Thursday, March 27, 2008

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!

திப்பு சுல்தானும் திரிபுவாதிகளும்!
February 2, 2008

1 பிப்ரவரி 08 'திண்ணை' இதழில் சில நீக்கங்களுடன் வெளியான கட்டுரை இது. தடித்த எழுத்தில் உள்ளவை நீக்கப்பட்ட பகுதிகள்.
***********
இந்திய சரித்திரம் எடுத்துக் காட்டும் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவர் திப்பு சுல்தான். அவர் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் பிற மதத்தினருடன் நல்லிணக்கப் போக்கையே கடைப்பித்தார் என்பதும் சரித்திரத்தின் பக்கங்களில் பொறிக்கப் பட்டிருக்கிறது. அவர் தனது குடிமக்களை சாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தி வைத்திருக்கவில்லை. அவரது ஆட்சிக் காலத்தில் மதச் சண்டைகள் எதுவும் நிகழவில்லை.
சிதிலமடைந்திருந்த சாரதா கோயிலை மறுநிர்மானம் செய்வதற்காக சிருங்கேரி சங்கராச்சாரியார் பண உதவி வேண்டி திப்புசுல்தானுக்கு கடிதம் எழுதியபோது அதற்கு உடனடியாக பதிலளித்த அவர், கோயில் மறுநிர்மாணத்திற்கு வேண்டிய பொருளுதவிகளை தாராளமாக செய்தார். இதன் தொடர்பாக சங்கராச்சாரியாருக்கு திப்பு கன்னடத்தில் எழுதிய சுமார் 30 கடிதங்களில் அவர் இந்து மதம் மீதும் அதன் ஆன்மீகத் தலைவர்கள் மீதும் கொண்டிருந்த மதிப்பு வெளிப்படையாக தெரிகிறது.
சாரதா கோயில் மட்டுமின்றி, நஞ்சுங்கோட் தாலுக்காவிலிருக்கும் லட்சுமிகாந்தர் கோயில், மெல்கோட்டிலிருக்கும் நாராயணஸ்வாமி கோயில், ஸ்ரீகண்டேஸ்வரா கோயில், நஞ்சுண்டேஸ்வரா கோயில், சிரீரங்கப்பட்டணத்திலிக்கும் ரங்கநாதர் கோயில், என திப்புவிடமிருந்து நிதியோ பொருட்களோ பரிசாகப் பெற்ற கோயில்கள் பல இருக்கின்றன. இதில் ரங்கநாதர் கோயில் திப்புவின் மாளிகையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ளது. மேலும் இரண்டு கோயில்களும் திப்புவின் மாளிகைக்கு வெகு அருகிலேயே அமைந்திருந்தன. அவற்றில் தினமும் நடக்கும் பூஜை வழிபாடுகளுக்கு திப்புவிடமிருந்து எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை.
திப்புசுல்தானின் அரசவையில் இந்துக்கள் பலர் முக்கிய பதவிகளை பெற்றிருந்தனர். அவர்களை திப்பு மிக கண்ணியத்துடன் நடத்தினார். அவரிடம் அமைச்சராக இருந்த பூர்ணய்யா என்ற பார்ப்பனரை உதாரணம் காட்டி, 'பார்ப்பனர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்' என்று சிலர் திப்புவிடம் புகார் செய்தபோது, மிகுந்த கோபமடைந்த அவர், குர்ஆனின் வசனம் ஒன்றை சுட்டிக் காட்டி 'ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்கலாகாது' என்று கண்டித்தார்.
ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்தே விரட்டிவிட வேண்டும் என்பதை தமது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருந்த அந்த வீரரைப் பார்த்து ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர். "ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்'' என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதினார் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி. திப்புவை போரில் வெல்ல முடியாது என்பதை புரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், அவரது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த அமைச்சர்கள் பூர்ணய்யா, மீர்சதக் ஆகியோரை 'விலைக்கு வாங்கி', அவர்களின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொண்டேதான் திப்புவை வென்றார்கள்.
சாதி மத பேதமின்றி, தனது குடிமக்களின் பெருத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்த திப்பு சுல்தானின் பெருமையை எப்படியாவது குலைக்க வேண்டும் என்ற 'அவசியம்' ஆங்கிலேயர்களுக்கு இருந்தது. அதற்கு அவர்கள் கையாண்ட ஒரு வழிமுறைதான் வரலாற்று திரிபுவாதம்.
திப்புசுல்தான் இந்துக்களையும் கிருஸ்துவர்களையும் கொடுமைப் படுத்தினார் என உலவும் கதைகளுக்கு முக்கிய மூலவேர் பிரிட்டிஷ் நூலாசிரியர்களான கிர்க்பாட்ரிக், வில்க்ஸ் (W. Kirkpatrick, M. Wilks) போன்றவர்கள் எழுதிய நூல்களே. இவ்விருவரின் வரலாற்றுக் குறிப்புகள் நம்பகத்தன்மையற்றது என Brittlebank, Hasan, Chetty, Habib, Saletare மற்றும் பல வரலாற்றாசிரியர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். மேற்கண்ட இரு நூலாசிரியர்களுமே அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்களிடம் பணி புரிந்தவர்கள். மேலும் திப்புவுக்கு எதிரான போர்களில் பங்கு கொண்டவர்கள். அப்போர்களில் ஆங்கிலேயப்படை அடைந்த தோல்வியை நேரில் கண்டவர்கள். திப்புவின் பெருமையை குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வரலாற்றுக் குறிப்புகள் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் இவர்கள் எழுதி வைத்த கட்டுக்கதைகளைத்தான் இன்றைய வரலாற்று திரிபுவாதிகளும் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
"திப்பு சுல்தான் கோழிக்கோட்டில், ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்" என்று எழுதுபவர் வேறு யாருமல்லர். முஸ்லிம்களை 'துருக்கர்' என்றும் 'முகமதியர்' என்றும் வெறுப்பை உமிழ்ந்து எழுதிச் சென்ற பார்ப்பனர் பாரதிதான். இதற்கு ஆதாரம் மேலே குறிப்பிட்ட இரு ஆங்கிலேயர்களின் நூல்களன்றி வேறு எதாக இருக்க முடியும்? மதநல்லிணக்கக் கொள்கையை கடைப்பிடித்தவர் திப்பு சுல்தான் என்பதற்கு ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்கள் எவ்வளவோ இருக்க, உள்நோக்கத்துடன் ஆங்கிலேயர் பரப்பிய கட்டுக்கதைதான் பாரதியின் கண்ணில் பட்டது போலும். ஆங்கிலேயரை எதிர்த்தவர் எனப் புகழப்படும் பாரதி, முஸ்லிம்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதில் அதே ஆங்கிலேயருடன் கைக்கோர்த்து ஓரணியில் நிற்கிறார் பாருங்கள்!
திப்புசுல்தான் மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு, முஸ்லிம்களாக மாறும்படி திப்பு வற்புறுத்தியதால் 3000 பார்ப்பனர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது. தமது அரசவையில் பல பார்ப்பனர்களுக்கு உயர்பதவிகளை தந்து கவுரவித்தவரும் சங்கராச்சாரியாரின் வேண்டுகோளை ஏற்று கோயில் புணரமைப்பிற்கு நிதியுதவி செய்தவரும், பார்ப்பனர் ஒருவர் நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக எல்லா பார்ப்பனர்களையும் பழிக்கலாகாது என்று சொன்னவருமான திப்பு சுல்தானைத்தான் அவ்வாறு குற்றம் கூறுகின்றனர். கொஞ்சமேனும் காமன்சென்ஸ் உள்ளவர்கள் இவற்றிலுள்ள முரண்பாட்டை புரிந்து கொள்வார்கள். கல்கத்தா பல்கலைகழக சமஸ்கிருத பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்ற பார்ப்பனர் இந்தச் 'சம்பவத்தை' தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டார். திப்புசுல்தான் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் ஹபீப் என்பவர் அவரை தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தை கேட்டபோது, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். பேராசிரியர் ஹபீப் மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு இந்த 'ஆதாரம்' பற்றி விசாரித்தபோது, 'கெசட்டில் அப்படி ஒரு சம்பவமே குறிப்பிடப் படவில்லை' என்று பதில் வந்தது. இதுதான் ஹரி பிரசாத் போன்றவர்கள் வரலாறு எழுதும் இலட்சணம்!
சில ஆண்டுகளுக்கு முன்பு இதையே பார்ப்பன எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு தமது ஜாதிப்பற்றை நிலைநாட்டிக் கொண்டார். அதற்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரலாற்று சம்பவம் ஒன்றைப் பற்றி எழுதினால் அது ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்று ஒன்றுக்கு இரண்டு முறை நிச்சயம் செய்து கொள்ள வேண்டாமா? அறிவியலிலிருந்து ஆபாச சினிமா வரை எல்லா துறைகளிலும் கால் வைக்கும் சுஜாதாவிற்கு இந்த அடிப்படை தெரியாமல் போனதேன்?
மதுரையில் மன்னன் சுந்தரபாண்டியன் காலத்தில் நடந்த சைவ-சமண பிரிவினரிடையேயான மோதலைத் தொடர்ந்து எண்ணாயிரம் சமண முனிவர்களை உயிருடன் கழுவிலேற்றி கொன்ற மாபாதகத்தை செய்தவர்கள் 'அன்பே சிவம்' என்றோதுகிற சைவ சமயத்தார் தான். இது போன்ற ரத்த வரலாறுகளை மறக்கடிக்க முயலும் அதே வேளையில், சக மதத்தினரை சமமாக பாவித்து கண்ணியப்படுத்திய ஒரு அரசரின் பெயர் பொய்களாலும் புனைந்துரைகளாலும் களங்கப் படுத்தப் படுகிறது, அவர் ஒரு முஸ்லிமாக இருந்தார் என்ற ஒரு காரணத்திற்காகவே!


--
அன்புடன்
மீரான்
smeeran.tnj@gmail.com

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்

Saturday, March 15, 2008

ராஜ்ய சபா......

இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு 'ராஜ்ய சபா' என்று பெயர். இதன் பெரும்பாலான உறுப்பினர்கள்
பல்வேறு மாநிலங்களின் சட்ட மன்றங்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். குடியரசுத் தலைவரால் சிலர்
நியமிக்கப்படுவதும் உண்டு. சபை தொடர்ந்து இருக்கும். உறுப்பினர்களின் ஆயுட்காலம் தான் ஆறு ஆண்டுகள்.
இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற, அவர்களோ அல்லது
அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களோ தேர்ந்து எடுக்கப் படுவதுண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு இரண்டு ஆண்டும் ஆறு பேர் ஓய்வு பெற இன்னும் அறுவர்
தெர்ர்ந்து எடுக்கப் படுவர். தமிழகத்தைப் பொறுத்தவரைஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட 34
வாக்குகள் வேண்டும். இன்றைய நிலவரப்படி திமுக கூட்டணி நான்கு பேரையும், அதிமுக ஒருவரையும்
எளிதாகத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆறாவது இடத்துக்குத்தான் இழுபறி.

அதிமுக 60 + மதிமுக 6 = 66. இரண்டு இடங்களைபெற எதிரணிக்கு இரண்டு வாக்குகள் குறைவு. சென்ற முறை கனிமொழி களத்தில் இறக்கக்ப் பட்டதாலோ என்ன்வோ அந்த இரண்டு வாக்குகளை திமுக விட்டுக்
கொடுத்து அதிமுகவில் இருவர் தெரிவாக உதவியது. "இதுதான் உண்மையான ஜனநாயகம்" என்று ஜெ.
தன் வாழ்நாளில் முதல் முறையாக கலைஞரைப் பாராட்டினார்.

அந்த ஒரு இடத்தை தன் கூட்டணிக் கட்சி சகாவும், சிறந்த 'பார்லிமெந்தேரியனுமான' வைக்கோவுக்கு ஜெ
விட்டுக் கொடுப்பாரார் என்கிற நம்பிக்கையை அவர் பொய்த்துப் போக வைத்து விட்டார்

இம்முறை அந்த இடத்தை திமுக விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஐந்து வேட்பாளர்களை அறிவித்து
விட்டது. இரண்டு திமுக, இரண்டு காங்கிரஸ், ஒன்று இடது சாரிகளுக்கு. அதிமுக ஒன்றை தான் எடுத்துக்
கொண்டு மற்றதை மதிமுகவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. தேவைப்படும் அந்த இரண்டு வாக்குகளுக்கு
எங்கே போவார்கள் ?

ஒன்று விஜயகாந்திடம் இருக்கிறது. அது அநேகமாக திமுகவுக்குப் போகாது. இன்னொன்று 'தளி' தொகுதி-
யிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட சுதந்திர உறுப்பினரிடம் இருக்கிறது. ஆனால் அவர் சட்ட மன்ற செயல்
பாடுகளில் இடதுசாரிகளுடந்தான் இணைந்து இருக்கிறார்.

ஆகவே, தேர்தல் நிச்சயம். நான்கு திமுகவினரும், ஒரு அதிமுகவும் தேர்ந்தெடுக்கப்பட, ஒரு இடத்துக்கு
இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இருக்கும். எப்போதுமே ஏகமனதாகத் தீர்மானிக்கப்படும் ராஜ்யசபா இடங்கள்
22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தேர்தல் மூலம் தீர்மானிக்கப்படவிருக்கிறது.

அந்தத் தேர்தலில், மூன்றாவது சுற்றில் மத்திய அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பாலு நாவலர் நெடுஞ்செழியன்
தம்பி இரா.செழியனைத் தோற்கடித்தார்.

திமுக அணி நன்கு இடங்களில் தன் பங்குக்கான இரண்டு இடங்களுக்கான பெயரை அறிவித்து விட்டது.
அமீர் அலி ஜின்னாவையும் திருமது வாசந்தியையும் அறிவித்ததன் மூலம் திமுக சிறுபான்மையினரைக்
கவனத்தில் கொண்டுள்ளது ஆனால் இவற்றில் ஒன்று பேரா:ஸவாஹிருல்லாவுக்கொ, அல்லது கவிக்கோவுக்கோ போகும் என்ற வதந்திகள் வதந்திகளாகவே போயிருக்கின்றன கவிஞர் வைரமுத்துவும்
வரிசையில் நிற்கும் ஒருவர் என்று சொல்கிறார்கள்.

காங்கிரசுக்கு இரண்டு இடங்கள். அவற்றில் ஒன்றை தனகுத்தர வேண்டும் என்று பா.ம.க அடம் பிடிக்கிறது.
இது தொடர்பாக டெல்லியில்அமைச்சர்அன்புமணி ராமதாசுக்கும் காங்க்..கட்சி செயலர்அஹ்மது பட்டேலுக்கும்
பேச்சு வார்த்தைகள் தொடர்வதாக செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன விளைவு என்னவாகுமோ தெரியாது. ஐந்தாவது இடத்துக்கு இடதுசாரி போட்டியிடுகிறது.

64,000 டாலர் கேள்வி. வெற்றி நிச்சயமில்லாத நிலையில் தன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்கோ போட்டியிடுவாரா என்பதுதான்.

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பெருவிழா

துபாயில் தமிழக முஸ்லிம்களின் சமுதாய அமைப்பாக செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு எதிர்வரும் ஹிஜ்ரி 1429 ரபியுல் அவ்வல் பிறை 12 ( 19 மார்ச் 2008 ) புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா பகுதியில் உள்ள தமிழ் பஜாரில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எஸ்.எஸ். ஹைதர் அலி ஆலிம் மிஸ்பாஹி அவர்கள் விழாப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்.

மேலும் இலங்கை புஷ்ரா ( நற்செய்தி ) மாத இதழ் ஆசிரியர் மௌலவி ஏ.எல் பதுறுத்தீன் ஷர்க்கி பரலேவி, லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் & கத்தீப் ஆயங்குடி மௌலவி எம்.ஏ. காஜா முஅஹ்ம்மது ஜமாலி மக்கி மன்பஈ உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.

மீலாத் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் தலைவர் சையத் எம் ஸலாஹுதீன், கல்விக்குழு தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் துணைத்தலைவர்கள் அஹ்மது முகைதீன், அப்துல் கத்தீம்,அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செய்லாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, ஹிதாயத்துல்லாஹ், விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹியித்தீன், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின்,இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

விழா சிறப்புற நடைபெற இந்தியன் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அல் ஹஸீனா ஜுவல்லரி, ஈடிஏ அஸ்கான்,லேண்ட்மார்க் ஹோட்டல், அல் மஸ்ரிக் இண்டர்னேஷனல், ரஷாதி ஹஜ் சர்வீஸ், இந்தியா சில்க் ஹவுஸ், லியோன் டீ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.


தகவல் : ஈமான் அமைப்பின் ஊடகத்துறை

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம் சங்கம் வழங்கும் கல்வி உதவி நிதி




முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ - மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH - 114
SULTANATE OF OMAN

விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய கடைசி தேதி : 30-05-2008
.

Thursday, March 13, 2008

Easy Way to Understand Quran & Salah

Bismillah
Assalamu Alaikum Rah
Insha Allah
Basic course -
Easy Way to Understand Quran & Salah,

will be held every Sunday starting from 23.03.08 . (Total classes :10)
Time : 9 AM to 12 Noon
in, Chennai (Venue will be informed Later)
Course Fee : Rs 650 with materials.

Are U Willing to Join ?

Please confirm through SMS to 9841223553

or email uqchennai@gmail.com,
or call: 9994578210, 9894379102

JOIN UNDERSTANDQURANCHENNAI GOOGLEGROUP : PLS SEND A BLANK MAIL TO UNDERSTANDQURANCHENNAI-SUBSCRIBE@GOOGLEGROUPS.COM

கல்வி குறித்த இணையத்தளங்கள்

Hello,
This is further to my previous posting, for those who have not received my other postings and attachments, kindly visit my site http://meera.awardspace.com to download the practice questions for X-grade maths.
Regards
Meera Sreekrishnan
meerasreekrishnan@yahoo.co.in

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க ....................

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலையில் சேர்க்க ....................

வெளிநாடு வாழ் இந்தியர் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கல்லூரிகளில் B.E./B.Tech. / B. Arch. மற்றும் முதுநிலைப்படிப்புகளில் சேர்க்க 2008 -09 ஆம் கல்வியாண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கிண்டி பொறியியல் கல்லூரி
ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரி
கட்டிடக்கலை & திட்டவியல் பள்ளி ( School of Architecture & Planning Campus )
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி

விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய www.annauniv.edu
அல்லது
இயக்குநர் ( சேர்க்கை )
சென்டர் ஃபார் இண்டர்நேஷனல் அஃபையர்ஸ்
அண்ணா பல்கலைக்கழக வளாகம்
சென்னை 600 025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 200 அமெரிக்க டாலர் வங்கி வரைவோலையுடன் இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு இளநிலைப் படிப்புக்கு 06 ஜுன் 2008 க்கு முன்னதாகவும், முதுநிலைப் படிப்புகளுக்கு 30 ஜுன் 2008 க்கு முன்னதாகவும் அனுப்ப வேண்டும்.


Director ( Admissions ) / Director
Centre for International Affairs
Anna University Chennai
Chennai 600 025


Source : Gulf News March 6,2008 Advt in Business section
Page No. 38

பயனுள்ள தளங்கள்

www.moulanaazad.blogspot.com
www.allamakarimgani.blogspot.com

comming soon
www.sahib-a-millath.blogspot.com

www.sorkal.blogspot.com
www.pitara.com


www.tele-direct.net
www.sacm.ae/davidlee
www.sacm.ae/danat
www.sacm.ae
www.eatyourheartout.ae

i will send u more...soon

--
Best Regards
Adam.Arifin
Web&Graphics Designer
T D InterNational FZE
R A K,U.A.E
Mob: 00971-50-1657853




http://sparksspace.blogspot.com/2008/07/formatfactory-v132.html


Wink - Free Tutorial and Presentation Creation Software

http://sparksspace.blogspot.com/2008/07/wink-free-tutorial-and-presentation.html


Do you want to save and need security for your computer or Laptop? If yes, you can use the freeware with fully security to encryption your hard disk, cd and files.

Free - CompuSec

http://sparksspace.blogspot.com/2008/07/free-compusec.html

முதற் கலீபாவின் பத்துக் கட்டளைகள்

முதற் கலீபாவின் பத்துக் கட்டளைகள்
படை வீரர்களுக்கு பத்துக் கட்டளைகள்

இஸ்லாமிய ஆட்சியின் முதற்கலீபா ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் இஸ்லாமியப்படை வீரர்களை போர்க் களத்திற்கு வழி அனுப்புவதற்கு முன்னால் அவ்வீரப் பெருமக்களை ஒன்று கூட்டி பின்வருமாறு உபதேசிப்பார்கள்.
1. தளபதிக்கு அடிபணியுங்கள்.
2. நீதிநெறியிலிருந்து பிறழாதீர்கள்.
3. பிறரை ஏமாற்றாதீர்கள், கொடுத்த வாக்கை மீறாதீர்கள்.
4. பெண்கள், வயோதிகர், குழந்தைகள் ஆகியோரைக் கொல்லாதீர்கள், சித்திரவதை செய்யாதீர்கள்.
5. பயன்தரும் பழமரங்களை வெட்டாதீர்கள், அவற்றை எரிக்காதீர்கள், விளைநிலங்களைப் பாழ்படுத்தாதீர்கள்.
6. ஆடு, மாடு, ஒட்டகைகள் முதலான கால்நடைகளை உணவுக்கன்றி வேறு எந்த நோக்கோடும் கொல்லாதீர்கள், வதைக்காதீர்கள்.
7. லஞ்சம் வாங்கி உங்கள் கரங்களையும், சமுதாயத்தையும் கறைபடுத்தாதீர்கள்.
8. கோழைத்தனத்திற்கும், தோல்விமனப்பான்மைக்கும் என்றும் இரையாகாதீர்கள்.
9. 'பிஸ்மில்லாஹ்'கூறி உங்கள் உணவுகளை உட்கொள்ளுங்கள்.
10. மக்களை இஸ்லாத்தின் பால் அழைக்கும் போது அன்பாலும் மென்மையான மொழிகளாலும் அழையுங்கள். காபிர்கள் மீது கருணைக் காட்டுங்கள்.


இவ்வாறு நெறிபோதனை அளித்துதான் இஸ்லாமியப் படைவீரர்களை களத்திற்கு அனுப்பி வைத்தார்கள் கலீபா அவர்கள்.




--
அன்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

தமிழ் முஸ்லிம் செய்தித் தளங்கள்

http://islamicnews.wordpress.com



தமிழ் முஸ்லிம் தளங்கள்

http://masjiduthakva.blogspot.com

www.tmmkmtt.wordpress.com

பிரபலமான வீடியோ இணையதளங்களில் பரவி கிடக்கும் அனைத்து தமிழ் இஸ்லாமிய வீடியோக்களையும் ஒரே இணையதளத்தில் குடும்பத்துடன் கண்டு மகிழ

உங்கள் முன் இதோ ஒர் புதிய இணையதளம்!!!

www.tamilmuslimtube.com

இத்தளத்தில் தமிழ் முஸ்லிம்கள் தொடர்பான இஸ்லாமிய சொற்பொழிவுகள், விவாதங்கள், கருத்து பறிமாற்றங்கள், இஸ்லாமிய பாடல்கள், நமது கலாச்சார குரும்படங்கள் போன்ற அனைத்து வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீங்களும் இதில் உறுப்பினராக சேர்ந்து உங்கள் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்யலாம். தயவு செய்து மற்றவர் மனதை புண்படுத்தாத வகையில் உங்கள் வீடியோக்கள் இருக்கட்டும்.


http://www.darulsafa.com
http://www.tamilmuslimmedia.com/

* Read Quran Regular Basis with translation
* Worship the creator, not his creations.
* Dhikr Allah everyday morning & evening.
* Pray promptly and guide others to pray also.
* Reach islamic messages to everyone,it's ur duty.
* Use your mobile phone on your left ear -Health alert.
* Please don't waste water and food in your daily life, save for next Generation.


http://samuthayam.blogspot.com
http://mannadykaka.blogspot.com
http://adamtradenews.blogspot.com
http://adamtamilit.blogspot.com


http://islamkural.com

www.islamiyadawa.com

http://www.islamkuralblog.blogspot.com/

www.moulanaazad.blogspot.com

www.allamakarimgani.blogspot.com

comming soon
www.sahib-a-millath.blogspot.com



tamililquran. com
islamkalvi.com

http://www.abumahdhi.blogspot.com/

தமிழ் இணைய செய்தித் தளங்கள்

'தமிழ்மெயில்.காம்' எனும் இணைய தளத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த இணையதளம் செய்திகளை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். தமிழ்மெயில்.காம் இணையதளம் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

visit www.thamizhmail.com

letter to thamizhmail@gmail.com



www.maraththadi.com

www.uyirmmai.com

http://www.adhikaalai.com

http://panbudan.blogspot.com
http://www.nizhalkal.blogspot.com

rkc1947@gmail.com
http://peopleofindia.net

http://thamizthenee.blogspot.com




தமிழ் இணையத் தளங்கள் - தனிநபர்

www.nilavunanban.blogspot.com (rasikow@gmail.com)

http://kvraja.blogspot.com
http://kosappettai.blogspot.com


www.jbascollege.com

ஆங்கில செய்தித் தளங்கள்

http://www.arabnews.com

www.ithayanila.com



www.tineye.com - இந்த செயலி இப்போதைக்கு பீட்டா நிலையில் தான் இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தந்தால் அந்த புகைப்படம் இணையத்தில் எந்த எந்த இடத்தில் இருக்கின்றது என்று சொல்லிவிடும் என்கிறார்கள். இதற்கு தற்போது பதிவு செய்து கொண்டால், சில தினங்களில் பீட்டா டெஸ்ட் பண்ண access தருவார்கள். அப்போது சோதனை செய்து கொள்ளலாம். நானும் பதிவு செய்து விட்டு சில தினங்களாக
காத்திருக்கிறேன். இன்னும் எனக்கு இவர்கள் access கொடுத்தபாடில்லை.

www.acrobat.com - உங்கள் அலுவலகத்தில் webconferencing license தீர்ந்து விட்டது என்று operations டீம் கடியைப் போடுகிறார்களா ? இன்றைக்கே உங்களுக்கு கஸ்டமருடன் ஒரு பிரசண்டேஷன் இருக்கிறதா. நீங்கள் தைரியமாக இந்த தளத்தை நம்பலாம். இதற்கு தேவை ஒரு வெப் காமெராவும், மைக்கும் தான். யாஹூ போன்ற தளங்கள் தரும் வீடியோ கான்பெரன்சிங்கிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால், இதன் மூலம் ஒரு
பிரசண்டேஷனையோ ஒரு டெமோவையோ நீங்கள் நடத்த முடியும். Screen sharing இருப்பதால் உங்கள் பிரசண்டேஷனை ஓட்டிக் கொண்டே நீங்கள் போனில் அவருக்கு கதை சொல்ல முடியும்.

www.a.nnotate.com - (ஆமாங்க a க்கு அப்புறம் ஒரு புள்ளி url-ல உண்டு) - ஏதேனும் ஒரு டாக்குமெண்டை நீங்கள் ரிவியூ செய்ய வேண்டுமானால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் ஏற்றி விட்டு உங்கள் சகாவிடன் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு send button-ஐ அழுத்தினால் போதும். அவர் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் document வலையேற்றப்பட்டிருக்கும் url-ஐ அனுப்பிவிடும். அவர் அந்த முகவரியை கிளிக்கி annotate
செய்ய முடியும் -document-இன் சில பகுதிகளுக்கோ அல்லது முழுவதற்குமோ கருத்து கூற முடியும். அந்த கருத்தின் மேல் உங்கள் கருத்தையும் நீங்கள் பதிவு செய்யலாம் ஒரு chat session-ஐ போல இது சேமிக்கப்படும். நல்லா இருக்குல்ல ! ஆனா காசு கேக்கறாங்க. இப்போதைக்கு 150 credit கொடுத்து free-யா பாரு ராஜான்னு சொல்லிட்டு full fledged usageக்கு காசு கேக்கறாங்க. யாருக்கு இதெல்லாம் பயன்படும் என்றால் இந்தியாவில்
பதிப்பகங்கள் வைத்துக்கொண்டு அயல்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் எழுதும் நாவல்களை படித்து விட்டு கருத்து கூறும் பதிப்பளர்கள் இந்த சேவையை evaluate செய்யலாம். அதுவும் இப்போதைக்கு இது தேவையில்லை என்றே தோன்றும் எதிர்காலத்தில் இது நிச்சயம் பயன்படும்.

www.280slides.com - நீங்கள் விட்டது சனியன் என்று உங்கள் லேப்டாப்பை வீட்டிலேயே வைத்து விட்டு அலுவலகத்தில் லீவு சொல்லிவிட்டு ஊட்டியோ கொடைக்கானலோ சுற்றிக் கொண்டிருக்கும் போது உங்கள் பாஸ் போன் செய்து இந்த pptயை கொஞ்சம் முடிச்சுக் கொடு என்று சொன்னால், "அடடா என்னிடம் இப்போது power point இல்லையே. இருந்திருந்தால் வெட்டி முறித்திருப்பேனே" என்று ஜல்லி அடிக்க முடியாது. இந்த தளம் பவர்
பாயிண்டுக்கான சர்வீஸை ஆன்லைனில் தருகிறார்கள். அப்படி நீங்கள் ஆன்லைனிலேயே செய்து முடித்த presentation-ஐ நீங்கள் ppt-ஆக டவுன்லோடு செய்து கொள்ளவும் முடியும். என்ன குறையென்றால், அனிமேஷன் செய்ய முடியாது, auto shapes கொஞ்சம் கம்மியாக இருக்கின்றன. முழுமையான power point செயல்பாடுகள் இல்லை. ஆனால் அடிப்படையில் தேவையான எல்லாம் இருக்கின்றன.

http://www.text2mindmap.com - உங்களில் எவ்வள்வு பேர் freemind பயன்படுத்தியிருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி பயன்படுத்தியிருப்பவர்களுக்கு இதன் அருமை புரியும். எளிமையாக mindmaps உருவாக்க முடிகிறது அதுவும் எந்தவிதமான செயலியும் உங்கள் கணிப்பொறியில் இல்லாமலேயே. இப்போதைக்கு அடிப்படை செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் இதில் freemind-இல் இருக்கும் பல options கிடையாது. அவசரத்துக்குப்
பயன்படுத்தலாம்.

http://www.odiogo.com - இந்த தளத்தில் அளிக்கும் சேவையின் மூலம் உங்கள் blog-ஐ உங்கள் வாசகர்கள் கேட்க முடியும். ஆமாம் - இவர்கள் automatic text to speech conversion சேவையை கொடுக்கிறார்கள். ஆனால் தமிழ் படுத்தப்படவில்லை. தமிழை உதித் நாராயண் அளவிற்காவது பேசினால் போதும் என்று ஆசைப்பட்டேன். என்னுடைய blog english-இல் இல்லாததை கண்டுபிடித்து sign up செய்யும் போதே மன்னிப்பு கேட்டு விட்டார்கள். நானும் பெருந்தன்மையாக
மன்னித்து விட்டேன். நீங்கள் english-இல் blog வைத்திருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம்.


தொடர்புடைய முந்தய பதிவு:
http://krishchandru.blogspot.com/2008/07/internet-apps.html

தமிழ்மெயில்.காம்

அன்புடையீர்

'தமிழ்மெயில்.காம்' எனும் இணைய தளத்தைத் தொடங்கியுள்ளோம். இந்த இணையதளம் செய்திகளை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும். தமிழ்மெயில்.காம் இணையதளம் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

visit www.thamizhmail.com

letter to thamizhmail@gmail.com

ஆசிரியர் குழு

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு


துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

துபாயில் திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம் காஜா அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி வளைகுடா தமிழர் பேரவை சார்பில் சனிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக்கழக புரவலர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார்.ஆல்பர்ட் வரவேற்புரை நிகழ்த்தினார்.அஷ்ரப் அலி தனது உரையில் இந்திய தூதரக அதிகாரிகள் தமிழர்கள் பிரச்சனைக்காக அணுகும் போது மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். ஒரு தமிழர் காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித முயற்சியும் செய்யாமல் இருந்து வருவதற்கு வருத்தம் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம் காஜா அவர்கள் தனது ஏற்புரையில் சிறுபான்மை மக்களின் ஒரே தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் தான் என்றார். அதனால் தான் பலர் முயற்சி மேற்கொண்டும் கலைஞர் அவர்கள் மட்டுமே சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். அமீரகத்தில் தமிழர்களுக்கு எவ்வித இன்னல்கள் ஏற்பட்டாலும் அதனை தனது கவனத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் முதல்வர் கலைஞர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அப்துல் ஜப்பார்,தமிழ்நாடு பண்பாட்டுக் கழக புரவலர் முஹம்மது ஃபாரூக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். முஹம்மது சபீர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் புரவலர் நடராஜன், அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், கவிஞர் இசாக், தொழிலதிபர்கள் முஹம்மது ஃபாரூக், காஜா முகைதீன், முஹம்மது முஸ்லிம், சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன், ஆசியாநெட் வானொலி தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆசிப் மீரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்வர் பாஷ நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

பட்டம் பெற்ற மகிழ்ச்சியில்.......

இஸ்லாமியக் கருத்தரங்கு

அன்பின் ஃபகுருதீன்.. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இதே தலைப்பினால் ஆன கருத்தரங்கு தஞ்சையில் நடைபெற்றபோது எங்களூர்
ஜமாத்தினர் சார்பில் நான் கலந்து கொண்டேன் ( பின் நீண்ட கட்டுரை அதைப் பற்றி
எழுதுவேன் - இன்ஷா அல்லாஹ்).

எதிர்பார்க்கப்பட்ட கவிக்கோ அப்துல் ரஹ்மான் தொடர் சுற்றுப் பயணங்களால்
நிறைய களைத்திருந்ததனால் 'அராஅய்த் தல்லதீ ' சூராவிற்கு தமிழர்த்தம் கூறியதோடு
ஒரு சில உதிரிச்சொற்களை மட்டும் உதிர்த்துவிட்டு அமர்ந்து விட்டார்.

வங்கியில் கடனுதவி+உதவித்தொகை சார்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை
அனுப்பிவிட்டதாக அரசாணை கூறுகிறது.வங்கியில் போய் கேட்டால் சரியான
பதில் இல்லை. இப்படியாக பல புகார்களும் குறைகளும் கிளம்பியுள்ளன...

சில மாவட்டங்களில் செயல்படத் தொடங்கிவிட்டதாக அறிந்தோம்..
அல்ஹம்துலில்லாஹ் விரைவில் எல்லா மாவட்டங்களிலும் இது செயல்படத்
தொடங்கினால் நம் மக்கள் பயனடையக்கூடும்..

அல்லாஹ் போதுமானவன்.. ஜஸாக்கல்லாஹ் ஹைர்



On 2/29/08, IBNU HAMDUN wrote:
அஃதோர் அரிய இஸ்லாமிய கருத்தரங்கு. என்ன காரணத்தாலோ பரவலான அழைப்போ விரிவான விளம்பரமோ இல்லாமல் குறிப்பிட்ட சிலரை மட்டும் அழைத்திருந்தார்கள். வளர்தொழில் முனைஞனும், என்னினிய தோழனுமான தவ்ஹீத் மூலமாகவே என் காதுக்கும் அச்செய்தி வந்ததது.

"சிதம்பரத்தில் நாளைக்கு ஒரு சிறப்பு கருத்தரங்கு இருக்கு... இதைப் பார்" என்றவன் அழைப்பிதழை நீட்டியது முந்தையநாளான வியாழன் மாலை. கட்டாயம் கலந்து கொள்வது என்று அக்கணமே தீர்மானித்தேன்.

நட்பிற்கினிய இளவல்களான எம்.ஜீ. பஃக்ருத்தீன், லி. ஹமீது, நூருல் ஹசன் ஆகியோரிடம் தெரிவித்த போது, அவர்களும் வருவதாகச் சொன்னார்கள்.
"ஜமாஅத் சார்பாக வேன் போகுது, அதுல போயிடலாம்" என்ற தவ்ஹீதின் விளிப்பை நிராகரிக்க, அவனுடைய அடுத்த வார்த்தைகளே காரணமாகின "ஆனா லேட்டாத்தான் கௌம்புவோம்" - பஞ்சாயத்து மன்ற கூட்டம் இருந்ததுதான் தாமததிற்கு காரணமாம்.

குறிப்பிட்ட திருமண மண்டபத்துக்கு இரண்டு மணிநேரம் தாமதமாக, இரவு சுமார் ஏழு மணிக்குத்தான் நாங்களே சென்றோம். ஆனால் கூட்டமே அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. முதலில் அனைவருக்கும் சுவையான ஒரு காலிஃப்ளவர் சூப் கிடைத்தது.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் முயற்சியாலும், முனைப்பாலும் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கழகத்தின் தலைவர் கேப்டன் அமீர் அலியும் செயலாளர் இதயதுல்லாவும் விரிவுரை நிகழ்த்த சிறப்புரையாக கவிக்கோ. அப்துல் ரகுமான்.

முஸ்லிம் சமுதாயத்துக்கு கிடைத்த 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதைப்பற்றியும், முஸ்லிம்கள் நிச்சயமாய் அறியவேண்டிய- பயன்பெறவேண்டிய பல்வேறு அரசுத்திட்டங்களைப் பற்றியும் ஒரு விழிப்புணர்வு கருத்தரங்கம் அது.

கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த சிதம்பரம் அன்சாரி அவர்களும் தொகுப்பாளாராக பணியாற்றிய லால்பேட்டை தளபதி ஷபீகுர்ரஹ்மான் அவர்களும் தம் பணியை சிறப்பாக ஆற்றினர்.பரங்கிப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஜமாஅத்தின் தலைவர். ஹாஜி.யூனூஸ்நானா அவர்களும் ஒரு சிறிய வாழ்த்துரை வழங்கினார்.

இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் கேப்டன் அமீர் அலி மத்திய மாநில அரசுகளின் பல்வகைத்திட்டங்களைப் பட்டியலிட்டார்.
மதரசா (கல்விக்கூடம்) நடத்த முன் வருபவர்களுக்கு ஆறு ஆசிரியர்களுக்கான சம்பளத்தை (சுமார் ரூ 6000 - 12000) மத்திய அரசு மானியந் தருவதாகவும், சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் மத்திய அரசு விழா கொண்டாட நிதி உதவுவதாகவும், மேலும் பலப்பல திட்டங்களையும் பட்டியலிட்டார். அவற்றுள் குறிக்கத்தக்கனவாக முதியோர் ஓய்வூதியம், கர்ப்பிணி நலநிதி, மாணவர் உதவித் தொகை, வெளிநாட்டு வேலைத் தேடுவோருக்கான இலவசப்பயிற்சிகள் என ஒவ்வொன்றையும் சொல்லச் சொல்ல, விழிகள் விரிந்தன வியப்பில்.

சச்சார் கமிட்டியின் அறிக்கையில் எடுத்துரைக்கப்பட்ட உண்மைகளை உள்ளந்தொடுகிற வகையில் விளக்கிய கேப்டன் அமீர் அலியும், இதயத்துல்லாவும் சமூகத்தில் திறனுள்ளவர்களும், அறிஞர்களும் திறனற்றவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் உதவியாக வேண்டியதின் தேவையை மிகவும் வலியுறுத்தினர். இதயதுல்லாவின் உருக்கமான பேச்சில் நல்ல ஆன்மிக மணம். "நற்காரியத்துக்கு தூண்டுதலா யார் இருக்காங்களோ, அவங்களுக்கும் அந்த நற்காரியம் செய்த புண்ணியம் கிடைக்கும்"என்பதை மிகவும் வலியுறுத்தினார்.

எதிர்பார்க்கப்பட்ட கவிக்கோ தன் பேச்சில் மனித நேயத்தை மிகவும் வலியுறுத்தினார். இறைவன் ஒருவனே என்பதை நம்புகிறவர் அனைத்து மனிதர்களிடத்தும் சகோதரத்துவம் பேண வேண்டும் என்றார். 'ஏகத்துவத்தின் செயல் விளக்கம் அது'.

குர்ஆனுடைய அல்மாவூன் அத்தியாத்திற்கு சிறு விளக்கம் அளித்தவாறு தன்பேச்சை தொடங்கிய கவிக்கோவிடம் சற்றேவேகம் குறைந்திருந்தது போல் எனக்கொரு பிரமை (?).
சச்சார் கமிட்டி அறிக்கையின் ஒரு வரி சாரம்சமாக " 84 சதவீத முஸ்லிம்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள்" என்றார். "இதுல தான்யா நாம் மெஜாரிட்டி".

கிரேக்க மூளை, சீன கைகள், அரேபிய நாவு - இம் மூன்றும் தான் இறைவனின் உன்னத படைப்புகள் என்ற அரேபிய பழமொழியை நினைவு கூர்ந்த கவிக்கோ, மற்ற சமூகங்களையும், நாடுகளையும் எடுத்துக்காட்டி ஒப்பீட்டளவில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருப்பதை; அவ்வாறு இருப்பதற்கான காரணத்தைக்கூட அறியாமலிருப்பதை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார். "கல்வியின்மைக்கு காரணம் வறுமை, வறுமைக்கோ கல்வியின்மை காரணம் என்றாகிவிடுகிறது. "இன்னும் 20 ஆண்டுகளில் நடக்க உள்ள முன்னேற்றப் புரட்சியிலும் இந்த சமூகம் விழித்துக் கொள்ளாவிட்டால் நாசமாகிவிடும் என்றார். 'நாசமாகிவிடும்' என்று அடிக்கடி சொன்னதை தவிர்த்திருக்கலாமே?! என்று தோன்றாமலில்லை.

அரசின் நலத்திட்டங்களை பள்ளிவாசல்களின் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டார். "மவுத்(மரணத்)தை எழுதிப்போடறீங்களில்லையா, நான் ஹயாத்தை(வாழ்க்கையை)யும் எழுதிப்போடச் சொல்றேன்".

கூட்டம் முடிந்தவுடன், எங்களூர் கல்விக்குழு சார்பாக லி. ஹமீதுடன், இதயத்துல்லா அவர்களிடம் அளவளாவியதில், நலத்திட்டங்களுக்கான படிவங்கள் பலவற்றையும் 'ஹாஜி மவுல்வி சாப்' என்று அன்பாக அழைக்கப்படுகிற எங்களூர் அப்துல் காதிர் உமரியிடம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். எந்த நலத்திட்ட உதவிக்கும் தயங்காமல் தம்மை அணுகலாம் என்றார்.
பின்னர் சுவையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. உணவருந்தியபின் எங்களூர் ஜமாஅத் நிர்வாகிகள் வந்த வேனிலேயே ஊர் திரும்பினோம்.
"நம்ம ஊர்லயும் இதுபோல ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணனும்"- தவ்ஹீத்.
"நமக்குள்ளே ஒரு குழு அமைத்து, நலத்திட்டங்கள் யாவும் ஏழைகளுக்கு சென்று சேர முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்" என்றேன்.
'சி. டபிள்யூ. ஓ. (கிரசண்ட் வெல்ஃபேர் ஆர்கனைசேஷன்) செஞ்சுக்கிட்டிருந்தாக, அவங்களையே தொடரச் சொல்வோம்' என்றார் ஹமீது.


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com





--
Failed is a beautiful experience
Successful is a historical evidence.
*
அன்புடன் - அன்பிற்காக
லக்கி ஷாஜஹான்.

ஆங்கில நாளிதழ்கள்

குவைத் டைம்ஸ்


http://www.kuwaittimes.net


அமீரகத்தில் மேலும் ஒரு ஆங்கில நாளிதழ்

தி நேஷனல் நாளிதழினை www.thenational.ae எனும் இணையத்தளம் வாயிலாகவும் படித்து மகிழலாம்.

இதன் தொடர்பு முகவரி

The National
P O Box No. 111434
Abu Dhabi - UAE

Tel : 02 445 55 55
Toll free : 800 2220
News Room : 02 445 53 28
www.thenational.ae


Ahmed J Versi
Editor
The Muslim News
P O Box 380
Harrow
Middlesex HA2 6LL
UK
Tel: +44(0)20 8863 8586
Fax:+44(0)20 8863 9370
Mob: 07768241 325
Email: info@muslimnews.co.uk
Web: http://www.muslimnews.co.uk



www.timesofindia.com

www.arabtimes.com

www.arabnews.com


www.kuwaitliving.net

சிங்கப்பூர்

www.straitstimes.com



மலையாள நாளிதழ்

www.mathrubhumi.com

தனி நபர் வலைத்தளங்கள் - தமிழ்

http://musawir.ipcblogger.com/

http://jazeela.blogspot.com

http://krishchandru.blogspot.com/

www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

http://www.athishaonline.com/2008/12/blog-post_05.html

http://vanjoor-vanjoor.blogspot.com

http://neetheinkural.blogspot.com/

www.rajaghiri.wordpress.com

www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk







http://www.tmcaonline.com
http://www.tmca-kuwait.blogspot.com
http://www.arifmaricar.blogspot.com




ஆங்கிலம்


லண்டன் பணிவாய்ப்புக்கு...

http://www.anoothlondon.blogspot.com



www.moulanaazad.blogspot.com

www.allamakarimgani.blogspot.com

comming soon
www.sahib-a-millath.blogspot.com

நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் வாழ்க்கை வரலாறு

நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் வாழ்க்கை வரலாறு

டாக்டர் கலைஞர் அவர்களால் நாடறிந்த நாவலர் என்று போற்றப்பட்டவரும், தமிழ் இஸ்லாமிய முற்போக்கு வார இதழான மறுமலர்ச்சி வார இதழை ஏறத்தாழ 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக கடும் போராட்டங்களுக்கிடையே நடத்தி இஸ்லாமிய சமுதாயத்திற்காக குரல் கொடுத்தவரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநிலப் பொதுச்செயலாளராய் பல்லாண்டுகாலம் பணிபுரிந்தவரும், காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், சுலைமான் சேட், பனாத்வாலா, இ.அஹமது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., முனிருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி, என்று எல்லா தலைவர்களிடமும் நட்பு கொண்டிருந்தவரும், பல்வேறு நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என படைத்தளித்த சிறந்த எழுத்தாளரும், மிகச் சிறந்த பேச்சாளருமாகிய

நாடறிந்த நாவலர்

மறுமலர்ச்சி ஆசிரியர் ஏ.எம். யூசுப் சாஹிப் அவர்களின்
வாழ்க்கை வரலாற்றை சமுதாயக் கவிஞர் எழுச்சிப்பாவலர் விழுப்புரம் ஷாஜி எம்.எ., பி.எட். அவர்கள் எழுத முனைந்துள்ளார்கள். இது தனிப்பட்ட ஒருவரின் வரலாறல்ல. தமிழ் இஸ்லாமிய சமுதாயத்தின் நலனுக்காக அயராது போராடியவரின் எழுச்சிமிகு வீரச் சரிதம். தமிழ் இஸ்லாமிய சமூகம் தன் நன்றியறிதலுக்குரிய ஒருவரை, அவரின் தியாகங்களை நினைவு கூர்ந்து வருங்கால சந்ததிக்காக ஏற்றிப் போற்றவேண்டிய அற்புத ஆவணம்.

நாவலர் அவர்களைப் பற்றிய வாழ்க்கை நிகழ்வுகளோ, அவர் பற்றிய குறிப்புகளோ, துணுக்குகளோ, புகைப்படங்களோ தங்களிடமிருப்பின் தயவு செய்து அவற்றை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

முபாரக் ரஸ்வி
+965 6951546
sithima@gmail.com
ysmrazvi@yahoo.com

A.M. Haneef
No 42 Jail Street
Palakkarai
TRICY 620 008
Tel : 0431 2714338

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா

துபாயில் செயல்பட்டு வரும் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 12.10.2007 வெள்ளிக்கிழமை மம்சார் பூங்காவில் நடைபெற்றது. அல் அமீன் ஜமாஅத் சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த ஜமாஅத்தினர் இணைந்து அல் அமீன் ஜமாஅத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

விழாவிற்கு எஸ்.நயினார் முஹம்மது தலைமை வகித்தார். துவக்கமாக பீர் அலி இறைவசனங்களை ஓதினார். மவ்லவி ஷெரீப் ஆலிம் துவக்கவுரை நிகழ்த்தினார். பொறியாளர் முஹம்மது கனி ஆண்டு அறிக்கை வாசித்தார். ஜமாஅத் வரவு செலவு அறிக்கையினை ஹஸன் சமர்ப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் பத்ரு ஸஹாபாக்கள் நிர்வாகத் தலைவர் வாவா முஹம்மது சமுதாய இளைஞர்கள் ஆர்வமுடன் பொதுச்சேவையில் ஈடுபட்டு வருவது குறித்து பாராட்டினார். ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் இணையத்தளம், மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தப்பட வேண்டியது குறித்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு :

தலைவர் : புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது
துணைத் தலைவர்கள் : ஊத்துமலை ஷேக் அப்துல் காதர்
செயலாளர் : அருளாச்சி முஹம்மது அலி ஜின்னா
துணைச் செயலாளர் : அருளாச்சி அஷரப் மில்லத், அருளாச்சி அப்துல் கரீம்
பொருளாளர் : வெள்ளானைக் கோட்டை நாகூர் மைதீன்
துணைப் பொருளாளர் : வாசுதேவநல்லூர் முஜீபுர் ரஹ்மான், அருளாச்சி ஹஸன்
செயற்குழு உறுப்பினர்கள் : வாசுதேவநல்லூர் சதக்கத்துல்லா, அருளாச்சி பாதுஷா, வெள்ளானைக் கோட்டை ஹ¤ஸைன், திவான் மைதீன்,ஊத்துமலை செல்லவாப்பா
கெளரவ ஆலோசகர்கள் : அருளாச்சி முஹம்மது மைதீன் ( ஷெரிப் ), அருளாச்சி டி.முஹம்மது மைதீன்

நீடூர் அ.மு. சயீத் வாழ்க்கை வரலாறு


நீடூர் அ.மு. சயீத் வாழ்க்கை வரலாறு


சிந்தனைச் சித்தர், தமிழ்மாமணி நீடூர் அ.மு. சயீத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடும் முயற்சியினை நவமணி பதிப்பகத்தின் சார்பில் மயிலாடுதுறை நம்ம ஊரு செய்தி மாத இதழ் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் மேற்கொண்டுள்ளார்.

அல்ஹாஜ் அ.மு. சியீத் நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பும் வழக்கறிஞர்.

நீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞர். நெடுங்கால சமுதாய ஊழியர். நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவர்.

சென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவர்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இலங்கை, தெற்கு வியட்நாம், சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். ஹஜ் கடமையை ஆறு முறையை நிறைவேற்றிய பேறு பெற்றவர்.

தமிழ்மாமணி, சிந்தனைச் சித்தர், சிந்தனைச் செம்மல், பொன்மொழிச்செம்மல், போன்ற சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைத் துளிகள், இஸ்லாமியச் சட்டம், சிந்தனைச் செல்வம், புனித ஹஜ் உம்ரா பயணக் குறிப்புகள், பெருமானாரின் புனித ஹஜ் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

இவரது ஆக்கங்கள் மணிச்சுடர், மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, மனாருல் ஹ¤தா, மஞ்சரி, பிறை, சமரசம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவருடைய அன்பர்கள், நண்பர்கள் அவரைப் பற்றிய செய்திகளை எழுதி அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் படங்களையும் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவமணி பதிப்பகம்
எண் 44 எல்டாம்சு சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 018

சீறத்துன் நபி

அகில உலகிற்கெல்லாம் அருட் கொடையாய் வந்துதித்த எம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த இப் புனிதமிகு ரபியுல் அவ்வல் மாதத்தில் அவர்தம் சிறப்புகளை நமது உள்ளங்களில் கொண்டு வர அமீரகத்தில் வாழும் நமது தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரையும் தனது தேன் தமிழ் தீன் இசைப் பாடல்களால் ஈர்த்த "சமுதாய தீன் இசை இளவல் தேரிழந்தூர் தாஜுத்தீன்" அவர்க்ளின் பாடல்கள் கீழ்கண்ட இணைப்புகளில் காணலாம்.


முதலாவதாக
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு வேண்டி தன் தேன் இனிய குரலால் தேரிழந்தூர் தாஜுத்தீன் அவர்கள் பாடிய நெஞ்சை உருக வைக்கும் பாடல். இந்த இனிய துஆ பாடலை எழுதியவர் "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள்
http://www.youtube.com/watch?v=wh8sjYDpm4M

அகில உலகத்தின் அருட்கொடை எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளின் பெருமை குறித்து கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹஜ்ரத் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல் இதோ
http://www.youtube.com/watch?v=c2Q0F1MkAIo


ஒன்றும் அறியாத மக்களுக்கு இறையோனை காட்டித்தந்த வள்ளல் நபி புகழ் பாடுவோம் என்று கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=U_CcmOpISys


எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்தின் மீது வைத்துள்ள அன்பு குறித்தும், அவர்களின் நற்பண்புகள் குறித்தும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்.
http://www.youtube.com/watch?v=AnGKcaoyuRU

தாயிப் நகர வீதியில் தாஹா நபி அடைந்த துன்பங்களை பற்றி மர்ஹூம் புலவர் தா.காசிம் எழுதி நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய பாடலை விரிவான சரித்திரமாக கொள்ளுமெடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=_5xV9Pu2hMU


எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது உம்மத்துகள் வைத்துள்ள அன்பு குறித்தும், அவர்கள் தான் நமக்கு இரு உலகின் பெருந்துணை என்பது பற்றியும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=xudfSBZcP2A

எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அவர்களின் பரிந்துரை மறுமையில் வேண்டி "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய மனதை உருக்கும் பாடல்.
http://www.youtube.com/watch?v=LMHNFKfyjm8


நாம் மனிதனாய் பிறந்து எம் பெருமானாருக்கு செய்த பங்கு என்ன என்று சிந்திக்க வைக்கும் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய இனிய கீதம் இதோ
http://www.youtube.com/watch?v=NjOeiOKRyaI

தன்னை வெறுத்த மூதாட்டியை தன் நற்செயலால் கவர்ந்த எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ந்ற்குணம் குறித்து கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹஜ்ரத் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=a8QQkIsPWeI

எங்கள் எண்ணமெல்லாம் இறைதூதர் எம்பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது தான் என்பது பற்றியும் அவர்க்ளின் நற்பண்புகள் குறித்தும் கொள்ளுமேடு அல்ஹாஜ் ஹாபிழ் பாரூக் பைஜி அவர்கள் எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=hVnvL59CoLM

21ம் நூற்றாண்டின் இணையில்லா தலைவர் எம் பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என்றும், கியாம நாள் வரை இனி வரும் எதிர்காலத்திற்கு மற்றுமல்லாது மறுமையிலும் அவர்கள் தான் நிரந்தர தலைவர் என்று திண்டுக்கல் ஆலிம் புலவர் ஹுஸைன் முஹம்மது மன்பயி உறுதிபட எழுதி தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய இனிய கீதம் இதோ
http://www.youtube.com/watch?v=HC5DEgeSj48

உம்முல் மு'மினீன் அன்னை கதிஜா ரலி அல்லாஹு தஆலா அன்'ஹா அவர்களின் நற்பண்புகள் குறித்து "இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதி தேன்குரலில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல் இதோ

http://www.youtube.com/watch?v=hpWdxwxlJUI


இறுதியாக, அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள்!!!!
என்று அறிவுரை கூறி தேன்குரலில் தேரிழந்தூர் தாஜுத்தீன் பாடிய பாடல்
http://www.youtube.com/watch?v=H-nv0NlRfbM


To read in "Tamil" click "view" in the browser pull down menu >> then select "encoding" >>>>> then select "more" >>>>>> then select "unicode"

thamizhmuslim@gmail.com>

Monday, March 10, 2008

இஸ்லாம் பற்றிய சுஜாதாவின் கட்டுரை!

தினமணி (2003) ரம்ஜான் மலரில் சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே...

"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார். நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம். 'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.

அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மத்தின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம்தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.

காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.

'சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!'

'திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்' என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீய குணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."

- சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் - 2003)


நன்றி: திரு.ரவிபிரகாஷ்


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

Sunday, March 9, 2008

பெண்கள் படித்தால் குடும்பம் பல்கலைகழகம் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி


பெண்கள் படித்தால் குடும்பம் பல்கலைகழகம் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி

கீழக்கரை: பெண்கள் படித்தால் குடும்பமே பல்கலை கழகமாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கீழக்கரை தாசீம்பீவி அப் துல்காதர் பெண்கள் கல்லுõரி 17வது பட்டமளிப்பு விழா ஹசன்அலி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி வரவேற்றார். அமைச்சர் பொன் முடி பேசியதாவது: கல்லுõரிகளில் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது. விவசாய கல்லுõரிகளில் மாணவர்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். பெண்கள் படித்தால் குடும்பமே பல்கலை கழகமாகும். படிக்கிற போது சிந்தனை வளர்ச்சி பெறவேண்டும், மூடநம்பிக்கைகளுக்கு இடம் தரக்கூடாது. தமிழக முதல்வர் கருணாநிதி 11 தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்மூலம் அடுத்த மூன்றாண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார். கல்லுõரி முதல்வர் சுமையா மாணவியர்களுக்கான உறுதி மொழியை வாசித்தார். அமைச்சர் தங்கவேலன், பவானி எம்.பி., பெண்கள் கல்லுõரி இயக்குனர் ஷெரீப்பா அஜீஸ், நகராட்சி தலைவர் பஷீர் அகமது, மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிசந்திர ராமவன்னி, சீதக்காதி டிரஸ்ட் பொது மேலாளர் ஜலால், துணை பொது மேலாளர் ஷேக்தாவூகான் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாவள்ளி(தில்லையேந்தல்) முருகேசன்(மாயாகுளம்) லட்சுமி(ரெகுநாதபுரம்) உட்பட பலர் பங்கேற்றனர். பல்கலை கழக அளவில் முதல் ராங்க் வாங்கிய முத்துமீனாட்சி, செய்யதா நஷீபா, அரிபாபேகம், நஜிராபானு உட்பட தரப்பட்டியலில் இடம் பெற்ற 19 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப் பட்டன. அலுவலக நிர்வாக அதிகாரி அஜீஸ்முகைதீன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Dear Hidayath, Assalamu Alaikum. How are you all? I have attended the Graduation ceremony of THASIM BEEVI ABDUL KADER COLLEGE FOR WOMEN at Keelakkarai on 8th March 2008. It was a very interesting event to see our own sisters excelling in all fields of education. I could see the visionary personality if BSA, the father of modern day Muslim education.

First, second and third ranks of MCA, first, second and third ranks of B.Sc.(Home Science), first,second and third ranks of B.Sc (Home science with computer application), first,second,fourth,fifth, sixth, seventh, eigth and nineth ranks of B.A.(English Literature), third rank of B.Sc(Mathematics) and third rank of B.Sc(Information Technology) were secured by fourteen Muslim sisters and five Hindu sisters. This is a great achievment for TBAK College for Women. They are securing many ranks of Alagappa University from year three of their opening. ALHAMDU LILLAAH. Give them a big clapping hand by posting this achievment in your daily postings. Regards. Najumudin.

najumudin@rediffmail.com

Thursday, March 6, 2008

ஓர் எதிரியின் வாக்குமூலம்!

ஓர் எதிரியின் வாக்குமூலம்!

நபிகள் நாயகத்தைப்பற்றி
ஓர் எதிரியின் வாக்குமூலம்

நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த காலமது. அன்று வல்லரசு நாடுகளில் ஒன்றான உரோமமப் பேரரசருக்கு ஒரு கடிதத்தை தமது தோழர் திஹ்யா இப்னு கலீபா அல்கல்ஃபீ அவர்கள் மூலமாக பஸராவின் கவர்னரிடம் கொடுத்து ரோமப்பேரரசரிட்ம் சேர்ப்பிக்குமாறு அனுப்பிவைத்தார்கள்.
அப்பொழுது ரோமானியப் பேரரசர் கைஸர் (ஹெர்கலிஸ்) சிரியா நாடு வந்திருந்தார்.சிரியாவின் தலை நகரில் (மஸ்ஜிதுல் அக்ஸாவில்) அவரது அவை கூடியது. அப்பொழுது அவரது அமைச்சர்களில் ஒருவர் ஒரு கடிதத்தை அரசரிடம் கொடுத்தார்.அதனைப் பெற்றதும் அப்பேரரசரின் தலையும் சுழன்றது. ஒரு நொடி நேரத்தில் எத்தனையோ எண்ணங்கள் அவரது உளக்கடலில் அலைமோதின.
அரபு நாட்டிலிருந்து இங்கு யாரும் வந்துள்ளனரோ? என்று விசாரித்தார் மன்னர் மன்னர். 'ஆம்' என்றார் அங்கு வீற்றிருந்த ஒருவர்.உடனே அவரை அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார் அரசர். அவ்வாறே அந்நாட்டிற்கு வாணிபத்தின் பொருட்டு வந்திருந்த குரை ஷpகள் சிலர் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் அண்ணல் நபியின் பெரும் பகைவர் அபூசுஃபயானும் நின்று கொண்டிருந்தார்.
உங்களுடைய நாட்டில் யாரோ ஒருவர் தம்மை 'நபி' என்று கூறிக் கொள்;கிறாராமே! இங்கு வந்திருப்பவர்களில் அவருக்கு நெருங்கிய உறவினர் எவரேனும் உண்டோ? என்று வினவினார் அப்பேரரசர்.
"நான் அவரது நெருங்கிய உறவினர் தான்" என்று கூறிக்கொண்டே அவர் முன் வந்து நின்றார் அபூசுஃப்யான்.
அப்பொழுது அப்பேரரசர் மற்ற அரபிகளைப் பார்த்து, இப்பொழுது நான் அபூசுஃப்யானிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன் அதற்கு மறுமொழியாக அவர் பொய் கூறுவாராயின் நீங்கள் என்னிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று எச்சரித்தார்.(அபூசுஃப்யான் பி;ன்னர் ஒருசந்தர்பத்தில் கூறும் பொழுது 'ரோமானியப் பேரரசர் அன்று மட்டும் அவ்வாறு எச்சரிக்கை செய்திராவிட்டால் நான் நிச்சயமாக அவர் முன்னிலையில் பொய்யே சொல்லி யிருப்பேன்' என்று கூறினார்.)அதன் பின் கைஸருக்கும் அபூசுஃப்யானுக்கும் இடையே பின் வரும் உரையாடல் நிகழ்ந்தது.
கைஸர் : தம்மை நபி என்று கூறிக்கொள்பவரின் குடும்பத்தகுதி என்ன?
அபூசுஃப்யான் : அரபு நாட்டின் மிக உயர்ந்த குடும்பம் அவரது குடும்பம்.
கைஸர் : இதற்கு முன்னர் எவரேனும் அவரது குடும்பத்தில் தம்மை 'நபி' என்று கூறிக்கொண்டனரா?
அபூசுஃப்யான் : இல்லை.
கைஸர் : வரது குடும்பத்தில் எவரேனும் அரசர்களாக இருந்துள்ளனரோ?
அபூசுஃப்யான் : இல்லை.
கைஸர் :அவரைப் பின்பற்றுவோர் ஏழைகளா? செல்வந்தர்களா ?
அபூசுஃப்யான் : ஏழைகள்.
கைஸர் :அவரைப் பின்பற்றுவோர் பெருகிக் கொண்டு போகிறதா? குறைந்து கொண்டு போகிறதா?
அபூசுஃப்யான் : நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் செல்கிறது.
கைஸர் : அவர் எப்பொழுதேனும் பொய்யுரைத்ததை நீங்கள் கேட்ட துண்டா?
அபூசுஃப்யான்:ஒருபோதும் இல்லை.
கைஸர் : உடன்பாட்டுக்கு அவர் மாறு செய்ததுண்டா?
அபூசுஃப்யான் :இது வரையிலும் இல்லை.இப்பொழுது எங்களுக்கும் அவருக்குமிடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இனிமேல் தான் பார்க்கவேண்டும்.
கைஸர் :அவருடன் நீங்கள் போர் செய்ததுண்டா?
அபூசுஃப்யான் :ஆம்.
கைஸர் :அதன் முடிவு என்ன ?
அபூசுஃப்யான் :சில சமயங்களில் எங்களூக்குவெற்றி.மற்றும்சில சமயஙகளில்
அவருக்கு வெற்றி.
கைஸர் : அவர் மக்களுக்கு என்ன உபதேசம் செய்கின்றார்?
அபூசுஃப்யான் : ஒரே இறைவனை வணங்குங்கள் என்றும்,அவனுக்குஇணைவைக்காதீர்கள்
என்றும்,அவனைத் தொழுது தூய வாழக்கை வாழுங்;கள் என்றும்,உண்மை பேசுமாறும்,உறவினருடன் ஒற்றுமையாயி ருக்குமாறும் அவர் போதிக்கிறார்.
இப்பொழுது ரோமானியப் பேரரசரின் கண்கள் சுடர் விட்டன. அவருடைய முகத்தில் என்றுமில்லாத ஒளி தோன்றியது. அவர் அரபுகளைப்பார்த்து பின்வருமாறு கூறினார்.
அவர் உயர் குடியிற் பிறந்தோர் என்று கூறினீர்.தீர்க்கதரிசிகள் எல்லாம் இதுகாறும் உயர் குடியில் தான் பிறந்துள்ளனர்.
அவருடைய குடும்பத்தில் இதுவரை யாரும் தம்மை நபியென்று கூறிக் கொள்ளவில்லை என்றும் கூறினீர். அவ்விதம் இருப்பின் அவரைப் பின்பற்றி இவரும் தம்மை அவ்வாறு அழைத்துக் கொள்கிறார் என்று எண்ணலாம். அவ்விதம் எண்ணுவதற்கு இடம் இல்லை.
அவருடைய குடும்பத்தில் இதற்கு முன் யாரும் அரசர்களாய் இருந்ததில்லை என்றும் கூறிகின்றீர். அவ்விதம் இருந்திருப்பின் இவரும் ஓர் அரசராவ தற்காக இவ்வாறு வேடம் புனைந்துள்ளார் என்று நான் எண்ணி இருப்பேன்.
அவர் பொய்யுரைப்பதில்லை என்றும் கூறினீர்.பொய்யுரைக்காத ஒரு மனிதர் எவ்வாறு இறைவனைப்பற்றிப் பொய்யுரைப்பார்?
அவரைப் பின்பற்றுவோர் ஏழைகளே என்றும் கூறுகின்றீர். இறைவனின் தூதர்களை முதலில் பின்பற்றுவோர் ஏழைகள் தாம்!
அவர் உடன்பாட்டை முறித்ததில்லை என்றும் கூறினீர். இறைவனின் திருத்தூதர்கள் ஒருபோதும் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபடமாட்டார்கள்.
சிலபொழுது போரில் உங்களுக்கு வெற்றியும், சிலபொழுது அவருக்கு வெற்றியும் ஏற்பட்டதாகக் கூறுகின்றீர். இவ்வாறே வெற்றியையும்,தோலவியையும் மாறி மாறி வழங்கி இறைவன் அவர்களைச் சோதிப்பான். அவருடைய அறிவுரைகள் யாவும் எல்லோராலும் பின்பற்றத் தக்கவை.
நீர் கூறியது உண்மையாயிருப்பின் அவர் நிச்சயமாக இறைவனின் இறுதித் தூதரேயாவார். ஒரு காலத்தில் இந்நாடும் அவர் வயமாகும். இறைவனின் தூதர் தோன்றப்போகின்றார் என்பதை நான் அறிந்தே இருந்தேன். ஆனால் அவர் அரபு நாட்டில் தோன்றுவார் என்று நான் எண்ணவில்லை.எனக்கு அங்கு செல்ல வாய்ப்பு கிட்டின் நான் அவர்களுடைய கலடிகளிலே நின்று குற்றேவல்; புரிவேன். அதன் பின் அக்கடிதத்தைப் படிக்குமாறு பணித்தார் மன்னர்.
'அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால், அவனுடைய அடியாரும் திருத்தூத ருமாகிய முஹம்மத், ரோமானியப் பேரரசர் ஹெர்குலிஸுக்கு எழுதும் கடிதமாவது :-
இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவனுடைய திருத்தூதரைப் பின்னற்றி ஒழுகுபவர்களுக்கு இறைவனின் சாந்தி உண்டாவதாக!
வேதத்தையுடையோரே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்குஇணைவைக்கவும் மாட்டோம். நாம் நம்மில் ஒருவரை ஒருவர் கடவுளாக ஆக்கிக் கொள்ள மாட்டோம் என்ற பொதுக் கொள்கைக்கு வாருங்கள் என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் 'நாங்கள் முஸ்லிம்கள்' என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள். (குர்ஆன்-3.64) என்ற மறைவசனத்தை துவக்கமாகக் கொண்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது. (புகாரி)
அல்லாஹ்வைத்தவிர்த்து வணக்கத்திற் குரியோன் வேறு யாருமில்லை என்றும், நான் எல்லா மக்களுக்கும் எச்சரிக்கை செய்து அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பெற்ற அவனது திருத்தூதர் என்றும் சான்று பகர்கின்றேன். நீரும் இஸ்லாத்தைத் தழுவிவிடும்;.அப்போது நல்வாழ்வு வாழ்வீர்! இல்லையேல் உம்முடைய குடிகளின் பாவங்களும் உம்மையே வந்து சேரும்.முடங்கல் எழுப்பிய முழக்கத்தைக் கேட்டதும் அங்கு வீற்றிருந்த பாதிரிமார் களின் மூளை கலங்கியது. அதன் பின்னர் மன்னர், அபூஸுஃபயான் முதலானோரைப் போய்வருமாறு பணித்தார்.அபூஸுஃபயான் வெளியே வரும்பொழுது அடகடவுளே! மன்னாதி மன்னரும் முஹம்மதைக்கண்டு அஞ்சுகிறானே.அவருடைய மடலைச் செவியுற்று அவனுடைய அவையி லுள்ளோர் அனைவரின்; உள்ளமும் உடலும்; நடுநடுங்குகின்றனவே! 'இதென்ன புதுமை!' முனங்கிக் கொண்டு சென்றனர்.
பின்னர், அப்பேரரசர் தம் அவையினரை யெல்லாம் பார்த்து இஸ்லாத்தின் பெருமையினை எடுத்துரைத்து அதனைப் பின்பற்றின் தங்களுக்கு வளவாழ்வும், வான்புகழும் வந்து சேரும் என்றும் கூறினார்.
மேலும் பெருமானாரின் தூதர் திஹ்யாவுக்கு மன்னர் பெரும் பரிசில்களையும் செல்வத்தையும், உயர் ரக ஆடைகளையும் அளித்து கவுரவித்தார். மன்னர் மனத்திலே அக்கடிதம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியது.(ஸீரத்துந்நபி, இப்னு ஹிஷாம்)


--
அன்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

அறிவியல்

மேற்கத்திய அறிவியல் வளர்ச்சியடைந்து அதன் பரிணாமமான நவீன கண்டுபிடிப்புக்கள் உலகை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் உலகின் மகிழ்ச்சிக்கு குழிதோண்டிக் கொண்டிருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும். இத்தருனத்தில் இஸ்லாம் கூறும் அறிவியல் பக்கங்களை ஒருமுறை புறட்டிப்பார்ப்பது மிகவும் பொருத்தமாக அமையும்.

எமது அவா என்னவென்றால்:
மேற்கத்திய உலகையே உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கும் நமது சமூகம் இவைகளை உணர்ந்து தன்னை வளர்ச்சியின் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு இந்த வரிகள் ஓர் ஊன்று கோலாய் அமையும்.
முஸ்லீம்கள் அல்லாத நம் சகோதரர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து சத்தியத்தைப் பின்பற்ற வழிகோலும்.

இவை நமது பிரதான எதிர்பார்ப்புகளாகும்.

இந்த ஆக்கத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கிய சில பகுதிகள் 27-04-2007 ஆம் நாளன்று சவுதி அரேபியா, அல்-ஜுபைல் தஃவா சென்டரில் நடைபெற்ற ஒருநாள் இஸ்லாமிய மாநாட்டில் உரையாற்றப்பட்டது. இத்தலைப்பு பறந்து விரிந்த ஒரு தலைப்பாதலால் பெரும்பாலான பகுதி உரையில் விடுபட்டுள்ளது. எனவே தமிழ் உலகம் பயனடைய வேண்டும் என்ற ஒரு நோக்கில் என்னால் முடிந்தளவு பல தகவல்களை ஒன்று திரட்ட முயற்சிக்கிறேன். வல்ல றஹ்மான் நம் அனைவருக்கும் தெளிவையும் சத்தியத்தைப் பின்பற்றும் வாய்ப்பையும் தந்தருள்வானாக.

இத்தலைப்பில் ஆங்கிலத்தில் விரிவாக நூற்கள் வெளிவந்த அளவுக்கு தமிழில் வெளிவரவில்லைதான். இருந்தாலும் சில எழுத்தாளர்கள் தங்களுக்கு முடிந்த வரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த நூற்கள் ஒரு சில விடயங்களை மட்டுமே அலசுகின்றன. நிறைய தகவல்கள் விடுபட்டுள்ளன. நமது இந்த ஆக்கம் கூட அனைத்தையும் உட்கொள்ளாவிட்டாலும் ஓரளவு பல விடயங்களை வியாபித்துள்ளதை நீங்களே போகப் போக புறிந்து கொள்வீர்கள்.

இந்த ஆக்கம் எழுதப்படுவதற்கு இதர இருபெரும் காரணங்கள் உள்ளன:
1-இஸ்லாத்தின் மூலாதார நூற்கள் கூறும் அறிவியல் உண்மைகளை, நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புக்களோடு உரசிப்பார்த்து நமது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுதல்.
2-மேற்கத்திய உலகின் நன்றி மறந்த தன்மையையும், அவர்களது சுய ரூபத்தையும் மக்களுக்கு உணர்த்துதல்.

மேலே குறிப்பிட்ட காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மிகப் பெரும் உண்மை உலகின் கண்களை விட்டும் மறைக்கப்பட்டுள்ளன. அதாவது மேற்கத்திய உலகின் கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் முஸ்லீம்கள் தான் காரணமாக அமைந்திருக்கிறார்கள். முஸ்லீம்களது அன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள்தான் அவர்களுக்கு வளர்ச்சிப் படிக்கட்டுக்களாக அமைந்துள்ளன. உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தல் தகுமோ? என்பதே நமது கேள்வியாகும்.

இக்கூற்றினைப் பார்க்கும் அநேகருக்கு இது புதுமையாகக் கூட இருக்கலாம். அல்லது முஸ்லீம்கள் அறிவியல் முன்னோடிகளாக இருந்துள்ளனரா? என்ற கேள்வி கூட எழுப்பலாம். இதனை நாம் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. மாறாக அவர்களது கூற்றுக்களை வரலாறுகள் பட்டியலிடுகின்றன.

ஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-
'Marguis' எனும் அறிஞர் தனது 'speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'It is to musalman science, to musalman art and to musalman literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.'
'ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.'

ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது 'ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என இன்றும் வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும். இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு முஸ்லீம்கள் வளர்ச்சியடைந்திருந்தார்கள் என்பதற்கு இஸ்லாம் மார்க்கமும், அவர்களது வேதமும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Maurice Bucaille :
'அந்த நூற்றாண்டில் வாழ்;ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புக்களின் யதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படி துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது?' - The Bible, The Quran and Science 1978,p.125

Sir. William Muir கூறுகிறார்:
'குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' - The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.

இந்த நடுநிலைவாதிகளின் கூற்றுக்கள் உண்மையில் பொன் வரிகளில் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும். வரலாறுகளை மாற்ற முடியாதல்லவா! அதுதான் இன்னும் இந்த உண்மைகள் புறையோடிக் கிடக்கின்றன. சத்தியவாதி அவைகளைத் தூசிதட்டி வெளிக் கொணருகிறான். சாதனைகள் பல கண்ட இஸ்லாமிய அறிஞர்கள் பலரது வரலாறுகளை உலகின் கண்களை விட்டும் மறைத்த பெருமையும் மேற்கத்திய உலகையே சாரும்.

வியக்கத்தகு சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகள் சிலர்:
இல பெயர்காலகட்டம்(கி.பி) துறை
1அல்குவாரிஸ்மி (அல்காரிஸ்ம்) 780-850 கணிதம், வானவியல்
2அல்ராஜி (ரேஜஸ்) 844-946 மருத்துவம்
3அல்ஹைதம் (அல்ஹேஜன்) 965-1039 கணிதம், ஒளியியல்
4அல்பிரூணி 973-1048 கணிதம், தத்துவம், வரலாறு
5இப்னுசீனா (அவிசென்னா)980-1037மருத்துவம்
6அல்இத்ரீஸி (டிரேஸஸ்)1100 புவியியல்
7இப்னுருஸ்து (அவிர்ரோஸ்)1126-1198 மருத்துவம், தத்துவம்
8ஜாபிர் இப்னு ஹையான் (ஜிபர்)803 பெளதீகம்
9அல்தபரி838 மருத்துவம்
10அல்பத்தானி (அல்பதக்னியஸ்) 858 தாவரவியல்
11அல்மசூதி 957 புவியியல்
12அல்ஸஹ்ராவி (அல்புகேஸிஸ்) 936 அறுவைசிகிச்சை
13இப்னுஹல்தூன் 1332 வரலாறு
14இப்னு ஹுஜ்ர் (அவன்ஜோர்) அறுவை சிகிச்சை
15இப்னு இஷாக் அல்கிந்தி 800-873தத்துவம், பெளதீகம், ஒளியியல்
16முஹம்மது ஷாகிர் ஹஸன்
(Angel of red sea)
17முஹம்மது சகரிய்யா யாஸீன் மருத்துவம்
18அலி இப்னு அப்பான் மருத்துவம்
(அலி இப்னு அப்பான் எனும் மருத்துவ மேதை அக்காலத்திலேயே 20 பாகங்களைக் கொண்ட ஒரு மருத்துவ நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).




The Random House Dictionary of the English Language Comple by:- Lawrance Urdang – p ல் காணப்படும் Algebra (Ap'lwo), Al-Chemy (Chemistry). Alcohol, Alkali, Algorithm போன்ற விஞ்ஞானப் பெயர்கள் அரபியிலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்பதும் கவணத்திற் கொள்ளப்பட வேண்டியவைகளே.


அல்-குஆனும் அறிவியல் விஞ்ஞானமும்:
1642 ல் பிறந்த ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானியே பிற்காலத்தில் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் கோட்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் என மேற்கத்திய வரலாறு கூறுகின்றது. ஆனால் அல்குர்ஆனோ 1400 வருடங்களாக விஞ்ஞானிகளுக்கே பாடம் புகட்டிக் கொண்டிருப்பதை மேற்கத்திய உலகம் கண்டு கொள்ளவே இல்லை. அல்லது மூடி மறைத்திருக்கின்றது என்று கூட சொல்லலாம்.

அல்குர்ஆன் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் எனும் உண்மையை Dr.Zakir Naik அவர்கள், தனக்கே உரிய பானியில் மிகவும் அற்புதமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
'The Holy Quran is Miracle of Miracles, Quran is Miracle of all times''.
நபிகளார் (ஸல்) அவர்கள் உலகம் அஸ்தமிக்கும் வரைக்கும் அனைவருக்குமான தூதராதலால், அல்குர்ஆன் நிச்சயமாக நிலையான அற்புதமே! (وما أرسلناك إلا كافة للناس)-34:28 'உம்மை உலகத்தார் அனைவருக்கும் (தூதராக) அனுப்பியிருக்கிறோம்' எனும் வசனம் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

Albert Anstain said: 'Science without religion is lame, and religion without science is blind'.
இந்த அல்குர்ஆனின் அதிசயத் தன்மைகள் ஏராளம்! அல்குர்ஆன் கூறும் அறிவியலாகும். ஆதேபோன்று அதனது சபதத்தை மனிதர்களால் முறியடிக்க முடியாமையாகும்.

Dr.Zakir Naik இதனை மிகவும் அழகாகக் கூறுவார்கள்: 'Al-Quran is a book of SIGNS not a book of SCIENCE'. அதாவது, அல்-குர்ஆன் அத்தாட்சிகள் கொண்ட ஒரு வேதமே தவிர விஞ்ஞானப் புத்தகம் கிடையாது என்பதாகும்.

قال تعالى:ஜوإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقينழூ فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرينஸ- البقرة:23-24

'நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! நிராகரிப்பாளர்களும், கற்களுமே அதன் எரிபொருட்களாகும். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.' – 2:23-24.

இந்த சபதம் 1400 ஆண்டுகளைக் கடந்த பினபும் இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட (Coptic Christian) கிறிஸ்தவர்கள் எகிப்தில் மட்டும் 6 மில்லியன் இருக்கின்றனர். அதேபோன்று லெபனான், சிறியா போன்ற இன்னும் பல அரபு நாடுகளிலும் அரபு மொழி பேசக் கூடிய கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அப்படியிருந்தும் அவர்களால் அல்குர்ஆனின் சவாலை முறியடிக்க முடியவில்லை என்பது அல்குர்ஆனின் இறைத் தன்மையையும், அதன் உண்மைத் தன்மையையும் உணர்த்துகின்றது!

காலத்தை வென்ற கச்சித வேதம் அல்குர்ஆன் ஓர் நிலையான அற்புதமாகும்.
அல்குர்ஆனின் வரலாறுகள் புராணங்கள் போன்று கிடையாது.
நிதர்சன உண்மைகள் அல்குர்ஆனில் தனிரகம்!
அல்குர்ஆன் சரித்திரம் பேசும் ஆனால் சரித்திர நூலன்று! வரலாறு கூறும் ஆனால் வரலாற்று நூலுமன்று!
விஞ்ஞானம் அல்குர்ஆனின் விந்தைகளிற் சில, ஆனால் விஞ்ஞான நூலல்ல!
அல்குர்ஆனின் போதனைகள் நிச்சயமாக உலகத்திற்குத் தேவை!!
காலத்தின் நகர்வோடு சிறிதளவும் சலைக்காது நடைபோடும் ஒரே தன்நிகரற்ற வேதம் என்றால் அது அல்குர்ஆனைத் தவிர வேறெதுவும் கிடையவே கிடையாதென அடித்துக் கூறலாம்.

உலகில் இன்று வேதவாக்குகள் மறுக்கப் படலாம் ஆனால், விஞ்ஞானிகளின் வாக்குகள்தான் மேதாவிகள் பலருக்கு வேதப் பாடம். விஞ்ஞானிகளுக்கே விஞ்ஞானம் புகட்டும் வேதப் புத்தகத்தை உலகில் கண்டிருக்கிறீர்களா? அது அல்குர்ஆன் மட்டும்தான்! ஏனைய மதநூற்களில் கூட ஓரிரு விஞ்ஞானக் கருத்துக்கள் காணக்கிடக்கின்றன. அவைகள் தற்செயலாக விஞ்ஞானத்தோடு பொருந்திப் போனவைகள் என்றே கருத வேண்டும். ஏனென்றால் அதிகமான இடங்களில் மதக் கருத்துக்கள் விஞ்ஞானத்தோடு மோதுகின்றமை அன்று முதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. உதாரணத்திற்கு கலீலியோ கலீலியின் விஞ்ஞானக் கருத்துக்கு திருச்சபைகள் எவ்வாறு தடையாக இருந்தன என்பதை வரலாறுகள் நிருபித்துக் காட்டுகின்றன.

அதே நேரம் உலக வேதபுத்தகங்களிலேயே அல்குர்ஆன் தனித்து நிற்பதை கீழ் வரும் 'அல்குர்ஆனும் விஞ்ஞானமும்' எனும் தொடர் உண்மைப்படுத்துவதை உணர்வீர்கள்!!

--
அன்புடன்
மீரான்

smeeran.tnj@gmail.com
www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

இயற்கை!!

இயற்கை!!
-------------

அண்டங்கள் ஆகாயங்கள்
இயற்கை!

வானும் விண்மீன்களும்
இயற்கை!

சூரியனும் ஒளியும்
இயற்கை!

அதைச் சுற்றிவரும் கிரகங்கள்
இயற்கை!

நேரமும் காலமும்
இயற்கை!

மேகமும் மின்னலும்
இயற்கை!

காற்றும் மழையும்
இயற்கை!

நீரும் நிலமும்
இயற்கை!

நிலநடுக்கமும் எரிமலைகளும்
இயற்கை!

ஆறுகள் கடல்கள் அருவிகள்
இயற்கை!

வறட்சியும் பசுமையும்
இயற்கை!

உயிரினங்கள் அனைத்தும்
இயற்கை!

அவற்றின் பிறப்பும் இறப்பும்
இயற்கை!

உயிரும் உடலும்
இயற்கை!

இரவும் பகலும்
இயற்கை!

உறக்கமும் விழிப்பும்
இயற்கை!

பசியும் தாகமும்
இயற்கை!

அன்பும் பாசமும்
இயற்கை!

இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும்
இயற்கை!

அவற்றின் மாட்சியும் மகிமையும்
இயற்கை! இயற்கை!!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.
drimamgm@hotmail.com

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் கவிதை அற்புதமாக இயற்கையாகவே அமைந்துள்ளது. என்றும் இயற்கையாகவே உங்கள் படைப்புக்கள் வர எனது வாழ்துக்கள்.


நன்றி: வார்ப்பு.

ஒப்பாரும் மிக்காரும்...?


பொது விடங்களில்
துப்புவதிலும்
நான்கு பேர்
கூடியிருக்குமிடத்தில்
மூக்கையும் சளியையும் சிந்தி
அசுத்தப் படுத்துவதிலும்
உண்ட வாழையின்
தோலை வீதியில்
வீசி எறிவதிலும்
பொதுவிடங்களில்
சுவர்களைத் தேடி
சிறுநீர் அபிஷேகம்
செய்வதிலும்
எச்சத்தையும் மிச்சத்தையும்
கண்ட இடங்களில்
போடுவதிலும் நம்மை
ஒப்பாரோ மிக்காரோ தான்... எவர்?
வார்ப்பில் -இமாம்.கவுஸ் மொய்தீன்.

பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-06-16




அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


கவிதை : காந்தி பிறந்த நாடு !!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]


மீண்டும் மீண்டும்
தொடந்து கொண்டுதானிருக்கின்றன
நச்சுச் சாராய சாவுகள்!

மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
விதவை அநாதைகளின் பெருக்கம்!

மீண்டும் மீண்டும்
தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது
உறவு நட்புகளின் ஒப்பாரி!

நின்று கொல்லும் நஞ்சு- மது!
நிறுத்தாமல் குடித்தாதால்
இன்று கொன்றிருக்கிறது நச்சுச் சாராயம்!

கொலைகள் கொள்ளைகள்
விலையேற்றம் பணவீக்கமென
அனைத்தும் வளர்பிறையாய்....!

அனைத்துத் துறைகளிலுமே
வேகமாய் முன்னேறி வருகிறது
நம் நாடு!

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில்
முழுகவனத்துடன்....
காவல்துறை!

சூடான பரபரப்பான
செய்திகளின் தேடலில்....
ஊடகங்கள்!

கேள்வி கண்டனக் கணைகளை
வீசுவதில்... சலிப்படையாத
எதிர்க்கட்சிகள்!

ஆர்ப்பாடமின்றி அகிம்சைவழியில்
கோலொச்சிக் கொண்டிருக்கிறது
நம் அரசு!

காந்தி பிறந்த நாட்டில்
நாமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
பெருமையுடன்....


நன்றி:தமிழோவியம்.



அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


காற்று!
------------

வசந்தம் வாடை

அனல் புயல்

சூறாவளி புழுதிக்காற்றெனப்

பருவத்துக்குப் பருவம்

பற்பல அவதாரங்களில்...


பிராணவாயு

கரியமிலவாயுவென

உயிரினங்களுக்கும்

தாவரங்களுக்குமிடையே

சுவாசப் பரிமாற்றத்தில்...


காடுகளின் அழிப்பு

இரசாயனங்களின்

வெளியேற்றம்

தூசு மாசுகளின்

ஆதிக்கத்தால் இன்று

நச்சு பரப்பும் நிலையில்...


காற்றின்

கனிவும் சீற்றமும்

பாகுபாடு பார்ப்பதில்லை

கனிவுடன் இருக்கும் வரைதான்

கண்ணியத்துடன் இருக்கும்...


உணர்ந்துகொள் மனிதா...!

இதன் இதமும்

இனிமையும் இன்பமும்

இலக்கியங்கள் கதைத்திடும்!

சினமும் சீற்றமும் கடுமையும்

வரலாறு உரைத்திடும்!


-இமாம்.கவுஸ் மொய்தீன்.

நன்றி: வார்ப்பு













சேமித்து வைக்க





அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


சாதனை!!
---------
படிப்பில் பந்தயத்தில்
வீரத்தில் விவேகத்தில்
திறமையில் உயர்வில்
விஞ்சியிருப்பதும் முந்தியிருப்பதும்
சாதனை!

படைத்திட்ட சாதனைகளை
விஞ்சுவதும் மிஞ்சுவதும்
தனித்தன்மையுடன்
ஒளிர்வதும்
சாதனை!

உண்மை உழைப்பு
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு புத்திசாலித்தனத்தால்
சாதிப்பதே
சாதனை!

மனித உயிரின்
வாழ்வுக்கும் உயர்வுக்கும்
ஆக்கத்துக்கும் இன்றியமையாதவற்றை
கண்டுபிடித்தல்
சாதனை!

விண்கோள்கள் ஏவுகணைகள்
விண்வெளி ஆராய்ச்சி
கணினிகள் தகவல்தொழில்நுட்பம்
மாற்றுறுப்புப் பொருத்தங்கள் எல்லாமே
சாதனைகள்!

உயிர்காக்கும் மருந்துகள்
நோயறியும் பொறிகள்
வானொலி தொலைக்காட்சி
தொலைப்பேசி செல்பேசிகள் எல்லாமே
சாதனைகள்!

விண்ணில் மண்ணில்
நீரில் பயணம் செய்ய
விதவிதமான அதிவெக
வாகனங்கள் எல்லாமே
சாதனைகள்!

விவசாயத்தில் பசுமைப்புரட்சி
உற்பத்தியில் தன்னிறைவு
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
விமானங்களில் பறந்து கொண்டிருக்கும்
நம் பட்டதாரிகள் எல்லாமே
சாதனைகள்!

மகாத்மா முதற்கொண்டு
சாதனையாளர்களையும் சாதனைகளையும்
பட்டியலிட்டால் எண்ணிமாளாதவையாய்
எத்தனை யெத்தனையோ
சாதனைகள்!

புகை போதை விபச்சாரம்
சமூகவிரோதம் ஏழ்மையில்லா
சமுதாயம் காணும் இனியநாளே
இந்தியாவின் மகத்தான உன்னதமான
சாதனையாகும்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


பூமிப்பந்தின் பரப்பில்
மூன்றில் இருபங்கு நீர்!

உயிருக்கும் உடலுக்கும்
இன்றியமையாத் தேவை நீர்!

உணவு பானங்கள் பழங்கள்
அனைத்திலுமே நீர்!

ஊற்றுஅருவி ஆறு மேகம் உப்புகளின்
தோற்றமும் தோன்றலும் நீர்!

சுவைக்க சுத்தம் சுகாதாரமாயிருக்க
அழுக்கைப் போக்க நீர்!

மனித இனத்தின் மகிழ்ச்சியிலும்
துக்கத்திலும் நீர்!

சூடாக்கினாலும் குளிர்வித்தாலும்
தணிந்திருந்தாலும் நீரே நீர்!

நீரின்றி ஏது இயக்கம்?
நீரின்றி உயிரில்லை!

நீரின்றி உலகுமில்லை!
எங்கும் எதிலும் நீர் நீர் நீர்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


நன்றி: முத்துக்கமலம்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/

ஏன் இஸ்லாம்!!
--------------
'இஸ்லாம்'
மாற்றாருக்கு
எளிதில்
பிடித்து விடுவதில்லை!
பிடித்து விட்டால்
எவரும் அதை
விட்டு விடுவதுமில்லை!

இது ஓர்
பகுத்தறிவு மார்க்கம்!
இங்கு
மூட நம்பிக்கைகளுக்கு
இடமில்லை!
முஸ்லிம்கள்
மூடராய் இருப்பதில்லை!
மூடர்கள்
முஸ்லிமாய் இருப்பதில்லை!

உலகில் பலரும்
'கடவுள் ஒருவனே'
என்கின்றார்!
அந்த ஒருவனின்
தேடலில்...
ஆயிரம் பேரைக்
காண்கின்றார்!
அவ்வாயிரத்தில் ஒருவன்
இவனா?
தேடலிலேயே...
ஆயுளை முழுதாய்த்
தொலைக்கின்றார்!

ஏக இறைவனை
தந்தையும் அவனே!
மகனும் அவனே!
பரிசுத்த ஆவியும் அவனே!
என்கின்றார்-அதை
அறிவுப் பூர்வமாய்
சிந்திக்க ஏனோ?
ம(று)றக்கின்றார்!

அன்பே தெய்வம்!
அறிவே செல்வம்!
என்கின்றார்-மிருக
வதை கண்டால்
முதலைக் கண்ணீர்
வடிக்கின்றார்!
சாதிச் சண்டையில்
மனித உயிகள்
மாய்வதைக் கண்டு
மகிழ்கின்றார்!

'இஸ்லாம்' ஓர்
சமாதான மார்க்கம்!
அன்பும் அறமுமே
அதன் அடிப்படை!
கட்டுப்பாட்டுக்கே
முக்கியத்துவம்!

இப்படித்தான்
வாழ்தல் வேண்டுமென
வாழ்வோர் மட்டுமே
இஸ்லாமியராய் இருப்பர்!
எப்படியும் வாழலாமென
நினைப்போர்...
எப்படியும் இருப்பர்!

இஸ்லாத்தில்
வந்து விட்டால்
ஈருலகிலும்
இன்பம்!
நிராகரிப்போருக்கு...
என் ஆழ்ந்த வருத்தம்...!

-இமாம்.கவுஸ் மொய்தீன்.


முத்துக்கமலத்தில்

இமாம்.கவுஸ் மொய்தீன் படைப்புகள்

தமிழ்நாட்டில் செங்கற்பட்டு நகரில் பிறந்து வளர்ந்த இவர் புகுமுகக் கல்வி வரை செங்கற்பட்டிலும், மருத்துவக்கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் படித்தார். தற்போது சவூதி அரேபியாவில், ஜெத்தா நகரில் மருத்துவராகப் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் இமாம்.கவுஸ் மொய்தீன், இறை மொழியன் என்கிற பெயர்களில் தமிழகத்தில் வெளியாகும் பிரபல தமிழ் இதழ்களிலும், பல தமிழ் இணைய இதழ்களிலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், வளைகுடா வாழ் இந்தியத் தமிழர் குழுமம், இந்தியக் கலாச்சாரக் குழுமம் அமைப்புகளில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வரும் இவருடைய விழியருவிகளும் விமான நிலையங்களும் என்கிற ஹைக்கூ கவிதைத் தொகுப்பு நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


மரத்தினால் ஆனதாலோ

உலோகத்தினால் ஆனதாலோ

கண்கூடாய்க் காண்பவற்றை

வெளி கூறாது

ஜடமாயிருந்திருந்து

ஜடமாகி விட்டதாலோ?

'ஜடம்' என்றே அழைக்கப்படுகிறது.


இதுவும் ஓர் நாடகமேடைதான்!

எத்தனை யெத்தனை காட்சிகள்

நாடகங்கள் அரங்கேற்றங்கள்

மந்திரங்கள் சத்தியங்கள்!

அனைத்தையும் கண்டு

ரசிப்பதோடு சரி!

மற்றபடி 'ஜடமே' தான்.


பெரிய மனிதர்

உத்தமர் சாதனையாளர்

மாவீரர் மதிப்புக்குரியவர்

எல்லாமே வெளித் தோற்றம் தான்!

நாற் சுவற்றுக்குள்

அவரின் மிருகத்தனம்

அப்பப்ப்பா.........!!

புலிகள் எலியாவதும்

யானைகள் பூனைகளாவதும்...

எதையும் காணாதது போல்

'ஜடமா'கவே... கட்டில் !



நன்றி: தமிழோவியம்.


கோடிகள் கொடுத்தாலும்...!!



அம்மா... ...!
ஊரில் இருக்கின்றார்!
கேட்போர்க்கெல்லாம்
பதிலாய் இருந்த
நிகழ் காலம்...
அவரின் மரணத்தால்
இறந்த காலமானது!

அவருக்குச் செய்த
பணிவிடைகள்
கடுகாய்ச் சுருங்கிவிட
தவறியவை
மலை போல்
மனக்கண் முன்...!

தன் உதிரத்தை
உணவாய் உணர்வாய்
ஊட்டியது...

தாலாட்டு பாடி
தொட்டிலாட்டி
உறங்க வைத்தது...

நிலாவை
நட்சத்திரங்களை
மின்மினிகளைக் காட்டி
சோறூட்டியது...

உடல் நலமில்லாத
நேரங்களில்
உண்ணாமல் உறங்காமல்
சேவை செய்தது...

விரல் பிடித்து
நடை எழுத்து
சித்திரம் பழக்கியது...

மழலையைக் கேட்டுப்
பூரித்தது
புன்முறுவல் பூத்தது
பெருமை கொண்டது...

குழந்தைகட்கு
வலியேதுமென்றால்
துடித்தது துவண்டது
துயரம் கொண்டது...

ஒவ்வொன்றும்
தொடர் காட்சியாய்
நெஞ்சை வருட...

உடன் வைத்திருந்து
பணிவிடை செய்து
பார்த்திருந்திருக்கலாமே...!

விம்மியது இதயம்
அருவிகளாயின விழிகள்
கசக்கிப் பிழிந்தது
குற்ற மனப்பான்மை!

விலகி இருந்ததாலும்
பிரிந்து விட்டதாலும்
இழந்த சுகம்
கோடிகள் கொடுத்தாலும்
திரும்புமோ?
-இமாம்.கவுஸ் மொய்தீன்.

நன்றி: முத்துக்கமலம்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/



'சுப்ஹானல்லாஹ்'!!
------------------
சுன்னி ஷியா ஹனஃபி
ஷாஃபி மாலிகி ஹம்பளி
சூஃபி வஹாபி
தௌஹீத் ஜமாத்
சுன்னத் ஜமாத்
அஹ்லே ஹதீஸ்
ஜமாத்தே இஸ்லாமி
இன்னும் இப்படி
எத்தனைப் பிரிவுகளோ
இன்றைய இஸ்லாமியருக்கிடையில்...!

இவை யெல்லாம்
சாத்தானின் சூழ்ச்சியா?
மனிதனின் அறியாமையா?
பிரித்து ஆண்டுப் பழகிவிட்டோரின்
கைங்கர்யமா?

தாவூத் மூசா
ஈசா முஹம்மத்[சல்..] என
அனைத்து இறைத்தூதர்களும்
ஏக இறைவனையே வணங்கினர்.
ஏகத்துவதையேப் போதித்தனர்.
இடையில் என்ன நேர்ந்ததோ?
இத்தனைப் பிரிவுகள்...!

எத்தனைத் தான் பேதங்கள்
சூழ்ச்சிகள் உருவானால் என்ன?
'' லாயிலாஹா இல்லல்லாஹ்
முஹம்மத் ரசூலல்லாஹ்..''
உச்சரிக்கும் போது
அனைத்துமே அற்றுப் போய்விடுகின்றன.
'சுப்ஹானல்லாஹ்'!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்


'சைக்கோ' !!
--------------

நாள்தோறும் விடிந்தும்

விடியாமலேயே இருக்கின்றது

காலைப் பொழுது!



ஊடகங்களைத் திறக்க

பதைபதைக்கிறது

மனம்!



'சைக்கோ'வின் அடுத்த பலி

உறக்கத்திலிருக்கும்

அப்பாவி எவருமா?



'சைக்கோ' என நினைத்ததால்

கொல்லப்பட்டிருக்கும்

அப்பாவி எவருமா?



'சைக்கோ'வின் பெயரால்

கைதாகி இருக்கும்

அப்பாவி எவருமா?



கைதானவரும் கொல்லப்பட்டவரும்

'சைக்கோ'வாய் இருக்கும் பட்சத்தில்

தொடரும் கொடூரக் கொலைகளுக்குக்

காரணம் யார்? யார்? யார்?



பொதுமக்களுக்கு வேண்டுமாயின்

புதிராய் பீதியாய் இருக்கலாம்

'சைக்கோ'!



ஸ்காட்லாண்ட் யார்டுக்கு

இணையானதாகக் கருதப்படும்

தமிழகக் காவல்துறைக்குமா...?


-கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி: தமிழோவியம்.

அன்புடன்,


இமாம்.

http://thamizheamude.blogspot.com/


சொத்துப் பங்கீடு!!

-இமாம்.கவுஸ் மொய்தீன் -


தந்தையின் சொத்து
மக்கட் கென்பர்!

அவரின் மறைவுக்குப் பின்
நிகழ்ந்தது சொத்துப் பங்கீடு!

மூத்தவருக்குச் சென்றன
வீடும் கடையும்!

அடுத்தவரின் பங்கில்
நஞ்சை புஞ்சைகள்!

மற்றவருக்குச் சென்றன
நகைகளும் மனையும்!

சகோதரிகளின் பங்கில்
கால்நடைகள்!

கடைசி மகனாய்
நான் இருந்ததால்....

என் பங்கில் வந்தன
கடனும் அம்மாவும்!!

drimamgm2001@yahoo.co.in

நன்றி: பதிவுகள்.


அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/



சுதந்திரமே உன்னால்...!




சுதந்திரம் அடைந்து
அறுபதாண்டு காலத்தில்
இன்றைய நிலையில்
நம் இந்திய நாடு...
உலக அரங்கையே
வியக்கத்தான் வைக்கிறது!

உற்பத்தியில் தன்னிறைவு
விவசாயத்தில் பசுமைப்புரட்சி
கல்வி அறிவியல் மருத்துவம்
தகவல் தொழில் நுட்பம்
பொறியியல் மற்றும்
பல துறைகளில் அபார வளர்ச்சி!

சொந்தமாய் விண்கோள்கள்
ஏவுகணைகள் அணு ஆயுதங்கள்
இயந்திரங்கள் வாகன உற்பத்தி
என்று வேகமான முன்னேற்றம்.
எல்லாமே இமயத்தைக்
காட்டிலும் உயர்வுதான்
பெருமையும்தான்!

ஆயினும்...
செங்கோட்டையில்
தேசியக் கொடியை ஏற்றிவிட்டு
குண்டுகள் துளைக்காத
கண்ணாடிப் பேழையின்
உள்ளிருந்து
பிரதமரின் உரை...!

விமான இருப்புப்பாதை
பேருந்து நிலையங்களிலும்
வழிபாட்டுத் தலங்களிலும்
பொதுவிடங்களிலும்
பாதுகாப்புச் சோதனையின்
பெயரில் பொதுமக்கள்
வதைக்கப்படும் நிலை...!

பிரித்தாண்டவர்கள்
வெளியேறிவிட்ட பின்னரும்
அவர்கள் விட்டுச் சென்ற
பிரிவினை இனவாத
நச்சுவிதைகளின் தாக்கத்தால்
நிகழும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்
அழிவுகள்... இழப்புகள்...!

அன்னிய மாநிலத்தவர்
வெளியேற வேண்டும்
அன்றேல் உதைக்கப்படுவர்
வதைக்கப்படுவர் ஒழிக்கப்படுவரென
செயல்படும் சில இயக்கங்களின்
அச்சுறுத்தல்கள்...!

ஆணையங்களும் உச்சநீதிமன்றமும்
ஆணைகள் பிறப்பித்த பின்னரும்
அண்டை மாநிலங்கட்கு
நதிநீரைப் பகிர்ந்தளிக்க மறுத்து
தேசிய ஒருமைப்பாட்டுக்கு
ஊறுவிளைவிக்கும்
மாநிலங்களின் மனப்போக்கு...!

அன்றாட நடைமுறையாகிவிட்ட
கொலை கொள்ளை இலஞ்சம்
ஊழல்கள் சமூகவிரோதச் செயல்கள்...
சகோதரனே பகையாய் இருக்கையில்...
சுதந்திரமே உன்னால்
சுவையுமில்லை! மகிழ்வுமில்லை!!

-இமாம்.கவுஸ் மொய்தீன், ஜெத்தா.
நன்றி:முத்துக்கமலம்.





அன்புடன்,
இமாம்.

http://thamizheamude.blogspot.com/


எதுவும் சாத்தியமே! - இமாம் கவுஸ் மொய்தீன்


on 23-08-2008 16:37


Favoured : None
Published in : இலக்கியம், கவிதை


பறப்பன நடப்பன

ஊர்வன தவழ்வன என

அனைத்து உயிரினங்கட்கும்

சொந்தமாய் இல்லங்களாம்

மரங்கள் கூடுகள் புதர்கள்

புற்றுகள் குகைகள்...!


மனிதர்கட்கும் அவரவர்

வளம் வசதிகட்கேற்ப

சொந்த வீடுகள்

வாடகை வீடுகள்

குடிசைகள் சாலையோரங்கள்

இல்லங்களாய்...!


வாழ்நாளில்

சொந்தமாய் ஓர் வீடு

பெரும்பாலோரின் கனவு!

ஒரே நாளில்

ஊரையே அழித்துத்

தரைமட்டமாக்குதல்

சிலரின் நனவு!


உலகே வியக்கும்

வேடிக்கை பார்க்கும்

மனசாட்சியையும்

மனிதநேயத்தையும்

புதைத்துவிட்டவர்களின்

அரசியலை......

- இமாம் கவுஸ் மொய்தீன்

Last update: 23-08-2008 17:21


நன்றி: அதிகாலை.





அன்புடன்,

இமாம்.

http://thamizheamude.blogspot.com/


கவிதை : நாளைய நட்சத்திரங்கள்!!
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]


அன்று....
தலையைப் படிய வாரி
எண்ணெய் முகத்தில் வடிய
சீருடை முழுதாயணிந்து
சுமக்க முடியாமல்
புத்தக மூட்டையைச் சுமந்து
கூட்ட நெரிசலிலும் இடிபாடுகளிலும்
சிக்கித் தவித்துப்
பேருந்தில் பயணம் செய்து
பள்ளிக்குச் சென்றபோது
பரிகாசம் பேசியோருண்டு!
பரிதாபம் கொண்டோருண்டு!
விமர்சித்தோரும் பலருண்டு!

இன்று....
படிப்பு முடிந்துவிட்டது
பட்டம் பெற்றாகிவிட்டது
பணியும் கிடைத்துவிட்டது
கை நிறையச் சம்பளம்
வளங்கள் வசதிகள்
வாகனங்கள் ஏவலாட்களென
சொந்த வாழ்வில்....
என்னுடன் புத்தகம் சுமந்த பலரும்
என்னைப் போன்றே
வசதிகள் வளமுடன்....

பணிக்குச் செல்லும் நேரம்
பள்ளிக்குச் செல்வோரைப்
பார்க்கிறேன்!
முதுகில் புத்தக மூட்டை....
அதில் புத்தகங்களுடன்
அவரவரின் எதிர்காலம்
பெற்றோரின் கனவுகள்
கற்பனைகள் உழைப்பு
நம்பிக்கையென அனைத்தையும்
சுமந்து செல்லும் சிறார்கள்!

இதயம் பூரிக்கிறது
நம் நாட்டின்
நாளைய மன்னர்களைக்
காண்கையில்!
இன்று நாம் ஒளிர்வதைப் போல்
நாளை ஒளிர இருக்கும்
இந்தியாவின்
நம்பிக்கை நட்சத்திரங்கள்!!

- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன்

நன்றி:தமிழோவியம்.

வலைப்பூ:http://thamizheamude.blogspot.com

Wednesday, March 5, 2008

இயற்கையும் செயற்கையும்

இயற்கையும் செயற்கையும்

இயற்கையில் நானறிந்தது இரு வகை
ஒன்று தானாகவே அமைந்த இயற்கை
மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை
எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை

பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால்
வீணே காரியம் நிறுத்துவது செயற்கை
வீட்டில் பூனை குறுக்கிடும் ஆயிரம் முறை
ரோட்டில் ஒருமுறை குறுக்கிட்டாலே அது சறுக்கலாம்

எங்கே செல்கிறீர் என கேட்பது இயற்கை – சாவின்
சங்கே ஊதியது போல் அஞ்சுவது செயற்கை
மனதில் வெள்ளையை போற்றும் மனிதன்
உடையில் வெள்ளையை தரித்திரம் என்கிறான்

கல்லில் கால் தடுப்பது இயற்கை
முள்ளைபோல் உதறாமல் அல்லாடுவது செயற்கை
புல்லுருவிகள் கோள் சொல்வது இயற்கை
புல்லைபோல் எறியாமல் தோள்சுமப்பது செயற்கை

காக்கை கரைவது இயற்கை
விருந்தை எண்ணி கருமி கரைவது செயற்கை
மூக்குக் கண்ணாடி உடைவது இயற்கை
மூக்கே உடைந்தது போல் அலறுவது செயற்கை

தலையில் பல்லி விழுந்தால் இயற்கை
தலையே போனதுபோல் அழுதால் செயற்கை
ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எண்கள் – இயற்கை
அதில் சில அதிர்ஷ்டம் என்பது செயற்கை

செவ்வாய் தோஷம் - எதிர்காலத்தின் மோசம்
தோஷக்காரர்களின் வாழ்வே நாசம்
அறிவுக்கே ஒவ்வா ஒரு கோஷம்
ஆயுள் ரேகை கட்டை – அது இயற்கை
வாழ்வு குட்டை – இது செயற்கை

விமானத்தில் பிணமானவர்களைக் கேட்டேன்
புயலில் சுயம் இழந்தவர்களை படித்தேன்
கடல் நீரில் உடல் போனவர்களை வாசித்தேன்
சுனாமியில் சின்னாபின்னமானவர்களைக் கண்டேன்

அனைவரின் ஆயுள் ரேகை குட்டையுமில்லை
செவ்வாய் தோஷமுமில்லை
அதிர்ஷ்ட எண்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை

இயற்கை அளித்தது சிம்மாசன இருக்கை
மாற்றவில்லை மனிதன் தன் சிந்தனை போக்கை

- ஜாஃபர் சாதிக்
sadikjafar@gmail.com

Sunday, March 2, 2008

துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா !


துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா !
கி.வீரமணி - சத்யராஜ் - சையத் எம். ஸலாஹுத்தீன் பங்கேற்பு !!

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா,பவளவிழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழா, அமீரகத்தில் சமூக சேவையில் விருது பெற்ற அஜ்மான் மூர்த்தி, எல். கோவிந்தராஜ் ஆகியோரை கௌரவப்படுத்தும் விழா 28.02.2008 வியாழக்கிழமை மாலை துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் உள்ளரங்கில் நடைபெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவிற்கு அமீரகத் தமிழர்கள் அமைப்பின் கௌரவத் தலைவர் அஜ்மான் மூர்த்தி தலைமை தாங்கினார். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பு மேற்கொண்டுவரும் தமிழ்ச் சமூக மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார். புரவலர் எல். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரையில் மனிதநேயமுடன் உதவி செய்ய வலியுறுத்தி அதனை எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறினார். இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய துணைப் பிரதமரின் செயலராக இருந்தவர் வி.பி. மேனன். ஒருமுறை புதுதில்லி புகைவண்டி நிலையத்தில் உடமைகளை இழந்து தவித்தபோது ஒரு சீக்கியர் உதவினார். அவர் உதவிய பணத்தை மணியார்டர் மூலமாக அனுப்புகிறேன் என அவர் கூறிய போது அதற்கு அவர் யாரேனும் ஒருவர் உதவி கேட்கும் போது உதவினால் அது எனக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தது போலாகும் என்றார்.

ஒருமுறை புதுதில்லி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணி தான் வைத்திருந்த சுமைகள் பாதுகாக்கும் அறையில் தனது நாட்டுப் பணத்தில் கட்டணத்தை செலுத்த முயன்ற போது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை அதன் பாதுகாவலர். பணத்தை இந்திய நாணயமுறைக்கு மாற்ற முனைந்தால் விமானம் சென்று விடும். எனவே இதனை அறிந்து அப்பயணிகு மேனன் உதவினார். சீக்கியர் கூறியது போன்றே மேனனும் அவ்வெளிநாட்டுப் பயணியிடம் தெரிவித்து விடைபெற்றார்.

வெளிநாட்டுப்பயணி முதுமையில் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் போது பிச்சைக்காரர் ஒருவர் வந்தார். அவரது மகள் அவருக்கு உணவளித்ததும், அவர் ஒரு செருப்பு கொடுக்குமாறு கேட்டார். கோபமுற்ற அவர் அப்பிச்சைக்காரரை விரட்டியடித்தார். இதனையறிந்த அவரது தந்தை அவரைக் கூட்டி வந்து தனது மணிப்பையில் உள்ள பணத்தை கொடுக்கக் கூறினார். இதனை தனது சுயசரிதையில் பதிந்துள்ளதாக வீரமணி தெரிவித்து மனிதநேயமுடன் உதவிட வலியுறுத்தினார்.

தொடரும் ..............

Wednesday, February 27, 2008

தமிழ் தட்டச்சு செய்ய...........

அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்).,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருதவியால் நாம் நமது இஸ்லாமிய செயல் திட்டங்களை இணைய தளத்தின் மூலம் செயல் படுத்துவதற்க்கான வழிகளில் ஒன்றான தமிழ் type writing web siteனை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.

www.wk.w3tamil.com
தமிழ் type writing செய்வதற்க்கான website மேலே குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த siteல் உள்ள KEYBOARD LAYOUTல் தமிழ் எழுத்துக்களை type செய்து பின் அந்த எழுத்துக்களை COPY செய்து e-mail உடைய message boxல் paste செய்ய வேண்டும்.
இந்த தமிழ் எழுத்துக்களை படிப்பதற்க்கு எந்த தனி font fileகளை computerல் download செய்ய தேவையில்லை என்பது இந்த site உடைய தனிச் சிறப்பாக உள்ளது.
இந்த TAMIL TYPE WRITING KEYBOARD ஆனது முற்றிலும் வேறுப்பட்டதாகவும், மிக விரைவாக கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது.
இங்கு நான் type செய்துள்ள எழுத்துக்கள் என்னுடைய FIRST TRIAL TYPE WRITING ஆகும். இன்ஷா அல்லாஹ் இதுப் போன்ற செயல்கள் மேலும் சிறப்பித்து அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவிடுவானாக....... (ஆமின்)
வஸ்ஸலாம்...
Yussuf.S. - deira dubai

s_yussuf2004@yahoo.com


Now we can able to type in our familiar language and search in web, this is customzied
Google search.

Once you start typing it appears in our familiar language.

Search in
http://www.yanthram.com/languages.htm


Regards,

Abu Anas bin Ahmad

Monday, February 25, 2008

“ கவி ஞானி காயல் பிறைக்கொடியான் புகழ் நிலைக்கும் "

“ கவி ஞானி காயல் பிறைக்கொடியான் புகழ் நிலைக்கும் "

கவிக் கொண்டல் என்றும்
பிறைக் கொடியான் என்றும்
விருது பெற்று அல்லாஹ்வின்
ஏற்ற மிகு நல்லடியாராய் வாழ்ந்தவர்!!!

வரகவி காஸிம் புலவரின்
வழித்தோன்றலாய் வளமோடு பல
பாக்களையும், எழுpல் முத்துக்களையும் தந்த
மஹ்மூது ஹ}ஸைன் என்ற மூத்த கவிஞர்; அவா.;!!!

சாகித்திய அகாதமி
விருது பெறா சாதனையாளர்
சாமானியர்களுக்கம் எளிதாக
புரியும்படி எழுதியவர் !!!

கதை, கட்டுரை கடிதம் வாழ்த்து
என பல் திறமை வித்தகர்
கடுமையான உழைப்பால்
கவிச்சிகரம் சென்றவர் !!!

ஏழைகளின் இன்னலை
கவிதைகளில் வடித்தவர்
ஏழைகளோடு ஏழையாய்
கடைசி வரை வாழ்ந்தவர் !!!

எளிமையின் சின்னமாய்
எனறென்றும் இருந்தவர்
ஏற்ற தாழ்வுகளை உயர்ந்த
கவிதையால் சாடியவர். !!!

தாய்ச்சiபாயாம் லீக்கிற்கு
தாரக மந்திரமாய் இருந்தவர்
வாய் பேசா மகனுக்கு உற்ற
தந்தையாய் விளங்கியவர். !!!

பச்கை; கொடிக்கு
பசுமை முலாம் பூசியவர்
இச்சை இளைஞர்களை
கச்சிதமாய் நெறி படுத்தியவர். !!!

சிற்றிதழ்களின் இராஜாவாக
சிம்மாசனம் இட்டவர் பல முறை
அழைப்பு வந்தும்
'அம்மாசனம்" போகாதவர் !!!





கருப்பு , வெள்ளை சிகப்பு வண்ணங்கள்
ஆல் வட்டம் அடித்தபோது
பச்சை பிறைக் கொடியை பற்றி பிடித்த
பாசமிகும் மறவர் அவர் !!!

வாழ்த்துரை கேட்டால் வாகாய் தருபவர்
வாழும் தலைமுறை மூன்றை
வளமாய் பெற்று சீரிய எழுத்தால்
காயலர் தம் இதயத்தில் நிலைத்தவர் !!!

கர்வம் என்றால்
என்னவென்று அறியாதவர்
கனிவான பேச்சால்
குழந்தைகளை வென்றவர். !!!

மயிலிறகு வருடுவது போல்
விமர்சனம் செய்தவர்
மனது புண்படும்படி என்றும்
விமர்சனம் அறியாதவர். !!!

வாழ்ந் நாட்களில் ஆசை அறவே அற்ற
நவீன கவிஞர் அவர்
ஆழ்ந்த அன்பில், பண்பில்
காயலர் இதயத்தை கவர்ந்தவர். !!!

பணம்,பதவி, புகழ் விரும்பாத
கவி ஞானியே
பாடகர் பலர் உயர்ந்திட காரணமாய்
இருந்த ஏணியே. !!!

உலகம் உள்ள வரை
கவிதை இருக்கும்
கவிதை உள்ள வரை நம்
காயல் பிறைக் கொடியான்
SMB-ன் பகழ் நிலைக்கும்


கவிதையாக்கம் : யு.சு. ரிபாயி.
ஜித்தா


arrefaye@yahoo.com

Sunday, February 24, 2008

ஒரு கவிதை மரணம் அடைந்து விட்டது !!

ஒரு கவிதை மரணம் அடைந்து விட்டது !!

காயல் பிறைக்கொடியான் - அவர்
இறைவனின் நல்லடியான் !

அவருடைய தொகுப்புகள் அனைத்தும்
சமுதாயத்திற்கு வகுப்புகள் !

அவருடைய வார்த்தைகள் அவற்றின்
வார்ப்புகள் !

அவர் சிந்தனையில் கருத்துக்கள்
கரு பிடிக்கும் ! அவைகள்
சமூகத்தின் துரு எடுக்கும் !

கவிஞர் மஹ்மூது ஹுசைன் - அவர்
இன்னும் ஒரு தோண்டப்படாத சுரங்கம்
நல்ல பல கவிதைகள் அதில் உறங்கும் !

அவருடைய ஆக்கங்கள் தனிவுடமை அல்ல
அவைகள் சமூகத்தின் பொதுவுடமை !

தமதாதாயக் கவிஞர்கள் வாழும் இவ்வுலகில்
சமுதாதாயக் கவிஞர் உம் போல் சிலரே !

உம் கவிதைகள் வெளிவுலகிற்கு வராத நிலையிலேயே
நீர் விண்ணுலகை அடைந்துவிட்டீர் !

சுமக்க முடியாத ஒரு கவிதைப் பெட்டகம் - இங்கு
இறக்கி வைக்கப்பட்டுள்ளது ! ( இன்னாலில்லாஹி .......... )

ஒரு கவிதை மரணம் அடைந்தும்
மரணமே கவிதையாய் வாழ்கிறது !

------------- காயல் யு. அஹமது சுலைமான் , துபாய்

காயல் பிறைக்கொடியான் மஹ்மூது ஹுசைன் மறைவையடுத்து எழுந்த கவிதை

Saturday, February 23, 2008

துபாயில் நூல் அறிமுக விழா


துபாயில் நூல் அறிமுக விழா

வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின் 'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேசினார். நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மானும் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் லியாகத் அலியும் பெற்றுக்கொண்டனர். இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது gsfuae@gmail.com

முகைதின் .A
அலைபேசி-050 4689868,
-055 8034874

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் கலை விழா

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் கலை விழா

நாள் : 14-02-08 இடம் : இந்திய தூதரகம்

ரியாத் மாநகரில் ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் முப்பெரும் கலைவிழா கடந்த 14-02-2008 அன்று மாலை இந்திய தூதரகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள அரங்கில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சுமார் ஆறு மணியளவில் விழா தொடங்கியது. மேடையின் திரைகளில் விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் கைகள் விரித்து நின்றிருந்தன. தமிழ்த்தாய் வாழ்த்தொலிக்க தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினர் ஓருடையை சீருடையாக்கி மெழுகுவர்த்திகள் ஏந்தி நின்றிருந்த காட்சி கடலைச்சுற்றி பதினேழு சூரியன்கள் எழுந்து நிற்பதைப் போன்றிருந்தது.

நிகழ்ச்சிகளைத் தொகுப்பதற்கென்றே பிறந்தவர்களாய் ராஜாவும் கிரு~;ணவேனியும் களமிறங்கினர். மேதகு இந்தியத் தூதுவர் ஃபருக் மரைக்காயர் அவர்களை டாக்டர் திரு ர~Pத் பா~h அவர்கள் மேடைக்கு அழைத்துவர அவரைத் தொடர்ந்து டாக்டர் மாசிலாமணி அவர்கள், ஜித்தா ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு மாலிக் அவர்கள், ரியாத் தமிழ்ச்சங்கத் தலைவர் சஜ்ஜாவுதீன் மற்றும் மூத்த ரியாத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு ஜெயசீலன் மற்றும் திரு விஜய சுந்தரம் ஆகியோர் மேடையேற மேடையின் சிகை அலங்காரமாய் நின்றது.

திரு. முத்துராமன் அவர்கள் மேதகு இந்திய தூதருக்கு ப+ங்கொத்தை கொடுத்து வரவேற்றார். திரு ஜெயசீலன் அவர்கள் டாக்டர் மாசிலாமணி அவர்களுக்கு ப+ங்கொத்தை கொடுத்து வரவேற்றார். அரங்கு நிறைந்து வழிந்தது. வாழ்த்தே உரையாய் வாழ்த்துரை வழங்க வந்த திரு கஸ்ஸாலி அவர்கள் சுபசோபனம் பற்றி சுருக்கமாய் விவரித்தார்.

அரங்கு அமைதிபெற மாண்புமிகு இந்திய தூதர் ஃபருக் மரைக்காயர் அவர்கள் அவையின் மௌனம் கலைத்து தன் உரையைத் தொடங்கினார். தமிழ்ச்சங்கத்தின் அவசியம் பற்றியும் அதனால் அடைய வேண்டிய பலன்கள் பற்றியும் அது செய்ய வேண்டிய கடமைகள், அது தாங்கும் சுமைகள், அதன் விரிந்த எல்லைகள் மற்றும் தான் கொண்ட பொறுப்பு, அதன் யதார்த்தம் ஆகியன பற்றியும் ஆழமாகவும் அழகாகவும் பேசி முடித்தார்.

சுமார் எட்டு மணியளவில் முதல் நிகழ்ச்சியாக தில்லானா மேகனாம்பாள் திரைப்படத்திலிருந்து நலந்தானா பாடலின் முன்னிசைக்கு ~மாவும் வர்~hவும் தங்களது நாட்டிய நளினங்களை நடனத்தில் கொட்டி மெய்சிலிர்க்க வைத்தார்கள். அரங்கு அலைபாயத் தொடங்கியது.

அடுத்ததாக கவியரங்கம் சுடர்விட்டது. திருவாளர் தாவூத் அவர்கள் வர்ணனை வார்ததைகள் பொழிய தமிழையும் தமிழரையும் வாழ்த்தி மதுரம் தமிழ் என்ற தலைப்பில் கவிபேச மதுரை பெரோஸ்கான் அவர்களை அழைக்க, திரு பெரோஸ்கான் அவர்கள் தனது வலிமையான வசனங்களால் அரங்கம் அதிர தனது கவிதையை விதைத்து வைத்தார். அவரைத் தொடர்ந்து வந்த மலர் சபாபதி அவர்கள் பாரதியை அழைத்து சொன்ன கவிதை அரங்கத்தை குதூகலிக்கச் செய்தது.


அவரைத் தொடர்ந்த வழக்குச் சித்தர் ஜாபர் சாதிக் அவர்களின் புரட்சிக்கவிதை புரட்சிகரமாய் அரங்கேறியது. இறுதியாக வந்த சேலத்து சோலைக் கவிஞர் திரு சிக்கந்தர் அவர்கள் வரம் வேண்டும் என்று சொல்லி கவிதைபாடி கவியரங்கத்தை நிறைவு செய்தார்.

இடையிடையே ராஜா கிரு~;ணவேணியின் கிள்ளை மொழிகள் கொஞ்சிச் சென்றன. அடுத்து இசை விருந்து ஆரம்பமானது. திரு ஸஜ்ஜாவுதீன், திருமதி அணுராதா, திரு பாலா, திரு ஸபீர் ஹ_சைன,; திரு நெவிசன், திரு கென்னடி, திரு வினு, திரு குருராஜன் வரிசையாக பாடல்கள் பாடி அரங்கத்தை ஆனந்தத்தில் தள்ளினர்.

திரு தாவூத் மற்றும் வளவன் அவர்கள் இடைவெளிகிடைத்த போதெல்லாம் திரைக்கு முன்னால் வந்து கேள்விக்கணைகளை தொடுத்து பரிசுகளையும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

சுமார் ஒன்பது மணியளவில் பட்டிமன்றம் தொடங்கியது. நடுவராக தலைவர் திரு ஸஜ்ஜாவுதீன் அவர்கள் பொறுப்பேற்றார் இல்லற வாழ்க்கை இனிமையாய் அமைவது
காதல் திருமணத்திலே பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்ற தலைப்பில் பட்டிமன்றம் துவங்கியது. முதலாவதாக காதல் திருமணத்திலே என்ற தலைப்பில் திரு மீரான், திரு ய+சுப,; திரு சுவாமிநாதன் தங்களது சுவை மிகுந்த சொற்களால் அரங்கத்தை - அசத்தியும் ஆட்டியும் வைத்தனர். பின்னர் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்ற தலைப்பில் பேசிய திரு லியோ, திரு ஹைதர் அலி, திரு ரேணுகா சுப்பையா ஆகியோர் தங்களது வாள்வீச்சுப் பேச்சினால் அவையைக் கவர்ந்திழுத்தனர். நடுவர் ஸஜ்ஜாவுதீன் பட்டிமன்ற பேச்சாளர்களுக்கிடையே சிரிப்பில் சில்மி~ங்கள் செய்தார். இறுதியாக இல்லற வாழ்க்கை இனிமையாய் அமைவது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திலே என்று நாட்டாமையாக வாழ்;ந்து தீர்ப்பு சொல்லி தீர்;த்து வைத்தார்.

திரு ஜாபர் சாதிக் அவர்கள் அவ்வப்போது சபை ஒழுங்கிலும் தனது பொறுப்பிலும் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தார்.

சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பொது அறிவு கேள்விகளுக்கு பதில் சொன்ன பார்வையாளர்கள் வரை பரிசுகளை பெற்றுச் சென்றனர். பெண்களும் ஆண்களும் குழந்தைகளுமாக நிறைந்த அரங்கம் அளவில்லாத ஆனந்தம் கொண்டது. ரியாத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை தூதரகத்தின் வாயிலில் வைத்து திரு ஜாபர் சாதிக், திரு சிக்கந்தர் இன்னும் சில அங்கத்தினர்களால் விநியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் யாவும் சுருங்கிய நெற்றியின் சுருக்கம் நீக்கி திலகமிட்டது போலிருந்தது கண்டு தமிழ் மன்றமும் தமிழ் மனங்களும் திருப்தி கொண்டன.

சுமார் பத்தரை மணியளவில் விழா இனிதே நிறைவு பெற்றது.

தமிழில் தொகுத்தது: ஃபெரோஸ் கான்
ரியாத் தமிழ்ச் சங்கம்

sadikjafar@gmail.com

துபாயில் ஊடகங்களின் சங்கமம்

துபாயில் ஊடகங்களின் சங்கமம்

துபாயில் அமையப்பெற்ற ஊடக நகரம் ( Media City ) உலகெங்கிலும் உள்ள 1200 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் உள்ளன. 30 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இங்கு உள்ளன.

தொடர்ந்து ஊடக நகரில் பல்வேறு கட்டிடங்கள் எழுப்பப்பட்டு இன்னும் உலகின் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை ஏற்படுத்த உள்ளன.

மேலும் விரிவான தகவலுக்கு :

http://www.dubaimediacity.com/

http://www.42international.com/Dubai-Media-City.htm

அமீரக கல்வி நிறுவனங்கள்

அமீரக கல்வி நிறுவனங்கள்

அஜ்மான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
www.ajman.ac.ae