Thursday, December 31, 2009

பாபரி மஜ்ஜித் இடிப்பு தந்த படிப்பினை

பாபரி மஜ்ஜித் இடிப்பு தந்த படிப்பினை
(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)
உத்திர பிரதேச மாநிலத்தில் அயோத்தி என்ற நகரம். அங்கே கோவிலும்-பள்ளிவாசலும் அருகருகே அமைந்து மக்கள் இந்துக்களும்-முஸ்லிம்களும் தங்கள்-தங்கள் வழிபாடுகளை அமைதியுடன் செயல் படுத்தி வந்தனர். அங்கே உள்ளவர்கள் யாரும் பாபரி மஜ்ஜித் இடிக்க வேண்டும் என்று குரல் எழுப்பவில்லை. இதேபோன்று உத்திரபிரதேசம் மதுராவிலும் கோவிலிலும்-பள்ளிவாசலிலும் தங்கள் வழிபாடுகளை நடத்தி வந்தனர் என்பது உண்மையே. ஆனால் இரண்டாம் உலகப்போரில் இந்திய சுதந்திரக் காற்று வேகமாக வீச ஆரம்பித்ததும்-ஆங்கிலேயர் பிரித்தாலும் கொள்கையினை கையிலெடுத்து இரண்டு சமுதாயத்தினையும் பிரித்தால் தான் நாம் இந்தியாவில் இனிமேலும் ஆட்சி செய்ய முடியுமென்று இந்துத்துத்துவா தலைவர்களுக்கு தூபம் போட்டு எழுப்பப்பட்ட கோசம் தான் பாபரி மஜ்ஜித் ராமர் பிறந்த ப+மி என்ற கோசம். அந்தக் கோசம் 1936ஆம் ஆண்டுக்கு முன்பில்லை என்பதுதான் உண்மை.
இந்துக்களும்-முஸ்லிம்களும் வாழும் ஊர்களில் அண்ணன்-தம்பிகளாக, அக்காள்-தங்கைகளாக ஒற்றுமையுடன் வாழ்வதினைப் பார்க்கிறோம். பின்பு ஏன் இந்த மதவெறி பிடித்த கோசங்கள். பாக்கிஸ்தானை ஜின்னா விரும்பியா பிரித்துக் கேட்டார?;. அந்தக் கோரிக்கைக்கு அவரை இந்துத்துவா வெறியர்கள் அல்லவா தள்ளினார்கள், என்று சொன்னது யார்? மத்தியில் பி.ஜே.பி. கட்சியின் 1998 அரசில் முக்கிய மந்திரியாகத் திகழ்ந்த முன்னாள் ராணுவ ஜெனரல் ஜஸ்வன்ட் சிங் தான் அவர். உண்மையினைச் சொன்னால் எவருக்கும் பிடிக்குமா? ஆகவே தான் பி.ஜே.பியிலிருந்து அத்வானி சொன்னது போல, ‘மிகவும் மகிழ்ச்சியில்லாத’ முடிவாக இருந்தாலும் ஜஸ்வன்ட் சிங் வெளியேற்றப் பட்டார்.
இந்திய சுதந்திரம் அடைந்தபோது மத ஒற்றுமைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியினை மதவெறிகொண்ட கோட்ஸேயின் துப்பாக்கி குண்டுக்கு பலியாக்கினார்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்.
இந்திய அரசியல் சுதந்திரத்திற்கு பின்பு, பாபரி பிரச்சினைக்கு வித்திட்ட சம்பவம் தான் 1949 ஆம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியிருந்தபோது பாபரி மஜ்ஜித் வளாகத்தில் ராமர் சிலையினை வைத்து வழிபட வழிவகை செய்தது.
ஓவ்வொரு தேர்தல் வரும் போதும் பாபரி மஜ்ஜித் பிரச்சனையினை பாரதிய ஜனசங் கையிலெடுத்து போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெறமுடியவில்லை.
அவர்கள் வெற்றி பெற்றது எப்போது? 1986 ஆம் ஆண்டு பாபரி மஜ்ஜித் வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக கோவிலுக்குப் போட்டிருந்த ப+ட்டினை திறந்து விட்டதும், 1987 ஆம் ஆண்டு சிலன்யாஸ் என்ற ப+ஜைக்கு அனுமதியளித்ததும் யார்? ராஜீவ் பிரதமராக இருந்த காங்கிரஸ் அரசு தானே! 1992 ஆம் ஆண்டு மஜ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு அவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் கொடுக்கப்பட்டது.
இவ்வளவும் இடிக்கும்போது மத்தியில் யார் ஆட்சி இருந்தது? திரு. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி.
உ.பி. மாநிலத்தில் திரு. முலாயம் சிங் தலைமையிலான சமஜ்வாடி கட்சி 1990 ஆம் ஆண்டு ஆட்சி செய்தபோது பாபரி மஜ்ஜித் இடிக்க முழு முயற்சியுடன் வந்த கர்சேவக்யினரை தடுத்ததோடு மட்டுமல்லாமல், அத்து மீறிய 16 சேவகர்கள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு ஆளானார்கள். ஆகவே தான் அந்த ஆண்டு அவர்களால் முடியவில்லை. 1992 ஆம் ஆண்டு மாநிலத்தில் பி.ஜே.பி ஆட்சி திரு. கல்யாண்சிங் தலைமையில் ஆண்டபோது மத்தியில் காரிய மவுனத்திற்கு பெயர்போன திரு. நரசிம்மராவ் ஆட்சி நடைபெற்றது.
அவருக்கு தெரியாமல் மஜ்ஜித் இடிக்கப்பட்டிருக்கும் என எண்ணுகிறீர்களா?
புhரதிய ஜனதாவின் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் விஸ்வதாஸ் சொல்கிறார், ‘1992 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி தான் பிரதமரை சந்தித்ததாகவும், கர்சேவக்வினை ஒன்று திரட்டி என்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர் கேட்டதாகவும், அதற்கு விஸ்வதாஸ் மஜ்ஜிதை இடிக்கப்போகிறோம், என்று சொன்னதாவும், அதேபோன்று மஜ்ஜித் இடிக்கும் வரை தான் அங்கு இருந்ததாகவும், அந்தக் குற்றத்திற்காக தான் தூக்குத்தண்டனைக்கும் தயார்’ என்று ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். ஆகவே திரு. நரசிம்மராவிற்கு தெரியாமல் இது நடந்திருக்கிறது என்றால் ஐ.பி, ரா போன்ற உளவுத்துறைகள் எதற்காக நாட்டில் இருக்கின்றன?. லட்சக்கணக்கான கர்சேவக் எல்லை மீறினால் என்னவாகும் என்று சாதாரண மனிதனுக்குக் கூட ஊகிக்க முடியும் ஆனால் அன்றைய பிரதமருக்குத் தெரியாது என்று இன்றைய காங்கிரஸ் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?
அடுத்த சமாளிப்பு, மாநில முதல்வர் திரு. கல்யாண்சிங் ராணுவத்தினை பயன்படுத்தி கர்சேவக்களின் வெறியாட்டத்தினை தடுத்து நிறுத்துங்கள் என்று கேட்கவில்லையென்று. அவ்வாறு ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், மத்தியில் திரு. வாஜ்பாய் தலைமையிலான என்.பி.ஏ அரசு குஜராத்தில் கோத்ரா ரயில் விபத்திற்கு பின்பு முஸ்லிம்கள் மோடி அரசாங்க துணையுடன் வேட்டையாடப்பட்டது என்று அன்றைய மாநில உளவுத்துறை அடிசனல் டி.ஜி. ஸ்ரீகுமார் குற்றம் சாட்டியபோது பி.ஜே.பி. மாநில மோடி அரசு எங்களுக்கு மதக்கலவரத்தை அடக்க ராணுவத்தினை அனுப்ப கோரவில்லை ஆகவே 2000முஸ்லிம்களுக்கு மேல் அங்கு கொல்லப்பட்டனர் என்றால் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுமா? கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் அது பொன்குடம்’ என்று. ஆகவே லட்சக் கணக்கான கர்சேவக்கினை நாடு முழுவதும் ரதயாத்திரை மூலம் வெறியூட்டி அயோத்தியில் ஒன்று கூட்டி கடைசி நாள் வரை மிகவும் ஆக்கிரோசமான மஜ்ஜிதிற்கு எதிரான உரை நிகழ்த்தி விட்டு ‘ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக் கொள்வாளாம் பாப்பா’ என்று பாபரி மஜ்ஜித் இடிப்பு சதி திரு. வாஜ்பாயிக்கும், திரு. நரசிம்மராவிற்கும் தெரியாது என்றால் நீங்கள் நம்புவீர்களா?
இதற்கு முன்பு மாநில அரசுகளை மத்திய அரசாங்கம் பல்வேறு காரணங்கள் சொல்லி கலைக்கவில்லையா? 1967ல் மேற்கு வங்கத்தில் முதல் கம்ய+னிஸ்ட் அரசு, கர்னாடகத்தில் பொம்மையிலான அரசு, ஜார்கண்ட்டில் பாரதிய ஜனதா அரசு, இவ்வளவுக்கும் ஏன் தமிழ்நாட்டில் தி.மு.க, அ..இ.அ.த.pமுக அரசுகள் எல்லாம் ஏதோ ஒரு நொண்டி சாக்கினைச் சொல்லியாவது மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யவில்லையா? இவ்வளவு ஏன் மேற்கு வங்களத்தில் நாக்சலைட் தீவிரவாதிகள் அத்துமீறல் என்றும் கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமென்ற மம்தா பானர்ஜியின் அரசியல் கோரிக்கையினை மறைமுகமாக மத்திய அரசு ஆதரித்து தருணம் பார்க்கவில்லையா? அதேபோன்று அன்றைய கல்யான்சிங் அரசினை நரசிம்மராவ் டிஸ்மிஸ் செய்திருந்தால் புராதானச் சின்னமான பாபரி மஜ்ஜித் இடிக்கப் பட்டிருக்குமா? அல்லது அதற்குப்பிறகாவது ஓடிய மதக்கலவரத்தினால் ஓடிய ரத்த ஆறு ஓடியிருக்குமா?
இவ்வளவு நடந்த பின்னரும் நீதியரசர் லிபர்கான் அறிக்கை 17ஆண்டுகளுக்கு பின்பு வந்த பின்னரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் பகத் சொல்கிறார், “பாபரி மஜ்ஜித் இடிப்பு தங்களுக்கு வருத்தம் தரவில்லை” என்று.. உலகத்தின் வல்லரசு அமெரிக்காவினை தலைமையேற்று நடத்தித்தருகிற பாரக் ஒபாமா தனக்கு முன்மாதிரி, மகாத்மா காந்திதான் என்று சொன்ன அந்த மகாத்மாவினையே கொன்ற ஆர்.எஸ்.எஸ். வேறியன் கோட்சேயினை மாவீரன் என்று போற்றும் இயக்கத்திற்கு தலைமையேற்று நடத்துவர் தானே அவர். ஆகவே தான் அவரிடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
புp.ஜே.பியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் என்ன சொல்கிறார், ‘பாபரி மஜ்ஜித் ஒரு கட்டிடம் தான் பள்ளிவாசல் என்று சொல்ல முடியாது’ என்று.
அப்படி ஒரு வாதத்திற்கு ஒப்புக்கொண்டால் பூஜை செய்யாத வேலூர் ஜலகண்டநாதர் கோவில் போன்று அ+யிரக்கணக்கான கோயில்களையும் இடிக்க அவர் அனுமதிப்பாரா?
ஆகவே மேலே சொன்னவர்கள் அமைப்பினைப்பினரின் கூற்றை வைத்து கீழ்க்கண்ட படிப்பினை தெரிந்து கொள்ளலாம்:
இந்துத்துவா அமைப்பினர் டாக்டர். அம்பேத்கார ;தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டு சமதர்ம-சாதிமத வேற்றுமையில்லாத சமுத்துவ சமுதாயத்தினை இந்தியா அடைய விரும்பவில்லை.
புhபரி மஜ்ஜித் இடிப்பு இந்துத்துவா அமைப்பினர் வெற்றியாகக் கொண்டாடுவது-மத சகிப்புத்தன்மைக்கு வைத்த வெடிகுண்டு.
முஸ்லிம்கள்-கிறிஸ்துவ மைனாரிட்டிகளை சில காலங்களுக்கு முன்பு இருந்த தென் ஆப்பிரிக்கா நிறவெறி செயல்களான தனிரோடு, தனி பள்ளிக்கூடம், தனி வாகனம், தனி மார்க்கட் போன்று தனினைப் படுத்தி அவர்களுக்கு சட்டத்தில் அளிக்கப் பட்ட உரிமைகளை மறுக்கும் முயற்சி.
வுpலங்குகளுக்குக்கூட தீங்கு செய்யக்கூடாது என்று போதித்துப் போற்றப் படுகிற புத்தர், மகாவீரர் போன்றோர் பிறந்த மண்ணில், சகிப்புத் தன்னை- மத ஒற்றுமை போதிக்கும் பகவத் கீதையினை புறக்கணிக்கும் செயல் மட்டுமல்ல மாற்றுக் கருத்துகளுக்கு அடிக்கும் சாவு மணியென்றால் மறுக்க முடியுமா? இந்துத்துத்துவா நண்பர்களால்.

5) ஹிந்துத்துவா கொள்கைகள் கொண்ட கட்சிகளை மறுபடியும் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ அரியணையேற அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால் யானை தன் தலையில் தானே மண்ணை எடுத்துப் போடும் செயலாகும். ஆகவே மதசார்பற்ற கட்சிகள் தங்கள் கருத்து வேற்றுமை-தனிபட்ட விருப்பு-வெறுப்பினை தள்ளி வைத்து விட்டு-1998 ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் மத்தியில் ஹிந்துத்துவா தங்கள் சுயநலத்திற்காக ஆதரித்து அந்த மந்திரி சபையில் சேர்ந்தது போல ஆதரவு கொடுக்காது-இனியாவது கூட்டணி அமைத்து ஹிந்துத்துவா வெறியர்களை தலை தூக்க விடக்கூடாது.

No comments: