உதவுகிறது. தங்களின் கல்வியறிவுத் திறமையை அதிகரிக்க என்.சி.இ.ஆர்.டி. வெளியீடுகளை வாங்கிப் படித்து பயன்பெறலாம்.

8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் திறனாய்வு தேர்வு மூலம் அகில இந்திய அளவில் நடைபெறும் சிறந்த தேர்வுகளை எப்படி எழுதலாம்? என்பதற்கான முழு அனுபவத்தையும் போனசாக மாணவர்களுக்கு வழங்குகிறது.

இணையதளம் அளிக்கும் சேவை:-

மாணவர்களின் கல்வி அறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ள என்.சி.இ.ஆர்.டி. இணையதளத்தில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்விசார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை படிக்கும் வாய்ப்பும், டவுன்லோடு செய்யும் வசதியும் உள்ளது. அரசு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்புவோருக்கு என்.சி.இ.ஆர்.டி. இணையதளம் உதவி செய்யும்.

Saturday, August 2, 2008

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு



லண்டன், ஆக. 1: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர்.

இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை எதுவானாலும்; குர்ஆன் வழியில் அணுகவேண்டும்! -பேராசிரியர்

கோரிக்கை எதுவானாலும்; குர்ஆன் வழியில் அணுகவேண்டும்! -பேராசிரியர்



கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்த வல்லி ஏ. இஹ்சானுல்லா இல்லத் திருமணம் ஞாயிறன்று கோட்டக் குப்பத்தில் நடைபெற்றது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. மணமக்களை வாழ்த்தி பேசியபோது தெரிவித்ததாவது:

ஆலிம்களின் கோட்டை என்ற சிறப்புக் குரிய கோட்டக்குப்பம் மக்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ப தோடு அல்லாமல் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் ஒவ் வொன்றையுமே முஸ்லிம் லீகின் நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றனர்.

இது திருமண நிகழ்ச் சியா அல்லது முஸ்லிம் லீகின் மாநாடா என வியக்கும் அளவிற்கு சிறப் பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருக்கிறது. இந்த ஊரில் மற்ற ஊர்களுக்கு வழிகாட்டும் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

ரப்பானிய்யா அரபி பெண்கள் மதரஸா என மார்க்கக் கல்வி பணிகள் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இந்த மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற ஆலிம் பெருமக்கள் தமிழ கத்தன் பல பகுதிகளுக்கும் சென்று குர்ஆனின் போதனைகளை ஹதீஸ் களின் விளக்கங்களை சமு தாய மக்கள் நல்ல முறை யில் எடுத்துரைத்து மார்க்க சேவை ஆற்றி வருகின்றனர்.

எனக்கு முன்பு பேசிய சகோதரர் துபை அப்துல் ரஹ்மான் இந்த ஊரின் பிரச்சினை தொடர்பாக மக்கள் நடந்து கொண்ட முறைகள் குறித்து சில செய்திகளை தெரிவித்தார். கோரிக்கைகள் எதுவானா லும் அதனை எப்படி அணுக வேண்டும் என இறைவன் தனது திருமறை யில் வழிகாட்டியுள்ளான். திருக்குர்ஆனில் முதல் அத்தியாயமான ~அல்ஹம்து சூராவை இறைவன் அமைத்து தந்துள்ள விதமே பல செய்தி களை நமக்கு அழகுற விளக்குகிறது.

இறைவனை புகழ்ந்து அவனது ஆற்றலை வியந்து போற்றும் வகையில் முதல் சில வசனங்கள் அமைந்துள்ளன.

இத்தகைய ஆற்றலுக் கும் - சிறப்புக்கும் உரிய இறைவனுக்கு கட்டுப் பட்டு நடப்போம் என்று மக்கள் இறைவனுக்கு உறுதி அளிப்பது போன்று அடுத்த சில வசனங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு அடுத்துத்தான் ~இறைவா எங்களை நேரான வழியில் செலுத்து வாயாக என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. இப்படி இறைமறை வசனம் ஒரு ஒழுங்கு முறையை நமக்கு விளக்கி காட்டுகிறது. இறைவனிடம் நமது கோரிக்கைகளை வைக்கும் இரே வழிமுறையைத்தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

2004-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தும் அனைத்து கட்சி களைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கள் எல்லோரும் டெல்லி யில் ஒன்றாக கூடி முஸ்லிம் சமுதாயத்துக்கு எப்படியெல்லாம் பணி யாற்ற வேடும் என ஆலோ சனை செய்தோம்.

முஸ்லிம்களின் விவகாரம் தொடர் பாக மத்திய அரசு உடனுக் குடன் தீர்வு காணும் வகை யில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி அமைச்சகம் அமைக்க பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு செய்தோம்.

பிரதமரிடம் நேரம் வாங்கி அவரை சந்தித்த போது நாங்கள் எந்த நோக் கத்திற்காக சென்றோமோ அந்த நோக்கத்தை விட்டு விட்டு ஆளாளுக்கு அவர வர் மாநில பிரச்சினையை பேச துவங்கி விட்டனர்.

பின்னர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த தும்தான் நாம் எந்த நோக் கத்துக்காக பிரதமரை சந்தித்தோமோ அதனை குறித்து விரிவாக விவாதிக் காமல் வந்து விட்டதை அவர்களுக்கு சுட்டிக் காட்டியதுடன் நமது கோரிக்கைகள் தொடர் பாக அரசை அணுகும் போது குர்ஆன் கூறும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை எடுத்து விளக்கினோம்.

அதன்படி இன்னொரு நாள் பிரதமரை சந்தித் தோம். முதலில் அவரை மனமார வாழ்த்தி பாராட் டினோம். பின்னர் அவர் தலைமையிலான அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் உற்ற துணையாக இருக்கும் என்ற உறுதியை தெரிவித் தோம். பிறகுதான் நாங்கள் அவரை சந்திக்க வந்ததன் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தோம்.

இந்த அணுகுமுறையை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மன் மோகன்சிங் எங்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அதன்படி சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம் அமைத்து தந்துள்ளார்.

இறைவன் வழிகாட்டும் இந்த அணுகுமுறையை நாம் தொடர்ந்து கடைப் பிடித்தால் நமது கோரிக்கைகள் அனைத் திலும் உறுதியான வெற்றி யினை பெற முடியும்.

இப்போது மத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி செய்யக் கூடிய அரசுகள் சிறுபான்மை மக்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்ட அரசுகள். இந்த அரசு களுக்கு தர்மசங்கடங்களை உருவாக்கும் எந்த செயலி லும் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது. அதிலும் முஸ்லிம்கள் இதில் மிக தெளிவாக இருக்க வேண்டும். அதன்வாயிலா கத்தான் நாம் நமது சமு தாயத்துக்கு நன்மைகளை செய்ய முடியும். நமது எல்லா செயல்களையும் இறைவன் காட்டும் வழி முறையில் அமைத்து கொள்ள வேண்டும். அதற் காக இறைவனிடம் அனை வரும் துஆ செய்வோம்.

இவ்வாறு பேராசிரியர் பேசினார்.

அராபிய இலக்கியங்களில் இந்தியா

அராபிய இலக்கியங்களில் இந்தியா




Webdunia









- எம்.எஸ்.அஷ்ரஃப்

சிற்றிதழ் : அட்சரம் (செப். 03)
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
தனி இதழ் : ரூ.25/-

பல நூற்றாண்டுகளாக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார உறவுகள் அராபியர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே வளர்ந்து வந்துள்ளன. அபாஸித் காலத்தில் இந்திய மருத்துவ, வானியல், தத்துவ நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. இபின் நாதிம் தனது நூலான அல்-ஃபெஹ்ரிஸ்ட்டில் அபாஸித் அமைச்சர் யாஹியா பின் காலித் அல்-பர்மாகி, இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டு, ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து மூலிகைகளையும், வாசனைத் திரவியங்களையும், இந்திய மதங்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து வரச் செய்ததாக எழுதுகிறார். இக்குழுவின் தலைவர் திரும்பி வந்ததும் "இந்தியாவின் மதங்களும் அதன் பிரிவுகளும்" என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார். மேலும் இபில் எல்-நாதிம் இந்தியாவிலிருந்து அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட 51 நூல்களைப் பட்டியலிடுகிறார். இவற்றில் விஷயங்களைப் பற்றிய புத்தகமும், பிரசவ மருத்துவம் பற்றிய ஒரு நூலும், பாம்புகளைப் பற்றியும், பாம்பு விஷம், அதை முறிக்கும் மருந்துகள் பற்றி பல நூல்களும் உண்டு. பல்வகை நோய்களைப் பற்றியும் குறிப்பாக ஹிஸ்டீரியா மற்றும் மனநல நோய்களைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன.

பிற்காலத்தில் அராபிய உலகம் இந்தியாவின் மத நூல்களைப் பற்றி அறிந்து கொண்டது. அபு-சாலே பின் எல்-கபாலி (கி.பி.1026) மகாபாரதத்தின் ஒரு பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். சாணக்கியரின் எழுத்துக்களும், இன்னும் பல தர்க்க சாஸ்திர, மந்திர நூல்களும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இடைக்காலத்தில் அபு-ரேஹன் அல் பெரூனி என்ற மாபெரும் அராபிய அறிஞர் 11-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து இந்திய விஞ்ஞானத்தைக் கற்றிருக்கிறார். "இந்தியாவின் மதங்களை அறிதல்" என்ற செறிவானதும், முழுமையானதுமான ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்நூலின் 18 அத்தியாயங்களில் இந்தியாவின் மதங்கள், இலக்கியம், புவியியல், வரலாறு, சோதிடம், வானியல் மற்றும் இந்திய மரபுகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

அல்-பெரூனி இந்தியாவில் கழித்த காலத்தில் அதிகம் சோதிட அறிவை கற்றுக் கொள்வதிலேயே செலவழித்திருக்கிறார்.இவர் இந்தியாவிலிருந்து திரும்பியதும் ஆர்வமுள்ள பலருக்கு சோதிடக்கணக்குகளை பயிற்றுவித்திருக்கிறார். அவர்களும் இவற்றையெல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுத்த அறிஞர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டிருக்கின்றனர்.

சமஸ்கிருதத்தை முழுதாகக்கற்றறிந்த அல்-பெரூனி, கபிலின் ஒரு நூலையும், பிரம்ம குப்தாவின் இரு நூல்களையும் அரபியில் மொழி பெயர்த்துள்ளார். இவர் யூக்ளிடெஸின் நூலை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார். இவையன்றிஅல்-பெரூனி சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தூரங்களை கணக்கிடும் பழையதொரு கருவியைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார். பிரசித்தி பெற்ற ஜெர்மானிய அறிஞர் ஜக்கோ, இந்தியப் பொருட்களைக் குறித்து -சோதிடம், கணிதம், மருத்துவம் போன்றவை - அல்-பெரூனி எழுதிய இருபத்திரெண்டு ஆய்வுக் கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளார்.

இந்திய அறிவியலின் பால் அவருக்கிருந்த அன்பினாலும்,பெருமதிப்பாலும், அவர் காலத்தைய இந்தியர்களை, தமது உலகத்தை மற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் கதவுகளைத் திறந்து வைக்காமை குறித்து சாடுகிறார். தமது மூதாதையர்களின் ஞானத் தேடலைத் தொடரும் வகையில் அப்போதைய இந்தியர்களும் உலகம் முழுக்க பயணம் செய்ய அறிவுறுத்துகிறார்.

இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஒரே அராபிய அறிஞர் அல்-பெரூனி மட்டுமல்ல. மற்றுமொரு அராபிய யாத்ரீகர் இபின்-பதூதா (கி.பி.1304-1378) தனது 28 வருட பயணத்தில் 75000 மைல்களை கடந்திருக்கிறார். இபின்-பதூதா, முகமது-பின் துக்ளக்கின் (கி.பி.1325-1351) ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து தனது "துஹ்ஃபத்அல் நூஸார்" என்ற நூலில் 100 பக்கங்களை இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கிறார்.

இபின்-பதூதாவின் மேல் கொண்ட மதிப்பால் துக்ளக் அவரை தில்லியின் நீதிபதியாக நியமித்திருக்கிறார்.

இப்பதவியை சிறிதுகாலம் வகித்த பின்பு, அரசர் அவரது தலைமையில் ஒரு குழுவை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இபின் பதூதாவிற்கு அப்போது சீனா சென்றடைய முடியாவிட்டாலும், பிறகு தனது சொந்த பயணத்தில் சீனாவிற்கு சென்றிருக்கிறார்.

இபின் பதூதா டில்லி அற்புதமானதொரு நகரமாகவும், இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாமிய உலகிலேயே மிகப்பெரிய நகரமென்றும் வர்ணிக்கிறார். இபின் பதூதா தில்லிக்கு அருகில் நான்கு அண்டை நகரங்கள் அமைந்திருப்பதாகவும், அதில் ஒன்று இஸ்லாமியா ஆட்சி வருவதற்கு முன்னரே இருந்துவரும் பழைய தில்லி என்றும், மற்றொன்று துக்ளக் நிர்மானித்த துக்ளகாபாத் என்றும் குறிப்பிடுகிறார்.

அராபிய இலக்கியங்களில் இந்தியா

இபின் பதூதா இந்தியாவை வர்ணிக்கும்போது, இந்திய பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் சேர்த்தே விளக்குகிறார். இந்தியர்களுக்கு தாமரை மேலிருக்கும் பெரு மதிப்பைப் பற்றிக் கூறுகிறார்: "இந்தியர்கள் இந்த மலர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். இந்தியர் ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்லும்போது தாமரை இலைகள் ஐந்தை பரிசாகத் தருகிறார். நண்பருக்கு இதில் மொத்த உலகத்தையே பரிசாக அளித்துவிட்டதைப் போல பெருமகிழச்சி ஏற்படுகிறது. பொன்னையும், வெள்ளியையும் விட இதுவே மிக உயர்ந்த பரிசாக இருக்கிறது. "இபின் பதூதா இந்திய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் கூர்ந்து கவனித்தவராகையால், எந்தவொரு இந்தியனையும் வெளித்தோற்றத்தை வைத்தே அவர்களது மத, கலாச்சாரப் பிரிவுகளைப் பற்றி சொல்லிவிட முடியும் என்று எழுதுகிறார். இந்திய மரபுகளை நன்றாக அறிந்து கொண்டால், முஸ்லீமிற்கும், முஸ்லீம் அல்லாதவர்களுக்குமிடையேயான வேறுபாடுகளை சுலபமாக சொல்லிவிடலாம். முஸ்லீம் அல்லாத பெண்கள் தமது காதுகளை குத்திக்கொண்டு காதணிகள் அணிந்து கொள்கையில், முஸ்லீம் பெண்கள் காது குத்திக் கொள்வதேயில்லை. இபின்-பதூதாவின் கவனத்தை பாதித்த அந்நாளைய இந்திய வழக்கம், உடன் கட்டை ஏறுதல். கணவனின் எரியும் சிதையில் மனைவி உயிருடன் தள்ளப்படுவதை தனது நூலில் அடிக்கடி குறிப்பிடுகிறார்.

இந்தியப் பேரரசர் துக்ளக்கின் விருந்தோண்மையும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கிருந்த மன உறுதியும் இபின்பதூதாவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சிந்து மாகாணம் ஒருமுறை கடும் வறட்சியில் தவித்து, முன்னெப்போதுமில்லாத வகையில் விலைவாசிகள் உயர்ந்ததில், முகமது-பின்-துக்ளக் தனது கஜானாவிலிருந்து நேரடியாகவே நிதி எடுத்து ஆறுமாதங்களுக்கு அம்மக்களுக்கு வழங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். துக்ளக் தனது தலைநகரை மாற்றியதற்கான விவேகமான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.

இபின் பதூதாவின் நூலில் இயற்கையின் பல்வேறு கொடைகளை, மரங்களை, பூக்களை, கனிகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். தான் சென்ற இடங்களைத் தத்ரூபமாக வர்ணிக்கிறார். இந்தியாவின் அறிவுக்களஞ்சியங்களில் அபார ஆர்வம் கொண்ட மற்றொருவர் மாபெரும் அபாஸிட் எழுத்தாளர் அல்-கஹேத் ஆகும். இவர் தனது அல்-பாயன் மற்றும் அல்-டேமியான் என்ற நூல்களில் இந்திய தத்துவ ஞானிகளைப் பற்றியும், இந்தியர்களின் அறிவுக் கூர்மையும், தீரத்தையும் புகழ்கிறார். "அறிவிற்கும், ஞானத்திற்கும், தீட்சண்யத்திற்கும் இந்தியாவே ஆதார ஊற்று" என்கிறார்.

மற்றும் அல்-மவூதி (கி.பி.956) என்பவர் சிந்து, குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் பயணம் செய்து எழுதிய நூலில் உலகின் மிகச்சிறந்த ஏழு இனங்களில் ஒன்றாக இந்தியர்களை மதிப்பிடுகிறார். இதே போல் இந்தியாவில் பயணம் செய்து அதன் வியத்தகு பெருமைகளை எழுதியிருக்கும் பிற அராபிய எழுத்தாளர்களாக பின் அல்-ஃபக்கிஹ் அல்-ஹம்தானி (பத்தாம் நூற்றாண்டு அல்-ஷெரீஃப் அல்-இட்ரிஸி (கி.பி.1099-1153) அல்-காஸெளனி (கி.பி.1203-1283), அல்-நூரி (கி.பி.1278-1332) மற்றும் அல்-கலாக் சந்தி (கி.பி.1355-1488) போன்றோரும் ஆவர்.

அராபிய இலக்கியங்களில் இந்தியா

எல்லா நூற்றாண்டுகளிலும் இந்தியா அராபிய இலக்கியங்களில் இடம் பெற்று வந்திருப்பினும், அபாஸிட் காலத்தில் இந்தியாவிற்கும், அராபிய நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பும், உறவும் இருந்திருக்கிறது. காலங்கள் கடந்து, நமது ஞாபகங்கள் கலைந்த நிலையில், பண்டைய அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றிருந்த இந்தியத் தொடர்புகளை இதுவரை மீள்பார்வை பார்க்க வேண்டியிருந்தது.

நவீன இந்தியா, தனது சின்னங்களுடனும், ஒப்பற்ற தலைவர்களுடனும் நவீன அராபிய இலக்கியத்திலும் அரசியல், சமுதாய எழுத்துகளிலும் பெரும் பங்கு வகித்து வருகிறது. தாகூரும், காந்தியும், நேருவும், அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தாகூர் வெறும் கவிஞராகவும், ஓவியராகவும், தத்துவாசிரியராகவும், ஞானியாகவும் மட்டுமின்றி எப்போதும் மங்காத ஞானஜோதியாகவே அறியப்படுகிறார்.

தாகூரின் பெரும்பான்மையான கவிதைகளும், நாடகங்களும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு, குறிப்பாக எகிப்தியர்களால் ஆழ்ந்து பயிலப்பட்டு வருகிறது, பேடி ஹகி "தாகூர் தொகுப்பு" (பெய்ரூட், 1955) வையும், "பறித்த கனிகள்" மற்றும் "இளவேனில்" (டமாஸ்கஸ், 1965) ஐயும் மொழி பெயர்த்துள்ளனர்.

முகமது பதிர் எல்-தின் கலீல், முகமது தாகிர் கல்-கபாலவி, கலீஸ் கிர்கிஸ் கலில், வேடி அல்-புஸ்தானி போன்றவர்கள் தாகூரின் படைப்புகளை மொழி பெயர்த்துள்ளனர். முகமது மெஹ்தி ஆலம், அப்துல் ரகுமான் சித்திக், ஷிர்கி அய்யாது போன்றோர் தாகூரின் படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனர்.

இந்திய செவ்வியல் காப்பியங்கள் அரபியில் மொழி பெயர்த்தவர்கள் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் லெபனான் தேசத்து கவிஞர் வேடி அல்-புஸ்தானி ஆவார். இவர் பகவத்கீதையின் சில பகுதிகளை மட்டுமின்றி ராமாயணத்திலிருந்தும், பல பகுதிகளை மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பில் இவர் பயன்படுத்திய உத்திகளும், இயல்பான உணர்ச்சிகரமான, சரளமான நடையும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்தது. எகிப்திய எழுத்தாளர் ஆனிஸ் மன்சூர் கலைக்களஞ்சியமாக படைத்த தனது உலகைச் சுற்றி 200 நாட்கள், நூலில் இந்தியாவிற்கு 154 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலங்களில், எகிப்திய எழுத்தாளர்களை மிகவும் பாதித்த இந்தியத் தலைவராக மகாத்மா காந்தியை கூறலாம். அராபிய இலக்கியத்தில் அவர் சகிப்புத் தன்மைக்கும், அன்பிற்கும், அமைதிக்கும் சின்னமாக விளங்குகிறார். அராபிய எழுத்தாளர்களால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.


http://tamil.webdunia.com/miscellaneous/literature/magazine/0705/11/1070511017_1.htm

சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23)உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். திருமதி ஷகீலா, " ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology and Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றார். உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) டாக்டர் (PhD) பட்டம் பெறுவார்.

தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. ‘இளமையில் கல்’ என்பதுதான் அவர் கணவரின் அறிவுரை.
"குடும்ப வாழ்க்கைக்காக என் மனைவி தனது லட்சியத்தை விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை'.

"ஆதலால், சவால்களை எதிர்நோக்க அவருக்குப் பக்க பலமாக இருந்து வருகிறேன்," என்றார் ஷகீலாவின் கணவர் திரு முகமது ஏடிரீஸ் (31).
இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது. எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
"லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்." என்று உறுதியுடன் ஷகீலா கூறுகிறார்.

தலைத்துண்டு அணிந்துகொண்டே கல்வி தொண்டில் சிறக்க முடியும் என்று நிரூபித்த இந்த சகோதரியை போல வீட்டிற்கு ஒரு பெண் உருவாக்க வேண்டும்.

(http://tamilmurasu.tamil.sg/node/626)


பிறைநதிபுரத்தான்

இஸ்லாத்தை புரிந்து கொள்ள உதவும் நூல்கள்

Assalamualaikum.

We can even start by giving a booklet " Understanding Islam and the Muslims ", a 32 page booklet having the following topics like, ' what is Islam', what do muslims believe', ' do islam and christianity have different origins'.

This book has photos beside the answer for easier understanding.

It can be printed in bulk and distributed.

Any person interested to know about Islam, can understand the entire concept about Islam.

Sincerely,

Mohamed Imtiaz
Jan Trust
97 Coral Merchant Street
Chennai 1
T: 25244015

imtiazhlc@hotmail.com

பஹ்ரைனில் இலவச கணிப்பொறி வகுப்புகள்

பஹ்ரைன் தமுமுகவின் சார்பில் இலவச கணிப்பொறி வகுப்புகள்

பஹ்ரைன் தமுமுகவின் சார்பில் இலவச கணிப்பொறி வகுப்புகள் ஆரம்ப விழா கடந்த
25-07-2008 வெள்ளி மாலை 8-30 மணிக்கு தமுமுக மர்கஸில் வைத்து நடைபெற்றது.
மண்டலத் தலைவர் முஹைதீன் ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பொருளாளர் ராஜகிரி யூசுப் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

கரம்பை ஜக்கரிய்யா வரவேற்புரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் வேல்ட் நிறுவனத்தின் நிதி நிர்வாக மேலாளர்
ஐ. சபீருத்தீன் அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பில் 2 கம்ப்யூட்டர்கள்
வழங்கி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு B.F.C. Real Estate
Pvt Ltd., நிறுவன பங்குதாரர்களின் தலைவர் S.M.T. காலித், டிஸ்கவர்
இஸ்லாம் தாயீ சகோ. முபாரக், பஹ்ரைன் தமிழ் சங்க பிரதிநிதி திருவை பஷீர்,
அக்குப்பஞ்சர் மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை
வழங்கினர். அமைப்பாளர் ஏர்வாடி ரிஸ்வான் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் கணிப்பொறி வகுப்பின் ஆசிரியர் அப்துல் காதர் நிர்வாகிகள் கோட்டார்
ரபீக், ஜாபர், பீர்முஹம்மது பேசினர். இந்நிகழ்ச்சியில் ஹாமா டவுன்
தமுமுகவின் வழிகாட்டுதலின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வேலூரைச்
சேர்ந்த சகோ. வினோத் தன் புதிய பெயரான
ஏ. அப்துல் வாஹித் என்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கலந்துகொண்டோர்
தக்பீர் முழக்கமிட்டு வாழ்த்தினர்.

முடிவில் தமீமுன் அன்சாரி நன்றியுரை நிகழ்த்தினார்.


தகவல் : எஸ். முஹம்மது அப்துல் காதர், பஹ்ரைன்

S. Mohd. Abdul Kader
Video Editor
Rayana Media Center
P.O Box 5021
Kingdom of Bahrain
Mob No: +973 39685402
www.rayanamediacenter.com

முத்துப்பேட்டை சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வெளி உலகிற்கு தொியாத பல சாதனைகள் இருக்கிறார்கள். அரசியல் துறை, பொது நல சேவை, எழுத்துலக துறை, திரைப்படத்துறை போன்ற பல துறைகளில் சாதனைகளை படைத்த மற்றும் சாதனைகளை படைத்து கொண்டு இருக்கும் ஒரு சிலரை நோிடைய சந்தித்து அவா்களின் அனுபவங்களை பற்றிய கட்டுரை இது.

பொது சேவையில் தன்னாா்வத்துடன் செயல்படும் ஜனாப். முகைதீன் அப்துல் காதா் அவா்கள், துபாயில் செயல்படும் ஈமான் அமைப்பின் துணைத்தலைவரான ஜனாப். எம். அப்துல் ரஹ்மான் அவா்களின் தந்தையாவாா்.முஸ்லிம் லீக் கட்சியில் மிகுந்த பற்றுக்கொண்டவர் என்று சொல்வதைவிட தீவிர பற்றுக்கொண்டவர். இவாின் பிறந்த தேதி 14.3.1933. இவருடைய தாயாா் இறந்தவுடன், அனைத்து குடும்ப பொறுப்புகளை
இவர் ஏற்றுக்கொண்டார்.

1953 ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவா்களை நோில் சந்தித்து உரையாடி இருக்கிறாா் மற்றும் தற்போதைய அரசியல் தலைவர்கள் பலாிடம் நட்பு வைத்து இருக்கிறாா். தமிழக முதல்வா் டாக்டா். கலைஞருடன் மிகுந்த நட்புடன் பழகுபவா். குறிப்பாக சொன்னால் பனத்வாலா, திருப்பூா் மைதீன் பீா் முஹம்மது அப்துல் சமது வடகரை. பாக்கர், யூசுப் சாஹிப் (மறுமலா்ச்சி ஆசிரியா்) போன்ற மறைந்த
தலைவா்களுடன் மிகுந்த நட்பு கொண்டு இருந்தாா் மற்றும் பேராசிரியா் . காதா் மொய்தீன் அவா்களுடன் மிகுந்தநட்பு கொண்டு இருக்கிறாா்.

கட்சி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது கேரளா முன்னாள் முதல்வரான ஈ.எம்.எஸ். நம்பூதரி பட், எம். கல்யாண சுந்தரம், பாப்பா. உமாநாத், தா. பாண்டியன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து உரையாடி இருக்கிறார். அத்துடன் டாக்டர் கலைஞரை அவர்களை இரு முறை சந்தித்து இருக்கிறார்.

சென்னை மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு சொந்தமான கட்டிட்டத்திற்கு சிறு வயதிலேயே நன்கொடை அளித்துள்ளாா். அவா் கொடுத்தது வேறும் மூன்று ரூபாய் மட்டும் தான். ஆனால் அந்த தொகை தற்போது பல ஆயிரங்கள் மதிப்பு மிக்கதாக உள்ளது. கொடுத்தது சிறிய தொகை தான் இருந்தாலும் சிறிய வயதிலேயே அதனை கொடுத்து இருக்கிறாா் என்று தான் நாம் பார்க்க வேண்டும்.

முகைதீன் அப்துல் காதா் அவா்கள், முத்து நகாில் சங்கத்து பள்ளிக்கூடம் என்று சொல்லப்படும் ஆவன்னா நேனா பள்ளியில் பெற்றோா் ஆசிரியர் கழகத்தின் தலைவராக கடந்த பத்தாண்டுகளாக பணி புரிகிறாா். மற்றும் பல பொது சேவைகளிலும் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் பல சேவைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்.

தந்தையை தொடர்ந்து அவருடைய மகனாரும் பல பொது சேவைகள், கல்வி சேவைகள், சமுதாய சேவைகள், ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி, நோய்வாய் அடைந்த ஏழைகளுக்கு நிதியுதவி போன்ற பல உதவிகளை ஈமான் அமைப்பு மூலமாகவும் மற்றும் முத்துப்பேட்டை கல்வி பேரவை மூலமாகவும் செய்துக்கொண்டு வருகிறாா்.

முஸ்லிம் கட்சியினை பலப்படுத்த தாங்கள் கூறும் கருத்து என்னவென்று, ஜனாப். முகைதீன் அப்துல் காதர் அவர்களை கேட்டேன். ஆா்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அவா்களுக்கு நம்பிக்கையை வளர்த்து வர வேண்டும். நம் சமுதாய இளைஞர்கள் துணிந்து செயல்பட வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு உழைக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் உறுதுணையாக இருக்க வேண்டும்
என்றார்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உடல் பொருள் ஆவியை தியாகம் செய்த பல தலைவர்களை இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்திற்காக ஆயத்தமாகி கொண்டு நாம் எண்ணிப்பார்க்கமால் இருக்க முடியாது. பற்பல இஸ்லாமியா்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இருந்தனா். ஆனால் சில பாசிச சக்திகள் தியாகம் செய்த இஸ்லாமியர்களை மறைந்து விட்டு மறந்து விட்டு என்னவோ
அவா்கள் தான் இந்திய சுதந்திரத்தினை வாங்கி தந்ததாக கூறிக்கொள்கிறார்கள்.

15.8.1922 ஆம் ஆண்டு முத்துப்பேட்டையில் பிறந்த ~முத்துக்கவிஞர்~ என்றழைக்கப்படும். கவிஞர். கே.எஸ்.முகம்மது தாவூத் அவர்களை 31.7.2008 அன்று அவருடைய இல்லத்தில் அந்தி நேரத்தில் சந்தித்தேன். இவருக்கு 2 ஆண் மகனார்கள், 4 பெண் மகள்கள், பேத்தி 2 உள்ளது, 4 பேரன்கள் உள்ளார்கள். எளிமையான தோற்றம், திண்ணமான பேச்சு, வார்த்தை பொலிவு, கவித்துவம் அமைந்த வார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவரை நான் ஒரு கவிஞர் என்று தான் எண்ணி இருந்தேன். பின்னர் தான் தெரிந்தது இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்று.

1943ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முத்துப்பேட்டையில் இவர் மூன்றாவது மட்டும் தான் படித்து வந்தார். பின்னர் பர்மாவிற்கு சென்று அனுபவ ரீதியாக ஹிந்தி, உருது, பர்மா, சிங்களம், முதலிய மொழிகளை தெரிந்து வைத்து இருக்கிறார்.

இந்தியா, மலேஸியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் கட்டுரை எழுதி இருக்கிறார். 86 வயதாகி விட்ட இந்த வயதிலும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.. இவர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய இன்பத்தமிழ் இலக்கணம் என்ற நூலினை பாராட்டி அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள உலக கலை பண்பாட்டு அமைப்பு என்ற நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி
சிறப்பித்துள்ளது. மற்றும் 14.7.2001 அன்று முத்துப்பேட்டையில் நடந்த மீலாது விழா சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் இவருக்கு ஜே.எம். ஹாரூண் அவா்கள் பொன்னாடை போாத்தி சிறப்பித்தார்.

இவர் சிறந்த நாட்டு பற்று உடையவர், தமிழ் பற்று மிக்கவர், நாட்டுப்பற்றுடன் மனித நேய நல்லிணத்திற்'காகவும் தொண்டாற்றி வருகிறார். அகில இலங்கை முஸ்லிம் லீக் மார்க்க கமிட்டி முன்னாள் அங்கத்தினர். பல மார்க்க பத்திரிகைகளுக்கும் பல செய்திகளை அனுப்புவதால் பல இஸ்லாமிக பத்திரிகைகள் இவருக்கு இலவசமாக இவர் இல்லம் தேடி வருகிறது. முத்து நகரில் உள்ள ஆவன்னா நேனா பள்ளிக்கூடம் துவங்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறார். மற்றும் எஸ்.பி.கே. தோட்ட வளாகத்தில் உள்ள மக்கா பள்ளி வாசல் கட்டிடபணி துவங்கி அனைத்து வேலைகள் முடிவதற்கும் இவர் பணி புரிந்து இருக்கிறார்.

சுதந்திர போராட்ட தியாதிகள் நினைவு பரிசினை முன்னாள் முதல்வர். ஜெயலலிதா அவர்களின் கைககளால் பெற்று இருக்கிறார். அத்துடன் 1973 ஆம் ஆண்டு இந்திய நாட்டு சுதந்திரத்தின் 25ஆம் ஆண்டு விழாவில் பட்டயமும் மற்றும் சான்றும் பெற்று இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டின் சுதந்திர தினத்தின் போது இவரை பாராட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசுகளை வழங்குவார்கள்.

இவரிடம் தற்போது பல அரிய தகவல்கள் அடங்கிய கைப்புத்தகம் ஒன்று உள்ளது. மற்றும் பிரசுரம் ஆகாமல் இவருடைய பல கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வேறும் காகிதத்தில் இவர் கைப்பட எழுதப்பட்டு உள்ளது. அதனை யாரேனும் பிரசுரத்திற்கு எடுத்து வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பினால் அவரை நேரிடையாக தொடர்பு கொள்ளலாம்.

அவருடைய முகவரி : முத்து கவிஞர். முகம்மது தாவூத். குட்டியாா்பள்ளி தெரு. பேட்டை சாலை. முத்துப்பேட்டை 614 704. திருவாரூா் மாவட்டம்.

முத்துப்பேட்டை ஹெச். எம்.ஆர். என்றழைக்கப்படும் ஜனாப். ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களும் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர். மணி விளக்கு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணி புரிந்து உள்ளார். கல்வி பண்பாட்டு பயிற்சி கூடம் என்ற வின்னர்ஸ் மெட்ரிக்குலேஸன் பள்ளியின் நிா்வாகி, தாளாளர், முதல்வர். 1953 ஆம் ஆண்டு முதல் இவருடைய பேச்சானது பல மேடைகளில் ஒலித்து உள்ளது. எம். ஏ வரலாறில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பயிற்று இருக்கிறார். முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசல் முஹல்லா நிர்வாகத்தில் 18 ஆண்டுகள் செயலாளர் பணி. தற்போது 4 ஆண்டுகள் தலைவர் பணி. திருவாரூர்் மாவட்ட ரீதியில் நிரந்தர சமாதான கமிட்டி உறுப்பினராக இவர் உள்ளார்.

1972 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதிந்து இன்றும் பல சாதனைகளை புரிந்துவரும் முத்துப்பேட்டை. முஹம்மது அலி (என்ற) பாபு மகா ராஜா என்ற திரைப்பட இயக்குனா் பிறந்த ஊரும் முத்துப்பேட்டை என்றால் மிகையாகாது. உதவி இயக்குனராக சிநேகிதி, அன்பு சகோதரர்கள் போன்ற படங்களில் பணி புரிந்து உள்ளார். வசனகர்த்தாவாக சமர்ப்பணம் மற்றும் கமலம் போன்ற படங்களில் பணியாற்றி
உள்ளார்.

1981 ல் வெளியான இவா் கதை வசனம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் தரையில் வாழும் மீன்கள். இந்த திரைப்படத்தில் தான் நடிகை அம்பிகா அறிமுகம். நடிகை வனிதா அறிமுகம். நடிகர் விஜய்பாபு அறிமுகம். நகைச்சுவை நடிகா் எஸ்.எஸ். சந்திரன் அறிமுகம். நடிகா். ராதா ரவி அறி்முகம். மற்றும் இசையமைப்பாளா் சந்திரபோஸ் அவர்களும் இந்த படத்தில் முதன் முறையாக இசையமைத்தார். பல முகங்களை
திரைக்கு தந்து, மிகவும் எளிமையான வாழ்க்கையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா. இரண்டு பெண் பிள்ளைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு வாழ்ந்து வருகிறார். இயக்குனா் பாபு மகா ராஜா. .

1962ல் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பினை முத்து நகாில் பயின்றார். முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான பெருக வாழ்ந்தான், கோவிலூர் பெண்கள் பள்ளிக்கூடம் மற்றும் மல்லிப்பட்டினம் மனோரா போன்ற பகுதியில் முதன் முதலில் இயக்கப்பட்ட இவருடைய முதல் திரைபடமான தரையில் வாழும் மீன்களாக தான் இருக்கும். இவருடைய முதல் படத்தினை வளநாடு சினி ரீலீஸ் - திருச்சி என்ற நிறுவனம் வெளியிட்டது. இவரின் இரண்டாவது திரைப்படம் தொடரும் சரித்திரங்கள். 3வது படம் அர்த்தமுள்ள ஆசைகள். தற்போது இவரிடம் ஓசை என்ற படத்திற்கான கதை வசனம் எல்லாம் தயார். ஆனால் தயாரித்து வெளியிட நல்ல ஒரு தயாரிப்பாளரை எதிர்ப்பார்த்து இவர் காத்து இருக்கிறார். இதனை படிக்கும் திரைத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இருந்தால் அவரிடம் தொடர்பினை நான் ஏற்படுத்தி
தருகிறேன். இங்கு ஒன்றினை குறிப்பிட விரும்பிகிறேன். நடிகர் மோகன் நளினி நடித்து ஓசை என்ற படமானது பல ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த கதையல்ல. ஏனெனில் ஒரு திரைப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கழித்து அதே பெயரில் மற்றொரு திரைப்படம் வெளி வரலாம் என்பது திரைத்துறையின் நியதி.

தாங்களின் எதிர் கால சாதனையாக எதனை குறிப்பிட விரும்புகிறீர்கள் என்பதனை பற்றி கேட்ட போது, எதிர் காலத்தில் நான் ஒரு நல்ல இயக்குனராக மக்கள் மத்தியில் பெயர் எடுக்க வேண்டும். மற்றும் மத்திய அரசாங்கம் அளிக்கும் திரைப்படத்துக்கான உயர்ந்த விருதினை நான் பெற வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்
போன்ற படங்களை மொழி மாற்றம் செய்து உள்ளேன். ஆகையால் தமிழ் நாடு மட்டுமின்றி மற்ற மாநில திரைத்துறையிலும் சில நண்பர்களை நான் பெற்று இருக்கிறேன். இறைவனின் நாட்டப்படி நானும் ஒரு நாள் பெரிய இயக்குனர் என்ற பெயர் எடுப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன்.. .

இது போல் பல சிறப்புகளை கொண்ட படைப்பாளிகளை பெற்ற ஊராக தான் இன்றைய முத்துப்பேட்டை உள்ளதே தவிர பொய் ஊடகங்கள் ஊகத்தினை தான் நினைக்கிறதே தவிர உண்மையினை மறைக்கிறது. காலம் ஒரு நாள் பதில் சொல்லும். இத்தகைய படைப்பாளிகளும் மற்றும் சாதனை செய்துக்கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் இருக்கும் பட்சத்தில் எங்கள் ஊர் முத்துப்பேட்டை இன்னும் சிறக்கும் சிறப்பாக வளரும்.
வெளி உலகிற்க்கு தெரியாத படைப்பாளிகள் இருக்கும் இந்த ஊரினை பற்றி பல அரிய தகவல்கள் அறிய விரும்புவோர்கள் ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்தால் பல உண்மைகள் புரியும்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

திருக்குர்ஆன் இணையத்தளம்

கீழ்க்கண்ட

திருக்குர்ஆன் இணையத்தளம்

அரபி - ஆங்கிலம்
அரபி - உர்தூ

உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஓதுவதைக் கேட்டு பயன் பெறலாம்

http://www.quranexplorer.com/quran/

அரபி மொழியை உச்சரிப்புடன் பயில உதவும் இணையத்தளம்

http://www.multimediaquran.com/