Sunday, March 14, 2010

100 websites for sending Free SMS

100 websites for sending Free SMS

There are 100 websites to send sms via online for free



குறுஞ்செய்திகள் அனுப்புவதற்கான 100 இணைய தளங்களின் பெயர்களை இதில் கொடுத்துள்ளேன்.இதில் சில இணைய தளங்களின் குறுஞ்செய்தி சேவைகளின் வழியாக பன்னாட்டு குறுஞ்செய்திகளையும் அனுப்ப இயலும்(இலவசமாக) ஆகையால் இவற்றை பயன்படுத்தி கொள்வதன் பொருட்டு உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.



http://4usms.net/
http://50sms.com/
http://adleel.com/sms.htm
http://adleel.com/sms.htm
http://free-sms-message.com/index.htm
http://free-sms-message.com/index.htm
http://gsms.se/
http://mobile.fares.net/sms/uae
http://my.phonegnome.com/
http://simsor.com/register
http://sms4u.biz/signup.php
http://smscity.com/
http://stepsms.com/
http://thesmszone.com/
http://www.160by2.com/
http://www.agentsms.com/
http://www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
http://www.atrochatro.com/
http://www.awalsms.com/
http://www.awalsms.com/
http://www.boswtol.com/
http://www.boswtol.com/
http://www.cbfsms.com/
http://www.cbfsms.com/
http://www.cellular.co.za/
http://www.clickatell.com/
http://www.clickatell.com/
http://www.d1g.com/
http://www.devinosms.com/
http://www.ecosms.ch/
http://www.edihasms.com/
http://www.edihasms.com/
http://www.freesms.2way.de/
http://www.freesms.co.za/
http://www.freesms.co.za/
http://www.freesms.com/
http://www.freesms.com/
http://www.free-sms.com/
http://www.free-sms.com/
http://www.free--sms.com/index.go
http://www.freesms.net/
http://www.freesms.net/
http://www.freesms.web.tr.tc/
http://www.free-sms-service.de/
http://www.genie.co.uk/
http://www.genie.co.uk/
http://www.gosms.com/
http://www.gsmvault.com/
http://www.hai91.com/
http://www.hot.it/sms
http://www.hotsms.com/
http://www.hotsms.com/
http://www.islamweb.net/
http://www.itsalat.com/
http://www.itsalat.com/
http://www.jfax.de/
http://www.jfax.de/
http://www.junglesms.com/
http://www.lycos.co.uk/
http://www.lycos.co.uk/
http://www.metacrawler.de/
http://www.mginger.com/
http://www.mobik.com/mobik/client/
http://www.mobizone.com/
http://www.mobizone.com/
http://www.mobyko.com/
http://www.mycantos.com/
http://www.nemra1.com/
http://www.nice-prizes.de/
http://www.nice-prizes.de/
http://www.phones.com/
http://www.pimpmysms.com/
http://www.quicksms.de/
http://www.quicksms.de/
http://www.quios.com/
http://www.quios.com/
http://www.resalh.com/
http://www.rosms.home.ro/
http://www.rosms.home.ro/
http://www.send.sms.to/free.asp
http://www.sendsmsnow.com/
http://www.shortmessage.com/
http://www.sms.ac/
http://www.sms.at/
http://www.sms.at/
http://www.sms.com/
http://www.sms.de/
http://www.sms.de/
http://www.sms.mums.it/
http://www.sms.mums.it/
http://www.sms2india.org/
http://www.smsdiscount.com/en/index.html
http://www.smsfree.co.uk/
http://www.smsfree.co.uk/
http://www.smspop.com/
http://www.smspress.com/
http://www.smspress.com/
http://www.smspup.com/
http://www.smspup.com/
http://www.sms-sprueche.tv/
http://www.sms-sprueche.tv/
http://www.smstxtbox.com/web/
http://www.smsyes.com/
http://www.smsyes.com/
http://www.textmefree.com/
http://www.textmefree.com/
http://www.themobiweb.com/en/sms.html
http://www.uaesms.com/
http://www.uni.de/
http://www.uni.de/
http://www.unisms.uni.cc/
http://www.vazu.com/
http://www.vizzavi.it/
http://www.vizzavi.it/
http://www.world-free.com/free-sms
http://www.worldxs.net/sms.html
http://www.yellowpages.com.eg/
http://zyb.com/
http://zyb.com/
sms2.htm
www.aircall.ch/sms/sendmsg_main_free.asp
www.bestspider.com/sms
www.bestspider.com/sms
www.call-magazine.de/free_sms
www.call-magazine.de/free_sms
www.cellular.co.za/send_
www.cellular.co.za/send_sms2.htm
www.hot.it/sms
www.jinny.com.lb/sms
www.jinny.com.lb/sms
www.jokes.gr/en/sms
www.jokes.gr/en/sms
www.jump.to/freesms
www.jump.to/freesms
www.masrawy.com/sms
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
www.mobileedge.co.uk/freesms/freesms.htm
www.ournet.md/sms
www.ournet.md/sms
www.send.sms.to/free.asp
www.smsuae.com/sms-uae
www.smsuae.com/sms-uae
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.telefonmarkt.de/sms/sms_info.php
www.uboot.com/uk
www.uboot.com/uk
www.ulluminati.ch/Nexus/sms.html
www.ulluminati.ch/Nexus/sms.html
www.world-free.com/free-sms
www.worldxs.net/sms.html

--

அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?

அரபி மொழி படித்தால் வேலை கிடைக்குமா …?

டாக்டர். மவ்லானா மவ்லவி முஹம்மது அப்துல்லாஹ் பேக் ரப்பானி உமரி. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உருது மொழியில் பி.எச்.டி. பட்டம் பெற்றவர். ஜாமியா தாருஸ் ஸலாம் அரபிக் கல்லூரியில் ஆலிம் பட்டம் பெற்ற பிறகு 3 ஆண்டுகள் ரியாத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் 6 ஆண்டுகள் அரபித்துறை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நடத்தும் அரபி மொழி வகுப்புகள் குறித்து அறிவதற்காக அவரைச் சந்தித்தோம்.

நீங்கள் நடத்தும் கோர்ஸ் பற்றி கூறுங்கள்.
நான் இந்த அரபி மொழிப் பாடத்தை நடத்த வேண்டுமென்பதற் காகவே ரியாத் சென்றேன். 1994 இல் 2 மாதத்தில் குர்ஆனைக் கற்போம் என்று ஆரம்பித்தேன். அதில் கலந்து கொண்ட மாணவர்கள் மிகச் சரியாக சிறந்த உச்சரிப்புடன் குர்ஆனைக் கற்றனர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் குர்ஆனைக் கற்றால் மட்டும் போதாது. அரபி மொழியினை முழுமையாக கற்க வேண்டுமென்ற ஆவல் மிளிர்ந்தது. அப்பொழுது அரபி மொழி சார்ந்த புத்தகங்கள் இல்லாத காரணத்தால் ரியாத் சென்று 3 வருடங்கள் இருந்து நானே சுயமாக ஒரு பாடத் திட்டத்தை உருவாக்கினேன். 2000- இல் 2 ஆண்டு அரபி மொழிப்பாடத் திட்டத்தை அறிமுகம் செய்தேன். அதில் 6 மாதங்கள் அரபி மொழிப் பயிற்சியும் 18 மாதங்கள் முழுமையான ஷரீஅத்தையும் கற்றுக் கொடுத்தேன். இதன்படி 6 ஆண்டுகள் மதரஸாவிலிருந்து எதனைக் கற்பார்களோ அதனை 2 ஆண்டுகளில் கற்றுக் கொடுக்கிறேன்.
இப்பொழுது நீங்கள் நடத்தக்கூடிய இந்த வகுப்புகள் எத்தகைய கால அளவைக் கொண்டவை?
10 மாத கால அளவை கொண்டவை. அதாவது 10 மாதம் என்றால் வாரத்தில் 3 நாட்களில் தினம் 2 மணிநேரம் மட்டுமே இந்த வகுப்புகள். ஆக, ஒட்டுமொத்தமாக 250 மணிநேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப் படுகின்றன. இந்தக் கால அளவை இன்னமும் குறைக்கலாம்.
நீங்கள் எத்தனை இடங்களில் இது போன்ற வகுப்புகள் நடத்துகிறீர்கள்?
மொத்தம் மூன்று இடங்களில் இத்தகைய வகுப்புகள் நடைபெறு கின்றன. ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு நேரத்தில் நடைபெறு கின்றன.
பயிற்றுமொழி எது?
பயிற்றுமொழி என்று தனியாக எந்த ஒரு மொழியினையும் வைப்ப தில்லை. ஏனென்றால் அரபி மொழி அடிப்படையிலேயே வகுப்புகளை நடத்துகின்றேன். அரபிமொழியின் அடிப்படை வார்த்தைகளை மாணவர் களுக்கு மனனம் செய்யக் கற்றுக் கொடுத்து அந்த வார்த்தைகளின் அடிப்படையில் வினாக்களை உருவாக்கி அதற்குச் சரியான பதிலை அவர்களாகவே உருவாக்கும் விதத்தில் பாடத்திட்டத்தை அமைத்திருக் கின்றோம். இலக்கிய வார்த்தைகள் இடம்பெறும்போது மாணவர்களைப் பொறுத்து தமிழ்,ஆங்கிலம்,உருது ஆகிய மொழியினை இடையிடையே இணைத்துக் கொள்கின்றோம். இதுவும் ஆரம்ப சில காலங்கள் மட்டுமே. மற்றபடி அனைத்தும் முழுமையாக அரபிமொழியில் நடத்தப் படுகிறது.
அயல்மொழி என்றாலே ஆங்கிலம் தான் என்று இருக்கும் போது அரபி மொழியினை கற்பதனால் ஏதேனும் பயன் உண்டா?
90 களில் நீங்கள் சொல்வதைப் போன்று இருந்தது. ஆனால், தமிழகத் தில் 90க்குப் பிறகு இஸ்லாமிய இயக்கங்களின் தாக்கம் அதிகரித்தது. முஸ்லிம் இளைஞர்களிடம் குர்ஆனைப் பொருளறிந்து கற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியது. இஸ்லாத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அரபி மொழி அதற்கு ஆணி வேராக இருக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிற காலத்தில் குர்ஆனையும் ஹதீஸையும் இஸ்லாமியச் சட்டங்களையும் ஷரீஅத்தையும் முழுமையாக அறிய அரபி மொழி கட்டாயமாகிறது.
அரபி மொழி கற்பது மிகவும் கடினம் என்கிறார்களே, சரியா?
இது, முழுக்க முழுக்க தவறான எண்ணமாகும். அரபி மொழி கற்பதற்கு மிக எளிமையானது. நாம் அரபியை 5 வேளைத் தொழுகை களில் அன்றாடம் கேட்கின்றோம். நமது குழந்தைகளுக்கு சிறு வயதிலி ருந்தே நாம் குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்கிறோம். இப்படி இருக்கும் போது அரபி மொழி என்பது மிகவும் எளிமையான மொழியாகும். அரபி மொழி அறிவியல் பூர்வமான மொழியும்கூட.
மொழி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றனவா?
நிச்சயமாக. ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இன்று உலகில் மூன்றில் ஒரு பகுதி அரபி பேசக் கூடியவர்களின் நாடுகளாக இருக்கின்றன. உங்களுக்கு அரபி தெரிந்தால் இத்தகைய நாடுகளில் உயர் பதவிகளுக்குச் செல்லவும் பணியாற்றவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் கூட அரபி மொழி கற்றவருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. சமீப காலமாக முஸ்லிம் தொழிலதிபர்களிடம், அறிஞர்களிடம், இயக்கங்களிடம் கல்வித்தாக்கம் அதிகரித்து இருக்கிறது. அல்- பஜ்ர் இண்டர்நேஷனல் ஸ்கூல், டாக்டர் ஜாகிர் நாயக் IRF இண்டர்நேஷனல் ஸ்கூல், ஐ- மேக்ஸ் ஸ்கூல், ஆலிவ் இண்டர்நேஷனல் ஸ்கூல், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் குட்வேர்ட் இண்டர்நேஷனல் ஸ்கூல் போன்ற பல கல்விக்கூடங்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் அரபி மொழி கற்றால் ஆசிரியர் பணிக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இதனால் மாணவர்கள் பயனடைகிறார்களா?
அரபி மொழி கற்றால் மாணவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். அவர்களின் இம்மை வாழ்க்கை மட்டுமன்று மறுமை வாழ்க்கையும் ஒளிமயமாய் இருக்கும். அவர்கள் அரபி மொழி கற்றால் இஸ்லாத்தை முழுமையாக அறிந்து தங்களுடைய வாழ்வைச் செம்மைப்படுத்த மிகவும் உதவும்.
அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பல மொழிகள் தோன்றிய காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படி இன்றில்லை.செம்மொழிகளான ஹீப்ரு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் இன்று வழக்கத்தில் இல்லை. பல மொழிகள் கடந்த 100 ஆண்டுகளில் பல மாறுதலுக்கு உள்ளாகி யுள்ளன. அரபி மொழியோ நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் எப்படி எழுதப்பட்டு இருந்ததோ அதே போன்றுதான் இன்றும் இருக்கிறது. அதே போன்று அரபி மொழியில் கலப்படம் இல்லை. நாம் தமிழில் பேசும் போது ஆங்கிலத்தையும் கலக்கிறோம் அல்லவா ….? அரபி மொழி அப்படி இல்லை. எதனைச் சொன்னாலும் அரபி மொழியில் தான் சொல்லப்படுகிறது. ஆக அரபி மொழியில் எத்தகைய இடைச் செருகலும் ஏற்படாதது அரபி மொழிக்கும் மற்ற மொழிக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடாகும்.
தமிழ் மொழிக்கும் அரபிக்கும் உள்ள மொழியியல் ரீதியான தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்?
மிக அழகான கேள்வியைக் கேட்டீர்கள். ஒரு மொழிக்கும் மற்றொரு மொழிக்கும் அடிப்படையில் 3 ஒற்றுமைகள் இருக்கும். 1.ஒலி (Sound), 2.எழுத்து முறை (Writting), 3. மொழியியல் குடும்பம் (Language Relationship) குர்ஸி, மஸ்ஜித், இமாம், இக்ஸான் இத்தகைய வார்த்தைகள் அரபியிலும் உருதுவிலும் ஒரே மாதிரியாக வரும். இவை ஒலியியல் தொடர்பானவை. பார்ஸி,உருது,அரபி இவை மூன்றுக்கும் எழுத்தியல் தொடர்பு இருக்கும். இவற்றிற்கு ஒரே மாதிரியான எழுத்து வடிவம் இருக்கும்.
மொழியியல் குடும்பம் என்பது வேறு. தமிழ் மொழியை திராவிட மொழி என்கிறோம். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் இவை 4 மொழிகளும் ஒரே குடும்பவியல் மொழிகள். அதே போன்று உருது, பார்ஸி, பஞ்சாபி ஆகியன ஒரே குடும்ப மொழிகள். ஹிந்தி, சமஸ் கிருதம், பெங்காலி, மராத்தி ஆகியன ஒரே குடும்ப மொழிகள்.
ஆனால் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை அரபி மொழி அவர் களிடம் ஒலியியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எப்படியென்றால் அவர்கள் சிறுவயதிலிருந்தே குர்ஆனை ஓதுகிறார்கள். தொழுகையில் அரபியைக் கேட்கிறார்கள்; ஓதுகிறார்கள். ஒருவருக்கொருவர் சலாம் கூறுகிறார்கள். இன்ஷா அல்லாஹ், மாஷா அல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ் இத்தகைய வார்த்தைகள் நாம் அடிக்கடி கூறுவதால் அரபி மொழி ஒலியியல் தொடர்பை ஏற்படுத்துகிறது.
சந்திப்பு : M. முகம்மது கெளஸ்
தொகுப்பு : H. தில்ஷாத் கெளஸ்
நன்றி : சமரசம் ( 16 – 31 மே 2009 )

ரமளானின் மகிமை

ரமளானின் மகிமை

( தொகுப்பு : மவ்லவி அப்துல் காதர் ரஷாதி, புளியங்குடி )

புனிதமிகு ரமளான் மாதம் முஸ்லிம்களின் பரக்கத் என்னும் ரஹ்மத்துடைய அளப்பெரும் பொக்கிஷமாகும்.

ரமளான் மாதத்தின் முதல் இரவில் ஷைத்தான்களை விலங்கிடப்படுகிறது. நரகத்தின் தாழிட்டு சுவர்க்கம் என்னும் ரஹ்மத்தின் வாசல்களை திறந்து விடப்படுகிறது.

இப்புனிதமிகு மாதத்தின் மிகமுக்கிய வணக்கம் நோன்பாகும். நோன்பு என்றால் சுபுஹுஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து சூரியன் மறையும் வரை நோன்பின் நிய்யத்துடன் உண்ணுவது, குடிப்பது, மனோ இச்சை சேர்க்கை செய்வது ஆகியவற்றிலிருந்து தவிர்த்து கொள்வதாகும்.

நோன்பு சம்பந்தமான ஹதீஸுகளில் நோன்பிருப்பதால் ஏற்படக்கூடிய பலாபலன்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:

’’அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்போரின் முந்தைய பாவங்களனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்’’

’’நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடவும் அதிகம் மதிப்புள்ளதாகும்’’

’’நோன்பிருப்போருக்கு அல்லாஹ்வே தனது புறத்திலிருந்து நன்மையை அளிக்கிறான்’’

’’ சுவனலோகத்தில் ‘ரய்யான்’ என்னும் வாசல்வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்’’

நோன்பில்லாதவர்களுக்கு உண்டாகும் கடுமையான கொடூரமான வேதனையைப் பற்றியும் ஹதீஸில் கூறப் பட்டுள்ளன.

‘’படைத்தவன் எஜமானனாகிய அல்லாஹுத்தஆலா அவனின் (நோன்பில்லாதவனின்) இழிவான இச்செயலால் அவனை கடுமையாக வெறுக்கிறான்’’

‘’வானவர்கள் இன்னும் நல்லோர்களின் கூட்டத்தில் அவனின் இச்செயல் இழிவானது தீயது என்று ஞாபிக்கப் படுகிறது’’

‘’ரமளான் மாதத்தில் நோன்பில்லாதவன் உண்ணக் குடிக்கச் சென்ற அவ்விடம் இவன் என்மீது பாவம்புரிந்தான் என்று மறுமையில் சாட்சி பகரும்’’

எனவே முஸ்லிம்கள் ரமளான் மாதத்தின் மகிமையை உணர்ந்து அதனின் கிரியைகளை ஏற்று நடப்பது மிக அவசியமாகும். மாறாக ரமளான் மாதத்தில் ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றாது அசட்டையாகவும் பொழுது போக்காகவும் ரமளான் மாதத்தை கழித்து விட்டால் அதுவே தமது இம்மை மறுமையின் நஷ்ட வழிகேடாகும். இதனை முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து செயல்படுவோமாக!

நோன்பு ஃபர்ளு கட்டாயக்கடமை

நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பது குர்ஆன், ஹதீஸ், இஜ்மாயே உம்மத் ஆகியவற்றால் உறுதிப் படுத்தப்பட்டதாகும்.

நோன்பு நோற்பது ஃபர்ளு – கட்டாயக்கடமை என்பதை மறுப்பவன் காஃபிர் ஆவான். தங்கடமின்றி நோன்பு வைக்காதவன் பெரும்பாவி தீயவனாவான்.

நோன்பின் நிய்யத்

நோன்பு வைப்பதற்கு நாவால்தான் நிய்யத் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இன்று நான் நோன்பு வைக்கிறேன் என்று மனத்தால் நிய்யத் செய்தாலே போது மானாதாகும்.

தமிழில் அல்லது அரபியில் நாவால் நிய்யத்செய்வது ஏற்றமானதாகும். நோன்பின் நிய்யத்:

நவைது ஸவ்மகதின் அன் அதாயி ஃபர்ளி ரமளானி ஹாதி ஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா

இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்மை அதாவாக அல்லாஹுத்தஆலாவுக்காக நாளை நோற்க நிய்யத் செய்கிறேன்.

உண்ணாமல் குடிக்காமல் சேர்க்கை செய்யாமல் இருந்தும் நோன்பின் நிய்யத் இல்லையாகில் நோன்பாகாது.

நோன்பின் நேரம் சுபுஹு ஸாதிக் (மெய் வெள்ளை) அதிகாலையிலிருந்து ஆரம்பமாகின்றது. ரமளான் மாதத்தின் நோன்பின் நிய்யத்தை சுபுஹு ஸாதிக் முன்பாகவே நிய்யத் செய்வது ஏற்றமானதாகும். இருப்பினும் மதியம் உச்சத்திற்கு சிறிது நேரம் முன்பு வரையிலும் நிய்யத் செய்யலாம் கூடும். நிபந்தனையாதெனில் சுபுஹு ஸாதிகிலிருந்து சாப்பிடாமல் குடிக்காமல் உடலுறவு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டும்.

ஸஹர் – நோன்புபிடிப்பது

ஸஹர் சாப்பிடுவது சுன்னத்தாகும். பசி இல்லை என்றாலும் சிறிதளவேனும் சாப்பிடவேண்டும் அல்லது தண்ணீராகிலும் குடித்துக் கொள்ள வேண்டும்.

ஸஹர் உடைய நேரம் பிற்படுத்திச் சாப்பிடுவது சுன்னத் தாகும் எனினும் ஸஹர் உடைய நேரம் கழிந்து விட்டதோ என்று நேரத்தில் சந்தேகம் கொள்ளும் அளவு பிற்படுத்தக் கூடாது.

இஃப்தார் – நோன்பு திறப்பது

சூரியன் மறைந்துவிட்டது என்று உறுதியானதற்குப்பின் உடன் நோன்பைத் திறந்துவிடுவது முஸ்தகப் ஆகும். நேரம் தாழ்த்துவது மக்ருஹ் ஆகும்.

மேகத்துடைய காலங்களில் இஃப்தார் – நோன்பு திறப்பதைத் தாமதித்தும் ஸஹர் – நோன்பு பிடிப்பதை தீவிர மாக்குவதும் அவசியமாகும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் தனது கடுமையான தேவை கம்மியாகும். அளவுக்கு முடிந்தால் சாப்பிட்டுக் குடித்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்ரிப் உடைய தொழுகை மனநிம்மதியுடன் பயபக்தியாக தொழுது கொள்வதற்கு வழி வகுக்கும்.

இமாம் மக்ரிப் உடைய தொழுகைக்கு தீவிரமாக்காமல் முக்ததி – பின்தொடரும் ஜனங்களை கவனத்தில்கொண்டு சிறிது நேரம் தாமதிக்கவும். அதனால் ஜனங்கள் நிம்மதியுடன் வாய் கொப்பளித்து ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

இனிப்பான பொருளைக்கொண்டு நோன்பு திறப்பது நல்லதாகும். பேரீத்தம் பழம், தண்ணீர் அல்லது மற்றவை களைக்கொண்டும் நோன்பு திறக்கலாம். சிலர் உப்பைக் கொண்டு நோன்பு திறப்பது மிகுந்த நன்மையளிக்கும் என விளங்கிக்கொண்டுள்ளனர். அது தவறாகும்.

நோன்பு திறக்கும் துஆ

அல்லாஹும்ம லகசும்து வபிக ஆமன்து வஅலைக தவக்கல்து வஅலா ரிஜ்கிக அஃப்தர்து பதகப்பல்மின்னி.

’’யா அல்லாஹ்! உனக்காகவே நோன்பு வைத்தேன், உன்னைக் கொண்டே விசுவாசம் கொண்டேன், உன் மீதே நம்பிக்கை வைத்தேன், உன்னுடைய இரணம் கொண்டே நோன்பு திறக்கின்றேன் என்னுடைய நோன்பை ஏற்றுக் கொள்வாயாக!

நோன்பின் முறித்தல்கள்

1)மூக்கு அல்லது காதில் மருந்து செலுத்துவது. 2) வேண்டு மென்றே வாய்நிரம்ப வாந்தியெடுப்பது. 3)வாய்கொப்பளிக்கும் போது தொண்டையினுள் தண்ணீர் சென்றுவிடுவது. 4) கல், மண், இரும்பு போன்றவற்றை விழுங்குவது. 5) சூரியன் மறைந்துவிட்டது என தவறுதலாக எண்ணிக்கொண்டு நோன்பு திறப்பது. 6) இரவு என தவறுதலாக எண்ணிக் கொண்டு சுபுஹு ஸாதிக்குப்பின் சாப்பிடுவது. 7) பீடி, சிகரெட், குடிப்பது, வெற்றிலைப்பாக்கு சுவைப்பது. 8)அதிகம் இரத்தம் கலந்த எச்சிலை விழுங்குவது. 9) மலம் கழிக்கும் துவாரத்தில் மருந்திடுவது, பெண் சிறுநீர் கழிக்கும் இடத்தில் மருந்திட்டால் நோன்பு முறிந்துவிடும் ஆணுக்கு அல்ல. 10) பற்களின் இடரில் அகப்பட்ட மாமிசம் போன்றவைகளை வாயிலிருந்து வெளியாக்கிப் பின்னர் அதை உட்கொண்டால் நோன்பு முறிந்து விடும். வாயினுள்ளே தனது நாவால் அதனை அகற்றி அதுவும் ஒரு சுண்டல் அளவு பருமன் உள்ளதாக இருப்பின் அதை உட்கொள்வதால் நோன்பு முறிந்துவிடும். ஒரு சுண்டல் அளவைவிட சிறியதானால் நோன்பு முறியாது.

வேண்டுமென்றே நோன்பை முறித்தால் அந்தநோன்பை ‘களா’ செய்யவேண்டும். மேலும் கப்பாரா (பரிகாரமும்) வாஜிபாகும்.

நோன்புடைய கப்பாரா - பரிகாரமாகிறது.

தொடர்ந்து இரண்டு மாதகாலம் வரை 60 நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டும். இடையில் விடுபட்டுவிட்டால் திரும்பவும் 60 நாட்கள் இடைவிடாது நோன்பிருக்க வேண்டும்.

நோன்புவைப்பதற்கு சக்தியற்றிருந்தால் அறுபது மிஸ்கீன் களுக்கு காலையிலும் மாலையிலும் வயிறுநிரம்ப உணவளிக்க வேண்டும். அல்லது அறுபது மிஸ்கீன்களுக்கு ஸதகயே ஃபித்ர் உடைய அளவு அரைமரக்கால் தானியம் அல்லது தானியத்துடைய மதிப்பின் பணத்தை கொடுக்க வேண்டும்.

நோன்பை முறிக்காதவைகள்

1)மறதியாக சாப்பிடுவது, குடிப்பது, சேர்க்கை செய்வது. 2)மிஸ்வாக் பல்துலக்குவது. 3) தனது நாட்டமின்றி வாந்தி வருவது. 4) நறுமணம் நுகர்வது. 5) தனது விருப்பமின்றி தூசி, புளுதி, ஈ, கொசு தொண்டையினுள் செல்லுவது. 6) தலை மீசையின் மீது எண்ணெய் தடவுவது. 7) தூக்கத்தில் ஸ்கலிதமாவது. 8) கண்ணில் சுர்மா இடுவது, மருந்து அல்லது தண்ணீர் ஊற்றுவது. 9) எச்சில், சளியை விழுங்குவது. 10) வேண்டுமென்றே வாயநிம்பாமல் சிறிதளவு வாந்தியெடுப்பது. 11) இரவில் உடலுறவுகொண்டு சுபுஹு ஸாதிக்கு முன்பே குளிக்காமலிருப்பது. 12) இன்ஜெக்‌ஷன் – டாக்டரிடம் ஊசிமருந்து எடுப்பது. இவைகளினால் நோன்பு முறிந்துவிடாது.

நோன்பின் மக்ருஹ்கள்

1)அவசியமின்றி ஏதாவது பொருளை வாயில்போட்டு சுவைப்பது அல்லது உப்பு போன்றவைகளை சுவைத்து துப்புவது. 2) புகையிலை கொண்டு பல்துலக்குவது. 3)முழுக்குடன் குளிக்காமல் பகல் முழுவதும் கழிப்பது. 4) இரத்தம் குத்தி வாங்குவது. 5) புறம்பேசுவது அதாவது பிறரின் குறையை மறைமுகமாக பேசுவது இச்செயல் அனைத்துக் காலங்களிலும் ஹராமாகும். அதிலும் ரமளானின் காலத்தில் புறம்பேசுவது குற்றத்தை அதிகரிக்கிறது. 6) நோன்பு வைத்துக்கொண்டு ஏசி பேசி சண்டையிடுவது.

இவைகள் அனைத்தும் நோன்பின் மக்ருஹ் ஆகும். நோன்பு முறிந்துவிடாது.

நோன்பு வைக்காமலிருப்பதற்கு

அனுமதிக்கப்பட்டவர்கள்

1)வியாதியின் காரணத்தால் நோன்பிருக்க சக்தியற்றிருந்தால் அல்லது வியாதி அதிகரித்துவிடும் என்றிருந்தால் நோன்பில் லாமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

2) கற்பஸ்திரி நோன்பிருப்பது தனது அல்லது தன்னுடைய குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

3) தனது அல்லது பிறரின் குழந்தைக்கு பால் குடிப்பாட்டும் பெண் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பால் குறைந்து விடும் கஷ்டம் ஏற்படும் என்றிருப்பின் அச்சமயம் நோன்பு நோற்காமல் பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமும் அவசியமுமாகும்.

4) பிரயாணம் செய்யும் முஃஸாபிர் (சுமார் 48 – மைல் தொலை தூரம் பயணம் செல்பவர்) நோன்பு வைக்காமலிருப் பதற்கு அனுமதிக்கப்படுகிறது.

பிரயாணத்தில் கஷ்டம் இடைஞ்சலில்லாமலிருப்பின் நோன்பு நோற்பதுவே ஏற்றமானதாகும். பிரயாணத்தில் தனக்கு அல்லது தன்னுடனிருக்கும் சஹாக்களுக்கு நோன்பிருப்பதினால் கஷ்டம் ஏற்படும் என்றால் நோன்பில்லாமலிருப்பதுவே நல்லதாகும்.

5) நோன்புடன் பிரயாணத்தைத் தொடர்ந்தால் அந்த நோன்பை பூர்த்திசெய்வது அவசியமாகும். பிரயாணத்தி லிருந்து நோன்பில்லாமல் சாப்பிட்டு, குடித்து ஊர் திரும்பினால் அன்றைய மீதமான நேரங்களை நோன்பைப் போன்றே இருந்து கழிக்க வேண்டும்.

6) நோன்பை விட்டு விடு என்று கொலைமிரட்டலைக் கொண்டு பயமுறுத்தப்பட்டால் நோன்பைவிட்டு விடுவதற்கு அனுமதியுண்டு. பின்னர் அதனை ‘களா’ செய்யவேண்டும்.

7) வியாதி, பசி, தாகத்தின் அதிகரிப்பால் அவரை நோட்ட மிட்ட தீன்தாரியான முஸ்லிம் வைத்தியர் அல்லது டாக்டர் உயிருக்கு ஆபத்து என குறிப்பிட்டால் நோன்பை விட்டு விடுவதற்கு அனுமதியென்ன! கட்டாயக்கடமையுமாகும். பின்னர் அதனை ‘களா’ செய்வது கட்டாயமுமாகும்.

8) ஹைள் – மாதவிடாய் , நிபாஸ் – பிரசவத்திற்கு பின் ஏற்படும் இரத்தம் இக்காலங்களில் பெண் நோன்பிருக்காமல் விடுபட்ட அந்த நோன்பை பின்னர் ‘களா’ செய்வது கட்டாயமாகும்.

தராவீஹின் சட்டங்கள்

புனித ரமளான் மாதத்தின் இரவுகளில் இஷாவுடைய ஃபர்ளு தொழுகைக்குப்பின் 20 ரகஅத் தராவீஹ் தொழுகை தொழுவது சுன்னத்தே முஅக்கதாவாகும். தராவீஹ் தொழுகையில் ஒரு தடவை குர்ஆன்ஷரீப் ஓதுவது அல்லது கேட்பது சுன்னத்தாகும்.

எனவே தராவீஹ் 20 ரகஅத் தொழுவது – குர்ஆன்ஷரீப் ஒரு தடவை தராவீஹ் தொழுகையில் ஓதுவது அல்லது கேட்பது ஆக இவ்விரண்டும் தனித்தனியான சுன்னத்தாகும். ஒருசில இரவுகளில் பூராகுர்ஆன்ஷரீபையும் தராவீஹ் தொழுகையில் ஓதக்கேட்டு மீதமான நாட்களில் தராவீஹ் தொழுகையை விட்டு விடுவோருக்கு ஒரு சுன்னத்தை நிறை வேற்றிய நன்மைதான் கிடைக்கும்.

குர்ஆன்ஷரீப் மனனமான ஹாபிஸ் கிடைக்காவிட்டால் அலம்தரகைப போன்ற சிறு சூராக்களை மட்டும் ஓதி தராவீஹ் தொழுகையை நிறைவேற்றிவிடலாம்.

இஷா ஃபர்ளு தொழுகைக்கு முன் தராவீஹ் தொழுகை தொழுவது கூடாது. எனவே பள்ளிவாசலில் இஷா ஃபர்ளு ஜமாஅத் முடிந்ததின் பின் வருவோர். இஷாஉடைய ஃபர்ளு தொழுகையை நிறைவேற்றிய பின்புதான் தராவீஹ் தொழுகையில் சேர வேண்டும். விடுபட்ட தராவீஹ் தொழுகையை தராவீஹ் ஜமாஅத் முடிந்ததற்குப் பின்பு தனிமையாக தொழுது கொள்ள வேண்டும்.

வித்ரு தொழுகையை தராவீஹ் தொழுகைக்கு முன் அல்லது பின் தொழுது கொள்ளலாம். எனவே தராவீஹ் தொழுகை பாக்கியுள்ளவர் வித்ரு தொழுகையை ஜமா அத்துடன் நிறைவேற்றிவிட்டு பின்னர் விடுபட்ட தராவீஹ் தொழுகையை தனியாக தொழுது கொள்ளலாம்.

தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஷரீப் உடைய எழுத்துக் களின் உச்சரிப்புகள் விடுபடும் விதத்தில் மிகவேகமாக ஓதுவது பெரும்பாவமாகும். அவ்வாறு ஓதுவதால் ஓதக் கூடிய இமாமும், ஓதுவதைக் கேட்கும் முக்ததிகளுக்கும் எவ்வித நன்மையும் கிட்டாது.

ஒவ்வொரு நான்கு ரகஅத்திற்குப் பின்பும் சிறிதுநேரம் அமர்ந்திருப்பது முஸ்தஹப்பாகும். தொழுகக்கூடியவர்களின் சவுகரியத்தைக் கருதி இமாம் ருகூவு. சுஜூதுஉடைய தஸ்பீஹ்கள், ஸலவாத் போன்றவற்றை ஓதாமல் விட்டு விடுவது கூடாது.

குர்ஆன்ஷரீப் கத்தம்செய்யும் நாளில் அளவுக்கதிகமான மின் விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது போன்ற இஸ்ராப் – மேல்மிச்சமான செலவுகள் செய்வது தவிர்க்க வேண்டியவைகளாகும். இனிப்பு வழங்குவதற்கு வலுக் கட்டாயமாக பணம் வசூலிப்பதும் பள்ளியில் இனிப்பு வழங்கும் சமயம் இரைச்சலிட்டுக் கூச்சலிடுவதும் ஒன்றுக் கொன்று ஏசிப்பேசிக்கொள்வதும் மார்க்க முரணான காரியங்களாகும்.

இஃதிகாப்

புனித் ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது சுன்னத்தே முஅக்கதா அலல் கிபாயாவாகும். ஊரில் ஒருவர் மட்டும் இஃதிகாப் இருந்தால் அதுவே மற்றெல்லோருடைய பொருப்பிலிருந்தும் கடமை விடுபட்டு விடுகிறது. ஒருவர்கூட இஃதிகாபில் இல்லையாகில் எல்லோரும் சுன்னத்தை விட்ட பாவிகளாகி விடுவார்கள்.

ஆண்கள் பள்ளிவாசலிலும் பெண்கள் தன்னுடைய வீட்டின் குறிப்பான ஒரு பகுதியிலும் இஃதிகாப் இருக்க வேண்டும். இஃதிகாப் உடைய நிய்யத்தும் பெண்கள் ஹைளு, நிபாஸை விட்டும் சுத்தமாக இருத்தலும் வேண்டும். இஃதிகாப் இருக்கும் காலங்களில் ஹைளு வந்துவிட்டால் அல்லது குழந்தை பிறந்துவிட்டால் இஃதிகாபை விட்டுவிடவேண்டும்.

இஃதிகாபின்போது உடலுறவு கொள்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது கூடாது.

இஃதிகாப் இருக்கும் ஆண் தேவையற்று பள்ளிவாசலை விட்டும் பெண் தனது இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது கூடாது. தேவையில்லாமல் இஃதிகாபின் இடத்தை விட்டும் வெளியாகுவது இஃதிகாபை முறித்து விடும் செயலாகும். இதுவரை எத்தனை நாட்கள் இஃதிகாபில் இருந்தாரோ அதுமட்டும் கூடிவிடும்.

ஆம், தன்னுடைய அல்லது மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளிக்கிளம்புவது கூடும்.

1)தன்னுடைய தேவைக்கு வெளிக்கிளம்புவது உதாரணமாக: மலம், ஜலம், கழிப்பதற்கு வெளியாகுவது.

2)மார்க்கத்தின் தேவையைக் கருதி வெளியாகுவது உதாரணமாக இஃதிகாப் இருக்கும் பள்ளிவாசலில் ஜும்ஆ நடைபெறவில்லையாகில் ஜும்ஆ தொழுகைக்காக வேண்டி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு வெளிக்கிழம்பிச் செல்வது.

அறிந்தோ அல்லது மறதியாகவோ உடலுறவு கொள்வது இஃதிகாபை முறித்துவிடும். இதில் ஞாபக மறதியைக் கவனிக்கப்பட மாட்டாது. இஃதிகாபில் முற்றிலும் வாய்மூடி இருப்பது மக்ரூஹ் ஆகும் வீண்பேச்சில் ஈடுபடாமல் குர்ஆன் ஷரீப் ஓதுவதிலும் மற்ற வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

நோன்பு

நோன்பு
*நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது விதியாக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதியாக்கப்பட்டிருக்கிறது.
*(இவ்விதி) எண்ணப்படும் (குறிப்பிட்ட) சிலநாள்களிலே ஆகும். (அந்நாள் களில்) உங்களில் எவரேனும் நோயாளிகளாகவோ, அல்லது பயணத் திலோ இருந்தால், அவர் வேறு நாள்களைக் கணக்கிட்டு (நோன்பு நோற்று)க் கொள்ளவும். நோன்பு நோற்கச் சக்தியற்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும். ஆனால் எவரேனும் விரும்பி (கடமைக்கு மேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச்சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர் களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும்.
*நோன்பும் அதன் பலன்களும்
அல்லாஹ்விற்காக என்னும் தூய்மையான எண்ணத்துடன் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது ஆகிய சுகங்களைத் துறப்பதற்கே நோன்பு எனப்படும். இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் “ரமளான்” மாதம் முழுவதும் நோன்பு இருப்பது பருவமடைந்த ஆண் –பெண் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.
இந்த நோன்பினால் உடல் மட்டுமன்றி உள்ளமும் தூய்மை அடைகிறது. நோயாளிகளிடம் உணவைக் குறைத்துக் கொள்ளுமாறும், பத்தியம் இருக்குமாறும் மருத்துவர்கள் கூறுவர். ஆண்டில் பதினொரு மாதங்கள் ஓயாது உழைக்கும் குடலுக்கு ஒரு மாதம் சற்று ஓய்வு தருவதால் குடல் சுத்தமாகி நோய்கள் அகலவும், உடல் ஆரோக்கியம் பெறவும் வழிபிறக்கிறது. ஆண்டு முழுவதும் உடலில் தேங்கும் அசுத்தத்தை நீக்கி உடலைத் தூய்மைப்படுத்துகிறது நோன்பு.
நோன்புக் காலங்களில் பசி, தாகம், காமம் ஆகிய உணர்வுகளை சகித்துப் பழகுவதன் மூலம், இதர நாள்களிலும் தீமைகளை விட்டகன்று, தூய்மை அடைய நோன்பு ஒரு பயிற்சிக்களமாக விளங்கு கிறது. வாழ்க்கையில் ஒரு நாளும் பசியை உணர்ந்திராதவர்கள் கூட, பசிக்கொடுமையை அனுபவ ரீதியாக உணரவும், ஏழை எளியோர் மீது இரங்கவும் நோன்பு வழிவகுக்க்கிறது.
இதற்கெல்லாம் மேலாக உண்ணஉணவிருந்தும், பருகப்பானமிருந்தும் அனுபவிக்க அருகில் மனைவி இருந்தும் அல்லாஹ்வின் கட்டளைக் காக அவற்றையெல்லாம் துறக்கும் பொழுது, மனிதனின் பக்தியும், இறையச்சமும் மேலோங்க இந்த நோன்பு காரணமாகிறது.
இவ்விதம் உடல் ஆரோக்கியம், மனக்கட்டுப்பாடு, இரக்கம், இறையச்சம் ஆகிய உயர் பண்புகளின் மூலம் மனிதன் தூய நிலையை அடைய இந்த நோன்பு காரணமாகிறது. எனவேதான் “நீங்கள் தூய்மை அடையும் பொருட்டு உங்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. என்று இறைவன் இங்கே சுட்டிக்காட்டுகின்றான்.
அதே நேரத்தில் நோன்பு நோற்றுக் கொண்டே பொய்,புறம்,கோள் மற்றும் தீய பேச்சுகளிலும், தீய செயல்களிலும் ஈடுபடுவோரின் நோன்புக்கு இறைவனிடம் மதிப்பு இல்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள் ‘வீண் பேச்சுகளையும், வீணான செயல் களையும் கைவிடாத ஒருவர், தன் உணவையும் பானத்தையும் கை விடுவதில் அல்லாஹ்விற்கு எத்தேவையும் இல்லை.
இன்றும் பழைய மதத்தார் இடையே நோன்பு நோற்கும் வழக்கம் காணப்படுகிறது. எனினும் அது இஸ்லாமிய நோன்பு போன்று மிகுந்த பயன் தரும் முறையில் அமையவில்லை. துக்கம் அனுஷ்டிக்கவும், போரில் வாகை சூடவும், சோதனையிலிருந்து மீளவும் வேண்டி துறவிகள் மேற்கொள்ளும் ஒரு சடங்காக யூதர்கள் நோன்பைச் சுருக்கிக் கொண்டு விட்டார்கள்.
*நோன்பு நோற்கச் சக்தியற்றோருக்கு பரிகாரம் –ஃபித்யா
நோன்பு நோற்க முடியாத நிலையில் உள்ள முதியோர், ஒரு நோன்புக்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக 1600 கிராம் கோதுமை, அல்லது அரிசி, அல்லது கோதுமையின் கிரயத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்து விடவேண்டும். அல்லது ஒவ்வொரு நோன்புக்கும் பதிலாக ஓர் ஏழைக்கு இருவேளை நடுத் தரமான உணவு அளித்திட வேண்டும். இது இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்களின் கருத்தாகும். இமாம் ஷாஃபீ (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி ஒரு நோன்புக்கு 2150 கிராம் வீதம் விடுபட்ட ஒவ்வொரு நோன்புக்கும் கோதுமை அல்லது அரிசி வழங்க வேண்டும்.
இவையெல்லாம் குறைந்தபட்ச அளவைக் குறிப்பதாகும். விரும்பு வோர் இந்த அளவைவிட அதிகமாக வழங்கலாம். மேலும் ஓர் ஏழைக்கு மட்டுமன்றி பல ஏழைகளுக்கும் அளிக்கலாம். நடுத்தரமான உணவை விடுத்து, உயர் தரமான உணவையும் வழங்கலாம். இவ்விதம் கூடுதலாக கொடுப்பது சிறந்ததாகும் என அல்லாஹ் கூறுகின்றான்.
நோன்பு நோற்க சக்தியற்றோர் இவ்வாறு ஃபித்யா – பரிகார தர்மம் செய்யலாம். என்றாலும் கூட, சிரமத்தைச் சகித்துக் கொண்டு நோன்பு நோற்று விடுவதே மேலான செயலாகும் என நோன்பின் மாண்பை இறைவன் அரிவிக்கிறான்.
*’இஃதிகாஃப்’ தொடர்பான சட்டம்
இஃதிகாஃப் என்பதற்குப் பொதுவாக தங்கியிருத்தல் என்பதே பொருளாகும். ஆயினும் இஸ்லாமிய வழக்கில் குறிப்பிட்ட சில வரை முறைகளுடன் மஸ்ஜிதுகளில் – இறையில்லங்களில் தங்கி வழிபாடு கள் செய்வதற்கே இஃதிகாஃப் எனப்படும்.
ரமளான் மாதம் கடைசிப்பத்து நாள்களில் நோன்புநோற்று மஸ்ஜிதில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். நோன்பு திறந்த பின் உண்பது, பருகுவது, உடலுறவு கொள்வது முதலியவை மற்றவர் களுக்குக் கூடும். ஆனால் இஃதிகாஃபில் இருப்பவர் நோன்பு திறந்த பின்னர் உண்ணவும் பருகவும் செய்யலாம்; உடலுறவு கொள்ளக் கூடாது என்ற வரைமுறை உண்டு.
இதேபோல இயற்கைக் கடன்கள் மற்றும் மார்க்கத் தேவைகளுக்காக வேண்டியே தவிர, அவர் மஸ்ஜிதிலிருந்து வெளியேறக்கூடாது. இவ்வாறு ஆண்டில் ஒருமுறை மஸ்ஜிதில் தங்கியிருந்து இறைவழி பாட்டில் ஈடுபடுவதால் மனிதனுக்கு மன அமைதியும், மனத்தூய்மை யும் கிடைக்கும். இறைநெருக்கத்தைப் பெறவும் வழியேற்படும். தனக்கும், தன் குடும்பத்தார், சமூகத்தார், தேசத்தார் ஆகியோருக்கும் இறைவனிடம் சிறப்பாகப் பிரார்த்திப்பதற்கு மனிதன் இதன் மூலம் அரியதோர் வாய்ப்பைப் பெறுகிறான்.
அவன், தான் நாடுகின்றவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றான். (அப்படி) ஞானம் கொடுக்கப்பெற்றவர் அபரிமிதமான நன்மை கொடுக்கப் பெற்றவராவார். (ஆனால்) அறிவாளிகள் தவிர (வேறு எவரும்) இதனை உணர்வதில்லை.
(நீங்கள் தர்மம் செய்ய விழையும் போது) ஷைத்தான் வறுமை குறித்து உங்களை அச்சுறுத்தி (கருமித்தனம் போன்ற) தீமைகளைக் கொண்டு உங்களை ஏவுகிறான். ஆனால் அல்லாஹ்வோ தன்னுடைய மன்னிப்பையும், உதவியையும் உங்களுக்கு வாக்களிக்கின்றான். .அல்லாஹ் தாராளமானவனும் அறிவோனுமாவான்.
*வறுமையைக் காட்டி மிரட்டும் ஷைத்தான்:
தர்மம் செய்யத் தொடங்கினால் “நாம் தர்மம் செய்து ஏழையாகி விடுவோமோ” என்று மனிதன் எண்ணுவதுண்டு. இது ஷைத்தான் தூண்டுகிற எண்ணம் என இறைவன் எச்சரிக்கின்றான். இறைவழியில் செலவு செய்து கொண்டே போனால், இறுதியில் வறிய நிலைக்குத் தள்ளப்படுவாய் என்று அச்சுறுத்தும் ஷைத்தான், கருமித்தனம் மற்றும் பேராசை போன்ற தீய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளுமாறே தூண்டி விடுவான். ஆனால் அல்லாஹ்வோ “நீங்கள் அறம் செய்யுங்கள்; உங்களின் பிழைகளைப் பொறுக்கின்றேன். மேலும் உங்களுடைய தொழிலில் முன்னேற்றத்தை அருள்வேன்” என வாக்களிக்கின்றான் எனவும் திருமறை சுட்டுக் காட்டுகிறது.

நன்றி : நர்கிஸ் மாத இதழ் – செப்டம்பர் 2008

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

பள்ளிவாசல் ‘மினாரா’ பேசுகிறேன்!

(ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0822-the-holy-call-from-minaret.html
http://www.mudukulathur.com/religiondetails.asp?id=147

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்!
என்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.
இவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என ‘அதான்’ என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.
சுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.
இஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ? அப்போது தான் எனக்கும் மரணம் நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.
இப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது!. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.
எனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.
ஒருவகையில் உலகம் அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வேன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது!. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன்?. அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.
எனதருமை நண்பா!. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா!. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா? என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.
ஓ… அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே?. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய்!. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா?.
நான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய்?. நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்!.
ஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம்? என நானும் விடாமல் துரத்தினேன்.
உங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே? வெளிநாடு போய்விட்டாரா? இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது!.
ஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்!.
ஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது!
கல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா? என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா?
ஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ? அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.
கல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது நிரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன்! நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல!.
( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)

மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் !

மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் !
என் இதயங்கவர்ந்த வாசகர் நெஞ்சங்களே, உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் நல்லருள் நிலவிட பிரார்த்தனை செய்தவனாக துவங்குகிறேன்…. நான் எழுதிய “ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல்” கட்டுரையை படித்துவிட்டு நீங்கள் கொடுத்து வரும் ஆலோசனை களையும், நல்லாதரவையும் எண்ணி பெருமிதம் கொண்டவனாக இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் !
எனது நெருக்கமான நண்பர் ஒருவர் தம் பிரச்சனையை என்னிடம் சொன்னதைத் தான் உங்களிடம் கட்டுரையாய் சமர்ப்பித்துள்ளேன். நான் சொல்லியுள்ள விஷயங்கள் தனிப்பட்ட ஒருவரின் விஷயமாக பார்க்காமல் ஒரு சமூக கண்ணோட்டத்துடன் பார்த்ததால் உருவானதே இந்தக் கட்டுரை !
இதை மிகவும் நிதானமாக படித்துவிட்டு ஒவ்வொரு வாசகரும் அவரவர் தம் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட விதம் குறித்து என்னவென்று சொல்வேன்? எவ்வளவு அற்புதமான கருத்துக்கள். சமூகத்தின் மீது கவலை கொண்ட நிறைய பேர் பாதிக்கப் பட்ட நண்பரின் நிலை குறித்து தங்கள் கண்கள் குளமானதாகவும், அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென புரியவில்லையென்றும் கூறினர்.
சில வாசகர்கள் கட்டுரைக்குரிய நபர் இந்துவா? முஸ்லிமா? கிறிஸ்டினா? என்றெல்லாம் கேட்டனர். காரணம் நான் அவரின் மதத்தை அடையாளப்படுத்தவில்லையாம் ! பிறப்பால் மனிதனாகவும், பேசும் மொழியால் தமிழனாகவுமே நான் அவரை பார்த்ததால் மதத்தை இங்கு குறிப்பிடவில்லை என அந்த வாசகர்களுக்கு பதிக் கூறினேன்.
உங்கள் கட்டுரை காலத்திற்கேற்ற கண்ணாடி ! என் கணவரின் நிலையும் அப்படித்தான் உள்ளது உரிமைகளையும், உணர்ச்சிகளையும் இழந்தவளாய் நான் பரிதவிக்கிறேன். தயவுசெய்து என் கணவரின் பார்வைக்கு உங்கள் கட்டுரையை அனுப்புவீர்களா? எனக்கேட்டு அவரது கணவரின் மின்னஞ்சல் முகவரியையும் நமக்கு கொடுத்தார் மதுரையைச் சேர்ந்த பெண் வாசகி ஒருவர். அவர் விருப்பப்படியே நமது கட்டுரையை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைத்தோம் !
காரைக்கால் நண்பர் அமீருத்தீன் தொலைபேசி வாயிலாக நம்மை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபர் இனியும் இங்கே இருப்பதில் அர்த்தமில்லை. அவர் உடனே கேன்சலில் ஊர் போகட்டும் ஊரில் போய் அவருக்கு தெரிந்த தொழில் எதையாவது செய்து கொண்டு மனைவியுடன் மகிழ்வோடு வாழட்டும். தொழில் செய்ய என்னால் இயன்ற பொருளாதாரத்தை செய்யவும் தயார் எனக் கூறியதை கேட்டதும் அவரது அளவு கடந்த மனிதாபிமானத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு செல்லும் ஒவ்வொரு மனிதனும் அளவுக்கு மீறிய வகையில் சாமான்களை கட்டிக் கொண்டு பெட்டி, பெட்டியாய் இறக்குவதால் தான் ஊரில் இருக்கும் பெண்களுக்கு இங்கு படும் நம்மவர்களின் கஷ்டங்கள் தெரிவதில்லையென்றும், ஒரு முறை பொருள் கொடுத்து எப்போது பிரச்சினை வந்ததோ? அப்போதே கட்டுரைக்குரிய நபர் சுதாரித்திருக்க வேண்டாமா? தொடர்ந்து அதே தவறை செய்தது அவரின் அறிவீனத்தையே காட்டுகிறது. என விமர்சனம் செய்தார் கடைய நல்லூர் பாரூக்.
இவரது கூற்றிலும் உண்மை இருக்கவே செய்கிறது. அதிக சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தாயகம் செல்கிறார். குறைந்த சம்பளம் பெறுபவரும் சாமான்களுடன் தான் ஊர் போகிறார். ஆக வெளிநாட்டிலிருந்து ஊர் செல்லும் எல்லோருமே பெட்டி, பெட்டியாய் சாமான்கள் வாங்கி செல்லும்போது பெண்களின் பார்வைக்கு அனைவரும் சமமாகவே தெரிகின்றனர். அதனால் தான் பக்கத்து வீட்டு ரேவதிக்கு அதிக சம்பளம் பெறும் அவள் புருஷன் பத்தாயிரம் ரூபாய்க்கு தங்க வேட்டை புடவை வாங்கி கொடுத்ததால் ரேவதிக்கு அவள் புருஷன் வாங்கி கொடுத்த அதே புடவையை எனக்கும் வாங்கி அனுப்புங்கள் என்று மிக குறைந்த சம்பளம் பெறும் தம் புருஷனுக்கு போன் மூலம் விண்ணப்பிக்கிறாள் ராக்காயி ஆக வெளிநாட்டு சாமான்கள் மீதான மோகம் ஒட்டுமொத்த பெண்களை யும் வாட்டி வதைப்பது எதார்த்தம். இதற்கு முழுபொறுப்பும் உழைப் பாளிகளாகிய நாம் தான் !
மாண்புமிகு மக்களவை உறுப்பினர் ஒருவர் டெல்லியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது கட்டுரையை மின்னஞ்சல் மூலம் படித்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த நிலை ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல பல பேரின் எதார்த்தமும் அதுவாகவே உள்ளது. அருமையான கருத்துக் களை காலம் அறிந்து சமூக அக்கறையுடன் கொடுத்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட நபரின் பிரச்சினைகள் தீர அவர் தாயகம் செல்வதுதான் சிறந்தது. அவர் வாழ்க்கை வளம்பெற எல்லோரும் பிரார்த்திப்போம் எனக் கூறியதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
பிரச்சினைக்குரிய நபர் உணர்ச்சி வயப்பட்டு கேன்சல் செய்து விடாமல் குழந்தையில்லா தமது சூழ்நிலையை அவரது கம்பெனி நிர்வாகத்திடம் எடுத்து சொல்லி ஐந்தரை மாதம் நீண்ட கால விடுமுறை வாங்கி ஊர் செல்வது தான் நல்லது என்றார் வேலூர் ராஜேஸ் கண்ணன்.
ஒரு மனிதன் இறந்த பின்பும் அவனை அடையாளப்படுத்துவது அவனது வாரிசே ! அதனால் குழந்தையின்மையை தவிர்க்க உடனடியாக அவர் கேன்சலில் ஊர் செல்லட்டும். கடவுள் பாக்கியத்தால் அவரது எல்லா காரியங்களும் கை கூடிய பிறகும் அவர் துபாய் வர ஆசைப்பட்டால் நானே எனது நண்பரின் கம்பெனியில் நல்ல சம்பளத்திற்கு வேலையில் சேர்த்து விடுகிறேன் எனக்கூறிய தஞ்சை ஜவஹரின் மனிதநேய சிந்தனையை என்னவென்று சொல்வது?
பொதுவாக அமீரக வாழ்க்கை என்பது சிலருக்கு வேண்டுமானால் சோலைவனமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோர்க்கு பாலைவனமாகவே இருக்கிறது. தற்போதைய பொருளாதார மாற்றத்தால் குடும்பத்துடன் இருப்பவர்களுக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. குடும்ப வசதிக்காக எடுத்த லோன் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் ஒவ்வொருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது ‘0’ பூஜ்ஜியமே ! அதனால் பிரச்சினைக் குரிய நண்பர் தாயகம் செல்வதுதான் சரியானதாக இருக்கும். என்றார் முகவை தைய்யூப் அலி,
உங்கள் கட்டுரையை படித்ததும் ‘ஷாக்’ காகி விட்டேன். காரணம் நானும் தற்போது திருமணம் முடிந்து 55 வது நாளிலேயே துபாய் வந்து விட்டேன். நிச்சயம் உங்கள் கட்டுரை எனக் கொரு எச்சரிக்கை மணியாக இருக்கும் எனக் கருதுகிறேன். உங்கள் நண்பர் எதைப் பற்றியும் யோசிக்காமல் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கேன்சலில் ஊர் செல்வது தான் சிறந்தது எனக்கூறி நம்மை வியப்படைய வைத்தார் ஏர்வாடி சுல்தான். பிழைப்புத்தேடி வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் ஆரம்பத்திலிருந்தே தனக்கென்று ஒரு சேமிப்பை உருவாக்கி இருந்தால் இந்த நண்பரைப் போல கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது ! என சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்திய பரமக்குடி தர்மலிங்கத்தின் கருத்து பாராட்டிற்குரியது தான் ! திருமணம் முடித்து வந்து முதல் முறையாக விடுமுறையில் ஊர் சென்ற திருநெல்வேலியை சேர்ந்த எனது நண்பன் தன் மனைவிக்காக ஒரு மொபைல் போன் வாங்கியவுடன் உனக்கென்று தனியாக போன் வாங்கிவிட்டேன் இனிமேல் நீயும் நானும் சுதந்திரமாக பேசிக் கொள்ளலாம் என்று மனைவியிடம் உற்சாகமாக கூறினான். ஆனால் ஊரில் போய் பார்சலை பிரித்ததும் நண்பனின் அக்கா மகன் போன் சூப்பர் மாமா நான் எடுத்துக் கொள்கிறேன் எனக்கூறிவிட்டு நண்பனின் சம்மதமே அவசியமில்லாதது போல் சிட்டாய் பறந்து விட்டான் மருமகன். இவற்றை யெல்லாம் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த என் நண்பனின் மனைவியுடைய முகம் வாடிப்போய் கண்ணில் தூசி விழுந்ததைப் போல கண்ணை கசக்கிக் கொண்டு தன் ஆற்றாமையை அழுது தீர்த்துக் கொண்டாள். என்ற தகவலை கேட்கும் போது கிட்டத்தட்ட பெரும்பாலானவர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது என யூகிக்க முடிகிறதென்று நீண்ட விளக்கம் கொடுத்தார் கீழக்கரை உசேன், பிரச்சினைக்குரிய நண்பர் திடீரென்று ஊர் போய் என்ன செய்ய முடியும்? 15 ஆண்டுகள் குடும்பத்திற் காக உழைத்தவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் அவருக்காகவும் அவரது மனைவிக் காகவும் ஏன் உழைக்கக்கூடாது? கையில் கொஞ்சம் பணமாவது சேர்த்துக் கொண்டு ஊர் போனால் தானே, ஒரு பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக் கொள்ளலாம். அதனால் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் தற்போது விடுமுறையிலேயே ஊர் செல்லட்டும் என்றார் கீழக்கரை நசீர் சுல்தான், இவ்வளவு தியாகம் செய்தும் கூட குடும்பத்தார் புரிந்து கொள்ளவில்லையென்றும், தன்னை மதிப்பதில்லையென்றும் கூறும் நண்பர் இன்னும் ஏன் கூட்டுக் குடும்பத்தை விரும்புகிறார்? பேசாமல் தனிக் குடித்தனம் போவதே புத்திசாலித்தனம் எனக்கூறிய காயல்பட்டினம் நிஜாமின் கருத்தையும் உள்வாங்கி கொண்டேன். உயிருள்ளவரை பெற்றோர்களை பேணுவது காலத்தின் கடமையாகும். அதே நேரத்தில் நம்மை நம்பி வந்துள்ள மனைவிக்குரிய கடமையையும் நாம் செய்தாக வேண்டும். இந்த நேரத்தில் கேன்சலில் ஊர் போய் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறாரோ? அதில் சிலதை பெற்றோர்க்கும் மிகுதியை துணைவிக்குமாய் பங்கீடு செய்து கொண்டு ஆனந்தமாய் வாழலாமே ! என மிகவும் பொறுப்புடன் கூறினார் முதுவை சம்சுதீன் சேட், 15 வருட பிரச்சினை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ! இன்னுமா அவர் துபாயில் இருக்க ஆசைப்படுகிறார்? கேட்கவே கொடுமையாக இருக்கிறது என கோபப்பட்டார் நாமக்கல் பரமசிவன். உங்களின் கட்டுரையை படித்துவிட்டு எனக்காக நான் அழுவதா? அல்லது உங்கள் நண்பருக்காக அழுவதா? எனத் தெரியவில்ல சார், உண்மையாகவே நான் அமீரகம் வந்து 20 ஆண்டுகளாகிவிட்டன. கிட்டத்தட்ட உங்கள் கட்டுரை எனது வாழ்க்கையைத்தான் படம் பிடித்து காட்டி விட்டதோ? என நினைக்கத் தோன்றுகிறது. மற்றவர் கண்களை மூடுவது உறக்கத்திற்காக ! ஆனால் நான் கண்களை மூடுவது என் கண்ணீர்த்துளிகளை நிறுத்துவதற்காக ! எங்களைப் போன்றோர்களின் நிலை மற்றவர் களுக்கு விழிப்புணர்வை கொடுக்கட்டும் ! உங்கள் கட்டுரையின் மூலம் நானும் ஒரு தெளிவான முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கூறி என்னை நிலை தடுமாற வைத்து விட்டார் பாண்டிச்சேரி முருகேசன், இலங்கையில் நடந்து வரும் எமது மக்களின் துயரங்களை நினைத்து வருந்துவதா? அல்லது உழைப்பாளியின் மனக் குமுறலைப் பார்த்து வேதனைப்படுவதா? எனத் தெரியவில்லை ! இது போன்ற அவலங்கள் எமது மக்களை விட்டு நீங்க இறைவனைத்தான் கேட்கனும் என மழலைத் தமிழில் வருத்தத்துடன் பேசினார் இலங்கை பவாஸ், பிரச்சினைகள் இல்லாத மனிதனே கிடையாது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான கோணத்தில் பிரச்சினைகள் இருந்து கொண்டேயிருக்கும். அதனை அணுகும் முறையை அம்மனிதன் சரியாக செய்து விட்டால் ஓரளவுக்கு சேதாரத்தை தடுத்து விடமுடியும். (No pain – No Gain) ஒன்றை இழக்காமல், ஒன்றை பெற முடியாது என்பது வாழ்வியல் எதார்த்தம். வெளிநாட்டிற்கு பிழைக்க வருபவர்களின் நிலையும் அப்படித்தான். குழந்தை யென்னும் செல்வத்தை அடைய நினைக்கும் கட்டுரைக்குரியவர் அமீரக வாழ்க்கையை இழந்தே தீர வேண்டும். தற்காலிகமாக, இதுதான் சரியான தீர்வாகவும் அமையும் என தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் அற்புதமான பல ஆலோசனை களை சகோதர வாஞ்சையோடு எடுத்து சொன்ன விதத்திலேயே தாம் ஒரு மனநல ஆலோசகர் என்பதை உணர்த்தி விட்டார் மதுரை முகைதீன் பாட்சா, துபாய் மோகம் என்ற அவலநிலையை எதார்த்தமாய் எடுத்துக் காட்டியுள்ள உங்களின் எழுத்தாற்றல் பாராட்டிற்குரியது ! கட்டுரையின் ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் சொல்ல வந்த விஷயத்தை சரியான கோணத்தில் தெளிவான நடையில் சொல்லி விட்டீர்கள். ஆனால் இது மாதிரியான கட்டுரைகள் நமது பெண்களின் பார்வைக்கு செல்ல வேண்டும். அவர்கள் தான் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்தக் கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு வாசகரும் பிரிண்ட் எடுத்து தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தாலே போதும் தமிழகம் முழுவதுமாக பெண்களின் பார்வைக்கு சென்றைடைந்து விடும். பெண்கள் மாறினால் தான் சமூக அவலங்களை களைய முடியும் என குற்றால அருவியைப் போல கொட்டித் தீர்த்து விட்டார் பொறியாளர் கீழை இர்பான், ஊரில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு 25 வயதாகியும் திருமணம் செய்து வைக்க விருப்பம் கொள்ளாத என் பெற்றோர்கள் நீ வெளிநாட்டிற்கு ஒரு சபுரு போய் வா, அப்பத்தான் நல்ல விலைக்கு உன்னை விற்று தங்கைகளுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியும். என்பது போல இருந்து விட்டார்கள். காரணம் எங்கள் ஊரில் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு அவ்வளவு மவுசு. நானும் வேறு வழியின்றி கட்டிட வேலைக்கு துபாய் வந்துவிட்டேன். வந்த புதிதில் நாங்களாகவே சமைத்து சாப்பிட்டோம். இந்நிலையில் எங்களது பழைய கேம்பை இடித்து விட்டு புதிதாக கட்டினார்கள். ஆனால் கேட்டரிங் சிஸ்டம் தான். சொந்தமாக சமைத்து சாப்பிட எங்கள் கம்பெனியில் தடை போட்டு விட்டனர். நாங்களாக சமைத்து சாப்பிட்ட போது ஒரு நபர் இரண்டு தபூக் கல்லை தூக்கி எடுப்போம். அவ்வளவு தெம்பாக இருந்த நாங்கள் எங்கள் கம்பெனியின் கேட்டரிங் சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்த பிறகு இப்போது ஒரு தபூக் கல்லை இரண்டு பேர் சேர்ந்து தூக்கும் நிலைக்கு ஆளாகி விட்டோம். திருமணத்திற்கு தயாராக இருக்கும் என் அவல நிலையை பார்த்தீர்களா? வெளிநாட்டு மாப்பிள்ளை என்னும் மோகத்தில் குளித்து சுகம் காணத்துடிக்கும் பெற்றோர்கள் திருந்தாத வரைக்கும் குடும்ப பாசத்திற்கு அடிமையாகிவிட்ட என் போன்றோர்கள் நிலையும் தொடரத்தான் செய்யும். இதைப் போலத்தான் உங்கள் கட்டுரைக்குரிய நபரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். என தனது விரக்தியையும் திருமண ஏக்கத்தையும் நம்மிடம் பகிர்ந்து கொண்ட பெயர் சொல்ல விரும்பாத தூத்துக்குடி மாவட்ட நண்பரின் சோக கீதத்தை அவரது பெற்றோரின் செவிகளுக்கு எட்ட வைத்துவிடு இறைவா ! என பிரார்த்தனை தான் செய்ய முடிந்தது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் ஒருவரின் அவல நிலையை வெளிக்கொண்டு வர நினைத்த நமது கட்டுரை பலபேரின் சோகங்களை யும், வேதனைகளையும் வெளிக்கொண்டு வந்துவிட்டது ! மனதளவில் பாதிக்கப் பட்டிருந்த சில வாசகர்கள் தமது வருத்தத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்ட பிறகு நிச்சயம் மன ஆறுதலை பெற்றிருப்பார்கள் என்றே கருதுகிறேன். நூற்றுக்கணக்கான வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், கைபேசி மூலமாகவும் நல்ல ஆலோசனை களையும், நல்ல கருத்துக்களையும் பரிமாறிக் கொண்டதை எண்ணி பாராட்டி நன்றியை உரித்தாக்குகிறேன். வாசகர்கள் அளித்த அனைத்து வழிமுறைகளையும் கட்டுரைக்குரிய நண்பரிடம் கூறி விட்டேன். அப்போது அவரது முகத்தில் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்த ரேகை தெரிந்தது. அவரது சோகத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியினை நா தழுதழுக்க கூறிக்கொண்டார். விரைவிலேயே ஊர் நோக்கிய அவரது பயணம் தொடரவும், அமீரக வாழ்க்கை சூழல் நிறைவு பெறவுமிருக்கிறது ! புதிதாக அமீரகம் வந்திருப்பவர் களுக்கும், ஏற்கனவே வந்திருந்து பல வருடங்களை கடந்துள்ளவர்களுக்கும் நமது கட்டுரையின் மூலம் சொல்லிக் கொள்வதெல்லாம்! உழைப்பின் சிறு பகுதியை கட்டாய சேமிப்பில் ஒதுக்கிவிடுங்கள். கார்கோ மூலம் பெட்டி, பெட்டியாய் சாமான்கள் அனுப்பி வைக்கும் ஆடம்பர கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! தாய் தந்தையர், உடன் பிறந்தவர், மனைவி ஆகியோரின் நிலையறிந்து அதற்குத் தகுந்தாற்போல யாருக்காகவும் யாருடைய உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் எல்லோருடைய விஷயத்திலும் மனம் குளிரும்படியாக நடந்து கொள்ளுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டால் எல்லோருக்கும் எல்லாமும் சாத்தியமே ! இத்துடம் நிறைவு பெறட்டும் ! எல்லோருடைய மனக்குமுறலும் !!


நன்றி !!!
அன்புடன்
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
துபை.

தந்தையையும்-தாயையும் காப்பது தலையாய கடமை

தந்தையையும்-தாயையும் காப்பது தலையாய கடமை

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி)


05. 02. 2010 காலைப் பத்திரிக்கையினை புரட்டிக் கொண்டிருந்த எனக்கு ஒரு பெட்டிச் செய்தியினைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அது என்ன என்று கேட்கிறீர்களா?

70 வயதான கலீல் அகமது என்ற பெரியவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதிற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர் அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டதாகவும், அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அனுகியதாகவும். அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லையென்றும், ஆகவே காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டருக்கு செல்போனில் தகவல் சொன்னதாகவும், அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்துள்ளதாகவும், ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை என்றும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.. தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரை நீங்கள் முதன்முதலில் அறிமுகமான தெய்வக் குணம் கொண்டவராக உங்களுக்குத் தெரியவில்லையா?

இரண்டாவது செய்தி 02. 02. 2010 அன்று பத்திரிக்கைகளில் வந்தது. 70 வயதான கணவர,; ப+ங்காவனம்-மனைவி, சின்னக்குழந்தை திருவேற்காடு தன் மகன் வீட்டில் வசித்து வந்தனர். அந்தப் பெண்மனி தன் நகைகளை மகன் கேட்டுக் கொண்டதிற்கிணங்க கொடுத்து வைத்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு அந்த நகைகளை திருப்பிக் கேட்டதாகவும், ஆனால் மகன் அதனை மனைவியிடமிருந்து வாங்கிக் கொடுக்கவில்லையென்றும் அதனையறிந்து மனம் நொந்த வயதான தந்தையும்-தாயும் தாங்கள் சொந்தக்காரர்களைப் பார்க்க வந்தவாசிக்கு செல்வதாக மகன் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு திருவேற்காடு ஏரிக்கரை சென்று விஷம் அருந்தி இறந்ததாகவும் செய்தி வெளி வந்தது.





ழூன்றாவது செய்தி 01. 02. 2010 தேதியில் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக நடப்பதாக ஒரு சம்பவத்தினை மேற்கோள் காட்டியிருந்தது. அதுதான் ‘கைக்குத்தல்’ என்ற பழக்கம். நெல்லை உரலில் குத்தி எடுத்த அரிசியைத்தானே கைக்குத்தல் என்று கேள்விப்பட்டிருக்கிறோம.; ஆனால் வயதானவர்களை அன்புக் கொலை மூலம் சாகடிப்பதினைக் கேள்விப் பட்டிருக்கிறோமா? இல்லையே! அதுதானே புது தகவலான ‘கைக்குத்தல்;’. அதாவது 80 வயதினைக் கடந்த ஆணோ-பெண்ணே தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக் கொண்டு அவஸ்தை படக்கூடாது என்ற அபூர்வ நடவடிக்கையாகும். 80 வயதினைக் கடந்த பெரியவர்; உறவினர்களுக்கு தகவல் சொல்லி வரவழைத்து அவர்களுக்கு உடல் முழுக்க எண்ணெய் தடவப்படும். பின்பு குளிர்ந்த தண்ணீரில் அவரைக் குளிப்பாட்டுவார்கள். அதன் பயனாக அந்த பெரியவர் ஜன்னிக் கண்டு இரண்டு நாளைக்குள் இறந்து விடுவார். அதன் பின்பு அவருடைய உறவினர் இறுதி சடங்கு செய்வார்களாம்.மேற்கூறிய சம்பவங்கள் ழூன்றுமே அதிர்ச்சியான செய்திதானே?


குர்ஆனுடைய மேற்கோள்படி பிள்ளைகளை ஒரு ரத்தக்கட்டி ழூலம் உருக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப்பிள்ளை தாயின் கருவில் வளரும் போது தாய் தன் உதிரத்தை உணவாக தந்து வளர்க்கிறாள். குழந்தை தாயின் வயிற்றில் தவழும் போது ஏற்படும் அசைவுகளை இன்ப வேதனையாக ஏற்றுக் கொள்கிறாள். பிறக்கும் போது தாய் படும் வேதனையினை எடுத்தியம்ப வார்த்தையில்லை. சில சமயங்களில் அந்தக் குழந்தையினைப் பெறும் போது தாயும் மடிவதுண்டு. பிறந்த குழந்தையினை தாழாட்டி, .சீராட்டி வளர்க்கும் போது கணவன் கூட சில சமயங்களில் மனைவியினைப் பார்த்து பெறாமை அடைவதுண்டு. குழந்தையினை தூக்கிக் கொஞ்சும் போது சிறுநீர், மலம் கழித்தாலும் அதனை புன்சிரிப்புடன் தாங்கிக் கொள்வதுண்டு, குழந்தை பெற்றோர்கள் நெஞ்சில் மிதித்தாலும் அதன் வலியைப் பொறுத்துக் கொள்வதுமுண்டு. தாய் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் தான் குழந்தை அழும் போது சிரிப்பாளாம். அது எப்போது தெரியுமா நண்பர்களே? தன்னுடையக் குழந்தை பிறக்கும் போது அழுவதைப் பார்த்துத் தானே தாய் மகிழ்ச்சி வெள்ளத்தில் அழுவாளாம். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பின்பு ‘வளர்த்த கிடா மார்பில் பாய்ந்த’ கதைகளைக் கேட்கும் போது தானே நாம் குழந்தைகளுக்கு மார்க்க நல்லொழுக்கங்களைச் சொல்லிக் கொடுக்க மறந்துவிட்டோமா? என்ற சந்தேகம் எழுகிறது.





இக்ராமுல் முஸ்லிமீனில் தந்தையினை நடத்தும்விதம் சம்பந்தமாக கூறுகையில், ‘அன் அபிதர்தா கால சமிஹ்து ரஸ_லல்லாஹ் யக்கூலுல் வாலிது அவ்சத்து அப்வாபில் ஜன்னத்தி பஇன்ஸித்த பஅழ்ஹி தாலிக்கல் பாப அவிஹ் பழ்கு’. அதாவது தந்தை சுவர்க்க வாசல்களில் சிறந்த வாசல். (அவருக்கு மாறு செய்து மனவேதனை கொடுத்து) அவ்வாசலை அழித்து விடவும் அல்லது அவருக்குக் கீட்படிந்து நடந்து(அவரைத் திருப்திப்படுத்தி) அவ்வாசலை பாதுகாக்கவும் உனக்கு விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று ரஸ_லல்லாஹ் கூறியதாக ஹஜ்ரத் அப+தர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னொரு தடவை ரஸ_லுல்லாஹ், ‘கேவலமடையவும்! மீண்டும் கேவலமடையவும்! மறுபடியும் கேவலமடையவும்’ என கூறியபோது திகைத்து காரணம் கேட்டு கேள்வி எழுப்பிய தோழர் ஹஜரத் அப+ஹ_ரைரா (ரலி)

அவர்களிடம், “ தனது பெற்றோரில் இருவர் அல்லது ஒருவர் முதுமை அடைந்த நிலையில் இருக்க, அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களை மகிழ்வித்து சுவர்க்கத்தில் நுழையாதவன் கேவலமடையவும்” எனக் கூறியதாகச் சொன்னார்கள். ஆகவே நமது வேதமும், அதனை உலகில் பரப்ப காரண கர்த்தாவான கடைசி நபியும் எடுத்துக் காட்டிய உதாரணத்திற்கு மேல் வேறு என்ன வேண்டும் நல்மார்க்க பண்புகளை கற்க?

நல்ல நெல் விளைச்சல் வேண்டுமென்றால்; நல்;ல விதை நெல்லை விதைக்க வேண்டும். அதை விதைத்தால் மட்டும் போதுமா? அதனை போதுமான தண்ணீர்-போசாக்கான உரம்-ப+ச்சி தாக்காதளவில் ப+ச்சி மருந்து ஆகியவைகள் தெளித்த பின்பு தான் நல்ல நெல் அறுவடை செய்ய முடியும். அதேபோன்று தானே குழந்தை பிறப்பதிற்கு எவ்வாறு கவனம் செலுத்துகிறோமோ அதே போன்று அன்பு, பாசம், நல்லொழுக்கம், நல்ல உலகக் கல்வி, மார்க்கப்பற்று போன்றவைகளை குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தை தவறு செய்தால் எப்படி செடிக்கு ப+ச்சி மருந்து தெளிப்போமோ அதேபோன்று தவறை அந்தக் குழந்தைக்கு கசப்பானதாக இருந்தாலும் சுட்டிக் காட்டி கண்டிப்புடன் வளர்த்தால் தானே நல்லவர்களாக வளரும். அவ்வாறு செய்யவில்லையெனில் நல்ல விதை எப்படி பேணிக் காக்காவிடில் பதராக போய் விடுமோ அதே போன்று குழந்தைகள் வாழ்வும் வீணடிக்கப்படும்.

எனது உறவினர் மலேசியா சிட்டிசன் தகுதி உடையவர். ஐவேளை தொழுது மார்க்கப்பற்று குறையாதவர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். அவருடைய தாயார் எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய பார்வையிழந்த தந்தை இரண்டு வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கிறார். அந்தத் தந்தையினைப் பார்த்துக் கொள்வதிற்காகவே அவர் மலேசியா செல்லாமல் தந்தையினை பேனிக் காப்பதிலேயே அவரும் அவருடைய மனைவியும் கவனம் செலுத்துகிறார்கள். அவ்வாறு உள்ளவர்களுக்குத் தானே எல்லாம் வல்ல அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்க வாசலை திறந்து வைப்பான். அது போன்றவர்கள் நம்மிடையே இல்லாமலில்லை என்பதிற்காகத் தான் மேற்கொண்ட உதாரணத்தினைச் சொன்னேன்.

சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியானதினை அனைவரும் படித்திருப்பீர்கள். அதனை இந்தச் சமயத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். உத்திரப் பிரதேசத்தினைச் சார்ந்த ஒரு திருமணமாகாத இளைஞர் தந்தையினை இழந்தவர். பொருளாதாரத்தில் அவ்வளவு வசதியில்லாதவர.; அன்புத் தாய் மட்டுமே உள்ளார். அந்தத் தாய்க்கு ஒரு ஆசை. எப்படியாவது தமிழ்நாட்டிலுள்ள ராமேஸ்வரக் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென்று. ஆனால் அந்த ஆசையினை நிறைவேற்ற அந்த மகனிடம் போதிய வசதியில்லை. அதற்காக தாயின் ஆசையினை எட்டாக்கனி என்று ஒதிக்கித் தள்ளினாரா? என்றால், இல்லையே! ஒரு கூடையிலே தாய் அடுத்தக்கூடையிலே தனக்கும்,தனது தாயும் உடுத்த போதுமான உடை எடுத்துக் கொண்டு அந்தக் கூடையில் தாயினை உட்கார வைத்து உத்திரப் பிரதேச மாநிலத்திலுருந்து ராமேஸ்வரம் வந்து தன் அன்புத் தாயின் ஆசையினை நிறைவேற்றி மகிழ்ந்ததாக பத்திரிக்கைகளுக்குப் பேட்டியும் அளித்துள்ளார் என்றால் பாருங்களேன். பெற்றோரை எவ்வளவு மதிக்கிறார் அவர் என்று.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எங்க@ர் கண்மாயின் கீழ் கோடியில் உள்ள கீழாயூருக்கு அருகில் குடிக்கத் தண்ணீர் எடுக்க ஊற்றுத் தோண்டும் போது முதுமக்கள் தாழியினை தோண்டி யெடுத்தார்கள். அங்கே சென்று பார்த்தேன். அந்தத்தாழிகள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு வயதானவர்களை உயிருடன் போட்டு அவர்கள் சில நாட்கள் வாழும் அளவிற்கு வாக்கரிசி, அவர்களுக்கு பிடித்த பண்டங்கள், அவர்கள் உபயோகித்;த மண்பண்டஙகள், சிறிய எண்ணெய் விளக்கு வைத்து மூடி வைத்து விடுவார்களாம். அது தானே உயிர் ஊசலாடும் போது அந்தக் காலத்தில் எடுத்த நடவடிக்கை. அதே நடவடிக்கையைத் தானே மேற்கூறிய விருதுநகர் மாவட்டத்தில் நடப்பதாகக் கூறிய ‘கைக்குத்தல்’; என்ற அன்புக்கொலை என்றால் மிகையாகுமா?

பார்சி இனத்தவர் இறந்தவர்களை காக்கைக்கும், கழுகுக்கும் உணவாகும் படி குன்றுகள் மேல் வைத்து விடுவார்களாம். அதுபோன்று வயதில் பெரியோர்களை நடத்தக் கூடாது, இறந்தவர்களைக் கண்ணியப்படுத்த வேண்டுமென்று என்று தானே ரஸ_லுல்லாஹ் இறந்தவர்களை குளிப்பாட்டி சுத்தம் செய்து கபனிட்டு நல்லடக்கம் செய்யச் சொன்னார்கள். அதனை விட்டு விட்டு பெற்றோரை நடுரோட்டில் அனாதையாக விட்டு தலைமுழுகலாமா? இங்கே ஒரு தமிழ் பழமொழியினையும் அதற்கான ஒரு கதையினையும்; சொல்வது சரியானதாகும் என் நினைக்கிறேன். ஒரு வீட்டில் உள்ள சிறுவன் தன் பெற்றோர் தினமும் தன் வயதான பாட்டனாருக்கு ஒரு சிறு மண்பாண்டத்தில் உணவிடுவதும், அவரை கீழ்தரமாக நடத்துவதையும் பார்த்து பொருமிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் தன் பாட்டனார் சாப்பாட்டு மண் பாத்திரத்தை தந்தை கண் எதிரே எடுத்து பத்திரப்படுத்தினான். தந்தை அதனைப் பார்த்து ஏன் அதை; எடுத்து பாதுகாப்பாக வைக்கிறாய் என்றார். அதற்கு அந்த சிறுவன், ‘தாத்தா இறந்த பின்பு உங்களுக்கு உணவளிக்க அது உதவுமே என்றுதான் அதனைப் பத்திரப்படுத்து’வதாகச் சொன்னதும் அதிர்ச்சியடைந்து பாட்டனாரை தந்தையும், தாயும் போட்டி போட்டு நல்ல முறையில் நடத்தினார்கள் என்பது கதையாக இருக்கலாம். அந்தக் கதையினை தழுவித் தானே தமிழில் உள்ள பழமொழியில், ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் செயல்களை கண்காணிக்காமலில்லை என நினைத்து தங்கள் பெற்றோருக்கு கடமை செய்ய வேண்டும்.

தீன் குறள் என்ற புத்தகத்தில் கவிஞர் இ. பதுருத்தீன் கீழ்கண்ட குறளை பெற்றோர் பற்றி எழுதியுள்ளார்:

‘செல்லுபடியாகாச் செயல்புரினும் தள்ளுபடி செய்யற்க தாய்தந்தைச் சொல்’

அதாவது தனக்கு உடன்படாத செயல் பெற்றோர் செய்தாலும் பொற்றோரை ஒதுக்கித்தள்ளாதே, என்பதே அதன் பொருள்.

மற்றொரு குறளில், ‘தோள் துர்க்கி, தொட்டிலும் ஆட்டி, அரவணைத்தார் தாள்துர்க்கிக் காத்தல் தலை;’ அதாவது தோளிலும் துர்க்கித் தொட்டிலிலும் ஆட்டி அரவணைத்து வளர்த்த பெற்றோர்தம் பாதங்களையும் போற்றிக் காப்பது பிள்ளைகளின் கடமையாகும். ஆகவே தான் தாயின் காலடியில் சொர்க்கமிருக்கிறது என்று போதித்தது இஸ்லாம். அதற்காக தாயின் காலடியில் தலை வைத்து வணங்கவேண்டுமென்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது சிர்க் ஆகும். தாய், தந்தையினை பேணிக்க காப்பாற்றுங்கள்: அவர்களை அனாதையாக நடுத் தெருவில் விடாதீர்கள் என்பதைத் தானே போதித்தது இஸ்லாம்.

உங்கள் பெற்றோரை கூடுவாஞ்சேரியில் அனாதையாக விடப்பட்ட 70 வயது கலீல் அஹமது போன்று விட்டு விடுடாதீர்கள். அவர்கள்தானே நீங்கள் உலகத்தின் பார்த்த முதன் முதல் அறிமுகமாக இருக்கிறார்கள். அவர்களை காப்பதின் மூலம் ஜென்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்க வாசலை அடைய உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

Qualities of Good will Ambassador

Qualities of Good will Ambassador

(Dr. A.P. Mohamed Ali, I.P.S®)


Start with the flashing smile.
Fail not to say, ‘Hallo’ to a stranger.
Show a right direction to a stranger looking for address.
Shove off the obstruction stones, sticks, glass pieces and nails on the footbath.
Show comfort and compassion to the special people.
Extend your helping hand to the elderly persons to carry weighty bags.
Feed the birds with eatables to birds, cows with the greens, water the plants and feed the sickly and needy persons.
Pay a courtesy call to the elderly citizens, sickly persons and persons languishing in prisons.
Be helpful letter writer to the blind, handicapped and illiterate.
(When I was a student of New college in 1967 I used to visit Egmore Ophthalmic hospitals with post card and inland letters to write letters to the eye patients during holidays)

Be a Traffic warden nearby school zone or pedestrian cross to help school children, women, elderly and handicapped.
Be a volunteer and first aid worker to help the victims of the accident, riots and natural calamities.
While driving give a lift to the genuine persons on need.
Voluntarily offer your seat while travelling in public transports to the aged, pregnant and women with child.
Pay visits to relatives with small gifts and don’t forget to carry toffees to children.
Speak softly and sweetly and be a good listener. Don’t expect that everyone should agree on your views.
Compliment your wife with praise and sweet words. Be a good tutor and model in character to your children.
Celebrate your happiness with the poor children and inmates of the aged homes.
Be a companion of good books.
Don’t loose the good friends.
Above all thank Allah when you raise in the morning for waking you alive and before going to bed in the night for making you alive to enjoy the worldly life.

மரபுப் பா பயிலரங்கம்

மரபுப் பா பயிலரங்கம் .. தொடர் பதிவு (மரபு கவிதைகள் எழுத கற்றுக்கொடுக்கப்படுகிறது)

அருமை தமிழ் நண்பர்களே,


வணக்கம், நமது தமிழ்த்தோட்டம் மரபு கவிதைகள் எழுத பயிற்ச்சி கொடுக்கிறது... வாருங்கள் தமிழ்த்தோட்டத்திற்கு ...


உங்களின் படைப்புகளையும் இலவசமாக வெளியிடுகிறது...




மரபுப் பா பயிலரங்கம்
கற்று தரும் ஆசிரியர் - தமிழநம்பி



என்றும் நன்றியுடன்
தமிழ்த்தோட்டம்
http://tamilparks.50webs.com



2010/3/5 Kovai Images .

நண்பர்களே..!!

தொடர்பதிவுக்கு அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து உங்கள் எண்ணங்களை இங்கு பதிவு செய்யுங்கள். உண்மையான தேடல் உள்ளவர்களுக்கு ஒருவேளை இந்த பதிவு பயன்படலாம்.

http://nanbansuresh.blogspot.com/2010/03/blog-post_9357.html

ஜீவன்சிவம்





--
http://tamilparks.50webs.com (Tamil Community)
http://babyworld.sitesled.com (Only for parents)
http://mobilepark.50webs.com (Mobile Park)
http://collections4u.50webs.com (Collections)
http://tamilflowers.blogspot.com (Tamil News)
http://itpark.50webs.com (Technology World)
http://kanyakumari.sitesled.com (About Kanyakumari)

Riyadh Tamil-speaking Mouvlavi’s Association

There is no doubt that time is of great importance in Islam and it has a special importance in the life of a Muslim as it is in reality the life and age of a person. If time is lost, subsequently the life of a person is lost. In His Book, Allaah made clear the importance of time as He swore by some parts of time in verses like Al-Fajr, Al-Asr, Al-Layl, Al-Nahaar. The Prophet drew our attention to the importance of time as he said: "People are losers in respect of two bounties, i.e. health and free time" [Al-Bukhaari].

This is the privilege for those who want to spend some time to seek knowledge.


The Riyadh Tamil-speaking Mouvlavi’s Association informs you with pleasure about the Islamic studies classes…They intend starting Classes as quickly as they can as it will take about 3 Months to complete One level/Stage. There fore, your early reply is awaited.
Location will be in Malaz… and to be notified in due Course

The subjects are –

1] Al Tawheed [the Islamic monotheiesm]
2] Al Hadeedh
3] Al Fiqh

The classes are for both Males & Females

Please enroll your self with

Moulavi Mafhoom 0504 150 737, Moulavi Zafarullah 0567 148 958 Moulavi Ramzan Faris 0507 129 963, Moulavi Rashad 0502 451 788

thariq@sails.net

டென்சனுக்கு ஒரு குட்பை ... !

டென்சனுக்கு ஒரு குட்பை ... !

இறுக்கமான சூழலில் சுழன்று கொண்டிருக்கிறது உலகம். எல்லா துறையிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். மனிதனுக்கு வரும் நோய்களில் 75 முதல் 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

சக மனிதன் மீதான கரிசனையும், ஆத்மார்த்தமான அக்கறையும் விலகி சுயநலச் சிந்தனைகள் விஸ்வரூபமெடுக்கும் போது இத்தகைய இறுக்கமான சூழல்கள் உருவாகின்றன.

மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் தொல்லைகளுக்கு ஆளாகும் ஊழியர்கள், வாழ்க்கைத் துணையின் விட்டுக் கொடுத்தல் அல்லது புரிந்து கொள்ளல் இல்லாத சூழலில் உருவாகும் மன அழுத்தம், சாதீய, மத, இன ரீதியாக அழுத்தமான சூழலுக்கு உள்ளாகும் பொது மக்கள். என எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும், அல்லது எந்த ஒரு சூழலை எடுத்துக் கொண்டாலும் இன்று மக்கள் ஒருவித மன அழுத்தத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் இந்த மன அழுத்தம் களையப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள், அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள் எனவே அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது, ஆனால் பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிறப்பு, இறப்பு, போர்கள், திருமணங்கள், விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, பெயர் இழத்தல், கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.

முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.

எல்லா பாதைகளையும் மெத்தைகளால் அலங்கரிப்பது இயலாது என்பதால் செருப்பு அணிகிறோம். அது போலவே மன அழுத்தத்தை உண்டாக்கும் காரணிகளை ஒழிப்பது என்பது இயலாத காரியம் ஆனால் நம்முடைய மனதை திறமையாகக் கையாள்வதன் மூலமாக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க முடியும்.

மன அழுத்தத்தைக் கையாள்வதற்கு நம்முடைய மனதின் சிந்தனைகளை தூய்மைப்படுத்த வேண்டும். எதிர்மறைச் சிந்தனைகள் பெரும்பாலும் மன அழுத்தத்தையே அளிக்கின்றன. எனவே நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள முடியும்.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியான குடும்பச் சூழல் பெரும்பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ளவேண்டும். குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.

ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும்.

மன அழுத்தம் பல நோய்களைக் கொண்டு வரும். குறிப்பாக மைகிரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.

தாய்மை நிலையிலிருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் மிகப்பெரிய எதிரி. அது தாயையும், கருவில் இருக்கும் குழந்தையையும் நேரடியாகப் பாதிக்கிறது என்கிறார் அமெரிக்காவின் மாயோ கிளினிக்ஸ் எனும் மருத்துவர் , எனவே தான் தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல இசை கேட்பது என மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுபவர்களை இந்த மன அழுத்தம் எளிதில் பிடித்துக் கொள்கிறது. எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துபவர்கள் மன அழுத்தம் உருவாகும் சூழலை பெரும்பாலும் விலக்கி விடுகிறார்கள்.

செய்ய முடியாத வேலைகளை ‘முடியாது’ என்று மறுத்து விடும் உள்ள உரம் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க மிகவும் அவசியம். எல்லா வேலைகளையும் இழுத்துப் போடுபவர்கள் பிரச்சனையிலிருந்து தப்ப முடியாது.

உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் மனிதனுக்கு பல இன்னல்களைத் தருகிறது. சிறு சிறு அழுத்தமான சூழல்களைத் தவிர்க்காத போதோ, அல்லது தீர்க்காத போதோ அழுத்தம் அதிகரித்து பெரிய இன்னலுக்கு ஆளாக்கி விடுகிறது.

அழுத்தம் இருவகையில் வரலாம். ஒன்று நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் செயல்பாடுகளால் நமக்குள் வருவது. இன்னொன்று நம்முடைய வாழ்க்கை முறை, சிந்தனைகளினால் வருவது.

நேர் சிந்தனை உள்ளவர்கள் எல்லாவற்றையும் நல்ல விதமாகப் பார்க்கிறார்கள். அதிக நேரப் பயணிக்க வேண்டியிருந்தால் அதிக நேரம் இசை கேட்க முடியுமே என்று நினைக்கக் கூடிய அளவுக்கு மனதை இலகுவாக வைத்திருக்க வேண்டும்.

‘இந்த வேலை எனக்குப் பிடிக்கவேயில்லை..’ அல்லது ‘என்னை யாருக்கும் பிடிக்கவில்லை’ இது போன்ற சிந்தனைகள் பரிதவிக்க வைத்து மன அழுத்தத்துக்குள் இட்டுச் செல்கிறது.

கவனக் குறைவு, முடிவுகள் எடுப்பதில் சிக்கல், ஞாபக மறதி, குழப்பம், எதிர் மறை சிந்தனைகள், தெளிவற்ற சிந்தனைகள், தவறான முடிவுகள், தப்பித்தல் முயற்சிகள் என மன அழுத்தம் மனதைப் பாதிக்கும் செயல்களைப் பட்டியலிடலாம்.

தலைவலி, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய், என மன அழுத்தம் தரும் உடல் நோய்களும் ஏராளம்.

இந்த மனம் உடல் சார்ந்த பாதிப்புகளினால் தன்னம்பிக்கைக் குறைபாடு, கோபம், எரிச்சல், சீரற்ற உணவு உண்தல், சீரற்ற தூக்கம், தனிமை விரும்புதல், கடமைகளைத் தவிர்த்தல், பதட்டம் உட்பட ஏராளமான செயல்களுக்கும் நம்மை அறியாமலேயே தள்ளப்பட்டு விடுகிறோம்.

மன அழுத்தத்தை மருத்துவம் பல விதமாகப் பிரிக்கிறது. திடீரென நிகழும் ஒரு நிகழ்வினால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை அக்கியூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். இதன் காரணம் நமக்கு தெரிந்ததாகவே இருக்கும். இது விரைவிலேயே காணாமல் போய் விடுகிறது.

தொடர் நிகழ்வுகளினால் ஏற்படும் மன அழுத்தத்தை எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் என்கிறார்கள். அதிகப்படியான வேலை. ஏராளமான பணிகள், தினமும் தாமதாய் வருவதால் வரும் பிரச்சனை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது.

இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின்மை, குடும்ப சூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை குரோனிக் ஸ்ட்ரெஸ் என்று அழைக்கிறார்கள்.

ட்ராமிக் ஸ்டெரெஸ் என்பது இன்னொரு வகை. ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு வராமல் இருக்கும் நிலையே இப்படி அழைக்கப்படுகிறது. கணினித் துறையில் இந்த மன அழுத்தம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான அலுவலகங்கள் ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இறுக்கமற்ற சூழலை குடும்பங்களில் குழந்தைகளிடம் உருவாக்க அமெரிக்க மருத்துவர்கள் ஆய்வறிக்கையில் கீழ்க்கண்டவை பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் குழந்தைகளுடன் உரையாடுங்கள். அவர்களுடைய தினம் எப்படி செலவழிந்தது. என்னென்ன செயல்கள் நடந்தன என்றெல்லாம் உரையாடுங்கள். அழுத்தமான சூழல் இருப்பது போல உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

உங்கள் பிரச்சனைகளை குழந்தைகள் மேல் எக்காரணம் கொண்டும் திணிக்காதீர்கள். அவர்களுக்கு குடும்பத்தின் தேவை மற்றும் அமைதியான வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்துங்கள்.

குழந்தைகள் எதையாவது செய்யும் போது மனம் விட்டுப் பாராட்டுங்கள். அவர்களை அரவணைத்துச் செல்ல மறக்காதீர்கள். அவர்கள் இசை, பெயிண்டிங், நடனம் போன்றவற்றில் ஈடுபட தூண்டுங்கள்.

நகைச்சுவை உணர்வுள்ள குழந்தையாக உங்கள் குழந்தையை வளர்க்க முயலுங்கள். அது இறுக்கமான சூழல்களை குழந்தைகள் சமாளிக்க பிற்காலத்தில் பயன்படும்.

குழந்தைகள் எப்போதும் எதிலும் முதன்மையாக வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். அது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி விடும். எல்லோரும் முதலாவதாக வருவது நடப்பதில்லையே. விடுமுறைகள், மாலை வேளைகளை சற்று இலகுவாகவே வைத்திருங்கள். அதிகப்படியான கல்வியும் மன அழுத்தத்தை நல்கும் என்பதை மறவாதீர்கள். தோல்வியும் வெற்றியும் சகஜம் என்னும் மனநிலையைக் கொண்டிருங்கள் அல்லது எதிர்காலத்தில் குழந்தை தோல்விகளைச் சந்திக்கும் போது உடைந்து போகும் வாய்ப்பு உண்டு.

உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருங்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் தந்தை குழந்தை குடிக்கக் கூடாது என அறிவுரை சொல்வது பாதிப்பை ஏற்படுத்தாது. குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், அவர்கள் பதின் வயது எட்டுகையில் நல்ல நண்பர்கள், உறவினர்களுடன் ஆரோக்கியமான நட்பு வைத்துக்கொள்ள தூண்டுவதும், உடற்பயிற்சிகள் செய்யத் தூண்டுவதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

மன அழுத்தம் சிலவேளைகளில் நாமாகவே கர்ப்பித்துக் கொள்ளும் தவறான சிந்தனைகளின் மூலமாகவும் வரும் என்பது கண்கூடு. தேர்வை நன்றாக எழுதிய மாணாக்கர் கூட மன அழுத்தத்துடன் திரிவது இதனால் தான்.

எத்தனை இறுக்கமான சூழலாக இருந்தாலும் சிரிக்கக் கற்றுக் கொண்டால் பிரச்சனைகள் பல காணாமல் போய்விடும். நல்ல நகைச்சுவை உரையாடல்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். தசைகளை இறுக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லும். நுரையீரலுக்கு சுத்தமான காற்றை கொண்டு செல்லும் எனவே மன அழுத்தத்தைக் குறைக்க சிரியுங்கள் என்கிறார் மனோ தத்துவ நிபுணர் லீ பெர்க்.

குடும்பங்களில் பிரச்சனைகள் வருவது சகஜம். கணவன் மனைவியரிடையே பிரச்சனை வரும்போது ‘உன்னால் தான் வந்தது’ என்று பழியை மாறி மாறி சுமத்தாமல் ‘நமக்கு பிரச்சனை இருக்கிறது’ எப்படி தீர்வு காண்பது எனும் கண்ணோட்டத்தில் பேச வேண்டும் என்கிறான் பிரபல அமெரிக்க உளவியலாளர் வில்லார்ட் எஃப் ஹார்லே.

மன அழுத்தத்தை சூழ்நிலைகள் பத்து விழுக்காடும் நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்பது தொன்னூறு விழுக்காடும் நிர்ணயிக்கின்றன என்கிறார் சார்லஸ் ஸ்விண்டால். எதையும் எதிர்கொள்ளும் மனநிலை கொண்டவர்களுக்கு மன அழுத்தம் குறைவாக இருக்கும் காரணம் இது தான்.

பெண்களுக்கு வேலை, குடும்பம் என இரட்டை அழுத்தமான சூழல்கள் இருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதை சரியான முறையில் கையாள குடும்ப சூழல் அமைதல் அவசியம்.

அலுவலகத்தில் இறுக்கத்தைத் தளர்த்த சரியான திட்டமிடுதல், காலத்தை சரியாக அட்டவணையிட்டு பயன்படுத்துதல், அவ்வப்போது மூச்சை இழுத்து விடுதல், இடையிடையே ஓய்வு எடுத்தல், மனதை தளர்வாக வைத்திருத்தல், நேர் சிந்தனை நண்பர்களுடன் நிறைய நேரம் செலவிடுதல், ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தல், முக்கியமான பணிகளை முதலில் முடித்தல், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பனைக் கொண்டிருத்தல், அவ்வப்போது விடுப்பு எடுத்தல் இவை பயன்படும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

* காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருபது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப் படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலைசெய்யாததைக் கட்டி அழாதீர்கள். சரிசெய்ய முயலுங்கள் காலணி ஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக் கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்… என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைப்பேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்ய முடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் ‘மன்னிக்கவும்.. என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தம் தரும்.

* ஆழமாக மூச்சை இழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளின் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள். ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதை புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

* மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழப் பழகுங்கள்.



இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்கு வசப்படும்.

- தமிழ் ஓசை களஞ்சியம்

Saturday, March 13, 2010

Free Essays

Free Essays

They have over 50,000 essays written by students just like you and me. Check them out at http://www.allfreeessays.com.

About All Free Essays
All Free Essays is a collection of essays and term papers written by students. Our members can review every work on the site to get help with their homework or share their own work and help others. With All Free Essays, you'll never have writer's block the next time you have to write an essay for school.

This message was sent by a All Free Essays user who entered your email address. If you'd prefer not to receive emails when other people invite you to All Free Essays, click here: http://www.allfreeessays.com/sorry_to_bother_you.php

திட்டமிட்டால் வெற்றி உறுதி

திட்டமிட்டால் வெற்றி உறுதி
- உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம்

ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்!
” வாழ்வில் வெற்றி பெற்றவர்களைப் பாருங்கள்! அவர்கள் ஓய்வின்றி உழைத்தவர் களாகவே இருப்பார்கள்”.
இப்படி ஒரு கருத்தை நாம் எல்லோருமே கேட்டிருக்கிறோம், இதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்புள்ளதா? இல்லை: “உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்’ என்ற கருத்தில், என்ன வேறுபாடு சொல்லமுடியும்?
ஆனால், இந்தச் சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியில், சொல்லில் வராத செய்தி ஒன்று புதைந்திருக்கிறது! என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்?
செக்கு மாட்டிற்கும் வண்டி மாட்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமையைக் கேட்டால் எதைச் சொல்வீர்கள்? இரண்டு மாடுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன; இது ஒற்றுமை. என்ன நடந்தாலும், செக்கு மாடு, இருக்கும் இடத்தை விட்டு ஓர் அடிகூட முன்னேறுவதில்லை: ஆனால் வண்டிமாடு கிளம்பின இடமும் போய்ச் சேரும் இடமும் வெவ்வேறு. இது வேற்றுமை.
நடந்துகொண்டே இருப்பதாலேயே, முன்னேறிக் கொண்டு இருக்கிறோம் என்பது பொருளில்லை. உடற்பயிற்சிக் கூடங்களிலும், உடல் தகுதி காணும் சில மருத்துவமனைகளிலும், ஒரு நடைக்கருவி (Treadmill) வைத்திருப்பதை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சிலர் அதில் நடப்பார்கள். சிலர் வேகமாக மூச்சிரைக்க, வேர்வை வழிய ஓடுவார்கள். ஆனால் ஓர் அங்குலம்கூட முன்னே செல்ல மாட்டார்கள்.
இது உடற்பயிற்சிக்குப் பொருந்தும். வாழ்க்கைக்குப் பொருந்துமா? நடப்பதன் நோக்கமே ஓர் இடம் விட்டு வேறு இடம் போக வேண்டும் என்பதுதானே? “இங்கிருந்து கிளம்புகிறேன்; இந்த இடத்தை அடைவேன்” என்ற தெளிவுடன் நடப்பவனே, குறித்த இடத்தை விரைவில் அடைகிறான். தெருத் தெருவாக நடந்து கொண்டே இருந்தால் பயன் உண்டா? ‘பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர்போய்ச் சேராது’ என்றார் கண்ணதாசன்.
இது உழைப்புக்கும் பொருந்தும். ஓய்வின்றி உழைப்பதால் மட்டுமே ஒருவர் வாழ்வில் முன்னேறிவிடுவதில்லை. அந்த உழைப்பின் பயன் வெளிப்பட ஓர் அரண் வேண்டும். ‘திட்டமிடல்’ என்பதுதான் அந்த அரண்!
உழைப்பின்றி ‘இப்படிச் செய்ய வேண்டும்: அப்படிச் செய்யவேண்டும் என்பவர்களை ‘வாய்ச்சவடால்’ பேர்வழி என்கிறோம். ‘ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டியதைப்போல’ என்ற பழமொழியும் இவர்களைக் குறிக்கிறது. உழைப் பில்லாத திட்டமிடல் வெறும் வீண் பேச்சுதான். ஆனால் திட்டமிடாத உழைப்பு…?
‘விழலுக்கு இறைத்த நீர்’ என்ற பழமொழி இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. நீர் இறைப்பது என்பது கடினமான உழைப்புதான். ஆனால், இறைக்கும் நீர், எங்கே போய்ச் சேர வேண்டுமோ, அதை நோக்கிப் பாய வேண்டும். இல்லா விட்டால் நீரை இறைத்துத்தான் என்ன பயன்?
திட்டமிடுதலும், செயல் படுதலும் இணைந்தால்தான் வெற்றியின் வாசல் தென்படுகிறது. நாட்டின் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுவதற்கு ஆணையம் (Planning commission) வைத்திருக்கிறது அரசு. திட்டமிடல் என்பதுதான் வேர். செயல்படல் என்பது, கிளைபரப்பி தளிர் விட்டு மலர் தருவது! வேரின்றி அமையாது மரம்!
ஓர் இராணுவத்திற்கு வெற்றி எதிரிகளைத் தாக்குதலால் மட்டும் வருவதில்லை: தாக்குதல் நடத்தப் போகும் நேரத்தையும், முறைகளையும், வேகத்தையும் திட்டமிட்டுக் கொண்டு களத்தில் இறங்கினால்தான் வெற்றி சாத்தியமாகிறது. தேர்வுக்குப் படிக்கும் மாணவன் தொடங்கி, பெரும் நிறுவனம் நடத்தும் முதலாளி வரை, திட்டமிட்டு செயல்படுபவரே வெற்றி பெறுகிறார்கள்.
ஒருமுறை தோற்றவர், மறுமுறை வெல்வதற்கான முதற்காரணம், எப்போதும் திட்டமிடுதலாகவே இருக்கிறது. இமய மலையின் எவரெஸ்ட் சிகரத்தை முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் ஹிலாரி என்னும் செய்தி எல்லோருக்கும் தெரியும்: ஆனால், பலருக்குத் தெரியாத செய்தி ஒன்றுண்டு. அவர் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விடவில்லை என்பதே அது.
மலையேற முடியாமல் திரும்பிய போது, எட்மண்ட் ஹிலாரி சொன்ன சொற்கள் மிக உயர்ந்தவை. எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி அவர் சொன்னார்: “உன்னை நான் கண்டிப்பாக வெல்வேன்; உன் சிகரத்தில் நான் கால் பதிப்பது உறுதி. காரணம், உனக்கு இதற்கு மேல் வளர்ச்சி யில்லை. அது நிர்ணயம் செய்யப்பட்டு விட்டது. ஆனால், நான் இன்னும் முயல்வேன்; வளர்வேன்.”
மலையேறுதல் என்னும் அவரது செயலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடுமையான பயிற்சி உட்பட அனைத்தும் திட்டமிட்டு செயல்பட்டபோது, அந்த செயலுக்குரிய பலன் எட்மண்ட் ஹிலாரிக்கு கிடைத்து விட்டது.
உலகத்தையே வெல்வதற்கு வழி சொல்லவில்லையா நம் வள்ளுவன்?
‘ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்.’
செயல்பட வேண்டிய காலத்தையும், செயல்பட வேண்டிய இடத்தையும் திட்டமிட்டுக் கொண்டு செயல்படுபவர்கள் எதைப் பெற விரும்புகிறார்களோ அதைப் பெற்றுவிடுகிறார்கள்!
‘திட்டமிடல்’ என்பதும் வறட்டுத்தனமாக இருந்து பயனில்லை. அறிவினாலும், அனுபவத்தி னாலும் தீட்டப்பட்டதாக அது இருக்க வேண்டும். வள்ளுவனே அதற்கும் வழிகாட்டி விடுகிறான்.
“வினைவலியும், தன்வலியும், மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.”
செய்ய விரும்பும் செயலின் தன்மையையும் அதைச் செய்து முடிக்கத்தேவையான ஆற்றலையும் முதலில் அறிந்து கொள்ளல்; செயலை செய்து முடிப்பதற்கான ஆற்றல் தன்னிடம் ஏற்கனவே உள்ளதா- இல்லை, இன்னும் பெருக்கிக்கொள்ள வேண்டுமா என்பதை உணர்ந்து கொள்ளல்.
செயலை நாம் செய்து முடிக்க நமக்குச் சவாலாக இருப்பவர் எவர் என்றும் அவரது ஆற்றலின் அளவு என்ன என்றும் தெரிந்து கொள்ளல்; அவருக்குத் துணையாக எவரேனும் வருவரா என்பதையும் வருபவரின் ஆற்றல் என்ன என்பதையும் ஆய்ந்து கொள்ளல்; நமக்குத் துணையாக செயல்பட எவரேனும் உள்ளனரா என்பதையும் அவரின் ஆற்றலையும் புரிந்து கொள்ளல்!
எச்செயலை செய்வதற்கும் திட்டமிடல் என்பது அளவுக்கு கூர்மைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதை விளக்கவே வள்ளுவன் இவ்வாறு அடுக்கிக்கொண்டு செல்கிறான்.
“ஒரு மரத்தை வெட்டுவதற்கு 45 மணித் துளிகள் நேரம் தந்தால், அதில் முதல் 40 மணித் துளிகளை ஆயுதத்தைக் கூர்மைப்படுத்தவே செலவிட வேண்டும்” என்ற முதுமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?
‘30 நிமிட மேடைப்பேச்சை 5 நிமிடங்களில் நான் தயாரித்து விடுவேன். ஆனால் 5 நிமிட மேடைப்பேச்சினை தயாரிக்க எனக்கு 30 நிமிடங்கள் வேண்டும்” என்றார் மிகச் சிறந்த பேச்சாளரான சர்ச்சில்.
மிகச்சரியாகவும் கூர்மையாகவும் திட்டமிடுதலே சிக்கல்கள் வராமல் தடுக்கின்றன; எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட சிக்கல்களிலிருந்து தப்பிக்கவும் வைக்கின்றன.
‘வாழ்க்கை ஒரு மிக மோசமான ஆசிரியர்’ என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாடம் நடத்தி, தேர்வு வைத்து அதில் தேர்ச்சியடைய வில்லை என்றால், ஆசிரியர் தண்டனை தருவார். வாழ்க்கையோ முதலில் தேர்வு நடத்தி, தண்டனை வழங்கிவிட்டு அதிலிருந்து ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது.
திட்டமிட்டு படிக்காத மாணவனுக்கு ஆசிரியர் தண்டனை தருகிறார். திட்டமிட்டு செயல்படாதவனுக்கு வாழ்க்கையே தண்டனை யாகி விடுகிறது.
‘வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா? என்ற தலைப்பில் பட்டி மன்றங்கள்கூட நடத்தப்படுகின்றன. விடை மிக எளிதானது. வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர் களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.
மலர்ப் பாதையாக வாழ்க்கை எப்போதுமே இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அது சலிப்பினைத் தந்துவிடும்.
அடங்காத அலைகள் நிறைந்த கடலைப் போல, எதிர்பாராத ஏற்றங்களும் இறக்கங்களும் வளைவுகளும் நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். அமைதியான கடல் என்றுமே திறமையான மாலுமியை உருவாக்குவதில்லை.
ஆர்ப்பரிக்கும் கடலை எதிர்கொண்டு செல்பவனே சிறந்த மாலுமியாக வளர்ச்சி யடைகிறான். திட்டமிட்டு செயல்படுபவனே, வாழ்வின் ஏற்றஇறக்கங்களை மீறி வெற்றி பெறக் கற்றுக்கொள்கிறான்.
திட்டமிடுவது என்பது மிகப்பெரிய வேலை என்றும், நம்மால் அது முடியாது என்றும் எண்ணத் தேவையில்லை. எல்லோருக்குமே திட்டமிடல் என்பது ஓரளவுக்கு இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது.
காலையில் உடற்பயிற்சிக்கோ அல்லது நடைப்பயிற்சிக்கோ நாம் அணியும் உடை வேறு. வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அணியும் உடை வேறு. ஒரு நேர்காணலுக்கோ, கல்லூரிக்கோ அல்லது அலுவல் தொடர்பாகவோ வெளியே செல்லும்போது அணியும் உடை வேறு. மறந்தும் கூட ஓரிடத்து உடையைப் பிற இடத்துக்கு நாம் அணிவதில்லை. பழக்கத்தில் நமக்குள் குடியேறி விட்ட ஒரு சிறு அளவிலான திட்டமிடல்தான் அது.
நம்முடைய ஒவ்வொரு சொல்லும் அதை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.
சற்று முனைப்பு இருந்தால் இந்த பழக்கம் எளிதில் கைகூடும். வெற்றி இலக்கும் எளிதாகும்.
‘தன்மனத்தே நினைந்து செய்யும் கொடுமையால் அனந்தாள்’ என்று கைகேயியைக் கம்பன் குறிப்பதுபோல, திட்டமிட்டே கெடுதல் செய்பவர்கள் உண்டென்றால், நம்மால் திட்டமிட்டு நற்செயல்கள் செய்யமுடியாதா என்ன?
வாழ்க்கையைப் போராட்டமாக எடுத்துக்கொண்டு திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு அது பூந்தோட்டமாக விரிகிறது. பூந்தோட்டமாக எண்ணி அமர்ந்திருப்பவர்களுக்கு அது என்றும் போராட்டமாகவே இருக்கிறது.

மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு

மார்ச் 18 முதல் 20 வரை துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு

துபாய் : துபாயில் சர்வதேச அமைதி கருத்தரங்கு மார்ச் 18 முதல் 20 வரை துபாய் ஏர்போர்ட் எக்ஸ்போவில் நடைபெற இருக்கிறது.
இதனையொட்டி கருத்தரங்கு, கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
இதில் மக்கா இமாம் ஷேக் அப்துல் ரஹ்மான் சுதேஸ், குவைத் இமாம் ஷேக் மிஸேரி ராஷித் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலும் யூசுப் எஸ்டேஸ் ( அமெரிக்கா ), அப்துல் ரஹீம் கிரீன் ( இங்கிலாந்து ), அஹ்மது ஹமீத் ( இந்தியா ), ஹுசைன் யீ ( மலேசியா ) , டாக்டர் ஹமீத் ஹுசைன் ( எகிப்து ), எம்.எம். அக்பர் ( இந்தியா ), யாசிர் காதி ( அமெரிக்கா ), சயித் ரகிஆ ( கனடா ) உள்ளிட்ட சர்வதேச பேச்சாளர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்த இருக்கின்றனர்.
அனைத்து மத/மார்க்க நம்பிக்கை கொண்டவர்களும் இதில் பங்கேற்கலாம். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு 04-3394767 / 04 – 608 7602
மின்னஞ்சல் : info@peaceconvention.com / www.peaceconvention.com

அமீரகத்திலிருந்து உம்ரா பயணத்திற்கு

அமீரகத்திலிருந்து உம்ரா பயணத்திற்கு

அமீரகத்திலிருந்து உம்ரா பயணம் செல்ல தொடர்பு கொள்வீர்

ஹாஜி எஸ் குத்புதீன்
050-5827597

Friday, March 12, 2010

CV Writing - Some Tips

CV Writing - Some Tips

Your résumé should provide answers to these questions:

Contact Information - What is your name and how can you be reached?
Job Objective - What do you want to do?
Education - What have you learned?
Employment History - What have you done?
Skills & Abilities - What can you do?
Activities and Honors
References - Who?

Contact Information

The header of your résumé should include your name, address, phone number, and email address, if you regularly use it. When submitting a paper version of your résumé, it is visually appealing to use a large font for your name. Include both a local and permanent address and a phone number so that an employer can easily reach you. This is especially important for graduating students.


Job Objective

Although optional, a job objective statement shows employers the direction you want to go, your work preferences, and serves as a focal point for employers to review and analyze your résumé. It allows employers to immediately identify the kind of position you want. If you are looking for jobs in a number of different fields, you need to have a different job objective for each position. To address this, prepare some résumés without objective statements. Or tailor each résumé to the specific job you seek. Do not write an objective that is vague and meaningless-if is isn't specific, don't include one. It may contain up to four parts:

The level of the position. This can be anything from an internship, to full time, entry level, experienced, supervisory, or executive.

Skills you hope to bring to the position. Look to the list of action verbs included in this toolkit to identify which skills you have experience using.

Position. If you are responding to a job listing, look in the text of the listing to find out what the employer calls the position. This is the actual title, such as consultant, investment banker or field or industry in which you hope to work. Such as telecommunications, health care, and banking.

Education

In this section, include any information about your degree(s), including where and when you graduated; date(s); major, minor, or concentration; certification; and academic awards and honors. Make sure you use the official names for schools, degrees and majors/minors.
Include all honors, special awards, and recognitions. While commonly known awards, such as Phi Beta Kappa, do not need an explanation, less known awards should be briefly explained.
Include your GPA if it is an asset. If your GPA is not strong, focus your résumé on non-academic strengths and skills. A general rule of thumb is that if your GPA is a 3.0 or higher, include it. If the GPA for your major is strong, you can just put that down but make sure you specify that it is only for classes in your major.

If you are calculating a major GPA, make sure that if employers ask for your transcript, they will be able to follow your calculations. If not, they will assume you falsified your résumé! GPA is calculated as follows: 3.15 can be rounded up to 3.2. However, 3.14 cannot be rounded up. If you do not have a lot of relevant experience for the position you are applying for, it is a good idea to list courses and class projects of interest to the employer.


Employment History

The way you structure the "experience" section will depend on what you are looking for and what you have done. This section lists in chronological order the positions you have held, names and locations of employers, and dates employed. You should also list responsibilities, achievements, significant contributions and demonstrated skills.

Try to describe your experience in the most interesting and brief way possible. However, don't sacrifice clarifying details about important accomplishments for the sake of brevity. Remember to use active verbs to describe your work experience. Be hard on yourself, and, if necessary, discard "good" material that will have no meaning for an employer. To assist you in writing this section, refer to the list of action words in this toolkit.

Descriptions such as "responsibilities included developing course material" can be phrased more persuasively as "developed course materials." Descriptions do not need to be phrased in full sentences. The questions in an employer's mind are "Why should I speak with this person? How are they different from all the other applicants?" Try to answer these questions in each of your descriptions.

You should also include independent study or volunteer work if it is relevant to the job you want and provided you with significant skills and experiences. If you do include your volunteer work, do not describe if under a heading which implies you were paid.

In some instances, you may want to divide your experience into sub-sections. For example, if you are seeking a teaching job, and have both a teaching and business background, two separate headings-one "Teaching Experience" and "Additional Experience" may have more impact than a single heading.

Skills and Abilities

This is the place to put important and/or interesting information that does not fit anywhere else. With the advance of technology, it is increasingly important to include a section on computer skills. This should include any of your knowledge of computer programs, hardware, software, database knowledge, and/or Internet functions. If you have any other notable skills, such as foreign languages, musical talents, or writing skills include these here.


Activities and Honors

If you have received any awards or honors, or been involved in campus or community organizations, such as athletics, clubs or student government, you should mention them in this section. Identify any leadership roles that you had in these organizations. If you have too many organizations to list, choose the ones that have the strongest connection to the type of job you seek, don't pad this section with organizations you joined "in name only." Employers may ask you about your involvement during an interview.

References

Simply indicate that references are "available upon request" in a paper version of your résumé. You should know at least 3 people who can serve as your references. Ask in advance for permission to use them as references. Use faculty and employers as references, not personal acquaintances. Do not include their names, address, or phone numbers on the résumé. You may send a separate sheet with this information along with your résumé, or wait until the employer requests references.



From
NSM Shahul Hameed
Madukkur (currently at Riyadh)

Thursday, March 11, 2010

மிரட்சிக் கொள்ள மாட்டோம்,,,,,

உலகெங்கும் கறுப்புக் கொடி
பர்தாவிற்கு எதிராக;

மனநோயால் பாதிக்கப் பட்ட கூட்டம் ஒன்று
மங்கையின் அழகாய் காண துடிப்பதுண்டு!

உரக்கச் சொல்லுங்கள் எதிரிகளுக்கு
அவிழ்த்துவிட்டு வருவதுதான் உனக்கு
அழகு என்றால்
இழுத்து மூடிக் கொள்வேன்
என் சுண்டுவிரலின் நகக் கண்ணையும்!!

கழட்ட மாட்டேன் அங்கியை
கயவர் கூட்டத்திற்காக;

தாடியைக் கண்டு
வெருண்டோடும் பேடிகளா;
சோதனை என்கின்ற பெயரில்
நித்தம் நித்தம் வேதனையா;
சிரித்துவிட்டேன் நான் - என்
சருமத்தில் உள்ள முடிக்கு இவ்வளவு
சவாலா என்று!!

இறுதிவரை இருப்போம் இப்படியே
இஸ்லாம் சொன்ன முறைப்படியே!!
வறட்சியைக் கொண்டு பயமுரித்தினாலும்
மிரட்சிக் கொள்ள மாட்டோம்!!

இருக்கும் உயிர்
இறைவனுக்கே!
கொடுப்பதும் எடுப்பதும் அவனடா;
இடையில் பூச்சாண்டிக் காட்ட நீ யாரடா?

- யாசர் அரஃபாத்

துபாயில் நான்…

துபாயில் நான்…

இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…
அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்- நான்
வேர்ப்பட்டதும்,
விமானம் ஏற‌
தீர்மானம் செய்ததால்…
அன்று அரும்பாக இருக்கையிலே
ஆகாய பார்வையிலே
அலைபாய்ந்த ஆசையிலே
அழகாக தோன்றிய‌
ஆகாய ஊர்தியும்,
அரங்கேறி போகையிலே
ஆனந்த்தம் இல்லாத‌
அனுபவம் ஆனது.
அதில் அலங்காரம் செய்துதான்
ஆகாரம் வந்தது,
ஆசைபட்டு தீர்த்திடாமல்
அசை போட்டு தீர்த்துவிட்டேன்…
இறங்கும் நேரம் வந்து விட‍- அன்று
இருக்கை இருந்து பார்த்தபோது- இங்கு
இயற்கை என்று ஒன்றும் இல்லை…
மணல் நகரின் அனல் காட்சி
இங்கு மக்கள் அல்ல மன்னர் ஆட்சி…
அன்று நிவார‌ண‌ம் தேடி வந்த‌ ந‌க‌ர‌ம்
இன்று நிரந்த‌ர‌ம் ஆகிப்போன‌ ந‌க‌ர‌ம்,
நாள் ‍ விடிந்தாலும் முடிந்தாலும்
ஒரே போல‌ இருக்கும்,
அட‌ அறைக்குள்ளே சிறைவைத்தால்
வேறென்ன‌ இருக்கும்…
உற‌வோடு உற‌வாட‌
தொலைபேசி என‌க்கு,
அதில் போன‌ காசுக்கு
இங்கேது க‌ண‌க்கு…
இங்கே ம‌னைவியோடு உற‌வாடி
பிள்ளை பெற‌முடியாம‌ல்,
பில்லை பெற்ற‌வ‌ர் ஆயிர‌ம்…
இள‌மையும் வேலைக்கு
இரையாகி போச்சு,
கால‌மும் காசுக்கு
க‌ரியாகி போச்சு,
த‌லையெல்லாம் அத‌ற்குள்ளே
ந‌ரையாகி போச்சு,
காசாவ‌து மீந்த‌தா
செல‌வாகி போச்சு…
வ‌ருமான‌ம் வ‌ருமுன்னே
செல‌வு வ‌ந்து சேர்ந்திடும்,
வெறுமாக‌ ஊர் சென்றால்
உற‌வு வ‌ந்து சேருமா?
காசுக் க‌ண‌க்குக‌ள்
க‌வ‌லை த‌ருகிற‌து,
க‌ட‌ந்த‌ கால‌ம்தான்
க‌ண்ணில் வ‌ருகிற‌து…
இனி இஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
க‌ஷ்ட்ட‌ப்ப‌ட்டாலும்,
ந‌ஷ்ட்ட‌ப்ப‌ட்ட‌து திரும்பாது…
எந்நாடு சென்றாலும்
என் நாடு ஆகாது,
சொர்க‌மே த‌ந்தாலும் ‍ ம‌ன‌தில்
தாய் நாடு சாகாது…


( எழுதியது : யாரோ )

மதிநாவில் சென்னை ரெஸ்டாரண்ட்

மதிநாவில் சென்னை ரெஸ்டாரண்ட்

சென்னை ரெஸ்டாரண்ட்
பிலால் மஸ்ஜித் பின்புறம்
குர்பான் ரோடு
மதிநா முனவ்வரா

அலைபேசி : 0500932681

அஹமது தீதாத்

அஹமது தீதாத்

இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்
பிறப்பு - ஜுலை 1, 1918
பிறந்த ஊர் - குஜராத், (இந்தியா)

1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள்
இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இவர் பிறந்த சில காலங்களிலேயே தென்ஆப்ரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். இவர் தனது 9வது வயதில் தென்ஆப்ரிக்கா சென்று தனது தந்தையுடன் இணைந்துவிட்டார். இவர் தென்ஆப்ரிக்கா சென்ற சிலகாலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார் (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவர் கடுமையாக தனது படிப்பில் கவனம் செலுத்தி 6-ஆம் வகுப்பிலேயே மிகச் சிறந்து ஆங்கிலப்புலமை மற்றும் பள்ளியில் நற்பெயர் பெற்றார்! (அல்ஹம்துலில்லாஹ்). இவர் தனது 16 வது வயதில் வேலை செய்ய துவங்கினார்.

1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் “இஸ்லாம் வாலால்“ பறப்பட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார் இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!


1942-1956 வரை இவரது வாழ்வில் நடந்தவை
சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி (இஸ்லாமிய அழைப்புபணி) 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் அமைந்துள்ள ”அவோலன்-சினிமா” என்ற ஹாலில் துவங்கியது. முதன்முதலில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது எத்தனை பேர் அதைக்கேட்டார்கள் தெரியுமா? மயங்கிவிடாதீர்கள் வெறும் 15 நபர்களே!
இவரது திறமையான பேச்சாற்றலில் மயங்கிப்போன மக்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக இருந்தனர். சில காலங்களுக்குப்பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க் மற்றும் கேப்-டவுன் என்ற நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது” தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை! பிறகு நடந்த சொற்பொழிவுக்கூட்டங்களில் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்).
இவர் துண்டுப்பிரச்சுரம் அளிப்பது, ஜும்ஆ பேருரை நிகழ்த்துவது முதற்கொண்டு நடைபெற்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.

இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் – 1956-1986
இவரது பேச்சாற்றலிலும் தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட பொதுமக்கள் கூட்டம் அபரிமிதமாக வளர்ந்தது! கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! (அறிந்துக்கொள்ளுங்கள் எமது ஆலிம் மற்றும் மவ்லவி சகோதரர்களே இவர் தங்களைப்போன்று எந்த ஜமாஅத்-ஐயும் நிறுவி இஸ்லாத்தை பிளவுபடுத்தவில்லை) இந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள் (திரு. குலாம் ஹுசென் வெங்கர் மற்றும் திரு. தாஹிர் ரசூல்). இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்!

1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் ”அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட் என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.


இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் பிப்லிகள் தியோலஜி Biblical Theology பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்! இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்! இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!


இவரது சர்வதேச சொற்பொழிவுகள் 1985-1995
1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார்!
1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ”ராயல் ஆல்பர்ட் ஹால்” என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார்.
1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு ”கிங் பைஷல் அவார்டு” கிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!
இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!

இவர் இஸ்லாமிய தாவா பணிக்காக பயணித்த நாடுகளின் பட்டியல் இதோ! (அல்ஹம்துலில்லாஹ்!)

சவுதி ஆரேபியா மற்றும் எகிப்து (பல முறை)

ஐக்கிய ராஜாங்கம் எனப்படும் – இங்கிலாந்து (பலமுறை 1985 முதல் 1988 வரை)

பாகிஸ்தான் (சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்-ஐ சந்தித்தார்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் (நவம்பர்-டிசம்பர் 1987களில்) இச்சமயம் இவரை ஜனாதிபதி கயும் கவுரவித்தார்

சுவிட்சர்லாந்து (மார்ச் 1987 ஜெனிவாவில் சொற்பொழிவு)

US அமெரிக்க (1986களில் திரு. ஸ்வாகர்டு, ராபர்டு டவுக்ளஸ் மற்றும் மற்ற 2 பேச்சாளர்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் அரிஜோனா மாகாணம், US)

ஸ்வீடன் மற்றும் டென்மார்க் (1991-ல் மட்டும் 3 இஸ்லாமிய சொற்பொழிவுகள்)

மறுபடியும் US அமெரிக்க, கனடா (1994 இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் கனடா)

ஆஸ்திரேலியா – (1996ல் அன்னாரது இறுதி சுற்றுப்பயனம், இதற்குப்பின் இவருக்கு பக்கவாதம் Stroke ஏற்பட்டது)

1996-2005 வரை அன்புமிக்க சகோதரர் அஹ்மத் தீதாத் அவர்களது இறுதிக்கட்ட சோகமான வாழ்க்கை
மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது-கையின் பக்கம் பக்கவாதம் Paralysis அதாவது கழுத்து முதல் உடலின் ஒருபக்கம் முழுவதும் (அதாவது செரிபிரல் வாஸ்குலர் ஆக்சிடன் என்ற வாத நோய்) ஏற்பட்டது. இதனால் இந்த அன்புச்சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்! இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள ”கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனை”க்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது மேலும் இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் வெருளம் என்ற பகுதியில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்! இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார்! அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது! (மேலும் தகவலறிய www.ahmed-deedat.co.za கிளிக் it)

சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காகவும் நம் மார்க்கத்திற்காகவும் அயராது பாடுபட்டுச் சென்றுள்ளார்! இப்படிப்பட்ட நம் தாவா சகோதரர்களுக்கு துவா செய்து இவரது மறுமைக்கு உதவலாமே!


நன்றி
http://en.wikipedia.org/wiki/Ahmed_Deedat (மொழியாக்கம் செய்யப்பட்டது)

ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது! பிழை இருந்தால் தெரிவிக்கவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம்! திருந்திக்கொள்வோம்!

இந்த கட்டுரையை தங்கள் பிளாக்குகளில் பதித்து தாவா பணியாற்றுவோருக்கு வீரியத்தை ஊட்டலாமே!


SOURCE
http://islamicparadise.wordpress.com/