Saturday, January 9, 2010

Higher Education - awareness Programme

Higher Education - awareness Programme

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


முனைவ‌ர் பேராசிரிய‌ர் டாக்ட‌ர் எஸ். ஆபிதீன் இளையான்குடி டாக்ட‌ர் ஜாகிர் உசேன் க‌ல்லூரியில் வில‌ங்கிய‌ல் துறைப் பேராசிரியராக‌ ப‌ணிபுரிந்து வ‌ருகிறார்.

என்ன‌ ? எங்கே ? எப்ப‌டி ? ப‌டிக்க‌லாம், ஆதாம் பால‌மா ? ராம‌ர் பாலமா ? , ப‌ச்சை ர‌த்த‌ம் , உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நூல்க‌ளை எழுதியுள்ளார்.

ப‌ள்ளி, க‌ல்லூரி மாணாக்க‌ர்க‌ளுக்கு உய‌ர்க‌ல்வி குறித்த‌ ப‌யிற்சி வ‌குப்புக‌ளை ந‌ட‌த்தி வ‌ருப‌வ‌ர். இப்ப‌யிற்சி வ‌குப்புக‌ளை த‌ங்க‌ள‌து ஊரிலும் ந‌ட‌த்தி ச‌முதாய‌ மாண‌வ‌ர்க‌ள் உய‌ர்நிலையை அடைய‌ பேரா.எஸ். ஆபிதீனைப் ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

முதுவை ஹிதாய‌த்
050 51 9 6 433



நான் தற்பொழுது 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பது பற்றிய மேற்படிப்பு குறித்த கல்வி விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டின் மார்ச் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறேன். சென்ற ஆண்டு மற்றும் இந்த ஆண்டுகளில் தென்காசி , புளியங்குடி , திருவாருர் அடியக்கமங்களம் முத்துப்பேட்டை மதுரை இராமநாதபுரம் காரைக்குடி பரமக்குடி விருதுநகர் திண்டுக்கல் தேவிபட்டிணம் ஆர்எஸ் மங்களம் பெரம்பலூர் தோப்புத்துறை விருதுநகர் உட்பட இன்னும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தந்த ஊரின் தொண்டு நிறுவணங்களின் ஏற்பாட்டில் இது போன்ற கல்விக் கருத்தரங்கு நடத்தி வருகிறோம்.


சுமார் இரண்டரைமணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெறும் இந்த ஆலேசனை நிகழ்ச்சி 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பிற்குப் பிறகு என்ன எங்கே எப்படி படிக்கலாம் போன்ற மேற்கல்வி குறித்த ஆலோசனைகளை கம்ப்யூட்டரில் அனிமேசன்களுடன் கூடிய அனைத்து விபரங்களையும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வடிவில் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.

தமிழக வேறு பல பகுதிகளில் இது போன்ற நிகழ்சியினை நடத்தி நமது மாணவர்களுக்கு என்ன எங்கே எப்படி படிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கிட துபாயில் உள்ள அந்தந்த ஊரின் சமுதாய ஆர்வலர்கள் விரும்பினால் , இது போன்ற நிகழ்ச்சியினை அவரவர் ஊர்களில் நடத்தித்தர தயாராக உள்ளோம்.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும். எனது கைபேசி எண் : 9965892706.

மக்கள் சேவை மையம்

மக்கள் சேவை மையம்

மக்கள் சேவை மையத்தின் நோக்கம்

பொதுவான சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவது

இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி அறிவூட்டுவது

இயற்கை விவசாயப் பயிற்சி அளிப்பது

அடிப்படை சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு பற்றிய அறிவூட்டுவது

பல் மற்றும் கண் சோதனை முகாம்கள் நடத்துவது மற்றும் ஆலோசனை வழங்குவது

தொழில் பயிற்சி நிலையம் அமைத்து திறமைகளின் அடிப்படையில் சுயமரியாதையோடு வாழ வழிகாட்டுவது

பயனீட்டாளர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது

நூல் நிலையம் மூலம் பயனுள்ள பல நூல்களை மக்கள் வாசிக்க வாய்ப்பளிப்பது.

வட்டியில்லா கடன் மூலம் முடிந்தவரை சிரமத்திலிருப்போருக்கு உதவியளிப்பது.

. வருடம் ஒருமுறை ஏழை எளியோருக்கு ஜகாத் வழங்குவது.

மக்கள் சேவை குடில் மூலம் தொண்டூழியர் பயிற்சி அளித்து நற்குடிமக்களை உருவாக்க முயற்சிப்பது

உண்மையான திறமைகளுக்கு தொடர்பில்லாத சான்றிதல் கல்வியின் போலித்தன்மைகளை விளக்கி அதனை மாற்ற இயன்ற அனைத்தையும் முயற்சிப்பது

குழந்தை வளர்ப்பு, திருமண வாழ்க்கை, வியாபாரம் செய்தல் மற்றும் குடும்ப பொருளாதாரத்தை நிர்வகித்தல் ஆகிய வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய
துறைகளில் பயிற்சி அளிப்பது

இத்தகைய பணிகளில் ஈடுபடுவோருடன் ஒத்துழைப்பது


http://www.makkalsevai.org

எங்களை தொடர்பு கொள்ள

முகவரி

மக்கள் சேவை மையம்
திருவள்@ர் சாலை
இளையான்குடி-630702
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா

Phone : +91-9786489493
Email : contactus@makkalsevai.org

Tel:9443117984 / 9786489493

Thursday, January 7, 2010

இதயம் காப்போம்

இதயம் காப்போம்
“தமிழ்மாமணி” அல்ஹாஜ் டாக்டர். பீ. ஹாமீது அப்துல்ஹை
எம்.பி.பி.எஸ்., டி.ஸி.ஹெச்., - மதுரை.
”நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான வடிவில் படைத்திருக் கின்றோம்.” (அல்குர்ஆன் 95:4)
படைப்புகளனைத்திலும் சிறந்த படைப்பாக அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள மனிதன் சிந்திக்கும் ஆற்றல் வழங்கப்பட்டுள்ளான். இதுவே அவனின் சிறப்பாகும். ஏனெனில் தமது சிந்தனா சக்தி மூலம் படைத்தவனின் வல்லமையுணர்ந்து அவனுக்கு முற்றிலும் வழிபடுதலே அதனின் நோக்கமாகும்.
மனித உடலே ஒரு மாபெரும் விந்தையாகும். ஆகவே அதனை “மாபெரும் உலகம்” (ஆலமும் அக்பர்) என வர்ணிக்கப்படுகிறது. உலகில் நாம் காணும் அனைத்துப் படைப்புகளின் பிரநிதித்துவமும், மனித உடலில் காணப்படுவதே அதற்குக் காரணமாகும்.
மனித உடலினமைப்பும், அதன் உறுப்புகளின் இயக்கமும் பேரற்புத மாகும். களிமண்ணில் உருவாக்கப்பட்டுள்ள நமது உடலின் ஆராய்ச்சி, விந்தையின் சிகரத்திற்கே நம்மை இட்டுச் செல்லும்.
மனித உடலின் இயக்கத்தில் மிக முக்கியப்பங்கு பெறும் உறுப்பு இதயமாகும்.
வலிமை மிக்கத் தசைகளாலான இவ்வுறுப்பு சுருங்கி விரியும் தன்மை கொண்டது. மார்பின் இடதுபுறத்தில், நெஞ்செலும்புகளுக்கும், முதுகெலும்புகளுக்குமிடையில் அமைந்துள்ளது. இதன் எடை 200 கிராம் முதல் 350 கிராம் வரையிலாகும். (ஆண் 250 – 350 கிராம், பெண் 200 – 300 கிராம்).
முட்டை வடிவம் கொண்ட இதயம், அதன் அடிபாகத்தில் குறுகிய தாகக் காணப்படும். இதன் இயக்கத்தை இடது மார்பின் கீழ்ப்பகுதியில் தொட்டு உணர்ந்து கொள்ள முடியும்.
இதயத்தசை “மயோ கார்டியம்” என்ற கடினத்தசையாலானது. அதன் வெளிப்புறம் “பெரி கார்டியம்” என்ற மெல்லிய இரட்டைச் சவ்வுடைய திரவப் பையினால் போர்த்தப்பட்டு அருகிலுள்ள நுரையீரல்,மார்புச்சுவர் ஆகியவற்றில் உராயாமல் பாதுகாக்கப்படுகிறது. உட்புறம் “எண்டோ தீலியம்” என்ற மெல்லிய தசையால் போர்த்தப்பட்டு இரத்தத்துடன் தொடர்பு கொள்ளும் தன்மையுடையதாகும்.
இதயம், இரு மேல் அறைகளும், இரு கீழ் அறைகளும் கொண்ட தாகும். மேல், கீழ் அறைகளுக்கிடையே “வால்வு” எனப்படும் தடுக் கிதழ்கள் அமைந்துள்ளன. இவைகள் இரத்தம் கீழறையிலிருந்து பின்னோக்கி மேலறைக்குப் பாய்ந்து விடாமல் தடுக்கின்றன. உடலின் அசுத்த இரத்தம் வலது மேலறைக்கு குழாய்கள் மூலம் கொண்டு வரப் பட்டு, அங்கிருந்து வலது கீழறைக்குள் பாய்ந்து, அங்கிருந்து, நுரையீரலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கரியமில வாயு நீக்கப்பட்டு, பிராணவாயு நிரப்பப்பட்டு, அங்கிருந்து இதயத்தின் இடது மேலறைக்கு வந்தடைகிறது. பிறகு, இடது கீழறைக்குள் செலுத்தப்பட்டு, அங்கிருந்து இந்த சுத்த இரத்தம் உடல் முழுவதும் பாய்ச்சப்படுகிறது. இதுவே இதய இயக்கம். கருப்பையில் தொடங்கி, இறக்கும் வரை நீடிக்கிறது. தினமும் ஓர் இலட்சம் தடவைகள் சுருங்கி விரிகின்றன. 70 வருடம் உயிர் வாழும் மனிதனின் இதயம் 250 கோடி முறை சுருங்கி விரிந்திருக்கும். இதனால் உற்பத்தியாகும் சக்தி, ஒரு போர்க்கப்பலை 14 அடி உயரம் மேலே உயர்த்த முடியும். இடது கீழறை சுருங்கும் நேரம் 3/10 நொடி, விரியும் நேரம் ½ நொடி.
இரத்த ஓட்டம் உடலில் பாய்ந்து செல்லும் தூரம் 1,12000 கி.மீ. இரத்த சிவப்பணு ஒரு சதுர மில்லி மீட்டர் அளவில் 50 லட்சம் வெண்ணிற அணு 6000 முதல் 11,000 வரையிலாகும். சிவப்பணுவின் நடுவில் ஹீமோகுளோபின் என்ற இரும்புச் பொருள் பொதிந்திருக்கும். இதுவே பிராணவாயுவை ஏந்திச் சென்று உடல் திசுக்களுக்கு வழங்குகின்றது. சிவப்பணு 120 நாட்கள் இயங்கும். ஒரு நொடி நேரத்தில் 12 லட்சம் சிவப்பணுக்கள் மடிந்து அதே எண்ணிக்கையில் புதிய அணுக்கள் தோன்றும். ஒவ்வொரு சிவப்பணுவும் 75,000 தடவைகள் உடலைச் சுற்றிப் பயணம் செய்திருக்கும்.
வெள்ளையணுக்கள், நோய் கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாக் கின்றன. மனித உடலில் 60 முதல் 90 வினாடி கால அளவில் இதயத் திலிருந்து இரத்தம் வெளியேறி, மீண்டும் வந்தடைகிறது.
உடல முழுவதும் இரத்தம் பாய்ந்து செல்ல தேவையான அளவு இரத்த அழுத்தம் நிலை பெற்றிருக்க வேண்டும். சரியான அளவு 120/80 மில்லி மீட்டர் பாதரசம் ஆகும். 140/90 க்கு மேல் அழுத்தம் அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் பல நோய்கள் தோன்ற ஏதுவாகும். இதயம் சுருங்கி விரிவதே, நாடித்துடிப்பாக மணிக்கட்டில் உணரப் படுகிறது. இது நிமிடத்திற்கு 60 முதல் 90 வரையிலாகும்.
இதய நோய்கள் :
1. பிறவிலேயே காணப்படும் இதயக் கோளாறுகள்.
2. உயர் இரத்த அழுத்தம்.
3. மாரடைப்பு
உயிருடன் பிறக்கும் 1000 குழந்தைகளில் 9 குழந்தைகளிடம் இதயக்கோளாறுகள் காணப்படுகின்றன. இக்குழந்தைகள் வளர்ந்து இயல்பான வாழ்க்கை வாழ முடியும். உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
உயர் இரத்த அழுத்தம் :
சுத்த இரத்த நாளங்களின் மீது இதய இயக்கத்தின் வேகம் பதிக்கும் அழுத்தமே இரத்த அழுத்தம் என்பதாகும். இதனை நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், சுப்ராரீனல் சுரப்பிகள், மூளை, நரம்பு மண்டலம் ஆகியன முக்கியப் பங்காற்றுகின்றன. சரியான அளவு 100/70 முதல் 140/90 மி.மீ. பாதரஸம் வரையிலாகும். 95 சதவிகித நோயாளிகளிடம் உயர் இரத்த அழுத்தத்திற்குரிய காரணங்கள் தெரிவதில்லை. பிற காரணங்கள், மரபுவழி, அதிக உடற்பருமன், புகைப் பிடித்தல், மது அருந்துதல், மன உளைச்சல், சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், நாளமில்லாச் சுரபி நோய்கள் முதலியன.
முதுமையில் இரத்த நாளங்கள் விறைத்து, விரியும் தன்மை குறைந்து விடுவதும், உயர் இரத்தம் தோன்றக் காரணமாகும். கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு அளவு அதிகரித்து, இரத்த நாளங் களில் படிந்து விடுவதும் மற்றொரு காரணமாகும்.
விளைவுகள் :
இதயம் விரிந்து நலிவடைகிறது. சுவாசக் கோளாறு, மாரடைப்பு, மூளை இரத்த நாளம் வெடித்து, இரத்தம் சிதறி பக்கவாத நோய் தோன்றுதல் முக்கிய, உயிரைப் போக்கும் விளைவுகள். எனவே உணவுக் கட்டுப்பாடு, புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியன தவிர்த்தல், உடற்பயிற்சி ஆகியனவும், உரிய மருந்துகளும், இரத்த அழுத்தம் சீராக அமைய உதவக் கூடியனவாகும்.
மாரடைப்பு :
இதயத் தசைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கொரனரி நாளங் களில் இரத்தம் ஓட்டம் தடைபடுவதால், இதய இயக்கம் பாதிக்கப் பட்டு மரணம் ஏற்படுகிறது. அதிகக் கொழுப்பு, இரத்த நாளத்தில் படிந்து நாளத்தை அடைத்துக் கொள்கிறது. புகைப்பிடித்தல் மற்றொரு முக்கியக் காரணமாகும். புகையிலையிலுள்ள நச்சுப் பொருட்கள் நாளத்தை தடிக்கச் செய்து விரியும் தன்மையை இழக்கச் செய்கின்றன. உயர் இரத்த அழுத்தம் சர்க்கரை நோய், உடல் பருமன், உடல் உழைப்பின்றி உட்கார்ந்து கழிக்கும் வாழ்க்கை முறை, மன உளைச்சல், எளிதில் உணர்ச்சி வசப்படுதல், அதிக கோபம் முதலியன மற்ற பிற மாரடைப்புக் காரணங்களாகும்.
நெஞ்சு வலி ஏற்படுதல், இது மார்பின் நடுவில் தோன்றி அங்கிருந்து பரவி, கழுத்து, தாடை, இரு கைகள் முழங்கை அல்லது மணிக்கட்டு வரை செல்லக்கூடும். இது முன்னெச்சரிக்கையின்றி தாக்கக்கூடும்.
மாரடைப்பு ஏற்பட்டால், உரிய மருந்துகள் மூலமும், நவீன அறுவை சிகிச்சை மூலமும் சிகிச்சை மேற்கொண்டு நலம் பெறலாம். எனினும் நோய்த் தடுப்பே சிறந்த வழியாகும். உணவுக் கட்டுப்பாடு (”உண்ணுங்கள், பருகுங்கள், மிதமிஞ்சி விடாதீர்கள்”). அல்குர்ஆன் (7:30) புகையிலை, மது தவிர்த்தல், உடற்பயிற்சி, இறை வணக்கம், தியானம், அமைதியான வாழ்க்கை முறை, நோய் ஏற்படின் உரிய மருத்துவம் முதலியன நோய் தடுப்புக்கு உதவக் கூடியனவாகும்.
உயரிய இஸ்லாமிய வாழ்க்கை முறை, சிறந்த நல வாழ்வுக்கு வழி காட்டுவதாகும். இதனைச் செயலாக்குவதன் மூலமே நீண்ட நல வாழ்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதைக் கவனத்தில் வைப்போமாக !
“உடலில் ஒரு தசைத்துண்டு உள்ளது. அது சீராக இருந்தால், அனைத்து உறுப்புகளும் சீராக அமையும். அதுவே இதயம்” என பூமான் நபி (ஸல்) அவர்கள் புகன்றுள்ளனர். இந்நபிமொழியின் உட்கருத்து எதுவாக இருந்தாலும் இதயம் நலமாக இருப்பின், உடல் முழுவதும் நலமாகவே இருந்து விடும். எனவே இதயநலம் பேணுவது நீண்ட வாழ்வுக்கு வழியமைக்கும்.

நன்றி : குர் ஆனின் குரல் ( நவம்பர் 2009 )

25 வயது இளைஞன்....

25 வயது இளைஞன்....

* பெரியவர் ஒருவர் தனது 25 வயது மகனுடன் தொடர்
வண்டியில் (TRAIN) அமர்ந்திருக்கிறார்.
* தொடர்வண்டி புறப்படத் தயாராகிறது.
* பயணிகள் யாவரும் அவர்களது இருக்கையில்
இருந்தனர்
* தொடர்வண்டி புறப்பட்டது. அந்த இளைஞன் ஆர்வத்துடன்
கூடிய பெருமகிழ்ச்சியில் மூழ்கினான்.
* அவன் ஜன்னலருகே அமர்ந்திருந்தான்.
* அவன் தனது கையை வெளியே நீட்டி காற்றின்
வருடலை அதில் உணர்ந்தான். "தந்தையே பாருங்கள்!
அனைத்து மரங்களும் பின்னால் போகிறது" என்று
கத்தினான்.
* பெரியவர் புன்னகைத்தார். மகனின் உணர்வுகளை
வியந்தார்.
* பெரியவருக்கும் அவரது மகனுக்கும் நடக்கும் இந்த
சம்பாஷனை மாற்றங்களை அந்த இளைஞனின் அருகில்
அமர்ந்திருந்த ஒரு தம்பதியினர் கவனித்து வந்தனர்.
* இந்த 25 வயது இளைஞன் சிறுபிள்ளைதனமாக நடந்து
கொள்ளும் மனப்பான்மையைப் பார்த்து அவர்களுக்கு
சற்று அருவருப்பாக இருந்தது.
* திடீரென்று அந்த இளைஞன் மீண்டும் கத்தினான்,
"தந்தையே! அதோ குளம், அதோ மிருகங்கள்,
மேகங்கள் கூட தொடர்வண்டியோடு நகர்கிறது" என்று.
* இளைஞன் குழம்பிப்போய் இருப்பதை அந்த தம்பதியினர்
அவதானித்தனர்.
* இப்பொழுது மழை பெய்கிறது. மழை துளிகள் அவனது
கைகளிலும் விழுகிறது.
* அவனோ இன்பத்தில் மூழ்கி கண்கள மூடிக்கொண்டான்.
* மீண்டும் அவன் கத்தினான். "தந்தையே இதோ மழை
பெய்கிறது, மழை நீர் என்மீது படுகிறது இதோபார்
தந்தையே...!
* அந்த தம்பதியினர் தங்களால் ஏதும் செய்ய முடியாமல்
அந்த பெரியவரிடம் கேட்கிறார்கள்;
"நீங்கள் ஒரு மருத்துவரை சந்தித்து உங்கள் மகனுக்கு
ஏன் சிகிச்சை எடுக்கக்கூடாது?"
* அதற்கு அந்த பெரியவர் சொன்னார்;
ஆமாம்! நாங்கள் மருத்துவமனையில் இருந்துதான்
வருகிறோம்;
"அவனது வாழ்க்கையில் முதல் முறையாக இன்றுதான்
என் மகனின் கண்களுக்கு பார்வை கிடைத்துள்ளது"
(அவன் முதல் முறையாக இன்றுதான் உலகத்தை தன்
கண்களால் பார்க்கிறான்)

* படிப்பினை: அனைத்து உண்மைகளும் உனக்கு
தெரியாதவரை எதைப்பற்றியும்ஒரு முடிவுக்கு வராதே.

தமிழில்,
ஷுஐபு,
ஜித்தா.

Wednesday, January 6, 2010

சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ ..............

சென்னை, திருச்சி, திருநெல்வேலியில் வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ ..............


சென்னை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட‌ த‌மிழ‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளிலும் அழ‌கிய‌ வீட்டு ம‌னைக‌ள் விற்ப‌னைக்கு உள்ள‌ன‌.
வீட்டு ம‌னைக‌ள் வாங்க‌ விரும்புவோர்

அமீர‌க‌த்தில் தொட‌ர்பு கொள்ள‌ வேண்டிய‌ தொட‌ர்பு எண்க‌ள்

அன்வ‌ர் 050 922 1202 / 050 894 6518 / ச‌ர்புதீன் 050 788 6919

Al Hira Real Estate & Builders
24 Baba Tower
Thennur High Road
Trichy 620 017
94435 58224
99445 50250
luckyhomeindia@gmail.com


site visit plz contact
Mr. Fasal (managing director)
9840332113
9976922786

எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை

எவரெஸ்ட் சிகரத்தில் ஒலித்த பாங்கின் ஓசை

செங்கம் எஸ். அன்வர் பாஷா

http://www.mudukulathur.com/religiondetails.asp?id=215


இஸ்லாத்தில், மலைகளுக்கு புனிதமான சிறப்புக்கள் கிடைத்துள்ளன. உலகம் படைக்கப்பட்ட நேரத்தில், முதன் முதலாக மக்காவின் நிலமும், “அபு குபைஸ்” மலைக்குன்றும் தோன்றின. நூஹு நபி (அலை) அவர்கள், உலகப்பிரளயத்தின் போது பிரயாணித்த கப்பல், ஜுதி மலையில் தான் தரை தட்டி நின்றது. ஹள்ரத் மூஸா (அலை) அவர்களை இறைவன் “சையதுல் ஜிபால்” என்ற “தூர்சீனா” மலைக்கு வரவழைத்து உரையாடினான். “பனீநயீம்” என்ற மலையின் உச்சியில் தான், ஹள்ரத் லூத் (அலை) அவர்களின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. “ஸஃபா மர்வா” மலைகள் மார்க்க அடையாளங்களாக உள்ளன. என்று அல்குர்ஆன் (2:158) கூறுகிறது. நபிகள நாயகம் (ஸல்) அவர்கள் “ஜப்லே நூர்” என்ற மலையில் அமைந்துள்ள ஹீரா குகையில் தியானத்தில் இருக்கும் நேரத்தில் தான் வஹி அருளப்பட்டது. அத்துடன் திருமறையின் வசனமும் முதன் முதலாக இறங்கியது. மதீனாவிலுள்ள “உஹது” மலையும் புனிதமான வரலாற்று சின்னமாகும். இமாம் தாவூத் (ரஹ்) அவர்கள் இந்தியா, பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டிய ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியில் தான் பிறந்தார்கள். “காரசான்” மலையில் காஜாமுயீனுத்தீன் அஜ்மீரி (ரஹ்) அவர்கள் முராகபாவில் அமர்ந்திருந்தார்கள்.
தற்போது, இந்தியாவின் இமய மலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திற்கும் ஒரு தனி சிறப்பு கிடைத்துள்ளது! கடந்த 21- 5- 2008 ம் தேதி முப்பது வயது நிரம்பிய ஃபாரூக் ஸஅத் ஹம்மாதுல் ஸமன் (ZAMAN) என்ற இளம் மலை ஏறும் வீரர் 29035 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரலாறு படைத்துள்ளார். இதனால், இவர் உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற தகுதி பெறுகிறார்.
நேபாள நாட்டின் நேரப்படி பகல் மூன்று மணிக்கு, நேபாள மக்களால் “சகர்மாதா” என்று அன்புடன் அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரத்தில் காலடி பதித்தார் வெற்றி வீரர் ஃபாரூக். முதல் காரியமாக அங்கு இஸ்லாத்தின் கடமையான தொழுகைக்கு வரும்படி அழைக்கப்படும், பாங்கினை உரக்கச் சொன்னார். அந்த ஓசை மலைகளில் எதிரொலித்து, ரீங்காரமிட்டது. அடுத்தபடியாக, “கலிமா” எழுதப்பட்ட சவூதி அரேபியாவின் தேசியக்கொடியை அங்கு பறக்க விட்டார். இறுதியாக எல்லாம் வல்ல நாயனுக்கு ஷுக்ரானா நஃபில் தொழுகையை தொழுது முடித்தார்.
உலகத்தின் மிகவும் உயரமான இடத்தில் நின்று உலக மக்களை தொழுகைக்கு வரும்படி கூவி அழைத்ததின் மூலம் சரித்திர சாதனையை நிகழ்த்தி விட்டார் அந்த அரேபியவீரர் !
இதில் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், 20-5-2008 –ந் தேதியை நேபாள அரசு, சர்வதேச மவுண்ட் எவரெஸ்ட் நாள்” என்று அறிவித்திருந்தது ! காரணம், 29-5-1953 ம் தேதியன்று தான் ஸர் எட்மண்டுஹில்லாரி “நேபாளி” “ஷேர்பா” டென்சிங்குடன் முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
சாதனையாளர் ஃபாரூக் காட்மாண்டுவிலிருந்து 31-5-2008 ம் தேதி சவூதி செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது. “நான் மலை ஏறும் பொழுது, 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இருபதாவது கேம்ப் வரையில் எந்த வித சிரமமும் இருக்கவில்லை. அதற்கு மேல் அமைந்துள்ள இருபதாவது அட்வான்ஸ் கேம்பிலிருந்து உச்சி வரை ஏறுவதில் பல சிரமங்களும், இடையூறுகளும் குறுக்கிட்டன. நேபாளத்தின் “ஷெர்பா” மிகவும் உதவியாக இருந்தார். மலை ஏறும் நுணுக்கங்களை “ஷெர்பாக்கள்” நன்கு அறிந்து வைத்திருந்தனர்.
பனி மலையில் நிலவும் குளிரும், பிராணவாயு குறைவும், உச்சியை அடைவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனக்கும் இரண்டு மூன்று முறை உயிரை பயணமாக வைத்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருபதாவது கேம்பிற்கும் மேலே நான் ஏறிச் செல்லும் போது, எனக்கு கடினமான பல தடங்கல்கள் குறுக்கிட்டன. அங்கு நிலவும் பிராணவாயுவின் குறைவினால் மூச்சு திணற வேண்டியதாகி விட்டது. வழி நெடுகிலும் பல முறை உயிருக்கு போராட வேண்டியதாகி விட்டது.
என்னுடைய லட்சிய இலக்கை நான் அடைந்த பொழுது நாலா புறமும் பனியால் அந்த இடம் சூழப்பட்டு இருந்தது. என் உடல் முழுவதும் மரத்து விட்டதைப் போல் ஆகி விட்டது. என் மூளை உறைந்து செயலிழந்து விட்டதைப் போல் உணர்ந்தேன். நான் உலகின் உயர்ந்த சிகரத்தின் உச்சிக்கு வந்துள்ளேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை! அங்கு நிலவும் அழகிய கண்கொள்ளாக் காட்சியை பார்த்ததும் நான் உணர்ச்சி வசப்பட்டு, மதி மயங்கி விட்டேன். அப்போது நேரம் பகல் மூன்று மணியாகி இருந்தது. வெயில் எங்கும் பரவிக் கிடந்தது. மலையின் மற்ற பகுதிகளில் மேகங்கள் சிகரங்களை மறைக்கும் விதத்தில் மிகுந்த வண்ணம் இருந்தன. என் கண் முன்னால் தெரிந்த உள்ளத்தை கவர்ந்து இழுக்கும் கண் கவர் காட்சி யினைக்கண்டு நான் பூரித்துப் போனேன்.
இந்த எவரெஸ்ட் சிகரத்தை உலகின் மிக உயர்ந்த இடம் என்று கூறுவதைப் போலவே புகழ் பெற்ற “கபரஸ்தான்” (இடுகாடு) என்று கூறினாலும் பொருத்தமானதாக இருக்கும் ! கி.பி. 2002 ம் ஆண்டு வரை, எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் ஆவலில், 175 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் பிறகும், பலபேர் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். பெரும்பாலான உடல்கள், அங்கேயே கிடக்கின்றன. சிகரத்தின் வடபகுதியில் இப்போதும் 41 உயிரற்ற உடல் கள் கிடக்கின்றன. நானும் என் கண்ணால் ஏராளமான உடல்களை கண்டேன். இவ்வளவு உயரத்திலிருந்து பிணங்களை எடுத்து வருவது இயலாத காரியம்.
பெரும்பாலான மரணங்கள், எரிவாயு முடிந்து விடுவதாலும், பிராண வாயு குறைவினாலும், பனிப்புயல்களில் சிக்கிக் கொள்வதாலும் நிகழ்ந்து வருகின்றன. அங்கு பனிக்கட்டிகள் குவிந்துள்ளதாலும், கடுமையான குளிர்ந்த காற்று வீசுவதாலும், பிணங்கள் கெடுவதில்லை. அங்கு கிடந்த ஒரு உடலை, முதன் முதலாக கண்டவுடன் அதை காப்பாற்றலாம் என்ற எண்ணத்தில் நான் அவசரமாக தொட்டேன். என்னுடன் இருந்த “ஷெர்பா” அது இறந்து விட்டவரின் உடல், அந்த மனிதர் இறந்து பல மாதங்கள், அல்லது பல வருடங்கள் ஆகி இருக்கலாம்” என்றார்.
மலை ஏறும் ஆவல் கொண்டவர்களுக்கு வலுவான உடல் தகுதி மட்டும் இருந்தால் போதாது. பொருளாதார வசதியும் இருக்க வேண்டும். 55 வருடங்களுக்கு முன்பு ஹில்லாரியும் டென்சிங்கும், எவரெஸ்ட் சிகரத்தின் மீது முதன்முதலாக ஏறிய பின்பு, 3800 பேர் மலை ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில் 1600 பேர் மட்டும் தான் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். மலை ஏறும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறைந்த பட்சம் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவழிக்க நேரிடும். எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவதை விட, இறங்குவது தான் மிகவும் சிரமமான காரியமாகும்” என்று விளக்கமாக கூறி தன் பேட்டியை முடித்தார் ஃபாரூக்.
உலகத்திலுள்ள நாடுகளில், ஒரே ஹிந்து நாடு முன்பு இருந்தது நேபாளம். அதன் மீது அமைந்துள்ள சிகரத்திற்கு “ஜார்ஜ் எவரெஸ்ட்” என்ற ஆங்கிலேயரின் (கிருஸ்துவர்) நினைவாக வைக்கப்பட்ட பெயர் தான் எவரெஸ்ட். வானத்தை தொடும் அந்த எவரெஸ்ட் சிகரத்தின் மீது நின்று, “தொழுகைக்கு வந்து வெற்றியடையுங்கள்” என்ற பாங்கின் அழைப்பை, உலகின் நாலாபக்கமும் இப்போது முழங்கச் செய்துள்ளான் வல்ல அல்லாஹ் ! இதன் விளைவாக, உலக மக்கள் அனைவரும் ஒரே இமாமின் பின்னால் நின்று தொழும் காலம் வெகு தூரத்தில் இல்லை !.

( குர்ஆனின் குரல் நவம்பர் 2009 இதழிலிருந்து )

Tuesday, January 5, 2010

ஈமானே-உன் விலையென்ன?

ஈமானே-உன் விலையென்ன?

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)

ஒரு மதம் மூன்று முக்கிய மாற்றங்களினை ஏற்படுத்த வேண்டும்:
மூடநம்பிக்கை என்ற திக்குத் தெரியாக்காட்டில் திண்டாடிக் கொண்டிருப்பவனை நேர் வழிகாட்டி நேர்மைப் படுத்த வேண்டும்.
சமுதாயத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும்
தனி மனித அடையாளத்திலிருந்து சர்வதேசம் என்ற விசாலமான உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும்.

அந்த மூன்று தகுதிகளும் இஸ்லாத்திற்கு இருக்கிறதா என்று பார்க்கலாம்.
அஞ்ஞான அரபு உலகமான ‘அய்யாமே ஜாகிலியா’ என்ற இருண்ட சூழ்நிலையில் ஒளியேற்றி வைத்த என்பெருமானார் முகம்மது நபி ஸல்லல்லாஹ_ அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட வஹி மூலம் மனிதனை புனிதமாக்க இறக்கப்பட்டது குர்ஆன் ஆகும். பல உருவங்களில் கடவுள் என்ற பெயரில் வழிபட்டும், நெறிகெட்டும் இருந்தவர்களை ஏக இறை தத்துவத்தினை ஆணித்தரமாக எடுத்துறைத்தது இஸ்லாம். வான‌ம்,பூமி,கடல்,அண்டத்திலுள்ள அத்தனை ரகசியங்களையும்-அவைகளின் மாற்றங்களையும் அறிந்தவன் எடுத்துரைத்து, அவனிடமே உங்கள் உதவியினை தேடுங்கள் என்று சொல்லி மூட நம்பிக்கைக்கு சாவு மணியடித்தது இஸ்லாம் என்பதை ஈமானுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள்.

இரண்டாவது தனி மனித சுதந்திரத்திற்கு வித்திட்டது இஸ்லாம். ஆண்டான்-அடிமை என்ற வித்தியாசத்தினை களைந்தெடுத்து, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளுக்கு உரிமை ஸாசனம் அளித்தது இஸ்லாம் தானே. கறுப்பினராக இருந்தாலும் தொழுனைக்கு அழைக்கும் முன்னுரிமையினை ஹஸரத் பிலாலுக்கு வழங்கி கவுரவித்த பெருமை ரஸுலுல்லாவினைச் சாரும். உலகத்தில் நாங்கள் தான் முதல் ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா கூட 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அடிமைகளுக்கு ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனால் சுதந்திரம் வழங்கப்பட்டது. பெண்சிசுக்களை பிறந்த உடனேயே உயிருடன் புதைக்கும் வழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பாலை-ஊமத்தழை சாரினை வாயில் ஊற்றி சாகடித்த பழக்கத்திற்கு பதிலாக பெண்குழந்தைகளை காப்பாற்றும் தொட்டில் குழந்தை திட்டம் 21ஆம் நூற்றாண்டில் தானே தமிழகத்தில் வந்தது. அத்தோடு இல்லாமல் ஒரு படி மேலாக பெண்களுக்கு சொத்தில் பங்கு என்றும் நிலைநாட்டியது.
திருமணம் சாட்சிகளோடு நடக்க வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் பதிவும் செய்து பெண்களுக்கு உத்திரவாதமும் அளித்தது. அந்தச் சட்டம் தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் எவ்வளவு தொலை நோக்குப் பார்வை கொண்டுள்ளது என அறியலாம். இனப் படுகொலைகளை தடுத்து நிறுத்தி இன ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தது.
மூன்றாவதாக தனி மனித நலனை விரட்டி பொது நலனுக்கும்-சர்வதேச நலனுக்கும் வித்திட்டது. ஈகைக்காகவே வறியவர்களுக்கு பொருளை ஜக்காத், சதக்கா என்று வாரி வழங்குவதிற்காக ஒரு ஈகைப் பெருநாளை ஏற்படுத்தித் தந்தது கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடமை தத்துவத்திற்கு முன்னோடி இஸ்லாம். ரஸ_லுல்லா மக்காவில் மதீனாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் வராமல் மாறாக புன்னகையுடன் வரும்போது குரைசியர்களுடன் செய்து கொண்ட ஹ_தைபியா அமைதி உடன்பாடு 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் ஏற்பட்ட ஐ.நா. உடண்படிக்கைக்கு முன்னோடி என்றால் மிகையாகுமா? ஆனால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஏதோ ஒரு பொய் காரணத்திற்காக இராக்கினை சின்னா பின்னமாக்கியது போல் அப்போது நடந்ததுண்டா? சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கூட இராக் மீது அமெரிக்காவுடன் கைகோர்த்து இங்கிலாந்து முன்னால் பிரதமர் டோனி பிளேயர் இங்கிலாந்தினை இராக் போருக்குள் நுழைத்தது தவறு என்றும், ஜார்ஜ் புஷ் இராக் ஜனாதிபதி சதாம் ஹுசேன் மீது ஏற்பட்ட பயத்தில் அவர் போர் தொடுத்து விட்டார் என்றும் கூறுகிறார். செய்த தவறுகள் மீண்டும் நிலை நிறுத்த முடியுமா? யாராலும். ஆகவே தான் குர்ஆனுடைய போதனைகளும் சர்வத்திற்கும் பொருத்தமானதாகும் என்பது வெள்ளிடைமலை.


மேற்கூறிய மூன்று தாரகை மந்திரங்களையும்-அதனை வஹி மூலம் ரஸுலுல்லாவிற்கு குர் ஆனாக இறக்கிய அல்லாவையும்-கடைசி நபி ரஸுலுல்லா என்று ஏற்றுக் கொண்டவர்கள் தான் உண்மையான முஸ்லிம் என சொல்லலாம். ஆனால் 28.12.09 ஆம் அன்று முகரம் பத்தாம் நாள் என்று அனைவரும் அறிவர். அன்று மாலை டி.வியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒருவர் கொடுத்த பேட்டி அதிர்ச்சியாக இருந்தது. சென்னை வாசிகளுக்கும், மற்றும் சில ஊர்களிலும் துன்பமான முகரத்தினை பெரும் திருவிழா போன்று தீ மிதித்தும், கோசாப் பெண்கள் மார்களில் கைகளால் அடித்துக் கதரியும், ஆண்கள் கூரிய கத்திகளால் உடலில் குருதியினை ஏற்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அறிந்ததே. அதே போன்ற நிகழ்ச்சியினை முதன் முதலாக நான் 1966 ஆம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது தான் பார்த்தேன். அப்போது அது எனக்கு எங்களூரில் இல்லாத நிகழ்ச்சியாக இருந்ததால் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இஸ்லாமியர்களா என்று கூட எனக்கு ஐயப்பாடு ஏற்பட்டது. ஆனால் 28.12.09 அன்று முகரம் விழாவினை திருவல்லிக்கேணியில் ஏற்பாடு செய்தவர் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, ‘அலி ரஸுலுல்லாஹ் அவர்கள் மகன்களான ஹசன் ‍ ஹுசைன் ஆகியோரை வழிபடுவதிற்காக கொண்டாடப்படும் பண்டிகை என சொன்னது என்னைத் தூக்கி வாரிப்போட்டது.
எல்லா முஸ்லிம்களுக்கும் ரஸுலுல்லா என்பது நபிமார்களை குறிக்கும் என்பதினையும், ரலியல்லாஹ் என்றால் நபித்தோழர்களைக் குறிக்கும் என்பதினையும் அறிவர். அலி ரலியல்லாஹ்அன்கு அவர்கள் பெருமானார் அவர்களின் அருமை மகள் பாத்திமாவை மணந்து மருமகனாகவும்-வெற்றிக்கு பெயரெடுத்த வீரத்தளபதியாகவும் திகழ்ந்தவர் என்பதினை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அவருடைய மகன்கள் ஹசன்,ஹுசைன் ஆகியோர் பெருமானார் நெஞ்சில் ஏறிதவழ்ந்தவர்கள் என்பதினையும் அனைவரும் அறிந்ததே. ரஸ_லல்லா உயிருடன் இருந்தபோது தலை தூக்காத இனபோர்கள் அவர்கள் மறைந்த பின்பு தலைதூக்கியது. முவாவியாவின் வழித்தோன்றல் யசீதால் ஹசனும், ஹ_சைனும் அவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர் என்பது நெஞ்சில் நீங்கா வடுவாக உள்ளது. அல்லாஹ் இபுறாகிம் நபி அவர்களுக்கு வயதான காலத்திலும் இஸ்மாயில் என்ற மகனைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஈமானைச் சோதிப்பதிற்காக இஸ்மாயில் என்ற பாலகனை அறுத்துப் பலியிட ஆணையிட்டு அதற்கும் இபுறாகிம் நபி அவர்களையும் அவருடைய அருமை மகனார் அவர்களையும் வழிகெடுக்க சாத்தான் முற்பட்ட போதும் கூட மனந்தளராது அது இறைவன் கட்டளையென அறுக்க முற்படும் போது இறைவன் தன் வஹி மூலம் அவர்கள் ஈமானை சோதிப்பதிற்காகவே அந்த ஆணை பிறப்பித்ததாகவும்-இறைவன் சதையையோ, குருதி சிந்துவதையோ விரும்புவதில்லை என்று கூறி தடுத்து நிறுத்தினான் என்பது அல் குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மை.

ஆனால் இன்று கூட ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி இறந்தார் என்பதிற்கு அடையாளமாக மெக்சிகோ-தாய்லாந்து போன்ற நாடுகளில் மனிதர்களை சிலுவையில் அடித்தும், தீ மிதித்தும் வழிபாடுகள் நடக்கின்றன. அதுபோன்ற செயல்களால் இறைவன் திருப்திபடுகிறானா? என்பதினை ஏன் சிந்திக்க மறுக்கிறார் முகரத்தினை திருவிழாவாகக் கொண்டாடுபவரகள்? அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதால் மாற்று மதத்தினர் கேலிப்பேச்சுக்கு இடம் முஸ்லிம்கள் கொடுக்கலாமா?

அல்லாவிஹ்வின் இடைத்தரகர்கள் என்று சிலர் கிளம்பி அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை உங்களுடம் பகிர்ந்து கொண்டால் தவறில்லை. சில மாதங்களுக்கு முன்னர் ஐமான் இனைய தளத்தில் திண்டுக்கல்லைச் சார்ந்த சகோதரர் சபீயுல்லா எனபவர் ‘சிலோன் மவுலானா’ என்பவர் எப்படியெல்லாம் அவருடைய குடும்பத்தில் நுழைந்து குழப்பத்தினை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்-சகோதர யுத்தத்திற்கும் வழிவகுக்குகிறார் என்றும்- அவருடைய காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கவும் கொடுமை செய்திருக்கிறார் என்று அழாத குறையாக முறையிட்டு இருந்தார். அதபோன்ற என் நண்பர் சொன்ன இன்னொரு உண்மைச் சம்பவத்தினையும் உங்களுடன் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சென்னையில் குடியிருக்கும் கடற்கரையோர செல்வக் செழிப்பான முஸ்லிம் ஊரைச்சார்ந்த ஒரு குடும்பத்தில் பண்ருட்டியினைச்சார்ந்த வருங்காலத்தினை கணிக்கும் இமாம் என்ற போர்வையில் ஒரு மவுலான நுழைந்த தாயை வசியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடந்த சில நாட்களிலேயே தோசம் இருக்கிறது என்ற மகளையும் அவள் கணவனிடமிருந்து பிரித்ததோடு நில்லாமல்-அந்தப் புதுப்பெண்ணுக்கு ஆபாச செல்போன் எஸ்.எம்.எஸ் தொந்தரவும் கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

நான் 1983 ஆம் ஆண்டு மலேசியா சென்ற போது எங்க@ரைச்சார்ந்த ஒருவரை கோலாலம்பூர் மலேயா மேன்சனில் பார்க்கச் சென்றேன். அப்போது ஒரு வியாபாரி அறையில் கேரளாவினைச்சார்ந்த தங்கள் என்ற பெரியவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி அந்த வியாபாரி, ‘தங்கள் அருளால் தான் இந்த அளவு தொழில் முன்னேற்றம் அடைந்தேன் என்றும் அவரைக் கேட்காமல் காலையில் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்றும் அந்த தங்கள் மந்திரித்துக் கொடுத்த தாயத்தினை கையிலும், இடுப்பிலும் கட்டியிருப்பதாகவும’; சொல்லி அதனையும் காட்டினார். அந்த வியாபாரிக்கு தன்னுடைய உழைப்பில் நம்பிக்கையில்லாததும்-ஈமானில் பிடிப்பில்லாத பேச்சாக உங்களுக்கு தெரியவில்லையா?
நான் புனையப்பட்ட வழக்கு ஒன்றில் இழுக்கப் பட்டு சிறை சென்று வந்ததினை கேள்விப்பட்டு எங்க@ரைச்சார்ந்த ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அவர் என்னிடம் உங்களுக்கு நேர்ந்;த கொடுமைக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் சென்னை ஐஸ்ஹவுசில் வந்துள்ள பைஜி என்ற இமாமைப் பார்த்து அவர் துவா செய்தால் எல்லாத் துன்பங்களும் விலகும் என்று வற்புறுத்தி அழைத்தார். இவ்வளவிற்கும் அவர் படித்தவர்-மேல்நாட்டில் வேலை பார்ப்பவர். அவரிடம் நான் அதில் எனக்கு நம்பிக்கையில்லை என மறுத்துவிட்டேன். அவருக்கு ஈமானில் ஊசலாடல் இருப்பதினை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். 2..1..2010 ஆம் தேதி தினத்தந்திப் பத்திரிக்கையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நாகூர் தர்காவிற்கு தொழுகை நடத்த வந்தவருக்கு டிரஸ்டி கலிபா பொன்னாடைப்போர்த்தி கவுரப்படுத்தினார் என்ற செய்தி படத்துடன் வெளியாகி இருந்தது. மாற்று மதத்தினர் நாகூர் தர்காவினையும் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் என்று நினைக்க மாட்டார்களா? ஆகவே ஏன் அவர்களுக்கு நாம் தவறான செய்திக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

மறைந்த முன்னால் அமைச்சர் முகம்மது ஆசிப் அவர்கள் அமைச்சராக பதவியேற்றபோது அப்போதைய முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். நான் அந்த சமயத்தில் சென்னை சட்டம் ஒழுங்கு டி.சியாக பணியாற்றினேன். அவரிடம், ‘உங்களுக்கு 70 வயதிற்கு மேலாகிறது, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள், அத்துடன் ஒரு முஸ்லிம் ஏன் காலில் விழுந்தீர்கள்’ என்ற வினவினேன். அதற்கு அவர், ‘மற்ற அமைச்சர்கள் எல்லாம் காலில் விழும்போது நான் மட்டும் காலில் விழாமல் இருந்தால் முதல்வர் கோபித்துக் கொள்வார்கள்’ என்றார். நான் சொன்னேன், “மற்றவர்களில் கண்டதையெல்லாம் கடவுள் என்று எண்ணி காலில் விழுவார்கள். ஆனால் முஸ்லிம் சஜ்தா செய்வது அல்லாஹ்வினைத் தொழும் போது தானே என்று நீங்கள் இருந்திருக்கலாமே’ என்றேன். நான் அதிகாரியாக இருந்ததால் அதற்குமேல் அவரிடம் வாதம் செய்யவும் அவர் பதில் கூறவும் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் அஹமது அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் குத்த விளக்கு ஏற்ற மறுத்து விட்டார்கள். அதற்காக வேற்று மதத்தினர் அவர் மீது ஏவுகணை தொடுத்தார்களா? இல்லையே! ஏனென்றால் படித்த மாற்று மதத்தினருக்கு அவருடைய இஸ்லாமிய மத வழிபாடுகளை தெரியாமலில்லை..

சமீபத்தில் சென்னை கலைவானர் அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்போது ஒரு பெரிய பதவியில் இருக்கும் பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கும் மேதாவி கவிஞர் ஒருவர் அந்த உயர்ந்த பதவியினைப் பெருவதிற்காக புகழ்க்சியில் முக்கிய பிரமுகரை திளைக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பேசும் போது, ‘பிறை பிச்சைப் பாத்திர வடிவில் உங்களிடம் பிச்சை’ கேட்பதாகச் சொன்னதாகவும் அதற்காக சமுதாயம் கண்டனக்குரல் எழுப்பியதினையும் அறியலாம்.

கவிஞர் அல்லாமா இக்பால் தன் கவிதையில், ‘இளம் பிறையே வருந்தாதே உன்னுடன் பூரணச்சந்திரன் மறைந்து இருக்கிறான்’ என்று அவர் கூறிய பூரணச்சந்திரன் வேறு யாருமில்லை. அகிலத்தினைப் படைத்து அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வதிற்கு வழிவகுக்கும் அல்லாஹ்வினைத்தானே அவ்வாறுக் குறிப்பிட்டார். பின் ஏன் ஆண்டவனிடம் படைப்புகளிடம் சில சலுகைகளை தட்டிக் கேட்பதிற்குப் பதிலாக ஏன் மண்டியிட வேண்டும்?

சிலர் தவறான தகவல்களையும் சென்னையில் பரப்பி வருகின்றனர். அது என்ன தெரியுமா? ஒவ்வொரு வசதியுள்ள முஸ்லிமும் ஹஜ் செல்வது கடமையாகும். அதனைத் தெரிந்த சில வேடதாரிகள், “திருமுல்லை-சப்பைப் பட்டணம் தர்காக்கலுக்கும் சென்றால் ஹஜ் செய்வது வேண்டியதில்லை” என்றும் தவறான செய்தியினை பரப்பி வருகிறார்கள். சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட பழனி சென்று முருகனை வழிபட்டு-நாடிஜோசியம் பார்க்கவும் செல்கின்றனர். இவர்களின் சோரம் போன ஈமானைக் கண்டுதான் சில இமாம்கள்-மவுலானாக்கள்-தங்கள் போன்ற வேடதாரிகள் முரீது கொடுக்கிறேன் என்று அனாச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.இந்த வேதனையினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் என் கட்டுரையின் தலைப்பினை ஈமானே உன் விலை என்ன என்றேன்?

மேலே சொன்ன செய்திகள் எல்லாம் புனையப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. தினந்தோறும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தானே. ஈமான் இழந்த சிலர் செய்யும் செயல்களால் படித்த இளைஞரகள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது. ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பும், ஜமாத்தும் இஸ்லாமிய மக்கள் அநாகரியங்கள், அநாச்சாரங்களில் தடம் புரளாது கண்ணை பாதுகாக்கும் இமையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

காயல்பட்டணம் ஹாபிழ் சையீது அஹ்மத்

காயல்பட்டணம் ஹாபிழ் சையீது அஹ்மத்

ஹாபிழ் சையீது அஹ்மத் அவர்கள் 26.3.1915 இல் காயல்பட்டணத்தில் பிறந்தார். சிறு வயது முதலே அரசியல் - எழுத்து - கலை ஆகிய துறைகளில் ஈடுப்பட்டார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலும், நெல்லை ஜில்லா போர்டிலும் உறுப்பினராக இருந்தக் காலத்தில் மூதறிஞர் ராஜாஜி, டாக்டர். சுப்பராயன் ஆகியோருடன் நெருங்கிப் பழகக் கூடியவராகவும், காந்தி மற்றும் நேரு போன்றவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பினை பெற்றவாரகவும் இருந்தார். அவ்வப்பொழுது பலப் பத்திரிகைகளிலே கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார்.

விஞ்ஞானமும் தொழில்களும், தமிழ்கூறும் முஸ்லிம் நல்லுலகம், மார்கோ போலோவின் யாத்திரை, ஜனநாயகமும் அபேதவாதமும், பாத்திமா நாயகி பெற்ற சீதனம், சர் சையீது அஹ்மத் கான், சாந்தி மார்க்கம் கண்ட சமதர்ம தூதர், அல்லாஹ் முன் எல்லோரும் ஒன்றே ஆகிய இவரதுக் கட்டுரைகள் புகழ்பெற்றவை.

மாசில்லாமணி மகபூப் சுபுஹாணி, வள்ளல் சீதக்காதி ஆகிய இரண்டு நூல்களை இவர் எழுதி உள்ளார். வான்ப்புகழ் காயல்ப்பட்டணம் என்னும் இவரது மற்றொரு நூல் அறிய ஆய்வு நூலாகும். தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் எழுதும் வன்மை உள்ளவாரகத் விளங்கினார். An Arab King of Pandya (பாண்டிய நாட்டின் அரபு வேந்தர்) என்ற இவரது ஆங்கில ஆராய்ச்சி கட்டுரையை பிரபல ஆங்கில நாளிதழான HINDU - ஹிந்து விரும்பி பிரசுரித்தது. Scientific Farming என்னும் பத்திரிகையை ஆங்கிலம் - சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும், விஞ்ஞானப் பண்ணை என்னும் தமிழ் பத்திரிகையையும் நடத்தி அதன் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

இவர் தொழில் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு விளங்கினார். 1956 இல் இலங்கை அரசு நடத்திய கைத்தொழில் - விவசாயப் பொருட்காட்சியை நடத்தும் பொறுப்பில் செயற்குழு உறுப்பினாராக நியமிக்கப்பட்டு சிறப்புடன் பணியாற்றினார்.

எழுத்தாளரும் - ஆராய்ச்சியாளரும் - வர்த்தகருமான ஹாபிழ் சையீது அஹ்மத் அவர்கள் சிறந்த பேச்சாளர் ஆவார். இவர் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்தார். 1945 இல் காயல்ப்பட்டனத்தில் நடைப்பெற்ற வள்ளல் சீதக்காதி விழாவிற்கு தலைமை தாங்கினார். அவ்விழாவில் டாக்டர். ஹுசைன் நயினார், தமிழக முதல்வராக பின்னர் பதவி வகித்த சி.என் . அண்ணாதுரை ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

தகவல்: (தமிழ் வளர்த்த முஸ்லிம்கள் நூலிலிருந்து)

Rajaghiri Gazzali
www.rajaghiri.net
www.masjid-al-taqwa.blogspot.com

Monday, January 4, 2010

மானா மக்கீன் கட்டுரைக்கு மறுப்பு

மானா மக்கீன் கட்டுரைக்கு மறுப்பு


அவர் இசைமுரசு அவர்களை தரக்குரைவாக விமர்சித்து அவர் எழுதியதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு கட்டுரையை என் வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.

அதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அன்புடன்
அப்துல் கையூம்
http://nagoori.wordpress.com

துபாயில் தொழிலாள‌ர்க‌ளுக்காக‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்

துபாயில் தொழிலாள‌ர்க‌ளுக்காக‌ இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாம்

துபாய் : துபாய் இந்திய‌ பெண்க‌ள் அமைப்பு தொழிலாள‌ர்க‌ளுக்காக‌ ஏழாவ‌து இல‌வ‌ச‌ ம‌ருத்துவ‌ முகாமினை 08.01.2010 வெள்ளிக்கிழ‌மை காலை 8 ம‌ணி முத‌ல் 12 ம‌ணி வ‌ரை இந்திய‌ க‌ன்சுலேட் ஆடிட்டோரிய‌த்தில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.

இம்முகாம் இர‌ண்டாயிர‌த்துக்கும் குறைவாக‌ ச‌ம்ப‌ள‌ம் பெறுவோருக்கும், ம‌ருத்துவ‌ காப்பீடு பெற‌ வ‌ச‌திய‌ற்ற‌வ‌ர்க‌ளுக்காக‌ ந‌ட‌த்த‌ப்ப‌டுகிற‌து.

நீரிழிவு நோய் இருப்ப‌வ‌ர்க‌ளும், 40 வ‌ய‌துக்கு மேற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் எதுவ‌ம் சாப்பிடாம‌ல் ம‌ருத்துவ‌ முகாமில் க‌ல‌ந்து கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். ஏற்க‌ன‌வே ம‌ருத்துவ‌ரிட‌ம் காண்பித்த‌ ரிப்போர்ட் இருப்பின் அத‌னை அவ‌சிய‌ம் எடுத்து வ‌ர‌வேண்டும்.
ம‌ருத்துவ‌ முகாமில் ப‌ங்கேற்க‌ விரும்புவோர் ஜ‌ன‌வ‌ரி 5 ம‌ற்றும் 6 ஆகிய‌ தேதிக‌ளில் காலை ஒன்ப‌து ம‌ணி முத‌ல் ந‌ண்ப‌க‌ல் ஒரு ம‌ணி வ‌ரை 050-1152021 அல்ல‌து 056 -6945125 ஆகிய‌ அலைபேசியில் தொட‌ர்புகொண்டு முன்ப‌திவு செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

CAR FOR SALE IN DUBAI

CAR FOR SALE IN DUBAI

MODEL : 2007
NISSAN SUNNY
FULL OPTION
AUTOMATIC
DVD SET INCLUDES
VCD SET

RATE : DHS. 30,000 ( Negotiable )

Contact :

Mr Ellias
050 1725244

Sunday, January 3, 2010

நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)

நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=208


நேற்று, 27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் முனைவர்களாகவும் உள்ளனர் என்றார்.

அவர் சொன்ன தகவலை வைத்து எண்ண அலைகளை ஓட விட்டபின்பு-நம்மவர் சம்பாதிக்கச் சொல்லும் பழமொழி, “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது தான். ஆனால் அயல் மன்னில் சென்றவர்கள் படகு போன்ற கார்களில் பவனி வந்து-பங்களாக்களில் குடியிருப்பவர் சிலரே. நரம்பில் ஓடும் குருதியினை வேர்வையாக்கி வீடுகளில் கார் ஓட்டுதலும், கிளீனிங் வேலையிலும், கட்டிட வேலை, லிப்ட் ஆப்பரேட்டர், எலக்ட்ரிஷன், ஹோட்டல் சர்வர் போன்ற அடிமட்ட வேலை செய்யும் படிக்காத இளைஞர்கள் தான் அதிகம் என்றால் மிகையாகாது? நான் 1979 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது எனக்குத் தெரிந்தவர் ஒரு ஹோட்டலில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். பின்பு மலேசியா சென்றபோது இன்னொரு தெரிந்தவர் தனது தலைக்கு ஒரு தலையணை கூட இல்லாது உட்காரும் மரக்கட்டையினை வைத்து படுத்திருந்தார். இனனொரு நிகழ்ச்சி என்னை உண்மையிலே ஒரு கணம் உலுக்கி விட்டது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் மலேசியா சபுர்ஆளி என்று பெருமையோடு வலம் வந்தவர்-அவர் சொந்த பந்தங்கள் எல்லாம் வசதியோடு வாழ்பவர்கள்;. அவருக்கு சுகர் வந்து ஒரு காலை முனங்காலுக்குக் கீழே எடுக்கப்பட்டதால் ஊருக்கு வருவதிற்கு கூச்சப்பட்டு வாழ்வதிற்காக ஒரு சாப்பிங் காம்ளக்ஸ் அருகில் கையேந்திக் கொண்டிருந்தார்.

அதே போன்று நான் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது பிரிமாண்ட்டில் நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த அதிராம்பட்;;டணத்தினைச்சார்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் பி.எஸ்.ஸி படித்தவர், மனைவியும் வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் அங்குள்ள உடுப்பி ஹோட்டலில் சர்வராக இருப்பதாகவும் ஆயிரம் டாலர் கொடுப்பதாவும் கூறினார். முனைவி வுற்புறுத்தலால் இந்த வேலை பார்ப்பதாகச் சொன்னார். இவைகளை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மனிதனுக்கு மானத்தோடு வாழும் நம்பிக்கைக் குறையும் போது இது போன்ற பரிதாபமான நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவில் கூட எத்தனையோ நபர்கள் ஊனமுற்றாலும் படித்து டாக்டர்-என்ஜினியர்-முதுகலை பட்டம் பெற்றுமு;-இன்னும் கூடை-சேர் பின்னும் தொழில் முனைவர்களாகவும் இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கலாமா? ஆகவே நம்பிக்கை பழமொழிகளான தன் கையே தனக்குதவி-உன்னால் முடியும் தம்பி-வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல் அதில் நீந்தி வந்தவன் தான் வாழ்வான் போன்றவைகளை வருங்கால இளைஞர்களுக்குப் போதிக்க வேண்டும்.


படித்த இளைஞர்களுக்கு உலகில் வேலை வாய்ப்பு வருங்காலங்களில் மிகவும் பிரகாசமாக இருப்பது கடிணம். இப்போது கூட துபாய்-சிங்கப்பூர் போன்ற இடங்களில் வேலை பார்த்த நமது இளைஞர்கள் வேலையின்றி ஊருக்கு வந்து வேலை தேடும் படலத்தினைத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்க நான் சொல்லுவதெல்லாம் ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலைப்படாமல் வாழ்ந்து கொள்’ என்பது தான. எங்கள் ஊர் இளையாங்குடியில் தோலில் மணிபர்ஸ், பைகள், கேன்வாஸ் சூட் கேஸ்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழில் போல இருந்தது. ஆனால் அவைகளையெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்கிடையே ஏற்றுமதி செய்வது என்ற வழிவகை தெரியாததால் அவைகளெல்லாம் நலிந்து விட்டன. ஆனால் அதே தொழிலை இன்று சென்னையில் செய்து வெளிநாட்டு ஏற்றுமதியினைப் பெற்றவர்கள் லாபகரமாக நடத்தி வருகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தோல்வியாபாரம் கொடிகட்டி பறப்பதினை அனைவரும் அறிவர். ஆனால் அதே தேலை பதப்படுத்தி செருப்புகளாகவும், ஸ_க்களாகவும், கைப்பைகளாகவும், சூட் கேஸ்களாகவும், பெல்ட்களாக செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் யுக்தி வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம், பேரணாம்பேட், ராணிப்பேட்டை போன்ற ஊரில் உள்ளவர்கள் அறிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பதோடுமட்டுமல்லாமல்-ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச்செலவாணியை அள்ளிக் குவிக்கின்றனர். ஏன் அதே தொழிலை திண்டுக்கலில் இருக்கும் தோல் வியாபாரிகள் சிந்திக்கக் கூடாது.

ஊதாரணததிற்கு நாடார் ஜன மக்களை எடுத்துக் கொள்ளுங்கள. பழைய பேப்பர்கள்-இரும்புகள் வாங்க இரு சக்கர-மூன்று சக்கர வண்டிகளிலும் தெருத் தெருவாக அளைவதினைப் பார்க்கிறேம். ஆனால் அவர்கள் பழைய பொருட்களை வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதனை தரம் பிரித்து பழைய பேப்பர்களை அட்டை செய்யும் இயந்திரத்தில் கொடுத்து அட்டைகளாக்கி விடுகின்றனர். பழைய இரும்புகளை உருக்கி-ஸ்டீல் பட்டறையில் கொடுத்து பாத்திரம் செய்யும் தொழிலும் ஈடுபட்டு தொழில் செய்கின்றனர். ஏன் அரேபியாவிற்கு நாம் பல்வேறு வேலைக்காகவும்-புனித கடமை நிறைவேற்றுவதற்காகவும் சென்று விதவிதமான பேரீத்தம் பலங்களை வாங்கி வந்து உற்றார்-உறவினருக்குக் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் அதே பேரீத்தம் பழத்தினை இறக்குமதி செய்து தரம் பிரித்து பாக்கட்டிலும்-ஜூசாகவும் விற்பனை செய்யும் தொழிலையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

நான் அதிராம்பட்டிணக் கல்லூரியில் வேலையில் இருக்கும் போது எங்கு திரும்பினாலும் தென்னைத் தோப்புகளைக் காண்பேன். அதில் விளையும் தேங்காயை லாரிலாரியாக பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவர். ஆனால் தென்னை மரம் அதிகல்லாத தூத்துக்குடியில் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் வி.வி.டி.தொழிற்சாலைகள் அதிகம். அதே தென்னை நாறுகளை கயிறுகளாகத் திரித்தும்-விரிப்புகளாவும்;-கால் மிதிகளாகவும் செய்யும் தொழில் ஈரோடில் அதிகம். அவைகளையே ஏன் அதிராம்பட்டிணத்தில் தென்னந்தோப்பு அதிபர்கள செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடாது? கடற்கரை ஊர்களில் மீன்-கருவாடு விற்கும் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். அந்த மீன்களை வெளிய+ர்களுக்கும்-கேரளா மாநிலம் போன்று அனுப்பாமல் அந்தந்த ஊர்களிலே ஏன் மீன் பதனிடும் ஆலை ஏற்படுத்தி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக்கூடாது. சீனாவில் ஒரு பழமொழி உண்டு. ‘பசித்தவனுக்கு வறுத்த மீனைக் கொடுக்காதே-மாறாக அவன் மீன் பிடித்து அதன் மூலம் வாழ்வு நடத்த ஒரு தூண்டில் முள் கொடுத்து மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்று. ஆகவே பண்டிகை காலங்களில் தானம், தர்மம் செய்வதினை விட இது போன்ற தொழில்களில் அவர்களுக்கு வேலை கொடுத்து ஏழைகளுக்கு நிரந்தர வருமானத்தினைத் தரலாம்.

கோவை தொழில் அதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சாதாரண விவசாயி. அவர் எப்படி கார் மெக்கானிக் வேலை பார்த்து பலவேறு கார்-மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் அதிபரானார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு மருந்துக் கம்பெனி அதிபரானது பெரும்பாலானோருக்குத் தெரிந்திராது. ஒரு தடவை அவர் வயலில் உழுது கொண்டு இருந்தபோது லேபிலோடு கூடிய ஒரு மருந்து காலி பாட்டிலினைக் கண்டார். நாமாக இருந்தால் அதனை தூர எறிந்து விடுவோம். ஆனால் அவர் அதை எடுத்து அந்த மருந்துக் கம்பெனி விலாசத்திற்கு கடிதம் எழுதி அதனை தயாரிக்கும் உரிமமும் பெற்றார். ஏன் ஜப்பானியர் பொம்மை வியாபாரத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்றால்-தூக்கி வீசப்பட்ட காலி டப்பாவைக் கூட விடாமல் அதில் தங்கள் கை வண்ணங்களால் அவைகளை அனைவரும் ரசிக்கும் பொம்மைகளாக ஆக்கி விற்று விடுகின்றனர்.

எங்கள் ஊரைச்சுற்றி ஏராளமான அரிசி ஆலைகள் அதிகம். ஆனால் நெல்லிலிருந்து பிரிக்கப்படும் தவிடு-உமியினைக் கொண்டு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் மாட்டுத் தீவணம், கோழித் தீவணம், ஆயில், சோப், வனஸ்பதி தயாரிக்கிறார்கள் என்பதினை சில காலங்களுக்கு முன்னர் தானே அறிவர். இருந்தாலும் இன்னும் தாங்களே அந்தத் தொழிலைத் தொடங்காது அவர்களுக்கு தவிடு, உமிகளை விற்கும் வியாபாரியாகவே உள்ளனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். வுpதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம். அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற நிறுவனம் ரெடிமிக்ஸ் உணவு பண்டங்களைத் தொடங்கி ஏன் நமது பெண்களுக்கு வேலையினைக் கொடுக்கக் கூடாது. சுய தொழில் தொடங்கக்கூட அரசு மானியம் அளிக்கப் படுகிறதே.

நம்மில் சிலர் பம்பாய், குஜராத், டெல்லி போன்ற நகரங்களில் ரெடிமேட் துணிகளை வாங்கி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்களே துணிகளாக வாங்கி தையல் இயந்திரங்களால் பெண்கள் உதவியால் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது. அதுபோன்று உற்பத்தியில் ஈடுபட்ட திருப்ப+ர் இன்று செல்வும் கொழிக்கும் நகரமாகத் திகழ்கிறதே. மும்பையில் ஆயல் தொழிலில் ஈடுபட்ட தன் தந்தையினை விட பல படிக்கு மேல் சென்று மின்பொருள் தயாரிக்கும் விப்ரோ நிறுவனத்தினை ஆஸிம் பிரேம்ஜி நிறுவி 2008-2009 ஆம் ஆண்டு 19 சதவீத லாபத்தினை ஈட்டி ரூபாய்1162 கோடி சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.. என் கல்லூரி நண்பர் அமீர் அப்துல் காதர் கடந்த வாரம் தன் சொந்த ஊரான கீழக்கரை சென்று வந்தார் அவரை நலம் விசாரிக்கும் போது, அவர் சொன்னார.; தனதூரில் அறிவித்த மின்வெட்டு இரண்டு மணிநேரம்-அறிவிக்காத மின்வெட்டு பல தடவை என்றார். கடற்கரை நகரங்கள் காற்றும் வெயிலும் அதிகமாக இருக்கும். ஆகவே மின் பற்றாக் குறையினைப் போக்க ஏன் சோலார் கருவிகளை உற்பத்தி செய்து மின் விசிறி. வுpளக்கு, ஏன் மோட்டாரில் தண்ணீர் இறைக்கக் கூட வழிவகுக்கக் கூடாது. அரசே மானியம் வழங்குகிறதே. கடலூர் மாவட்டத்தில் காரியமங்கலம் என்ற ஊர் பஞ்சாயத்தின் மின் தேவைகளை சோலார் எனர்ஜி ழூலம் கிடைக்கப் பெற்ற இந்தியாவில் முதல் கிராம பஞ்சாயத்தாகத் திகழ்ந்து ஜனாதிபதியின் பரிசையும் தட்டிச்சென்றதே. பணம் படைத்தவர்கள் தான் மட்டும் இன்வெர்ட்டர், ஜென்ஜெட் போட்டுக் கொண்டு வாழ்வதினை விட்டு ஏழைகளுக்கும் உதவுமாறு செய்யலாமே1

நமதூரில் மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டுகளிலும் சுத்திகரிக்காத தண்ணீர் சப்ளை செய்வதைப் பார்க்கலாம். அதனால் பயோரியா போன்ற தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பரவ வழிகள் ஏற்படும். ஆகவே வாட்டர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் ஆலைகளை நிறுவலாம். நம்மில் சிமிண்ட் தொழில் அதிபர்கள் மானாமதுரை யாசின் சிமிண்ட்ஸ் போன்ற ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைத் தொடங்கிய ராம்கோ, இந்தியன் சிமிண்ட்ஸ், சங்கர் சிமிண்ட்ஸ் போன்றவர்களெல்லாம் சாப்ட்வேர் தொழில் இறங்கியள்ளனர். ஏன் அரசியல் வாதியாக இருந்து கல்வியாளராக மாறிய ஜேப்பியார் ரெடி கிராவல் மிக்ஸ் தொழில் செய்கிறார். நான் அதிராம்பட்டிணம் கல்லூரியில் வேலை பார்த்தபோது இருந்த தமிழ் பேராசிரியர் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அசன் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கன்யாகுமரி பகுதியில் மீன் பிடிப்பதிற்கான வலைகள் சென்னையிலிருந்து தான வாங்கினார்கள். ஏன் நாமும் அதேபோன்ற மீன் பிடி வலையினை தயாரிக்கக் கூடாது என்று யோசித்து மீன் வலை தயாரிககும் தொழில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கியுள்ளேன்-அதில் அந்தப் பகுதியினைச் சார்ந்த 20 நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன்-அங்கிருந்து சென்னைக்கு விற்பனையும் செய்கிறேன் என்றார். அதேபோன்று சென்னை மின்ட் அரசு பிரஸ் எதிர்புறம் நர்சரி செடிகள் உள்ளதாக அறிந்து அங்கு செனறேன். அதனை நடத்தி வருபவர் முபீன் ராஜா என்ற 30வயது இளைஞர். அவரிடம் எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்றேன். தான் தேனியைச் சார்ந்தவன் என்றும், நர்சரிச் செடிகள் வாங்கி விற்று வருந்ததாகவும், அதன் பின்பு அவை பெங்களுரிலிருந்து வரகிறது என்று அங்கே சென்றதாகவும். அங்கே சென்றால் நரசரி செடிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒசூரிலிருந்து வருகிறது என்றும் அறிந்தேன். ஆககே ஒசூருக்கு சென்றதாகவும் அங்கே தளி என்ற இடத்தில் நர்சரி செடிகள் பயிடப்பட்டதினை அறிந்து அங்கேயே இரண்டு ஏக்கரை லீஸ் எடுத்து தானே நர்சரிச் செடிகள் பயிருட்டு இன்று மதுரை, தேனி, பெங்களுர், சென்னை போன்ற இடங்களில் நர்சரி கார்டன்கள் நடத்துவதாகச்சொன்னார்.(தளியினை லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர் அழைத்தார்கள் என்று நான் அங்கு எஸ்.பியாக இருந்தபோது அறிவேன்). இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் எந்தத்தொழிலும் கேவலமில்லை-அது சொந்தத்தொழிலாக அமைய வேண்டும். கருவாடு விற்ற காசு நாறாது என்பதினை அனைவரும் அறிவர். அதேபோன்று மாந்தோப்புகளை வைத்திருப்பவர்கள் மாம்பழங்களை விற்கும் வெறும் வியாபாரிகளாக அல்லாது-மாம்பழ ஜூஸ்-மாங்காய் ஊறுகாய் போன்றவைகள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தயாரிப்பது போல தயாரிப்பில் ஈடுபடலாம். ஏன் வெறும் கார்ட்வேர் வியாபாரத்தினை காலங்காலமாக செய்யாது அந்தக் கார்டுவேர்-பெயின்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் தொழிலும் ஈடுபடவேண்டும்.

ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. மதுரையினைச்சார்ந்த ஓருவர் தெர்மல் எனர்ஜி சொலுசன் டிரங்க் பெட்டி போன்ற கரி அடுப்பினை கண்டு பிடித்துள்ளார். அதில் புகையே வராது என்ற தகவலும் உள்ளது. ஏன் அந்தப் பகுதியினைச்சார்ந்த நம்மவர் அதேபோன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது? சிறிய தொழில் தொடங்குவதிற் டிக்(தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்) சிட்பி(சிறு தொழில் முன்னேற்ற வங்கி) போன்ற நிறுவனங்கள் பொருள் உதவி செய்கின்றனர். சில தொழில்களில் சப்சைடி என்ற அரசு சலுகைகளும்-ஏற்றுமதி பொருள்களுக்கு டிராபேக் என்ற சலுகைகளும் உள்ளன. உலகிலேயே சீனா நாடு 12 சதவீத ஏற்றுமதியினை எட்டி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த படியாக இந்தியா 10.8 சதவீத ஏற்றுமதியினையும் தொட்டு விட்டது.

இறைவன் நமக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுக்கவில்லை-மாறாக அந்தக் கைகளில் பத்து விரல்களையும் கொடுத்தது போல-மனிதன் முன்னேற்றம் அடைவதிற்கு பல வழிகள் உள்ளன. அவைகளில் பலருக்கு உதவக்கூடிய தொழில்களை அந்தந்த பகுதிற்கேற்ப ஆரம்பித்தால் நிச்சயமாக நாளை நமதாகாதா?

வருமுன் காப்போம்

அன்பு நண்பர்களுக்கு,
முன்னால் காவல்துறை அதிகாரியிடமிருந்து மிகவும் பயனளிக்கக்கூடிய அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.

அன்புடன்
அப்பாஸ் ஷாஜஹான்
செயலாளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்

Abbas Shajahan | Mobile: +966 50 528 2791

From: Mohamed Ali
Date: Fri, Nov 13, 2009 at 4:49 PM
Subject: crime and prevention


Assalamu allaikum
I am sending a write up about the crime scenerio which is happening around us in order to educte them to be carefull. I hope it will be useful to circulate to our brothers in overseas in India to beware of crimes and criminal. Good day

AP,Mohamed Ali

வருமுன் காப்போம்

4.11.09 ந்தேதி அனைத்து பத்திரிக்கைகளும் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியிட்டன. அது என்ன? நூறு கோடிக்கு மேல் முதலீடு கொண்ட ஹிந்துஸ்தான் நேசனல் தொழிற் நிறுவனத்தின் இயக்குனர் சஞ்சய் சோமானியை டெல்லி விமான நிலையத்தில் தன்னுடன் மும்பை விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த எம்.கே. ப+ரி என்பவரின் ‘பிளாக் பெரி’ செல்போனை திருடி விமானத்தின் டாய்லெட்டில் ஒளித்து வைத்திருந்ததினை சி.சி.டி.வி; கேமரா மூலம் கண்டு பிடித்து கைது செய்துள்ளனர் எனபது அதிர்ச்சியாக இல்லையா?
5.11.09 ந்தேதி பத்திரி;கைகள் இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் தந்தன. ஏம.பி.ஏ பட்டதாரியான அனாமிக்கா ஜோசி தன் கனவருடன் பெங்களுரில.; வசித்து வருகின்றார் இருவரும் வௌ;வேறு கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஏழு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. அதனை பராமரிக்க ஒரு பெண்ணை நியமித்திருந்தார்கள. காலையில் வேலைக்குச் சென்றால் அருவரும் மாலையில் தான் வீடு திரும்பும் மெக்கானிக்கல் வாழ்க்கை. ஒரு நாள் தாய் அனாமிக்கா சீக்கிரமே வேலையை முடித்து மாலையே வீட்டுக்கு வந்திருக்கிறாள். அப்போது வேலைக்காரி வீட்டில் உள்ள டி.வி. பெட்டிக்கு முன்பு அமர்ந்து வழக்கம் போல கண்ணீர் விடும் டிராமா சீரியழை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். ஆனால் குழந்தையினைக் காண வில்லை. தாய் கேட்டதிற்கு வேலைக்காரி சரியான பதில் சொல்லவில்லை. உடனே அதட்டிக் கேட்டவுடன் அந்த வேலைக்காரி, ‘குழந்தையை தினமும் ரூபாய் 100க்கு வாடகைக்கு பிச்கை எடுப்பதிற்காக விட்டு சம்பாதிப்பதாகவும்’ சொல்லியுள்ளார். பதறிய தாய் குழந்தையினை மீட்டாள். அப்போது குழந்கை மயக்கத்தில் இருந்திருக்கிறது. விசாரித்ததில் அந்தக்குழந்தைக்கு பிச்சை எடுக்கும் போது மயக்க மருந்து கொடுத்து குழந்தை உடல் சவுகரியமில்லாதது போல் படுக்க வைத்து பிச்சை போடுபவர்கள்; மனம் இளகி அதிகமாக பிச்கை கொடுப்பதிற்கு வழிசெய்திருக்கிறார்கள்.
2) முதல் சம்பவம் எவ்வளவு வசதியில் வாழ்ந்தாழும் சிறுபொருளான செல்போனுக்காக தன் மான மரியாதை மட்டுமல்லாது பலர் வேலை செய்யும் பெரிய நிறுவனத்திற்கும் இழுக்கினைத் தேடித் தந்து விட்டார் சோமானி.
இரண்டாவது சம்பவம் பெற்ற சிறு பாலகனை பராமரிக்கக் கூட நேரமில்லாது பணத்திற்காக சுழன்று வருகின்ற நவீன உலகில் ஒரு வேலைக்காரி குற்றம் செய்ய உறுதுணையாக இருந்தது பரிதாபத்தின் காலகட்டம் எனறால் மிகையாகுமா?


மண்ணில் பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளும் நல்லவர்களே. ஆனால் அந்தக் குழந்தைகளில் சிலர் வளரும்போது தங்கள் பழக்க வழக்கங்களாலும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளாலும், நவீன மோகம், நாகரீக வாழ்வு, கானல் நீரான காதல் போன்றவைகளால் ஈர்க்கப் பட்டு குற்றங்களில் தள்ளப் படுகின்றனர் இளைஞர்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு நேப்பிள் நாட்டு இளவரசி ஒரு தடவை லண்டன் நகருக்கு வருகை தந்தபோது ஒரு சூப்பர் மாரக்;கட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கேயிருந்த வேலைப்பாடு நிறைந்த ஒரு சில்வர் கரண்டி அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. உடனே அதனை எடுத்து தன் உள் பாவாடையில் ஒளித்துக் கொண்டு செல்வதினை சி.சி.டி.வி காட்டிக் கொடுத்து பிடிபட்டது கேவலமான செய்தியாகத் தெரியவில்லையா? ஆகவே தான் சில பழக்க வழக்கங்களால் குற்றங்கள் செய்வதினை சிலர் தொடர்கின்றனர். ஆகவே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அடுத்தவர் பொருளைத் தொடக்கூடாது, ஆசையும் வைக்கக்கூடாது என்று போதனை செய்ய வேண்டும்.
3) வீடுகளை கூட்டுக்குடும்பம், தனிக்குடித்தனம் என இரண்டாகப் பிரிக்கலாம். கூட்டுக்குடும்பங்களில் இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு, பொறாமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவைகளினால் குற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணத்திற்கு சகேதர சகோதரிகளுக்குள்ளும், அவர்களுடைய குழந்கைகளுக்குள்ளும் உள்ள கருத்து வேறுபாடுகளினாலும் பழக்க வழக்கங்கினாலும் குற்றங்கள் நடக்கலாம். ஒருவருடைய நகையினையயோ-பணத்தினையோ எடுத்து மறைத்துக் கொண்டு அடுத்தவர் மீது பழிபோடும் சம்பவங்களினால் குடும்பக் குழப்பம் வந்த சம்பவங்கள் ஏராளம். அதுபோன்ற குற்றங்களை கண்டுபிடிக்க சிலர் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் துணையையும் நாடுகின்றனர். ஆனால் விலையுயர்ந்த பொடுட்களை பத்திரப்படுத்தி வைப்பதே ஒவ்வொருவரின் கடமையாகும். தங்கம் பவுனுக்கு ரூபாய் 12500க்கு விற்கும் போது அதனை பத்திரப் படுத்துவதிற்கு ஏன் ரூ 10000 செலவில் ஒரு திண்டுக்கல் இரும்புப் பெடடியினை அந்தக்கால வீடுகளில் வைத்து பராமரிப்பது போல நகைகளையும், ரூபாயையும் பாதுகாக்கக் கூடாது.. வங்கி லாக்கரில் நகைகளை வைக்க வேண்டுமென்றாலும் வருடத்திற்கு ரூபாய் 20000 செலவாகுமே!
4) விசேசங்களுக்கு அல்லது வெளியூர்களுக்குச் செல்லும் போது அருதிலுள்ளவர்களிடமோ அல்லது சொந்தக்காரர்களிடமோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களிளோ சொல்லி ‘லாக்குட் ஹவுஸ் ரிஜிஸ்டரில்’ பதிவு செய்து போலீஸ் பீட் போடச்சொல்லவேண்டும். அப்படிச் செல்பவர்கள் வீட்டில் ஒரு விளக்கினை எரியச்செய்ய வேண்டும.;. வீடுகளை பார்த்துக் கொள்ள வயதானவர்களை மட்டுமோ அல்லது தனியாக பெண்களயோ பார்த்துக் கொள்ளச் சொல்லி வெளியூர்களுக்குச் செல்வது அவர்களை குற்றவாளிகளுக்கு பலியாக்குவது போன்ற நடவடிக்கையாகும்.
நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற கள்ளிக்கோட்டை பல்கலைக்கழக வைஸ் சான்சிலர் மாலிக் முகம்மது அவர் மனைவி ஆகியோர் தனியான பங்களாவில் இருக்கும் போதே கொலை செய்யப்பட்டு அவர்கள் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட செய்தியினை நீங்களெல்லாம் படித்திருப்பீர்கள். அதேபோன்றுதான் அசோக் நகரில் வசித்த நான் மாநிலக் கல்லூரியில் படித்தபோது விக்டோரி விடுதி வார்டனாக இருந்தவரும், பின்பு மாநில அரசில் கனிதவள மேம்பாட்டு சேர்மனாக பதவி வகுத்தவருமான பேராசிரியர் சரவணன் மற்றும் அவர் மனைவியும் பங்களாவில் கொலை செய்யப்பட்டு அவர்கள் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆகவேதான் பெரியவர்கள் சொல்வார்கள், ‘வாழும் போது சுற்றம் சூழ வாழ்’ என்றால் அது எவ்வளவு சரியானது என்று அறியலாம்.
5) பல லட்சம் செலவு செய்து பலர் ரசிக்க அழகிய வீடுகளைக் கட்டுகிறோம். ஆனால் வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளான கதவு-ஜன்னல்களுக்கு கிரில் கேட் போடுவது, வெளி நபர்களை கண்காணிக்க தேவையான ஆடியோ-விசுவல் கேமரா மற்றும் சி.சி.டி.வி கேமரா போன்ற சாதனங்களை அமைக்க மறந்து விடுகிறோம். அவ்வாறு அமைப்பதின் பிரதிபலனை சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் இங்கே சொல்வது உகந்தது என எண்ணுகிறேன். ஒரு அமெரிக்கர் வேலை சம்பந்தமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச்சென்றார். அங்கே அவருக்கும் அந்த நாட்டு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செயது கொண்டனர். அமெரிக்கர் மட்டும் அமெரிக்கா திரும்பி தனது புது மனைவியினை அமெரிக்கா அழைக்க விசாவிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இருவரும் தங்கள் அன்பை சி.சி.டி.வி. மூலம் பரிமாரிக் கொண்டனர். அவ்வாறு ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் தன் அமெரிக்க கணவர் வீட்டில் திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக நுழைவதினைக் கண்டார். உடனே தன் கணவரை உசார்படுத்தினார். அவரும் போலீஸ_க்கு தகவல் சொல்லி அந்தத் திருடனைப் பிடிக்க உதவி செய்தார் பல ஆயிரம் மைலுக்கப்பாலுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு மனைவி என்றால் எப்படி சி.சி.டி.வி குற்றத்தினை தடுக்க உதவியாக இருக்கிறது என்பதினை நினைக்கும் போது நம் வீட்டிலும் அது போன்ற சாதனங்களைப் பொருத்தி குற்றங்களை ஏன் தடுக்கக் கூடாது.. 6) சில வசதி படைத்தவர்கள் வீடுகளில் போலீஸ்-கஸ்டம்ஸ்-இன்கம்டாக்ஸ்-என்போர்ஸ்மென்ட் அதிகாரிகள் என்ற போர்வையில் போலி ஆசாமிகள் வீடுகளில் நுழைந்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுவதினைக் காணலாம். சுpல கறுப்புப்பண ஆசாமிகள் அதனை காவல் நிலைத்திற்குச் சொல்லாததால் அவர்களின் குற்ற வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது அவ்வாறு வருபவர்களிடம் சோதனையிடுவதிற்கு முன்பு படித்த உறவினருக்கும், அருகிலுள்ள வக்கீலுக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து அவர்கள் உண்மையான அதிகாரிகள் என்று தெரிந்த பின்பு நம்பிக்கையான சாட்சிகள் துணையுடன் தான் சோதனை போட அனுமதியளிக்க வேண்டும். அப்படி சோதனை போட்ட பின்பு அவர்கள் எடுத்துச்செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் அவர்கள் கையெழுத்திட்ட ரசீது கேட்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
7) படிக்கும் வளர்ந்த பிள்ளைகள் செயல்படும் முறைகளை கண்காணித்து அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அதிக நேரம் கம்ப்ய+ட்டரில் செலவழிக்கும் விதத்தினையும், செலபோனின் உரையாடலையும், எஸ்.எம்.எஸ்ஸின் பரிவர்த்தனைகளையும் அவைகளெல்லாம் உண்மையிலேயே அவர்கள் படிக்கும் படிப்பிற்கு அல்லது அவர்கள் பார்க்கும் பணிக்கு சம்பந்தப்பட்டதா என்றும் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவர்கள் குற்ற பின்னணிக்கு திரும்பும் போக்கிற்கு நாமும் துணை போனவர்கள் ஆக மாட்டோமா? கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்-மாணவியர் புத்தகப் பைகளை சோதனையிட்டு தேவையில்லாத கடிதங்களோ-தகவல்களோ இருக்கிறதா என்று பார்த்து, அப்படி சோதனையில் தேவையில்லாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் அதனை தடுப்பது பெற்றோர்கள்-உடன் பிறந்தோர் கடமையாகும். இல்லையென்றால் அவர்கள் காதலென்ற மாயையில் வீழ்வதையும், போதை மருந்துக்கு அடிமையாவதையும், தீவிரவாத போதனைகளுக்கும் அவர்கள் பலியாவதை யாராலும் தடுக்க முடியாது..
8) என் கவனத்திற்கு வந்த இரண்டு தகவல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன்:
முதலாவது: சுமார் 10 வருடத்திற்கு முன்பு சென்னையில் எட்டாவது படிக்கும் வயதிற்கு வந்த முஸ்லிம் சிறிமிக்கு கல்ல}ரியில் முதலாமாண்டு படிக்கும் பையன் ஒருவன் காதல் கடிதங்களை அந்த அறியாத சிறிமிக்குக் கொடுத்து தன் காதல் வலையில் வுPழ்த்தி ஒரு நாள் காலையில் பள்ளிக்குச் சென்ற சிறுமி வீட்டுக்கு மாலை வரவில்லை. பெற்றோர் பதறியடித்துக் கொண்டு தேடாத இடமில்லை. இரவில் என்னிடம் தகவல் சொன்னார்கள். நானும் திருவல்லிக்கேனி காவல் நிலையத்தினை உசார் படுத்தித் தேடச் சொன்னேன். அவர்கள் நடு ராத்திரியில் போக வழி தெரியாமல் மெரினா பீச் லேபர் சிலையின் பின் பக்கம் உட்கார்ந்திருந்தது தெரிந்து அவர்களை அழைத்து வந்தார்கள். ஆனால் எந்த தவறும் நடக்குமுனபு சிறிமி மீட்கப்பட்டாள். அவளை விசாரித்த போது காலையில் பள்ளி செல்லும்போதே மாற்று உடையினை பள்ளி பேக்கில் எடுத்துச் சென்றது தெரிந்தது.
அடுத்தது: 1995 ஆம் ஆண்டு நான் போதை தடுப்பு கண்காணிப்பாளராக இருந்தபோது நடந்த சம்பவம். சேன்னை கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் மகன் ஜெகன் 1993 ஆம் ஆண்டு பி.டெக் படிப்பினை முடித்து விட்டு ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் பரீட்சை முதல்நிலையில் வெற்றி வெற்று முதன்மை தேர்வில் தோல்வியடைந்திருந்தான். பின்பு அவன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் என்ஜினியராக வேலை பார்த்தான். அப்போது அவன் இலங்கை கூட்டாளிகளுடன் சேர்ந்து போதைக்கு அடிமையானான். தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அவன் சென்னை திரும்பி மறுபடியும் ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்ட்டரில் 1995 ஆம் ஆண்டு சேர்ந்தான. அவனுடைய தந்தை மகனுக்கு தன் வீட்டின் மேல் மாடியில் ஏ.சி, கம்ய+ட்டர், .இன்டர்நெட் வசதியையும் செய்து கொடுத்திருந்தார். ஆனால் மகன் அந்த அறையில் ஒழுங்காக பரீட்சைக்குப் படிக்கிறானா என்பதினை கவனிக்கத் தவறி விட்டார். எங்களுக்கு தேனாம்பேட்டையில் உள்ள ஒரு எஸ்.டி.டி. ப+த்திலிருந்து கெஹராயின் போதை பொருள் கடத்தப் படுவதாக அறிந்து அந்த ப+த்தினை தணிக்கை செய்யும்போது ஜெகனும் பிடிபட்டான். அவனை மறுபடியும் இலங்கை வாலிபர்கள் தொடர்பு கொண்டு போதைக்கு அடிமை ஆக்கியதோடு மட்டுமல்லாது போதைப் பொருள் கடத்துவதிற்கும் அவனை பயன்படுத்தியுள்ளனர். ஜெகன் வீட்டில் அவன் அறையினை தந்தையின் முன்பு சோதனையிட்டபோது தந்தையே ஆச்சரியப்படும் அளவிற்கு பெத்தடின், மர்ஜூனா என்ற போதை மருந்து ஊசிகளும், மது பாட்டில், சிகரட் போன்ற பொருள்களைப்பார்த்து தந்தை அதிர்ந்து விட்டார். ஆகவே தான் நான் குறிப்பிட்டது போல் மாணவர்கள், இளைஞர்களை தண்ணீர் தெளித்து விடாது அவர்களின் நல்ல நண்பர்களாக பெற்றோர்-உடன் பிறந்தோர் இருந்து வழிநடத்த வேண்டும். தவறு செய்வதினை ஒரு போதும் கண்டிக்கத் தவறக்கூடாது. எப்படி சீனி அதிகமாக சாப்பிட்டால் சீக்கிரத்தில் சக்கரை நோய்க்கு நம்மை தொற்றிக் கொள்கிறதோ-தங்க ஊசியானாலும் கண்ணில் குத்திக் கொள்வதில்லையோ அதேபோன்று பெற்றோரோ அல்லது பாட்டி-பாட்டனாரோ இளைஞர்களுக்கு செல்லம் கொடுப்பது எதிர்கால வாழ்வினை பாழடித்துவிடும.;.
9) தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதியினர் தங்களுடைய துணைக்கு பெரியோர்களை வைத்துக் கொள்வது நல்லது. அவ்வாறு இல்லையெனில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்வது சாலச் சிறந்ததாகும்.
வீட்டில் அத்யாவசிய வேலைகளுக்கு வருகின்ற கார் டிரைவர், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், பால், பேப்பர், குடிதண்ணீர,; கேஸ் ஆகியவைகளை வினியோகிப்பவர்களை வீட்டின் கதவிலுள்ள ‘மேஜிக்’ ஐயின் வழியாக பார்த்துத்தான் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கும்போது அவர்கள் வேலையினை முடித்து விட்டு வெளியேறும்வரை அவர்கள் குற்றம் செய்ய வந்திருக்கிறார்கள் என்ற மனப்பான்மையினை உருவாக்;கி அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்தக் காரணத்தினையும் கொண்டு அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள் என்று வீட்டின் ஹாலுக்குள் அனுமதிக்கக் கூடாது. ஏன் கூடாது என்று இரண்டு சம்பவங்கள் கொண்டு விளக்க விரும்புகிறேன்.
முதலாவது: 1997ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தினைச் சார்ந்த கீழக்கரை தொழில் அதிபர் தன் மகள் திருமணத்திற்காக வீட்டில் மெசைக் தரை பாலிசிங்கிற்கு விட்டு விட்டு பக்கத்து உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். பாலிஸ் போடுபவர்களை தன் டிரைவரை வைத்து கவனிக்கச் சொல்லியிருந்தார். ஒரு வாரம் பாலிஸ் நடந்தது. ஒரு நாள் தற்செயலாக பீரோவில் உள்ள கல்யாண நகை பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்தபோது அந்த நகைகளைக் காணாது அதிர்ச்சியடைந்தார். உடனே என் உதவியினை நாடினார். நானும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சொல்லி விசாரிக்கச் சொன்னேன். போலீசாரும் வீட்டின் உரிமையாளரின் கார் டிரைவர் மற்றும் அங்கே பாலிஸ் போடுபவர்களை அழைத்து விசாரித்தார்கள். ஆனால் வீட்டின் உரிமையாளர் தன் டிரைவரை விசாரிக்க வேண்டாம் அவன் பல வருடங்களாக வேலை பார்ப்பதாகவும்-நல்லவன் என்றும் சொன்னார். கடைசியில் போலிஸ் விசாரணையில் அந்த டிரைவர் தான் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பீரோவில் இருந்த நகைகளை எடுத்துள்ளான். அத்துனை நகைகளும் மீட்டு அவருக்கு கொடுக்கப்பட்டது. திருமணமும் சிறப்பாக அமைந்தது என்று அவர் சொன்னார். அவர் உங்களை திருமணத்திற்கு அழைத்தாரா என்று கேட்பீர்கள். இல்லை என்று சொல்வதுடன்; அது தான்.மனிதர்களின் நன்றி-காவலர் கடமையுமாகும் என்பேன்.
இரண்டாவது: இரண்டு மாதங்களுக்கு முந்தைய சம்பவத்தினையும் உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். பெங்களுரில் வேலை பார்க்கும் சுப்ரமணியம் என்பலர் தன் இரண்டு பிள்ளைகள் படிப்பிற்காக தன் மனைவி அன்னலட்சுமியையும், குழந்தைகளையும் சென்னை வளசரவாக்கத்தில் விட்டிருந்தார். ஒருவர் அவர்களுக்கு அப்பப்ப உதவி செய்வது போல அந்தப் பெண்மனி வீட்டிற்கு வந்திருக்கிறார். ஒரு நாள் அந்தப் பெண்மனி பாங்கிலிருந்து ருபாய் நாற்பது ஆயிரம் செலவிற்காக எடுத்து வீட்டில் வைத்திருக்கிறார் என அறிந்து அதனை அபகரிக்க தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த வீட்டிற்கு வந்து அந்த பெண்மனியை மட்டும் கொல்லாது அவள் சிறிய மகனையும் கொன்று பணத்தையும் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாது அவள் அனிந்த நகைகளையும் அபகரித்து தப்பி விட்டார்கள. பின்பு அவர்கள் பிடிபட்டு செலவு போக மீதப் பணமும் நகையும் மீட்கப்பட்டது. மேலே சொல்லப்பட்டவை சில எடுத்துக்காட்டு தான். இது போன்ற சம்பவங்கள் ஏராளம்.
பேண்கள் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் தனியாக இருக்கும்போது தற்காப்பிற்கு தேவையான மிளகாய் பொடி பாக்கட், சிறிய அரிவாள், உருட்டுக் கட்டை போன்ற உபகரணங்களை தங்கள் கண்ணுக்குப் படும் அளவிற்கு வைத்துக் கொள்ளவேண்டும். இரவில் வீட்டில் திருடர்கள் நுழையும் அறிகுறி தெரிந்தால் உடனே லைட்டைப் போடாமல் அபாய ஒலியினை எழுப்பக்கூடிய காலிங் பெல்;;;;லையோ, ஒலிப்பானையோ, காரின் ரிமோட் ஒலிப்பானையோ உபபோகித்து ஒலி எழுப்பி மற்றவர்களை அழைக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு தொலைபேசியிலும் தகவல் கொடுக்கவும். அவசர போலீஸ_க்கு போன் போடவும் தயங்கக் கூடாது. தங்கள் கற்புக்கு களங்கம் ஏற்படும்போது எதிரியின் உயிர் உறுப்பில், நெஞ்சில், கண்ணில், முனங்காளில்; தன் கை, கால்களை உபயோகித்து பலமான காயங்கள ஏற்படுத்த ஆண்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் பெண்கள், ‘வருமுன் காக்கும்’ பயிற்சியினை பெற்றவர்களாவர.; குழந்தைகளிடம் பள்ளியில் இருக்கும்போது உங்கள் பெற்றேர் ஆக்ஸிடண்ட் ஆகி விட்டார்கள் அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச்சொன்னார்கள் என்று அறிமுகமில்லாதவர் கூப்பிட்டால் பள்ளிக் கூடத்தினை விட்டு செல்லக்கூடாது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் பிள்ளைகளை கூட்டிச் சென்று நகைகள அபகரித்து விடுவார்கள்.

பஸ், மோட்டார் சைக்கிள், கார், ரயில், விமானம் போன்ற பயணங்களில் ஏற்பட்டும் குற்றங்கள் அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளினைக் காணலாம்:
நகரங்களில் பஸ்ஸில் பயணம் செல்வது ‘நைட்மேரிஸ்’ (திக்குமுக்காடும்) செயல் என்றால் மிகையாது.. ஏனென்றால் நகரங்களில் கூட்ட நெரிசல் ஒரு பக்கமிருக்கும்போது மறுபக்கம் பிக்பாக்கட் திருடர்களின் அட்டூழியம் தாங்கமுடியாது.. பிக்பாக்கட் அடிப்பவர்கள் பெரும்பாலும் ஒன்றுக்குமேற்பட்டவர்கள் தான் வருவார்கள. அவர்கள் நீங்கள் வைத்திருக்கும் பணத்தினையும். புர்சினையும் பஸ்ஸில் ஏறும்போதோ அல்லது பஸ்ஸில் நிற்கும்போதோ உங்கள் மீது உராய்வதின் மூலம் அறிந்து கொண்டு தங்கள் வாயினுள்ளோ அல்லது கையிடுக்கினுள்ளோ வைத்திருக்கும் பிளேடினை உபயோகித்து பேண்ட், சர்ட், கைப்பையில ஓட்டை போட்டு பணத்தினையும் நகைகளையும் எடுத்து தன் கூட்டாளிகளிடம் கொடுத்து தப்ப விடுவார்கள். அதேபோன்று பெண்கள் குழந்தைகளுடனோ, தனியாகவோ உட்கார்ந்து இருக்கும் போதோ நின்று பயணம் செய்யும் போதோ பெண்திருடர்கள் மூலம் சங்கிலி, சரடு, பிள்ளைகளின் கொழுசு ஆகியவைகளை திருடிவிடுவார்கள். நாம் அபாயக்குரல் எழுப்பினால் வாயில் போட்டு முழுங்குவதுடன், தங்கள் ஆசனவாய்-பெண்உறுப்பில் கூட கண்டு பிடிக்காத அளவிற்கு மறைத்து விடுவார்கள். ஆகவே பணத்தினை கொண்டு செல்பவர்கள் தங்கள் உள்ளாடையில் மறைத்தும்-நகைகளை தாவணிகொண்டு கழுத்தில் மறைத்தலும் வேண்டும். அதேபோன்று அந்தியரிடம் தங்கள் உடமையினைக் கொடுத்துவிட்டு பாத்ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ, தெரிந்த நபரிடமோ பேசிக்ககொண்டு இருந்தால் உங்கள் உடமையினை நீங்கள் இழக்க நேரிடும்.
ரயில் பயனங்களில் செல்லும்போது தங்களுடைய பெட்டிகளை இணைப்புச் சங்கிலியால் ப+ட்டிவிடபேண்டும். விலையுயர்ந்த பொருட்கள்-பணம் இருந்தால் தங்கள் கையிலேயோ-தலைமாட்டிலோ வைத்து படுத்துக் கொள்ளவேண்டும். அறியாதவர் கொடுக்கும் உணவுப்பொருட்களை எந்தக் காரணம் கொண்டும் வாங்கிச் சாப்பிடுவதோ அல்லது குடிப்பதோ கூடாது. ஏனன்றால் மயக்க மருந்தினை தடவிய சாப்பாடு-அல்லது குடிக்கும் பானங்களைக் கொடுத்து குடிக்கச் சொல்லி நீங்கள் மயங்கிய நிலையில் உங்கள் உடமைகளை அபகரித்து விடுவார்கள். பிரான்சு நாட்டு சக்கரவர்த்தியாக திகழ்ந்த நெப்போலியன் போன்பார்ட் போரில் தோல்வியடைந்து சிறைப்பட்ட சமயத்தில் அவனுக்கு உணவில் சிறுக சிறுக அர்சனிக் விசம் கொடுத்து அதனால் சாவு ஏற்பட்டது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். உங்கள் செல்போனையோ-கடிகாரத்தையோ-மணிபர்சையோ-பேனாவையோ திருடர்கள் கண்படி நம் படுக்கை அருகேயுள்ள பலகையில் வைக்க வேண்டாம். நான் 5 மாதத்திற்கு முன்பு என் துணைவியுடன் இளையாங்குடி சென்று விட்டு ராமேஸவரம் எக்பிரஸ் ரயிலில் சென்னைக்கு ஏ.சி. கோச்சில் பயணம் மோற்கொண்டேன். என் கோச்சில் இராமநாதபுரம் எம.எல்.ஏ அசன்அலியும் பயனம் செய்தார். அவர் இரவு வெகுநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சத்தம் எங்களுக்குக்கேட்டது.. அதிகாலை ஆறு மணிக்கு ரயில் தின்டிவனத்தினை தாண்டும் போது அவசரமாக என்னை எழுப்பி, ‘ சார் என் இரண்டு செல்போன்களை இரவு உணவுப்பொருள்-தண்ணீர் வைக்கும் மரப்பலகையில் வைத்திருந்தேன,; அவை விலையுயர்ந்தது என்றும் அவைகளைக் காணவில்லை என்றும் பதறினார். நாங்கள் ரயில் பெட்டியின் அடியில் தேடினோம் கிடைக்கவில்லை. டி.டி.இ மற்றும் ரயில்வே காவலர் உதவி கொண்டும் உடன் பயணம் செய்தவர்கள் பெட்டிகளில் தேடினோம் அப்போதும் கிடைக்கவில்லை. அப்போதுதான் ரயில் அட்டண்டன்ட் சொல்கிறான் நேற்றும் இதுபோன்று செல்போன் திருடு போனதாக. பின்;பு அவர் டி.டி.இடம் ஒரு எழுத்துப்ப+ர்வமான புகார் கொடுத்துதோடு சரி இதுவரையும் கண்டு பிடிக்க முடியவில்லையென்று சில தினங்களுக்கு முன்பு அவரை சந்தித்தபோது சொன்னார். திருடுகிறவனுக்கு பதவியெல்லாம் கண்ணுக்குத்தெரியாது. அவன் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பான். பேண்கள் கழிவறைக்குச் செல்லும்போது கண்டிப்பாக ஆண்கள் துணைக்குச் செல்லவேண்டும். ஏனென்றால் சில ஆண்கள் சில்மிசம் வேலை செய்வார்கள். அத்துடன் சில திருடர்கள்-டிக்கட் எடுக்காதவர்கள் டாய்லெட்டில் ஒளிந்திருப்பார்கள். பெண்கள் சென்றதும் அவர்களை மயக்கம் வருமளவிற்கு காயம் ஏற்படுத்தி பொருட்களை அபகரித்து ரயிலிலிருந்து குதித்து தப்பித்து விடுவர்.
மோட்டார் சைக்கிளில் பயணம் செல்லும்போது பணம், நகையுள்ள கைப்பைகளை ஹோண்ட்பாரில் தொங்கவிட்டுக் கொண்டு சென்றால் வழிப்பறிக் கொள்ளையர் பறித்துக் கொண்டு ஓடுவதிற்கு சுலபமாகி விடும். ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் தான் பணம் கொண்டு செல்பவர் செல்லவேண்டும். அத்துடன் உங்கள் கவனத்தினை வேறு பக்கம் சிறு ரூபாயினையோ-நரகளையோ போட்டு திருப்பி உங்கள் பொருளை அபகரிக்க முடியும். வங்கியில் பணபரிமாற்றத்தினை அன்னியர் அறியும் படி செய்யக்கூடாது. உங்கள் சேமிப்பில் எவ்வளவு பணம் இருக்கிறது என்றும் அடுத்தவர் அறியக்கூடாது. ஏனென்றால் உங்களைக் கடத்தி அல்லது உங்கள் கிரிடிட் கார்டை பயன்படுத்தி பேங்கிலிருந்து பணம் எடுத்து விடுவர். நீங்கள் வாகனங்களில் செல்லும்போது உங்கள் வண்டியினைத் எந்த வாகனமும் பின் தொடர்கிறதா என்று சைடு கண்ணாடியில் பார்க்க வேண்டும். அப்படி பின்தொடர்ந்தால் உடனே கூட்டம் நிறைந்த பகுதிக்கோ-காவல்நிலைய பகுதிக்கோ உங்கள் வண்டியினை திருப்பிச் செல்லவேண்டும். விமானப்பயணங்களில் உங்கள் ஹேண்ட் லக்கேஜினை உங்கள் பார்வையிலே வைத்துக் கொள்ளவேண்டும் இல்லையென்றால் உங்கள் ஹேண்ட்பேக்கில் உங்களுக்குத் தெரியாமல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைக்கப் படலாம். வுpமான பயத்திற்கு முன்பு யாராவது ஒரு பையினைக் கொடுத்து தெரிந்தவர்களிடம் கொடுத்து விடுங்கள் என்றால் நன்றாக அறிமுக ஆனவரிடம் மட்டும் தான் அதுவும் அவர் பையினை சோதனையிட்டு தடைசெய்யப்பட்ட பொருள் ஏதுவுமில்லை என்றால் தான் வுhங்கவேண்டும். இல்லையெனில் பாவம் அவர் பக்கமும்-பழி உங்கள் மீதும் விழுவதினை நீங்கள் தடுக்க முடியாது. அது போல விமான நிலையத்தில் இறங்கி உடன் இரவோடு இரவாக டாக்ஸயினைப் பிடித்து ஊர்போய் சேரவேண்டும் என முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் அறிமுகமில்லாத டாக்சியில் செல்லும்போது உங்கள் பொருட்கள் கொள்ளையடிக்கப் படலாம். ஏன் உங்கள் உயிருக்குக்கூட ஆபத்து நேரலாம். நீங்கள் அவ்வாறு அவசரமான காரியங்களுக்கு ஊர் செல்லவேண்டுமென்றால் விமான நிலையத்தில் இயங்கும் லைசன்ஸ் பெற்ற டாக்ஸிகளை அமர்த்திக் கொள்ளலாம். இல்லையென்றால் ஏதாவது லாட்ஜிலோ அல்லது தெரிந்தவர்கள் இல்லத்திலோ தங்கி செல்வதுதான் சாலச்சிறந்ததாகும்.
திருமண வைபவங்களுக்குச் செல்லும் போது தங்களுக்கும்-தங்கள் குழந்தைகளுக்கும் அடுத்தவர் தங்கள் செல்வகொழிப்பை அறிந்து கொள்ளவேண்டும் என்று ஏராளமான நகையறிந்து வருவதைப் பார்க்கலாம். அதனால் இல்லாதவர் மனதிலும் குற்ற நடவடிக்கைக்கு தூபம் போடும் காரியத்தில் அவர்களை ஈடுபடுத்தும் நிலைக்குத் தள்ளுவோம். விசேச நிகழ்ச்சிகளில் அறிமுகமில்லாத நபர்களிடம் அதிக பேச்சில் ஈடுபடக்கூடாது. நகையணிந்த பெண்களோ அல்லது குழந்தையோ தனியாக பாத் ரூமுக்கு அனுப்பக்கூடாது. ஏனென்றால் அவ்வாறு தனியாக நகையணிந்த 5 வயது சிறிமிளை பாத்ரூம் காட்டுகிறேன் என்று அறிமுக மில்லாதவர் எழும்ப+ர் இம்பீரயல் ஹோட்டலில் பைஸ் மஹாலில் உள்ள பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று அந்தச் சிறிமியின் காதனி-சங்கிலியினைப் பறித்து விரட்டிவிட்டதும் நடந்திருக்கிறது. அது என் கவனத்திற்கு வந்தபோது நான் எழும்ப+ர் காவல்நிலையத்தில் சொல்லி கண்காணிக்கச் செய்தபோது இதுபோன்ற திருமண வைபங்களில் நகை பறிக்கும் 45 வயது ஆணை கைது செய்தனர்.; ஏன் எங்சள் ஊரின் அருகேயுள்ள சாலைய+ரில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு கோல்ட் கவரிங் சங்கிலி அணிந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டே வயதான சிறுமியின் கழுத்தினை நெரித்துக் கொன்று அருகிலுள்ள வைக்கோல் போரில் ஒளித்து விட்டு கவரிங் சங்கிலைக் தங்கமெனக் கருதி கொள்ளை யடித்த பெண் ஒருவர் பின்பு பிடிபட்டு தண்டிக்கப் பட்டார.; ஆகவே இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
நீங்கள் நடந்து செல்லும்போதோ-வாகனத்தில் பயணம் செய்யும்போதோ உங்களை கடத்தி உங்களுக்கு ஆபத்து ஏற்பட முற்படலாம். ஆகவே வாக்கிங் செல்லும்போது விடிந்த பின்பு எல்லோராலும்; உபயோகிக்கும் பாதையில் துணையுடன் செல்லவேண்டும். 2001 ஆம் ஆண்டு கடைசியில் சென்னையில் அதிகாலையில் தனியாக வாக்கிங் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே. பாலன் சென்றபோது வாகனத்தில் மடக்கி கடத்தி சென்று கொல்லப்பட்ப பரபரப்பான செய்தியினை அனைவரும் அறிவர். வாக்கிங் செல்லும்போது வாக்மேன், ஐ போன் போன்றவைகளை உபயோகித்து மிய+சிக் கேட்டுக் கொணடோ அல்லது செல்போன் பேசிக் கொண்டே சென்றால் உங்களை கடத்துவது சிரமமில்லை என நினைக்க வேண்டும். உங்கள் வாகனத்தினை மறித்து ஏதும் வண்டி வந்து நின்றால் உடனே வண்டி சைரனையோ அல்லது டோர் ரிமோட் கண்ட்ரோலை இயக்கியும், அதிக சப்தம் எழுப்பி உங்கள் உதவிக்கு அபாயக் குரல் எழுப்பலாம். நீங்கள் கடத்தப்படும் நேரம் சில நிமிடங்களேயானதால், நீங்கள் முடிந்த மட்டும் அவர்கள் உங்களைக் கடத்தாமல் கைகளாலும்-கால்களாலும் உதைத்துப் போராட வேண்டும்.
குற்ற சம்பவங்கள் நடந்தபின்பு எவ்வாறு சினிமாவில் வரும் காட்சிகளை ஒன்று விடாது அடுத்தவரிடம் விவரிக்கிறோமோ அதேபோல குற்றம் சம்பந்தமான விவரங்களை நம் கண்முன் நிறுத்தி ஒன்று விடாமல் காவல் துறையினருக்குச் சொல்லுவதின் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நீஙகள் பெரிதும் உதவுவீர்கள். குழந்தைகள,; பெரியோர்களிடம் தெரிந்தவர், அவசர போலீஸ் ஆகிபோருக்கு எப்படி போன் செய்யது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆங்கிலத்தில், ‘பிரிவன்ஸன் இஸ் பெட்டர் தேன் கீய+ர் என்பார்கள்’ குற்றம் நடந்த பின்பு காவல்துறையினர் பின்னால் பொருள் செலவித்து அலைவதினை விட குற்றம் நடவாது தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதின் மூலம் வுருமுன் நம்மைக் காப்போம் என்று அனைவரும் சூழுரைப்போம்.

Saturday, January 2, 2010

எது கவிதை?

எது கவிதை?

கைத்தட்ட(ல்) வேண்டுவதா கவிதை? - எண்ணம்
கருத்தனையத் தூண்டுவதே கவிதை.-மின்னும்
பொய்யூற்றிப் புலம்புவதா கவிதை? - நன்கு
புனைந்தாலும் பேருண்மை கவிதை. - கண்ணில்
மைதீட்டும் செயற்பாடா கவிதை? - மண்ணில்
மெய் தேடும் சமன்பாடே கவிதை. - இன்னும்
வையத்தில் வானவில்லா கவிதை? - உண்மை
உள்ளத்தில் மலர்த்துவதே கவிதை ஐயா!
சந்தமதன் வசந்தத்தை செவிகள் கேட்க
சாரமது போதுமென்று சிலபேர் சொல்ல
முந்தையதே கவிதையாகும் மற்ற யாவும்
முறையற்றுப் போனதென்ற முறையீ டுண்டு
பிந்தையதே கவிதையாகும்; பொருளே தேடல்
பொருட்டில்லை மரபென்ற பேச்சும் உண்டு.
எந்தவிதம் கவிதையாகும் என்னைக் கேட்டால்
இதயத்தில் பதிவதையே கவிதை என்பேன்.
கந்தகத்தைக் கொண்டிருக்கும் கவிதைப் பேனா
கொடுமைகளை எரிப்பதிலே நெருப்புக் குச்சி
விந்தைகளை வியப்பதுவே விருப்பம் என்று
உயர்மொழியில் பூச்சூடும் வனிதைப் பாக்கள்
சொந்தகதை சோகத்தைச் சொல்லும் சொற்கள்
சுகங்காண இலக்கியத்தை செய்யும் கைகள்
இந்தவிதம் கவிவகைகள் எண்ணி மாளா
இருந்தாலும் கவிதைக்கோர் கருத்தைச் சொல்வேன்.
சிந்தையிலே பூபூக்கும் கவிதை வந்து
சிகரத்தை கால்களுக்குச் சொல்லிப் போகும்
சந்தையிலே கிடைப்பதல்ல; கவிதை தன்னை
சூல்கொண்டு பிரசவிக்க தாய்மை வேண்டும்
மந்தையிலே ஒன்றில்லை; கவிதை என்றால்
மலையுச்சி தீபம்போல் வெளிச்சம் பேசும்
பந்தயங்கள் கவிக்கில்லை; பாரில் யாரும்
பெருவானில் ஓடுதளம் அமைப்ப தில்லை.


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
fakhrudeen.h@gmail.com


இறைவா!
என் நிலையையும்
நினைப்பையும் சமப்படுத்துவாயாக.
நீ நாடியிருந்தால்
நிலையை உயர்த்து.
ஒரு போதும்
நினைப்பை உயர்த்தி விடாதே!
__._,_.___

”சிசு” வதைக்கு தீர்வு காண்போம் !

”சிசு” வதைக்கு தீர்வு காண்போம் !

ஆக்கம்:- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=228

நாடு முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதி முக்கிய செய்திகளில் சிசுக் கொலையும் ஒன்றாக இடம் பிடித்து விட்டது. சிசுவதை பற்றிய செய்தி இல்லாத நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களை காண்பது அரிதாகி விட்டது. அந்தளவுக்கு சிசுக்கொலை சர்வ சாதாரணமாகியுள்ளது. இதற்கு தீர்வு தான் என்ன?

இந்தப் பழக்கம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே மக்களுக்கு மத்தியில் இருந்து வந்துள்ளதை கீழ்க்கண்ட இறை வசனத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். “பெண் குழந்தை (பிறந்தது) என்ற நற்செய்தியை அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்களின் முகம் கறுத்து அவர்கள் கவலை அடைந்து விடுகிறார்கள்”. (அல்குர்ஆன் 16:58) இந்த வசனத்தின் பிம்பமாக மற்றொரு வசனமும் நம்மை சிந்திக்க வைக்கிறது. “நீங்கள் வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளை கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை, வசதிகளையும்) அளிக்கிறோம். அவர்களை கொலை செய்வது பெரும் பாவமாகும்”. (அல்குர்ஆன் 17 :31) இந்த குர்ஆனின் வசனங்கள் இறங்கிய நேரத்தில் மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் சீரழிந்து காணப்பட்டது.

பெண் குழந்தை பிறந்து விட்டால் ஒன்று அந்தக் குழந்தையை கொன்று புதைத்து விடுவது, அல்லது பெற்றவளை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்ற மூடப்பழக்கம் மிகைத்த காலத்தில் தான் பெண்ணின் பெருமையை இறைவன் உலக மக்களுக்கு உணர்த்தினான். இந்த இறைவசனங்கள் இறங்கியதற்குப் பின்னால் முகம்மது நபி (ஸல்) அவர்கள் பெண் சிசுக்கொலையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தமது விழிப்புணர்வு பிரச்சார யுக்தியை கையாண்டார்கள்.

பெண்ணின் சிறப்பைப் பற்றி நபிகள் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது எந்த ஒருப் பெண் ஒழுக்கத்தோடு வாழ்கிறாரோ, அவரே இவ்வுலகத்தின் மிகச்சிறந்த செல்வம் எனக் கூறினார்கள். பெரு மானாரின் காலத்திலேயே பெண் சிசுக்கொலை கொஞ்சம், கொஞ்சமாக மாறி மறைந்தன. பெண்ணைப் பெற்றவர்கள் மகிழ்வு கொள்ளும் நிலையை இறைவனும் அவனது இறைத்தூதரும் ஏற்படுத்திக் கொடுத் துள்ளது சிந்தனைக்கினிய சுப செய்தியாகும்.

உங்களில் ஒருவர் திருமணத்தை நாடினால் உங்கள்மீது விதியாக்கப் பட்டுள்ள மஹர் தொகையை உங்களது மனைவியிடம் கொடுத்து உங்களுக்கு உரிமையாக்கி கொள்ளுங்கள் என நபிகள் (ஸல்) அவர்கள் பெண் சமுதாயம் எதிர் கொண்டிருந்த வரதட்சிணைக் கொடுமையை இறைவனின் கட்டளையின் பேரில் மஹர் என்னும் ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார்கள் என்பது உண்மை வரலாறு !

இதற்கு அத்தாட்சியாக எங்கெல்லாம் முஸ்லிம்களின் ஆட்சி நடை பெறுகிறதோ, அங்கெல்லாம் வரதட்சிணை என்றால் என்ன? எனக் கேட்கும் அளவுக்கு பெண் சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ்ந்து வருவதை கண் கூடாக காண முடிகிறது.

சிசுக் கொலையில் ஈடுபடுபவர்களிடம் காரணம் கேட்டால் வரதட்சிணக் கொடுமையைத் தான் கூறுகிறார்கள். இதற்கு கடந்த 27/07/2000 குமுதம் வார இதழில் வெளியான ஒரு செய்தி கட்டியம் கூறுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் தனியார் நர்சிங் ஹோமில் சிகிச்சைக்காக வந்த ஒன்பது மாத குழந்தை ஒன்றை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் தொண்டைக் குழிக்குள் உடைந்த பல்பு ஒன்றின் கண்ணாடித் துண்டு சிக்கியிருப்பதை லாரிங் காஸ் கோப் என்ற கருவியால் கண்டறிந்து சாஃப்ட் போர் செப்ஸ் என்ற மற்றொரு கருவியை பயன்படுத்தி லாவகமாக அந்தக் கண்ணாடித் துண்டை வெளியில் எடுத்தாராம்.

இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்ன தெரியுமா? குழந்தையின் தாயை அழைத்த டாக்டர் பல்பு துண்டு எப்படி குழந்தையின் தொண்டைக்குள் போனது என்று விசாரித்ததும் கதறி அழுத தாய் தான் தான் குழந்தையின் தொண்டைக்குள் பல்பு துண்டை தள்ளி குழந்தையை கொல்ல் முயன்றதாக ஒப்புக் கொண்டாளாம். இதற்கு அவள் கூறும் காரணங்கள், தனக்கு அடுத்தடுத்து பெண் குழந்தை களாகவே பிறந்ததால் குடும்பத்தினரின் குத்தல் பேச்சுக்களை சகிக்க முடியாமல் கடைசியாக பிறந்த இந்தக் குழந்தையை இரண்டு முறை தலையணையால் அமுக்கி கொல்ல முயன்றாளாம்.

குழந்தை மூச்சுத்திணருவதைப் பார்த்து மனமிறங்கி கொல்ல வில்லையாம். “பெற்ற மனம் பித்து – பிள்ளை மனம் கல்லு” என்பதை உதட்டளவில் சொன்ன இந்தப்பெண் மூன்றாவதாக உடைந்த பல்பு துண்டை குழந்தை துப்ப, துப்ப மீண்டும், மீண்டும் தொண்டைக்குள் தள்ளி கொல்ல முயன்றிருக்கிறாள். குழந்தை விடாமல் வீறிட்டு அழவே உண்மை தெரியாத உறவினர்கள் என்னவோ? ஏதோ? என்று மருத்துவமனைக்கு எடுத்து வந்திருக்கிறார்கள். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் ஐயா ! என மருத்துவரிடம் கதறி அழுதாளாம் அந்தத் தாய்.

இந்தத் செய்தியை படித்ததும் நமக்கு மக்களின் அறியாமை காலம் தான் நினைவுக்கு வருகிறது. ஈமெயில் புரட்சி, கணிணி புரட்சி என்கிறோம். அறிவியலில் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கும் நாம் அறிவில் மட்டும் தலைகீழாக இருக்கிறோமே? இது எந்த வகையில் நியாயம்? அறிவியலின் துணை கொண்டு கருவிலேயே அழிக்கும் தாய் மார்கள் ஒரு புறம் அறியாமையின் காரணத்தால் பெற்ற பிறகு அழிக்கும் கொடூரம் மறுபுறம். ஐந்தறிவு கொண்ட பிராணிகள் கூட, தான் ஈன்ற குட்டியை அது ஆணோ? பெண்ணோ? எதுவானாலும் பாகுபாடு பார்க்காமல் நக்கி பால் கொடுக்கும். அந்த தாய்ப்பாசம் ஆறறிவுள்ள மனிதர்களுக்கு இல்லையே ! தான் பெற்ற குழந்தையை புதை குழிக்கு அனுப்பிவிட்டு எப்படித்தான் இவர்கள் நிம்மதியாக வாழ முடிகிறதோ? நாளை மறுமை நாளில் கொல்லப்பட்ட அந்தக் குழந்தை களிடம் நீ எந்த பாவத்திற்காக கொல்லப்பட்டாய்? என இறைவன் கேட்கும் போது ஒரு பாவமும் அறியாத அந்தப் பச்சிளம் குழந்தை இந்த படுபாதகி தான் என்னை காரணமின்றி கொலை செய்தாள்.

என்று தன் தாயை கை காட்டுமே, என்ற பயமோ, அச்சமோ இல்லாததால் தான் துணிந்து இந்த காரியத்தை செய்கிறார்கள். சிசுக்கொலையில் முதலிடம் பெற்ற மாவட்டம் தேனி என்ற நிலை மாறி தற்போது சேலம் என செய்திகள் வருகிறதே ! இதற்கான காரணம் தான் என்ன? இரண்டு காரணங்களால் தான் சிசுக்கொலை மிகைத்து வருகிறது எனக்கூறலாம். 1) வறுமையை பற்றிய அச்சம் 2) வரதட்சிணை பற்றிய பயம். ஆண் குழந்தைகளை பெற்றாலாவது எப்படியும் பின்னால் சம்பாதித்துப் போடும். ஆனால் பெண் குழந்தைகளை பெற்றால் அதை வளர்த்து கரை சேர்க்கும் வரை எவ்வளவு செலவுகள்? சிக்கல்கள்? என்று பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் கூட நினைக்கிறார்கள்.

நம்மில் பல ஊர்களில் கூட பெண் குழந்தைகள் என்றால் ஏதோ அது தங்கள் தலையில் ஏற்றப்பட்ட சுமை போன்று கருதும் மனிதர்களை யும் பெண் குழந்தைகள் அதிகமாக பெற்றவர்களை பரிதாபமாக பார்க்கும் அவல நிலையையும் சர்வ சாதாரணமாக காணலாம். பெண் குழந்தைகள் என்றால் கவலைப்பட்டு கலங்கி நிற்கும் இன்றைய சூழ் நிலைக்கான அடிப்படைக் காரணமே வரதட்சிணை தான் என மகளிர் தேசிய குழுவினரின் ஒரு அறிக்கை தெளிவு படுத்துகிறது.

1983 – ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி வரதட்சிணை சாவு வருடத்திற்கு 427- ஆக இருந்தது. ஆனால் 1998 – ஆம் ஆண்டு கணக்கின்படி வருடத்திற்கு 6917- ஆக உயர்ந்து விட்டதாம். 15 ஆண்டு களில் 15 மடங்கு வரதட்சிணை சாவின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. என அந்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. வரதட்சிணை என்ற இந்த விஷ வேர் முழுவதுமாக வெட்டி எறியப்பட்டால் தான் பெண்மை மதிக்கப்படும். பெண் குழந்தைகளின் உயிரும் பாதுகாக்கப் படும்.

இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் இன்றைய இளம் பெண்கள் மேலை நாட்டு நாகரீக மோகத்தில் சிக்குண்டு பெண்மைக் குரிய பண்பாட்டையும் மீறி பிற ஆடவர்கள் ஒன்று சேர்ந்து குடித்து கும்மாளம் போட்டு ஆடிப்பாடும் இடங்களில் பெண்களும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் சரி நிகராக கலந்து கொள்வதின் மூலம் தேவையற்ற ஆண்களின் நட்பு என்ற போர்வையில் அநாகரீக உறவை ஏற்படுத்திக் கொள்வதுடன் உணர்ச்சி மேலீட்டால் தங்களது கற்பையும் இழந்து அதன் மூலம் தங்களது வயிற்றில் பாவச் சுமையையும் சுமந்து கொள்கின்ற அவல நிலைகள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வேதனைக்குரியதல்லவா? இது போன்ற ஒழுங்கீனத்தால் உண்டான குழந்தைகளை சமூகத்தில் வளர்க்க வெட்கப்பட்டு கருவிலேயே அழித்துக் கொள்வதும் அல்லது பெற்றபின் கொல்வதும் தான் சிசுக்கொலை மிகைத்து வரக் காரணமாகும். கடந்த 11.08.2000 நாளிதழ்களில் வெளிவந்த ஒரு செய்தி இதற்கு சாட்சியம் கூறுகிறது.

நெல்லை ஈரடுக்கு மேல் பாலத்திற்கு கீழே பிறந்து தொப்புள் கொடியின் இரத்தம் கூட காயாத நிலையில் குழந்தை இறந்து கிடந்த தாம். தங்களின் ஐந்து நிமிட அற்ப சுகத்திற்காக ஒரு பச்சிளம் உயிரை பலி கொடுப்பது எந்த வகையில் நியாயம்? கடைசி நாளின் அறிகுறி களில் ஒன்றாக “விபச்சாரம் பெருகும்” என்று முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்களே ! அது இது தானோ? “நல்ல பெண்ணே இவ்வுலகின் மிகச்சிறந்த செல்வம்” என்று பெண்ணை போற்றி மகிழ்கிறது இஸ்லாம் !

ஜாதி மத பேதமின்றி இஸ்லாத்தின் இந்த உன்னதமான அறிவுரையை ஒவ்வொரு பெண்களும் பேணி பாதுகாத்து நாகரீக மோகத்திலிருந்து ஒதுங்கி பிற ஆடவருக்கு முன்பு வெட்கத்துடனும், ஒழுக்கத்துடனும் வாழ முற்பட்டால் போதும் தானாகவே முடிவுக்கு வந்து விடும் சிசுக்கொலையின் அத்தியாயம் ! இது தான் இன்றைய சமூகத்திற்கு வேண்டிய விழிப்புணர்வு !

குறிப்பு :

வாசகர்கள் தங்களது விமர்சனத்தை
SJAROOSI @ Yahoo.com என்ற மின்னஞ்சல் அல்லது
0091 – 9677839394 என்ற அலைபேசியிலோ பதிவு
செய்யலாம்.

Friday, January 1, 2010

SELF TALK FOR SELF MOTIVATION

SELF TALK FOR SELF MOTIVATION

Self-talk technique is the simple way of programming your subconscious mind in the normal wakeful state to achieve any thing in life. In this technique you will replace the old negative programming in your subconscious mind by your conscious positive specific statements. The “Self Talk Technique” will give your subconscious mind a new set of directions, which will help you to motivate yourself in any area of your life. There are three ways of applying Self Talk.


1. General Self-Talk: Keep talking positive at all the times within yourselves.

2. Situational Self-Talk: At different situations use different positive Self Talk, depending upon the situations.

3. Motivational Self-Talk: This Self Talk is practiced everyday. Read the following passages loudly. As you read them, make yourself feel that they are true you. Read every sentence with lot of feelings. You can modify them or add more sentences to suit your needs.

SELF TALK FOR SELF MOTIVATION

I have set my goals and I am achieving it. I know what I want. I have a clear picture of what I want. I know how to get it. I go after it and get it. I can see it in front of me. I can do anything that I want in my life.

I have the ability and inner power to achieve my goals. My goals and my incredible belief in myself turn my goals into reality. I am in control of my goals. I practice ‘Breathing Hypnosis’ regularly and visualize my long term and immediate goals.

I have lots of determination. I have lots of energy. I am very energetic. I trust myself. I have strength, power and confidence! I like challenges. I believe in myself. I feel good about myself.

I am honest. I am sincere. I am organized. I think clearly. I am in complete control of myself. I accept responsibilities. I live up to the responsibilities I accept. I accept failures. I accept the rewards of my victories. I am very committed.

I am very well organized. I am efficient. I am in full control of my time. I get things done in time. I manage my time very well. I am always punctual.

I am very positive person. I am intelligent. I am quick and alert. I am a special person. I am always on the top of the world. My life is fantastic. I like people and people like to deal with me. I have the inner strength to do whatever I want. I do my best. I always get the best.

The way I think is the way I live. I am in control of what I think and how I think. I choose to think only those thoughts, which help me to achieve my goals. I have winning attitude. I am always in a winning direction.

Things are great in my life. I am an exceptional human being. I have the power to live my dreams. I believe in them like I believe in myself. And that belief is so strong that there is nothing that diminishes my undefeatable spirit.


Thanks and Regards,
Jahabar Sadhik

ETA-Information Technology Services.
#301 Embassy Suites,
Al Muteena Street,
Contact No : 971 4 2688145 Extn. 105
Email: sadiq@etaascon.com

http://www.vellinila.blogspot.com/

http://www.vellinila.blogspot.com/

Thursday, December 31, 2009

Should not Tamilnadu Muslims represent in IAS/IPS?

Should not Tamilnadu Muslims represent in IAS/IPS?

(Dr. A.P. Mohamed Ali, Ph. D; I.P.S ®)


Tamilnadu newspapers dated 4th May carried the headlines of creating the history in All India Civil Services examinations by securing 97 places by Tamilnadu candidates out of 645 vacancies in India which consists of 34 States. Among them 25 selected were trained by the Trust run by Chennai-Saidapet Ex-AIADMK M.L.A Mr. Saidai Duraisamy. There are other institutions which trained for Union Public Service Commissions for All India Services such as the Institutions run by State Government at Anna Nagar, Periyar Trust at Vepery, the trust run by Ex-IAS Officer Mr. Dayaneswaran at Vadapalani, the training given for Nadars by Sivanthi Adithan at Tuticorin Dist. at Veerapandiapattinam Adithanar College and for the Backward class by B.S.A. Cresent College at Vandalore.


But the training institution run by Cresent College could not make much strides to help Muslim aspirants, the reason best known to the authorities. Every one knew that The Muslim Educational Association of South India was founded on 7th February 1906 by the well wishers of our community and it is running a chain of educational institutions including New College, in which I got my bachelor degree in 1965. The institution is located at the heart of Metropolitan Chennai City in Royapettah. They are 5 objects of the Association, namely

to devise means for the dissemination of higher education among Muslims and to promote the study of Urdu, Persian and Arabic
to arrange for imparting religious instruction
to help poor but intelligent and deserving students with scholarships, books, school, fees, etc
to impress on the minds of Muslim Public by means of lectures---
the necessity for imparting western education

v) to safeguard and promote the rights and interests of the Muslim community in all spheres of life, viz; religious, educational, cultural, social and economic.


As per objects of the Visionaries of MEASI, the poor and intelligent students of the Muslim community should be helped freely to safeguard the interests educationally and economically. 27 life members of MEASI including me found that there is an impeding necessity to start the comprehensive training academy at New College to impart training for the aspirants for the employment in the Central and State Governments in UPSC and TNPSC, the training for the TOFEL, GRE, IELTS to get higher education at Foreign countries, FIIT-JEE the comprehensive entrance examination to get admitted at Indian Institute of Technology and Indian Institute of Management, CAT-SAT to get admission in M.B.A and other competitive examinations. So we presented a memorandum to MEASI on 3.10.2007 to start the MEASI ACADEMY of CAREER GUIDANCES. When the General Body meeting was held on 15.10.2008 at NEW COLLEGe premises some of the interested, influential and affluent members ensured that the memorandum was not carried out. Instead they brought another resolution to amend Rule 10 to make all Past Presidents to become the members of the Governing Council so as to circumvent the democratic principles of the election. Such resolution was not dreamt the great Past Presidents like Justice Basheer Ahamed Sayyid, Abdul Majid of Tenkasi and Sirajul Millet A.K.A. Abdul Samad Sahibs.


This is the tips of the icebergs in which the self centered Muslim Leaders are not bothered about the welfare of the Intelligent and educated Poor Muslim students. The State Government of Tamilnadu had announced 3.5 percent reservation in the employment for Muslims and Central Government had announced 27 percent reservation for OBC in the Government Jobs and educational institutions. If an Academy is started at centrally located New College premises it would help the job seeking Muslim students who will achieve their goals of well placed in the society. In the competitive world, the training institutions fleece the aspirants with the higher fees. The poor Muslim students may not part with higher tuition fees in such institutions. Hence it is imperative to start the training academy for Muslim intelligent students to compete with the students of Non-Muslim candidates and achieve their goals in All India and State levels. Further we should also help the students for higher studies abroad.


Everyone would have studied in News papers that Dinamalar and The Hindu run by Brahmin community are conducting Job Fairs. There are good numbers of Companies run by Muslim Rich persons. MEASI or any other Muslim social organization can organize the Job Mela for Muslim job –keepers. The Muslim entrepreneurs can also think of giving preference to Muslims in the employment. If anyone makes an independent survey every one will be surprised to find a large number of Non-Muslims are employed in the business centers of Muslim affluent. But they will come into rescue when their institutions come into attack by Hindutva elements. I will quote some examples: 1) I was D.S.P Coimbatore Town from 1977 to 1980. I know that there is one big cloth store namely Shoba Cloth Centre and sister concern Sobika. Both of them employed many non-muslims as employees. But unfortunately when both of them were razed to the ground by the Hindu fanatics during 1998 riots no one came forward to defend them. Similarly when Gujarat was witnessing the genocide of muslims after Dogra train burning incident most of the textiles and machine tools factories and shops owned by Muslims were burnt to ashes. Neither BJP Central Govt. not non-muslim employees came forward to defend them. Still there are not rehabilitated and languishing in refugee camps. Many Techie Muslim brethren know that a software company runs by Muslim business man at Chennai, which employed many Brahmins Directors in prime posts by paying hefty salaries to the tune of Rs. One lakh to Rs. Two lakh per month ended in heavy loss.


Hence I make a fervent appeal for the Muslim intelligentsia to think of helping the hapless brethren to start the expressing their views unitedly to start the Career Guidance Academy for Muslim Students and conduct Employment Fair both in India and abroad.

பார்க்கவும் வேண்டுமோ..????

பார்க்கவும் வேண்டுமோ..????

பட்டப் படிப்பு முடிப்பதற்குள்...கணினி
வேலைக்கும் உத்தரவு.....
இருபத்தியொரு வயதினிலே....
இருபத்தைந்தாயிரம் கையினிலே.....
கேட்கவும் வேண்டுமோ..?

யௌவன கர்வம்.....
வாணியும்...'ஸ்ரீ' யும் கூடி நிற்க...
அழகோடு அறிவும் சேர்ந்தால்....
கேட்கவும் வேண்டுமோ..?

மனமகுடதிற்கு.....கூடவே....
குணம் குன்றலானது.....
கண்பார்க்கும் எதுவும் துச்சமானது...
வருமானம் தந்த தன்மானம்.....
கேட்கவும் வேண்டுமோ..?

காதோடு இணைந்த 'கைபேசி'
தோளோடு தழுவும் 'தோல்ப்பை'..
உலகமே துச்சமாய் ஒரு பார்வை...
கேட்கவும் வேண்டுமோ..?

கவலை ஏதும் அறியாது....
உலக உண்மை புரியாது...
பெற்றோர்களின் அறிவுரைகள்...
அறவே..தனக்குப் பிடிக்காது....
தறுதலை பதில்களும்..வெறும்..
தலையாட்டலும்......அனாசய
நிராகரிப்பில்...
கேட்கவும் வேண்டுமோ?...

பணதருமை அறியாது...
பச்சை நோட்டுக்கள் கத்தை கத்தையாய்...
பூச் செண்டுக்கும், செருப்புக்கும், சென்ட்டுக்கும் பறக்க...
சொல்லப் போனால்....'சுதந்திரம் போச்சு'
என.. ஏக வசனத்தில் வெடிக்க....
கேட்கவும் வேண்டுமோ....?

வளர்ந்த பெண்ணின் வாய்க்கு
பயந்து....பயந்து.....பயந்து.........
அன்பின் அச்சாணியில்....சுழன்று...
போகும் வழி தவறென்று......
மனசுக்குள் மணி அடிக்க...
கேட்கவும் வேண்டுமோ..?

பெற்றவரின் மன உளைச்சல்...
பெருமை எல்லாம் ஊருக்காகத்தான்..
வீட்டின் உள்ளே.....பொருமித் தீர்க்கும் மனசு....!!
கேட்கவும் வேண்டுமோ...?

கால்கட்டு போட்டுவிட்டால்...பெண்
கைபிடிக்குள் வந்திடுவாள்....என
ஏமாளிப் பெற்றோர்கள்.....வரன் தேடி அலைய.........
கோமாளி ஆகுதற்க்கே.....புதுத் துணையோடு...
நுழைந்தாள்......மகள்....!!!
கேட்கவும் வேண்டுமோ...?

பட்டமும்.. ..வேலையும்.....வந்ததால்.....
தந்ததே.....சுதந்திரம்....அவளுக்கு...
மாலையாய்....... வந்ததே....
மலர்வளையம்..... எங்களுக்கு..!!!!
பார்க்கவும் வேண்டுமோ..????

ஜெயஸ்ரீ ஷங்கர்....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்;.டி, ஐ.பி.எஸ்(ஓ)

1947 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ந்தேதி இந்தியத் துணைக்கண்டம் மதக் கலவரங்களுக்கிடையே சுதந்திரம் அடைந்தது அனைவரும் அறிந்ததே. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தான் ஒரு பகுதியாகவும், இந்துக்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதி இந்தியாகவும் பிரிந்தது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதா பாகிஸ்தானுக்கு இடம் பெயர்வதா என்ற முடிவெடுக்கும் பொறுப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினைச் சார்ந்திருந்தது. அதுவும் தமிழ் மொழி பேசும் தமிழ்நாடு முஸ்லிம்கள் உருது மொழி பேசும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர முடியுமா என்ற பதை பதைப்பு ஏற்பட்ட போது அனைத்துக் கட்சித்தலைவர்களும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு தீர்மானத்தை கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிறைவேற்றியது. அது என்ன தீர்மானம்? ‘இந்தியா தான் எங்கள் தாய் நாடு இஸ்லாம் எங்கள் மதம்’, என்று உரத்த குரலில் முழக்கமிட்டதின் மூலம் இந்திய நாட்டின் மேல் முஸ்லிம்களுக்கு உள்ள பற்றினை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் காயிதே மில்லத் அவர்கள். ஆகவே தான் உயிரோடு வாழும் வரை அனைத்துத் தலைவர்களாலும் கண்ணியமிகு காயிதே மில்லத் என்று அழைக்கப்பட்டார். இந்திய முஸ்லிம்களின் நட்சத்திரமாக விளங்கினார்.

ஆனால் அவர் மறைவிற்குப் பின்னர் அந்த ஒற்றுமை முஸ்லிம் தலைவர்களிடையே தேய் பிறையாகி விட்டது. எப்படி கம்யூனிஸ்டுகள் மார்க்கிஸ்ட் என்ற இடதுசாரிகள் நம்பூதிபாட் தலைமையிலும், வலதுசாரிகள் மும்பையைச் சார்ந்த டாண்டன் தலைமையிலும் பிரிந்து செயலாற்றினார்களோ அதேபோன்று முஸ்லிம்லீக் கட்சியிலும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியிலும் பனத்வாலா தலைமையில் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும்,சுலைமான் சேட் தலைமையில் தேசிய லீக் கட்சியும் இயங்கி வந்தது. இரண்டு தலைவர்களுமே பாராளுமன்றத்தில் சிறந்த பேச்சாளர்கள். மற்ற கட்சித் தலைவர்களாலும் மதிக்கப் பெற்றவர்கள். ஆனால் அவர்கள் இருவரும் பிரியாமல் இருந்திருந்தால் அவர்களே பாராளுமன்றத்தில் நுழைவதற்காக மற்றக் கட்சிகளின் கதவுகளைத் தட்ட வேண்டியும், சில தகுதி இல்லாத தலைவர்களின் வீடுகளில் சீட்டுக்காக காத்து இருந்த வேதனையான நிகழ்ச்சிகளெல்லாம் நடந்திருக்காது. அதே போன்ற அவல நிலைதான் இடது-வலதுசாரி கம்யூனிஸ்ட்களுக்கும் தனித்தன்மையுடன் முழு பலத்துடன் பாராளுமன்றத்திலோ அல்லது சட்டசபையிலோ நுழைய முடியவில்லை. வலதுசாரிகளிடமிருந்து பிரிந்து அரசியல் நடத்திய யு.சி.பி.ஐக்கும் அதே நிலைதான். அதன் பின்பு தங்கள் தவறை உணர்ந்து கம்யூனிஸ்டுகள் கூட்டணி அமைத்து மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், திரிப்புரா மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தும், பாராளுமன்றத்திலும் அதிக எண்ணிக்கையுடன் நுழைய முடிந்தது.

அதே போன்ற கூட்டணி ஏன் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களும் உருவாக்கக்கூடாது? 100 கோடி ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் ஓட்டுப்போட உரிமை உள்ளவர்கள் 71 கோடி மக்கள். இதனில் 15 சதவீத மக்கள் முஸ்லிம்கள் ஆவர். 543 மக்கவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் வெறும் 34 பேர்கள்தான். முஸ்லிம்கள் ஏன் பிற கட்சிகளின் ஓட்டு வங்கியாக மாற வேண்டும்? இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபோது இருந்த அரசியல் கட்டுக்கோப்பு இன்று இல்லாததால்தானே! 1991 ஆம் வருடம் நடந்த தமிழக சட்டசபைத்தேர்தலில் முஸ்லிம் அமைப்புகள் பிரிந்த இருந்ததால் சட்டசபையில் சோபிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல் 1992 ஆம் வருடம் டிசம்பர் 6ல் பாபர்மசூதி இடிக்கப்பட்ட பிறகு சென்னையில் நடத்திய மீலாது ஊர்வலத்தில் மூன்று முஸ்லிம்கள் கொல்லப்பட்ட துயர சம்பவத்தில் நாம் வாய்பொத்திய ஊமையாக மாறினோம். அதன் பிறகு சிராஜூல் மில்லத் அப்துல் சமது அவர்களும், அப்துல் லத்தீப் அவர்களும் ஒற்றுமையின் அவசரத்தை உணர்ந்து இணைந்தார்கள. அவர்கள் கூட்டு முயற்சிற்கு பின் நான் சென்னை பைக்கிராப்ட்ஸ் ரோட்டில் இருக்கும் ஜம் ஜம் ரியல் எஸ்டேட்ஸ் ஸ்தாபனம் நடத்திய ஈத் மிலான் நிகழ்ச்சியில் இருவருக்கும் வாழ்த்துச் சொன்னேன். அதனைத் தொடர்ந்து அவர்கள் 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ந்தேதி மிக பிரமாண்டமான ஊர்வலம் சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்திலிருந்து மெரினா கடற்கரை வரை சென்று பின்பு பொதுக்கூட்டமும் நடந்தது. அதன் பாதுகாப்புப் பணியினை நான் டி.சியாக இருந்த போதுக் கவனித்தேன். அதன் பின்பு ஜனாப். அப்துல் லத்தீப் அவர்கள் 1996 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கூட தேசிய காங்கிரஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்று போட்டி போட்டது. சோபிக்க முடியவில்லை. அதன்பின்பு இரண்டு காங்கிரஸ_ம் இணைந்து போட்டி போட்டு கூடுதல் எம்.பீ, எம்.ஏக்களைப் பெற்றது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் பல இருப்பதால் மே மாதம் 13ந்தேதி நடக்கின்ற மக்களவைத் தேர்தலில் சொந்த சின்னத்தில் கூட போட்டிப் போட முடியாத பரிதாப நிலை உள்ளது. பேராசிரியர் காதர் முகைதீன் தலைவராகக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும்,தேசிய லீக் இரு பிரிவுகளாகி கோனிகா பசீர் தலைமையிலும், இனாயத்துல்லா தலைமையிலும், தமிழ் மாநில லீக் என்ற கட்சி சேக் டாவூட் தலைமையிலும் இயங்கி வருகிறது. 1998 ஆம் ஆண்டு கோவைக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட இஸ்லாமிய சமூதாயத்திற்காக குரல் எழுப்பிய சமுதாய தொண்டு நிறுவனம் ஜனாப். ஜெயினுலாப்தீன் தலைமையில் த.மு.மு.க என்று இயங்கி வந்தது. அந்த அமைப்புதான் பெண்கள் தெருவிற்கு வந்து முஸ்லிம்களுக்காக குரல் ஏழுப்பிய முதல் இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்தது. துரதிஸ்டமாக அந்த இயக்கம் மூனறாக உடைந்து ஒரு இயக்கத்திற்கு ஜெயினுலாபுதினும், மற்றொரு இயக்கத்திற்கு எஸ்.எம். பாக்கரும், மூன்றாவது இயக்கத்திற்கு ஹைதர் அலியும் தலைவர்களாக இருக்கின்றனர். ஹைதர் அலி தலைமையிலான இயக்கம் அரசியல் மனிதநேய கட்சியினை பிப்ரவரி மாதம் தொடங்கியது. காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான் ஒரு அரசியல் கட்சியினை நடத்தி வருகிறார்.
மே மாதம் 13ந்தேதி நடக்கும் மக்களவைத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வேலூர் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் தன் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. மற்ற முஸ்லிம் இயக்கங்கள் அ.இ.அ.தி.மு.க. தங்களை வெற்றிலை பாக்கு வைத்து மரியாதையோடு அழைத்து ஆதரவு தர வேண்டும் என எதிர் பார்த்தன. ஆனால் எப்போதுமே முஸ்லிம் சமுதாய மக்களை அலட்சியப் படுத்தும் அஇஅதிமுக அந்தக்கட்சிகளை கண்டு கொள்ளவில்லை என பத்திரிக்கை செய்திகள் சொன்னதில் தவறில்லை என்ற படி ஜெயினுலாபுதினும், கோனிகா பசீரும், தாவூத் மியாக்கானும் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 10 சதவீத மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் அமைப்புகள் நமக்கென பிரைச்சின்னத்தில் அல்லது வேறு தனிச்சின்னத்தில் வேட்பாளரை நிறுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் இல்லாமலில்லை. நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் தனிச்சின்னத்தில் போட்டி போடும் போது நமக்கு மட்டும் முடியவில்லையே அது ஏன்? உதாரணத்திற்கு நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க.வும், நடிகர் சிரஞ்சீவி பிரஜா சமாஜம் கட்சியும் உச்ச நீதி மன்றம் வரை சென்று தனிச்சின்னத்தில் போட்டியிட உத்தரவு பெற்று போட்டியிடுகின்றன. வட தமிழகத்தில் மட்டும் பிடிப்புள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும், கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களைப் பெற்றாலும், மக்களைத்தேர்தலில் 2 இடங்களை திமுக கூட்டணியில் பெற்றதோடல்லாமல் தணி சின்னத்தில் போட்டியிடுவதிற்காக உச்சமன்றத்தில் தனி சின்னம் ஒதுக்கீட செய்ய மனு செய்திருக்கதே, ஏன் முஸ்லிம் அமைப்புகளின் செல்வாக்கு தமிழகமெங்கும் பரவியிருக்கும் போது நாம் தனிச்சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சி போல 2 சீட்டுகள் பெற்று தனி சின்னத்தில் போட்டி போட முடியவில்லை? நமது அமைப்புகளிடையே ஒற்றுமை இன்மை முதல் காரணமாகும் என்றால் யாராலும் மறுக்க முடியுமா?

5.5.1970 ஆம் ஆண்டு நள்ளிரவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம்களிடையே கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் பேருரை நிகழ்த்தியபோது கீழ்கண்டவாறு கூறினார்கள், “நாம் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறோம். சிறுபான்மை மக்களுக்கு ஒற்றுமை மிக,மிக அவசியம். பெரும்பான்மை சமூகத்தினர் எத்தனைக் கட்சியில் வேண்டுமானாலும் பிரிந்து இருக்கலாம், ஆனால் சிறுபான்மை முஸ்லிம்கள் அப்படி பிரிந்து வாழ முடியாது. அவர்கள் சேர்ந்து வாழக் கடமைப்பட்டிருப்பது குர்ஆனின் கட்டளையாகும். இறைவனின் போதனையை முஸ்லிம்கள் ஏற்று நடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்த காலம் வரை சிறப்பாகவே வாழ்ந்தார்கள். முஸ்லிம்கள் இன்றைய தாழ்ந்த நிலை ஏன்? எப்போது முஸ்லிம்கள் இறைவனின் ஒற்றுமை என்ற கயிறைப் பற்றிப் பிடித்துக் கொள் என்ற வசனத்ததை மறந்தோமோ அப்போதே நாம் தரம் தாழ்ந்து விட்டோம். ஜனநாயகத்தில் அரசிலில் பங்கு பெறாமல் நாம் எப்படி வாழ முடியும்? பிற சமுதாயத்தினர்க்கு வேண்டுமானால் அரசியல் வேறு மதம் வேறு என்றிருக்கலாம், ஆனால் முஸ்லிம்களுக்கோ மதமும், அரசியலும் ஒன்றாக இணைந்தே இருக்கின்றன…இந்திய சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்லீக் பணியைத் தொடர்ந்து செய்து வந்த மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலை திருப்திகரமாக இருக்கிறது. முஸ்லிம்கள் ஸ்தாபன ரீதியில் இயங்காத மாநிலங்களில் தான் அவர்கள் வாழ்வு அவலநிலை அடைந்துள்ளது. மாற்றம் காண வேண்டுமென்றால் இறைவனின் போதனைப் படி ஒன்று சேர வேண்டும்…” அவரது சொற்பொழிவு தொலை நோக்க பார்வையில்லையா?

தமிழகத்தில் உள்ள கட்சிகளின் நிலைப்பாடு பற்றி சற்று ஆராய்ந்து பார்க்கலாம். எந்தக் கட்சியில் தலைவரின் வழிக்காட்டலும், அரவணைப்பும், ஒற்றுமையும் இல்லையோ அந்தக் கட்சியில் பிளவு ஏற்பட்ட சில செய்திகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர ஆசைப் படுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 சட்டசபை உறுப்பினரைக் கொண்டிருந்தது, ஆனால் தலைவர் ஒதுக்கியதால் ஒரு எம்.எல்.ஏ விலகினார். மதிமுகவில்
4 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தலைவருடன் கொள்கை வேறுபாட்டால் இருவர் விலகினர். அஇஅதிமுகவில் தலைவர் உதாசீனம் செய்வதாக முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ உள்பட இருவர் குற்றம் சாட்டி ஒதிங்கி இருப்பதாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. ஆனால் ப.ம.கவிலோ 20 எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட ஊசலாடவில்லையே அது ஏன்? அதன் தலைவர வன்னியர் சமுதாய உரிமைக்காகவும், ஒற்றுமைக்காகவும் பாடுபட்டு கடும் போராட்டத்திற்குப் பின் 20 சதவீத ஒதுக்கீடு வாங்கித ;தந்ததின் மூலம் 10 ஆண்டுகளாக தன் வன்னிய சமுதாய மக்களை பலவேறு துறையிலும் அமர்த்தி அழகு பார்க்கிறார்.
ஆகவே தான் 1991 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு எம்.எல்.ஏ வினை பெற்றிருந்து ராம்தாஸின் ராஜ தந்திரத்தின் மூலம் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 20 எம்.எல்.ஏக்களைப் பெற்று பல் வேறு சலுகைளையும் தன் சமூகத்தினருக்குப் பெற்றுத் தந்தார் என்பது மறுக்க முடியாத உண்மையே. ஆனால் முஸ்லிம் சமூதாயம் 2 அல்லது 3 எம்.எல்.ஏக்களுக்கு தவமிருப்பதேனோ? ஏனென்றால் நம் சமுதாய தலைவர்களிடையே ஒற்றுமை குறைவும், நானா நீயா பெரியவன் என்ற ஈகோ தானேக் காரணம்.

சகோதர யுத்தத்தில் பதவியிழந்த கதையினை மகாபாரதத்தில நாம் படிக்கவில்லையா? காட்டில் தனித்தனியாக மேய்ந்த 4 காளை மாடுகள் புலிக்கு பசி தீர்த்த, மற்றும் வயதான தந்தை சொத்துக்காக சண்டையிட்ட மகன்களிடம் ஒரு விறகுக் கட்டைக் கொடுத்து ஒற்றுமையின் படிப்பினை பற்றி போதித்த சமூக கதைகளை நாம் மறந்து விட்டோமா? ஆகவே இஸ்லாமிய சமுதாயமும், அதன் தலைவர்களும் விழித்துக் கொண்டு வருகிற 2011 சட்டசபைத் தேர்தலில் சமுதாயக் கூட்டணி ஏற்படுத்தி அதிக இடங்களைப் பெற்று தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூட என்ன வழி என ஆராய வேண்டாமா? மத்தியில் 15 கொள்கை திட்டம் போட்டும், 27 சதவீடு ஒதுக்கீடு கொண்டு வந்தும,; தமிழகத்தில் 3.5 சதவீத ஒதுக்கீடு தந்தும் எத்தனை முஸ்லிம்கள் பயனடைந்தார்கள் என்ற வெள்ளை அறிக்கை நாம்; பெற வழி செய்ய வேண்டாமா? அவ்வாறுக் கேட்டால் தானே அரசு தாராள மனதுடன் இருந்தும் அதனை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளை தோலுரித்துக் காட்ட முடியும்.

சமுதாய மக்களிடையே ஆகிரத்துக் கல்வியுடன், அரசியல் கல்வியும் போதிக்க வேண்டும். நான் சென்னை செம்புதாஸ் தெருவில் இருக்கும் பள்ளிவாசலில் வெள்ளி அன்று ஜூம்மாத் தொழுகை;குச் சென்றிருந்தேன். அங்கு செயலாளர் சேக்தாவுது அவர்கள் ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதில் வாக்காளர் பட்டியல் மாநகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பெற்றுள்ளது, விடுபட்ட வாக்காளர்கள் விண்ணவிக்க அறிவுரை வழங்கினார். உண்மையிலே இது போன்ற அறிவிப்புகள் தான் நான் சொன்ன அரசியல் கல்வியாகும்.
2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்துக்கள் 60 சதவீதமும், முஸ்லிம்கள் 46 சதவீதமும் தானே ஓட்டளித்துள்ளார்கள். நமது உரிமையை விட்டுக்கொடு;க்கலாமா? ஆகவே ஒவ்வொரு முகல்லாவிலும் ப++த் கமிட்டிகள் அமைத்து விடுபட்ட வாக்களர்களை சேர்க்கவும், தேர்தல் அன்று அனைத்து முஸ்லிம்களும் ஓட்டுப் போட வழிவகை செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டுகள் அனைத்து மக்களும் பெற்றிருக்கிறார்களா என்று ஆய்ந்து அதனைப் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனென்றால் வாக்குச்சீட்டு அடையாள அட்டை பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ரயில் டிக்கட், விமான டிக்கட் ஆகியவைகளை துரிதமாகப் பெற உதவும்.
பெரும்பாலும் சமுதாயப் பெண்கள் ஓட்டுப் போடுவது குறைந்தே இருக்கிறது. வருகிற மக்களவையில் நிச்சயமாக பெண்களுக்கு இட ஒதுக்கீட கிடைக்க வழிவகை செய்யப்படும். அப்போது படித்த சமுதாயப் பெண்களும் அரசியலில் அங்கம் வகிக்க வாய்ப்புண்டு. அதனை பெண்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் ஓட்டுப் போட அடைத்துச் செல்ல வேண்டும்.
சமீபத்தில் சென்னை பிராட்வேயில் வாக்கிங் சென்ற போது சுவரில் ஒரு போஸ்டர் விளம்பரத்தைக் கண்டேன். அதில் டாக்டர் ரசீத் கலிபா கடைசி நபி என்றும் அவர் வெளியிட்ட திருத்திய குர்ஆன் வெளியீட்டு விழா சென்னை பாவாணர் மாளிகையில் நடைபெறுவதாகவும் அறிவிக்கப் பட்டிருந்தது. நல்ல வேளையாக சுன்னத் ஜமாத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போலீஸார் ஆயிரத்திற்கு மேலான பிரதிகளை பறிமுதல் செய்ய வழிவகை செய்தனர. இது போன்ற இஸ்லாத்திற்குப் புறம்பான காரியங்களில் யார் நடந்தாலும் உடனடி நடவடிக்கையும் எடுக்க ஆதம்,ஹவ்வா அலைவ சல்லம் சந்ததியினர் ஒற்றுமையாக இருந்தால் தானே கிடைக்கும்.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு, “சமத்துவ-சகோதரத்துவத்தினை உலகத்திற்கு முதன் முதலில் போதித்தது இஸ்லாம்” என்றார்.
மஹாத்மா காந்தி, “ஜனநாயகத்தினை போதித்த முதல் மதம் இஸ்லாம்” என்றார்.
பேராசிரியர் ஹர்குரோன்சி, “ரசூலுல்லா மக்காவினை வென்று அங்குள்ள குரைசியருடன் செய்து கொண்ட குதைபிய்யா உடன்படிக்கை தான் 1400 ஆண்டுகளுக்கு பின்பு அமைந்த ஐக்கிய நாடு சபைகளின் அடித்தளம்” என்றார்.
தொழுகைக்கு செல்லும் போது தலையில் தொப்பி அவசியம் இல்லை என்று போதனை செய்தவர் கூட சென்னையில் வேட்பு மனு செய்யும் போது சமுதாய மக்களின் ஓட்டுக்களைப் பெற தலையில் தொப்பி அணிந்து சென்றதினை பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டிருந்தது. அவ்வாறு ஓட்டு வாங்க தொப்பி அணிந்து சென்றவர்களும் எல்லாம் வல்ல அல்லாவின் உம்மத்துக்கள் உயர்ந்த வாழ்க்கைப் பெறவும் வருகின்ற 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 10 எம்.எல்.ஏக்களாவது பெற அனைத்து சமுதாயத் தலைவர்களும் ஒன்றாகக்கூடி ஆலோசித்து கூட்டணி அமைத்து ஒரே சின்னத்தால் போட்டியிட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அவ்வாறு இல்லையென்றால் ஜனநாயகத்தில் சமுதாயத்திற்கு தாழ்வு ஏற்படும். ஆகவே ஒற்றுமை என்ற பாசக்கயிறை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள சமுதாயத் தலைவர்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.